Sunday, November 11, 2018

நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்டீஃபனொஸ் சிட்டிஸிபாஸ்!

நெக்ஸ்ட் ஜென் ஏ.டி.பி ஃபைனல்ஸ் சாம்பியன் கிண்ணத்தை கிரேக்க வீரர் ஸ்டீஃபனொஸ் சிட்டிஸிபாஸ் வெற்றி கொண்டார்.

டென்னிஸ் உலகில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தபடும் நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் முடிவிற்கு வந்துள்ளது.

இதன் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தாலியில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் முன்னணி வீரர் ஸ்டீஃபனொஸ் சிட்டிஸிபாஸ் அவுஸ்ரேலிய வீரர் அலெக்ஸ் டி மைனர் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற இந்த போட்டியில் இரு வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள்.

போட்டியில், சிட்டிஸிபாஸ் முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த மூன்று செட்களையும் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை தனதாக்கினார்.

இந்த போட்டியில், 2-4, 4-1, 4-3, 4-3, என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சிட்டிஸிபாஸ் முதன் முதலாக நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டார்.
SHARE:

0 comments: