Saturday, May 5, 2018

அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த மேலும் ஒரு வசதி.

அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த மேலும் ஒரு வசதி.

பொதுவாக அமீரகத்தில் போக்குவரத்து அபராதங்களை வட்டியின்றி தவணைமுறையில் கட்ட வங்கிகள் வழியாக வசதி செய்து தரப்பட்டுள்ளன. தற்போது அபுதாபி தொடர்புடைய போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை தவணை முறையில் செலுத்திட அபுதாபி போக்குவரத்து போலீஸாருக்கும், பஸ்ட் அபுதாபி பேங்க் (FAB) நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி பஸ்ட் அபுதாபி பேங்க் கிரடிட் கார்டு வைத்திருப்போர் தவணை முறையில் தங்களின் அபராதங்களை செலுத்தலாம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்  சோதனை 90 பேர் கைது மற்றும் 147 வழக்குகள் பதிவு!

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 90 பேர் கைது மற்றும் 147 வழக்குகள் பதிவு!

குவைத்தில் அனைத்து Governorate-களிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குவைத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனையில் ஆவணங்கள் இல்லாத 90 நபர்கள் வரையில் கைது செய்யப்பட்டனர் 146 போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 22 பேர் Ahmadi Governorate இல் கைது செய்யப்பட்டனர் இதில் 8 பேர் சிவில் மற்றும் பிற வழக்குகளில் தேடப்பட்ட நபர்கள்.மற்ற நபர்கள் Mubarak Al-Kabeer மற்றும் Jahra உள்ளிட்ட பிற Governorate-ல் இருந்து கைது செய்யப்பட்டனர்.

Reporting by: KuwaitTamilPasanga
மே18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமே!

மே18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமே!


முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 திகதி முள்ளிவாக்காலில் இடம்பெறவுள்ளநிலையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என தேசத்தின் வேர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

2009. ஆண்டு 18 என்பது தமிழ்மக்கள் வரலாற்றை, தமிழினத்தை வேரோடு அறுக்க சர்வதேசமும் அப்போதய அரசும் இணைந்து மேற்கொண்ட ஓர் இன அழிப்பு சம்பவமே முள்ளிவாய்க்காலில் நடந்தேறியதை யாவரும் அறிவோம். ஆனால் சுடுகாடாய் ஆக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த இனத்தின் வேர்கள் முளையிட்டு துளிர்விட்டு நிற்பதை, எம்மினத்தின் வேர்களை அறுக்க நினைத்த முட்டாள்கள் பார்க்கட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஒரு சாதாரண விடயமல்ல முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எம் இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு இணைந்த தாயக மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்வோம். ஒருமித்த எங்கள் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம்.

2018 தமிழ் இன அழிப்பு நாளை ஒன்றிணைந்த வடக்கு பல்கலைக்கழக சமூகம், வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சம்மேளனமும் முல்லைத்தீவு மாவட்ட அனைத்து கிராம அபிவிருத்தி சங்கங்களும் இணைந்து இவ் இன அழிப்பு நாளை அனுஸ்ட்டிக்க ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் இந்தவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

சிலர் சிங்கள இராணுவமும் இங்கு இறந்துள்ளதால் சிங்கள மக்களையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைக்க வேண்டுமென அறிக்கை விட்டுள்ளதைப் பார்த்தோம். இவ்வாறான செயற்பாடுகளை என்ன செய்ய வேண்டுமென்று மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பிரதேசவாதங்களை எம்மக்கள் மனங்களில் விதைத்து எம்மினத்தை கூறுபோட்டு ஒற்றுமையாக விடாமல் பல நரிகள் இங்கே மிகக் கவனமாக காய்களை நகர்த்தி வருகின்றார்கள். எனவே தற்போதய சூழ்நிலையில் கிழக்கில் தனியாக நினைவேந்தல் நிகழ்வு செய்யப்படத் தேவையில்லையென கருதுகின்றோம்.

ஏதிர்வரும் காலங்களில் இதுபற்றி நாம் ஆராய முடியும். இப்போதைக்கு நாம் இந்நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்காலில் செய்வதே சிறந்தது. அடுத்த வருடம் கண்டிப்பாக கிழக்கிலும் இந்நிகழ்வை செய்வதற்கு நாம் முயற்சிகள் மேற் கொண்டுவருகின்றோம்.

என்பதனையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். இம்முறை முள்ளிவாய்க்கால் சென்றுவர போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2018 !

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2018 !


சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் .தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 24 ஆண்டாக இன்று, 05.05.2018 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. 
இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில்  கல்விபயிலும் 5300 மாணவர்கள ; பங்குபற்றினர். தமிழ ;மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள ; தோற்றினர். பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும்  பன்னிரண்டாம்  வகுப்புத்தேர்வில் 127 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழ்க் கல்விச ;சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.  இத்தேர்வின் போது  தமிழ்ப்பள ;ளிகளின் முதல்வர்கள ;, ஆசிரியர்கள ; மற்றும் உதவி ஆசிரியர்கள ;  மேற்பார்வையாளர்களாகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள ; இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர்.
தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது  பற்றுக்கொண்ட  பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப்  பெரிதும் உறுதுணையாக உள்ளது.
இவ்வாண்டு பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வுகள ; இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி இளங ;கலைமாணி  பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்க் கல்விச்  ;சேவை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள ; மற்றும் யோகா ஆகிய துறைகளில் மேற்கொள்கின்றது.
இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும், உதவிபுரிந்த அண்ணாமலை  பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்க்கல்விச ;சேவை நன்றி தெரிவிக்கிறது.
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள ; அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு  வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச ;சேவையின் நோக்கமாகும்.
தமிழ் ஆசிரியர்களின் தகைமையையும், கற்பித்தல் திறனையும் அதிகரிப்பதற் கும்,  தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் தமிழ்க் கல்விச் சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 
இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப தடை?

இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப தடை?


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் சொந்த இடம் திரும்ப ஆர்வம் காட்டிவருகின்ற போதும் அவர்களிற்கான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது.திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட சாத்தியமேயுள்ளது.

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை அகதிகள் தற்போது வரை விமான மூலம் ஜநா உதவியுடன் அழைத்துவரப்படுகின்றனர்.

இதனால் அவர்களிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவு காரணமாக தமது உடமைகளை கைவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடல்வழியாக தாயகம் திரும்ப கப்பல் போக்குவரத்தை அவர்கள் கோருகின்ற போதும் அது வெறும் பேச்சாகவே உள்ளது.

இதனால் முகாமிலுள்ள சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களது தாயகம் திரும்பும் கனவு வருடக்கணக்கினில் இழுபறிப்பட்டு செல்கின்றது. 

உயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம். - அதிகம் பகிருங்கள்

உயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம். - அதிகம் பகிருங்கள்

புத்தளத்தை சேர்ந்த M.H.M. Haleel என்பவர் 
(42, கடுமையான் குளம் வீதி)
2015 தொடக்கம் சிறுநீரகம் செயலிழந்து அவதியுற்று வருகிறார். 

மேற்குறித்த நபர் இருதய அடைப்பு, மற்றும் நீரிழிவு நோய்களினால் ஏலவே பாதிக்கப்பட்டதையடுத்து Bypass அறுவை சிகிச்சைக்கு உள்ளாகியதோடு ஒரு காலின் சிறு பகுதி துண்டிக்கப்படும் நிலைக்கு இலக்கானார்.

மேலும் இவையனைத்தையும் தாண்டி சிகிச்சைகள் பெற்று குணமடைந்திருக்கும் தருவாயில் சிறுநீரகம் செயலிழந்து மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை கடத்தி வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் கிழமைக்கு மூன்று விடுத்தம் கொழும்பில் அமைந்துள்ள மத்திய வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு மற்றும் இரத்த மாற்றத்திற்காகவும் ஏற்படும் செலவினங்களுக்கான பொருளாதார உதவியை மக்களாகிய உங்களிடம் வேண்டி நிற்கிறார்.

ஓர் செல்வந்தராக இருந்த இவர் தனக்கு ஏலவே ஏற்பட்ட நோய்களது சிகிச்சைக்காக தனது அனைத்து சொத்து செல்வங்களை செலவழித்து தற்போது வெற்றுக் கைகளுடன் ஓட்டாண்டியாக மாறியது மாத்திரமன்றி சூழவுள்ள அனைவராலும் கைவிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சிறுநீரக நோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கான பொருளாதார உதவியின்றி மிகவும் அல்லலுறுகிறார்.

ஒரு கிழமையில் மூன்று விடுத்தம் கொழும்புக்கு சென்று இரத்தத்தை மாற்றிவர போக்குவரத்து செலவுக்கு மட்டும் 35000 ரூபாய் தேவைப்படும் அதே வேளை ஒரு மாதத்திற்கு 140,000 ரூபாயம் பணம் தேவைப்படுகிறது.

அத்தோடு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் பணம் தேவையாகும் இத்தந்தைக்கு குறைந்த பட்சம் வாராவாரம் தேவைப்படும் (35000 /=) செலவினங்களுக்காவாவது உதவி செய்யுமாறு பணிவாக வேண்டுகிறோம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போது “யார் ஓர் ஆத்மாவை வாழ்வளிக்கிறார முழு மனிதர்களையும் வாழ்வளித்தவர் போலாவார்” எனும் நன்மைக்குரியவர்களாக ஆக போட்டிபோடுவோம். 

இத்தோடு தேவையான உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் இனணைக்கட்டுள்ளன. 

தொலைபேசி இலக்கம்: 

கணக்கிலக்கம்: 
M.H.M. Kaleel
Commercial Bank 
Puttalam Branch- Sril Lanka

குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் கணக்கிலக்கம் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படத் தகுதியானவை. 

“மற்றவருக்கு சந்தோசத்தை ஏற்படுத்திப் பாருங்கள் உங்கள் வாழ்வும் நிச்சயம் சந்தோசத்தால் வளமாகும்”

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
புத்தளம்
04/05/2018

 செல்பி எடுக்கமுயன்று, கரடி தாக்குதலில் பரிதாபமாக உயிரை விட்ட இளைஞர் (அதிர்ச்சிகர வீடியோ)

செல்பி எடுக்கமுயன்று, கரடி தாக்குதலில் பரிதாபமாக உயிரை விட்ட இளைஞர் (அதிர்ச்சிகர வீடியோ)

இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் சாரதியாக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வான் ஒன்றில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி காயமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கரடியை அருகில் சென்று பார்க்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டிரைவர் பிரபு பட்டாரா அந்த கரடியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். செல்பி எடுக்க முயற்சி செய்த போது கால் தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தது.

கரடியிடம் சிக்கிக்கொண்ட அவர், அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்களும் அந்த கரடியை தாக்கி, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியின் கள்ளக் காதலனை வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திய சம்பவம்!

மனைவியின் கள்ளக் காதலனை வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திய சம்பவம்!

கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையார்நாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் மணிவேல், கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கும், விஜயாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மணிவேல் தினமும் விஜயா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் வெளி நாட்டில் வேலை செய்து வந்த அன்பழகன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார்.

தனது மனைவி விஜயாவுக்கும், வாலிபர் மணி வேலுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் வாலிபர் மணிகண்டனை சந்தித்து, தனது மனைவியுடன் பேசக் கூடாது என்று எச்சரித்தார்.

ஆனாலும் மணிவேல் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு அவ்வூரிலுள்ள காட்டுப்பகுதிக்கு மணிவேல் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 8 பேர் கொண்ட கும்பல் மணிவேலை சுற்றி வளைத்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி வீசியுள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த மணிவேல் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக சரிந்து விழுந்துள்ளார்.

இதற்கிடையே மணிவேலின் அலறல் சத்தம் கேட்டு காட்டுப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் 3 பேரை அவர்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். மீதி 5 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

பின்பு, பிடிபட்ட 3 பேரையும் வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்துள்ளனர் அப்பகுதி மக்கள். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நெய்வேலியைச் சேர்ந்த கதிர்வேல், பார்த்திபன், சுதாகர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என கூறிப்படுகிறது. தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு! இந்தப் பொருளுக்கு தடை விதித்தது கத்தார் அரசாங்கம்!

கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு! இந்தப் பொருளுக்கு தடை விதித்தது கத்தார் அரசாங்கம்!

கத்தார் சந்தைகளில் விற்கப்பட்டு வரும் பதப்படுத்தப்பட்ட துர்ரா திராட்சை இலைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. மேற்படி பதப்படுத்தப்பட்ட இலைகள் ஜோர்தான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளாகும். பதப்படுத்தப்படுவதற்கு பயன்படுத்தப்படும் "Carbendazim" என்ற இரசாயனப் பதார்த்தம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 400 கிராம் மற்றும் 1900 கிராம் நிறை கொண்ட கேன்களில் அடைக்கப்பட்ட துர்ரா திராட்சை இலைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சந்தையில் உள்ள பொருட்களை நீக்கவும், இதற்கான நிதிகளை வியாபார நிறுவனங்களுக்கு மீளளிக்கவும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கத்தார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சு கண்காணிக்கும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சட்ட விதிகளை மீறும் வியாபார நிலையங்கள், வாடிக்கையாளர் பாதுகாப்பு மீற்ல்கள், நிதி மோசடிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை கத்தார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சு செய்யுமாறு கோறிக்கை விடுத்துள்ளது.
வடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்!

வடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்!

வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இன்றயதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்.  விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா  தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்தார். நிகழ்வு இன்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிப்பறையில் நடந்த பிசினஸ் டீலிங்!  அதிரடியாக கைது செய்த போலீஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிப்பறையில் நடந்த பிசினஸ் டீலிங்! அதிரடியாக கைது செய்த போலீஸ்

பல கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் நேற்று மாலை விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ஐந்து கோடிக்கும் மேலான பெறுமதியுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய கழிப்பறைக்குள் வைத்து தங்கத்தை கைமாற்ற முயற்சித்த போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பகுதியை சேர்ந்த ஒருவரும், இந்திய பிரஜைகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகளை மீண்டும் திறப்பு!

உலகின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகளை மீண்டும் திறப்பு!

உலகின் புகழ் பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகை இங்கிலாந்து நாட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து லண்டன் கியூ பகுதியல் அமைந்துள்ள இக்கண்ணாடி மாளிகை (தாவரவியல் பூங்கா) 1863 ஆண்டு அதாவது 18ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்டது.

இந்த தாவரவியல் பூங்காவில் உலகின் பல பகுதியில் உள்ள தாவரங்கள் இங்கே வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகள் இத் தாவரவியல் பூங்கா பல்வேறு வகையான பாதிப்புக்களுக்க உள்ளாகிய நிலையில் கண்ணாடிள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில் குறித்த கண்ணாடி மாளிகையை சீரமைப்பதற்காக கடந்த 5 ஆண்டுகள் பூட்டப்பட்டிருந்தது. புதிய பொலிவுடன் திருத்த வேலைகளுக்காக 57 அமொிக்க மில்லியன் டொலர்கள் செலவளிக்கப்பட்டு குறித்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்ற இந்த இடத்தை 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
50ரூபாவுக்கு கஞ்சா கடத்தும் சிறுவர்கள்

50ரூபாவுக்கு கஞ்சா கடத்தும் சிறுவர்கள்

சென்னையில் ஐந்து பரோட்டா, 50ரூபா பணத்துக்காக கஞ்சா  பொதிகளை சிறுவர்கள் கடத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பொலிஸார், சென்னையை பொறுத்த வரை புழல் சிறை முதல் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் கைகளில் கஞ்சா நடமாட்டம் சர்வசாதாரணமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தென்சென்னையில் உள்ள பலர் கஞ்சா விற்பனையாளர்களாக உள்ளனர். ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் இவர்களுக்கு கஞ்சா விநியோகிக்கப்படுகின்றது.
அவற்றை சிறுவர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்கின்றனர். 12வயது முதல் 16வயதுக்குள் இருக்கும் சிறுவர்களை தேர்ந்தெடுக்கும் கஞ்சா வியாபாரிகள், அவர்கள் மூலம் கஞ்சா பொதிகளை கடத்துகின்றனர். இதற்கு ஐந்து பரோட்டா, 50ரூபா மட்டுமே சிறுவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதில் பல சிறுவர்களுக்கு தாங்கள் கொண்டு செல்லும் பொதி கஞ்சா என்று கூட தெரியாது. இதற்கென தனி வலையமைப்பு சென்னையில் செயற்படுகிறது. சமீபத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது மூன்று சிறுவர்கள் சிக்கிய பிறகு தான் எங்களுக்கே இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட சிறுவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி விட்டோம். கஞ்சா விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.

  இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! செய்யத் தவறினால் ஆபத்து!

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! செய்யத் தவறினால் ஆபத்து!

இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமான வெப்பநிலை நிலவுவதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் ரேனுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீர் அதிகமாக அருந்துவது கட்டாயமாகும். அத்துடன் நீர் அருந்தும் போது தேசிக்காய் அல்லது வெள்ளரிக்காய்களை நீரில் கலந்து பருகினாலும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பமான காலநிலையின் போது அதிகமாக நீர் பருகவில்லை என்றால் தலைவி, தலைசுற்று, உடல் வலி, நீர்ப்போக்கு போன்ற நோய்கள் தாக்க கூடும். எனவே இது தொடர்பில் அவதானமாக இருந்து அதிகமாக நீர் பருக வேண்டும். அத்துடன் இளநீர் போன்றவைகளை அதிக பருகலாம்.

அதேபோன்று சிறு பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குங்கள். இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது.

அத்துடன் அதிக வெப்பமான காலநிலையின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துங்கள். இந்த வெப்பம் உடலுக்கு ஏற்றதல்ல என்பதனால் சிந்தித்து செயற்படுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.(தமிழ்வின்)
உணவகத்தில் உணவு சமைத்துக்கொடுத்து அசத்தும் ரோபோக்கள்!

உணவகத்தில் உணவு சமைத்துக்கொடுத்து அசத்தும் ரோபோக்கள்!

அமொிக்கா, பொஸ்டன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் மனிதர்கள் சமைப்பது போன்று ரோபோக்கள் உணவு சமைத்து அசத்தியிருக்கின்றன.

பொஸ்டன் உணவகத்தில 7 ரோபோக்கள் பல்வேறு வகையான உணவுகளைச் சமைத்து உணவகத்திற்கு வந்த உணவுப் பிரியர்களுக்கு வழங்கியிருக்கின்றன.

குறித்த ரோபோக்கள் காய்கறிகளை கழுவி, தோல்களை அகற்றி அவற்றை வெட்டுகின்றன. அதேபோன்ற இறைச்சி வகைகளையும் வெட்டி கறிகளைச் சமைக்கின்றன.

கலிபோர்னியாவில் மவுன்டன் வியூ உணவகத்தில் தக்காளி சாறு கலந்த பீட்ஷா தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது ரோபோக்கள்.
அமீரகத்தில் கேம்களில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அமீரகத்தில் கேம்களில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அமீரகத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் (Labour Camps) தொழிலாளர்கள் புத்துணர்வு பெறும் வகையில் தங்களின் சிறிதளவு ஓய்வு நேரத்தை விளையாட்டுக்களில் செலவிடும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த மைதானங்களை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் திறந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துபை அல் ரபா போலீஸ் ஸ்டேஷனின் (Al Rafa Police Station) இயக்குனர் பிரிகேடியர் அஹ்மது தானி பின் கலீத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

துபை முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடனும் துபை போலீஸின் முன்முயற்சியுடனும் அமைக்கப்பட்டு வரும் இம்மைதானங்களைப் போலவே இன்டெர்நேஷனல் சிட்டி, முஹைஸ்னா, அல் அவீர், அல் கோஸ் மற்றும் ஜெபல் அலி ஆகிய பகுதிகளிலுள்ள தொழிலாளர் முகாம்களுக்குள் சிறு, குறு கடைகளை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் பொருட்களை விற்கப்படுவது தடை செய்யப்படவுள்ளது. மேலும் சட்ட விரோத கடை நடத்துவோர், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்போர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் போன்றோரைப் பிடிக்கத் தேவையான சிசிடிவி கேமிராக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கத்தாரில் நவீனமயப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ள 7 கிலோ மீற்றர் FAMILY BEACH!

கத்தாரில் நவீனமயப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ள 7 கிலோ மீற்றர் FAMILY BEACH!

கத்தாரில் சிம்சிமா பகுதியில் உள்ள கடற்கரை நவீன மயப்படுத்தப்பட்டு FAMILY BEACH ஆக திறக்கப்பட்டுள்ளது கடந்த மே மாதம் 3ம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ள கடற்கரையின் நீளம் 7 கீலோ மீற்றர்களாகும். குடும்பத்துடன் வந்து தங்குதல், நீராடுதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இது மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் தங்குவதற்கான விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

சிம்சிமா கடற்கரைப் பகுதியானது கத்தாரின் டோஹா நகருக்கும், அல்கோர் நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. முதற்கட்டமாக 7 கிலோ மீற்றர்கள் மற்டும் திறக்கப்பட்டுள்ள இந்த FAMILY BEACH, எதிர்வரும் காலங்களில் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஏனைய பகுதியில் திறக்கப்படும் என்பதாகவும் பெனின்சுலாவின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் மௌனம் ஏன்? மணிவண்ணன் கேள்வி!

முதலமைச்சர் மௌனம் ஏன்? மணிவண்ணன் கேள்வி!

யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுட்டிக்காட்டியபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை. என மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றார்.
மேற்படி விடயம் தொடர்பாக மணிவண்ணன் மேலும் கூறுகையில், யாழ்.மாநகரசபை முதல் வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டங்களை மீறி அல்லது மதிக்காமல் செயற்பட்டு வருகின் றார். இந்த விடயம் தொடர்பாக சபையிலும், தனிப்பட்ட முறையிலும் உறுப்பினர்கள் முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் முதல்வரின் செயற்பாட்டில் மாற்றங்கள் உண்டாகவில்லை.
இதனையடுத்து வடமாகாண முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக் னேஷ்வரனிடம் யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் முறை ப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றோம். எங்களுடைய முறைப்பாடு தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கை தன்னும் எடுக்கப்படவில்லை.
முதலமைச்சர் வடமாகாணத்தில் இல்லை என அறிகிறோம் முதலமைச்சர் இல்லை என்றாலும் எமது முறைப்பாடு தனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. அது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூட இதுவரை எமக் கு எந்தவிதமான அறிவித்தல்களும் வரவில்லை. ஆகவே யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடு கள் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கபோகும் நிலையில் வடமாகாண முதல்வர் உள்ளுராட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதனை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறாரா?
என எங்களுக்கு ள் கேள்வி எழுகின்றது. எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் இனிமேலாவது தாமதம் கா ட்டாமல் எமது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யாழ்.மாநகர மக்களு டைய நலன் கருதி யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளை சீர்ப்படுத்தவேண்டும். என மணிவண்ணன் மேலும் கேட்டுக் கொண்டார்.
சந்திரகுமாரிற்கு போட்டி: கிளிநொச்சியில் சிறீதரன் பார்?

சந்திரகுமாரிற்கு போட்டி: கிளிநொச்சியில் சிறீதரன் பார்?

தனது போட்டி அரசியலாளரான சந்திரகுமாரிற்கு இணையாக தனது சாம்ராஜ்ஜியத்தை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்டியெழுப்பிவருகின்றார். அவ்வகையில் சட்டவிரோத மது, கஞ்சா, கசிப்பு பாவனையை கட்டுப்படுத்த, கிளிநொச்சியில் சட்டபூர்வமான மதுபானசாலைகளை திறக்க வேண்டுமென கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று இட்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தது உள்நோக்கங்கொண்டதென நெருங்கிய ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் பலம் வாய்ந்தவராக இருந்த சந்திரகுமார் கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மதுபான சாலை பெமிட்களை பெற்று தலா 80 இலட்சம் படி விற்றிருந்தார். அதில் ஒன்றினை தனது மைத்துனரும் எழுத்தாளருமான நபர் ஒருவரது பெயரில் யாழ்ப்பாணத்தில் பேணி வருகின்றார். இதன் மூலம் மாதாந்தம் மில்லியன்களில் வருமானத்தை ஈட்டியும் வருகின்றார்.

இந்நிலையில் தற்போதைய அரசின் நெருங்கிய சகபாடியான சி.சிறீதரன் வசம் அமைச்சர்கள் உறவு பலமாக உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல மதுபானசாலைகள் உள்ளன. கிளிநொச்சியில் ஒன்றுகூட இல்லை. எனவே கிளிநொச்சிக்கு மதுபானசாலை வேண்டுமென வலியுறுத்தி மதுபானசாலையினை வழமை போல தனது பினாமிகள் பெயரில் திறக்க அவர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ!

கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ!

அரபு நாடுகளைப் பொறுத்த வரையில் போக்குவரத்து விதிகள் அதிகம். போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுபவர்கள் ஓரிரு மணித்தியாலங்களுக்கு கைது செய்யப்பட்டு விடுவார்கள். கத்தார் நாட்டிலும், இது போன்று போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுண்டு. இவர்கள் எவ்வாறு கைது செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில்  பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் பெண்ணின் சடலம் மீட்பு!

 ஏறாவூர் வந்தாறுமூலையில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டது சடலம் வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி என இனம் காணப்பட்டது.

குறித்த சடலம் வீட்டின் வாசல்  கதவருகே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போது வீட்டில் பெண்ணின்  31  வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும்  கூறப்படுகின்றது.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முள்­ளி­வாய்க்­கால் ஏற்பாடு குறித்து திங்கள் ஆராய்வு

முள்­ளி­வாய்க்­கால் ஏற்பாடு குறித்து திங்கள் ஆராய்வு


மே 18 முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து வடக்கு மாகாண சபை­யி­னர் நாளை­ம­று­தி­னம் திங்கட்கிழமை ஆரா­ய­வுள்­ள­னர். கைத­டி­யி­லுள்ள முத­ல­மைச்­ச ­ரின் அமைச்­சில் முற்­ப­கல் 10 மணிக்கு இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. மாகாண சபை­யின் அவைத் தலை­வர், அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­துள்­ளார். கடந்த சில வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையே முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்து நடத்­தி­வ­ரு­கி­றது. வழ­மை­போன்று இந்த முறை­யும் அது தொடர்­பில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள இந்­தக் கலந்­து­ரை­யா­டல் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை அனை­வ­ரும் ஒரு­மித்து ஒரே இடத்­தில் நினை­வு­கூர வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அன்று மதி­யம் 12.30க்கு பொதுச்­சு­டர் ஏற்­றப்­பட்டு நினை­வேந்­தலை நடத்­து­வது என்­றும் தொடர்ந்து அஞ்­சலி இடம்­பெ­றும் என்­றும் அவர்­கள் நேற்று விடுத்த ஊடக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர். அனை­வ­ரும் எந்­த­வித பாகு­பா­டு­மின்றி அதில் கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும் அவர்­கள் அறிக்­கை­யில் கோரி­யுள்­ள­னர். இது­த­விர, நினை­வேந்­தலை ஓரி­டத்­தில் ஒற்­று­மை­யாக நடத்த ஒத்­து­ழைக்­கு­மாறு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் விடுத்த கோரிக்­கை­யைத் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் நினை­வேந்­தல் நிகழ்வை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளு­டன் இணைந்து நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி மற்­றும் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸ் கட்­சி­கள் தீர்­மா­னித்­துள்­ளன என்று முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் விடுத்த செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.
 (VIDEO) 25 வயது பெண்ணை திருமணம் செய்ய சவுதி இளவரசர் கொடுத்த மஹர் இவ்வளவா?

(VIDEO) 25 வயது பெண்ணை திருமணம் செய்ய சவுதி இளவரசர் கொடுத்த மஹர் இவ்வளவா?

68 வயதான சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்ய 50 மில்லியன் டொலர்களை மஹராக கொடுத்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

திருமண நிகழ்வின் போது திருமண மண்டபத்தை சுற்றியுள்ள இடத்தில் 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், வெள்ளை நிற சொகுசு பஸ் ஒன்றின் மூலம் மணப்பெண் வீட்டாருக்கு 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பரிசில்களோடு வைரங்களும் பெண்ணுக்கு இளவரசர் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.


* மஹர் என்பது முஸ்லிம் ஆண் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்கும் போது கட்டாயம் கொடுக்க வேண்டிய திருமண நண்கொடையாகும். பெண் தரப்பில் வரதட்சனை பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. 

 டக்ளஸிற்கும் வந்தது முதலமைச்சர் கனவு!

டக்ளஸிற்கும் வந்தது முதலமைச்சர் கனவு!

மாகாணசபை தேர்தலில் தானும் களமிறங்க விரும்புவதாக ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆரம்பகாலங்களில் புலிகள் இந்த சபை முறைமையை நிராகரித்திருந்தார்கள். இது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாகும். அதன்பின்னர் நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்தவர்கள் அதனை சரியாக நிர்வகிக்காததன் விளைவாக அது செயலற்றுக்கிடந்தது.

இக்காரணங்களால் தமிழ் மக்களது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலாபலன்களையும் மாகாணசபையின் நன்மைகளையும் இறுதி இலக்கை நோக்கி பயணிக்கும் வாய்ப்பினை தமிழ் மக்கள் இழந்திருந்தனர்.நெருக்கடியற்ற ஒரு சூழ்நிலையில் அந்தவாய்ப்பு மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்தபோது சந்திரனை கொண்டுவந்து அருகில் தருவோம், நட்சத்திரங்களை உடைத்து தருவோம் என உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களை பெற்றவர்கள் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பையும் சரியாக நிர்வகிக்கவில்லை.

அவர்கள் குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் முன்வைப்பதனூடாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்களே தவிர மாகாணசபையின் உச்ச பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அர்த்தமுள்ள முயற்சிகளையோ அல்லது விருப்பமுடனோ அவர்கள் செயற்படவில்லை.

இவ்வாறு முடங்கிக் கிடக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் திறம்பட செயற்படுவதற்கு மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு வெகு விரைவில் வரவுள்ளது. அதை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்.

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களோடு வாழ்ந்து மக்களுக்கான சேவைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு வடக்கு மாகாணசபை கிடைக்கப்பெறுமாக இருந்தால் நான் ஏற்கனவே கூறியதுபோல எமது தாயக பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைப்பதுடன்  எமது மக்களது பொருளாதார வறுமைகளை இல்லாதொழித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை அடையும் திசை நோக்கி வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையும் அதற்கான உழைப்பும் உள்ளார்ந்த விருப்பும் எம்மிடம் உள்ளது.

இந்த அடிப்படையிலேயே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில்  போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் மக்களை விட்டு ஓடியதும் இல்லை. ஓடப் போவதும் இல்லை. குறைகூறிக்கொண்டு இருக்கவும் போவதில்லையென டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறையில் இலங்கை காவல்துறை மீது வாள்வெட்டு!

ஊர்காவற்துறையில் இலங்கை காவல்துறை மீது வாள்வெட்டு!


யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்; நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை காவல்துறை உத்தியோகத்தரொருவர் வாள் வெட்டுக்குள்ளாகியுள்ளார். ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போது இன்றைய தினம் 5ம் திகதி சனிக்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலை நடாத்தியவர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலிற்கான காரணம் தனிப்பட்ட பகையா அல்லது வேறுஏதுமாவென்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை
டக்ளஸ் முதல் றிசாத் வரை எல்லோரும் ஒன்றே!

டக்ளஸ் முதல் றிசாத் வரை எல்லோரும் ஒன்றே!


உள்ளுராட்சி சபைகளை இடையூறி இன்றி நடாத்த ஒத்துழைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தபோதும் சிலர் குழப்புவதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிப்பதில் உண்மை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் என்பவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈபிடிபி ஆதரவுடன் சபைகளை கைபற்றிய பின்னர் இதே பாணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தான் ஈபிடிபியுடன் பேசவேயில்லையென பல்டியத்திருந்தனர்.

ஆயினும் டக்ளஸின் தொலைபேசி சிட்டையை வெளியிட தயாராக இருப்பதாகவும் ரெமீடியஸ் வீட்டிற்கு தேடிவரவா என கேட்டதனை அம்பலப்படுத்தவா என ஈபிடிபி பதிலுக்கு எகிற கூட்டமைப்பினர் அடங்கிக்கொண்டனர்.

இந்நிலையில் வன்னியிலுள்ள சபைகளை கைப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பற்றி றிசாத் பதியூதீன் அம்பலப்படுத்த அதற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் என்பவர் சப்பைக்கட்டு கட்ட முன்வந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபைகள் அமைப்பதற்கு முன்பு இதே அமைச்சருடனும் உரையாடியது உண்மையே . ஆனால் அதில் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கவோ அல்லது சபை விட்டுக்பொடுப்புத் தொடர்பிலோ உரையாடவில்லை. மாறாக மன்னார் வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைப்பது எனவும் ஏனைய கட்சிகள் எதிர்ப்பதில்லை என்றே கோரப்பட்டது. அதற்கு இணங்கியிருந்தனர்.
இருப்பினும் இதற்காக்கூட இந்த அமைச்சருடன் உரையாடுவதனை பலரும் விரும்பவில்லை.

ஏனெனில் இவர்கள் கொள்கையற்று காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுபவர்கள் என்பது எமது மக்களின் கருத்து. இந்த நிலையில் எமது நம்பிக்கையீனத்தை உறுதி செய்வதுபோல் மன்னாரில் முதலில் அமைத்த சபையான மன்னார் நகர சபையில் எமது கட்சிக்கு எதிராக இந்த அமைச்சரின் துணையோடு மகிந்த அணியினை சேர்ந்தவர் தவிசாளராக போட்டியில் இறக்கப்பட்ட நிலையிலேயே நாம் ஒரு வாக்கினால் வெற்றியீட்டினோமென அவர் தெரிவித்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாள் நிகழ்வு ஒழுங்குமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,
ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட  நிகழ்விடத்திற்கு தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அன்றைய நாள் மக்கள் வருகை தருவார்கள். வருகை தரும் மக்களில் முதியோர், தாய்மார்கள், கைக்குழந்தைகள், மதகுருமார்கள், அவயங்களை இழந்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட நினைவிடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரமுள்ள சுற்றுவட்டாரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு கதிரைகள் போடப்பட்டிருக்கும். குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இதற்கான  ஏற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், இளைஞர் கழகங்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மேற்கொள்வார்கள்.
காலையிலிருந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான ஒலிபரப்புகள் நிகழ்விடத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும். மதியம் சரியாக 12.30 மணிக்கு நிகழ்விடத்திலுள்ள பொதுச் சுடர் ஏற்றப்படும்.  அதனைத் தொடர்ந்து  ஏனைய  சுடர்களை முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த உறவுகளோடு இணைந்து பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏனையோர் ஏற்றுவார்கள். தொடர்ந்து நிகழ்விடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவு கூரல் இடம்பெறும்.
சுடரேற்றத் தொடங்கும் போது ஒலிக்கத்தொடங்கும் ‘தமிழர் இனவழிப்பு நினைவு இசை’ நிறைவடையும் வரை மக்கள் சுடர்களின் முன்னால் நின்ற வண்ணம் இதுவரை காலமும் தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும், அவலங்களையும் நினைவுகொள்வதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
நினைவு இசை நிறைவடைந்ததும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுபெறும். நிகழ்வுகள் யாவும் ஒலிபெருக்கி வழியாக வழிநடத்தப்படும். மேடையோ, அறிவிப்பாளரோ நிகழ்வில் இருக்க மாட்டார்கள்.
தமிழர் தாயகம் முழுவதையும் ஒன்றிணைத்து நடாத்தப்படும் இந்நிகழ்வை சிறப்புற நடாத்தி முடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேத்தல் இடம்பெறும்  இடத்திற்கு வாகனங்கள்  அனுமதிக்கப்பட மாட்டாது. முல்லைத்தீவு பிரதான வீதியின்  ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும் எனவும் மாணவர் ஒனிறம் அறிவித்துள்ளது.
ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை

ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை


திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில் காயமுற்ற மனைவி திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த பெண் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். 

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கணவரான ராசய்யா ரேஹனை (வயது- 34) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! செய்யத் தவறினால் ஆபத்து.!

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! செய்யத் தவறினால் ஆபத்து.!இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அதிகமான வெப்பநிலை நிலவுவதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் ரேனுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீர் அதிகமாக அருந்துவது கட்டாயமாகும். அத்துடன் நீர் அருந்தும் போது தேசிக்காய் அல்லது வெள்ளரிக்காய்களை நீரில் கலந்து பருகினாலும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பமான காலநிலையின் போது அதிகமாக நீர் பருகவில்லை என்றால் தலைவி, தலைசுற்று, உடல் வலி, நீர்ப்போக்கு போன்ற நோய்கள் தாக்க கூடும். எனவே இது தொடர்பில் அவதானமாக இருந்து அதிகமாக நீர் பருக வேண்டும். அத்துடன் இளநீர் போன்றவைகளை அதிக பருகலாம்.

அதேபோன்று சிறு பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குங்கள். இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது.

அத்துடன் அதிக வெப்பமான காலநிலையின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துங்கள். இந்த வெப்பம் உடலுக்கு ஏற்றதல்ல என்பதனால் சிந்தித்து செயற்படுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.