Thursday, November 15, 2018

‘கஜா’ புயல் தீவிர சூறாவளி புயலாக மாறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

‘கஜா’ புயல் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றது.

மணிக்கு 10 கிலோ மீற்றர் வேகத்திலிருந்த ‘கஜா’ புயலின் வேகம் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“சென்னைக்கு அருகே 380 கிலோமீற்றர் தொலைவிலும், நாகை அருகே 400 கிலே தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் – நாகை அருகே இன்று மாலை ‘கஜா’ புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது வலுப்பெற்று, தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
SHARE:

0 comments: