Sunday, November 4, 2018

புதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ஐ-தே.க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களை சபை புதிய முதல்வராக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (சனிக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

“தினேஷ் குணவர்தனவை சபை முதல்வராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த நியமனம் சட்டவிரோதமானது.

எனவே முதலில் அவரகள் நாடாளுமன்றத்தை கூட்டி, புதிய பிரதமர் நியமனம் சட்டப்பூர்மானது என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே சபை முதல்வர் நியமிக்கப்பட்டார், இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய நியமனம் வழங்குவதை அங்கிகரிக்க முடியாது.

இதையும் மீறி செயற்படுவதானது நாடாளுமன்ற மரபுகள் மீறல் மற்றும் நிலுவையில் உள்ள உத்தரவுகளை மீறும் செயற்பாடாகும்.

அத்துடன் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி அதற்கு தேவையான நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய எடுப்பார் என நம்புவதாக” அகிலாவிராஜ் காரியவசம் கூறினார்.
SHARE:

0 comments: