Saturday, March 24, 2018

25 வருடங்களின் பின் புதிய தலைவர் தெரிவு

25 வருடங்களின் பின் புதிய தலைவர் தெரிவு

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின்  புதிய நிர்வாக தெரிவுக்கான  பொது கூட்டம் இன்று காலை 9 மணி அளவில்  சங்க மண்டபத்தில் நா .சேனாதிராஜா தலைமையில் நடை பெற்றது. ஒவ்வொரு வருடமும் புதிய நிர்வாகம் தெரிவு செய்வதன் அடிப்படையிலேயே  மேற்படி கூட்டம்  நடை பெற்றதுடன் புதிய நிர்வாகமும் தெரியப்பட்டது.
 அதன் படி சங்கத்தின்  புதிய தலைவராக நா. தர்மராஜா (அகளங்கன்)  தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக தே. அமலனும் ,பொருளாளராக த. யசோதரனும் உப தலைவர்களாக ந.கபிலநாத் க.சத்தியநாதன் , ஆ. சுந்தரராயன் ,ந. தியாகராசா ஆகிய  நான்கு  பேர் தெரிவு செய்யப்பட்டதுடன்  உப செயலாளராக சி. நாகராசா, உப பொருளாளராக த,பிரதாபனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 மேலும் உறுப்பினர்களாக 10 பெரும் போசகர்களாக செ .சபாநாதன் ,சி.வரதராயாவும் ,ஆலோசகராக முன்னாள் தலைவர் நா.சேனாதிராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் மேலும் 25 வருடங்களாக தலைவராக பணியாற்றிய நா.சேனாதிராஜா இம்முறை உள்ளுராட்சி ,மன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினால் தலைவர் பதவியில் இருந்து விலகி ஏனையோருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.  அதன்படி 25 வருடங்களுக்கு பின்னர் புதிய தலைவராக அகளங்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை   குறிப்பிடதக்கது
ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுனருடன் சந்திப்பு

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுனருடன் சந்திப்பு

அரசியல் கைதியான ச. ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுனரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் பொது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு நிலைமையை எடுத்தியம்பியிருந்தனர்.
இதனை செவிமடுத்த வட மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே இவ்விடயம் தொடடுர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வதாக தெரிவித்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு..!

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு..!

லங்கா ஐ.ஓ.சி எரிபொருட்களின் விலை நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாயாலும் பெற்றோல் ஒரு லீட்டர் 9 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஆர்யா!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஆர்யா!


யாழ்ப்பாணத்தில் நடிகர் ஆர்யாவின் செயற்பாடு குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆர்யா, யாழ். பொது நூலகத்தில் அத்துமீறிய நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நூலகத்தின் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் தெரிவித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்து கொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும், அங்கு பணியாற்றுவோர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாத்துறையினர் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது.

இதேவேளை, நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மவுன மொழியில் தயாராகி உள்ள மெர்குரி..!

மவுன மொழியில் தயாராகி உள்ள மெர்குரி..!

உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. ஆனால் உலகின் பொது மொழி மவுனம். அந்த மவுன மொழியில் தயாராகி உள்ளது கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி. உலகின் அனைத்து மொழிகளிலும் என்ற வாசகத்துடனேயே ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிது.

மவுன படங்களின் காலத்திற்கு பிறகு கமல் நடித்த பேசும்படம் தான்
மவுனப் படம். அதன் பிறகு தற்போது மெர்குரி மவுனப்படமாக தயாராகி உள்ளது. பிரபுதேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், ரம்யா நம்பீசன், இந்துஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமே தயாரித்துள்ளது.

ஒரு பாழடைந்த பழைய தொழிலற்சாலைக்குள் சிலர் மாட்டிக் கொண்டு தவிக்கும் வழக்கமான படம் தான் என்றாலும் படத்தில் யாரும் வசனம் பேச மாட்டார்கள், சந்தோஷ் நாராயணனின் இசை மட்டுமே பேச இருக்கிறது. 

பிரபு தேவா ஹீரோ என்றாலும் அவருக்கு ஜோடி இல்லை. அனைத்து கேரக்டர்களுமே மர்ம தொழிற்சாலைக்குள் மாட்டிக் கொள்ளும் வெவ்வேறு மனிதர்களாக நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் சில வெளிவந்திருந்தாலும், தமிழில் இதுவே முதல் படமாகும்.
அரசியல் கைதியின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதியின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதியின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து போராட்டம் வவுனியா இலுப்பையடியில் இடம்பெற்றது.


கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்த சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறுதிக் கிரியைகள் கிளிநொச்சிஇ மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேரமே கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட பின் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். 
இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. நீதிமன்றின் ஊடாக  97 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். தந்தை கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையையும் தாயையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனவே இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வவுனியா மாவட்டத்தில் இன்று கையெழுத்து போராட்டத்தினை வவுனியா மாவட்ட சுயாதீன இளைஞர்களின் தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.








இவர்தான் கல்விப்பணிப்பாளர்

இவர்தான் கல்விப்பணிப்பாளர்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நிலவி வந்த கல்விப்பணிப்பாளர் வெற்றிடத்திற்கு திருமதி சுரேந்திரன் அன்னமலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதியில் இருந்து கடமைகளை பெறுப்பெற்கவுள்ள இவர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பிரதி கல்விப்பணிப்பாளராக இதுவரை கடமையாற்றி வந்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ஓய்வு பெற்று சென்ற பpன்னர் வவுனியா வடக்கு வலயத்திற்கு நிரந்தரமான வலயகல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுடன் வவுனியா தெற்கு வலய கல்வி கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருண்ணன்  வடக்கு வலயத்தினையும் நிர்வகித்து வந்த நிலையில் சு. அன்னமலர் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை சேர்ந்த இவர் கல்வி நிர்வாக சேவையின் ஊடாக வவுனியா மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திலும் சில ஆண்டுகள் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Friday, March 23, 2018

சென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது

சென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது


பணி ஒதுக்கீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட பொதுக்கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேரையும், சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சி.ஏ.ஜி. என்ற மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் கீழ் இயங்கும் தமிழகத்திற்கான பொதுகணக்காளர் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அரசு மேற்கொள்ளும் வரவு, செலவு தணிக்கை, திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை இந்த அலுவலகம் மூலம் மத்திய கணக்கு தணிக்கைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்துக்கான சி.ஏ.ஜி.யின் பொது கணக்காளராக அருண் கோயல் 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் அவர்களின் ஊழியர்கள் தரப்பில் இருந்தே பல புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், கோட்டக் கணக்காளர் தரத்தில் உள்ளவர்களுக்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகளுக்குத் தணிக்கை செய்யும் வேலைக்கான பணியை ஒதுக்கீடு செய்வதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, அலுவலகத்திற்குள் நுழைந்த சிபிஐ அதிகாரிகளிடம் அருண் கோயல் கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பொதுக்கணக்காளர் அருண் கோயல், நிதிநிலைக் கணக்கு அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களது அறைகளில் சோதனை நடத்தி கூடுதல் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, அருண் கோயல் தகுதியற்றவர் எனக் கூறி அவரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அங்கிருந்த மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
வறியவர்கள் பணத்தை ஏப்பம் விட்டவன் மாட்டிய கதை தெரியுமா?

வறியவர்கள் பணத்தை ஏப்பம் விட்டவன் மாட்டிய கதை தெரியுமா?

வவுனியா நகர்ப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பண மோசடி செய்த நபர் வழக்கு தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்திதுறை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளை சொல்லி கடன் வழங்கும் திட்டதமொன்றினை அறிமுகம் செய்து பல கோடி ரூபா நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது ஏமாற்றப்பட்ட பொது மக்கள் குறித்த அலுவலகத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து மக்களை ஏமாற்றிய குழுவை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இதனையடுத்து இவ்வாறு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த சுமார் 200 இற்கும் அதிகமானவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குறித்த ஏமாற்றுப்பேர்வழியை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து முக்கிய சூத்திரதாரியான ஆனந்தராஜா என்பவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் நிமிர்த்தம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சரீரப்பிணை வழங்கப்பட்டிருந்த ஆனந்தராஜா என்ற சந்தேக நபர் கடந்த 3 வழக்குகளுக்கு வவுனியா நீதிமன்றத்திற்கு ஆஜராகாமையினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பிணையாளர்களுக்கும் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டதன் பிரகாரம் பருத்தித்துறையில் குறித்த பண மோசடி மன்னன் ஆனந்தராஜா மறைந்திருப்பதாக  தெரியவந்ததையடுத்து பிணையாளர்கள் சிலர் இன்று பருத்தித்துறைக்கு சென்று குறித்த நபரை பிடித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளித்ததுடன் வவுனியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.


பல கோடி ரூபாவை வறிய மக்களிடம் ஏமாற்றிய குறித்த நிறுவனத்தின் தலைவரான ஆனந்தராஜா கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்க தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்ததுடன் பட்டதாரிகள் சஙகம் ஒன்றையும் உருவாக்கி அரசில் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவந்தவர் என்பதும் குறிப்பித்தக்கது.
Two dead as suspected IS gunman takes hostages in France

Two dead as suspected IS gunman takes hostages in France


At least two people were killed after a gunman claiming allegiance to the Islamic State group opened fire and took hostages at a supermarket in southwest France a short while ago, Agence France-Presse (AFP) reported.

A security source said the two were killed in the attack at a Super U store in the town of Trebes.

Armed police were also responding to the earlier shooting of a policeman in the town of Carcassonne, 15 minutes drive away, which took place at around 11 am (1000 GMT).

It was unclear if the two incidents were linked.

The gunman claimed allegiance to the Islamic State group, the local prosecutor's office said, and the incident was being treated as a terror attack.

Local authorities tweeted that the area around the supermarket was off-limits to the public, while Prime Minister Edouard Philippe said it was a "serious" incident.

If the link to Islamic State is confirmed, the hostage-taking would be the first deadly attack in France since October, when two young women were stabbed to death outside Marseille's main train station.

Interior Minister Gerard Collomb was heading to the scene, he wrote on Twitter
The area of southwest France where Friday's shootings took place has been scarred by Islamic extremism before.
தீவிர பயிற்சியில் டோனி: அதிர வைக்குமா சென்னை அணி

தீவிர பயிற்சியில் டோனி: அதிர வைக்குமா சென்னை அணி


ஐ.பி.எல் ரி-20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இத்தொடருக்கான பயிற்சியை டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்துள்ளது.

நேற்று சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்த சென்னை அணியினர், இதன்போது பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இரண்டு ஆண்டுகள் தடை கடந்து மீள் பிரவேசித்துள்ள சென்னை அணி, ஏப்ரல் 7ஆம் திகதி ஆரம்பமாகும் முதல் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி, கடந்த 2010ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் மற்றும் 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில், கேதார் ஜாதவ், ஷேன் வோட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், ரெய்னா, டோனி, முரளி விஜய், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண், பிராவோ, ஜடேஜா, துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய், கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், மார்க் வுட், மொஹமட் இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி நெகிடி, மோனு சிங் ஆகியோர் உள்ளனர்.
மாணி வாசிப்பின்றி பயணிகள் போக்குவத்து :- அவதிப்படப்போகும் பயணிகள்

மாணி வாசிப்பின்றி பயணிகள் போக்குவத்து :- அவதிப்படப்போகும் பயணிகள்


எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மாணி (meter) வாசிப்பின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை தீர்க்கப்படாதமையின் காரணமாகவே இந்த நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக இலங்கை தன்னார்வ தொழிற்துறையின் தேசிய முச்சக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்தன கூறினார்.

மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதில் 1 இலட்சம் கையெழுத்துக்களுடனான மனுவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

முச்சக்கர வண்டிக்கு பதிலாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு உத்தேசப்பட்டிருக்கும் குறைந்த தரத்திலான பஜாஜ் கியுடீ வாகனத்திற்கு எதிப்பு தெரிவித்தும், முச்சக்கர வண்டியின் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளுடன் ஒரு வாரத்திற்கு இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன், குறித்த பிரச்சனைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்த அவர், இதன் காரணமாக 8 இலட்சத்திற்கு அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த போராட்டம் காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண் அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறை

பெண் அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறை


மாத்தளை பகுதியில் உள்ள பாடசாலையின் முன்னாள் பெண் அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவன் ஒருவனை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சப்பணமாக பெற்றுக்கொண்டதற்காக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் அதிபரின் வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர இராஜினாமா

பிரதமரின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர இராஜினாமா


ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி 6 பக்கங்களை கொண்ட தனது இராஜினாமா கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவு பொறுப்பாளர் பதவியையும் அவர் இராஜினாமா செய்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் பிரத்தியோக செயலாளரும், உதவியாளருமான சுதத் சந்திரசேகர 33 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமன்றி கடந்த 3 வருடங்களாக பிரதமரின் செயற்பாடுகளை அவர் விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
11 மணி 30 நேர நீர் வெட்டு அமுல்

11 மணி 30 நேர நீர் வெட்டு அமுல்


களுத்துறையில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 11 மணித்தியாலங்கள் 30 நிமிட நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிடிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கடுகுருந்த, நாகொட மற்றும் பயாகல பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மங்கொனை, பேருவளை, கலுவாமோதர, அளுத்கமை, தர்க நகர் மற்றும் பெந்தொடை பிரதேசங்களுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பாவக்குளம் மக்களுக்கு அநீதி: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாவக்குளம் மக்களுக்கு அநீதி: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு


வவுனியா பாவக்குளம் படிவம் 1 மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழான பாவற்குளம்  படிவம் 1 மக்கள் தமது கிராமத்திற்கான கிராம சேவையாளர் மற்றும்  அபிவிருத்தி உத்தியோகத்தர் தமது கிராமத்திற்கு அநீதி விளைவிப்பதாக தெரிவித்து அவர்களை கிராமத்தை விட்டு மாற்றும் படி வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக முறைப்பாடு செய்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவரும் தடையாக இருப்பதாகவும் பிரதேச செயலகத்தில்  இருந்து எமது கிராமத்துக்கு வரும் எந்த ஒரு தகவல்களையும் எமக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தனர்.
அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்தி  சங்கத்துடன் ஒத்துழைக்க மறுப்பதாகவும்  மாறாக ஒரு சிலருடன் கலந்துரையாடி விட்டு முடிவுகளை எடுப்பதாகவும்  அவர்கள் விரும்பியவர்களுக்கு  மட்டுமே அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை   கிராமத்தில் அனைத்து வசதியுடனும்  பொது நோக்கு மண்டபம் இருக்கின்ற போது பதிவு நடவடிக்கைகளை  அலுவலகத்தில்  மேற்கொள்ளாது தமக்கு விரும்பிய வீடுகளில் இருந்தே அவற்றை செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்    இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளருக்க பலமுறை தெரியப்படுத்தியும் எந்த  வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற காரணத்தினால்  இன்று மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு அளிக்க வந்ததுடன் வவுனியா அரசாங்க அதிபருக்கும் இது தொடர்பாக தெரியப்படுத்த  உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,
வரட்சி நிவாரணம் பெறுவதற்காக கிராம சேவகர் பதிவுகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருந்தது. இந் நிலையில் கிராம அபிவித்தி சங்கத்தின் பராமரிப்பில் உள்ள பொது நோக்கு மண்டபத்தின் திறப்பு கிடைக்காத நிலை இரந்தமையினால் மக்கள் அதிகமாக அங்கு பிரசன்னமாகியிருந்தை கருத்தில் கொண்டு கிராம சேவகர் கோவில் ஒன்றில் வைத்து பதிவுகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக சிலர் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை இருப்பதால் தமக்கு பதிவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். எனவே அவ்வாறு பதிவு செய்ய முடியாதவர்கள் என்னிடம் விபரத்தினை தருமாறு தெரிவித்திருந்ததேன்.
இதன் காரணமாகவே சில முரண்பாடான் நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பாக கிராம சேவகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிவித்தார்.


விருதுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது

விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

முதலமைச்சரின் இளங்கலைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தினால்  கோரப்பட்டுள்ளது. 
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும்  2108 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதுக்கான  இளங்கலைஞர் ஊக்குவிப்பு பரிசுபோட்டிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 இவ்விண்ணப்பங்களை 2018.04.20 ம் திகதிக்கு முன்னர் வவுனியா பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு வவுனியா பிரதேச கலாசார பேரவை கேட்டு கொள்கின்றது
மாவட்ட செயலகத்திற்கு இது அவசியமா?

மாவட்ட செயலகத்திற்கு இது அவசியமா?

நிர்வாக சேவையினை வழங்க வேண்டிய அரச நிறுவனம் ஆன்மீக சேவையினை வழங்க முற்படுவது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும் என வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மன்றம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுட்டிக்காட்டி கடிதமொன்றை கையளித்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமத கூடம் எனும் தொனிப்பொருளில் அமைக்கப்படவுள்ள வணக்கஸ்தலம் தொடர்பில் சமூக மட்டத்தில் உள்ள முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில் குறித்த மன்றமானது இன்று வவுனியா அரசாங்க அதிபருக்கான கடிதமொன்றினை வழங்கியிருந்தது.

இன்று மதியம் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமாரிடம் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதென சிவில் சமூகத்;தினரால் கருதப்படும் பின்வரும் விடயத்தைத் தங்களுக்கூடாக மாவட்ட அபிவிருத்திக் குழுவினதும், மாவட்ட சமூக நல்லிணக்கக் குழுவினதும் கவனத்திற்குக் கொண்டு வர இக் கடிதத்தை தங்களின் மேலான கவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றோம். 
பல்வேறு ஊடகங்களின் ஊடாகவும் சமூகப் பிரமுகர்கள் ஊடாகவும் வவுனியா மாவட்ட நிர்வாகம் மாவட்ட செயலகத்தில் சர்வமத பிரார்த்தனைக் கூடம் ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நாம் அறிகின்றோம். சமூக நல்லிணக்கத்திற்கு மத வழிபாடுகள் கூட்டு மதப் பிரார்த்தனைகள் இன்றியமையாதவை என்ற எண்ணக்கருவை மாவட்ட நிர்வாகம்; கொண்டிருப்பது சமூக நல்லிணக்க ஆர்வலர்கள் என்ற வகையில் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
ஆனால், நிர்வாக சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரச நிறுவனம் ஆன்மீக சேவைகளை வழங்க முற்படுவது சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றே நாம் கருதுகின்றோம். ஏனெனில் மாவட்ட செயலகங்கள் நிர்வாக சேவைகளை வழங்குவதற்குரிய கட்டமைப்பைக் கொண்டனவையே ஒழிய ஆன்மீக சேவையை வழங்கும் கட்டமைப்பை கொண்டவையல்ல இதனால் மேற்படி கூட்டுப் பிரார்த்தனையை கண்காணிக்கும் தகுந்த பொறிமுறை இல்லாதிருப்பின் அது இக்கூடத்தைப் பயன்படுத்;தும் செயலகத்தில் சேவை வழங்கும் பணியாளர்கள் மத்தியிலும் செயலகத்தின் சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்கள் மத்தியிலும் மதப் போட்டியினை ஏற்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் இப் பணியாளர்களிலும் பொதுமக்களிலும் பெரும்பாலானோர் சமூக நல்லிணக்கம், கூட்டுப் பிரார்த்தனை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பான தெளிவான அறிவு, திறன், மனப்பாங்கு உடையவர்கள் அல்ல மாறாக மதக் குரோதங்களையும் எதிர்மனப்பாங்குகளையும் கொண்டவர்கள்.
ஒரு சர்வ மத பிரார்த்தனைக் கூடம் சர்வ மதங்களினதும் தனித்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய கட்டட வடிவமைப்பைப் பிரதி பலித்தல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பொதுமகனும் பொதுப் பிரார்த்தனையில் ஈடுபடும் அதேவேளையில் தத்தமது மதத்தின் தனித்துவத்தைப் பேணிக் கொள்ளவும் உரித்துடையவர் ஆவார். ஒரு பொதுப் பிரார்த்தனைக் கூடத்தை எல்லா மதங்களையும் பிரதிபலிக்கக் தக்கதாக வடிவமைத்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது. அது குறித்த ஒரு மதத்தை மட்டும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைந்து விட்டால் அது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவே முடியும்.
மதங்களின் தனித்துவத்திற்கு ஏற்ப எல்லா மதத்தினரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவர் என நாம் எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் ஏற்கனவே தமக்குத் தனியான பிரார்த்தனை மண்டபம் தேவையெனக் கேட்டிருப்பதாக நாம் அறிகின்றோம். எதிர்காலத்தில் ஏனைய மதத்தினரும் தத்தமக்குத் தனியான பிரார்த்தனை மண்டபங்கள் தேவையென போராட்டங்களை நடாத்துவார்களாக இருந்தால் அது மாவட்ட நிர்வாகத்திற்கு பெருத்த தலையிடியாக மாறும். 
நிர்வாக சேவைகளை வழங்குவதே மாவட்ட செயலகத்தின் நோக்கமாகும். ஆன்மீக சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு வணக்கஸ்தலங்களுக்கு உரியவையாகும். எனவே மாவட்ட செயலகம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி அனைத்து பிரஜைகளுக்கும் தரமான சேவைகளை வழங்குவதன் மூலமாகவே சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமே ஒழிய அது வணக்கஸ்தலங்கள் செய்ய வேண்டிய ஆன்மீக சேவையை வழங்குவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வவுனியா மாவட்ட செயலகம் கடந்த காலங்களிலிருந்து இன, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி அனைத்து பிரஜைகளுக்கும் தரமான நிர்வாக சேவையை வழங்கி வருகின்றமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். எனவே அச் சேவை தொடர வேண்டுமென்பதையும் அது மேலும் மேம்படுத்தப்பட்டு சமூக நல்லிணக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதையும் நாம் விரும்புகின்றோம்.
மேலும் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே மாவட்ட செயலகத்திற்கு வருகை தருகிறார்கள், பணியாளர்கள் சேவை வழங்குவதற்காகவே வருகை தருகிறார்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டு எவரும் வருகை தருவதில்லை. அவ்வாறே தமக்குக் கிடைக்கும் நேரத்தில் பிரார்த்தனை செய்ய விரும்புபவர்களும் கூட அதனை மேற்கொள்ள மாவட்ட செயலகத்தின் சூழலில் நான்கு மதங்களினதும் வணக்கஸ்தலங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன. இந் நிலையில் மாவட்ட செயலகத்திற்கு தனியான பிரார்த்தனைக் கூடம் அவசியம் தானா என்ற வினா சிவில் சமூகத்தினர் மத்தியில் எழுவது இயல்பு.
மேற்படி பிரார்த்தனைக் கூடத்திற்கு மாவட்ட செயலகம் 2 மில்லியன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நாம் அறிகின்றோம். அதேவேளையில் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் தேவையான பல கீழ்க்கட்டுமான வசதிகள் மாவட்ட செயலகத்தில் குறைவாகவே உள்ளன. உதாரணமாக வருகை தரும் பொதுமக்களின் மிதி வண்டிகள், உந்துருளிகள் போன்ற வாகனங்களை நிறுத்துவதற்கு பொருத்தமான வாகனத் தரிப்பிடங்கள் இல்லாமை ஒரு நீண்டகாலக் குறைபாடாகும். பல திணைக்களங்களில் போதுமான இடவசதி இல்லாதிருப்பதை பொதுமக்களாகிய நாம் அவதானித்திருக்கின்றோம். பல அரச திணைக்களங்கள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் இடமின்மையினால் வேறு இடங்களில் இயங்கி வருவதையும் நீங்கள் அறிவீர்கள் எனவே இது போன்ற நிதிகளை நிர்வாக சேவைக்குத் தேவையான கீழ்க்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வி எமக்கு எழுகிறது.
மேற்கூறப்பட்ட காரணங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு, வவுனியா மாவட்ட செயலகத்தில் கூட்டுப்பிரார்த்தனை மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்தை மாவட்ட செயலகம் கைவிட வேண்டுமென மாவட்டத்தின் சிவில் சமூகத்தின் சார்பில் நாம் மிக்கத் தயவாகத் தங்களை வேண்டி நிற்கின்றோம் என அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்தில் பல்வேறு சிரமங்கள்..!

குடிநீர் விநியோகத்தில் பல்வேறு சிரமங்கள்..!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்தில், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எம்.இராஜகோபால் தெரிவித்துள்ளார்
தற்போது நிலவும் கடும் வரட்சியினால், பூநகரிப்பிரதேசத்தில் பெருமளவான பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த மக்களுக்குரிய குடிநீரை விநியோகிப்பதுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களிலும், பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலரைத் தொடர்பு கொண்டு வினவியபோது,
பூநகரிப்பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீரை விநியோகிப்பதில் பிரதேச சபை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற போதும், தேவையான பகுதிகளுக்கு நீர்விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
அதாவது, ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வீதிகள் செப்பனிப்படாமை என்பன பாரிய சவால்கள் ஆகும்.
இதனைவிட, குடிநீர் தேவைப்படும் பகுதிகள், பாடசாலைகள் என்பவற்றுக்கு நாளாந்தம் 40 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் தேவைகள் மேலும் அதிகரிப்பதுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், இந்த மக்களுக்கு விநியோகிப்பதுக்கான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன.
இந்த 40 ஆயிரம் லீற்றர் நீரையும் பூநகரி நெற்புலவு, முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், பூநகரிப்பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை இது ஒரு சவாலாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கஜபா படையணியில் விளையாட்டு துறைகளில் உள் மட்டம் மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களை கௌரவப்படுத்தும் கஜபா வர்ண இரவு நிகழ்வு நேற்று (20) ஆம் திகதி கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க  அதிதியாக உலகப் புகழ் பெற்றவீரரான ​மஹேல ஜயவர்தனவும்  வருகை தந்தனர்.


காலா படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் வெளிவந்த ரகசியம்.!

காலா படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் வெளிவந்த ரகசியம்.!

சூப்பர்ஸ்டார் ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.௦ படத்திலும் நடித்துள்ளார், இந்த படத்தை பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் 2.௦ படமோ கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் படம் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது, காலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளிவந்தது அனைவரிடமும் பிரமாண்ட வரவேற்ப்பை பெற்றது.

அதிலும் ரஜினி பேசும் வேங்கைய மகன் வசனம் பட்டி தொட்டி எங்கும் கேட்கும் அளவிற்கு பிரபலமானது, அதேபோல் மீம்ஸ் தெறிக்க விட்டார்கள் மீம்ஸ் கிரியட்டர்கள், இந்த படம் அடுத்தமாதம் வெளிவர இருந்தது ஆனால் ஒரு சில காரணத்தால் பட ரிலீஸ் தள்ளிபோகும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் காலா படத்தின் க்ளைமேக்ஸ் எது என்பது தெரியவந்துள்ளது.
காலா டீசரில் ரஜினி நெருப்பில் சண்டை போடுவது போல் காட்சி இடம் பெரும் அந்த காட்சிதான் காலா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாம். மேலும் படத்தில் 6 சண்டைகாட்சிகள் இருக்கிறதாம் படத்தில் இரண்டாம் பாதியில் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தானாம் என கூறுகிறார்கள்.

Thursday, March 22, 2018

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு பிடியாணை

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு பிடியாணை


முன்னாள் கடற்படை வீரர் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக இருக்கும் போது, மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோதும், அவர் மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

இந்நிலையில் 9 வருடங்களுக்கு முன்னர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வௌ்ளை வானில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையானது கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த, வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரான கஸ்தூரிகே காமினி மற்றும் முத்துவாஹென்னதி அருன துஷார மென்டிஸ், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை பிடியாணை உத்தரவை நீதிபதி மீண்டும் பிறப்பித்தார்.

இதில் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்புவதற்காக இப்பிடிவிறாந்தை ஆங்கில மொழியில் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் குறித்த நபர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடற்படையில் பணியாற்றும் ரியல் எட்மிரல் ஆனந்த குருகேவை அடுத்த மாதம் 2 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்குமாறும் கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளின் பெயர்பட்டியல் இதுவரை கிடைக்கவில்லையென குற்றப்புலனாய்வு திணைக்களம்,  ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள விசாணை அறிக்கைகளின் பிரதிகளை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாமி-2 அபார நம்பிக்கையைக் காப்பாற்றுமா..!

சாமி-2 அபார நம்பிக்கையைக் காப்பாற்றுமா..!


சி3 படத்தை அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ் முதலானோர் நடிக்கும் 'சாமி-2' படத்தை இயக்கி வருகிறார் ஹரி. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், மூன்று பாடல் காட்சிகளையும் படமாக்கினால் சாமி-2 இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். 

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சாமி' படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'திருநெல்வேலி ஹல்வா டா...' ஸ்டைலில் ஒரு குத்துப் பாடலை சாமி-2 படத்திலும் வைக்க திட்டமிட்டுள்ளார்கள். 'திருநெல்வேலி ஹல்வா டா...' பாடலை சாமி' படத்துக்காக படமாக்கிய அதே லொகேஷ்ன்களிலேயே இந்தப்பாடலையும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் ஹரி.

'சாமி' படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் 'சாமி-2' படத்துக்கு வெற்றி கிடைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கையில் இரண்டாம் பாகத்தை ஷிபு தமீனின் 'தமீன் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தயாரிப்பாளரின் நம்பிக்கையை 'சாமி-2' படம் காப்பாற்றுமா?
400வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றினார் ஸ்டுவர்ட் புரோட்!!!

400வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றினார் ஸ்டுவர்ட் புரோட்!!!


இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர் புரோட் தனது 400வது டெஸ்ட் விக்கட்டினை இன்று கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி அகுலேண்டில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 58 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்த அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 175 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்தது.

இதில் ஸ்டுவர்ட் புரோட் நியூஸிலாந்து அணியின் லதாமின் விக்கட்டினை கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கட்டுகளை கடந்திருந்தார்.

இங்கிலாந்து அணிசார்பில் ஜேம்ஸ் எண்டர்சனை (514) தொடர்ந்து 400 விக்கட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஸ்டுவர்ட் புரோட் பெற்றுள்ளார்.
சகிப் அல் ஹசனின் மோசமான செயல்!!! : இலங்கைக்கு பணம் வழங்கியது பங்களாதேஷ்!!!

சகிப் அல் ஹசனின் மோசமான செயல்!!! : இலங்கைக்கு பணம் வழங்கியது பங்களாதேஷ்!!!


கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் வீரர்கள் உடைமாற்றும் அறையில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கான நிதியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண இருபதுக்கு-20 தொடரின் இறுதி லீக் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பதற்ற நிலையின் போது பங்களாதேஷ் வீரர்கள் இருந்த உடைமாற்றும் அறையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கண்ணாடிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஒரு இலட்சத்து 46 ஆயிரம் ரூப செலவிட்டு திருத்தியமைத்ததுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தது.

இதன்படி பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தின் படி பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் குறித்த கதவை உடைத்தமை நிரூபிக்கப்பட்டது.

கோபத்தில் மைதானத்திலிருந்து உடைமாற்றும் அறைக்கு வந்த சகிப் அல் ஹசன் வேகமாக கதவை திறந்த போது, குறித்த கண்ணாடி கதவு உடைந்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு குறித்த கதவிற்கான பணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் ஏப்ரல் 04 இல்

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் ஏப்ரல் 04 இல்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நேற்றையதினம் (21) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்திருந்தனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 51 எம்.பி.க்கள் உள்ளிட்ட 55 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் குறித்த தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

டி.பீ ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, காதர் மஸ்தான் ஆகிய நான்கு சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஜித் ரசிகருக்கு இவ்வளவு பெரிய மனசா! பாருங்கள் உள்ளே

அஜித் ரசிகருக்கு இவ்வளவு பெரிய மனசா! பாருங்கள் உள்ளே


தமிழ் சினிமாவை கொடிகட்டி ஆண்ட ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இன்னும் படங்கள் மூலமாக அவர் வசூல் வேட்டை நடத்தி வருகிறார். அவரின் படங்களில் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.

அதிலும் அஜித் அமைதியாக இருக்கும் போதே ரசிகர்கள் அமர்க்களம் செய்கிறார்கள். அவர் வாய் திறந்து பொது விசயங்களுக்காக பேசினால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். அதில் ஒரு ஆட்டோ ஓட்டும் ரசிகர் அஜித் பிறந்தநாளுக்கு மே 1ம் தேதி ஆட்டோ சவாரி இலவசம் என எழுதி விளம்பரப்படுத்தியுள்ளார்.

விஜய்க்கு மட்டும் தனி சட்டமா? அதிருப்தியில் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

விஜய்க்கு மட்டும் தனி சட்டமா? அதிருப்தியில் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு


பல்வேறு பிரச்சனைகள் காரணம் காட்டி தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் நடத்திவருகிறது. இந்த மாத துவக்கம் முதல் எந்தவொரு புது படமும் வெளியாகவில்லை.

16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டன. ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும், மற்ற 3 சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது சினிமா துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் வெளிப்படையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படி பாரபட்சமாக சங்கம் நடந்துகொள்வதால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி 'ஜூங்கா' படப்பிடிப்பை மீண்டும் துவங்கும்படி படக்குழுவுக்கு கூறியுள்ளார்.

அதனால் விஜய் சேதுபதி, சயீஷா உட்பட படக்குழு தற்போது போர்சுகல் சென்றுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கம் தடையை மீறி விஜய் சேதுபதி இப்படி செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரச நிதி மோசடி…! கோட்டபாய மனுவிற்கு இடைக்கால தடை

அரச நிதி மோசடி…! கோட்டபாய மனுவிற்கு இடைக்கால தடை


தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, நீதிபதி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தந்தையரான டீ ஏ ராஜபக்ஸவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும் நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கும் அரச நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்து குற்றவியல் விசாரணை பிரிவு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை எதிர்த்து கோட்டாபயவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசிய பொலிஸாருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

நீதி மன்றத்திற்கும் நில புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீரகெட்டிய மெதமுலன பகுதியில் டீ.ஏ. ராஜக்ஷவிற்கான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது என கோட்டபய தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்க தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணிப்பீட்டிற்கு அமைய 33 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதி முதலாவது கட்டமாக செலுத்தப்பட்டதாகவும், பின்னர் முழுமையான தொகை செலுத்தி முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள கோட்டாபய தரப்பினர், குறித்த கொடுக்கல் வாங்கல்கள் இரு தரப்பினருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக கொடுக்கல் வாங்கல்கள் எனவும், அதனை பொது சொத்துக்கள் சட்டத்திற்கமைவாக கொண்டுவரமுடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் குருக்கள் படுகொலை….! ராணுவச் சிப்பாய் உட்பட மூவருக்கு தூக்கு – இளஞ்செழியன் அதிரடி

யாழில் குருக்கள் படுகொலை….! ராணுவச் சிப்பாய் உட்பட மூவருக்கு தூக்கு – இளஞ்செழியன் அதிரடி


யாழ்ப்பாணம் சங்கானையில் ஆலயக் குரு ஒருவர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இராணுவச் சிப்பாய் உட்பட மூவருக்கு நீதிபதி மா. இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இராணுவ கோப்ரல் மற்றும் இருவருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்டது.

இதன்படி கொலைக்குற்றச்சாட்டு, கடும் காயத்தை விளைவித்தமை, கொள்ளையடித்தமை உட்பட 5 குற்றச்சாட்டுக்களிலும் குறித்த மூவரும் குற்றவாளிகள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

குறித்த மூவருக்கும் ஆயுள் தண்டனையும் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழியச்சிறையும் 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 2 வருட கடூழிச்சிறையும் அத்துடன் குறித்த மூவருக்கும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகர சபையின் செயலாளரின் துணிகர செயல்

வவுனியா நகர சபையின் செயலாளரின் துணிகர செயல்

வவுனியாவின் நகர் பகுதியில் நகர சபையின் அனுதியின்றி கட்டப்பட்ட வியாபார நிலையங்களின் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்டட நிர்மாண வேலைக்கான உபகரணங்ளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா நகர பகுதியில் நகர சபையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் இரு கடைகளின் கட்டட வேலைகளை நிறுத்துமாறு கடந்த காலங்களில் பல முறை நகரசபையினால் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நகரசபையின் இவ்வறிவுறுத்தல்களை ஊதாசீனப்படுத்தி குறித்த இரு வியாபார நிலையங்களிற்கான கட்ட வேலைகள் நடைபெற்று வந்ததை அடுத்து இன்று வவுனியா நகர சபை செயலாளரின் தலைமையில் குறித்த கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்ட வேலைகளிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.




பேரூந்து நிலையத்தில் இப்படி செய்யலாமா?

பேரூந்து நிலையத்தில் இப்படி செய்யலாமா?

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள் அதனை அப் பேரூந்து நிலையப் பகுதியில் உள்ள பொதுவெளியில் வைத்து பயன்படுத்துவதால் அங்கு வந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலரும் அதன் புகையை சுவாசிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து நிலையத்திற்குள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

Wednesday, March 21, 2018

 பெண்களின் மோட்டார் சைக்கிளில் திருடியவர்கள் கைது

பெண்களின் மோட்டார் சைக்கிளில் திருடியவர்கள் கைது

வவுனியாவில் திருட்டு குற்றசாட்டில் இருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
 வவுனியாவில் முக்கிய பகுதிகளான வைத்தியசாலை நீதிமன்றம் பாடசாலைகள் போன்ற இடங்களில்   நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை    உடைத்து பணம் தொலைபேசிகள் போன்றனவற்றை திருடிய குற்ற சாட்டிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த சோமஜித் தலைமையில் , பொலிஸ் சாஜன்களான  நிசங்க, ,அசோக,பிரேமஸ்ரீ  மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ,நியாம்,சிவராசா ,தரங்க முனசிங்க ,இந்திக ஆகிய பொலிஸ் குழுவிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே வவுனியா சாந்தசோலை ,அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்த 23 வயது மதிக்க தக்க இரு இளைஞர்களை 20.03.2018  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 15 பெறுமதி மிக்க தொலைபேசிகள் 30000 ரூபாய் பணம் 2 சாரதி அனுமதி பத்திரங்கள், வங்கி அட்டைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.