Tuesday, December 4, 2018

அரசாங்கத்தின் வரி அமைப்புகள் நீக்கப்பட வேண்டும்: பிரான்ஸ் இடதுசாரி கட்சி

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரி அமைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என, பிரான்ஸ் இடதுசாரி கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரான்சில் நெருக்கடி நிலை வலுப்பெற்றுள்ள நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் பிரான்ஸ் பிரதமர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட வன்முறைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியிருந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தையின்போதே பிரான்ஸ் இடதுசாரி கட்சி மேற்கண்டவாறு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பிரதமரின் செயற்பாட்டால் தோற்றுவிக்கப்பட்ட இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என பிரான்ஸ் வலதுசாரி கட்சி வலியுறுத்தியது.

இதேவேளை, இப்பிர்சினைக்கு துல்லியமான முறையில் விரைவில் தீர்வு காண்பதே சக குடிமக்களின் எதிர்பார்ப்பாகவும், இன்றைய தேவையாகவும் உள்ளதாக பிரான்ஸ் தீவிர இடதுசாரி கட்சி குறிப்பிட்டது.
SHARE:

0 comments: