Thursday, December 20, 2018

கனேடியர்களின் கைது குறித்து கூடுதல் கவனத்துடன் செயற்படுகிறோம்: பிரதமர் ட்ரூடோ

சீனாவில் மூன்றாவது கனேடியர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபருக்கும், ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு தடுத்துவைப்பு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சீனாவின் தடுத்து வைப்புகள் குறித்து மேலதிக விபரங்களை கோரி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

சீனாவின் ஹூவாவே தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி கனடாவில் கைதுசெய்யப்பட்டதன் எதிரொலியாக கனேடிய முன்னாள் ராஜதந்திரி ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் சீனாவில் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மூன்றாவது நபரொருவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் ராஜதந்திரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE:

0 comments: