Thursday, December 20, 2018

ரிச்மண்ட் ஹில் பேருந்து தரிப்பிடத்தில் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்!

ரிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துசென்று மோதியதில் 2 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை 407 க்கு அருகே பேவ்வல் அவென்யூ பகுதியில் குறித்த விபத்து 11 ஆம் திகதி மாலை 2:30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த வீடியோவில், SUV கார் ஒன்று தடைகளை உடைத்துக்கொண்டு பேருந்து தரிப்பிடத்தில் மோதியதும் இதில் அஷ்டவசமாக இருவர் உயிர் தப்பியுள்ளமையும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வேன்ன்ட் குயின்லான் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யது, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தவகையில் அவர் மருந்து பவித்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், போதையில் வாகனத்தை செலுத்தியதாய் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: