Friday, November 16, 2018

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிந்த தரப்பினரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா கண்ணீர் மல்க ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
இன்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அது நிறைவேறிய நிலையிலேயே மகிந்த தரப்பினரால் சபை நடவடிக்கைகள் குழப்பப்பட்டு பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
SHARE:

0 comments: