Saturday, April 14, 2018

வலி.வடக்கில் மீண்டும் திருடர்கள் ஜாக்கிரதை!

வலி.வடக்கில் மீண்டும் திருடர்கள் ஜாக்கிரதை!


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் திருட்டுக்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.சுமார் 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் எஞ்சிய வீட்டு தளபாடங்களை களவாடும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.


சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர்.


நேற்றய தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதனையடுத் து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மீறி மரங்களை வெட்டுவது உள்ளிட்ட திருட்டுக்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவரெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விளம்பி வருடப் பிறப்பு விசேட திருவிழா

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விளம்பி வருடப் பிறப்பு விசேட திருவிழா

ரவிப்ரியா

கிழக்கில் பிரசித்திபெற்ற தொன்மைமிக அலயமாம் சுயம்பலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விளம்பி வருட பிறப்பைமுன்னிட்டு சனி காலை பெத்தாக்கிழவி குடும்பம் சார்பாக ஆலய தலைவர் காசிப்பிள்ளை வேலாயதபிள்ளைதலைமையில், 1008 வருடாந்த சங்காபிசேகத்தை ஆலய பிரதம குரு பிரதிஸ்டா திலகம், வாமதேவ சிவச்சாரியார்,கிரியாகலாமணி சு.க விநாயகமூர்த்தி உதவிக்குரு சடாட்சர சர்மா சகிதம் நடாத்தவைத்தார். அதனைத் தொடர்ந்து
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே!

வலிகாமம் வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட பகுதியில் மூன்றிற்கும் அதிகமான படைத்தளங்கள் பேணப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.இலங்கை இராணுவம் படையினரது ஆக்கிரமிப்புக்கொண்ட இராணுவ கொலனியொன்றையே அங்கு பேண முற்பட்டுள்ளமை பற்றி ஏற்கனவே பதிவு இணையம் செய்தி வெளியிட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறிப்பாக அங்குள்ள படைத்தளங்கள் பற்றிய விபரங்களோ அவற்றிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியின் அளவு தொடர்பாக கண்டறியப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே நேற்றைய தினம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயம் அப்பகுதி மக்களால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. இன்று புத்தாண்டு தினத்தில் அங்கு பொங்கல் செய்து வழிபட்டுமிருந்தனர்.


ஆலயத்தின் முன்பக கூரைகள் சேதமடைந்த நிலையில் மூலஸ்தான சுவர்களில் ஆல மரம் வளர்ந்து சுவர்கள் உடைந்த நிலையில் உள்ளது. அம்மன் சிலை அப்படியே உள்ளது. இவ்வலயம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போதும் அங்கிருந்த இராணுவத்தினர் அம்மனை வழிபட்டதாகவும். அனுமதி பெற்று முன்னர் தாம் வந்து பொங்கியதாகவும் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவர் தெரிவித்தார். ஆலயத்தின் கேணியும் பற்றைகள் சூழ்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.

இப்பிரதேசமக்கள் மட்டுமல்லாது மீன்படி தொழில் செய்பவர்கள் கூட வந்து இந்த அம்மனை வழிபட்டு ஆலமர இலையினை பூசையில் வைத்து கொண்டு செல்வர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.இவ்வாலயம் அடுத்தகட்டமாக எதிர்வரும்; சித்திரை மாதம் 9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 3.30 மணி தொடககம் 4.30 மணிவரையுள்ள சுபதினத்தில் விநாயகப்பெருமான், வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெறவுள்ளதாக மயிலிட்டி அருள்மிகு மயிலிட்டி முனையன் வளவு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை ?  வாக்குகளை பிரிக்கும் தேவகவுடா கட்சி

கர்நாடகாவில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை ? வாக்குகளை பிரிக்கும் தேவகவுடா கட்சி


polimernews : கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே-கார்வி கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 101 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 78 முதல் 96 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

இதன்படி பார்த்தால், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலமான 112 இடங்களை எந்தக் கட்சியாலும் அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும் 34 முதல் 43 இடங்கள் வரை வெற்றிவாய்ப்பை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil News
தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழு...  கிளர்ச்சிகள் தொடரும் ,, கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழு... கிளர்ச்சிகள் தொடரும் ,, கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்
மின்னம்பலம்: தென்
மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிரான
கிளர்ச்சிகள் தொடரும் என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
மத்திய
நிதித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில்
தென் மாநிலங்களுக்கான வரி வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
15ஆவது நிதிக்குழு தென் மாநிலங்களை வஞ்சிப்பதாகவும் தென் மாநிலங்கள் ஒன்றிய
அரசுக்கு
சரியாக நடத்தப்பட்ட தாக்குதல்! நோக்கம் நிறைவேறியது! டிரம்ப்

சரியாக நடத்தப்பட்ட தாக்குதல்! நோக்கம் நிறைவேறியது! டிரம்ப்

சிரியாவில் திட்டமிட்டபடி துல்லியமாகவும் கச்சிதமாகவும் ஏவுகணை தாக்குதல் நடத்த துணைபுரிந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி டாலர்களால் அதிநவீனப்படுத்தவுள்ள அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த ராணுவத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். (ராணுவ பலத்தில்) நமக்கு இணையாகவும், நெருக்கமாகவும் வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி


தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருக்கோவிலை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகே இருந்த தூண் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுதிருக்கோவிலை சேர்ந்த அருள் எனும் இளைஞரே மேற்படி விபத்தில் பலியாகியுள்ளார்.

காயமடைந்தவர்
பிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய பாஜகவினர்!

பிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய பாஜகவினர்!
மின்னம்பலம் :பெங்களூரு
குல்பர்கா நகரில் நேற்றிரவு நடிகர் பிரகாஷ்ராஜின் காரை வழிமறித்து
பாஜகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய
பாஜக அரசு கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு
வருகிறார். கர்நாடகத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக
கர்நாடகத்தில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு
சந்திரபாபு நாயுடு : பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக...

சந்திரபாபு நாயுடு : பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக...


மின்னம்பலம்: தெலுங்கு
தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு
சிங்கப்பூரில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பாஜகவையும் அதிமுகவையும்
ஒருசேரத் தாக்கியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணம்
மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு நேற்று (ஏப்ரல் 13) வெளிநாடு வாழ் இந்தியர்கள்
பங்குபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் நிகழ்ச்சியில் பேசினார். அவர்
பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியையும்
ஆப்பு மேல் ஆப்பு ஆர்யாவுக்கு! அடுத்த ஷாக் கொடுத்த சேனல்

ஆப்பு மேல் ஆப்பு ஆர்யாவுக்கு! அடுத்த ஷாக் கொடுத்த சேனல்

Aarya Maary girl Enga veedu mappilai Two Years Agreement Thina Seithi News ஆர்யாவின் நிகழ்ச்சி விறுவிறுப்பைத் தாண்டி யாரை ஆர்யா கரம் பிடிக்க போறார் என்ற ஆர்வம் தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் அன்றி உலக தமிழர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஆர்யாவின் நிகழ்ச்சி விறுவிறுப்பைத் தாண்டி யாரை ஆர்யா கரம் பிடிக்க போறார் என்ற ஆர்வம் தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் அன்றி உலக தமிழர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

16 பெண்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி தற்போது மூன்று பெண்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த வாரமளவில் தெரிந்து விடும் யார் அந்த அதிஷ்டசாலி என்று. நிகழ்ச்சியில் இரண்டு கேரளப் பெண்களுடன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணும் போட்டியில் உள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை தொடங்கும் போதே ஒரு நிபந்தனையின் கீழ் தான் ஆர்யா நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை கண்டிப்பாக ஆர்யா திருமணம் செய்ய வேண்டும் என்பதாகும். இது கூடப் பரவாயில்லை. இன்னொரு கண்டிப்பான நிபந்தையும் உள்ளது.

அது என்னவென்றால், ஆர்யா மனம் முடிக்கும் பெண்ணுடன் திருமணமான நாளில் இருந்து இரு வருடங்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் விவாகாரத்தோ, பிரிந்து இருப்பதோ முடியாது. அந்த இரண்டு வருடங்களுக்கு இரண்டு இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியே ஆக வேண்டும் என்பதாகும்.

இதை அறிந்த நெட்டிசன்கள் ஆர்யாவையும் அந்த நிகழ்ச்சியையும் கலாய்த்து வருகின்றனர்.
சம்பந்தன் விருந்தில்:மக்களோ வீதியில்…?

சம்பந்தன் விருந்தில்:மக்களோ வீதியில்…?


ஒருபுறம் உள்ளுராட்சி சபைகளிற்கான குத்துக்கரணங்களுடன் ஆட்சிக்கதிரையேறிய கூட்டமைப்பும் அதன் எடுபிடிகளும் அடுத்து கட்ட வருமான தொழிலை பார்க்க புறப்பட்டுவிட சாதாரண மக்களது வாழ்வோ வீதிகளிலும் அவலங்களிலும் தமிழ் புத்தாண்டு தினமான இன்றும் கடந்து போயுள்ளது.


தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி பாற்சோறு உண்டு மகிழ்ந்துள்ளார்.
இன்னொரு புறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று புத்தாண்டு தினமான இன்று 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல முல்லைதீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டமோ 436 நாட்களைத் தாண்டி வீதிகளில் தொடர்கின்றது.


அதேபோன்று கிளிநொச்சியில் ,வவுனியாவில்,மருதங்கேணியில் மற்றும் திருமலையென காணாமல் போனோரது போராட்டங்கள் தொடர்கின்றன.


அரசியல் கைதிகளது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர,மறுபுறம் தமது தந்தை புத்தாண்டிற்கு வருகை தருவாரென ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளோ மைத்திரியின் உறுதி மொழியினை நம்பி வீதியை பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாது கதிரையினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் தொடர்ந்தும் தெற்கில் நல்லெண்ணத்தினையே வரவழைத்துக்கொண்டிருக்கிறார். 


அவர்கள் இன்று சித்திரைப் புத்தாண்டை தெருக்களில் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்குபற்றியுள்ளார்.


இதன்போது பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி , கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார். சுபநேரத்தில் அங்கு விருந்துபசாரமும் நடைபெற்றது.

வழமைபோலவே இவ்வாறான விடயங்கள் பேசுபொருளாகின்ற போது பம்மிக்கொள்கின்ற கூட்டமைப்பின் அடிப்பொடிகள் இப்போதும் பம்மிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக கேரளாவில் ....

பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக கேரளாவில் ....வெப்துனியா: காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாஜகவிற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி
ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை
சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த
நிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு?

நிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு?
வெப்துனியா: தமிழ்நாட்டில் தற்போது தனக்கு
சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால்,
அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த்
தள்ளிப் போட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த
ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட
மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும்
கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு
BBC :காமன்வெல்த்: 10வது நாளில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்தியா... ஒரே நாளில் 7 தங்கங்கள் ..

BBC :காமன்வெல்த்: 10வது நாளில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்தியா... ஒரே நாளில் 7 தங்கங்கள் ..


ஆஸ்திரேலியாவில்
நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில்,
10ஆவது நாளான இன்று இந்தியர்கள்
பல பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 7 தங்கங்களை
இந்தியா வென்றுள்ளது.
பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மனிகா பத்ரா, சிங்கப்பூரை சேர்ந்த மென்க்யூவை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக,
பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கனடாவை சேர்ந்த
ஜெஸ்ஸிக்காவை
தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணா சுரேஷ் உயிரழப்பு

தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணா சுரேஷ் உயிரழப்பு


மாலைமலர் :காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க
வலியுறுத்தி விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ்
சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.


மதுரை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோவின் மைத்துனர் மகன் விருதுநகரில் நேற்று காலை தீக்குளித்தார்
இதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரவண
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

மாலைமலர் :அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு
அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை:
அம்பேத்கரின்
பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில்
உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை

(சிவகுமார் )

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன .

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்று சனிக்கிழமை முதல் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன


சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்! வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு!

சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்! வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு!

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக மேற்கு நாடுகளின் கூட்டுப்படைகள் அறிவித்திருந்தன.

குறிப்பாக தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், சிரியா மீது இன்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம்.

அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது இன்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டனவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் மக்கள் மிக அவதானம்

பண்டிகைக் காலத்தில் மக்கள் மிக அவதானம்
தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதன் பொருட்டு பட்டாசு வெடிப்பொருட்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.
வெடிப்பொருட்கள் கையாளும் போது பல விடையங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மருத்துவமனையில் திடீர் அனர்த்த பிரிவு பயிற்சியாளர் புஸ்பா ரம்யானி சொய்சா கோரியுள்ளார்.வெடிப்பொருட்களை சற்று தூரத்தில் வைத்து பற்றவைக்க வேண்டும் எனவும், எப்போதும் பாதுகாப்பு
சித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

சித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்னால் கடந்த 415 நாள்களாக போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
”புதுவருட தினத்தில் எமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு வாழும் துன்பியல் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை . தமிழ் அரசியல் தலைமைகளும் எமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.


சித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்? ஞா. ரேணுகாசன்

சித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்? ஞா. ரேணுகாசன்

மார்கழி இருள் நீங்கி, தைமாத குளிர்ந்த காற்றில் உள்ள சுகம் எங்குமுண்டோ! ஐப்பசில போட்ட விதை காயாகி, கதிராகி புது நெல் வீடு முழுவதும் நிறையும் செல்வம் கொழிக்கும் மாதமல்லோ தமிழர் புத்தாண்டு மாதம். அது தைமாதம் எனும் குளிர்ந்த மனதிற்கு இதமான மாதமல்லோ! அதுதானே தமிழரின் புனித புத்தாண்டு, புதுமையான பல அற்புதங்கள் பிறந்திடும் ஆண்டு.

“ தை பிறந்தால் வழி பிறக்கும்” இது நம் முன்னோர் வாக்கு. சித்திரை பிறந்தால் எல்லாம் சிறக்குமென யாருமே கூறவில்லையே! எந்த சங்க இலக்கியங்களும் சரி எமக்கு முன்பிருந்த புலவர்கள் பகுத்தறிவாளர்களும் சித்திரை தமிழர் புத்தாண்டு எனக் கூறுவதாக வரலாறுகள் இல்லை.

மார்கழி மாத வறுமை, பட்டிணியை போக்கி வயிறாற உணவு உண்டு களிக்கும் மாதம் தைமாதம் ஆகும். இம்மாத்த்திலேயே , தானியங்களும், கிழங்கும் அறுவடையாகி புதுமை பல படைக்க, தாவரங்கள் பச்சையாடை உடுத்து, பூக்கள் மகரந்த அம்பை வீசி தேனீக்களை ஈர்த்து காதல் பாசை பேசும் மாதம், ஆநிரைகளும் பால்சுரக்கும், காளைகளும் தினவெடுத்து ஏறுதழுவுதலுக்கு தயாராகும். இச்சிறப்பு சித்திரையில் உண்டோ?

எத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட மாதமல்லோ! தைதிருநாள், இந்த மாதத்தின் பிறப்பே தமிழரின் வருடப்பிறப்பு, இதை மறந்து பயணித்தல் தமிழரின் இருப்புக்கோ இறப்பு.

சங்ககால இலக்கியங்கள் தான் தமிழரின் வீரம், காதல் மற்றும் தமிழர் பண்பாட்டை தெளிவாக கூறுகின்றவை. இவற்றை ஆதாரமாக எடுத்து பார்த்து தெளிவுபெறுவதே சாலச்சிறந்தது.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை என
தைநீராடல் என சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதும், பொங்கலிடல், ஏறுதழுவுதல், ஆதவனுக்கு நன்றி செலுத்தல், பெரியோரை கனம் பண்ணுதல் மற்றும் உழவரின் மேன்மை போற்றல் இதை விட சிறப்பு “ புதிர் எடுத்தல்” மற்றும் தமிழ்கடவுளின் தைப்பூச நன்னாள் என எத்தகைய சிறப்பு கொண்ட தைமாதம் இதை விட வரட்சியின் அடிப்படையிலான சித்திரையை ஏன் நாம் புதுவருடமாக கொண்டாட வேண்டும். கொஞ்சம் சிந்திப்போம்.

இன்னும் சிறப்பாக உலகத்தோர் எல்லோரும் போற்றும் முப்பாலை கொண்ட திருக்குறளை அருளிய ஐயன் திருவள்ளுவர் பிறந்த மாதம் இது இதை விட சிறப்புக்கள் எம்மாதமதில் உண்டு, சித்திப்பீர்களா? தமிழன்பர்களே!

சித்திரையில் தானே தமிழர் புத்தாண்டு பிறக்கின்றது. அப்போது தானே புதிய பஞ்சாங்கங்கள் எழுதப்படுகின்றன. என நீங்கள் நினைப்பது என் மனநிலையில் பல வினாக்களை எழுப்புகின்றன.

சித்திரை வருடப்பிறப்பை எவ்வாறு அழைக்கின்றோம். “ தமிழ் சிங்கள புத்தாண்டு” என்று, தமிழரும் சிங்களவரும் பேசுமொழி, கலாச்சாரம் இன்னும் பல விடயங்களில் வேறுபட்டவர்கள் அப்படி இருக்க எங்ஙனம் இரு இனத்தவருக்கு பொதுவான வருடப்பிறப்பு உருவாகும்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் இத்தகைய ஒற்றுமையை வகுத்து தந்தவர்கள் யார்? சிங்களவர்கள் ஆரிய வம்சாவழியினர் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டால், இதில் மறைக்கப்பட்ட தமிழரின் புனித நாளை கண்டு கொண்டாடலாம்.

சித்திரை மாதமதில் என்ன விசேடம் உள்ளது, தமிழர் அந்த மாதத்தில் புதுவருடம் கொண்டாட, வெயில் சுட்டெரிக்கும் மாதம், குளிர்ச்சியற்ற வரண்ட மாதம் இதை கொண்டாட என்ன காரண காரியம் சொல்கிறார்கள். பிராமணர்கள் கூறுவது மேச ராசி இம்மாதத்தில் எழுச்சிபெறுதாக ஒரு பித்தலாட்டம் ஒன்றே தவிர வேறு எதுவுமில்லை .

சித்திரையில் கத்தரி வெயிலில் குழந்தை பிறப்பதே மிகவும் கொடுமை என்கின்றனர். இன்னும் நமது முன்னோர் சித்திரையில் புத்திரன் பிறந்தால்... ஏதோ கெட்ட காலமென காலம் காலமாக நம்பி வாழ்கின்றனர். அப்படி கெட்ட காலத்தை எம் தமிழினம் கொண்டாட ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் எமக்கான பண்பாடு, ஒழுக்கம் இன்னும் பல அரிய செயல்களை தந்தவர்கள் எம் முன்னோர்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறான செயலை செய்ய வாய்ப்பில்லை. இது ஒரு இடைச் செருகல்.

புரட்சி பாவலர் ஐயா பாரதி தாசன் அவர்களின் கவிதையில் தமிழர் புத்தாண்டு எது என்பதை விளக்குகிறார்.

“ தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவோம். சிந்தித்து செயலாற்றுவோம்.

சித்திரையில் தமிழர் புத்தாண்டை கொண்டாடுங்கள், ஆனால் அதை எமக்குள் திணித்து எம்மை அதன்பால் அதித நம்பிக்கையை ஏற்படுத்திய ஆரிய பிராமண வர்க்கத்தின் புத்திக்கூர்மையும் சேர்த்தே கொண்டாடுங்கள்.

இராமாயணத்தில் எமது தமிழ் அரசன் இராவணன் எமக்கு அரக்கனாக பாடம் புகட்டவில்லையா? இராமனை நாம் கடவுளாக ஏற்கவில்லையா? தமிழினத்தை கேலி செய்த தமிழால் உயர்ந்த பிராமண கம்பருக்கு நாம் தமிழ்க்கழகங்கள் அமைத்து தமிழை வழக்கவில்லையா? தமிழை உலகறிய செய்த ஐயன் திருவள்ளுவருக்கு எங்காவது கழகம் அமைத்து விழா எடுத்தோமா?  இவை போலவே இந்த சித்திரை புத்தாண்டு எனும் மாயவலை இன்னும் விலகாமல் தமிழரை அப்படியே பீடித்துள்ளது. இந்த அடிமை நிலை உடையும் தமிழால் புரட்சி செய்வோம்.

சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்!

சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்!

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என அமெரிக்க டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளாகியுள்ளன.

நேற்று (13) வெள்ளிக்கிழமை இரவும், இன்று (14) அதிகாலையிலும் மேற்கொண்ட ஏவுகணை மழையாகப் பொழிந்தன.

அமொிக்கா தலைமையிலான மேற்ற கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு ஈரான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் விரட்டப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!! முல்லைத்தீவில் சம்பவம்!

காவல்துறையினர் விரட்டப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!! முல்லைத்தீவில் சம்பவம்!

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடைக்கட்டு குளத்தில் காவல்துறையினரால் துரத்திச்சென்றபோது குடும்பத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 2 மணியளவில் இடைக்கட்டு குளத்தின் அலைகரை பக்கம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் முகமாக சுற்று நடவடிக்கையை மேற்கொண்ட சந்தர்பத்தில் குளத்து அலைகரையில் நின்ற 3 நபர்களை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்றபோது மூவரும் குளத்து நீரினுள் குதித்துள்ளனர்.

இந்நிலையில் நீரினுள் குதித்த மூவரில் ஒருவர் நீந்தி செல்லும் போது நீரில் மூழ்கியுள்ளார். மற்றுமொருவர் நீந்தமுடியாத நிலையில் காவல்துறையினரால் மீண்டும் வந்து சரணடைந்துள்ளார்.

இரண்டு மணிக்கு நீரில் மூழ்கியவரை மாலை 6 மணியளவில் அயலவர்கள் தேடி சடவமாக மீட்டபோதும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகைதராததால் அங்கு குழப்பநிலை தோன்றியது. இதன்போது அங்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இரவு 8 மணியளவில் குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வருகைதந்து சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் குரவில், உடையார்கட்டு தெற்கு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மகேஸ்வரன் ராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மானிப்பாய் மருதடியானின் தேர்த் திருவிழா!

மானிப்பாய் மருதடியானின் தேர்த் திருவிழா!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ தேர் இழுக்கப்பட்டது.

விஜய் படத்தில் வரலட்சுமியின் ஆச்சரியமான கேரக்டர்

விஜய் படத்தில் வரலட்சுமியின் ஆச்சரியமான கேரக்டர்

Thina Seithi Tamil news விஜய் படத்தில் வரலட்சுமியின் ஆச்சரியமான கேரக்டர் Varalaxmi Sarathkumar lands role in Vijay’s ‘Thalapathy 62’

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% நெருங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டாலும், படக்குழுவினர் இந்த தகவலை உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது. வரலட்சுமி இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாகவும், அவருடைய கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டர்தான் என்றும் தெரியவந்துள்ளது. தன்னுடைய கேரக்டர் ஆடியன்ஸ்களுக்கு ஒரு சர்ப்பரைஸாக இருக்கும் என்று ஏற்கனவே வரலட்சுமி கூறிய நிலையில் இந்த தகவல் உண்மையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலாகத்தான் உள்ளது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை:வவுனியாவில் சத்தியலிங்கத்தின் போலிகள்!

எச்சரிக்கை:வவுனியாவில் சத்தியலிங்கத்தின் போலிகள்!

முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக சேறுபூசலில் ஈடுபட்ட நபரொருவரினை வவுனியா வர்த்தக சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் முன்னால் தலைவர் என தன்னை குறிப்பிட்டுள்ள குறித்த நபர் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் இரண்டாவது தடவையாக முதல்வராவது வவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு விருப்பமில்லை என இரசரத்தினம் கிரிதரன் என்பவர்  ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


இதனால் சர்சைக்குள்ளான வவுனியா வர்த்தக சங்கம் உடனடியாக கூடி மறுப்பறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. 

குறித்த மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது இராசத்தினம் கிரிதரன் என்பவர் தவறான பதவிநிலையை குறிப்பிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்து ஊடகங்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். எனவே இந்த தகவலுக்கும் எமது வர்த்தக சங்கத்திற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லையென்பதையும் கிரிதரன் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று வவுனியா வர்த்தக சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி பதவியேற்பு

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி பதவியேற்பு
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸிஸ், தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.ஏ.அஸிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் பணியாளர் சபையின் தலைமை மற்றும் பணிப்பாளர் நாயகமாக Director General Mr. Møller மைக்கல் மொலரை சந்தித்து சான்று பத்திரத்தை
 நெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு!

நெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு!

நெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில்  குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி கூட்டு தொடர்கின்ற நிலையில் நெடுந்தீவில் ஈபிடிபி முதுகில் குத்தி கூட்டமைப்பு கதிரையேறியிருந்தது.இது டக்ளஸிற்கு கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இதனால் ஏனைய உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது பற்றி பரிசீலிக்கவுள்ளதாக கட்சியினுள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசசபை கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரட்ணமே காரணமெனவும் தமிழரசுக்கட்சியினை பொறுத்த வரையில் நெடுந்தீவை ஈபிடிபிக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருந்ததாகவும் புதிய விளக்கமளித்துள்ளனர். 

வவுனியா நகரசபையினை கைப்பற்ற ஈபிடிபி ஆதரவு சத்தியலிங்கம் தரப்பிற்கு தேவைப்படுவதால் டெலோ வசமுள்ள நெடுந்தீவு பிரதேசசபையினை தாரை வார்க்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க யாழ் மாவட்டத்தில் பல சபைகளை ஆட்சியமைக்க நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவை வெளியிலிருந்து வழங்கியிருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாம் ஆதரவு வழங்கியுள்ளதானது மக்கள் நலன்சார்ந்த விடயத்தை முன்னிறுத்தியதாகும்.

யாழ்மாவட்டத்தின் பல சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் மக்களுக்கு சேவையாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம் என்றதன் அடிப்படையில் ஆட்சியமைப்பவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைப்பதற்காகவே நாம் வெளியிலிருந்து ஆதரவை வழங்கியிருக்கின்றோம்.

ஆனாலும் குறித்த சபைகளை நாமும் மக்களும் எதிர்பார்த்தது போல ஆட்சி செய்பவர்கள் செயற்படுத்தாது போனால் அதனை எதிர்த்து போராடவும் நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனைப்பந்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற புதுவருட சிறப்புப் பூஜை

ஆனைப்பந்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற புதுவருட சிறப்புப் பூஜை


(வேணுகா )
2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை மட்டு ஆனைப்பந்தி விநாயகர் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவ சிரி சுந்தரலிங்க குருக்கள் தலைமையில் புதுவருட சிறப்புப் பூஜை இன்று காலை இடம்பெற்றது.இதில் பெரும்பாலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்
துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு தங்கம்

துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு தங்கம்

தின செய்தி India-got-3-gold-medals-today Tamil News India News

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று குத்துச்சண்டை மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

45 முதல் 48 கிலோ வரையிலான எடைப் பிரிவுக்கான மகளிர் குத்துச் சண்டை இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கணை மேரி கோம், வட அயர்லாந்தைச் சேர்ந்த கிரிஸ்டினா ஓ ஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி, வட அயர்லாந்தைச் சேர்ந்த பிரண்டன் இர்வினுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 4க்கு1 என்ற கணக்கில் இர்வினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த சஞ்சீவ் ராஜ்புத் என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றார். 46 முதல் 49 கிலோ வரையிலான ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் அமித் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். 60 கிலோ எடைப் பிரிவில் மனிஷ் கவுஷிக் வெள்ளி வென்றார். இன்று இந்தியாவுக்கு கிடைத்த மூன்று தங்கப் பதக்கத்தையும் சேர்த்து மொத்தம் 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கையில் பயணிகளுக்கு அறிமுகமாகும் இலத்திரனியல் அட்டை

இலங்கையில் பயணிகளுக்கு அறிமுகமாகும் இலத்திரனியல் அட்டை
இலங்கை போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் ரயிம் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த டச் கார்ட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும் : ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும் : ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஈரான் கண்டனம்

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஈரான் கண்டனம்

தின செய்தி thina seithi -Donald Trump Announces Air Strikes On Syria, Calls Out Russia & Iran – Watch The Speech

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடாத்துமாறு விடுத்துள்ள உத்தரவுக்கு ஈரான் அரசாங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னெடுக்கும் இந்த தீர்மானம் வெளிப்படையாகவே சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என ஈரான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இது சிரியாவின் இறையான்மையைப் புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கை எனவும் ஈரான் கண்டித்துள்ளது.

“A short time ago, I ordered the United States Armed Forces to launch precision strikes on targets associated with the chemical weapons capabilities of Syrian dictator Bashar al-Assad,” the president said in a nearly 8-minute address. Watch it above; the transcript is below.
Rex/Shutterstock

Trump did not offer many details of the strikes but said they would continue until the chemical attacks cease. But that statement was refuted less than an hour later during a Pentagon press briefing by Defense Secretary Gen. James Mattis and Joseph Dunford, Chairman of the Joint Chiefs of Staff. Mattis stressed that tonight’s action was a one-time shot purely on chemical weapons facilities. You can watch that news conference
பிரியா வாரியரை படுத்தி எடுத்த பிரபல தொலைக்காட்சி

பிரியா வாரியரை படுத்தி எடுத்த பிரபல தொலைக்காட்சி

பிரியா வாரியரை படுத்தி எடுத்த பிரபல தொலைக்காட்சி தின செய்தி thina seithi

ஒரே பாட்டில் சின்ன ரியாக்ஷனை காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்தவர் பிரியா வாரியர்.

இவர் எங்கு சென்றாலும் கண்ணால் துப்பாக்கி போன்று சுடும் ரியாக்ஷனை செய்ய சொல்வார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த காமெடி விருது விழாவிற்கு சென்றார்.

அங்கு பிரியாவை மேடைக்கு அழைத்ததும் கலக்கப்போவது யாரு தீனா, டேனி, யோகிபாபு என பலரிடமும் அந்த ரியாக்ஷனை செய்யச்சொல்லி படுத்தி எடுத்து விட்டார்கள்.

அதில் யோகி பாபுவின் ரியாக்ஷன் ஹைலைட்டாக அமைந்தது.
செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது - ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி

செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது - ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி

tollywood-set-sexual-harassment-committee-why-sri-reddys-victory-significant

தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை நாளுக்கு நாள் தெலுங்கு சினிமா பிரபலங்கள் குறித்து பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

அண்மையில் தன்னிடம் ராணா தம்பி அபிராம் தவறாக நடந்து கொண்டதாகவும் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இதற்கு நடுவில் ஸ்ரீரெட்டி ஒரு பேட்டியில், அபிராமால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது, எந்த அளவிற்கு செக்ஸ் அடிமை என்றால் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதையெல்லாம் கேட்ட மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அபிராம் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிடப்பில் போடப்பட்டதா நெல்சிப் ஊழல் அறிக்கை?

கிடப்பில் போடப்பட்டதா நெல்சிப் ஊழல் அறிக்கை?

சர்சைகளை தோற்றுவித்துள்ளதும் வடக்கில் இடம்பெற்ற பாரிய மோசடியென வர்ணிக்கப்பட்டதுமான நெல்சிப் விசாரணை அறிக்கை அரைகுறையில் தொடர்நடவடிக்கை ஏதுமின்றி கைவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடமாகாணசபை தீர்மானப்பிரகாரம் நியிமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகிhரிகளைக்கொண்ட குழுவொன்று ஆரம்ப நிதி விசாரணைகளை மேற்கொண்டு மோசடி நடந்ததை உறுதிப்படுத்தியிருந்தது.அதன் அறிக்கை கடந்த ஆண்டின் ஜீன் மாதம் கையளிக்கப்பட்டிருந்த போதும் ஓராண்டு கடந்தும் தொடர்நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே விசாரணை மேற்கொண்ட குழுவிற்கு மில்லியன்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் இது வரை அக்குழு எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.குழுவின் விசாரணை அதிகாரிகள் எவரையும் குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரங்களை சமர்ப்பிக்கவில்லையென தெரியவருகின்றது.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்னிறுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் பதவியினை துறக்கவேண்டியுமேற்பட்டிருந்தது.தற்போதும் அது தொடர்வதுடன் தற்போதுள்ள அமைச்சர்கள் மீதும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுக்களிi முன்வைத்து பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் வடமாகாணசபையின் மூத்த அதிகாரிகள் பலரும் சிக்குண்டுள்ள நெல்சிப் ஊழலை ஊத்தி மூடிவிட ஒருபுறம் அதிகார மட்டம் பாடுபட்டுவருகின்றது.மறுபுறம் இவர்களை பாதுகாப்பதில் அவை தலைவர் உள்ளிட்ட தமிழரசின் சிலர் பாடுபட்டும் வருகின்றனர்.

மறுபுறம் நெல்சிப் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில் வடமாகாணசபையில் வினைத்திறனற்ற முதலமைச்சர் எனும் பிரச்சாரத்தையும் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்கின்றதென்ற பிரச்சாரத்தையும் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் தரப்புக்களே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்!

23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்!


எதிர்வரும் 23 ஆம் திகதி அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படுடும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : ராகுல் ஆவேசம்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : ராகுல் ஆவேசம்

தினசெய்தி india noprotection girl violence modi acting rahul gandhi angry speech

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என ராகுல் கூறினார்.

காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமியை காம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உ.பி.யில் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ.க, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன. இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து காங்.தலைவர் ராகுல் நேற்று நளளிரவு டில்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்.மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் பேசிய ராகுல் காந்தி: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.
ஐதேக தனித்து ஆட்சியமைக்க விடமாட்டோம்! - வாசுதேவ சூளுரை

ஐதேக தனித்து ஆட்சியமைக்க விடமாட்டோம்! - வாசுதேவ சூளுரை


ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். “தலைமத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஐக்கிய தேசியக் கட்சி சிக்கியுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது நகைப்பிற்குரியது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிறுகட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு 102 ஆசனங்களே உண்டு.சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். எனவே, சுதந்திரக் கட்சியின் ஆதரவு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 நாடாளுமன்றம் கலைக்கப்படாது!

நாடாளுமன்றம் கலைக்கப்படாது!


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.“ 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு, பாராளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. எனினும், அவ்வாறான நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது. இதற்கு முன்னரும் பதவியில் இருந்த ஜனாதிபதிகளும் கூட பலமுறை பாராளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.அரசியலமைப்பின் 70 (1) பிரிவின் கீழ் பாராளுமன்றத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, பாராளுமன்றக் கூட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நாளையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்

வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்


எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனைத்து கட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பெப்ரல் அமைப்பினால் குறித்த மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராட்சி இதனை தெரிவித்துள்ளார்.
 
இந்த மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
பரபரப்புக்கு நடுவே பிக்பாஸ் 2! உறுதியான தகவல்

பரபரப்புக்கு நடுவே பிக்பாஸ் 2! உறுதியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே வித்தியாசமான பார்வை அதன் மீது திரும்ப வைத்தது. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே வித்தியாசமான பார்வை அதன் மீது திரும்ப வைத்தது. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும்.

ஒருவேளை நாம் கலந்துகொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற எண்ணம் பிரபலங்களுக்கும் இருக்கிறது. தமிழில் தொடங்கிய பின் தெலுங்கில் 70 நாட்களை கொண்டு நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்த சீசனை படத்தின் கால்ஷீட் காரணமாக அவர் தொகுத்து வழங்கவில்லை.

நடிகர் நானியின் பேர் அடிபட்டுவந்தது. தற்போது நிகழ்ச்சி குழுவே இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் ஹைதராபாத் லோனாவாலா பகுதியில் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்.

மேலும் தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
நிம்மதி இல்லாமல் அலையப்போகும் தனுசு ராசி அன்பர்களே! தமிழ் விளம்பி வருட ராசிப்பலன்!

நிம்மதி இல்லாமல் அலையப்போகும் தனுசு ராசி அன்பர்களே! தமிழ் விளம்பி வருட ராசிப்பலன்!

2018 Dhanusu Rasipalan – Sagittarius Horoscope - 2018 Free tamil

நல்லதோ அல்லதோ முடிவெடுத்துவிட்டால் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

எங்கே சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை நிலவும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது.

13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் சில நேரத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும்

வருடப் பிறப்பு முதல் 12.02.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவரும் நிதானித்துப் போவது நல்லது. 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது ராசிக்குள் நுழைவதால் முன்கோபம் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலர் கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகத் தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

21.04.2018 முதல் 14.05.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கடன் பிரச்சினை தலைதூக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். படிப்பின் பொருட்டு அவர்களைக் கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்விகச் சொத்துப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும் மனக்கசப்பும் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்குக் கணிசமாக ஆதாயம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உடன் பணிபுரிபவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சின்னச் சின்ன இடர்பாடுகள் தந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு பிற்பகுதியில் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், திருநகர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரசித்தி விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
நாடாளுமன்ற முடக்கத்தினால் பாதகமான தாக்கம் இருக்காது – சிறிலங்கா அரசு

நாடாளுமன்ற முடக்கத்தினால் பாதகமான தாக்கம் இருக்காது – சிறிலங்கா அரசு


நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே 8ஆம் நாள் ஆரம்பமாகிறது. அரசியலமைப்பின் 70(4) ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்ட அனைத்து விடயங்களும், நாடாளுமன்ற முடக்கத்தின் கீழ் நீக்கப்படவில்லை. இதனால் அடுத்த அமர்வில் அவை தொடரக் கூடும். எனவே, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இந்த முடக்கத்தினால் பாதகமான தாக்கங்கள் ஏற்படாது” என்று கூறியுள்ளார்.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்


ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே, ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை வழங்கினார்.26 ஆண்டுகள் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏ.எல்.ஏ.அசீஸ், இதற்கு முன்னர், வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சாலை விபத்தில் மரணம் (கொலை?)

குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சாலை விபத்தில் மரணம் (கொலை?)
Gopinath Pillai, the father of Pranesh Kumar alias Javed Sheikh who was killed along with Ishrat Jahan in an alleged encounter with Gujarat police in 2004, died on Friday after sustaining injuries in a road accident in Kerala’s Alappuzha district, police said
தினமலர் :ஆழப்புலா: குஜராத் ஆமதாபாத் அருகே, 2004ம்
ஆண்டு, மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம்
இளைஞர்கள், '
உலக வாழ் அனைத்து தமிழ் சிங்கள மக்களுக்கும் Battinews இன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலக வாழ் அனைத்து தமிழ் சிங்கள மக்களுக்கும் Battinews இன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும்.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரையின் முதல் நாளையே புத்தாண்டாகக்
கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா

கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா


1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது. கடலுக்குள் சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வீதி வலையமைப்பு திட்டத்தில் 800 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த திட்டத்துக்கான உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பான சட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 269 ஏக்கர் பரப்பளவில் துறைமுக நகருக்காக கடலுக்குள் நிலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 வீதத்துக்கும் அதிகமானளவு நிலப்பகுதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டுக்குள் நிலத்தை மீட்கும் பணிகள் முடிந்து விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சசி தரூர் சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் சிக்குகிறார்

காங்கிரஸ் சசி தரூர் சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் சிக்குகிறார்
தினமலர் :புதுடில்லி; சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது
கணவரும், காங். எம்.பி.யுமான சசிதரூருக்கு எதிராக டில்லி போலீசார்
குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர்.2014-ம ஆண்டு டில்லி சொகுசு ஒட்டலில்
தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..
சசிதரூருக்கு பாக். பெண் நிருபருடன் ஏற்பட்ட தொடர்பு அம்பலமானதில் ஏற்பட்ட
தகராறு காரணம் என கூறப்பட்டது.
டில்லி போலீசார் வழக்குப்பதிவு
காவிரி பிரச்னை தீர புது யோசனை... கேட்கத்தான் ஆளில்லை!" புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

காவிரி பிரச்னை தீர புது யோசனை... கேட்கத்தான் ஆளில்லை!" புலம்பும் விவசாய பிரதிநிதிகள்


காளிநதி, சாராவதி, சக்ராநதி, நேத்ராவதி, வாராஹி, மகாதாயி உள்ளிட்ட ஆறுகள் மூலம் சுமார் 2,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதில்,900 டி.எம்.சி-க்கு மேல் மிக எளிதாக தமிழகத்துக்குத் திருப்பிவிட முடியும்.
துரை.வேம்பையன்-

RAJAMURUGAN -
வீ.சிவக்குமார்- விகடன் :
காவிரியில் நம் 'நீர் உரிமை'யை
நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும்
தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi.. .... சவுக்கு

தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi.. .... சவுக்கு
savukkuonline.com:
தமிழன் என்றோர் இணமுன்டு,
தனியே அவற்கொரு குணமுண்டு
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்
என்றார் நாமக்கல் கவிஞர்.
அந்த கவிஞரின் வாக்குகள் பொய்யில்லை என்பதை 12 ஏப்ரல் 2018, இந்தியாவுக்கு அல்ல. உலகுக்கே நிரூபித்துள்ளது.
ஒருவன் அரசியல்வாதியாவதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நாசிஸ்சிஸ்ஸம் எனப்படும் சுயமோகம்
தி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது


தினத்தந்தி : சென்னை,
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாழ்த்தப்பட்டோர்,
மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும்
நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான
ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான
வகையில் அமைந்துள்ளது.
ஆண் காவலர்களை வைத்து எங்களை சோதிப்பதா?- மனவேதனையில் வலிப்பு வந்து விழுந்த பெண் உதவி இயக்குநர்

ஆண் காவலர்களை வைத்து எங்களை சோதிப்பதா?- மனவேதனையில் வலிப்பு வந்து விழுந்த பெண் உதவி இயக்குநர்


நேற்று பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட வந்த உதவி இயக்குநர்களில்
பெண் உதவி இயக்குநர்களின் உடைகளை ஆண் காவலர்களை வைத்து சோதிக்கச் சொன்னதாக
மனவேதனையில் பேட்டி அளித்த பெண் உதவி இயக்குநர் வலிப்பு வந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வலியுறுத்தியும், மோடியின் சென்னை வருகையைக் கண்டித்தும் நேற்று
தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அனைத்து அரசியல்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எவராலும் உடைக்கவே முடியாது,  ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நாம் ஒன்றித்து நிற்கின்றோம் - காரைதீவில் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எவராலும் உடைக்கவே முடியாது, ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நாம் ஒன்றித்து நிற்கின்றோம் - காரைதீவில் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உடைப்பது என்ன அசைத்து பார்ப்பதுகூட எவராலும் முடியாத காரியம் ஆகும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி
BBC: ஆசிஃபா கொலை: காஷ்மீரில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா.. காஷ்மிரி பண்டிட்டுகளால் பாலியல் ...

BBC: ஆசிஃபா கொலை: காஷ்மீரில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா.. காஷ்மிரி பண்டிட்டுகளால் பாலியல் ...எட்டு வயதுப் பெண்
குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு
கொல்லப்பட்ட விவகாரம்
தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் தங்கள்
பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ்
கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில்
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து
கொண்டிருந்தனர்.


இதற்கு
மீண்டும் லாட்டரி .. எடப்பாடி பன்னீர் அரசு கல்லா கட்ட முடிவு

மீண்டும் லாட்டரி .. எடப்பாடி பன்னீர் அரசு கல்லா கட்ட முடிவு
மின்னம்பலம்: ‘சிக்கிம்,
அஸ்ஸாம், பூடான், ராஜஸ்தான், தமிழ்நாடு!’ என ஒரு மெசேஜ்ஜைத் தட்டியது.
‘என்ன ஏதோ அந்தக் காலத்து லாட்டரி விற்பனை செய்யும் வண்டியில் கேட்ட குரல் மாதிரி இருக்கு..?’ என்று கமெண்ட் அடித்தது ஃபேஸ்புக்.
வாட்ஸ்
அப்பில் அடுத்த மெசேஜ் தடதடத்தது. “சொல்றேன். கடந்த ஒரு வாரத்துக்கு
முன்பாக துணை முதல்வரைச் சந்தித்திருக்கிறார் லாட்டரியில் ஒருகாலத்தில்
கொடிகட்டிப் பறந்த ஒரு நபர்.
மாணவனின் தொண்டையில் பிரம்பால் குத்திய ஆசிரியர் ... உயிருக்கு போராடும் .. மகராஷ்டிரா

மாணவனின் தொண்டையில் பிரம்பால் குத்திய ஆசிரியர் ... உயிருக்கு போராடும் .. மகராஷ்டிரா


tamilthehindu : maths class session in Class II, Rohan D. Janjire apparently failed to solve a problem which enraged the teacher Chandrakant Sopan Shinde.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்ட அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு
மாணவர் கணக்குப் பாடம் செய்யாத காரணத்தால் அவரின் தொண்டையில் ஆசிரியர்
பிரம்பால் குத்தியுள்ளார். இதில் மாணவரின் உணவுக்குழாய், மூச்சுக் குழாயில்
காயம் ஏற்பட்டு பேச்சிழந்து,
RSS பிரதமர்,முதல்வர்,மந்திரிகள் நிர்வாகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

RSS பிரதமர்,முதல்வர்,மந்திரிகள் நிர்வாகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.


ஆலஞ்சியார் : 8 வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விவகாரத்தை உலக அளவில் ஊதி பெரிதுபடுத்தினால் சுற்றுலா துறை மூலம் இந்தியாவிற்கு வரும் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மிகவும் வேதனைபடுகிறார். இவரைப் போன்றோர் நம்மை ஆள்கிறார்கள் என்கிற கூனிகுறுகி


வெட்கபடுகிறேன்..
இவனை அமைச்சர் என்று சொல்வதுகூட வெட்கமாக இருக்கிறது .. இவன் மகளுக்கு
 "தடை அதை உடை" என கனடாவில் தமிழர்களுக்காக ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முழங்கிய HON.Jack McLaren!

"தடை அதை உடை" என கனடாவில் தமிழர்களுக்காக ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முழங்கிய HON.Jack McLaren!

புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon . Jack McLaren Ontario பாராளுமன்றத்தில்   தனிநபர் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என ஒண்டாரியோ பாராளுமன்றில் கேள்வி நேரத்தின் போதும் கோரிக்கையை எழுப்பி, அவர் அனைத்து கட்சிகளின் ஆதரவை உரிமையோடு கோரினர்.

பெருமளவான தனது ஆதரவாளர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, கனடாவில் முதல் முதலாக ஒரு அரசியல் தலைவர் தமிழ் கனேடியர்கள் அவசியமற்ற இந்த புலிகளின் மீதான தடை மூலம் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகளையும், சவால்களையும் விளக்கமாக அனைத்து  கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காடியது அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

தமிழர் அல்லாத ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு தமிழர்களின் வரலாற்றையும்  சுதந்திர விடுலைதலைப் போராட்டத்தையும் ஆழமாக உள்வாங்கி தனது அரசியல் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர்களின் அவமானமாக பதிவு செய்யப்படட இந்த தடையை அகற்ற உழைப்பது பிரமிப்பையும் அவர் மேல் மிகுந்த அன்பையும் தமிழ் மக்கள் மனதில் இந்த நிகழ்வு உருவாக்கியது.

தனது பிரேரணையை சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிடடார்,
இலங்கையில் தமிழ் மக்கள்  1948 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அடக்குமுறையை  அனுபவித்துவருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்க ராணுவ அமைப்பாக  விடுதலைப் புலிகள் (LTTE) உருவாக்கினர். 1983 ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. புலிகள் படை ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.

2006 ல் கனேடிய அரசாங்கம் ஒரு இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு "பயங்கரவாத பட்டியலில் தமிழ் புலிகளை சேர்த்தது. இந்த விளைவு தமிழ் மக்களை இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. புலிகள் தோற்றத்திற்கு காரணம் தமிழர்கள் அல்ல அதனை இன்று வரை சர்வதேசம் சரியாக புரியவில்லை. அதற்குக் காரணம் இலங்கை அரசு என்பதை யாரும் புரியாமல் பயங்கரவாதிகள் என கூறுவது  வேதனையாக உள்ளது.

உள்நாட்டுப் போர் 2009 ல் முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுத போரை கை விட்டனர் .

புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக  அணி திரள போவதில்லை. எனவே "பயங்கரவாத பட்டியலில்" இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகளாக சித்தரிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ அல்ல. மாறாக தமிழ் மக்களின் உடன் பிறப்புக்களே அவர்கள்.ஆனால் "தமிழ் புலிகளை பயங்கரவாத பட்டியலில் கனடிய அரசு" இன்னமும் வைத்திருப்பது  கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் மேலாக தொங்கும் கருப்பு மேகம் போன்றது. அவர்களை இந்த தடை இரண்டாம் தர குடிமக்களாக அவமதிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தாயகத்தில் போரில் உயிர் ஈன்ற தங்களின் உறவினர்களையும் தியாகிகளையும்  பகிரங்கமாக துக்கம் பகிர்வதையும் மற்றும் அவர்களின் நினைவஞ்சலி சேவைகள் செய்வதையும் தடுக்கிறது.

கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் எனும் நலன் கருதி, "பயங்கரவாத பட்டியலில் இருந்து ", தமிழீழ விடுதலைப் புலிகளை, கனடா அரசு அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் இதனை தொடர்ந்து நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது , ஒண்டாரியோ குடிவரவு அமைச்சரிடம் திரு Jack McLaren அவர்கள்  விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பல கேள்விகளையும் எழுப்பினார்.

ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையை ஒட்டாவாவில் மத்திய அரசுக்கு நேரடியாக சமர்ப்பித்து இந்த தடையை நீக்க வேண்டுகோள் விடுக்க தன்னுடன் இணைந்து கனடிய பாராளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார் .

அரசியல் லாபங்களை கடந்து, அவரின் தன்னலமற்ற தமிழர் மீதான அக்கறையும், தமிழர்களின் நல்  வாழ்வுக்கான அவரின் விடா முயட்சியும் தற்போதைய கனடிய அரசியலில் தம்மை இணைத்திருக்கும் எல்லா தமிழர்களும் முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என்பதே கனடிய தமிழர்களின் வேண்டுகோளாக  இந்நிகழ்வின் நிறைவில் இருந்தது.Friday, April 13, 2018

அமெரிக்கா சிரியாவை தாக்கினால்,யுத்தம் வெடிக்கும்- ஐ.நா.வில் ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்கா சிரியாவை தாக்கினால்,யுத்தம் வெடிக்கும்- ஐ.நா.வில் ரஷ்யா எச்சரிக்கை

Russia’s UN ambassador warned of a possible war with America on Thursday as US President Donald Trump held meetings with his staff to discuss action on Syria, which he has threatened to hit with missile strikes after a suspected poison gas attack on civilians in the city of Douma.

சிரியாவின் நெருக்கடியை அடிப்படையாக வைத்து அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு தொடர்புபடுவதற்கு தான் பின்நிற்கப் போவதில்லையென ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டுக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனைக் கூறியுள்ளார்.

சிரியா அரசாங்கம் அந்நாட்டு சிவில் மக்கள் மீது விச வாயு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தி அமெரிக்க தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடாத்தினால் அதற்குப் பதில் தாக்குதல் ஒன்றினூடாக அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ரஷ்ய தூதுவர் அறிவித்துள்ளார்.
சிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு!

சிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு!


தமிழ் அரசியல் கைதியான  இராசபல்லவன் தபோரூபன் (வயது 37) அனுராதபுரம் சிறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாக நீடிக்கின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் அவரை சந்தித்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த இராசபல்லவன் தபோரூபன் (வயது 36) என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் உடல்நிலை பாதிக்கப் பட்ட காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மற் றும் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் 2013ஆம் ஆண்டு அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அன்றிலிருந்து அநுராதபுரம் சிறைச் சாலையில் தனி அறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலும் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளார். தான் தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை எனவும், தன்னை ஏனைய கைதிகளுடன் இணைத்து விடுமாறு கோரியும் குறித்த கைதி நீதிபதி, சிறைச்சாலை ஆணையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், அவர் கடந்த நான்கு நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் உள்ளிட்டோர் இன்று அனுராதபுரம் சிறை சென்று தபோரூபளை சந்தித்து உரையாடியிருந்தனர்.

மேலதிக செய்தி இணைப்பு...

அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்.

அனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (13.04.2018) பார்வையிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை அனுராதபுரம் சிறையில் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது இராசவள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.

அரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் கடந்த சில நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

தான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் குறித்த சிறைக் கூடத்துக்குள்ளேயே வாளி ஒன்றினுள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வௌியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.IPL ஐபிஎல் புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு!

IPL ஐபிஎல் புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு!Shyamsundar- Oneindia Tamil

CSK போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு

புனே: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை புனே
மைதானத்தில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக
அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர்
கிங்ஸ் ஆட வேண்டிய 14 போட்டிகளில் 2 போட்டிகளை ஆடி
அபாயவுடன் இதை செய்யலாம்: முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி

அபாயவுடன் இதை செய்யலாம்: முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி

உலக நாடுகளிலேயே அதிக கட்டுப்பாடுகளை கொண்ட நாடாக சவுதி அரேபியா விளங்குகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு உள்ளது. Thina Seithi World News Tamil

உலக நாடுகளிலேயே அதிக கட்டுப்பாடுகளை கொண்ட நாடாக சவுதி அரேபியா விளங்குகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு உள்ளது.

பெண்கள் குறிப்பிட்ட உபகரணங்களை வாங்க தனியாக வெளியே செல்லக்கூடாது, எங்கு சென்றாலும் கலாசார உடையான அபாயா எனும் உடையுடன் தான் வெளியே செல்ல வேண்டும், முகத்திரை அணிந்திருக்க வேண்டும் என ஏராளமான சட்டத்திட்டங்கள் உள்ளன.

இதனை மீறுபவர்களும் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. அதில் தலையை துண்டித்தல், கையை வெட்டுதல், சாட்டையடி, தூக்கிடுதல் போன்ற கோரமான தண்டனைகளும் உள்ளடங்கும்.

இந்நிலையில், சமீபகாலமாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சட்ட திட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் வாகனம் செலுத்தலாம் போன்ற அனுமதிகளை அரசு தளர்தியிருந்தது.

இதற்கு பல உலகநாடுகளும், உள்ளூர் அரசியல் ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெண்களுக்கான மேலும் ஒரு தடையை சவுதி அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதாவது இனி பெண்கள் அபாயாவுடன், சைக்கிளோட்டப் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சவூதி அரேபியா- ஜெய்தாவில் முதல் தடவையாக மகளிர் சைக்கிளோட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 47 பெண்கள் பங்கேற்றிருந்தனர். இதற்காக சவுதி அரசாங்கத்திற்று பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
தலைமுடி நரைச்சும் இந்த ஆசையா? பாவம் அந்த சின்ன பொண்ணு

தலைமுடி நரைச்சும் இந்த ஆசையா? பாவம் அந்த சின்ன பொண்ணு


பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகன் மிலின்ட் சோமன். இவர் மகள் வயதுள்ள அன்கிதாஎன்பவருடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளார்.

இவர்கள் அடிக்கடி ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.