Saturday, March 3, 2018

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாவது மகோற்சவ பெருவிழாவில்  நேற்று  01.03.2018 வியாழகிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.


வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.

பொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி

பொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி

-சுஐப் எம்.காசிம்-

அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார். 

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.

“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார் 

நேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர். 

இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.     

திங்கட்கிழமை யானைகளின் பாராளுமன்றக் கூட்டம்

திங்கட்கிழமை யானைகளின் பாராளுமன்றக் கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்தும்  ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையும் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பியவுடன் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவையும் சந்தித்து பேசவுள்ளார். 

இதன்படி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இவரை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(எம்.எம்.மின்ஹாஜ்)

Friday, March 2, 2018

தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு, ரிஷாத்திற்கு பிரதமர் அழைப்பு

தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு, ரிஷாத்திற்கு பிரதமர் அழைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவத்தை நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளனர்.

பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.
மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசு பயந்து, பொலிஸாரின் ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.

வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அம்பாறை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், சற்றுமுன்னர் கொழும்பு வந்தடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்ட போது, இதுதொடர்பில் உடனடியாக தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு பிரதமர், அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
அம்பறை நீதிமன்றத்தில், இன்று நடந்தது என்ன? (முஸ்லிம்களுக்கு அநியாயம், பொலிசார் பக்கச்சார்ப்பு)

அம்பறை நீதிமன்றத்தில், இன்று நடந்தது என்ன? (முஸ்லிம்களுக்கு அநியாயம், பொலிசார் பக்கச்சார்ப்பு)

நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து 500 மேற்பட்ட சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களும் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையில் இன்று -02- அம்பாரை நீதவான் நீதிமன்றில் அம்பாரை கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக குரல்கள் இயக்கத்தின் (Voices Movement)  பங்களிப்புடன் சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட் ஆகிய நாங்கள் ஆஜராகியிருந்தோம்.

இவ்வழக்குகளில் காசிம் ஹோட்டலை தாக்கிய வழக்கில் மாத்திரமே 05 நபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். பள்ளித்தாக்குதல் உட்பட்ட ஏனைய வழக்குகளில் இதுவரை எவ்வித சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லையென்றும் விசாரணைக்கு தொடர்ந்து கால அவகாசம் தருமாறும் பொலிஸார் கேட்டிருந்தனர்.

முஸ்லீம்கள் சார்பில் நீதவானால் பிணை வழங்க முடியாத இனவெறித்தாக்குதல் குற்றமாக இச்சம்பவம் கருதப்பட வேண்டும் என்றும் அத்துடன் இதுவரை பொலிஸ் விசாரணை முடிவடையாத காரணத்தினாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுவதாலும் இவ்வழக்கின் சந்தேக நபர்களை எக்காரணம் கொண்டும் பிணையில் விடக்கூடாது என்று எமது வாதத்தினை சமர்ப்பித்திருந்தோம்.

உண்மையில் எமது பக்கமே நின்று மேற்சொன்னவைகளை வலியுறுத்தி பிணை வழங்குவதனை ஆட்சேபித்திருக்க வேண்டிய பொலிஸார், யாரும் எதிர்பார்த்திராத வகையில் சந்தேக நபர்களுக்கு சாதகமான முறையில் இத்தாக்குதல் சம்பவமானது ஒரு இனவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என்றும் குறித்த கடையில் ஏற்பட்ட பிரச்சினை தனிப்பட்டதொரு பிரச்சினை என்று கூறி நீதவானால் பிணை வழங்க முடியாத சட்டத்திற்குள் (ICCPR Act) இருந்த குற்றங்களை இன்று வாபஸ் வாங்கியிருந்தனர். 

மேலும் வெளி நிலைமைகள் அனைத்தும் சுமூகமாக இருப்பதாகவும் கூறி வழக்கமான நீதிமன்ற மரபுகளுக்கு மாறாக  சந்தேக நபர்களை பிணையில் விடுமாறும் கோரியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் குழுமியிருந்த சட்டத்தரணிகள் குழுவும் இதே வாதத்தினை முன்வைத்திருந்தனர்.

இதனை முற்றாக மறுத்த நாங்கள் இவ்விடயம் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு புரியப்பட்ட இனவெறித் தாக்குதல் என்றும் இதன்  தொடர்கதையாக கடந்த இரவு கூட முஸ்லிம்களுக்கு சொந்தமான பஸ்வண்டி கல்லெறிந்து சேதமாக்கப்பட்டதையும் கூறி பிணை வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்ததோடு பொலீசாரின் பக்கச்சார்பான இச்செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தோம். ஆனால் இதனைக்கூட தனிப்பட்ட பஸ் வண்டிகளுக்கிடையிலான பிரச்சினையென பொலிஸார் திசைதிருப்பி விட்டனர்.

இவ்வாறாக இன்று சுமார் 02 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் கடும் பிணை நிபந்தனைகளோடு கைது செய்யப்பட்ட 05 பேருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்ததோடு இவவழக்குகளை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தததுடன் ஏனைய வழக்குகளில் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது. 

- சட்டத்தரணிகள்  முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட்.
பள்ளிவாசலை தாக்கியோர், ஜனாதிபதியை சந்திக்க முயற்சி

பள்ளிவாசலை தாக்கியோர், ஜனாதிபதியை சந்திக்க முயற்சி

-Dc

அம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குறித்த பேரினவாத அமைப்புக்கு பக்கபலமாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவதாக தெரியவருகிறது.

அம்பாறையில் கைதுசெய்யப்பட்ட “திஹே கல்லிய” அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்கும் நோக்கிலும், மேலும் கைதுசெய்யப்படவிருப்பவர்களை தடுக்கும் நோக்கிலும் ஜனாதிபதியின் அம்பாறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மொட்டு அணி உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நேற்று (01) ஜனாதிபதியை சந்திக்க பொலன்னறுவைக்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி பொலன்னறுவை சென்றதை கேள்விக்கப்பட்ட இக்குழுவினர், நேற்று காலை முதல் இரவு வரை அவரை சந்திப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் வாயிற்கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நிலையில் குறித்த குழுவினர் திரும்பிவந்துள்ளனர்.

இதேவேளை, பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்கள் பலரும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மையம்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயக்கல்லிமலை சிலை வைப்பு விவகாரத்தில் குறித்த “திஹே கல்லிய” பேரினவாத அமைப்பு பின்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
அரசாங்கம் கொடுமை செய்துவிட்டது, விரைவில் அதிர்ச்சிவைத்தியம் காத்திருக்கிறது என ஹரீஸ் கொந்தளிப்பு

அரசாங்கம் கொடுமை செய்துவிட்டது, விரைவில் அதிர்ச்சிவைத்தியம் காத்திருக்கிறது என ஹரீஸ் கொந்தளிப்பு


-AAM. Anzir-

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்து, நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்துவிட்டதாக கொந்தளித்துள்ள பிரதியமைச்சர் ஹரீஸ், மிகவிரைவில் இந்த அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் சற்று நேரத்திற்கு முன் தகவல் தருகையில்,

அம்பாறையில் அதிகாரமிக்க சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பொலிசாரின் நெறிப்படுத்தலின் கீழ், அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய பௌத்தசிங்கள இனவாதிகள் இன்று -02. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாட்சியை நம்பிய, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே இதனை நோக்குகிறேன். 

அம்பாறை மாவட்ட தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் காணப்பட்டனர். எனினும் ஒரு சிறிய இனவாத கூட்டத்தை திருப்திபடுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு கொடுமைசெய்து, பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் மறைகரமாக நின்று விடுதலை செய்துள்ளது.

முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. மிகவிரைவில் அரசாங்கம் இதன் பயனை நுகரும். நாம் அரசாங்கத்திற்கு நிச்சயம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம்.

எனது மாவட்ட  முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்களை நானும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் பொறுமைபடுத்தி வைத்திருக்கிறோம்.

ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்தஇனவாத குழுக்களுக்கு அஞ்சப் போவதில்லை.

இன்றை நவீன உலகில் சீ.சீ.டி.வீ. கமரா துணையுடன் பள்ளிவாசலை தாக்கியவர்களை மிக இலகுவில் கைது செய்திருக்கலாம். கைது செய்தவர்களை சிறையில் அடைத்திருக்கலாம்.  எனினும் அவர்களை சிறை வைக்காது சுதந்திரப் பறவைகளாக பறக்கவிட்டுள்ளனர்.

தற்போதை நல்லாட்சி அரசாங்கத்தை பௌத்தசிங்கள இனவாதிகளே வழிநடத்துகின்றனர். அதனால்தான் முஸ்லிம் விவகாரங்கள்  பின்னுக்கு தள்ளப்படுகின்றன. எனது கட்சியின் ஏனைய எம்.பி.க்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிப்போம்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் ஆவேசத்தில் நியாயமுள்ளது. அதனை தான் புரிந்துகொள்வதாகவும் ஹரீஸ் மேலும் குறிப்பிட்டார்.
காத்தான்குடியில் கண்டன பேரணி

காத்தான்குடியில் கண்டன பேரணி


சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (02.03.2018) வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் காத்த நகர் அரசியல் களத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.

இக் கண்டன பேரணியில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) அவர்கள்இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி.நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு அனுப்பி வைப்பதற்கான மஹஜரொன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதயஸ்ரீதரிடம் கையளித்தார்.

சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் சிரியா யுத்தத்தை நிறுத்த ஐ.நாவுடன் இணைந்து செயற்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மஹஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஐ.நா சபையே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு, மனித உயிர்களுக்கு மதிப்பளி, சிரியா அரசே குழந்தைகளை கொல்லாதே, சிரியா அரசே நிறுத்து நிறுத்து மனித படுகொலைகளை உடன் நிறுத்து, ஐ.நா வே அப்பாவி சிரியா குழந்தைகளை பாதுகாரு, அழிகிறது மனிதம் ஐ.நா வே கண்ணை திற என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

(ஹம்ஸா கலீல்)

பலாக்காயை வெட்ட  கத்தியை, கொடுக்காததால் நடந்த ஒரு கொலை

பலாக்காயை வெட்ட கத்தியை, கொடுக்காததால் நடந்த ஒரு கொலை

மாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகல்ல மாவனெல்ல பகுதியை சேர்ந்த 58 வயதான தல்கமுவலாகே நெவில் செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த பலா மரத்தில் பறித்த பலாக்காய் ஒன்றை வெட்டுவதற்கு பெரிய தந்தை மற்றும் அவரது மகனிடம் கத்தியை கேட்டு அதனை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

இதேவேளை, கொலை செய்த நபர் அதே முகவரியை சேர்ந்த 45 வயதனா மெலிசன் விஜேகுமார என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது வீட்டுக்கு எதிரில் இருக்கும் பலா மரத்தில் பலாக்காய் ஒன்றை பரிந்துள்ளதுடன், அதனை வெட்டுவதற்கு உயிரிழந்தவர் மற்றும் அவரது தந்தையிடம் கத்தியை கேட்டுள்ளார்.

கத்தியை கொடுக்காத காரணத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
"எவர் எதைச் சொன்னாலும் நாங்கள், நேர்மையாக பயணிக்கிறோம்" - ரிஷாட்

"எவர் எதைச் சொன்னாலும் நாங்கள், நேர்மையாக பயணிக்கிறோம்" - ரிஷாட்


அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

ஆட்சியின் ஸ்திரம் இல்லாத போக்கு நாட்டுக்கோ, மக்களுக்கோ உகந்ததாக அமையாது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அரச தலைமைகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும். 

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் அரச வளங்களை, தமது சொந்த வளங்கள் போல கருதி அதனை சீரழிப்பதற்கு சிலர் முயற்சி எடுத்த போதும், நாம் அதற்கு இடமளிக்காததால், இங்கிருக்கும் சில ஊழியர்களின் துணையுடன் எமக்கெதிராக  அபாண்டங்களையும், பழிகளையும் பரப்பினர். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, நிறுவனத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். 

இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு நாம் தொழில் வாய்ப்புக்களை வழங்கிய போதும், எமக்கெதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர். எனினும், இங்கு தொழில் புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உண்மையை அறிந்து, எமது நேர்மையான பணிகளுக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களை நாம் கௌரவத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனத்தைப் பொறுப்பெடுத்தவர்களும், நிருவகித்தவர்களும், தாங்கள் இந்த நிறுவனத்திலிருந்து எதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே சிந்தித்தனர். ஆனால், நாம் பொறுப்பேற்று இரண்டு வருட காலங்களில் எவ்வாறு நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்குவது? இங்கு பணியாற்றுபவர்களின் ஊதியத்தை எவ்வாறு அதிகரிப்பது? என்று சிந்தித்து அதற்கான திட்டங்களை மேற்கொண்டோம். இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களை வரவழைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பில், ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பலதடவை பேசியிருக்கின்றோம். அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து, திட்டங்களை வகுத்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்திலும், இந்தப் பிரதேசத்திலும் வாழ்பவர்களுக்கு தொழில் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கின்றோம். 

எனது தொகுதியான வன்னி மாவட்டத்திலோ அல்லது புத்தளம் மாவட்டத்திலோ வாழ்பவர்களுக்கு இந்த நிறுவனத்தில் நாம் நியமனங்கள் வழங்கவில்லை. இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கே தொழில்களை வழங்கினோம். எனினும், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒருசிலரும், இன்னும் சில அமைப்புக்களும் எனக்கு இந்த நிறுவனத்தை வழங்க வேண்டாமென உயர்மட்டத்துக்கு கடிதம் எழுதியதை நாம் அறிவோம். 

இந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இருந்த காலப்பகுதிதான் “பொற்காலம்” என வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாங்கள் செய்துவரும் மற்றும் செய்யப் போகும் விடயங்கள் வரலாற்றில் எழுதப்படும்.

எவர் எதைச் சொன்னாலும் நாங்கள் இறையச்சத்துடன் நேர்மையாக பயணித்து வருகின்றோம். அமைச்சுப் பதவியை பறிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்து, ஊடகங்களை வரவழைத்து எமக்கெதிராக எத்தனையோ சதிகள் இடம்பெற்ற போதும், நாம் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை. “எது நடந்தாலும் எடுத்த முடிவை மாற்ற மாட்டோம்” என்பதில் உறுதியாக இருந்ததினாலேயே எமக்கு வெற்றி கிடைத்தது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாச, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, நிறுவனத்தின் தலைவர் திருமதி. இந்திகா, முகாமைத்துவப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், பணிப்பாளர் சபை உறுப்பினர் அப்துல் ரசாக், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான தௌபீக், சல்மான் பாரிஸ், பதுருதீன், நியாஸ் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.                
"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற முயற்சிக்கவில்லை" -

"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற முயற்சிக்கவில்லை" -

(முக்கிய குறிப்பு - அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களை காப்பாற்ற விமலவீர திஸாநாயக்க Mp முயன்றார். இதனை முஸ்லிம் சட்டத்தரணி jaffna muslim இணையத்திற்கு குறிப்பிட்டதுடன், குறித்த அந்த சட்டத்தரணியுடன், விமலவீர திஸாநாயக்க இதுபற்றி தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது)

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக  கூற முற்படுவது முட்டாள்தனமானது என திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இது தொடர்பில்  கருத்து வெளிட்ட அவர்,

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை தான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தழில் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சிறு மோதல் சம்பவம் மத ஸ்தானம் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது.இது மேலும் பரவாமல் நாம் தடுக்க வேண்டும்.அதனை விட்டு விட்டு எரியும் நெருப்பில் என்னை ஊற்ற முயற்சிக்க கூடாது.அம்பாறையில் சமாதானம் மலரவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளோம். அதை விடுத்து எவரையும் பாதுகாக்கும் காப்பாற்றும் நோக்கில் அல்ல.இந்த சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் பொருப்புகளில் இருக்கும் எவறும் தொடர்புபடவும் இல்லை அதனால் எவரையும் காப்பற்ற எந்த ஒரு தேவையும் எமக்கு இல்லை.

குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த ஹோட்டலுக்குள் பொலிஸார் இருந்தனர்.அதேபோல தாக்கபட்ட மத ஸ்தானத்திற்கு மிக அண்மையில் பொலிஸ் நிலையம் உள்ளது.தாக்குதலை தடுத்து நிறுத்துவது பொலிஸாரின் கடமை.அதனை விடுத்து இந்த சம்பவத்தை அரசியலுடன் , கட்சிகளுடன் முடிச்சு போடுவது முட்டாள்த்தனம்.

அது தவிர நான் இந்த அரசாங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எமது  தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இந்த அரசாங்கத்தில் இல்லை. அவ்வாறு  இருக்க நாம் எவ்வாறு சட்டம் ஒழுங்கு விடயத்தில் மூக்கை நுழைக்க முடியும்.

கடந்த  காலங்களைப் போல இந்த விடயத்தையும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் மேல் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழு நாட்டிலும் அனைத்து இண மக்களும் மிகவும் நல்லுறவுடன் வாழ் வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூ எ கட்சி ஊடகப் பிரிவு..
அலரி மாளிகைக்கு வந்த, அம்பாறை விவகாரம்

அலரி மாளிகைக்கு வந்த, அம்பாறை விவகாரம்

ஒவ்வொரு வாரமும், அலரிமாளிகையில், வியாழக்கிழமைகளில் பல்வேறான சந்திப்புகள், கூட்டங்கள், கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்கள், கட்சியின் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்திப்புகளென பல்வேறான சந்திப்புகள் இடம்பெறும்.

எனினும், நேற்று (01) போயா தினம் என்பதனால், மேலே குறிப்பிட்ட சந்திப்புகள், கலந்துரையாடல்கள் யாவும், புதன்கிழமையே இடம்பெற்றன. ஆகையால், அன்றையதினம் அலரிமாளிகை, என்றுமில்லாவாறு மிகவும் பரபரப்பாக இயங்கியது.

அங்கு இடம்பெற்ற  சந்திப்புகளின் போது, இனப்பெருக்கத் தடை மாத்திரை கதை, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவி வழங்காமை, மினி அமைச்சரவை மாற்றத்தின் உள்நோக்கம் உள்ளிட்ட விவகாரங்களே அலசப்பட்டன.

“அம்பாறையில் இனப்பெருக்கத் தடை மாத்திரை கதையின் பின்னணி என்னவென, அமைச்சர் தயா கமகேயிடம் வினவிய, அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டை தீக்கிறையாக்கவதற்காக, அந்த மாகாணத்தில் “மொட்டுக்காரர்கள்” மேற்கொண்ட, சேறுபூசும் நடவடிக்கையாகுமென, தகவல் கசிந்துள்ளது என்றார்.

“உணவு, உடைகளில் போடக்கூடிய வகையிலான, இனப்பெருக்கத் தடை மாத்திரை என்றொரு வகை, உலகில் எங்குமே இல்லையென, உலகிலுள்ள மிகவும் பிரபல்யமான வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று பதிலளித்த அமைச்சர் தயா கமகே, சிலர் பொய்களை பரப்பிவிட்டு, நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

“சாப்பாட்டுக்குள் மாத்திரை இருந்ததாம். என்றாலும் அந்த மாத்திரை இனப்பெருக்கத் தடை மாத்திரையென உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தர்ப்பவாதிகள் இவ்வாறான இல்லா​ததை கூறி, குறுகிய அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதற்கு முயல்கின்றனர் என்றும் எடுத்தியம்பி அமைச்சர் தயா கமகே,  சிங்களவர்களின் இனப்பெருக்கத்துக்கு தடைச்செய்வதற்கு யாராவது முயல்வார்களாயின், அதுபோன்றதொரு நகைச்சுவை, ஒன்றுமே இல்லையென பதிலளித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளின் பின்னர், பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பல்வேறான கதைகள் கட்டப்பட்டதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட, அவையாவும் குளிருக்குள் மறைந்துவிட்டது

எனினும், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஆனமடுவையில் வைத்து, குளவி கூட்டுக்கு மீண்டும் கல்லெறிந்துவிட்டாரென, அங்கிருந்தவர்களில் ஒருவர் தெரிவித்துவிட்டார்.

இதனைக்கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் கெக்கென்று சிரித்துவிட்டனர். அதில் என்ன வேட்டிக்கையென்றால், “பிரதமர் சரியாகவோ அல்லது முறைக்கேடாகவோ அந்தப் பதவியிலிருந்து விலக்கப்படவேண்டுமென” இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார கூறியதுதான், விசித்திரமானதாகும் என்றும் சிலர் கூறியுள்ளனர். 

மேலேயும் கீழேயும் நெருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ​பொறுமையானது அவரின், தலைமைத்துவத்தை மென்​மேலும் மெருகூற்றியுள்ளதென, இன்னும் சிலர் தெரிவித்துள்ளனர்.

“ ஐக்கிய தேசியக் கட்சியான நாம், அமைச்சரவையில் மாற்றம் செய்துவிட்டோம். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் ஒத்திவைத்துவிட்டது. சரியென்றால், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக செய்துவைத்திருக்கலாம் என்று கருத்துரைத்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எங்க​ளுடைய பக்கத்தில் மட்டும் மாற்றம் செய்தமை, என்னைப் பொறுத்த வரையில், தனிப்பட்ட ரீதியில் நான் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.

குறுக்கிட்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, “மாகாண ரீதியில் அமைச்சர்களை நியமிப்பது பெரும் சிரமமாகுமென தெரிகிறது. இந்த திருத்தத்துக்கு, சுத்திரக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தில் செய்யமுடியாத திருத்தம், பின்னர் செய்யவே முடியாமல் போய்விடும். ஐ.தே.க, பலமான கட்சியென்பதனால், அமைச்சரவையில் திருத்தங்களைச் செய்தோம். பலமில்லாத கட்சியொன்றினால், அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்யமுடியாது என்றும் கூறிவிட்டார்.

அந்தக் கதை ஒருபுரமிருக்க, “தன்னுடைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுகள் மாற்றப்பட்டது என்னுடைய பிரச்சினைக்காக அல்ல” எனத்தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல. அது மற்றொருவரின் பிரச்சினையால் ஆகும் என்றார்.

இதன்போது அவ்விடத்திருந்த பது​ளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, “சமுர்த்தி விவசாயம் மற்றும் பசளை ஆகியனவற்றுக்கான பிரச்சினைகள் காரணமாகவே, கடந்த தேர்தலில் அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்தது” என்றார்.

“அதுமட்டுமல்ல, எங்களிடத்திலிருக்கும் திறமைவாய்ந்த மற்றும் கட்சியைச் சேர்ந்த இளம் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும்” என்று அமைச்சரவை தயா கமே ஆலோசனை வழங்கினார். அந்த  ஆலோசனையை அங்கிருந்தவர்கள் ஆமோதித்தனர்.

அது​வரையிலும் அமைதியாய் கேட்டக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “பிரச்சினைகளுக்கு ஒருவாறு தீர்வு கண்டுவிட்டோமென நினைத்துகொண்டு இருக்கமுடியாது. வரவிருக்கின்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு மற்றும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மக்கள் உடல் ரீதியில் உணரக்கூடிய மாற்றங்களைச் செய்யவேண்டும். இளம் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனையோருக்கு கூடுதல் பொறுப்புகள் மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.

இதன்போதுதான் அங்கிருந்தவர்களின் முகங்களில் புன்முறுவல் பூத்தது.

என்றாலும், தன்னுடைய வாயை வைத்துகொண்டு சும்மாவே இருக்காத அமைச்சர் தயா கமகே, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவியை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்​சேகாவுக்கு வழங்கா​மையால் மக்கள் சந்தோஷமாக இல்லையென்றார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கவேண்டுமென்பதில் ஐ.தே.க ஒன்றைக்காலில் நின்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வெளி சக்திகளே, அந்த அமைச்சுப் பதவியை வழங்கவிடாமல் தடுத்துள்ளன என்று புது கதையொன்றை அவிழ்த்துவிட்டார்.

குறிக்கிட்ட சமிந்த விஜயசிற எம்.பி, “ அந்த அமைச்சின் பொறுப்பை தற்காலிகமாக, பிரதமர் பொறுப்பேற்று, தகுதியான ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குள் அப்பதவியை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பது நல்ல விடயமாகும் எனக் கூறியதுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் கலைந்துசென்றுவிட்டனர்.
தம்புத்தேகமவில் தாக்குதல், ஜே.வி.பி. கண்டனம்

தம்புத்தேகமவில் தாக்குதல், ஜே.வி.பி. கண்டனம்


தம்புத்தேகமவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜே.வி.பி. கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுத்த போராட்டத்தின் மீது அரசாங்கம் பொலிஸாரைக் கொண்டு நடத்திய அமானுஸ்ய தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

மக்களின் கண்களைக் கட்டி ஆபத்தான திட்டங்களை முன்னெடுத்தால் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றால் மக்களுக்கு இந்த விடயம் பற்றி தெளிவூட்டியிருக்க வேண்டும் அல்லது ஆபத்தான திட்டத்தை இடைநிறுத்தியிருக்க வேண்டும்.

எனினும் அரசாங்கம் நீதிமன்றின் உதவியை நாடி போராட்டக்காரர்களை பொலிஸாரைக் கொண்டு தாக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரே இந்த திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை இடைநிறுத்தியிருந்தால் மக்கள் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள்.

மக்களின் போராட்டங்களின் நியாயத்தை புரிந்துகொள்ளாது அவர்களின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி அவர்களை ஒடுக்குவது அரசாங்கங்களின் மரபணுக்களிலேயே உள்ளது.

இந்த அரசாங்கமும் இதேவிதமான கொள்கைகளைப் பின்பற்றி மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்துவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை, புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை

தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை, புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை

தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் நல்லாட்சியின் மூலம் தோற்கடிப்பட்டிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நல்லாட்சி மீதும் அரசாங்கத்தின் மீதும் முஸ்லிம் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்து முஸ்லிம்களை மண்டியிடச் செய்யும் போக்கை கொண்டதாகவே அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தும் இந்த ஈனச் செயலை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாது, வியாபார நிலையங்கள் மற்றும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்யீட்டைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு பள்ளிவாசலை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார். 
பள்ளிவாசலை தாக்கிய, காடையர்கள் பிணையில்  விடுதலை

பள்ளிவாசலை தாக்கிய, காடையர்கள் பிணையில் விடுதலை

அம்பாறை பள்ளிவாசலை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட காடையர்கூட்டத்தினர் இன்று  (02) வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது அங்கு பலநூறு பௌத்த பிக்குகள் நின்றுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரித்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இன்றும் ஒரு, மாணவி உயிரிழப்பு

இன்றும் ஒரு, மாணவி உயிரிழப்பு

புஸ்ஸசல்லாவ - உடகம அடபோகே பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நடன பயிற்சி அறையின் அருகாமையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இன்று -02- மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவி கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் குறித்து புஸ்ஸலாவ காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
"ரணில் விக்ரமசிங்கவை, பொலிஸில் ஒப்படைக்க வேண்டும்"

"ரணில் விக்ரமசிங்கவை, பொலிஸில் ஒப்படைக்க வேண்டும்"

வடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களை அமைதிப் போராட்டங்கள் எனக்கூறுவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

குருநாகல் தம்புத்தேகம நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் உட்பட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ரத்துபஸ்வல மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்தது. இன்று இந்த அரசாங்கம் செயற்படுவது எவ்வாறு? அப்பாவி மக்களின் தலைகளை உடைத்து, பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச்சென்று அங்கேயும் தாக்கி அகிம்சையான விவசாய மக்களுக்கு அநியாயங்களை செய்கின்றது.

இந்த நாட்டில் மக்களுக்கு அரிசியை வழங்கும் விவசாயக் குடும்பங்கள் மற்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜனாதிபதி ஆட்சிசெய்யும்போது விவசாயக் குடும்பங்களைத் தாக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி எவ்வாறு நீங்கள் மௌனமாக இதனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை தொடுக்கின்றோம்.

எமது நாட்டில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது பொலிஸாரை இரண்டு நோக்கங்களுக்காக அரசாங்கம் ஈடுபடுத்துகின்றது. வடக்கில் ஒருசட்டமும், தெற்கில் இன்னொரு சட்டமும் செயற்படுத்தப்படுகின்றது.

வடக்கில் சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, இராணுவ முகாம்களுக்கு முன்பாக போராட்டம் செய்யும்போது, வடமாகாண சபை அமைச்சர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவதை நிராகரித்தபோது அதனை கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச தலைவர்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைகின்றனர். மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

ஆனால் தெற்கில் ஒருவர் தண்ணீர்கோரி போராட்டம் செய்யும்போது விரட்டிவிரட்டி அடிக்கின்றனர். மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்யும்போது அதற்கெதிராக போராடிய நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை சிறைவைத்தார்கள். மாற்றம்தான் என்ன?

மத்திய வங்கி மோசடி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவருக்கே இன்று பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
நாட்டில் எத்தனை ஜனாதிபதிகள்..? கீதாவுக்கு சந்தேகம்

நாட்டில் எத்தனை ஜனாதிபதிகள்..? கீதாவுக்கு சந்தேகம்

நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றாரா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...

நாட்டின் ஜனாதிபதி பற்றி பேசுவதற்கு சோம்பலாக உள்ளது. நாட்டில் தற்போது ஜனாதிபதி இருக்கின்றாரா என்பதே தெரியவில்லை.முடிந்தால் இந்த அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்திக் காண்பிக்கட்டும்.

நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை, மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பலர் என்னுடைய குடியுரிமை பற்றி பேசினாலும், நான் எனது வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளேன்.

கள்வர்களை பிடிக்கும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பிரதமருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளிக்கொணரப்படாது. நாட்டின் சட்டம் ஒழுங்குத்துறைக்கு கடவுளின் துணை மட்டுமே.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டியிருந்தனர்.எதிர்காலத்திலும் மக்கள் சரியான பாடங்களை இந்த அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள் என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
 கொஞ்சிக் குலாவிய சிறுமியின், வீட்டில் மைத்திரிபால (படங்கள்)

கொஞ்சிக் குலாவிய சிறுமியின், வீட்டில் மைத்திரிபால (படங்கள்)அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதியை சந்திக்க வருகைதந்த தினுல்யா சனாதி என்ற இந்த சிறிய அதிதி, மெதரிகிரிய அமுனுகம பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

மெதரிகிரிய பிரதேசத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவளது நலன் விசாரித்ததுடன், மிகுந்த வேலைப்பளுவின் மத்தியிலும் மிகுந்த ஆவலோடு சிறுமியுடன் அளவளாவியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையான தினுல்யா சனாதி மழலை மொழி பேசும் காலத்திலிருந்தே ஜனாதிபதி அவர்களை தொலைக்காட்சியில் காணும் சந்தர்ப்பங்களில் சிரித்தவாறே ஏதேனும் கூறியவண்ணம் அந்நிகழ்ச்சியை பார்ப்பதாக அவளது பெற்றோர் தெரிவித்தனர்.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள், மெதிரிகிரிய, கவுடுல்ல பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த சிறுமி தனது தந்தையிடம் ஜனாதிபதியை பார்க்க செல்ல வேண்டுமென அடம் பிடித்து அவ்விடத்திற்கு சென்றபோதிலும் மேடையின் அருகில் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஆயினும் திடீரென பொதுமக்களிடையே இருந்து ஜனாதிபதியை நோக்கி ஓடிவந்த அச்சிறுமியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுக்க முயற்சித்த போதிலும் ஜனாதிபதி அவர்கள் அதனை தடுத்து சிறுமியை தன்னிடம் வர அனுமதித்தார்.

மிகுந்த பாசத்தோடு ஜனாதிபதி அவர்களின் அரவணைப்பில் மழலை மொழி பேசிய சிறுமி, அந்நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் ஜனாதிபதி அவர்களின் அருகிலேயே காணப்பட்டார்.


அந்த நினைவுகளுடன் நேற்று அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், சிறுமியிடம் நலன் விசாரித்ததுடன், அந்த வீட்டில் காணப்பட்ட ஜனாதிபதி அவர்களினதும் அச்சிறுமியினதும் சந்திப்பு பற்றிய பத்திரிகை செய்திகளையும் தமது புகைப்படங்களையும் கண்ணுற்றார்
பள்ளிவாசல் உடைப்பை எதிர்த்து, ஒலுவிலில் அமைதிப்பேரணி

பள்ளிவாசல் உடைப்பை எதிர்த்து, ஒலுவிலில் அமைதிப்பேரணி


அம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள சில முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டதினையும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டதையும் எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியொன்று அமைதியான முறையில் இன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில்  இடம் பெற்றது.

இதனை Teletamil நிறுவனம் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலோடு இணைந்து நடாத்தியதுடன் இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு  தங்களது எதிர்ப்பினையும் அமைதியான முறையில் தெரிவித்தனர்.

ஒலுவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இருந்து தபால் நிலையம் வரையிலான தூரத்திற்கு நடந்தவண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு ஒலுவில் மக்கள் தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.

" வணக்கஸ்தலங்களை   உடைக்காதீர்கள் நாங்களும் உங்கள்  சகோதரர்களே'!

"நாங்களும் இலங்கைப் பிரஜைகளே எங்களது மதசுதந்திரத்தை பறிக்காதீர்கள்.

குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.   

எமது தாய்நாட்டில் எமக்கு பாதுகாப்பு இல்லையா? 

எம் நாட்டின் மிகப்பெரிய ஊடகங்களே எம் சகோதரர்களுக்கு நடந்த அநீதியை வெளியுலகிற்குச் சொல்லுங்கள். 

போன்ற பதாதைகளை ஏந்தியே இம்மக்கள் இவ்வமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த வன்செயலைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ஜனாதிபதி, மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றும் Teletamil நிறுவனமூடாக அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

AM. றினூஸ்


சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலில் நடந்த, ஜும்ஆ தொழுகை (படங்கள்)

சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலில் நடந்த, ஜும்ஆ தொழுகை (படங்கள்)


-Abdul Azeez-

அம்பாறையில் பௌத்த சிங்கள இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலில் இன்று (02) ஜும்ஆ தொழுகை நடைபெற்றுள்ளது.

சுமார் 100 பேரளவில் இதில் பங்கேற்றுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.

பல அரச ஊழியர்கள் இந்தவார ஜும்ஆ தொழுகையை அம்பாறை பள்ளிவாசலில் தொழுவதைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் தொழுதுகொண்டனர்.

"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே"

"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே"


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றால், அந்த அமைச்சு பதவிக்கு பொருத்தமான மூன்று அமைச்சர்கள் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் கடுமையான தேவை இந்த மூன்று அமைச்சர்களுக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்களில் ஒருவரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..? அதன் சூத்திரதாரி யார்..??

அம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..? அதன் சூத்திரதாரி யார்..??

(தமிழ் இணையமொன்றில் எம்.எம். நிலாம்தீன் என்பவரால், எழுதப்பட்டுள்ள கட்டுரை இது)

இந்த ஆட்சியை சர்வதேச ரீதியில் அவப்பெயரை உண்டு பண்ண வேண்டும் என்று ஒரு திட்டம். அரசின் எதிர் தரப்பு அணியால் தீட்டப்படுகின்றது. காரணம் கடந்த ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களை தாக்கியதும், மத ஸ்தலங்களை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

ஆனால் இந்த ஆட்சியிலும் அது நடந்துதான் வருகின்றது. அதனால் எந்த ஆட்சிக்கும் சம்பவத்திக்கும் சம்பந்தம் இல்லை என்று கடந்த ஆட்சியாளர்கள் சர்வேதேச ரீதியில் தப்பிக்கவும் இந்த திட்டம் செயலுக்கு வந்துள்ளது .

காரணம் மஹிந்த அணி கொண்ட ஆட்சியை சர்தேசம் வெறுக்கின்றது. எனவே சர்வேதேச பார்வையில் மஹிந்த ஆட்சி மட்டுமல்ல மைத்திரி ஆட்சியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இந்த நல்லாட்சியை பிழையாக சித்தரிக்கவே இந்த தாக்குதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு இரகசிய அறிக்கை சொல்லுகின்றது.

சர்வதேசத்தை கையாள்வதற்காக கோத்தபாயவின் குடும்ப உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவா பறந்து விட்டார். அவருக்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டு விட்டன.

ஆக மிகக் குறைந்த அளவு கொண்ட சிங்கள வாலிபர்களால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வந்தது.

அதன் பின்னர் அம்பாறை நகர் முழுவதும் காட்டுத் தீ போன்று சம்பவம் பரவியது. முற்று முழுதாக ஐ.தே.கட்சி அமைச்சரின் ஆட்கள் முன்னணியில் நின்று தாக்குதலை நிறைவேற்றினார்கள்.

இதில் தானாக அம்பாறை ஐ.தே.கட்சி காரர்கள் இனம் என்ற ரீதியில் ஒன்று படுவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட ஒன்றுதான் இதை தடுக்காமல் பொலிஸ் பார்த்துக் கொண்டு நின்றது என்ற ஒரு கதையும் உள்ளது.

ஏன் அம்பாறை குறி வைக்கப்பட்டது? கோத்தாவின் திட்டம் என்ன?

இப்படியான விடயத்தில் கொழும்பு முஸ்லிம்கள் கொஞ்சம் பொறுமையாக இந்த விடயத்தை கையாள்வார்கள். அவர்கள் இதற்கு கடையடைப்பு ஹர்த்தால் செய்யமாட்டார்கள்.

ஆனால் கிழக்கு முஸ்லிகள் அப்படியல்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியர்வர்கள் அதனால் இந்த சம்பவம் அம்பாறையில் இருந்து கிழக்கு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமும் அதுதான்.

மாறாக கிழக்கில் விரிவு பெறாமல் மொனராகலை சியம்பலாண்டுவ பகுதிக்கு சிங்களவர்களால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டது.

இதன் மூலம் ஜனாதிபதி மைத்திருக்கு ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்குவது. அதனால் பொலிஸ் அமைச்சு பொன்சேகாவுக்கு கொடுக்க விரும்பலாம் என்பது ஐ.தே.க திட்டம்.

அதனால் அம்பாறை விடயத்தில் பொலிஸ் அந்த இடத்தை விட்டு முற்றாக ஒதுங்க வேண்டும் என்பது மற்றொரு திட்டம். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து விட்டது.

இந்த சம்பவம் அம்பாறையில் நடந்துள்ளதால் அம்பாறை முஸ்லிம்கள் ஐ.தே.க மீது வெறுப்படைந்து முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக களம் இறங்கினால் ஐ.தே.கவுக்கு ஹக்கீம் கட்சி கொடுத்து அவரும் ஆதரவை நீக்கும் நிலை வரலாம்.

அப்போது சு.கட்சிக்கு ஆட்சிக்கு வரமுடியும் என்பது கோதாவின் திட்டம். அதனால் தன்னை கைது செய்ய துடிக்கும் ஐ.தே.க அரசை மாற்றலாம் என்பது மற்றுமொரு மெகா திட்டம்.

அத்துடன் இதன் மூலமாக ஐ.தே.காவுடன் உள்ள ஹக்கீம் கட்சியை உடைக்கலாம் மற்றும் ரிசாத் ஐ.தே.கட்சியுடன் இருந்தால் அம்பாறையில் அவருக்கு கிடைக்கும் முஸ்லிம் ஆதரவை உடைப்பது இதன் மூலமாக அதாவுல்லாவை பலப்படுத்தலாம்.

அந்த அந்த வகையில்தான் அதாவுல்லா அம்பாறை சம்பவத்தை ஐ.தே.கட்சி மீது குற்றம் சாட்டினர். மற்றது நேற்று ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து ஐ.தே.கட்சி தயா கமகேவை முறையிட்டார்

ஐ.தே.க இதில் மூக்கை நுழைந்த விடயத்தால் ரணில் தரப்பு ஒரு நன்மை அடைந்துள்ளது. அதாவது பொன்சேகாவுக்கு பொலிஸ் அமைச்சு கிடைக்கலாம்.

இதே நேரம் நாட்டில் ஆட்சிக்கு எதிராக மஹிந்த அணி கொண்ட பிக்குகள் மற்றும் மஹிந்த அணியினர் அனுராதபுரத்தில் இருந்து கண்டனப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் சில இடங்களில் குண்டு வெடிக்கலாம் என்றும் இந்தியா நேரடியாக ஜனாதிபதி மைத்திரிக்கு சொல்லியுள்ளது..

இவைகள் குறித்து நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலும் இவைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்திர தன்மை அற்ற அரசு என்பதால் ஜனாதிபதி மைத்திரி ஏதும் செய்ய முடியாமல் உள்ளார்.

இந்த சம்பவத்தில் இவ்வளவு வில்லங்கம் உள்ளதா? அரசியல் என்றால் அப்படிதான் நமக்கு தெரியாமல் எத்தனையோ விடயங்கள் நடந்துள்ளது.
"பிரதமர் அம்பாறை செல்வதால், எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை"

"பிரதமர் அம்பாறை செல்வதால், எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை"

சிலருக்கு சண்டைகள் நடைபெற்றால் அதனை புதினம் பார்ப்பதில் அலாதிப் பிரியம். கிந்தோட்டை கலவரம் இடம்பெற்ற போதும், அங்கு பிரதமர் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டிருந்தார். தீர்வு கிடைக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை. இவர் பார்வையிட்டதுக்கும் சாதாரண ஒரு மகன் பார்வையிட்டதுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இருக்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வரப்போகிறாராம். இவரின் வருகையை சாதாரண மக்கள் புதினம் பார்க்க வருவதை போன்றே நோக்க முடிவதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை முஸ்லிம்கள் அழுத்கமைக்கு நீதியை நிலை நாட்டக் கோரி, இந்த அரசை தங்களது முழுமையான ஆதரவோடு அமைத்திருந்தார்கள். தற்போது இந்த அரசில் அதனோடு சேர்த்து கிந்தோட்டைக்கும், அம்பாறைக்கும் நீதியை நிலை நாட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதுவரையும் இவற்றுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் எந்தவிதமான உருப்படியான செயற்பாடுகளும் இவ்வரசின் காலத்தில் நடைபெறவில்லை.

எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வருவதால் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. குறித்த சம்பவம் உக்கிரமடைந்த வேளை, அவர் கள விஜயம் செய்திருந்தால், அவரை பாராட்டியிருக்கலாம். அது கலவரத்தை உக்கிரமடைய வைக்காது தடுத்திருக்கும். கிந்தோட்டை கலவரத்தின் போதும் பிரதமர் இப்படியான ஒரு விஜயத்தை செய்திருந்தார். நஸ்டயீடு வழங்கப்போவதாக கூறியிருந்தார். விசாரணைக்காக ஒரு குழுவையும் அமைத்திருந்தார். அவைகள் வார்த்தைகளோடு மாத்திரமே இருந்தன. செயல் வடிவம் பெறவில்லை. நஸ்டயீடும் வழங்கப்படவில்லை விசாரணைக்காக அமைத்த குழுவின் அறிக்கை என்னவென்றும் யாருக்கும் தெரியவில்லை. இதே வடிவத்தில் அம்பாறை பிரச்சினைக்கும் ஏதாவது செய்வார்கள். 

எதிர்வரும் சனிக்கிழமை பிரதமரின் அம்பாறை வருகை பயனுள்ள வகையில் அமைய வேண்டும். இனவாதிகளுக்கு எதிராக நீதி நிலை நாட்டப்படல் வேண்டும்.வெறுமனே வருகை தந்து, எதனையும் உருப்படியாக செய்யாது செல்வதை விட வராமலே இருக்கலாம் என குறிப்பிட்டார்..
"முஸ்லிம் விவகாரங்களில் கண்டன, அறிக்கை வெளியிட வக்கில்லாத ஜனாதிபதி"

"முஸ்லிம் விவகாரங்களில் கண்டன, அறிக்கை வெளியிட வக்கில்லாத ஜனாதிபதி"

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்களின் முழுமையான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய தற்போதையே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனத்தை தொடர்ச்சியாக பேணி வருகிறார்.

ஒரு நாட்டில் பேசுபொருளான பிரச்சினை எழுகின்ற போது, அந்த நாட்டின் அரச தலைவர் அது பற்றிய தெளிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

அதற்காகவே தான், அவர் அந் நாட்டின் அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் முழு ஆதரவோடு இந்த அரசு நிறுவப்பட்டிருந்தது. தங்களுக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்,  அந் நாட்டின் அரச தலைவர் ஒரு படி மேல் கவனம் செலுத்தி குறித்த பிரச்சினையை கையாள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவோ தொடர்ச்சியாக மௌனத்தையே கடைப்பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரம் நடைபெற்றிருந்தது. இதன் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி பால சிறி சேனவே இருந்தார். அளுத்கமை கலவரத்தின் போது உடனடியாக செயற்பட்டு முஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்காமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவே ஏற்க வேண்டும். அந்த கலவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி எங்கும் பேசிய வரலாறில்லை. குற்றக் கறை என்னவோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதே படிந்துள்ளது.

தற்போதைய ஜனாதியின் ஆட்சிக் காலத்தில் கிந்தோட்டை மற்றும் அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் நேரடியான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி ஒரு வார்த்தையளவான கருத்து கூட வெளியிடவில்லை. முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து கூற அஞ்சும் ஜனாதிபதி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதை போன்ற மடமை வேறு எதுவுமே இருக்காது. இந்த விடயமானது அவர் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளமையை எடுத்து காட்டுகிறது. இலங்கை முஸ்லிம்களுக்கு சரியான நீதி நிலை நாட்டப்பட வேண்டுமாக இருந்தால், முதலில் ஜனாதிபதி மைத்திரியை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.

அ அஹமட் 
இளைஞர்களை  சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும்  - சு.காண்டீபன்

இளைஞர்களை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் - சு.காண்டீபன்


இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என நகரசபை தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்கவுள்ள சு. காண்டீபன் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. 


இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வாக்குகளினை பெற்று நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.

இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என்பதுடன் பெரியோர்களின் ஆசியுடனும் இளைஞர்களின் வலுவான ஆதரவுமே என்றும் ஒரு இளைஞனை சமூக வலுவுள்ளவனாக மாற்றும், இன்று கரப்பந்தாட்ட சுற்று தொடரில் பங்குபற்றுகின்ற பதிவு செய்யப்பட்ட அனைத்து கழக வீரர்களும் வெற்றியாளர்கள். பாடப்பரப்புடன் இணைப்பாடவிதான செயற்பாடான விளையாட்டின் மூலம் தமது ஆளும் திறனை இன்னும் வலுவுள்ளதாக மாற்றி சமூகத்தில் பயணிக்க வேண்டும்.

இவ் வருடம் கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் இளைஞர் கழகங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளமையால் திறமையுள்ள பல இளைஞர்களை அறிமுகம் செய்யக்கூடிய வாய்ப்பு இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனது கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தற்போது நான் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் என்பவற்றுடன் கலை மற்றும் கலாசார திறன்களின் வழிகாட்டி இளைஞர் சேவைகள் மன்றமும் ஒன்று என்பதனை தங்களிடம் பெருமையாக கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவி பணிப்பாளர் சிசிர, நிஸ்கோ இணைப்பாளர் ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பபித்தமை குறிப்பிடத்தக்கது.


எல்லை மீள்நிர்ணயங்களை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹக்கீம்

எல்லை மீள்நிர்ணயங்களை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹக்கீம்

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம் குறித்த அறிக்கையின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடையும் அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்தநிலையில் அரசாங்கம் மாகாண சபைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகளை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அளவையீட்டாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, மாகாண சபை எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் அறிக்கையை அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்தது.

இந்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறிக்கை எல்லைமீள்நிர்ணய விடயமானது, சிறுபான்மை அரசியல் பிரதிநித்துவத்தை பாதிக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
இலங்கை விமானம், ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

இலங்கை விமானம், ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

268 பயணிகளுடன் லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German -  Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.
ஐ.தே.க.யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது - ஜோன் சென­வி­ரட்ன

ஐ.தே.க.யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது - ஜோன் சென­வி­ரட்ன

ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.  இந்த விடயம் கடந்த  மூன்று வரு­டங்­களில் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. 

எனவே  விரைவில்   தீர்க்­க­மான முடிவு ஒன்றை  சிறி­லங்கா  சுதந்­திரக் கட்சி எடுக்கும் என்று  அக்­கட்­சியின் சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.  

விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம்.    சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருந்­தாலும்  எதிர்­கா­லத்தில்  அது குறித்து ஆரா­ய­வேண்­டிய  சூழல் ஏற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை மாற்றம் ஏற்­பட்­டுள்ள போதிலும் சுதந்­திரக் கட்­சி­யினர் இன்னும்  அமைச்­ச­ரவை மாற்­றத்தில் உள்­வாங்­காமை குறித்து  விப­ரிக்­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு கூறினார். 

இது தொடர்பில் சிறி­லங்கா  சுதந்­திரக் கட்­சியின்   சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன  மேலும் குறிப்­பி­டு­கையில் 

அமைச்­ச­ரவை மாற்­றத்தில் நாங்கள் இன்னும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இது­வரை அதற்­கான  அழைப்பை விடுக்­க­வில்லை.    எவ்­வா­றெ­னினும்   ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது என்­பது  தொடர்ந்து சாத்­தி­ய­மா­காது என்றே எங்­க­ளுக்கு தோன்­று­கின்­றது. 

அதா­வது    பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் பய­ணிக்க முடி­யாது என்று   கூறும் உறுப்­பி­னர்­களும் உள்­ளனர். ஆனால்  எம்மை பொறுத்­த­வ­ரையில்    பிர­தமர் என்­பவர் ஒரு   மனிதன் மட்­டு­மே­யாவார். ஆனால்    ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.   ஐக்­கிய தேசிய  இலங்­கைக்கு பொருத்­த­மான பொரு­ளா­தார கொள்­கை­களை  கொண்­டி­ருக்­க­வில்லை. 

குறிப்­பாக    ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது  அமெ­ரிக்கா ஜேர்மன் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்கு  பொருத்­த­மான   பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளது.  அந்த கொள்­கைகள்  இலங்­கைக்கு பொருத்­த­மாக அமை­யாது. இலங்­கை­யா­னது   தேசிய    பொரு­ளா­தா­ரத்தை   அடிப்­ப­டை­யா­கக்­கொண்­டது.    எனவே நாம்  அத­னைத்தான்      ஊக்­கு­விக்­க­வேண்டும்.  

ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி  கடந்த   மூன்று வரு­டங்­க­ளாக பொருத்­த­மற்ற பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வந்­துள்­ளது.   அது வெற்­றி­ய­டை­ய­வில்லை என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது.   

அதனால்  தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. எனவே  விரைவில்   தீர்க்­க­மான முடிவு ஒன்றை  சிறி­லங்கா  சுதந்­திரக் கட்சி எடுக்கும். இவ்­வாறு   ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை தெரி­வித்­துக்­கொண்டு சுதந்­திரக் கட்­சி­யினால்   தொடர்ந்து  அதே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது.  அது சாத்­தி­ய­மற்ற நகர்­வா­கவே அமையும்.  

அதனால்  விரைவில்  ஒரு தீர்க்­க­மான முடிவை  சுதந்­திரக் கட்சி எடுக்­க­வேண்­டி­யேற்­படும். விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம்.  தற்­போ­தைய நிலை­மையில்   சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும்  எதிர்காலத்தில்  அது குறித்து ஆராயவேண்டிய  சூழல் ஏற்படும். 

அவ்வாறு  மாற்று ஏற்பாடு ஒன்று குறித்து ஆராயாமல்   தொடர்ந்து இவ்வாறு பயணிக்க முடியாது.  எனவே சுதந்திரக் கட்சி விரைந்து  உறுதியான மற்றும் தீர்க்கமான  முடிவு ஒன்றை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது என்றார். 
அம்பாறைக்கு 2 பொலிஸ் குழுக்கள் விரைவு

அம்பாறைக்கு 2 பொலிஸ் குழுக்கள் விரைவு


அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றி ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) அம்பாறைக்கு சென்றுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே இக்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 2 குழுக்களும் அம்பாறை வன்முறை தொடர்பிலும், அதனுடன் தொடர்புடையவர்கள், வன்முறைக்கான காரணம், அதன் பின்னணி, அம்பாறை பொலிஸாரின் செயற்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித்த சேனாரத்தினா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் இதுதொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
எனது நகர்வில் மாற்றமில்லை - ஜனாதிபதி

எனது நகர்வில் மாற்றமில்லை - ஜனாதிபதி

ஊழல் மோச­டிக்கு எதி­ரான எனது கொள்­கையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.  மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை மோச­டிகள் இடம்­பெ­றாத வகையில் உரிய முறை­யிலும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என  ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பொலன்­ன­றுவை கிரித்­தலே குடி­யேற்­றத்தில் உள்ள கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில்   நேற்று   புதிய வகுப்­பறை கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி  இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில். 

”எழுச்­சி­பெறும் பொலன்­ன­றுவை” மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் 06 மில்­லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்­பறை கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது   நாட்டின் விவ­சாய சமூ­கத்­திற்கு முன்­னைய எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத நிகழ்ச்சித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உலர் வல­யத்தில் 2400 குளங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்­வ­ருடம் ஆரம்­பிக்­கப்­படும்.  இதன் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் மட்டும் 123 குளங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது.  கடந்த  60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாவட்­டத்தில் உள்ள மக்கள் முகங்­கொ­டுத்த நீர் தொடர்­பான பிரச்­சி­னைகள் இவ்­வ­ருட இறு­திக்குள் நிரந்­த­ர­மாக தீர்த்­து­வைக்­கப்­படும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள 240 பாட­சா­லை­களில் 142 பாட­சா­லை­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வகுப்­பறைக் கட்­டி­டங்­களை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­க­ளுக்கு  தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  கல்­வித்­து­றைக்கு தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று பரீட்­சை­களில் மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை மாண­வர்­களின் பரீட்சை பெறு­பே­று­களில் உள்ள பல­வீ­னங்­களை இனங்­கண்டு மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை பாட­சாலை அதி­பர்கள் மற்றும் கல்வி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளேன். எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் ஊழல் இல்­லாத சமு­தாயம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் ஊழல் குற்­றங்­களை ஒழிக்கும் எனது வேலைத்­­திட்­டங்­களை நான்  ஒரு­போதும் கைவி­டப்­போ­வ­தில்லை. ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.   மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத் துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு - புதிய தகவல் வெளியாகியது

திய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு - புதிய தகவல் வெளியாகியது


தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்­த­தாக தியத்­த­லாவ - கஹ­கொல்ல பகு­தியில் பஸ் வண்­டி­யினுள் வெடித்த கைக்­குண்டை எடுத்துச் சென்­ற­தாக கூறப்­படும் கஹ­கொல்ல இரா­ணுவ முகாமில் சேவை­யாற்றும் சார்ஜண்ட் மேஜர் தர இரா­ணுவ வீரர் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­ம­ளித்­துள்ளார். 

தியத்­த­லாவ வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் பாது­காப்பில் குறித்த சார்ஜண்ட் சிகிச்சை பெற்றுவரும் நிலை­யி­லேயே நேற்று முன்தினம் மாலை அவ­ரிடம் விஷேட பொலிஸ் குழு, வைத்­தி­ய­சா­லையில் வைத்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் இதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

தான் பல­ரிடம் 10 இலட்சம் ரூபா­வுக்கும் மேல் கடன் வாங்­கி­யுள்­ள­தா­கவும், அந்த கடன் தொகையை அவர்கள் திரும்ப கேட்கும்போது தன்னால் அதனை திருப்பிக் கொடுக்க முடி­யாத சூழல் நில­விய நிலை­யி­லேயே தற்­கொலை தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுத்து குண்டை முகா­முக்கு எடுத்துச் சென்ற­தா­கவும், முகாமில் வைத்து தற்­கொலை செய்­து­கொள்­வதே திட்­ட­மாக இருந்தபோதும் குண்டு இடையில் தவ­று­த­லாக பஸ் வண்­டி­யி­லேயே வெடித்­து­விட்­ட­தா­கவும் அவரின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

 கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் வடபகு­தியில் சேவை­யாற்றும்போது குறித்த கைக்­குண்டு தனக்கு கிடைக்கப் பெற்­ற­தா­கவும், அது நல்ல நிலையில் இருக்­க­வில்லை எனவும் அவர் வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குறித்த சார்ஜண்ட் மேஜர், இயந்­திர பொறி­யியல் படை­ய­ணியின் கஹ­கொல்ல முகாமின் ஆயுத களஞ்­சி­யத்­துக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர் எனவும் அவர் விடு­மு­றைக்­காக வீடு சென்று குறித்­த தினம் கஹ­கொல்ல முகா­முக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்கும்போதே குண்டை உடன் எடுத்து வந்­துள்­ள­மையும் இது­வ­ரை­யி­லான பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­ய­ாகி­யுள்­ளது. 

அதன்­படி பஸ்ஸில் வெடித்த குண்டு திய­த­லாவ - கஹ­கொல்ல முகா­முக்குள் எடுத்துச் செல்லும் நோக்கத்­து­ட­னேயே குறித்த சார்ஜண்ட் மேஜ­ரினால்  உடன் கொண்டு செல்­லப்பட்­டுள்­ளமை உறு­தி­ய­ாகி­யுள்­ளது.   மாத்­த­ளையைச் சேர்ந்த குறித்த சார்ஜண்ட் மேஜர் தர வீரர், விடு­மு­றைக்கு சென்­று­விட்டு மீள முகா­முக்கு யாழில் இருந்து திய­த்த­லாவ நோக்கி பய­ணிக்கும் பஸ்ஸில் வந்­துள்­ள­துடன், கண்­டியில் வைத்து அன்­றைய தினம் அதி­காலை 1.05 மணிக்கு அவர் பஸ்ஸில் ஏறி­யுள்ளார்.  பஸ் மாற்­றப்­பட்டு திய­த்த­லாவை நோக்கி சென்ற மற்­றைய பஸ்­ஸுக்கு பண்­டா­ர­வ­ளையில் வைத்து ஏற்­றப்­பட்­டுள்ளார். இந்த நிலையில் அந்த பஸ் வண்­டியில் சாரதி இருக்கை பக்­க­மாக 3 ஆவது நிரலில் 3 ஆசனம் கொண்ட தொகு­தியில் அவர் நடுவில் அமர்ந்­துள்ளார். அவ­ரது வலது புறத்தில் கஹ­கொல்ல முகாமில் சேவை­யாற்றும்  இலி­கிதர் ஒரு­வரும் இடது புறத்தில் இரா­ணுவ பொலிஸ் பிரிவின் உத்­தி­யோ­கத்தர் ஒருவரும் இருந்­துள்­ளனர். 

யாழ். - பண்­டா­ர­வளை பஸ்ஸில் கண்­கா­ணிப்பு கமரா இருந்த நிலையில் அதன் காணொ­ளி­களை சோதித்­துள்ள பொலிஸார் குறித்த சார்ஜண்ட் மேஜர் ஒரு­வ­கை­யான பதற்­றத்­து­ட­னேயே பஸ்ஸில் பய­ணித்­ததை அவதானித்­துள்­ளனர். அத்­துடன் எரிந்த பஸ்­ஸிலும் கண்­கா­ணிப்பு கமரா இருந்­துள்ள நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பில் உறுதி செய்ய அந்த காணொ­ளி­களை மீளப்பெறும் பொருட்டு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் அது தொடர்­பிலான  கரு­விகள் மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளன. 

 இந் நிலையில் கஹகொல்ல முகாம் அருகே இறங்கும் நோக்கத்துடன் இலிகிதருடன் குறித்த சார்ஜண்ட் மேஜர் தயாராகியுள்ளார்.

இதன்போது அவரது தொலைபேசி கீழே விழுந்துள்ளதுடன் அதனை எடுக்க முற்பட்டபோது மடியில் இருந்த பையில் இருந்தே குண்டு வெடித்துள்ளதும் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. .