Saturday, April 28, 2018

வலது பக்கமாக தூங்கினால் ஆபத்து! ஆனால் இப்படி தூங்கினால் எவ்வளவு நன்மை தெரியுமா?

வலது பக்கமாக தூங்கினால் ஆபத்து! ஆனால் இப்படி தூங்கினால் எவ்வளவு நன்மை தெரியுமா?


நாம் தினமும் தூங்கும் நிலைக்கும், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்புண்டு. ஆம். தூங்கும் போது, நேராக படுப்பது, வலது பக்கமாக படுப்பது ஆபத்து. எனவே இடது பக்கமாக உறங்குவதுதான் சிறந்த நிலை.

ஏனெனில் இடது பக்கமாக தூங்கும் போது பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறதாம்.
ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்

ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்


அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்

இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 

அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர்.

மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
உறவுகள் சிறக்க.................

உறவுகள் சிறக்க.................


நம் வேலை, குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், அந்த உறவுகள் சிறக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும், இந்த உறவுகளின் அடிப்படை என்னவென்பதையும் இக்கட்டுரையில் படித்து தெளிவுகொள்வோம்.

உங்கள் வாழ்க்கையில் உறவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, உங்கள் வாழ்க்கைத் தரத்தை உறவுகள்தாம் நிர்ணயிக்கின்றன என்றே நினைக்கத் தோன்றும். உங்கள் எல்லா உறவுகளுக்கும் ஒரே அடிப்படைதான். 
உங்களுக்கு ஏதோ ஒரு தேவை இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். 

உங்களில் சிலர், “இல்லையில்லை, நான் என் உறவுகளுக்கு எல்லாநிலைகளிலும் கொடுக்கும் நிலையில்தான் இருக்கிறேனே தவிர, அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை” என்று சொல்வீர்கள். 

பெற்றுக்கொள்வது என்பது எப்படி தேவையின் அடிப்படையில் நிகழ்கிறதோ, அதேபோல நீங்கள் கொடுப்பதும்கூட தேவையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. யாருக்காவது எதையாவது கொடுத்தாக வேண்டும் என்பது உங்களுக்கு இருக்கும் ஒரு தேவை.

உறவுகளை நேரடியாகவும் நேர்மையாகவும் கையாளுங்கள்!

எனவே மனிதர்கள் உறவுகளை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் இருப்பது அவர்களுடைய தேவைகள்தான், அவை உடலின் தேவைகள், மனதின் தேவைகள் என்று பலவிதமாக உள்ளன, அதற்கேற்ப உறவுகளும் பலவிதம். ஒரு தேவை கருதி நீங்கள் உருவாக்கிக்கொள்கிற உறவு, அந்தத் தேவை நிறைவேறாதபோது சீர்குலைந்துபோகிறது. அதனால் உறவுகளைப் பொறுத்தவரை மூடிமறைக்காமல் சுற்றிவளைக்காமல் நேரடியாகவும் நேர்மையாகவும் கையாள்வது அவசியம்.

ஆண் பெண் உறவுகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்து போகிறது. எந்த அளவுக்கென்றால், நீங்கள் கடவுளையே கல்யாணம் செய்துகொண்டால்கூட, கொஞ்ச காலத்தில் அவர் உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் குறைபட்டுக்கொள்வீர்கள்.

மனிதன் தனக்குள் முழுமையை உணராதபோது அந்தக் குறையை உறவுகள் மூலம் இட்டு நிரப்ப முயற்சிக்கிறான். தனக்குள் இருக்கும் எதிர்பார்ப்புகள் அந்த உறவின் மூலம் நிறைவேறாதபோது ஏமாந்து போனதாய் நினைத்துத் தவிக்கிறான். உண்மையில் உங்கள் வாழ்க்கை தன்னளவிலேயே முழுமையானதுதான். அதனை உணராமல் நீங்கள் உருவாக்கிக்கொள்கிற எதிர்பார்ப்புகள் உங்களை எங்கெங்கோ எதையெதையோ தேடவிட்டு, ஏமாற்றத்தில் வாடவைக்கிறது.

கடவுளையே மணம் முடித்தால் கூட உங்கள் குறை தீராது!

மனிதர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளின் அளவைப் பாருங்கள். அதை நிறைவேற்றுவது இன்னொரு மனிதருக்கு சாத்தியமே இல்லை. அதுவும் ஆண் பெண் உறவுகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்து போகிறது. எந்த அளவுக்கென்றால், நீங்கள் கடவுளையே கல்யாணம் செய்துகொண்டால்கூட, கொஞ்ச காலத்தில் அவர் உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் குறைபட்டுக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு நிறைவேற்றவே முடியாத எதிர்பார்ப்புகள் மனிதர்களுக்கு உண்டு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு எது மூலமாகத் திகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அற்புதமான உறவை உங்களால் உருவாக்க முடியும். ஓர் உறவைத் தொடங்குகிறபோது எதிர்பார்ப்புகள் பொதுவானவையாக இருக்கும். ஆனால் வாழ்வின் வெவ்வேறு படிநிலைகளில் எதிர்பார்ப்புகள் வேறுபடக்கூடும். இந்த எதிர்பார்ப்புகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதால், அவை ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இரண்டு பேருக்கிடையே உறவு உருவாகிறதென்றால், ஒரு மனிதர் தன் வாழ்வு முழுக்க ஒரே எதிர்பார்ப்பை கொண்டிருக்கக்கூடும். இன்னொருவருக்கோ வாழ்க்கை குறித்த புரிதலும் அனுபவமும் மாறிக்கொண்டே இருப்பதால், எதிர்பார்ப்புகளும் மாறக்கூடும். இத்தகைய உறவுகள் பெரும் மோதலை ஏற்படுத்தும்.

இந்த உலகில் வேறெங்கும் நடக்கிற மோதல்களைவிடவும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடக்கிற மோதல்கள்தான் அதிகம். ஒரே விஷயம் என்னவென்றால், யாரும் வீட்டுக்குள் குண்டுகள் வீசிக்கொள்வதில்லை. அதனால் இம்மோதல்கள் உங்களுக்குப் பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் மௌன யுத்தங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்குக் காரணம், இரண்டு மனிதர்களுக்கிடையே எதிர்பார்ப்புகள் மாறும்போது அவை சீரான வேகத்தில் ஒரேவிதமாக மாறுவதில்லை.

உங்கள் மகிழ்ச்சிக்கு இன்னொருவரை பயன்படுத்துகிறீர்கள்!

உறவுகளை எப்படி அதிபுத்திசாலித்தனமாக நிர்வகிப்பது, சமாளிக்க எப்படியெல்லாம் சர்க்கஸ் செய்வது என்றரீதியில் நீங்கள் பார்க்கத் துவங்கினால், அவற்றை 100 சதவிகிதம் அனுமானித்து அழகான ஓர் உறவை மேற்கொள்வது சாத்தியமே இல்லை. மற்றவர்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்டுபிடித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முயன்றுகொண்டு இருந்தால் உங்கள் வாழ்க்கை தான் சிதறிப்போகும். இது முடிவே இல்லாத சர்க்கஸாகிவிடும். இதனை ஓர் அளவுக்குச் செய்ய வேண்டுமே தவிர, மிகச் சிறந்த உறவுக்கு இதுவே அடிப்படையல்ல.

அடிப்படையில் நீங்கள் ஏன் உறவை நாடுகிறீர்கள்? மகிழ்ச்சியும் ஆனந்தமும் வேண்டும் என்பதற்காகத்தான். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், உங்கள் மகிழ்ச்சிக்காக இன்னொரு மனிதரை பயன்படுத்த முயல்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? வேறு யாராவது உங்கள் மகிழ்ச்சியை kick-start செய்யவேண்டும், உங்கள் மகிழ்ச்சி இன்னும் self-start ஆகவில்லை என்பதுதான் அர்த்தம்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள், பிறரிடம் தேடாதீர்கள்!

மகிழ்ச்சி உங்கள் இயல்பாக இருக்குமானால், அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் உறவுகள் தேவைப்படுமே தவிர, மகிழ்ச்சியை பிறரிடமிருந்து பிழிந்தெடுப்பதற்கல்ல. 

உறவுகளை உருவாக்கி இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முயல்வது சிறிது காலத்திற்குப் பிறகு, வலியை மட்டுமே தரக்கூடிய உறவாக மாறிவிடும். ஆனால் நீங்களே மகிழ்ச்சிமயமானவராக இருந்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக உறவுகளை உருவாக்கினால், யாரும் உங்களைப் பற்றி புகார் சொல்லப்போவதில்லை. 

ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறீர்களே தவிர, இன்னொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முயல்வதில்லை. உங்கள் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியைத் தேடுகிற பயணமாக இல்லாமல், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால் உங்கள் உறவுகள் அவற்றின் இயல்பிலேயே அற்புதமாக இருக்கும்.

உறவுகள் உடல், மனம், உணர்வு, சக்தி ஆகியவற்றின் நிலைகளில் இருக்கமுடியும். உங்கள் உடல் ஓர் உறவைத் தேடினால், அதனை பாலுணர்வு என்கிறோம். உங்கள் மனது ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை சிந்தனையளவில் பகிர்ந்துகொள்ள ஒரு துணை என்கிறோம். உங்கள் உணர்வுகள் ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை அன்பு என்கிறோம். உங்கள் சக்திநிலை ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை யோகா என்கிறோம்.

இன்னொருவரோடு எப்படி இரண்டறக் கலப்பது?

இந்த முயற்சிகள் எல்லாமே ஏதோ ஒன்றோடு இரண்டறக் கலந்துவிடுவதற்காகத்தான். ஒருவிதத்தில் நீங்கள் தற்போது இருக்கும் நிலை உங்களுக்குப் போதுமானதாக இல்லை. இன்னொருவரோடு எப்படி இரண்டறக் கலப்பது? உடலளவில் முயன்றிருக்கிறீர்கள். அது நிகழ்வது போல் தோன்றுகிறது, ஆனால் பிரிய நேரிடுகிறது. 

மனதளவில் முயன்றிருக்கிறீர்கள், பலமுறை சிந்தனையில் சேர்ந்துவிட்டதாகவே நினைத்திருக்கிறீர்கள். ஆனால் இரண்டு மனங்கள் ஒருபோதும் ஒன்றாக முடியாது. உணர்வு நிலையில் இரண்டு பேர் அன்பில் ஒன்றாக சங்கமித்துவிட்டதாகப் பலமுறை நினைத்தீர்கள், ஆனால் பிரிவினைக் கோடுகள் மிக எளிதாகத் தோன்றிவிடுகின்றன.

இன்னொருவருடன் ஒன்று சேர்வதனால் அந்த ஏக்கம் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் அந்த ஏக்கம் மென்மேலும் வளரக்கூடிய ஏக்கம். உடல் அளவிலோ, மன அளவிலோ, உணர்வுகளின் அளவிலோ அதை நிறைவேற்ற முடியாது. இவை மூன்றையும் நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். 

அது ஒரு நெருக்கமான அனுபவத்தை ஏற்படுத்துகிறதே தவிர சங்கமிக்கச் செய்வதில்லை. அந்த ஏக்கம் நீடிக்கிறது. அந்த ஏக்கமே சிலருக்கு இனிக்கிறது. அந்த ஏக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆனாலும் அந்த ஏக்கம் ஏதோ ஒரு நாள் நிறைவேற வேண்டும்.

உங்கள் வாழ்வில் சிலசமயம் இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மிக ஆனந்தமாகவோ, அன்பாகவோ, பரவசமாகவோ, நீங்கள் உணர்ந்திருந்து உங்கள் சக்திநிலை பொங்கித் ததும்பும்போது உங்கள் தன்மை விரிவடைவதை உணர்வீர்கள். ‘நீங்கள்’ என்று அழைக்கப்படுவது என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

உறவுகள் என்றால் என்ன?

“இது நான். இது நான் இல்லை” என்று நீங்கள் உணர்வதற்கு எது அடிப்படை? உங்கள் உணர்ச்சிதான் அடிப்படை. உங்கள் உணர்ச்சி வளையத்துக்கு உட்பட்டவை அனைத்தையும், நீங்கள் என்று உணர்கிறீர்கள். உங்கள் உணர்ச்சி வளையத்துக்கு வெளியே இருப்பவற்றை வேறு என்று உணர்கிறீர்கள். 

உங்களிடமிருந்து அன்னியமான ஒன்று என்பது, எப்போதுமே நரகமாகத்தான் இருக்கமுடியும். நரகத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பாத காரணத்தால், மனிதகுலத்தின் சிறு பகுதியையேனும் உங்களில் ஒரு பாகமாக உணர விரும்புகிறீர்கள். 

இன்னொருவரையோ இன்னொன்றையோ உங்களின் ஒரு பாகமாக உணர விரும்புகிற ஏக்கத்துக்குத்தான் உறவுகள் என்று பெயர். உங்கள் உணர்ச்சி வளையத்திற்குள் இருப்பதையெல்லாம் நீங்கள் என்று கருதுகிறீர்கள். 

அதிலிருந்து வேறுபட்டதாக நீங்கள் உணர்பவை அனைத்தும் நரகம் என்றால், உங்களில் ஒரு பாகமாக உணர்பவை சொர்க்கமாகத்தான் உங்களுக்கு இருக்கவேண்டும். பிரபஞ்சத்தையே உங்களுக்குள் ஒரு பாகமாக உணர்ந்துவிட்டால் உறவுகள் தேவைப்படுமா? சொர்க்கத்தை உங்களுக்குள் உணர்வதற்கு உறவுகளை வெளியே உருவாக்குவது அவசியமா?

யோகா என்பதே இதுதான். யோகா என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள். ஓர் உறவின் பின்புலத்தில் எந்தவிதமான ஏக்கம் இருந்தாலும் சரி, நீங்கள் உடலளவில் முயன்றாலும், மன அளவில் முயன்றாலும் ஏக்கம்தான் மிஞ்சும். ஒன்றுபட்ட உணர்வை நீங்கள் அடையவே முடியாது. 

ஒருமையின் சில விநாடிகளை உணர்வீர்களே தவிர, அது நீடிக்காது. அனைத்தையும் உங்களில் ஒரு பாகமாக உணர்வீர்களேயானால், உங்கள் தன்மையே மிக வித்தியாசமானதாக இருக்கும். 

இப்போது உறவுகள் எல்லாம் அடுத்தவர்களின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக அமையும். ஏனெனில் உங்களுக்கென்று தனியாக எந்தத் தேவையும் இராது. உங்களுக்கென்று நிர்ப்பந்தங்கள் இல்லாதபோது நீங்கள் எதையுமே விழிப்புணர்வோடுதான் செய்வீர்கள். 

ஓர் உறவை உருவாக்கிக் கொள்வதற்கான நிர்பந்தம் உங்களிடம் இல்லாதுபோகும்போது விழிப்புணர்வோடுதான் செயல்படுவீர்கள். அப்போது உறவுகள் உண்மையான ஆசிர்வாதங்களாக மாறும். எதிர்பார்ப்புகள் இருக்காது. போராட்டங்கள் இருக்காது. உங்கள் உறவுகளை வரங்களாக மாற்றிக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.
காலை 7.30 மணிக்கு உறவு கொண்டால் நடப்பது என்ன!!!!!

காலை 7.30 மணிக்கு உறவு கொண்டால் நடப்பது என்ன!!!!!




காலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

காலையில் ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன் தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள். இந்த பகுதியில் 7.30 மணிக்கு உடலுறவு கொள்வதால் உண்டாகும் பல பலன்களை பற்றி விரிவாக காணலாம்.

ஆய்வு ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை தொடர்பான அமைப்பு ஒன்று உடலுறவு சம்மந்தமாக நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அந்த ஆய்வின் படி, அந்த ஆய்வில் கலந்து கொண்ட பலர் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், அவர்களுடைய மன அழுத்த அளவு குறைகிறது என்றும், இதனால் அவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது என்றும் முடிவுகள் வந்தது.

குஷியான நாள் காலையில் 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதிகளால் அந்த நாள் முழுவதும் உற்ச்சாகமாக பணியாற்ற முடிகிறது என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்தன. நெருக்கடியான வேலைகளாக மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கூட, காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால் உற்சாகம் குறையாமலும், சிரித்த முகத்துடனும் வேலை செய்ய முடிகிறதாம்.

காரணம் காலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டிரோன் அளவானது அதிகமாக இருக்கும் நேரமாகும். எனவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். மற்ற எல்லா நேரங்களையும் விட இந்த நேரத்தில் தான் ஆண்களின் டெஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறது எனவே இது தான் உடலுறவு வைத்துக்கொள்ள சரியான நேரமாகும்.

சரியான நேரம்:

இந்த காலை 7.30 மணியானது உடலுறவு வைத்துக் கொள்ள சரியான நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் தான் உடலுறவு சமிக்கைகள் எழுச்சியடைகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேரமில்லை:

காலை 7.30 மணியானது நான் உடற்பயிற்சி செய்யும் நேரம், நான் சமையல் செய்யும் நேரம் என்று எல்லாம் நீங்கள் கூறலாம். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அனைத்து வேலைகளையும் மிகவும் திறமையுடன், முன்பை விட மிக அதிக கவனத்துடன் செய்ய முடியும் என்பது முற்றிலும் உண்மையானதாகும்.

உடற்பயிற்சிக்கு பதிலாக நீங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தை உடலுறவு ஒதுக்கலாம என கேட்கலாம். நிச்சயமாக இந்த காலை 7.30 மணியை நீங்கள் உடலுறவுக்காக ஒதுக்கலாம். ஏனெனில் உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது. அதுமட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றால் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.

பட்டம் கிடைக்கும்:

ஒரு ஆண் என்ன தான் வெளியில் புலி, சிங்கமாகவே இருந்தாலும் கூட, தன் மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது தான் கடினம். நீங்கள் உங்களது மனைவியுடன் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.

ஆரோக்கியம்:

அதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் .அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள். காலையில் உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும். காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.

எத்தனை முறை ஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலை உள்ளது. இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவர்களால் தம்பத்தியத்தில் ஈடுபட முடியதில்லை. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் அதிகாலையில் தம்பத்தியத்தை வைத்துகொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மனஅழுத்தம் வராது.
கணவன் – மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா?

கணவன் – மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா?


கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகளாக இருந்தால் அது சரியாக வரும். பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது.

கணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப்படுத்தும் என்று சிலர் சொல்லுகின்றனர். 

அதாவது அவர்கள் சண்டையிடும் போது அவர்களின் மனதில் உள்ளவற்றை கொட்டி விடுவதால் அவர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு எளிதில் வந்து விட முடியும் என்பது அவர்களின் வாதம். 

சண்டை போடாமல் மனதிற்குள்ளேயே வைத்து இருந்தால் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்பது அவர்களின் கருத்து. சிறு சிறு சண்டைகளாக இருந்தால் அது சரியாக வரும். 

பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது. மாறாக உறவை பெரிதும் பலவீனப்படுத்தி விடும் என்பது தான் உண்மை.

என்னைப் பொறுத்த மட்டில், கணவன் மனைவி இடையே சண்டையே வரக் கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? ரொம்ப எளிது. கணவனுக்கு மனைவிக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்று நன்றாகத் தெரியும். 

அதே போல் தான் மனைவிக்கும் கணவனுக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்பது நன்றாகவேத் தெரியும். கணவன் மனைவிக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். 

பிடிக்காதவற்றை செய்யவே கூடாது. அதே போல் தான் மனைவியும் கணவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். பிடிக்காதவைகளை செய்யக் கூடாது.

பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக் கூடாது.

இது பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றினாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல என்பது நிஜம். 

எந்த ஒரு வெற்றிக்கும் அல்லது சந்தோஷத்திற்கும் நாம் உழைத்தாக வேண்டும் அல்லவா? உங்களுக்கு உண்மையில் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு உயிருக்குயிராய் வாழ வேண்டும் என்று நினைத்தால் அதற்காக கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும்.

பிரச்சினை என்னவென்றால் எல்லோரும் தாங்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு மட்டும் தன் துணை எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேராசைப்படுவது தான்.

அப்படி கொஞ்சம் விட்டுக் கொடுத்து மட்டும் வாழப்பழகி விட்டால் வாழ்க்கை சொர்க்கமாகிப் போகும் என்பதில் எந்த ஐயமுமில்லை. 

அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. எப்படிபட்ட துன்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவர்களால் அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். 

எந்த நிலையிலும் அவர்களால் சந்தோஷமாக வாழ முடியும். அன்று தான் கல்யாணம் ஆனது போல் அன்னியோன்யமாக என்றும் வாழ முடியும்.
ஓவியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி : முக்கிய விபரம் உள்ளே

ஓவியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி : முக்கிய விபரம் உள்ளே


ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் வசமாக்கினார். அவருக்கு அப்படி ஒரு கிரேஸ் உருவானது.

ஆனால் அவரை காணாமல் தற்போது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதிலும் இவர் விசயத்தில் காயத்திரி ரகுராம் பல சோதனைகளை ரசிகர்களால் சந்தித்தார். சமூக வலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஓவியாவின் பிறந்த நாள் நாளை வரவுள்ளது. இதனால் காயத்திரி தன் ட்விட்டரில் ஓவியாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அவரின் ராசி ரிஷபம்.

அவரின் ஓவியா ஆர்மிக்காக ஸ்பெஷலாக செய்யுங்கள். வீடியோக்களால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். பிக்பாஸ் நிகழ்சசியின் ராக்ஸ்டார் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள இதை கிளிக் பண்ணி லைக் செய்து இணைந்திருங்கள் 

காதலிப்பது போல் நடிக்க இவ்வளவு சம்பளமா?

காதலிப்பது போல் நடிக்க இவ்வளவு சம்பளமா?


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. 

பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த நிகழ்ச்சியும் அவரும் உண்மையான குணமும் உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய மார்க்கெட் வேற லெவலிற்கு சென்றது. கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவரை போல தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவருக்கும் அபர்ணதியை மிகவும் பிடித்தது, ஆர்யாவும் நெருக்கமாக பழகி பின்னர் அபர்ணதியை வேண்டாம் என கூறி வெளியேற்றினார். இதனால் அபர்ணதியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு மாடலிங் சார்ந்த வேலைகள் குவியத் தொடங்கியுள்ளன. 

பிரபல நகை கடை நிர்வாகம் ஒன்று இவரை வைத்து விளம்பரம் எடுக்க போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இந்த விளம்பரத்திற்காக இவருக்கு சம்பளம் கோடி கணக்கில் பேசப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் எப்படி நிகழ்ச்சியில் ஆர்யாவை காதலிப்பது போல் நடித்தாரோ அதே போல் இந்த விளம்பரத்திலும் நடிக்க வேண்டி கிண்டலாக கேட்டுள்ளார்கள்.

இதே போல் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அபர்ணதியை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனால் அபர்ணதி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம், இந்த தகவலால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கையால் அக்காவுக்கு நேர்ந்த கொடூரம் : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

தங்கையால் அக்காவுக்கு நேர்ந்த கொடூரம் : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!


Tamil Gossip News :அக்காவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் தங்கை மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூபாலன் (28). இவர் மனைவி நதியா (24).பூபாலன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சொந்த வீடு கட்டி குடியேறியுள்ளார்.

மேலும் பனியன் நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்து தொழிலாளர்களை வைத்து பல்வேறு வேலைகளை செய்து வருவதால் வசதியாக வாழ்ந்து வந்தார்.

பூபாலனுடன் அவருடைய தம்பிகளும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர். அதே பகுதியில் நதியாவின் தங்கையானா சித்தி மகள் ரேகாவும் (22) வசித்து வந்தார். கடந்த 14-ம் திகதி காலையில் பூபாலன், அவருடைய தம்பிகளும் வேலைக்கு சென்று விட்டனர்.

இரவு பூபாலனின் தம்பி வீட்டுக்கு வந்த போது வீட்டில் நதியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நதியா கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அந்த வீட்டிற்கு நதியாவின் சித்தி மகள் ரேகா வந்தது தெரியவந்தது.பின்னர் பொலிசார் ரேகாவிடம் விசாரித்த போது நதியாவை, தனது கள்ளக்காதலன் நாகராஜ் மூலம் கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ரேகா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். நாகராஜூடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு தெரிந்து என் கணவர் என்னை பிரிந்துவிட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் என் அக்கா நதியா விட்டருகே குடி வந்தேன்.

அப்போது தான் அவர் கணவர் பூபாலன் வசதியாக இருப்பதை அறிந்து கொண்டேன். இதையடுத்து பூபாலன் நட்பை நெருக்கமாக்கி கொண்டு என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

இருப்பினும் பூபாலனின் மனைவி நதியா உயிரோடு இருந்தால், தன்னால் பூபாலனுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்று உணர்ந்து கள்ளக்காதலன் நாகராஜூடன் சேர்ந்து நதியாவை கொல்ல முடிவு செய்தேன்.

பின்னர் அவர் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த நதியாவின் குழந்தையை வெளியில் எடுத்து கொண்டு வந்தேன். வாசலில் இருந்த நாகராஜ் உள்ளே சென்று நதியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார் என கூறியுள்ளார்.

இதன்காரணமாக ரேகா மற்றும் நாகராஜை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வீடியோ இதோ:

Five spill gates of Udawalawa Reservoir opened- Tamil News

Five spill gates of Udawalawa Reservoir opened- Tamil News


Five spill gates of the Udawalawa Reservoir were opened today because of the heavy showers experienced in catchment areas, the Disaster Management Centre (DMC) said.

It requested the people living in the downstream to be vigilant of rising water levels.

Accordingly, the DMC said people living in the Grama Niladhari Divisions of Ambalantota North and South, Vanduruppa, Thavaluvila, Bolana South and North, Poliyar Estate, Ridiyagama, Walawe Vaththa East and West and Hadawinna to be vigilant of rising water levels.
Court rejects Wele Suda's wife request- Today News

Court rejects Wele Suda's wife request- Today News


Senior State Counsel Thusith Mudalige yesterday objected to the State releasing jewellery of sentimental value to notorious drug dealer Wele Suda’s wife, who the Attorney General had indicted on 57 charges for laundering money to the tune of Rs.190 million in 2006.

Gampola Vidanage Samantha Kumara alias Wele Suda’s wife had filed a motion in the High Court requesting for the release of certain pieces of jewellery that were recovered from her as it had a sentimental value.

The applicant had further claimed a property at Karagampitya, Dehiwela and a BMW vehicle that belonged to her that was taken into police custody to be used as productions for the case.

Yesterday when the case was taken up for inquiry prosecution Counsel Thusith Mudalige objected to the release of those assets to the owner as they were purchased funds earned illegally and furthermore were now productions used in the case.

Hence, the Court, overruling the request, fixed the trial for July 18.
ஒன்ராறியோவில் லிபரலுக்கு கடும் பாதிப்பு!

ஒன்ராறியோவில் லிபரலுக்கு கடும் பாதிப்பு!


ஒன்ராறியோ மாகாண லிபரல் அரசு கடந்த காலங்களில் தனது பாதீட்டில் பல மில்லியன் டொலர்களை குறைத்து கணக்கிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு திணைக்களத்தின் நாயகம் போனி லைசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பற்றாக்குறைகளை மிகவும் பாரிய அளவில் குறைத்து தனது நிதி அறிககைகளில் லிபரல் அரசர்ங்கம் மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் ஒன்ராறியோவின் வரவு செலவுத் திடடத்தில் காணப்படும் துண்டுவிழும் தொகையானது, உண்மையான பற்றாக்குறையினை விடவும் குறைவாக காணப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் ஒன்ராறியோ மாகாணத்துக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்ராறியோ மாகாண தேர்தல் ஆதரவு நிலை தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்கள் லிபரல் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகின்றமையை காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Zurich sees spike in naturalisation requests : Swiss citizenship

Zurich sees spike in naturalisation requests : Swiss citizenship


The city of Zurich says it has seen a much higher demand for Swiss citizenship requests after the administration sent a – in some quarters controversial - letter to all eligible foreigners urging them to become citizens before criteria became stricter.

Between May 2017 and March 2018, there were around 2,900 more requests. This is 65% more than the same period the previous year. But it is not possible to say yet if many will result in citizenship, as they are still being processed, a city of Zurich statementexternal link said.

City mayor Corine Mauch told Swiss public radio SRFexternal link that officials had been surprised by just how large the impact had been - the letter, which was sent out in spring 2017 to 40,000 people, was meant as a gesture of appreciation.

The conservative right Swiss People’s Party has once again criticised the letter as legally questionable. The city of Zurich’s government is majority left-leaning.

Every third resident of Zurich currently holds a foreign passport, compared to a quarter of the population nationwide. From January 1, 2018, the citizenship law changed.

The minimum period of residency for standard naturalisations fell from 12 years to 10, but applicants now need to prove language proficiency and stay in one canton for a set period of time. Only holders of the long-term C residency permit are allowed to apply.
சுவிஸ் குடியுரிமைக்கான கோரிக்கைகள் உச்சத்தை தொட்டது!!

சுவிஸ் குடியுரிமைக்கான கோரிக்கைகள் உச்சத்தை தொட்டது!!


சுவிட்சர்லாந்தின் குடியுரிமை சட்ட விதிகள் கடினமாக்கப்படும் முன், குடியுரிமையை விரைந்து பெருவதற்கு அனைத்து தகுதி வாய்ந்த வெளிநாட்டினர்களுக்கும் கடிதம் அனுப்பியதன் பின் பெறப்பட்ட கோரிக்கைகள் மிக அதிகம் என சூரிச் நகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017 மே மற்றும் 2018 மார்ச் மாதங்களுக்கு இடையில் 2900 கோரிக்கைகள் மெலதிகமாக வந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 65% அதிகம் எனவும், பல கோரிக்கைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் சூரிச் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அபரிவிதமான கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாவும் நகர மேயர் Corine Mauch தெரிவித்தார்.

குடியுரிமை பெற, நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளில் இருந்து 10 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Zurich sees spike in naturalisation requests : Swiss citizenship

சரிந்து விழுந்தது காரைநகர் கருங்காலி முருகன் தேர்!!

சரிந்து விழுந்தது காரைநகர் கருங்காலி முருகன் தேர்!!

காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது. வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது. இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்து தீவிரவாத RSS யோகேஸ்வரன், புலிசாய கட்சிகளுக்கும் தொடர்பு!

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்து தீவிரவாத RSS யோகேஸ்வரன், புலிசாய கட்சிகளுக்கும் தொடர்பு!

திருகோணமலை ஆசிரியர்களின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக தொலைபேசி ஊடாக உரையாடிய அவர், மேற்படி பிரச்சினை எமது அடிப்படை உரிமை ஆகும்.இதனை விட்டு விட முடியாது.தேசிய பிரச்சினையாக மாற்றாமல் எமக்குள் நாமே தீர்வினை பெறுவதற்காக கடந்த 3 நாட்களாக இரா சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தரப்புகளிற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன். இதுவரை எவரும் எம்முடன் கதைக்க முன்வரவில்லை, பதிலளிக்கவுமில்லை.

இதனால் தான் எமது தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

எனினும் கடந்த காலங்களில் எம்முடன் அரசியல் விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முரண்பட்டதற்காக தான் தற்போது பழிவாங்குவதாகவே இந்தசெயற்பாட்டை நான் பார்க்கின்றேன். 

இந்த ஹபாயா பிரச்சினைக்கு பின்னால் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ் தேசிய முற்போக்கு முன்னணி போன்ற புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை ஜம்மியதுல் உலமா சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.தற்காலிக தீர்வொன்று எட்டப்பட்டுள்ளது(என்ன தீர்வு என்று சொல்லவில்லை).ஆனால் என்னால் ஆன சகல தரப்புடனும் இவ்விடயம் தொடர்பில் கதைத்துள்ளேன் என கூறினார்.
சுயமரியாதையும், தொழில் மரியாதையும் - படிப்பிணைக்குரிய குட்டிக்கதை!

சுயமரியாதையும், தொழில் மரியாதையும் - படிப்பிணைக்குரிய குட்டிக்கதை!

செருப்புக் கடைக்கு ஒரு பெண் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று அழைத்து , செருப்பை எடுத்துக்காட்டினார்.. அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.அவருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார்.. பணியாளர் விடவில்லை...

அவரே அவருக்கு உதவினார். அவர் பெருந்தன்மையாக சொன்னார் "அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது"

பணியாளர் சிரித்தபடி சொன்னார்

"இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என் சுய மரியாதை!

கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன். இது என் தொழில் மரியாதை.
இலங்கை, சிலாபம் மீனவனுக்கு அடித்த அதிஷ்டம்!

இலங்கை, சிலாபம் மீனவனுக்கு அடித்த அதிஷ்டம்!

சிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில் இவ்வளவு பாரிய அளவு மீன்கள் கிடைத்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது. கடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஒன்றுகூடுவோம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஒன்றுகூடுவோம்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கக்கூடிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் கடல் (மெரினா) உழைப்பாளர் சிலை அருகே மாபெரும் தமிழர் ஒன்றுகூடல் வரும் ஞாயிறு (29.05.18) மாலை 2மணியளவில் நடைபெறும் என்பதனை உறுதிபடுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

எனவே தமிழரின் உரிமையான காவிரியை மீட்க விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினர குடும்பம் குடும்பமாக வரும் ஞாயிறு அன்று சென்னை தமிழர் கடல் உழைப்பாளர் சிலையருகில் ஒன்று கூட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக மே17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது.

நம் உரிமையை மீட்க லட்சலட்சமாய் சாதி,மதம் கட்சி தாண்டி ஒன்றுகூடுவோம் வாருங்கள் தமிழர்களே.
”திருகோணமலை அபாயாவுக்கெதிரான போராட்டம்” சட்டம் சொல்வதென்ன? சட்டத்தரணி சறூக்

”திருகோணமலை அபாயாவுக்கெதிரான போராட்டம்” சட்டம் சொல்வதென்ன? சட்டத்தரணி சறூக்

மத்திய அரசின் வளங்களை நேரடியாக பெறும் திருமலையிலிருக்கும் 6 தேசிய பாடசாலைகளில் ஒன்றான ஸ்ரீ சண்முகா ஹிந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தின் அண்மைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கைச் சட்டவரையறைகளுக்குட்பட்டவைகளா? எனப்பார்ப்போம் .

ஆரம்பத்தில் அதிபரின் வற்புறுத்தலில் 3 முஸ்லிம் ஆசிரியைகள் தமது உடையான ஹபாயாவை அணிவதைத் தவிர்த்து சாரி அணிந்து பணிபுரிந்துள்ளனர். புதிதாக இடமாற்றம் பெற்ற 5 முஸ்லிம் ஆசிரியைகளில் ஒருவர் மாத்திரம்(சட்டம் தெரிந்தவர்) சாரி அணியும் படியான அதிபரின் வற்புறுத்தலுக்கு இணங்காத போது பாடசாலை நிர்வாகத்தால் அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஒதுக்கப்பட்டுள்ளனர். 

இதன் உச்சக்கட்டமாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பழைய மாணவிகள் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் பாடசாலைக்கு முன்னால் நடத்தியிருந்தனர் . அதன் பின்னரான கல்வி உத்தியோகத்தினர்களுடனான பேச்சுவார்த்தையில் கல்வியமைச்சின் முடிவு வரும் வரை தற்காலிக இடமாற்றத்திற்கு சமூகத்தின் சுமூக வாழ்வு (இயலாமைக்கு மறுபெயர்)க்காக விருப்பமின்றி முஸ்லிம் ஆசிரியைகளால் ஒத்துக்கொள்ளப்பட்டது. 

ஆனால் மறுநாள் "பாடசாலையின் நிர்வாகத்தினருடன் முரண்பட்டதால் தற்காலிக இடமாற்றத்திற்கு நாம் ஒத்துக்கொள்கிறோம்" என்ற வட்டாரக்கல்வி அதிகாரியின் கடிதத்திற்கு ஒப்பமிடமுடியாது என முஸ்லிம் ஆசிரியைகள் மறுத்துள்ளனர். இவைகளே இதுவரை (28.04.2018) கிடைத்த தகவல்கள்

இனி சட்ட நிலைமையைப்பார்ப்போம்.

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) (2)ன் படி சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள் என்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு எல்லோரும் உரித்துடையவர்கள் என்றும் இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எவரும் ஓரங்கட்டப்படலாகாது. என்றும் உறுப்புரை14(1) (உ), (ஊ) படி ஒவ்வொரு பிரஜையும் தனது மதத்தை, நம்பிக்கையை, கலாச்சாரத்தை (ஹபாயா உடை) பின்பற்றும் மேன்படுத்தவும் உரித்துடையவர் எனவும் கல்விச்சட்டத்தில் ஆசிரியைகள் சீரிய உடை அணிய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. 

எனவே பகிரங்க அலுவளர்களான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஹபாயா அணிவதற்கு மறுப்புத்தெரிவித்தால் அவர்களுக்கு எதிராக மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கிடமுடியும். மேலும் தண்டனைச்சட்டக்கோவை பிரிவு 183 படி பகிரங்க அலுவலர் தனது சேவையை செய்ய தடை (அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்) விதித்தால் விதிப்பவருக்கு 3 மாதங்கள் வரை மறியல் தண்டனையும், 184 படி ஒரு பகிரங்க அலுவளருக்கு பணிபுரிய உதவி செய்யும் பொறுப்புடையவர்(அதிபர்) அதனைச்செய்யாது விட்டால் குறித்த நபருக்கு 1 மாதம் மறியல் தண்டணையை நீதவானிடமிருந்து பெற்றுத்தரமுடியும்.

எனவே முஸ்லிம் ஆசிரியைகளை விரட்டியவர்கள், Staff அறையில் அடைத்து வைத்தவர்கள் அனைவருக்கும் மேற்கூறப்பட்ட தண்டனையை முஸ்லிம் ஆசிரியைகள் ஒத்துழைத்தால் வாங்கிக்கொடுக்கலாம். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் அரச சேவையாளர்கள் கலாச்சாரம்? பேசும் கண்ணாடி போட்ட பெண்மணி ஒரு கிராம உத்தியோகத்தர் என்பது தெரிய வருகிறது. "வேலை செய்ய வேண்டிய நேரத்தில் என்ன ஆர்ப்பாட்டம் "என அவருக்கெதிராகவும் வழக்கிடலாம். ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தால் அத்தியாவசிய சேவையாகிய ஆசிரிய சேவை தொடர்பாகவும் வழக்கிடலாம். மேலும் முஸ்லிம் ஆசிரியைகளின் கணவர்களும் அத்துமீறி பாடசாலைக்குள் பிரவேசித்தால் அவர்களுக்கெதிராகவும் வழக்கிடலாம். எனவே ஸ்ரீ சன்முகா ஹிந்து மகளிர் கல்லூரியின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டவரையறை க்குட்பட்டவையல்ல. பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகள் இறைவனுக்கு மாத்திரம் பயந்தவர்களாக எம்மை தொடர்பு கொண்டால் உதவ தயாராகவுள்ளேன்.

சட்டத்தரணி சறூக் கொழும்பு

\
கத்தார் வாழ் இலங்கையர்கள் கவனத்திற்கு! இலங்கை தூதரகம் நாளையும், நாளை மறுதினமும் மூடப்பட்டிருக்கும்

கத்தார் வாழ் இலங்கையர்கள் கவனத்திற்கு! இலங்கை தூதரகம் நாளையும், நாளை மறுதினமும் மூடப்பட்டிருக்கும்

கத்தாரில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு, கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஒரு முக்கியமன அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது எதிர்வரும் ஏப்ரால் 29 மற்றும் 30ம் திகதிகளில் பொசன் தினத்தை முன்னிட்டு கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயம் மூடப்பட்டிருக்கும். ஆகவே கத்தாரில் அமையப்பெற்றுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் தங்களது தேவைகள் நிமித்தம் செல்பவர்கள், இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 



     மதுபான லைசன்ஸ் பெற்ற, ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன

மதுபான லைசன்ஸ் பெற்ற, ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன

ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது போதைப் பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பெண்கள் மதுபானம் விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வதற்கும் சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் முயற்சித்தபோது ஜனாதிபதி கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் சொந்தமாக மதுபான விற்பனை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த அனுமதிப்பத்திரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் படுகொலை விசாரணைக்கு ஆணைகுழுவை நியமியுங்கள் - மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

ஊடகவியலாளர்கள் படுகொலை விசாரணைக்கு ஆணைகுழுவை நியமியுங்கள் - மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு விசேட ஆணைகுழுவை நியமிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்ட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து கையெழுத்து இட்டு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு விசேட சுயாதீன ஆணைகுழுவை நியமிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்கள் குறித்து இன்று வரை கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளுக்கு இன்று வரை என்ன நடந்துள்ளது என்பது தெரியாதுள்ளது.

குறிப்பாக வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளரது விசாரணைகளை கூட இதுவரையில் நல்லாட்சி அரசு ஆரம்பிக்கவில்லை.

கடந்த 13 வருடங்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வில்லை. அதேபோன்று இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைகளை கூட நல்லாட்சி அரசு ஆரம்பிக்கவில்லை இந்நிலையில் தொடர்ந்தும் தமிழ் ஊடகத்துறை இலங்கை அரசை நம்பி பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாறி மாறி வரும் அரசுகள் தொடர்ந்தும் தமிழ் ஊடகத்துறையை ஏமாற்றியே வந்துள்ளது.



காலத்திற்கு காலம் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதெல்லாம் அப்போது இருந்த அரசுகள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்காது உதாசீனம் செய்தே வந்துள்ளன.

இது குறித்த படுகொலைகளுக்கு பின்னால் அரசின் கைகள் இருக்கின்றது என்ற சந்தேகத்தை ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசும் குறித்த விடயத்தில் அக்கறை காட்டாது இழுத்தடிப்புச் செய்வது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு நாங்கள் வரவேண்டி உள்ளது. எத்தனையோ பல போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அதனை ஒரு பொறுட்டாக இலங்கை அரசு எடுத்ததாக தெரியவில்லை.
இலங்கையில் இனி தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்காது. என்ற உண்மையை உலகிற்கு சொல்லவேண்டிய காலம் உருவாகியுள்ளது.

எனவே கடைசியாக ஒரு முறை தமிழ் ஊடகத்துறையினர் நல்லாட்சி அரசின் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் இந்த நாட்டின் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் வேண்கோள் விடுக்கின்றோம்.

இந்த நாட்டில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு விசேட சுயாதீன ஆணைகுழு ஒன்றை நியமித்து விசாரணைகளை ஆரம்பியுங்கள். இந்த நாட்டில் நீதியை பெற்றுக்கொள்ளும் உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்துங்கள்.

இந்த நாட்டில் தொடர்ந்தும் எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அது தமிழ் ஊடகவியலாளர்கள் மீது யார் வேண்டுமானாலும் எப்போதும் தாக்குதல் நடத்தலாம் படுகொலை செய்யலாம் அதற்கு இந்த நாட்டில் தண்டனை வழங்கப்படாது என்பதனை முன் உதாரணமாக இலங்கை அரசு பதிவு செய்துள்ளதாகவே கருதப்படும்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரசு மீதும் இலங்கை நீதித்துறை மீதும் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. ஒரு நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறைக்கே நீதியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டி உள்ளது.


நாங்கள் நீதி விசாரணைகளை கோரும்போது நீங்கள் கடந்த காலங்களில் நடந்த வெள்ளைவேன் கடத்தல், கொலைகாரர்களை சொல்லி இப்போது அப்படி இல்லை என்று பயமுறுத்துகிறீர்கள்.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து நல்லதொரு ஆரம்பத்தை உங்களிடம் இருந்து கடைசியாக எதிர்பார்க்கின்றோம்.


தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு விசேட சுயாதீன ஆணைகுழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை வெளிக்காட்டுங்கள் குற்றவாளிகளை பாதுகாக்காதீர்கள். எங்களுக்கு நீதியை வழங்குங்கள் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன். எனவே எமக்கான நீதி இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்களின் உடலில் துப்பாக்கிச் சன்னங்களை பாய்ச்சிய போதும். குருதியில் நனைந்து கிடந்தபோதும் தமிழ் ஊடகத்துறை தொடர்ந்தும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க எழுதிக்கொண்டே இருக்கிறது. இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.



முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த கொலைகளை நல்லாட்சி அரசு இன்று வரை கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை. இந்த கொலைகளுக்கு பின்னால் மாறி மாறி வந்த அரசுகளின் கைகள் இருப்பதையே கொலைக்கான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காட்டுகிறது. கொலைகாரர்களை பாதுகாக்கின்ற அரசாக நல்லாட்சி அரசு மாறியுள்ளதா? என்ற சந்தேகம் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே நல்லாட்சி அரசு இந்த நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு முதலில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் பின்னர் சலுகைகளை வழங்கட்டும். சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் அவருடைய கொலைக் குற்றவாளிகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஆட்சியிலும் அது நடக்காது போனால் ஊடகவியலாளர்கள் தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் கதவுகளை மீண்டும் தட்டவேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டார் மாமனிதர் சிவராம்

மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டார் மாமனிதர் சிவராம்

மாமனிதர் சிவாராம் அவர்களின் 13-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மறைக்கல்வி நிலையத்தில் மாமனிதர் சிவராம் (தராக்கி) நினைவுகூரப்பட்டார்.

நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய முன்னணின் அமைப்பாளர் எனப் பலரும் கலந்துகொண்டு சிவராமை நினைவுகூர்ந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்..!!

வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்..!!

வடக்கு கிழக்கில் காணப்படும் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் சாராம்சம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
27.04.2018
செய்திக் குறிப்பு

பட்டதாரிப் பயிலுநர் தெரிவு

உச்சவயதெல்லையை 40 வரைஅதிகரிக்கவும்.
மாவட்டவிகிதசமப்படிதெரிவுவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
நாட்டில் வேலைவாய்ப்பற்றிருக்கும் 50,000 க்கும் மேற்பட்டபட்டதாரிகளில் கணிசமானதொகையினரை இரண்டுவருடப் பயிற்சியில் இணைத்துக்கொண்டு,அப்பயிற்சியின் பின்புஅவர்களுக்குஅரசில் நிரந்தரநியமனத்தைவழங்கும் பொருட்டுஅரசாங்கம் மாவட்டச் செயலகங்களின் ஊடாகபட்டதாரிகளுக்கானநேர்முகப்பரீட்சைகளைஅண்மையில் நடாத்தியிருந்தது.



இந்தநேர்முகப்பரீட்சையின்போதுஉச்சவயதெல்லை 35 வயதாக இருக்கும் என்றும்,முதற் பட்டப்படிப்பின் பின்னர் பெற்றுக்கொண்டமேலதிகக் கல்வி,விசேடதொழிற் தகைமைமற்றும் விளையாட்டுத் தகைமைபோன்றதகுதிகளுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் எனவும்,பெறப்பட்டபுள்ளிகள் நாடளாவியஅடிப்படையிலேயேகணிப்பிடப்பட்டுத் தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதனால் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகள் கூடுதல் பாதிப்புக்குள்ளாகநேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்படிபின்வரும் விடயங்களைக் கருத்திற்கொண்டுதெரிவுகளைச் செய்யவேண்டுமென ஜனாதிபதிஅவர்களிடமும் பிரதமமந்திரிஅவர்களிடமும் எதிர்கட்சித் தலைவர் கடிதமூலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கல்வித்தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்குயுத்தம் மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கூடுதல் காலம் செலவிடநேர்ந்துள்ளமையால் ஆகக் கூடியவயதெல்லையை 35 இலிருந்து 40 வரைஅதிகரிக்கவேண்டும்.

மேலதிகமாற்றுத் தொழிலாண்மைக் கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புவடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்குயுத்தம் காரணமாகக் கிடைக்காமல் போனமையால் அவர்கள் ஏனைய மாவட்டப் பட்டதாரிகளுடன் சமமாகப் போட்டிபோட்டுக் கூடுதல் புள்ளிகள் பெறமுடியாதநிலைஉள்ளது.

வடக்குக் கிழக்கில் பொருளாதாரஅபிவிருத்திமற்றும் வியாபாரமுயற்சிகள் அதிகம் இல்லாமைகாரணமாகஅந்தத் துறைகளில் பட்டதாரிகளுக்குவேலைவாய்ப்புக்கள் பெறும் சந்தர்ப்பம் இல்லாமையினால் அவர்கள் அரசதொழில் வாய்ப்புக்களையேஎதிர்பார்த்திருக்கவேண்டியுள்ளது.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் வேலைவாய்ப்பின்மைதேசியமட்டஅளவைவிடஅதிகஅளவில் காணப்படுவதோடு, இப் பிரதேசங்கள் கல்வித் துறைமற்றும் அபிவிருத்தியிலும் ஏனைய மாவட்டங்களைவிடமிகவும் பின்தங்கியநிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் தேசியமட்டத்தில் புள்ளிகளைநிரைப்படுத்தித் தெரிவுகளைமேற்கொண்டால்,வடக்குக் கிழக்குப் பட்டதாரிகள் தெரிவுசெய்யப்படக்கூடியவாய்ப்புக்கள் மிகவும் குறைந்துவிடுமென்பதால் அவர்கள் மிகுந்தபாதிப்பைஅடைவர். அதனால் புள்ளிகள் மாவட்டமட்டத்தில் நிரைப்படுத்தப்பட்டுவிகிதசமஅடிப்படையில் சகலமாவட்டங்களுக்கும் சமமானவாய்ப்பினைவழங்கும் பொருட்டுதெரிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறுசெய்வதன் மூலம் சகலமாவட்டங்களிலிருந்தும் பட்டதாரிகள் தெரிவுசெய்யப்படக்கூடியநிலைமைஉருவாக்கப்படுவதால் சகலருக்கும் நியாயமும்சமவாய்ப்பும் கிடைக்கும்.
ஊடகவியலாளர்கள் போராட்டம்: படங்கள் இணைப்பு!

ஊடகவியலாளர்கள் போராட்டம்: படங்கள் இணைப்பு!

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் நினைவு நாளில் மட்டக்களப்பு நகரில் ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.




கடலில் கிடைத்த அதிஷ்டம்! ஒரே நாளில் கோடிஸ்வரர்களாக மாற்றம்

கடலில் கிடைத்த அதிஷ்டம்! ஒரே நாளில் கோடிஸ்வரர்களாக மாற்றம்


சிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில் இவ்வளவு பாரிய அளவு மீன்கள் கிடைத்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


ஓமன் ~ அமீரககத்தை இணைக்கும் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்பு!

ஓமன் ~ அமீரககத்தை இணைக்கும் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்பு!

ஓமனிலிருந்து அமீரகத்திற்கு புதிய நெடுஞ்சாலை எதிர்வரும் மே 7 ஆம் தேதி திறக்கப்படுகிறது. ஒமனிலிருந்து சாலை மார்க்கமாக அமீரகத்தின் துபை, ஷார்ஜா, ஃபுஜைரா வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக 272 கி.மீ தூரத்திற்கு போடப்பட்டு வந்த அல் பத்தீனா எக்ஸ்பிரஸ் வே (Al Batinah Expressway) எனும் புதிய நெடுஞ்சாலை எதிர்வரும் 2018 மே மாதம் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படுகின்றது. இந்த சாலை மஸ்கட் எக்ஸ்பிரஸ் முடியும் இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருபுறமும் தலா 4 வழிச்சாலைகளாக போடப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை 6 கட்டங்களாக அமைக்கப்பட்டன. இந்த சாலை ஓமனின் ஹல்பானில் துவங்கி கத்மத் மலாஹா (Halban to Khatmat Malaha) வரை நீண்டுள்ளது. இந்த சாலை ஃபுஜைரா மற்றும் கல்பா நகருக்குள் செல்லாமலேயே அமீரகத்தின் ருகைலாத் நெடுஞ்சாலையுடன் (Rugaylat Highway) வந்து இணைந்து விடுகின்றது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
இரு மணி நேரம் வவுனியாவில் தரித்து நின்ற தொடருந்து

இரு மணி நேரம் வவுனியாவில் தரித்து நின்ற தொடருந்து



வவுனியா தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று இரண்டு மணி நேரம் தரித்து நின்றுள்ளது. இதனால் தொடருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று சனிக்கிழமை (28.04.2018) வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு செல்லும் நகர்சேர் கடுகதி தொடருந்து இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வவுனியா தொடருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் தரித்து நிறுத்தப்பட்டது.

அனுராதபுரத்திலிருந்து தொடருந்தின் இழுவை இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7.45 மணியளவிலே தொடருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பயணிகள் சுமார் 2மணித்தியாலயம் அசோகரியங்களுக்கு உள்ளாகிய காந்திருந்து பயணத்தைத் தொடருந்தனர்.
ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா - டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா - டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்

இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிதாக அமைக்கப்படும் அமெரிக்க தூதரகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். சுமார் 100 கோடி டாலர்கள் செலவில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பிரமாண்டமான அமெரிக்க தூதரகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தூதரகத்தின் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரதமரை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பல ஆண்டு காலமாக, பல்வேறு அமெரிக்க அதிபர்கள் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக ஜெருசலேம் விவகாரம் இருந்து வந்துள்ளது. அவர்கள் அனைவருமே தேர்தல் பிரசாரத்துக்காக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால், நான் அதை நிறைவேற்றி முடித்து இருக்கிறேன். 

ஜெருசலேமில் கட்டப்படும் தூதரகத்துக்கு நாம் வெகு குறைவாகவே செலவு செய்துள்ளோம். அந்த பணிகளை கவனித்து கொள்ள சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பலநூறு கோடி டாலர்களில் மிக பிரமாண்டமாக இதை செய்து முடிப்பார்கள்.

இந்த புதிய தூதரகம் விரைவில் திறப்புவிழா காணவுள்ளது. இதில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று இந்த பேட்டியின்போது டிரம்ப் குறிப்பிட்டார்.
புதையல் தோண்டத் தயாரான 8 இளைஞர்கள் இரு ஸ்கானருடன் கைது!

புதையல் தோண்டத் தயாரான 8 இளைஞர்கள் இரு ஸ்கானருடன் கைது!

வவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சிற்றூர்த்தியில் சென்ற 33 , 32, 31 , 44 , 59 வயதுடைய காலி , கிளிநொச்சி, கொழும்பு , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த எட்டு இளைஞர்கள் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே சிற்றூர்த்தியுடன் தரித்து நின்ற சமயத்தில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட காவல்துறையினர் குறித்த வாகனத்தினை சோதனையிட்ட போது வாகனத்திலிருந்து இரு ஸ்கானர் இயந்திரத்தினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட இரு ஸ்கானர் இயந்திரம் , அவர்கள் பயன்படுத்திய சிற்றூர்த்தி , எட்டு சந்தேக நபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.