Saturday, March 10, 2018

வவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் யுவதி கைது

வவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் யுவதி கைது

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களெயான குழந்தை காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தை சேர்ந்த யுவதியொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  கலாபோகஸ்வௌவை சேர்ந்த எம். எம்.  கல்யாணி மானகே வயது 37 என்ற பெண் அனுமதிக்கப்பட்டு குழந்தையை பெற்றுள்ளார்.
இந் நிலையில் இரண்டு நாட்களாக தாயின் பராமரிப்பின் வைத்தியசாலையில் இருந்த குழந்தை நேற்றைய தினம் தாய் மலசலகூடம் சென்று திரும்பியபோது திடீர் என காணாமல் போயிருந்தது. இதனையடுத்து குழந்தையின் தாயாரால் வைத்தியசாலை தாதியர்களிடம் தெரிவிக்கப்பட்டு குழந்தையை தேடும் பணிகள் இடம்பெற்றிருந்தது. இதனால் வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டு குழந்தையை தேடியபோதிலும் குழந்தை இன்மையால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையொன்றினை தாயோருவர் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ள நிலையில் அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்த குழந்தையை கொண்ட வந்தவர் மேலும் சந்தேகம் கொண்டு தாயாரை பரிசோதனைக்குட்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குழந்தையை கொண்டு வந்த தாயார் குழந்தை பெற்றமைக்கான சான்றுகள் இன்மையாலும் வவுpயா வைத்தியசாலையிலி; குழந்தையொன்று காணாமல் போனமை தொடர்பாக செய்தி கிடைக்கப்பெற்றமையினாலும் அனுராதபுரம் வைத்தியசாலையில் இரந்து வவுனியா பொலிஸாருக்கும் வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தந்தையாரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததுடன் அனுராதபுரத்திற்கு அழைத்து சென்றிருந்துடன் ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம் தாயாரே குழந்தையை விற்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய தாயாரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை குழந்தை மரபனு பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டிய தேவையுள்ளமையினால் அனுராதபுரம் வைத்தியசாலையின் பராமரிப்பில் உள்ள நிலையில்; குழந்தையை கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்த 21 வயதுடைய யுவதியை கைது செய்த வவுனியா பொலிஸார் அவரை வவனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் பிரகாரம் குறித்த யுவதி திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் குடும்பத்தினருடன் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் கர்ப்பமடைந்தள்ளது போல் அண்மைக்காலமாக பாசாங்கு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதியில் இருந்து குழந்தையொன்றை எடுத்துச்செல்லும் நோக்குடன் வந்துள்ளார். இவர் விடுத்திக்குள் நுழைந்தபோது குறித்த குழந்தையே தாய் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே அக் குழந்தையை எடுத்துச்செல்வது இலகுவாக இருந்தமையினால் குழந்தையை எடுத்து அனுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.
எனினும் குழந்தைக்கு உடல்நலம் சீரின்மையாக இருப்பதை அவதானித்த குறித்த யுவதி அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் நிலையிலேயே அவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தாயாரை பொலிஸார் விடுவித்துள்ளனர்.


Thursday, March 8, 2018

பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் -க. அகரன்

பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் -க. அகரன்

சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது.  
கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன.   
நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  
இதற்கான காரணங்களாக, இருவழித் தடைகளைப் பார்க்க முடிகின்றது. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் இனிவரும் காலங்களில், தமிழர்களுக்கான அரசியல் களம் அல்ல என்பதைத் தமிழ் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளதுடன், கூட்டமைப்புக்கான எச்சரிக்கையையும் விடுத்திருந்தமை கண்கூடு.  
அத்துடன், யாரை நம்பி தென்னிலங்கை அரசாங்கத்துக்கு அதாவது, நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்திருந்ததோ, அந்த அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையிலுள்ளது. ஆட்சி அமைத்துள்ள கட்சிகளுக்கிடையிலான பூசல்கள், உருப்பெருத்து வருவது, பெரும் தடையாக உள்ளது.  
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள உட்பூசல்களும் சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஒத்துழைத்தல் என்ற கருத்தியலும் பெரும் விடயங்களாகக் காணப்படும் நிலையில், அரசியல் தீர்வுக்கான நகர்வு ஆமைவேகத்திலும் குறைவாகவே உள்ளது.  
உள்ளூர் அதிகாரசபைக்கான தேர்தலில், சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவைத் தாம் மறந்துவிடவில்லை என எடுத்தியம்பி இருப்பதானது, இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அவரே சரியான நபர் அல்லது ஆட்சியாளர் என்ற கருத்தியலையும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமது வாக்கினால் நிரூபித்துள்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.  
தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏட்டுச் சுரைக்காயாகக் காணப்படும் நிலையில், தமிழர்கள் கோரும் அதி உச்ச அதிகாரப்பரவலாக்கல் கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாலேயே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், தென்பகுதி மக்கள் அல்லது சிங்கள மக்கள் உள்ளனர்.  
எனினும், தனக்கு ஆதரவான பெரும் தொகையான மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து, மஹிந்த ராஜபக்ஷ அந்தத் தீர்வை வழங்குவார் என நம்புவது ஏற்புடையதல்ல.  
இந்நிலையில் பல தளங்களில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ள தற்போதைய அரசாங்கம், ஐ. நா வலியுறுத்திய நிலைமாறுகாலப் பொறிமுறையை, நடைமுறைப்படுத்துவதில் கூட, பெரும் இடையூறுகளையே எதிர்கொண்டுள்ளது.   
நல்லிணக்கம் என்ற பெயரில் ஆரம்பித்த அத்தனை விடயங்களும் அதன் இலக்கைச் சென்றடைய முன்னரே முட்டி மோதி, சின்னாபின்னமாகி வருகின்றது.   
அண்மைய காலங்களில் எற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவங்கள், இலங்கை தேசத்தில் மற்றுமோர் அசம்பாவிதங்களை பாரிய அளவில் தோற்றுவித்து விடுமோ என்பது தொடர்பில் பலரும் ஐயங்கொண்டுள்ளனர்.  
இவ்வாறான நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்துக்குப் பின்னராக மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் எவ்வாறான பலனை அளித்துள்ளன என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.   
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைக்கு அப்பால், வவுனியா மாவட்டத்துக்குத் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்களக் குடியேற்றங்கள் உக்கிரம் பெற்றுள்ளன. 
இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்குத் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே மேடையேறி, காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கியிருந்தனர்.  
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்துக்கு இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித எதிர்ப்பையும் காட்டாமை நல்லாட்சிக்கான அதிகப்படியான விட்டுக்கொடுப்பையே காட்டி நிற்கின்றது.  
இவ்வாறான நிலையிலேயே, அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை எடுத்துச்செல்லக்கூடிய காலச்சூழலை, உருவாக்க முனைவது எவ்வாறு என்பது பெரும் வெற்றிடமாகவே உள்ளது.  
நீண்டு செல்லும் தமிழர்களின் போராட்டங்களுக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் கேப்பாபிலவு மக்களும் ஒரு வருடம் கழிந்தும் வீதியோரத்தில் போராடும் நிலையே உள்ளது.  
இவர்களுக்கான தீர்வை வழங்கும் எண்ணப்பாடு, சிங்களப் பெரும்பான்மை  ஆட்சியாளர்களுக்கு உண்டா என்பதைப் பரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.   
உள்ளூரதிகார சபைகளில் ஆட்சியமைப்பதில் இன்றுவரை இழுபறி நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்க் கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆக்கபூர்வமாக, ஒழுங்குநெறிமுறைகளுடன் சபைகளின் நிர்வாகத்தைக் கொண்டு செல்வார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். 
ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ள சபைகளில் தலைவர், உபதலைவர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்கள், கூட்டமைப்பின் தலைமையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 51 சதவீதத்துக்கும் குறைவாகவே அக்கட்சி ஆசனங்களை பெற்றுள்ளமையால் அமர்வின் முதலாவது நாளன்று ஆட்சேபனையைத் தெரிவித்து இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தலைவர் உபதலைவர்களைத் தெரிவு செய்ய ஏனைய கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன.  
இந்நிலையில் வலிகளைத் தாங்கிய மக்களின் நிலையுணர்ந்து செயற்படும் தன்மை, இதுவரை ஏற்படாத தமிழ்த் தலைமைகளாக எம்முன் அரசியல் செய்கின்றனர் என்ற ஆதங்கம் நிறைந்த சமூகமாகவே தமிழர்கள் உள்ளனர். 
பலவீனப்பட்ட தமிழ் அரசியலுக்குள் சிக்குண்டுள்ள தமிழர்கள், கடந்து வரப்போகும் நாட்களில் தாமாகவே மத்திய அரசாங்கத்துக்கான அதிகப்படியான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் வாய்ப்புகளே அதிகரித்துச் செல்கின்றன.  
ஏனெனில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், ஐ. நா மனித உரிமை பேரவை அமர்வுகள் சூடுபிடித்துள்ள தருணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதைவெறும் கண் துடைப்புக்கான செயற்பாடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் பார்க்கும் நிலையில், அதற்குள், கடற்படையின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரும் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இந்த அலுவலகம் தொடர்பான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.   
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராகவும் அவர்களையே பெருமளவு அங்கத்தவர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அலுவலகமானது நீண்ட இழுபறிக்கு பின்னர், அவசர அவசரமாகத் திறக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பிலும் சிந்திக்க வைக்கின்றது.  
இது தொடர்பாக, தமிழ் அரசியலாளர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதானது மக்களைத் தாமாகப் போராட்டத்துக்குத் தூண்டும் செயற்படாகவே பார்க்கத்தோன்றுகின்றது.   
அவ்வாறான நிலையொன்று ஏற்படும் பட்சத்தில், வடக்கு, கிழக்கில் ஸ்திரமற்றுப்போகும் தமிர்களுக்கான அரசியல் தளமானது, மேலும் வலுவிழந்து செல்லும் என்பதில் ஐயப்பாடு இல்லை. அத்துடன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பயணம், பெரும் இடர்களைச் சந்திக்க நேரிடும்.  
இச்சூழலில் கருத்தியலால் மோதுண்டு காலத்தை வீணடிக்கும் செயன்முறைகள் சிக்கண்டு போகும் அரசியலாளர்களாக அல்லாமல், இறுக்கமானதும் நம்பிக்கைக்குரியதுமான ஒன்றுமையினூடான பயணத்தை மேற்கொள்ளும் அரசியல் பாதையொன்றை தமிழ் அரசியலாளர்களும் அரசியல் கட்சிகளும் ஏற்படுத்த வேண்டும். 
அவ்வாறில்லாத போது, எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பிலான பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்துவிடும்.   
அதற்குமப்பால் இந்நிலை தொடருமானால், தேசியக்கட்சிகளின் ஆதிக்கம் வடக்கு, கிழக்கில் செல்வாக்கு செலுத்த தொடங்கும்.  
இந்நிலையில், மத்தியில்  ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குள் சிக்குண்டு, எதிர்காலம் தொடர்பில் ஏக்கத்துடன் இருக்கும் சிறுபான்மையினருக்கு ஏதுவான வழிவகைகளைத் தொலைத்தவர்களாகக் கூடாது. 
தமிழ் அரசியலாளர்கள் அந்தச் சிக்கலுக்குள் சிக்குப்படாது தமது தந்திரோபாய அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ளும் பட்சத்திலேயே, அரசியல் தீர்வுக்கான அடுத்த நகர்வு சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.    
பிள்ளைகளுக்காக வீதியில் இருக்கையில் மகளிர் தினத்தை கொண்டாட முடியுமா?

பிள்ளைகளுக்காக வீதியில் இருக்கையில் மகளிர் தினத்தை கொண்டாட முடியுமா?

பிள்ளைகளை காணாது வீதியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மகளிர் தினத்தினை அனுஸ்டிக்க முடியுமா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 தமது பிள்ளைகள் கணவன்மார் மற்று ம்உறவினர்கள் கிடைக்க வேண்டும் வவுனியாவில் இன்று 376 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட:டு வரும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  பிள்ளைகளை தொலைத்துவிட்டு வீதியோராத்தில் போராட்டத்தில் ஈடுபடுகையில் எவ்வாறு மகளிர் தினத்தினை கொண்டாடுவது.
எமது பிள்ளைகள் எமக்கு கிடைக்க வேண்டும் சர்வதேசம் தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தன



சாராயக் கடைகளை மூடுமாறு கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்

சாராயக் கடைகளை மூடுமாறு கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்


சாராயக்கடைகளை மூடுமாறு கோரி கண்டனப் போராட்டம் இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

அனைத்துலகப் பெண்கள் தினமான இன்று சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பும்இ உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இக்கண்ட ஆர்ப்பாட்டத்தில் 

வடக்கு கிழக்கு மக்களாகிய எம் மீது யுத்தம் திணிக்கப்பட்டு சகல அடக்கு முறைகளுக்கும் ஆளாகி எமது அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பை இழந்து தெருவில் விடப்பட்டுள்ளோம். இந்த யுத்தத்தில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது எமது பெண் சமூகமே.

இந் நிலையில் கடந்த 09 வருடங்களில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்த வாழ்க்கைச் சுமை என்பவற்றினால் ஏற்பட்டு வரும் கடன் சுமையினால் பெண்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள். 
லீசிங் நாள் கடன்கள் கிழமைக் கடன்கள் குழுக்கடன் திட்டங்கள் போதக்குறைக்கு பிரமிட் வியாபாரமுறை என எம் அடிப்படைப் பொருளாதாரத்தையே ஆட்டங்கன வைக்கின்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒருபுறம் சாராய (பார்) மதுக்கடை போத்தல் கள்ளுப்பாவனையும்இ மாவாஇ கஞ்சாஇ ஹெரோயின் போதை பொருட்கள் பாவனைகள் அதிகரிப்பு மறுபுறம் என பெண்களின் குடும்ப வாழ்விற்கும் சுய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாமல் செய்திருப்பது மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதியை மதுக் கடைகளினாலேயே சுரண்டப்படுகின்றது.

மது மற்றும் போதைப்பொருள் பாவனைகளின் அதிகரிப்பானது எமது பொருளாதார மற்றும் கல்வி

கட்டமைப்புக்களை அழிப்பது மட்டுமின்றி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை சிறுவர் துஸ்பிரயோகம்இ பாலியல் வல்லுறவுஇ கொலைஇ கொள்ளைஇ லஞ்சம் மற்றும் வீதி விபத்துக்கள் என பாரிய குற்றச் செயல்களுக்கு பிரதான காரணியாக மாறியிருக்கின்றது. 

எமது சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளையும் தகரத்து பொருளாதரத்தை சிதைத்து எம்சமூகத்தை கடனாளியாகஇ நோயாளியாகஇ சிந்தனையற்றவர்களாக மாற்றி மக்களைச் சுரண்டி மேலும் வறுமையில் தள்ளும் அனைத்து திட்டங்களை முறியடிக்கவும் 

இவற்றை எம் சமூகத்திலிருந்து முழுமையாக அகற்றும் வரை தொடர்போராட்டங்களை முன்னெடுக்க எம்முடன் இணைந்து செயற்படுமாறும் அனைத்து மகளீர் பெண்கள் அமைப்புக்களையும்இ அனைத்து சமூக அமைப்புக்களையும் மக்களையும் உரிமையுடன் போராட அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மகாhணசபை உறுப்பினர் ப. சததிலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.






 பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்

பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்



மதீனாநகர் பள்ளிவாசலுக்கு முன்னால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினால் ஒரு பதட்டமான நிலையேற்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் இராணுவம், பொலிஸார் பாதுகாப்பில் இடுபட்டிருந்தனர். தொடர்ந்தும் அப்பகுதியில் பல்வேறு பட்டவர்களாலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். இதன் ஒரு கட்டமாக இன்று மதினாநகர் பள்ளிவாசலில் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சகருக்கும் அக்கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்களிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இதன் போது குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.













சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்

சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்


நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை காரணமாக இலங்கை முழுவதும் பேஸ்புக், வைபர், வட்ஸப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களின் பாவனையும் இடைநிறத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவை இடைநிறுத்தப்பட்டள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை

தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த 120 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சீமெந்து கொள்கலனில் ஏற்றி பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை அம்பாறை, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு, அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பேருந்துகள் மீது கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.கே.எம்.தமிழ் வித்தியாலயம், நாவலர் தமிழ் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி வித்தியாலயம் மற்றும் மேலும் சில பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதற்கு பேருந்துகள் இன்றி தவித்தனர்.

அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த தமிழ் இளைஞர்கள் ஐவர் அடங்கிய குழுவினர் கொள்கலன் ஒன்றை கொண்டு வந்து இந்த மாணவர்களை பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை 5 மணியளவில் அம்பாறை, மரதமுனை, சம்மாந்துறை, அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை உட்பட பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களை சுற்றிவளைத்து டயர் எரித்து கலகக் குழுக்கள் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் 8 பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பதிவு செய்ய சென்ற தமிழ் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸார் அவரை காப்பாற்றினர் என ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு

இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற இன வன்முறை மோதலில் இருவர் உயிரிழந்தனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதனால் தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததால் நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த மோதல்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுவதால், நாட்டின் முக்கிய பகுதிகளில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Chrystia Freeland இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தையில் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 7, 2018

வவுனியாவில் நல்லிணக்க முயற்சி

வவுனியாவில் நல்லிணக்க முயற்சி



வவுனியாவில் சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் அவசர சந்திப்பொன்றினை இன்று மேற்கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் 2 மணிக்கு அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில் சர்வ மத தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.


பிரியா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பிரியா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் ஒரு ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் மேயாத மான்.
வைபவ் நாயகனாக நடித்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு மெர்சல் திரைப்படத்துடன் தில்லாக வெளியாகியது. நல்ல வசூலை பெற்ற இந்த திரைப்படம் மீண்டும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ரீரிலிசாகவுள்ளது.
புதிய படங்கள் ஏதும் ரிலிசாகாது என ஸ்டிரைக் நடப்பதால் ஏற்கனவே மெர்சல் ரீரிலிசாவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்படமும் ரிலிசாகவுள்ளது.
கண்டியில் அலைபேசியுடனான இணையப் பாவனை இடைநிறுத்தம்

கண்டியில் அலைபேசியுடனான இணையப் பாவனை இடைநிறுத்தம்

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் மட்டக்களப்பின் இரு வீடுகளிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு

பரபரப்பான சூழலில் மட்டக்களப்பின் இரு வீடுகளிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு


மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் 2 வீடுகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியிலுள்ள 2 வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குண்டுகள் வைக்கப்பட்டுள்ள வீடுகளில், ஒரு வீட்டில் நேரங்கணித்து வெடிக்கும் குண்டும், மற்றைய வீட்டில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

அத்தடன் வீட்டின் வேலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீலங்கா என எழுதப்பட்ட பதாகையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில் இரண்டு வீடுளையும் இலக்கு வைத்து வைக்கப்பட்ட குறித்த வெடி பொருட்கள் அபாகரமானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

குறித்த பகுதிக்கு விரைந்த குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியில் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அம்பாறை மற்றும் கண்டியின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் நாட்டில் பத்து நாட்களுக்கு அவசர கால சட்டமும் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மக்கள்? கண்டி, அம்பாறை கலவரம் தொடர்பில் சம்பந்தன்

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மக்கள்? கண்டி, அம்பாறை கலவரம் தொடர்பில் சம்பந்தன்


சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முடியும் என மக்கள் நினைக்கின்றார்களா என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நாம் பேச வேண்டும்.

அம்பாறை சம்பவம் ஹோட்டல் ஒன்றின் சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவர் தொடர்பிலானதாகும். அம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு, பள்ளிவாசல்களுக்கு மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மிக அருகாமையில் பொலிஸ் நிலையம் அமையப்பெற்றுள்ளது.

எனினும் தாக்குதலுக்கு வந்தவர்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிச் சென்றுள்ளனர்.

கண்டியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் போது மற்றுமொரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை.
இவ்வாறான சம்பவங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் இழைத்து தப்பிச் செல்ல முடியும் என்பதே இந்த சம்பவங்களின் மூலம் புலனாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியும் என மக்கள் நினைக்கின்றார்கள்? சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளமையே இவ்வாறான சம்பவங்களின் மூலம் தெளிவாகின்றது.

இதனை நியாயப்படுத்திவிட முடியாது, நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் நீதியை நிலைநாட்டக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

நடு வீதியில் நீதி நிலைநாட்டப்படுமாயின் அது துயர்மிக்க நிலைமையாகவே கருதப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கண்டியின் தற்போதைய நிலை என்ன? வன்முறை மீண்டும் வெடிக்குமா?

கண்டியின் தற்போதைய நிலை என்ன? வன்முறை மீண்டும் வெடிக்குமா?


கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை அமுல்படுத்திய பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை நீடிப்பது குறித்து பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர்.

எனினும் கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்தெனிய, திகன மற்றும் பல்லேகல ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்பட்ட போதும், நேற்று இரவும் கண்டியின் பல பாகங்களில் சிறு சிறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கவும், பாதுகாப்பு குறைப்பாடுகளை சீர் செய்யும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் காரணமாக மாணவர்களின் இருநாள் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மெனிக்ஹின்ன பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையை கட்டுப்படுத்த சென்ற 3 பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றும் பல இடங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில், மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
‘நாட்டில் சட்டம் சீர்குலைந்துள்ளது’

‘நாட்டில் சட்டம் சீர்குலைந்துள்ளது’



நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஒத்தி வைப்பு விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் மிற்சல் ஸ்டார்க்

ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் மிற்சல் ஸ்டார்க்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மிற்சல் ஸ்டார்க் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கு முன்பதாக, 10ஆம் இடத்திலிருந்த மிற்சல் ஸ்டார்க், குறித்த போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் தரப்படுத்தலொன்றில் தனது இதுவரையான விளையாடும் காலத்தில் மிற்சல் ஸ்டார்க் பெறும் சிறந்த இடம் இதுவாகும்.
அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன், தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர், இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் முறையே ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது இடங்களில் காணப்படுகின்றனர்.
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லையனும் தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கலும் தலா 755 புள்ளிகளையே பெற்றுள்ளபோது தசம புள்ளிகள் வித்தியாசத்தில் நேதன் லையன் பத்தாமிடத்தில் காணப்படுகின்றார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
  1. ஜேம்ஸ் அன்டர்சன் (இங்கிலாந்து), 2. கஜிஸோ றபடா (தென்னாபிரிக்கா), 3. இரவீந்திர ஜடேஜா (இந்தியா), 4. ஜொஷ் ஹேசில்வூட் (அவுஸ்திரேலியா), 5. மிற்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), 6. இரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), 7. வேர்ணன் பிலாந்தர் (தென்னாபிரிக்கா), 8. நீல் வக்னர் (நியூசிலாந்து), 9. ரங்கன ஹேரத் (இலங்கை), 10. நேதன் லையன் (அவுஸ்திரேலியா)
இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், முதல் 10 இடங்களில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் சோபிக்காத ஹஷிம் அம்லா, ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் கீழிறங்கி 10ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார். எட்டாம், ஒன்பதாம், 10ஆம் இடங்களிலிருந்த பாகிஸ்தானின் அஸார் அலி, இங்கிலாந்தின் அலிஸ்டயர் குக், நியூசிலாந்தின் றொஸ் டெய்லர் ஆகியோர் முறையே ஏழாம், எட்டாம், ஒன்பதாம் இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
  1. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா), 2. விராத் கோலி (இந்தியா), 3. ஜோ றூட் (இங்கிலாந்து) 4. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), 5. டேவிட் வோணர் (அவுஸ்திரேலியா), 6. செட்டேஸ்வர் புஜாரா (இந்தியா), 7. அஸார் அலி (பாகிஸ்தான்), 8. அலிஸ்டயர் குக் (இங்கிலாந்து), 9. றொஸ் டெய்லர் (நியூசிலாந்து), 10. ஹஷிம் அம்லா (தென்னாபிரிக்கா)
பையிலிருந்து ஆணின் தலை மீட்பு

பையிலிருந்து ஆணின் தலை மீட்பு


கொழும்பு- கெசல்வத்த பண்டாரநாயக்க மாவத்தையில் பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் ​தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (7) அதிகாலை இந்தத் தலையை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கறுப்பு நிற பையொன்றில் குறித்த தலை போடப்பட்டிருந்ததாகவும், புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து 200 மீற்றர் தொலைவிலே​யே இந்த பை காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
‘தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்’

‘தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்’


சுதந்திரமானதும் சுமுகமானதுமான சூழலில், மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும், அரசு என்ற வகையிலும் அரச தலைவர் என்றவகையிலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேனென்பதை, அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதைத் தெளிவுபடுத்த, வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக, நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையைக் கவனத்திற்கொண்டே, இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவதாகவும், நேற்று (06) விடுத்த அறிக்கையொன்றில், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘இந்தச் சம்பவங்கள் காரணமாக, உயிரிழப்புக்களுக்கும் பொருள் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும்;, எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த அசம்பாவிதங்களை கண்டிக்கின்ற அதேவேளை அச்செயல்களில் ஈடுபட்ட தனி மனிதர்கள், அமைப்புக்கள், குழுக்கள் ஆகிய அனைத்து தரப்புக்களுக்கும் எதிராக, சட்டத்தை மிக நேர்த்தியாகச் செயற்படுத்த வேண்டுமென, நான் பொலிஸ் துறைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

‘அதேபோல், ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையைச் சாந்தப்படுத்துவதற்கும் இந்தப் பதற்ற நிலைமையைப் போக்குவதற்கும், அப்பிரதேசங்களில் சமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டின் அனைவரும், சுதந்திரமாகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து, அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

‘அதேபோன்று, ஏற்பட்டிருக்கும் இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாம் நமது நாட்டினுள் மிகத் தெளிவாக ஏற்படுத்தவேண்டிய தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அந்நியோன்யப் புரிந்துணர்வு, இனங்களுக்கிடையிலான நட்பு ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, அரசாங்கம் என்றவகையில், எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை, நான் இங்கே கூறவிரும்புகிறேன்.

வணக்கத்துக்குரிய மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினரதும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்களதும் வழிகாட்டலும் பங்களிப்பும், இச்சமயத்தில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதை மிகுந்த கௌரவத்துடன் வலியுறுத்துகின்ற அதேவேளை, பிரதேச அரசியல் தலைமைகளுக்கு, இம்மோதல்களைத் தடுப்பதற்கும், பதற்றத்;த்தைத் தணிப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, நான் கேட்டுக் கொள்கிறேன்.

‘அதேபோல், பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர், நேற்று முதல், இன்றும் எதிர்வரும் நாட்களிலும், 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலம், இப்பிரதேசங்களில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்; மேற்கொள்ள வேண்டுமென, நான் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

‘ஏற்பட்டுள்ள இந்த நிலைமையைப்பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, விசேட தேசிய பாதுகாப்பு சபை கூட்டமொன்றை நடத்தி தேவையான தீர்மானங்களை எடுத்திருப்பதுடன், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து, எதிர்காலத்துக்குத் தேவையான முறையான திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம். அதனால், அனைவரும் சமாதானத்துடனும் அமைதியாகவும் வாழ முயற்சிக்கும் அதேவேளை, குறிப்பாக, பௌத்த நாடு என்ற வகையில் ‘குரோதத்தால் குரோதம் தணியாது’, ‘பழிதீர்ப்பதால் பகைமை தீராது’ என்ற பௌத்த சிந்தனையை அறிந்தவர்கள் என்றவகையில், எந்தவிதமான துன்புறுத்தல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவதன் மூலம், எமது நாட்டுக்கே அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘அதேபோன்று, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த நம் நாட்டவர்கள், தத்தமது மதங்களின் வழிகாட்டல்களுக்கமைய சமாதானத்துடனும் சகவாழ்வுடனும்; வாழ்வதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த சுதந்திரமான சூழலை மென்மேலும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்து, நம்நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் ஒன்றுபட்டு, சமாதானமான முறையில் முன்னெடுப்போம் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன்.

‘நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஒற்றுமையை பலப்படுத்தவும்;, இனங்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், ஓர் அரசு என்றவகையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, வன்முறையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை, இங்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

‘அத்தோடு, பல்வேறு வதந்திகiளையும் கட்டுக்கதைகளையும், சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாகப் பரப்பி, மிக மோசமாக, மக்கள் மத்தியிலும் நாட்டினுள்ளும் சமாதானத்தைச் சீர்குலைக்க முயலும் சில தரப்பினர் இருப்பதென்பது தெரியவந்திருக்கின்றது. அவ்வாறானவர்களுக்கு எதிராக, மிக உறுதியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று, ஜனாதிபதி கூறியுள்ளார்.
வவுனியா மதினா நகரில் இராணுவம் குவிப்பு..!

வவுனியா மதினா நகரில் இராணுவம் குவிப்பு..!


வவுனியா மதினா நகரில் பள்ளிவாசலுக்கு முன்பாக டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு மதினா நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஏதெனும் அசம்பாவித்ங்கள் எற்படாமல் இருக்கும்