Thursday, November 15, 2018

இந்த பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல - மஹிந்த கொந்தளிப்பு

“ஜனாதிபதியாக இருந்துள்ளேன் பிரதமராகவும் இருந்துள்ளேன் இந்த பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல” என பாராளுமன்றில் கொந்தளித்தார் மஹிந்த ராஜபக்ஷ.

தற்போது கூடியுள்ள பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான நேரத்தின்போது பாராளுமன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாட்டை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பதவியை கொடுக்கும் போது இந் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் இந் நாட்டை நாங்கள் பாரம் கொடுக்கும் போது இருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதற்காக அதை பொறுப்பேடுக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.

நாட்டை பொருளாதாரத்திலும் அனைத்து விதத்திலும் நாட்டை பாதுகாக்கவே பொறுப்பை ஏற்றக்கொண்டோம். இன்று நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கினன்றது அதில் ஒன்று, தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளம் கேட்டு சாதாரண போராட்டம் ஒன்றை நடாத்தி வருகிறார்கள் 

உலக நாடுகளில் பெற்றோலின் விலை குறைந்த போதும் நீங்கள் பெற்றோலின் விலையை அதிகரித்தீர்கள் ஆனால் நாங்கள் பெற்றோல் விலை சூத்திரத்தை மாற்றினோம். விலையை குறைத்தோம். இன்றும் அமைச்சருக்கு கூறுவேன் பெற்றோலின் விலையை குறைக்குமாறு..

சபாநாயகராக இருந்தும் உங்கள் கட்சி சார்பாகவும் உங்களது மேற்கத்தேய நண்பர்களுக்கு சார்பாகவும் நீங்கள் செயற்படுவது வேதனைக்குரியது விடயம். ”என தெரிவித்தார்
SHARE:

0 comments: