Tuesday, December 4, 2018

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மனு தாக்கல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லையென உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இதன்போதே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மஹிந்த அணியினருக்கு அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: