Saturday, April 21, 2018

தோனி காலில் விழுந்து கும்பிட்ட சென்னை ரசிகர்

தோனி காலில் விழுந்து கும்பிட்ட சென்னை ரசிகர்


நேற்றைய போட்டியில் பாதுகாப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து சென்னை கேப்டன் தோனியின் காலில் சென்னை ரசிகர் ஒருவர் காலில் விழுந்து கும்பிட்டார்.

சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனேவில் நடந்தது. இதில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய சென்னை அணி வாட்சனின் அபார சதத்தால் 204 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 140 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டாகி 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ரஜினிகாந்த சர்ச்சையை தொடர்ந்து கமல் அதிரடி கருத்து

ரஜினிகாந்த சர்ச்சையை தொடர்ந்து கமல் அதிரடி கருத்து


சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. 

இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்காரர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றகையிட முற்பட்டனர்.

அப்போது போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவர பூமியாக மாறியது, அதன் பிறகு நடந்தது ஒரு வரலாறு. 

இதுபற்றி ரஜினிகாந்த் கூட போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று சென்னை இன்டர்நேஷனல் சென்டரில் பத்திரிகையாளரை சந்தித்தார் கமல்ஹாசன். 

அவரிடம் ஐ.பி.எல்-க்கு எதிராக நடந்த போராட்டத்தை பற்றி கேட்ட போது, அவர்கள் போராட்டம் செய்தது நல்ல விஷயம் தான், 

ஆனால் வெறும் 22 பேர் விளையாடுகின்ற போட்டியை எதிர்த்து முற்றுகையிட சென்ற போராட்டக்கார்கள் அதற்கு பதிலாக தலைமைச்செயலகத்தில் விளையாடி வரும் 234 அமைச்சர்களை முற்றிகையிட சென்று இருக்கலாம் என தனக்கு உண்டான பாணியில் பதிலளித்தார் கமல் .
விடுவிக்கப்படுகின்ற இடங்களில் சூறையாடல்!

விடுவிக்கப்படுகின்ற இடங்களில் சூறையாடல்!

வலிகாமம் வடக்கில் அங்கு படையினர் நிலை கொண்டிருந்த காணிகளில் இருந்த வீடுகளை வெளியேறும் போது படையினர் சூறையாடியிருப்பதாக இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக அவை படையினர் வசமேயிருந்திருந்தது. ஆனால் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக அக்காணிகளிலிருந்த வீடுகளின் கூரைகளையும் யன்னல்களையும் படையினர் பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த வீடுகளும் சேதமடைந்த நிலையிலையே காணப்படுகின்றன.

மேலும் தற்போது படையினர் அமைத்துள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லையிலுள்ள வீடுகள் பலவும் இருக்கின்ற போது விடுவிக்கப்பட்ட இடத்திலிருந்த வீடுகள் மட்டும் ஏன் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றதென்றும் அந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அடைக்கலநாதன் எம்மிடம் உதவி கேட்டிருந்தார்  - சிவசக்தி ஆனந்தன்

அடைக்கலநாதன் எம்மிடம் உதவி கேட்டிருந்தார் - சிவசக்தி ஆனந்தன்

அடைக்கலநாதன் எம்மிடம் உதவி கேட்டிருந்தார் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற  புதிய நகரசபை தலைவருக்கான கெரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருது தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார்

மேலும் அவர் கூறுகையில் 
  
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் செல்வம் அடைக்கலநாதன்இமற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  கருணாகரன் ஆகிய இருவரும்  மட்டக்களப்பு மாநகரசபை மற்றும்  ஏனைய மூன்று சபைகளுக்கும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின்  உறுப்பினர்களின் ஆதரவை கோரி எங்களிடம் உதவி கேட்டிருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கொள்கை ரீதியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் ஒரு யாப்பின் பிரகாரம் செல்லுமா இருந்தால் வடகிழக்கில் அனைத்து சபைகளுக்கும் எமது ஆதரவை தர தயாராக இருக்கிறோம் என்று நாம் கூறினோம்.  
நீங்கள் கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஒழுங்கு செய்யுமாறும் அந்த கூட்டத்திலே இணக்கப்பாடு எட்டப்பட்டால்  வடகிழக்கிலே எமது ஆதரவை வழங்கலாம் என்று கூறி இருந்தோம்.
ஆனால் அடைக்கலநாதன் அவர்கள் பின்னர் எம்முடன் தொடர்புகொள்ளவில்லை. அத்துடன் உள்ளூராட்சி சபைகளிலே எமது பணிகள் என்ன தமிழ் மக்களின்  தேசிய இனப்பிரச்சனை விடயத்தில் எமது பணிகள் என்ன என்பதில் எமது கட்சி மிக தெளிவாக இருப்பதாக கூறினார் 
நெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே?

நெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே?


நெடுந்தீவில் கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளர்களை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் களமிறக்கியருந்ததனை தாம் அறிந்திருந்ததாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்றமை எமக்கு தெரியும்.

நெடுந்தீவில் டெலோ சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அங்கு சந்தர்ப்பம் கிடைக்காத சிறீதரனின் ஆதரவாளரொருவரே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அவரது ஆதரவுடனேயே நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.

இடம் கொடுக்காது வெளியே விடுவதும் பின்னர் கதிரை பிடிக்க அவர்களை அரவணைப்பதும் கூட்டமைப்பிற்கு சாதாரணமானது.

ஏன் யாழ்.மாவட்டத்தில் சபைகளை கைப்பற்ற நாம் தேவை. ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமை பற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் முதலாவது சினிமா திரையரங்கில் பொங்கி வழியும் ரசிகர்கள்

சவுதி அரேபியாவின் முதலாவது சினிமா திரையரங்கில் பொங்கி வழியும் ரசிகர்கள்

சவுதி தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளாக் பான்தர்ஸ்’ முதல் படமாக திரையிடப்பட்டது.

இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முதல் 15 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் விற்றுத் தீர்ந்ததாக தெரியவந்துள்ளது.

 தொடர்ந்து மற்ற காட்சிகளும் ‘ஹவுஸ் புல்’ ஆக ஓடிக் கொண்டிருப்பதை வைத்து 35 ஆண்டுகளாக சவுதி அரசால் தடை செய்யப்பட்டிருந்த சினிமாவின் மீது அந்நாட்டின் மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக கொண்டிருந்த மறைமுக மோகத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது.

புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இஸ்லாமிய மிதவாத நாடாக சவுதி அரேபியாவை மாற்றப் போவதாகவும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார்.

அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதன் ஒருகட்டமாக, வெபல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது. சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


உங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்! ஜோதிடம் கூறும் ரகசியம்

உங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்! ஜோதிடம் கூறும் ரகசியம்


எல்லா ராசிக்காரர்களிடையே ஒரு தனித்துவமான குணங்கள் உண்டு, இருப்பினும் மற்ற ராசிக்காரர்களிடமிருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா?.. இதன் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

மேஷம்

உங்கள் கட்டுக்கடங்கா உணர்வு உங்கள் மேல் உங்கள் துணையை பைத்தியமாக்குகிறது. எல்லாவற்றிற்கும் நீங்கள் விட்டுக் கொடுப்பீர்கள். காதலிக்க ஏற்ற ஒரு துணையாக உங்களைத் தவிர உங்கள் துணையால் வேறு யாரையும் நினைத்து பார்க்கவும் முடியாது என்பதால் அவர்கள் உங்களை முழுமையாக நேசிக்கத் தொடங்குவார்கள். உங்கள் ஆழ்ந்த பக்கம் அவரை உங்களிடம் சரணடையச் செய்கிறது.

ரிஷபம்

உங்கள் அர்ப்பணிப்பு உங்களைக் கவர்ச்சிகரமான தனிநபராக ஆக்குகிறது. நீங்கள் அவசரப்பட்டு காதலிக்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கான ஒருவரைக் கண்டுபிடித்தவுடன் அவருக்கு உங்களிடம் உள்ள சிறந்த குணங்களை வெளிப்படுத்துவீர்கள். என்றென்றும் உங்கள் துணைவரின் இதயம் உங்களிடம் மட்டும் தான் இருக்கும். எல்லா நேரத்திலும் உங்கள் துணைவருக்கு பக்க பலமாக நீங்கள் இருப்பீர்கள்.

மிதுனம்

உங்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றலைப் பார்த்து உங்கள் துணைவர் உங்கள் மேல் அதிக பற்று கொள்வார். வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர் நீங்கள். உங்களிடம் உள்ள வியக்கத்தக்க உற்சாகம் உங்கள்பால் உங்கள் துணைவரை ஈர்ப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. இது மட்டும் இல்லாமல் நீங்கள் பெரிய மனது படைத்தவர். இதனால், உங்கள் அறிவு, விருப்பம் மற்றும் உள்ளுணர்வுகளை நீங்கள் உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

கடகம்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் தொடர்ச்சியான விடாமுயற்சி, கூட்டத்தில் இருந்து உங்களை தனித்து நிற்க வைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களை நீங்கள் மிகுந்த அரவணைப்புடன் பாதுகாப்பீர்கள் . இது இயல்பாகவே உங்களுக்கு இருக்கும் ஒரு குணம் ஆகும். உங்களுடன் கழிக்கும் பொழுதுகள் மிகவும் ரொமாண்டிக் தருணங்களாக இருக்கும். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் கூட உங்கள் அருகாமை, ஒரு வித பாதுகாப்பு உணர்வைத் தரும். உங்களுடன் இருப்பதை உங்கள் துணைவர் மிகவும் சௌகரியமாக மற்றும் பாதுகாப்பாக உணர்வார்.

சிம்மம்

உங்கள் பெருந்தன்மை பிறரின் இதயத்தை உருக வைக்கும். உங்களுடைய அன்பு, சூரியனை போல் மிகவும் ஆழமானதாக, வலிமையானதாக மற்றும் நம்பிக்கை நிறைந்தாக இருக்கும். உங்களை போன்ற குணவான்களைப் பார்ப்பது மிகவும் கடினம். ஆகையால் இந்த குனங்களுக்காகவே உங்க துணைவர் உங்கள் மீது மாறாத அன்பைச் செலுத்துவார்.

கன்னி

உங்கள் கவனிப்பு உங்கள் துணைவரை உங்கள் பின்னால் வரச் செய்யும். உங்கள் துணைவரைப் பற்றி அனைத்தையும் அறிந்தவர் நீங்கள். அவருடைய வலிமை மற்றும் தவறுகள் ஆகிய இரண்டுடனும் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எப்போதும் அவர் மேல் நீங்கள் அன்பு செலுத்துவீர்கள். அவரை அவராகவே ஏற்றுக் கொள்ளும் தன்மை உங்களுக்கு இருப்பதால், உங்கள் துணைவரும் உங்களை மற்றவர்கள் மத்தியில் விட்டுக் கொடுக்க மாட்டார்.

துலாம்

உங்களுடைய இனிமையான பழுகும் தன்மை உங்கள் துணைவரை உங்கள் மேல் அதிக ஈடுபாடு கொள்ள வைக்கும். இந்த குணநலன் உங்கள் துணைவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். உங்கள் துணைவரிடம் கொடுக்க அபரிவிதமான அன்பு உங்களிடம் இருக்கும். உற்சாகமான மற்றும் நிறைவான வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உங்கள் துணையுடன் கழிக்க அதிகம் விரும்புவீர்கள். உங்களுடன் இருப்பதை உங்கள் துணைவர் அதிகம் விரும்புவார். உங்களை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அதிக சிரமம் இருக்காது. போலித்தனத்திற்கு இங்கு இடமே கிடையாது.
விருச்சிகம்

உங்கள் பக்தி மற்றும் அளவிட முடியாத அன்பு, உங்கள் துணைவருக்கு உங்களிடம் மிகவும் பிடித்த குணமாக உள்ளது. உங்களை திசை திருப்பும் மற்ற விஷயங்களில் ஈடுபடுவதை விட்டு, விட்டு, உங்களுக்கு முக்கியமானவற்றில் கவனம் கொள்வது நல்லது. நீங்கள் எந்த நேரத்திலும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நபராக இருக்கிறீர்கள், ஏனென்றால் எப்போதும் சிறந்ததை மட்டுமே நீங்கள் கொடுப்பீர்கள்.

தனுசு

உங்கள் நேர்மறை எண்ணம் எப்போதும் வெற்றியை நோக்கி உங்களைச் செலுத்தும். உங்களுடைய உற்சாகமான மற்றும் மகிழ்ச்சிகரமான பக்கம், உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அதில் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்க்கும் உங்கள் மனோபாவம் , உங்கள் துணைவரை உங்கள் பக்கம் கவர்ந்திழுக்க உதவும்.
மகரம்

உங்களுக்கு இருக்கும் ஸ்திரத்தன்மை உங்கள் துணைவரைச் சுண்டி இழுக்கும். உறவு என்று வரும்போது, உங்கள் துணைவருக்கு மிகவும் தேவையான எல்லா நேரங்களிலும் நீங்கள் அவருடன் இருப்பீர்கள். இந்த உறவின் ஆதாரமாக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் துணையின் எந்த ஒரு தருணத்திலும் நீங்கள் அவருக்கு பக்கபலமாக ஒரு தூணாக இருந்து செயல்படுவீர்கள். அவருக்கு எந்த நேரத்திலும் துணை நிற்ப்பீர்கள்.

கும்பம்

உங்கள் நேர்மைக் குணம், உங்கள் துணைவரை அதிகம் கவரும். இதனால் அவர் உங்களை அதிகம் நேசிப்பார். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக மனம் திறந்து சொல்வது உங்களுக்கு மிகவும் கடினம், ஆனால் உங்கள் துணைவரிடம் நீங்கள் வெளிப்படையாக, திறந்த மனதுடன், மிகவும் நேர்மையாக இருப்பீர்கள். திருமண உறவில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு உறவிலும், இந்த ஒரு குணம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துணைவரும் இப்படியான குணங்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மீனம்

நீங்கள் மென்மையான உணர்வுகள் கொண்ட ஒரு மனிதர். உங்கள் துணைவரிடம் நீங்கள் செலுத்தும், அன்பு, பரிவு, அரவணைப்பு போன்றவற்றிற்கு எல்லைகள் கிடையாது. அவர்கள் உணர்வோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்வீர்கள். இதனால் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பீர்கள். உங்கள் துணையின் இதயத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த தனி இடம் உண்டு.
வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!


மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பணிப்பெண்களை அனுப்பும் போது பணி செய்யும் இடம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல் பெறுகையில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல் மனரீதியான தன்மை தொடர்பிலும் தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பணிப்பெண்களை அனுப்பும் போது சேவை செய்யும் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டின் அளவு, உரிமையாளரின் தொழில் ஆகிய தகவல்களை பெற்றுக் கொள்ளப்படுது. எனினும் உடல் மற்றும் மன நிலைமை தொடர்பில் தகவல் பெற்றுகொள்வதில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சேவை செய்த வீட்டின் உறுப்பினரால் இலங்கை பணிப்பெண் சுட்டு கொல்லப்பட்டார். அவர் ஒரு மன நோயாளி என பின்னரே தெரியவந்தது. இவ்வாறான நிலைமைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணிகளது மேதினம் முதலாம் திகதியே!

முன்னணிகளது மேதினம் முதலாம் திகதியே!


மே மாதம் 01ஆம் திகதியே உழைக்கும் தொழிலாளர்களது தினம்.உலகமெங்கும் அத்தினமே மேதினமாக அனுஸ்டிக்கப்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பவை அறிவித்துள்ளன.

அவ்வகையில் தமது மேதின நிகழ்வுகள் முதலாம் திகதி முன்னெடுக்கப்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சர்வதேச தொழிலாளர் தின விடுமுறையை இம்முறை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக, சுதந்திர வர்த்தக மையங்கள்  மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட  இந்த முடிவானது, தனியார்துறை ஊழியர்களுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை கூட்டமைப்பின் மேதினம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.
பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சிக்காக நானிக்கு இத்தனை கோடி சம்பளமா

பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சிக்காக நானிக்கு இத்தனை கோடி சம்பளமா


கடந்த வருடம் தென்னிந்தியா தொலைகாட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஷோ முக்கிய இடம் பெற்றது. தெலுங்கில் முதல் சீனை என் டி ஆர் ஷோ வை வழிநடத்தினார். அதே போல் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதில் ஷோ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தெலுங்கில் இரண்டாவது சீனை ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க மறுத்துவிட்டார். அதனால், தெலுங்கில் இளம் நடிகரான நானியை தொகுத்து வழங்க பேசி வந்தார்கள்.

அவரும் சம்மதித்துள்ளார். நிகழ்ச்சிக்காக நானிக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஞ்ஞானிகள் கண்டறிந்த உயிர்த்தியாகம் செய்யும் எறும்புகள்!

விஞ்ஞானிகள் கண்டறிந்த உயிர்த்தியாகம் செய்யும் எறும்புகள்!

ஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல காடுகளில், எதிரிகளிடமிருந்து தம் இனத்தை காப்பாற்றுவதற்காக உயிர்த்தியாகம் செய்யும் எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆசியாவில் தென்கிழக்கு வெப்பமண்டல காடுகளில் புதிய 15 எறும்பு இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் இவ் எறும்பு இனத்தில், மற்ற எறும்பு இனத்தில் இருந்து மாறுபட்ட பாதுகாப்பு அமைப்பை கொண்ட எறும்பு இனம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர்.

இதனடிப்படையில் கோலோபோசிஸ் எக்ஸ்ப்லோடன்ஸ் என்ற இந்த எறும்பு வகை, எதிரிகளிடமிருந்து தம் இனத்தை காப்பாற்றுவதற்காக, உயிர்த்தியாகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மற்றைய பூச்சி இனங்கள், தம் இனத்தை தாக்க வந்தால், தம் இனத்தை காப்பாற்றுவதற்காக, ஒரு வித விச திரவத்தை வெளியிட்டு, தாக்க வரும் பூச்சி இனத்தை கொல்வதோடு, திரவத்தை வெளியிட முழு சக்தியையும் பயன்படுத்துவதால், எறும்பும் இறந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் எறும்பு வகைகள் போர்னியோ தீவு பகுதியில் காணப்படுவதாகவும், இது போன்ற எறும்பு இனங்கள் 1916 ஆம் ஆண்டு பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் மீட்பு! மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு!

காவிரி நதிநீர் மீட்பு! மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு!

காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறெந்தப் பிரதமரும், எந்த மாநிலத்திலும் சந்திக்காத எதிர்ப்பை ஏப்ரல் 12-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டார்.

தமிழர் இல்லம் தோறும் கருப்புக் கொடிகள் பறந்தன. தலைநகர் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; “பிரதமர் மோடியே திரும்பிச் செல்லுங்கள்” என்று இளைஞர் பட்டாளம் எழுப்பிய இடிமுழக்கம் டெல்லி செங்கோட்டை வரை எதிரொலித்தது. காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்படும் வரையில் ஓயாத கடல் அலைகளென தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஏப்ரல் 16-ந்தேதி தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏப்ரல் 23 (திங்கள்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி அறப் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க, உரிமைப் போராட்டக் களத்தில் ஒட்டு மொத்தத் தமிழினமும் ஒருசேர அணி திரண்டது என்பதை நிரூபிக்க வீதிக்கு வாருங்கள் தமிழர்களே! என்று அழைக்கிறேன். தமிழக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வர்த்தக பெருமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஏப்ரல் 23-ல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் கைகோர்த்து அறப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என அவ்வறிக்கையில் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி

சிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி

வடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என தெரிவித்தார்.

அமெரிக்கக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்!!

அமெரிக்கக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்தியா நாட்டைச் சேர்ந்த தமிழ் இளைஞரை அமெரிக்கக் காவல்றையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான  நதானியல் பிரசாத் என்ற இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.

இவரை ஒரு குற்ற வழக்கு ஒன்றுக்காக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர்  ஒரு மகிழுந்தில் சென்று கொண்டிருந்ததை அவதானித்த காவல்துறையினர் தகவலை போக்குவரத்துக் காவல்துறையினருக்கு வழங்கினர்.

அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப்  காவல்துறையினர் குறித்த இளைஞரை  பிடிக்க தீவிர முயற்சித்த போது காவல்துறையைக் கண்ட பிரசாத் மகிழுந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.

தப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே  மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.

உடனே காவல்துறையினர் பிரசாத்தை நோக்கி  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார் பிரசாத்.
சுரேசை நம்பி புதிய கூட்டை உருவாக்க முடியுமா ? கஜேந்திரகுமார் கேள்வி?

சுரேசை நம்பி புதிய கூட்டை உருவாக்க முடியுமா ? கஜேந்திரகுமார் கேள்வி?

உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார்.

நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்;

எங்களோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார்.

இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதய சூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர்.

தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது?

சுரேஷ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார். இதற்கும் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது? என்றார் கஜேந்திரகுமார்.
வெளிநாட்டு கை குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு கை குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது

One arrested with foreign hand bomb

கடுவெல -ரனால பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலய தகவல்கள் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சூப்பர்ஸ்டார் செய்த பிரம்மாண்ட சாதனையை முறியடித்த மகேஷ் பாபு

சூப்பர்ஸ்டார் செய்த பிரம்மாண்ட சாதனையை முறியடித்த மகேஷ் பாபு

Mahesh Babu’s Bharat Ane Nenu beats Rajinikanth’s Kabali

இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவர் பல சாதனைகளையும் செய்துள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று கபாலி படம் 42 நாடுகளில் வெளியானதுதான். தற்போது வரை இதுதான் சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது மகேஷ் பாபுவின் Bharat ane Nenu படம் வரும் ஒரே நேரத்தில் 45 நாடுகளில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் சாதனையும் செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 58 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளது என கூறப்படுகிறது.
வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு..!

வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு..!

வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட உத்தவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம் மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியமை ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

பேச்சுக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

கிம் ஜாங் உன் உடனான பேச்சுக்கு டொனால்ட் டிரம்ப்பும் சம்மதம் கொடுத்துள்ள நிலையில் எதிர்வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல் மாத்திரை..!

இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல் மாத்திரை..!

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய போது அது தொண்டையில் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்..!

நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்..!

காஜல் அகர்வால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

ஆனால், பழனி படம் தான் முதலில் ரிலிஸானது, இந்நிலையில் காஜல் வளர்ந்து வந்த போது ஒரு நிர்வாண போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக வலம் வருகின்றது. இந்த புகைப்படம் வெளிவந்த அந்த தருணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இதோ...


முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்

Three-wheeler drivers have been renewed for 02 months

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது நேற்று(20) முதல் கட்டாய நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,

மீண்டும் 02 மாத கால சலுகை வழங்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் நேற்று(20) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்,

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதை ஊக்கப்படுத்துவதற்கே இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொழும்புக்கு வௌிப்பிரதேசங்களில் உள்ள முச்சக்ககர வண்டி சாரதிகளும் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதற்கு வசதியாக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்குவதாக அவர் சிசிர கோதாகொட கூறினார்.
வவுனியாவில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கை..!

வவுனியாவில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கை..!

வவுனியாவில்  ஏ9 வீதியின் ஓரமான நகர அழகுக்காகவும் நிழலுக்காகவும் நாட்டப்பட்ட வாகை மரங்கள் வீதி அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உயிர்ப்புத் தன்மை இழந்து வீதியில் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது.

குறித்த மரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  அகற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

 செயற்பாட்டின் மூலம் விபத்துக்கள் உயிராபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அகற்றப்படும் மரங்களுக்குப் பதிலாக புதிதாக  மரங்கள் நாட்டப்பட்டு வவுனியா நகரை அழகு படுத்தவேண்டுமென்று  பெதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Arvind Swami - Amala Paul's 'Bhaskar Oru Rascal' from April 27 Thina Seithi Cinema

கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படங்களில் ஒன்று அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. 

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதால் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் இம்மாதம் 27ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னையில் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் தகவலோடு புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்விந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி அட்டகாசமாக நடித்துள்ளாராம். 

அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை! சுரேஸ்

நூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை! சுரேஸ்


நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும் சாதித்துவிட முடியாது என முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவருமான  தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலானது தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பலவீனப்பட்டுவிட்டது அல்லது மக்களால் வெறுக்கப்பட்ட அமைப்பு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைகளை கைவிட்டு தான் விரும்பிய வழியில் ஒரு வழிமுறையை பின்பற்றியிருந்த நிலையில் அதில் ஒன்றாக புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. அத்துடன் தமிழ் மக்கள் ஆணைக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது செயற்பட்டமையானது அது இவ்வரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் காப்பாற்றுகின்ற செயற்பாடகவே அமைந்த்து.

தமிழ் மக்களது காணிப்பிரச்சனை, காணாமல் போனவர்கள் பிரச்சனை, பௌத்த கோவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரச்சனை, சிங்கள சிற்றுளீயர்களை வடக்கில் நியமித்த பிரச்சனை, வவுனியா மன்னாரில் சிங்கள அரச அதிபர்களை நியமித்த பிரச்சனை போன்றன தொடர்பாக பேச முற்பட்டால் அரசியல் சாசனம் தொடர்பாக பேச முடியாமல் போய்விடும் என கூட்டமைப்பு கூறிவந்த நிலையில் தற்போது இரண்டும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தான் வகுத்த வியூகத்தின் ஊடாக அல்லது இராஜதந்திர நடவடிக்கை ஊடாக எதனை சாதித்தது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. ஆகவே தான் தற்போது மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றார்கள். இவ்விடயத்தை என்னுடைய கட்சியும் வலியுறுத்திவந்திருந்த்து.

கடந்த முறை முதலமைச்சரும் தமிழ் மக்களது உரிமைகளை அவர்களது அபிலாஷைகளை உள்ளடக்கிய அமைப்பு முறை தேவையென்றும், மக்கள் விரும்பினால் தாம் மீளவும் அரசியலில் இருப்பதாகவும் கூறினார். எனவே எதிர்காலத்தில் உறுதியான மாகாண சபை உருவாக வேண்டும். தமிழ் மக்களது நீண்ட கால போராட்டத்தில் அவர்களது காணிகள் மீட்கப்பட்டு, தனித்துவத்துடன் வாழக்கூடியதாக இருக்க தமிழ் கட்சிகளுக்குள் ஐக்கியம் என்பது தேவையாகின்றது.

இங்கே நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும் சாதித்துவிட முடியாது. அத்துடன் வெறுமனே பத்திரிகைகளுக்கு செய்தி அறிக்கைகளை விடுவதனூடாகவும் மக்களின் அபிலாஷைகளையும் தீர்த்துவிட முடியாது.
எனவே புதிதாக உருவாகப்போகின்ற ஜக்கிய முன்னனி என்பது தனக்கு என்று பொதுவான யாப்பு, பொதுவான கொள்கை, மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய சரியான திட்டமிடல்கள் போன்றன உருவாக்கப்பட்ட அமைப்பாக காணப்பட வேண்டும். அவ்வாறிருந்தாலேயே மக்களின் உரிமைகளை வென்றுடுக்க முடியும் என்றார்.
வடக்கு முதல்வரின் புதிய முடிவு - வரவேற்கும் கஜேந்திரகுமார்

வடக்கு முதல்வரின் புதிய முடிவு - வரவேற்கும் கஜேந்திரகுமார்


தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்........
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியான கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிகிறோம். அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணி வரவேற்கிறது.
மேலும் முதலமைச்சர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.
ஆகவே கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்பட்டாலும் முதலமைச்சர் கூட்டமைப்பின் முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.
அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் இருந்து அவதானிக்க கூடியதாக இருந்தது.
அது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பாதிக்கும். என்ற நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கின்றது. அதனையே நாங்களும் கூறுகிறோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.
மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்படபோகிறார்? எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள்? என்பதும் முக்கியமான விடயமாகும்.
அந்த வகையில் முதலமைச்சர் கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தரப்புக்களுடன் கூட்டு சேரவேண்டும் என நாங்கள் எதிர்பார்கிறோம். நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தல் காலத்தில் கொள்கைவாதிகள் என நம்பி ஒரு தரப்புடன் கூட்டுசேர்வதற்காக முயற்சித்திருந்தோம்.
ஆனால் அது கடைசியில் கொள்கையே இல்லாத தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. அப்படியான தரப்புக்களுடன் முதலமைச்சர் எக்காலத்திலும் கூட்டு சேர கூடாது. காரணம் அவர்களுடைய கொள்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையிலும் பார்க்க ஆபத்தான கொள்கையாக உள்ளது.
ஆகவே முதலமைச்சர் கொள்கையில் விடாப்பிடியான தரப்புக்களுடன் கூட்டு வைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே உள்ளது.
மேலும் உள்ளுராட்சி சபை தேர்தலின் ஊடாக தூய்மையான தமிழ் தேசிய வாதத்திற்கான அடித்தளம் இடப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் தனியான கட்சி ஒன்றை உருவாக்குவதாக எழுந்துள்ள செய்திகள் முக்கியத்துவமானவை என்று கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
மனைவியின் உடலை அன்று தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

மனைவியின் உடலை அன்று தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?


ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.

தானா மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்துபோனார், மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீற்றர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.

பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது. மறுமணம் செய்துகொண் மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

பலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை


மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுமியரைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கான முடிவெடுக்கப்பட உள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கதுவா, உன்னாவோ பாலியல் பலாத்காரங்களை அடுத்து நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான அக்கறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

சிறுமியரைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்துப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து வந்த கோரிக்கைக்குச் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு அவசரச் சட்டம் நிறைவேற்றுவது குறித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது.
முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்: சாக் புகைப்படம்

முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்: சாக் புகைப்படம்


காஜல் அகர்வால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

ஆனால், பழனி படம் தான் முதலில் ரிலிஸானது, இந்நிலையில் காஜல் வளர்ந்து வந்த போது ஒரு நிர்வாண போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக வலம் வருகின்றது. இந்த புகைப்படம் வெளிவந்த அந்த தருணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இதோ...

வடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்!

வடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்!


வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு ஆதவளிப்பது தொடர்பில் கூட்டமைப்பில் எஞ்சியுள்ள கட்சிகளான டெலோ மற்றும் புளொட் அமைப்புக்களிடையே பிளவு தோன்றியுள்ளது.

அடுத்த மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியினை அமைக்க விரும்பினால் முதலமைச்சர் அமைக்கலாம். அந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன அடுத்த வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் இத்தகைய கருத்தை வெளியிட்ட போதும்  எம்.கே.சிவாஜிலிங்கம் மௌனம் காத்துவருகின்றார்.

வடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சர்கள் நியமனத்தின் போது தான் சொன்ன விந்தன் கனரட்ணத்திற்கு அமைச்சு பதவி கொடுக்காத சீற்றத்திலேயே சிறீகாந்தா கருத்து வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் குறைப்பு

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் குறைப்பு


தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாதி சுங்கக் கட்டணம்தான் பெற வேண்டும் என்கிற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் அந்த உத்தரவை மீறிப் புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு முழுக் கட்டணம் பெற்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதை அடுத்துக் கட்டணம் அரைவாசியாக குறைக்கப்பட்டது.
ஈபிடிபிக்கு வேண்டுமென்றே அடித்தோம்: சிறீகாந்தா!

ஈபிடிபிக்கு வேண்டுமென்றே அடித்தோம்: சிறீகாந்தா!


வேலணை கரவெட்டி பிரதேச சபைகளில் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி செயற்பட்ட காரணத்தினாலேயே நெடுந்தீவு பிரதேச சபையினை கைப்பற்றி ஈ.பி.டி.பிக்கு பதிலடியுடன் கூடிய அதிர்ச்சி கொடுத்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதாக இருந்த வேலணை பிரதேச சபையில் நடைபெற்ற ஆட்சி அமைப்பின் போது ஈ.பி.டி.பி சிங்கள கட்சியுடன் இணைந்து ஆட்சியினை தனதாக்கிக் கொண்டது. மேலும் கரவெட்டி பிரதேச சபையின் ஆட்சி அமைப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பிரேரிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாமும் தவிசாளர் ஒருவரை பிரேரித்து போட்டியிட்ட போது ஈ.பி.டி.பி கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்காமல் சிங்கள கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பி கட்சிக்கும் எட்டப்பட்ட பொது கொள்கை வேலணை பிரதேச சபை ஆட்சி அமைப்பின் போது சிதறடிக்கப்பட்டது. பின்னர் கரவெட்டி ஆட்சி அமைப்பின் போது அக் கொள்கை சுக்குநூறாக தகர்க்கப்பட்டது. இதனாலேயே நாங்கள் ஈ.பி.டி.பி கட்சிக்கு பாடம் புகட்ட அவர்கள் அதிக ஆசனங்களை பெற்ற நெடுந்தீவு சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது.

நெடுந்தீவு பிரதேச சபையினை கூட்டமைப்பு கைப்பற்றத் தேவையில்லை என்றும் அது ஒரு சிறிய சபை குறைந்த மக்களைக் கொண்டது. அதனை ஈ.பி.டி.பி கட்சிக்கு விட்டுக் கொடுப்போம் என்று கூட்டமைப்பில் இருந்த சிலர் கூறினார்கள்.

ஆனால் தவறிழைத்த ஈ.பி.டி.பி கட்சிக்கு நெடுந்தீவினை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. இதனால்தான் ஈ.பி.டி.பிக்கு நெடுந்தீவில் அதிர்ச்சியை கொடுத்தோம். ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சுமத்த முடியாது என்றார்.

ஏவுகணை பரிசோதனைகளையும் நிறுத்துமாறு வட கொரியாவின் ஜனாதிபதி உத்தரவு

ஏவுகணை பரிசோதனைகளையும் நிறுத்துமாறு வட கொரியாவின் ஜனாதிபதி உத்தரவு

North Korea suspends missile testing, closing nuclear test site, reports say

அனைத்து ஏவுகணை பரிசோதனைகளையும் நிறுத்துமாறும், அணுவாயுத சோதனைத் தளங்களை மூடுமாறும் வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோன் உங் உத்தரவிட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, இன்று முதல் அணுவாயுத பரிசோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளையும் வட கொரியா நிறுத்துவதாக கொரியா மத்திய செய்தி மைய்யம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.<

இந்த நிலையில், வடகொரியாவின் இந்த அறிவிப்பை வரவேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது டுவிட்டர் கருத்து வெளியிட்டுள்ளார். இது வட கொரியாவுக்கும் உலகத்துக்கும் நல்ல செய்தி என்றும், பாரிய முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து எதிர்வரும் ஜீன் மாதம் மாநாடு ஒன்றிலும் வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோன் உங் பங்கேற்க உள்ளார். அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பாக இது அமைய உள்ளது.
 யாழ்.மாநகர சுத்திகரிப்பு கொழும்பு தனியாரிடம்?

யாழ்.மாநகர சுத்திகரிப்பு கொழும்பு தனியாரிடம்?


யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை  கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மாநகரை சுத்தமாக்குவதற்காக பலவகையான முன்மொழிவுகள் ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் உள்ளுரில் போதிய சுத்திகரிப்பாளரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு தென்னிலங்கை நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு பணிகளை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தனியார் நிறுவனம் உள்ளுரில் சுத்திகரிப்பு தொழிலாளர்களை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதை கருத்தில் கொண்டு தென்னிலங்கையிலிருந்து சிங்கள தொழிலாளர்களை யாழ்ப்பாணம் தருவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மாநகரசபை சுகாதாரமற்றிருப்பதற்கு யாழ்ப்பாணத்து சுத்திகரிப்புத் தொழிலாளிகளது தரமின்மையே காரணம் என்றும் அதனால் தென்னிலங்கையிலிருந்து ஒரு தொகுதி தொழிலாளர்களை யாழ் மாநகருக்கு வரவழைத்து யாழ் மாநகரை அழகுபடுத்த முடியும் என்றும் ஆனோல்ட் திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல் தெரிவிக்கின்றன.

யாழ் மாநகரை ஆட்சி செய்த ஈ.பி.டிபி. கட்சியும் தென்னிலங்கை அரசுடன் இணைந்து ஆட்சி அதிகரத்தை கொண்டிருந்தாலும் அந்தக் கட்சி தனது கொள்கை நிலைப்பாட்டுக்கு இணங்க யாழ் மாநகரை அண்டிய பல நூறு பேருக்கு தெழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்;தது.

நீட் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடு- செங்கோட்டையன் பதில்

நீட் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடு- செங்கோட்டையன் பதில்

Tamil Nadu students will succeed in NEET exam - Minister Sengottaiyan Thina Seithi Tamil

நீட் தேர்வு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தனியார் பொறியியல் கல்லூரியில், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான உண்டு உறைவிட பயிற்சி மையத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,

"3 ஆயிரம் பள்ளிகளுக்கு 8 ஆம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் போட்டி தேர்வுகளை தயார் படுத்தும் வகையில் சிறப்பு வகுப்பு வைக்கலாம்.

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்தில் எழுதுவது தொடர்பாக சில குளருபடிகள் ஏற்ப்பட்டது தான் காரணம். விரைவில் அது சரி செய்யப்படும்.

நீட் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம் அதில் நாம் தலையிட முடியாது" என குறிப்பிட்டார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Thina Seithi Madurai

மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், விசாரணை அதிகாரி தொடர்பான விதிகளை கட்டாயம் பின்பற்றுவது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை எஸ்.பி.,களுக்கு டி.ஜி.பி., உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்தள்ளது.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே 17.1.2000-ம் ஆண்டில், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், சுரேந்திர குமார் என்பவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.

இதை ரத்து செய்யக்கோரி சுரேந்திரகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து, நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

மனுதாரர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவான வழக்கை காவல் ஆய்வாளர் விசாரித்துள்ளார்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, காவல் ஆய்வாளர் விசாரித்துள்ளார். இதைக் கவனிக்க கீழமை நீதிமன்றம் தவறிவிட்டது.

இதனால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை, ரத்து செய்யப்படுகிறது.

வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரை, எஸ்,சி, எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989-ல் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி விசாரிக்கவும்.

குறிப்பாக அந்தச் சட்டத்தில் விசாரணை அதிகாரி தொடர்பான விதிகள் 6 மற்றும் 7-ஐ கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாவட்ட காவல்துறை எஸ்.பி.,களுக்கு டி.ஜி.பி., உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என அவர் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலம் வந்தார் திமுக தலைவர்

அண்ணா அறிவாலம் வந்தார் திமுக தலைவர்

DMK leader Karunanidhi visits Anna Arivalayam with Stalin Thina Seithi Tamil

திமுக தலைவர் மு.கருணாநிதி முதுமை காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை பல்வேறு தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் கொள்ளுப் பேரன்களுடன் விளையாடும் விடியோவும் வெளியாகின.

இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி கோபலபுரம் வீட்டிலிருந்து அண்ணா அறிவாலயத்திற்கு திடீர் வருகை தந்தார்.

பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தனது அறைக்கு சென்றார். பின்னர் ஒரு மணி நேரம் அங்கிருந்த அவர் கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார்.
போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் மோசடி

போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் மோசடி

police-arrested-two-persons-including-a-university-employee-who-had-been-making-a-fake-atm-card-in-the-puducherry-Thina-Seithi

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் நூதன முறையில் பணமோசடி நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில், அந்த கம்ப்யூட்டர் செண்டரில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த லாஸ்பேட்டையை சேர்ந்த பாலாஜி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரை மின்னணு சாதனங்கள் மற்றும் வெள்ளை நிற ஏடிஎம் கார்டுகளுடன் கையும் களவுமாக கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலாஜி என்பவர் பொறியியல் பட்டதாரி என்பதும், பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர் பிஜேம் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

இதேபோல் ஜெயச்சந்திரன், வள்ளலார் சாலையில் எஸ்.எஸ் கம்ப்யூட்டார் சென்டர் நடத்தி வருகிறார்.

இருவரும் ஸ்கிம்மர் மெஷின், மற்றும் ரகசிய கேமிரா மூலம் ஏடிஎம்களில் மையங்களில் எடுக்கப்படும் தகவல்களை கொண்டு போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து அதன் மூலம் பொதுமக்களின் பண பரிவர்தனையை தெரிந்துகொண்டு அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பணத்தை POS மெஷின் மூலம் ஸ்வைப் செய்து குற்றவாளிகளின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்வது தெரியவந்தது.

இவர்கள் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களின் பணத்தை குற்றவாளிகளுக்கு தெரிந்த நபர்கள் மூலம் இவர்களது தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான பணம், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் POS மெஷின்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களது நெட்வொர்க்கில் உள்ள தமிழகம் மற்றும் கேரளாவைச் சார்ந்த இருவரை தேடி வருகின்றனர்.
நீரில் மூழ்கி படகு விபத்து: மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி படகு விபத்து: மாணவன் உயிரிழப்பு


கினிகத்தேனையில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மினுவாங்கொடயைச் சேர்ந்த 23 வயதுடைய மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டது. பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போதே படகு நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.