Sunday, November 11, 2018

தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா காந்தி தெலுங்கானா விஜயம்!

நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸிக்கு ஆதரவினை திரட்டுவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சோனியா காந்தியின் பிரசாரம் அவசியமென காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே அவர் தெலுங்கானாவுக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் காங்கிரஸிக்கு ஆதரவினை திரட்டு விதமாக தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரென காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகியன ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் கடுமையான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: