Saturday, March 17, 2018

வவுனியா மாவட்ட செயலகத்தில் வழிபாட்டுதளம் என்ற போர்வையில் பௌத்தவிகாரை

வவுனியா மாவட்ட செயலகத்தில் வழிபாட்டுதளம் என்ற போர்வையில் பௌத்தவிகாரை


வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்ச்சைக்கு மத்தியில் பௌத்த விகாரை அமைக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சனி ஞாயிறு தினங்களை பயன்படுத்தி வவுனியா மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டு தளங்கள் என்ற போர்வையில் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நான்கு மதங்களுக்குமான வழிபாட்டு தளங்கள் என்ற பொர்ஐவயில் பௌத்த கட்டிடக்கலையை பின்பற்றி பாரிய புத்த சிலையை நிறுவி அமைக்கப்படவுள்ள இத்திட்டமானது கடந்த சில மதங்களாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டபோதிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றுமு; வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன் மற்றும் வட மாகாணசபை உறு;பபினர் ப. சத்தியலிங்கம் ஆகியொர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கியிருந்தபோதீலும் ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், மிஹின் லங்கா ஊழல் : விசேட பொலிஸ் குழு நியமனம்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், மிஹின் லங்கா ஊழல் : விசேட பொலிஸ் குழு நியமனம்


வறையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேற்ரிங், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்தக் குழு இயங்கவுள்ளது. பத்து பொலிஸ் அதிகாரிகள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியிலிருந்து 2018 ஜனவரி 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் கிடைத்த முறைப்பாடுகள் பற்றி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சகல முறைப்பாடுகளும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 95நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 95நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 95நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மகிந்த ராஜபக்ச தரப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கண்டி சம்பவங்களால் பிற்போடப்பட்டிருந்த இந்த பிரேரணையை விரைவுப்படுத்த மகிந்த அணிதீர்மானித்துள்ளது. 

இந்தப் பிரேணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 30க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக இராஜாங்க அமைச்சர்களான பாலித்த ரங்கே பண்டார மற்றும் லவசன்ன சேனாநாயக்க ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் மயன்ன திஸாநாயக்கவும் இதற்கு ஆதரவைவெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்தநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் அதிகாரிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இலங்கை பொலிஸ் அதிகாரிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!



கையூட்டல் வழங்க முயற்சித்த அரசியல்வாதியை கைது செய்த காரணத்திற்காக பொலிஸ் அதிகாரியொருவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

25000 ரூபா கையூட்டல் வழங்குவதற்கு முயற்சித்த அரசியல்வாதியை கைது செய்து பொலிஸ் திணைக்களத்திற்கு நற்பெயரைத் தேடித் தந்த அம்பேகமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமலால் சில்வா அல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு நற்பெயரை தேடிக் கொடுத்த இந்த அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து பிரதேச மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். அண்மையில், குடும்ப பிரச்சினை ஒன்றின் போது தமக்கு சார்பாக நடந்து கொள்ளுமாறு தெரிவித்து இந்த அரசியல்வாதி 25000 ரூபா கையூட்டலை பொலிஸ் அதிகாரிக்கு வழங்க முயற்சித்திருந்தார். 

கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து இந்த பொலிஸ் அதிகாரியை சிக்கச் செய்ய குறித்த அரசியல்வாதி திட்டமிட்டிருந்தார். எனினும், பொலிஸாருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்த அரசியல்வாதிகளை பொலிஸ் அதிகாரி கைது செய்திருந்தார். 

இவ்வாறு பொலிஸ் திணைக்களத்திற்கு நன்மை செய்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, March 14, 2018

வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன - வளாக முதல்வர்

வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன - வளாக முதல்வர்


வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக இன்று வவுனியா வளாகத்தில் இடம்பெற்றக ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

28.02.2018 இல் இருந்து இலங்கையில் உள்ள கல்வி சார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் எமது வளாகத்தின் கல்வி சார்இ கல்வி சார செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
13.003.2018 அன்று வளாக முதல்வர் தலைமையில் பீடாதிபதிகள்இ துறை தலைவர்கள் கூடி கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் முடிவடைந்த பின்னர் எங்களது கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பது என்று தீர்மாணம் எடுத்துள்ளோம்.

பரீட்சைகள் அனைத்தும் முன்பே முடிவடைந்தள்ளது. 12.02.2018 அன்று வியாபார கற்கைகள் பீடத்தின் புதிய ஆண்டிற்கான கற்கை நெறிகள் மட்டுமே ஆரம்பமாகியிருந்தன. அப்போது கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக கல்விக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் வழங்க முடியாத காரணத்தினால் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தியிருந்தோம். 

மேலும் 03.03.208 அன்று நடைபெறவிருந்த பிரயோக விஞ்ஞான பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கு அனுமதிப்பதற்கான விவேக நுண்ணறிவு பரீட்சையானது தற்போது பிற்போடப்பட்டுள்ளது. 

அத்துடன் இப்பரீட்சைகளிற்கான திகதியும் 19.03.2018 தொடங்க இருந்த பிரயோக விஞ்ஞான கற்கை நெறிகள; கற்கைநெறிக்கான திகதியும் இப்பேராட்டம் முடிவடைந்த பின்னர் பத்திரிகை வாயிலாக அறிவிக்கப்படும்.