Sunday, November 4, 2018

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதிக்கொள்ளும் முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆண்ட்ரு ரசல் விலகியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவர் விலகியிருப்பதானது அந்த அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி, கொல்கத்தா, ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிப் பெற்றதுபோல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறப்பான பயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெஸ்டில் சுமாராக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரின் 3 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே, 20 ஓவர் போட்டிகளிலும் இந்த அணி சிறப்பாக விளையாடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியாவுடனான டி-20 தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல துறை ஆட்டக்காரரான ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது. காயம் காரணமாகவே ஆண்ட்ரு ரசல் ஏற்கனவே இடம்பெற்ற ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை.

எனினும், டி-20 தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் இன்னும் குணமடையாததால் தற்போது டி-20 தொடரிலும் இருந்தும் அவர் விலகுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் கெயில், சுனில் நரைன் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் அந்த அணியில் இல்லை. மேலும், ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷ்லே நர்சும் விலகியுள்ளார்.

இவ்வாறான நிலையில், தற்போது ரசலும் விலகியிருப்பதானது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: