Saturday, May 19, 2018

டக்ளஸே யாழ்.மாநகரசபையுடன் பேசவேண்டும்!

டக்ளஸே யாழ்.மாநகரசபையுடன் பேசவேண்டும்!

சர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகளால் தனது இலாபம் முற்றாக பறிபோய்விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள குறித்த கடைத்தொகுதியின் தற்போதைய பெறுமதி அறுபதி கோடியாகும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் 150 இற்கும் குறையாத தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.யாழ்.மாநகரசபை தற்போது மாதாந்தம் 18 இலட்சம் வரையில் வருமானத்தை பெற்றுவருகின்றது.

3ம் மாடியல் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் மகேஸ்வரி நிதியத்தின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவே யாழ்.மாநகரசபையுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்பகுதியினை மகேஸ்வரி நிதியத்திற்கே ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கி வழங்க தீர்மானிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பில் யாழ்.மாநகரசபையிடம் விண்ணப்பித்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.முதலமைச்சர் 3ம் மாடியினை அவ்வாறு வழங்க சம்மதம் தெரிவித்திருக்கவில்லையென அதற்கு யாழ்.மாநகரசபையால் விளக்கம் தரப்பட்டிருந்தது.

அதனால் தற்போது குறித்த கட்டடம் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் மகேஸ்வரி நிதிய தலைவரான டக்ளஸ் தேவானந்தா தான் யாழ்.மாநகரசபையில் பேச வேண்டும்.

தேவையெனில் யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.
25 முதல் தொடர் புறக்கணிப்பு?

25 முதல் தொடர் புறக்கணிப்பு?


வடமாகாண ஆளுநருடான பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்து அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளார் கலாநிதி தங்கராஜா காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது
புதிய சுற்று நிரூபத்தின் பிரகாரம் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாததன் காரணத்தினால் கடந்த திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
அரச சுகாதார துறையினரின் கவனயீனம் காரணமாகவே தமது மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் குற்றம் சுமத்தின. 
எனினும் அரச மருத்துவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கான கொடுப்பனவுகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்யவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ் திருவாகரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே காண்டீபன் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்!

சுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்!


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சுழிபுரம் - காட்டுப்புலத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை அருள்தீபம் சனசமூக நிலையத் தலைவர் ஐங்கரன் தலைமையில் (18) நடைபெற்றது. 

இறுதி யுத்தத்தின்போது காட்டுப்புலம் மற்றும் பாண்டவெட்டையைச் சேர்ந்த பலர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவாக அங்கு கடந்த 2010 ஆம் ஆண்டு நினைவுக்கல் ஒன்று நடுகை செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.கிருஸ்ணராசா, சி.இதயகுமாரன் ஆகியோரும் வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் கல்விமான்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நடுகல்லின் முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர். பின்னர் நினைவுரைகளும் இடம்பெற்றன. 

நன்றி சொல்ல வார்த்தை இல்லை எமக்கு!

நன்றி சொல்ல வார்த்தை இல்லை எமக்கு!முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நோக்கம் புரிந்து ஒத்துழைத்து முன்னெடுத்த அனைவரிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு, முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை) ஆகிய மூவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளனர்.


முன்னதாக யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் மூவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சகலரும் நன்றிக்குரியவர்களே:வடக்கு முதலமைச்சர்!

சகலரும் நன்றிக்குரியவர்களே:வடக்கு முதலமைச்சர்!


கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்து நடத்தியமை எல்லோரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சில சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. எனினும் நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி ஆகியன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.  

குறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுகவென வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன?

மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன?


நான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான சுடர் ஒளியால் முள்­ளி­வாய்க்கால் சோக தேச­மாக காட்­சி­ய­ளித்­தது.
மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண்ணில் தமது உறவு ஆத்­மாக்­க­ளுக்கு அம்­மா­வென்றும் அப்­பா­வென்றும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன், மாமி, பேரன், பேத்தி என ஆயி­ரக்­க­ணக்­கான உற­வுகள் உணர்­வு­டனும் உரு­கியும் மர­ணித்த மண்ணில் நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வு முள்ளிவாய்க்­காலில் மட்­டு­மன்றி வட­கி­ழக்கில் எங்­கெங்­கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்­கி­றார்­களோ அங்­கெல்லாம் அனுஷ்டிக்­கப்­பட்­டது. ஆரா­திக்­கப்­பட்­டது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நினைவு கூரும் அஞ்­சலி வாரம் ஆரம்­பிக்­கப்­பட்டு வட­கி­ழக்கில் 20க்கு மேற்­பட்ட இடங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வந்த நிலையில் யாழ். செம்­ம­ணிப்­ப­கு­தியில் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட இடத்தில் அஞ்­சலி செலுத்தும் நிகழ்வு மே 12ஆம் திகதி நடை­பெற்­றது. கிரு­சாந்­தி­யென்னும் மாண­விக்கு நடந்த மாள­மு­டியா கொடூரம் நினைவு கொள்­ளப்­பட்­டது. அதேபோல் கடந்த மே 14ஆம் திகதி வட­ம­ராட்சி கிழக்கில் நாகர்கோவில் பாட­சாலை முன்­பாக 22 மாண­வர்கள் விமா­னக்­குண்டு வீச்­சுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை நினைவு கூரும் வகையில் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பில் பன்­னங்­கு­டா­வெளியில் உணர்வுபூர்­வ­மாக நேற்­றைய தினம் நினை­வஞ்­சலி நடை­பெற்­ற­துடன் இரத்­த­தானம், அன்­ன­தானம் மற்றும் மாலை 6.30 மணி­ய­ளவில் பன்­னங்­கு­டா­வெளியில் ஆற்­றங்­கரை முற்­றத்தில் இறந்­த­வர்­களின் உற­வு­களால் 1000 சுடர்கள் ஏற்­றப்­பட்­டன. திரு­கோ­ண­ம­லையில் மே 16ஆம் திகதி மாலை கடற்­கரை தியா­கிகள் அரங்கின் முன்­பாக ஆத்­மாக்­களை நினைவு கூரும் வகையில் பொது­மக்­களால் சுடர் ஏற்றி அஞ்­சலி அனுஷ்­டிக்­கப்­பட்­ட­துடன் நேற்­றைய தினம் சிவன் ஆலயம் தந்தை செல்வா சிலைக்கு முன்­பாக சுடர் ஏற்றி அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மே 17ஆம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் (திருக்­கோ­விலில்) கொல்­லப்பட்ட சம்­ப­வத்தை நினைவுகூரும் வகையில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­துடன் மாலை கல்­லடி கடற்­க­ரை­யிலும் இந்­நி­கழ்வு இடம்பெற்­றி­ருந்­தது. புலம்­பெயர் தேசமெல்லாம் தாய­க­மண்ணில் உயிர் நீத்த உற­வு­களை நினைந்­தேங்கி நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது. 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்­ட­தற்­குப்­பின்னால் இந்த முள்ளி அழிப்பு நாள் அனுஷ்­டிக்க சுதந்­திர கதவு திறந்து விடப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் பல்­வேறு தடைகள், சவால்கள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த நான்­கா­வது நினை­வேந்தல் நிகழ்வு நடாத்­தப்­பட்­டுள்­ளது. உலக வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தமி­ழி­னப்­ப­டு­கொலை நாள் மே 18 ஆகும். இந்த நினை­வு­ நாளை அனுஷ்­டிக்கும் முக­மாக வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் ஏற்­பாட்­டுக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. வரு­வோ­ருக்கு அனு­ச­ரணை வழங்கும் முக­மாக பொதுமக்­க­ளுக்­கான பந்­தல்கள், தண்ணீர் பந்­தல்கள் உட்பட ஏனைய வச­தி­களும் பொது அமைப்­புக்­களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் போரா­ளிகள் நிகழ்வை வடி­வ­மைக்கும் வகையில் மைதான ஒழுங்­கு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லு­மி­ருந்தும் ஏரா­ள­மான உற­வுகள் வருகை தந்­தி­ருந்­த­தோடு 8 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் தமது சொந்­தங்­களை களப்­பலி கொடுத்த உற­வுகள் என்ற வகையில் மாவட்­டத்­துக்கு ஒரு உற­வாக எண்­மரும் வட­கி­ழக்­குக்கு வெளியேயுள்ள உற­வு­களில் ஒரு­வ­ரு­மாக ஒன்­பது உற­வுகள் சுட­ரேற்றி தங்கள் உற­வு­க­ளுக்கு ஆகுதி செய்து வைக்க ஏனைய உற­வுகள் ஏற்­று­வ­தற்­கென ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த 1500 சுடர்கள் அந்த விதைப்பு மண்ணில் ஏற்­றப்­பட்­டன. எங்கும் சுடராய் ஒளிவேள்­வியாய் சுடர் கள் வானத்தை நோக்கி வளர்ந்து ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­துபோல் இருந்­தது. கண்­ணீரும் கம்­ப­லையும் நிறைந்த மண்­ணாக முள்ளி மண்­கா­ணப்­பட்­ட­தாக உண­ரப்­பட்­டது. சுதந்­திர இலங்­கையில் தமிழ் இனத்­தின்­ மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட பல­கோர கொடிய சம்­ப­வங்­களில் முள்­ளி­வாய்க்கால் யுத்த வடுக்­களை தமிழ் மக்கள் கோடி வரு­டங்கள் கழிந்­தாலும் மறக்­க­ மு­டி­யாத அள­வுக்கு வர­லாற்றை நினைவு கொள்ளும் மே 18. இலங்கை தமிழ் மக்­களின் துக்­கிப்பு நாளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­து போல் முள்ளி நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மாவீரர் தினத்­துக்கும் முள்ளி வாய்க்கால் நினை­வேந்தல் தினத்­துக்கும் வித்­தி­யா­ச­முண்டு. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தனித்­தமிழ் ஈழம் என்ற கன­வோடு களப்போர் புரிந்து வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினைவு கொள்ளும் நாள் மாவீ­ரர் தின­மாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இறு­தி­ யுத்­தத்தில் ஏது­ம­றி­யாமல் இறந்துபோன அப்­பாவி மக்­களை அவர்­களின் உற­வுகள் நினைவு கொள்ளும் நாள் பிதி­ராகிப்போய் பிறப்­புக்கும் இறப்­புக்கும் எல்லை தெரி­யாத அந்த அப்­பாவி பொது­மக்­களை கொன்று குவித்த தின­மாக அது ஆரா­திக்­கப்­ப­டு­கி­றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் தமி­ழர்­களின் உரி­மைப்­போ­ருக்கு உலக வல்­ல­ர­சு­க­ளோடு சேர்ந்து உலை­வைக்­கப்­பட்­ட­ மாதம். மே 18ஆம் திகதி உல­க­ வ­ர­லாற்றை உலுக்­கிய நாள் என்­பதை உல­கமே கண்­ணீர் ­மல்க ஏற்­றி­ருந்­தது. வன்­னிப்­போரை நய­வஞ்­ச­கத்­துடன் மூட்­டி­யது கண்டு உல­கமே அழுது கண்­ணீர் ­வ­டித்­தது. 2009ஆம் ஆண்டு வன்­னிப்போர் மூண்­ட­வே­ளையில் பாரா­ளு­ம­ன்றில் வன்னி நிலை­மையை எடுத்­துக்­கூ­றிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அவர்கள் பின்­வ­ரு­மாறு உல­கத்­துக்கு அறி­வித்தார்.
வன்­னியில் சாட்­சி­ய­மில்லா படு­கொ­லைகள் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. மிகப்­பா­ர­தூ­ர­மான மனி­தப்­பே­ர­வலம் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரணம், அழிவு பெருந்­தொ­கையில் இடம்பெற்­றுள்­ள­தாக நான் அறி­கிறேன். இங்கு இடம்பெறும் அழி­வைப்­போன்று உலகில் வேறு எந்த நாடு­க­ளிலும் இடம்­பெ­ற­வில்லை (இரா. சம்­பந்தன் 5.5.2009 பாராளுமன்றில்) இச்­செய்­தியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐ.நா. செய்­ம­திப்­ப­டங்கள் ஊர்­ஜிதம் செய்­துள்­ள­தாக செய்­திகள் கசிந்­தி­ருந்­தன. அதன்­ பி­ர­காரம் மோதல் நடை­பெறும் சூன்ய பிர­தே­சத்­துக்குள் அடை­பட்­டி­ருக்கும் பெண்கள், சிறுவர், முதியோர் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென சர்வ­தேச செஞ்­சி­லு­வைச்­சங்கம் அச்சம் தெரி­வித்­தி­ருந்­தது. பொது­மக்கள் தங்­கி­யி­ருக்கும் பாது­காப்பு வல­யத்தின் மீது விமா­னப்­படை குண்டு வீச்சு நடத்­தி­ய­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் கவலை தெரி­வித்­தி­ருந்­தது. வன்­னிப்­போரும் அதன் இழப்­புக்கள் பொது­மக்கள் தொடர்பில் அப்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ. நா. சபையின் கொழும்­புக்­கான பேச்­சாளர் கோர்டன் வைஸ் வன்­னிப்­ப­கு­தியில் இரத்தக்களரி ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தனக்கு கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.வன்னி பாதுகாப்பு வல­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­கி­றார்கள் என வைஸ் கவலை தெரி­வித்­தி­ருந்தார். வன்னி இறு­தி­ யுத்தம் குறித்து இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பிரான்ஸ் நாட்டின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரான பெர்னாட் குச்­னரும் இங்­கி­லாந்து அமைச்­ச­ரு­மான டேவிட் மில்­லி­பாண்டும் வன்னி நிலை குறித்து ஆராய உட­ன­டி­யாக ஐ.நா. சபை கூட்­ட­ வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்­த­மையை கவ­ன­மாக எடுத்­துப்­பார்ப்பின் முள்ளி வாய்க்­காலில் எத்­த­னை­யா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­க­லா­மென ஊகிக்க முடியும். கொல்­லப்­பட்ட பொது­மக்கள் தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ.நா. சபைக்­கான மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி செய­லாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வன்னி யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை ஒரு­போதும் தெரி­யா­மலே போகலாம். இடம்பெற்ற யுத்­தத்தில் கடை­சிக்­கட்­டத்தில் இறந்த அப்­பாவி பொது­மக்­களின் சரி­யான எண்­ணிக்கை தெரி­யா­மலே இருக்­கி­றது. இந்த யுத்­தத்தில் 80 ஆயிரம் தொடக்கம் 1 லட்­சம்­வரை கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என கருத்து தெரி­வித்­தி­ருந்தார். யுத்­தம்­ மு­டி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக கூறப்­படும் மே 18ஆம் திகதி ஜோர்­தா­னி­லி­ருந்து திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விமா­னத்தை விட்டு இறங்­கி­ய­வுடன் தரையில் விழுந்து முத்­த­மிட்டு போர் முடிந்­து­விட்­டது. புலிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு விட்­டார்கள் என்­ப­தற்­காக பெரு­மைப்­பட்­டாரே தவிர கொல்­லப்­பட்ட பொதுமக்­க­ளுக்­காக அவர் ஒரு சொல்லும் உச்­ச­ரிக்­கா­மலே சென்­றதை உலகம் தொலைக்­காட்­சி­களில் கண்­டு­கொண்­டது. இறுதி யுத்­தத்தில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் விடுத்த உத்­தி­யோகபூர்வ­மான அறி­வித்­தல்கள் யாதெ­னப்­பார்ப்பின் 2 லட்­சத்து 80 ஆயிரம் பேர் அகதி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் (லண்டன் டெலி­கிராப்) 9100 விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­துள்­ளனர். இதில் 7500 பேர் புனர்வாழ்வு நிலை­யங்­க­ளிலும் 1600 பேர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்பில் விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் ஊட­கத்­துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்­தன தெரி­வித்­தி­ருந்தார். பிர­பா­கரன் உட்­பட 300 புலி உறுப்­பி­னர்­களின் சட­லங்கள் முள்ளிவாய்க்­காலில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் உதய நாண­யக்­கார தெரி­வித்­தி­ருந்தார். பொது­மக்­களின் இறப்­புக்­கு­றித்து அரச தரப்­பினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சரி­யான தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை. 2012ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ இ­லங்­கைக்­கெ­தி­ரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்றம் தொடர்பில் அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் இலங்­கைக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­ய­போதும் அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் இலங்­கைக்கு கொடுக்­கப்பட்ட அவ­கா­சங்கள், மனித உரிமை ஆணை­ய­கத்தின் நெகிழ்­வுத்­தன்­மைகள், சர்­வ­தேச போக்­கையும் அபிப்­பி­ரா­யத்­தையும் எவ்­வாறு மாற்­றி­ய­மைத்­தது என்­பது உலகம் அறி­யா­த­வொ­ரு­வி­ட­ய­மல்ல. 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட நல்­லா­ட்சி அரசாங்கம் கார­ண­மாக சர்வ தேசத்தின் அபிப்­பி­ரா­யமும் போக்கும் எவ்­வாறு தலை­கீ­ழாக மாறி­யுள்­ள­தென்­பதை அண்­மையில் பாரா­ளு­மன்றில் ஜனா­தி­பதி நிகழ்த்­திய அரச கொள்கை விளக்­க­வு­ரை­யி­லி­ருந்தும் பிர­த­மரின் மேதின உரை­யி­லி­ருந்தும் தெரிந்­து­கொள்­ளலாம். முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் என்­பது வரு­டா­ வ­ருடம் கொண்­டா­டப்­படும் ஒரு சடங்­காக அமை­யாது உற­வு­களை இழந்­த ­மக்­களின் உள்­ளத்தை ஆற்­றுப்­ப­டுத்தும் நிகழ்­வா­கவும் அவர்­களின் அர­சியல் மற்றும் வாழ்க்­கையை ஈடேற்­றவும் வழி­காட்­டவும் அமைய வேண்டும் என சமத்­துவ சமநீதிக்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த கருத்து இன்­றைய யதார்த்­தத்தை தெளிவா­கவே விளக்­கு­வ­தாக அமை­கி­றது. தமிழ் மக்­களின் 30 வருட அகிம்சை போராட்டம் அதனைத் தொடர்ந்து 30 வரு­ட­கால ஆயு­தப்­போ­ராட்டம் என்­ப­னவற்றின் அடுத்த பரி­ணா­மமே இன்­றைய உடன் போக்கு போராட்­ட­மாக மாறி­யுள்­ளது. எனவேதான் 60 வருட கால போராட்­டத்தை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்தும்செல்லும் வழியை முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­றப்­பட்ட சுடர்கள் மூலம் அவர்கள் தேடு­கி­றார்கள் என்­பதை அர­சியல் தலை­மைகள் உண­ர­ வேண்டும்.
விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்­கால அர­சி­யலை அனு­மா­னித்து உணர்­வ­தற்­கான ஒரு மைய­மாகும் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்த மையத்­தி­லி­ருந்து புதிய அர­சியல் தத்­து­வத்­தையும் முன்­னெ­டுப்­புக்­க­ளையும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­த­ வேண்டும். வலி­யு­றுத்தி நிற்­க ­வேண்­டு­மென்­ப­துதான் இன்­றைய தமிழ் மக்­களின் தேவை­யாக இருக்­கி­றது. கோரிக்­கை­யாகவும் மாறு­கி­றது. தமிழ் மக்­களின் வர­லாற்று அனு­ப­வங்­க­ளைப் பார்ப்போமாயின் எதி­லுமே ஒன்றுபட்ட முடி­வுக்கு வரு­வ­தென்­பது முடி­யாத காரி­ய­மா­கவே இருந்­துள்­ளது. இரண்டு பஞ்­சாங்கம் ஏட்­டிக்குப் போட்­டி­யான தலை­மைகள், பல கட்­சிகள், பல இயக்­கங்கள், மாறு­பட்ட சடங்­குகள், முறைகள் வேறு­பட்ட போக்­குகள் என எல்­லாமே ஏட்­டிக்குப் போட்­டி­யா­கவே இருந்து வந்­துள்­ளன. அனு­ப­வங்­களை பாடங்­க­ளா­கவோ வர­லாற்றை முன்­னு­தா­ர­ணங்­க­ளா­கவோ கொண்டு நடக்­கா­ததன் கார­ண­மா­கவே இன்னும் திக்கு தெரி­யாத காட்டில் நடந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றது தமிழர் வர­லாறும் வாழ்­வி­யலும். முள்ளிவாய்கால் நினை­வேந்தல் என்­பது தமிழ் மக்கள் வாழ்­வியல் மற்றும் அர­சியல் போராட்­டத்தில் கறை­ப­டிந்த அத்­தி­யாயம் என்­ப­தை­விட புதிய பாதையை வகுக்­க­வேண்­டிய அர­சியல் தத்­து­வத்தை வகுக்­க ­வேண்­டிய ஒரு சந்­தியில் நின்றுகொண்­டி­ருக்­கிறோம் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் உண­ர­வேண்டும். அதை­வி­டுத்து முள்ளி நினை­வு­களை அஞ்­ச­லிக்­கக்­கூட மாகா­ண­ சபை, பல்­க­லை­க்­க­ழகம், அந்த கட்சி, இந்த கட்­சி­யென தனிவழி­ தே­டிக்­கொண்­டி­ருப்­பது எமக்கு இன்னும் இழுக்­கா­கவே இருக்­கி­றது. எதிர்காலத்தில் இத்­த­கைய அட்­டூ­ழியம் நடை­பெ­றா­ம­லி­ருக்க அடுத்த தலை­மு­றையை நாம் தயார்ப்­ப­டுத்­த­ வேண்டும். இதை செய்­ய­ வேண்­டி­ய­வர்கள், செய்யக்கூடி­ய­வர்கள் அர­சியல் தலைமை­களே. ஜப்­பா­னி­யர்கள் இரண்டாம் உல­கப்­போரின் வடுக்­களை தாங்­கிக்­கொண்டு எப்­படி எழுந்து நின்­றார்­களோ, அதே போல் பலஸ்தீனி­யர்கள், தென்­னா­பி­ரிக்­கர்கள் ஆகி­யோரை நாம் முன்­னு­தா­ர­ணங்­க­ளாக பார்க்­க­ வேண்டும். இன்­றைய இலங்கை அர­சி­யலின் தேக்க நிலை தமி­ழர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஆரோக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை. தமிழ் ­மக்­க­ளுக்­கான தீர்வுக்­காக எடுக்­கப்­பட்டு வரும் எல்­லா­ வகை முயற்­சி­களும் குறித்த ­புள்­ளியைவிட்டு நக­ரா­மலே நின்று கொண்­டி­ருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் காலங்கள் கடத்­தப்­ப­டு­கி­றதே தவிர அடைவு மட்­டங்­களை நோக்கி நகர்த்­தப்­ப­டுதல் என­்பது வெறும் பூஜ்­ஜி­யமா­கவே காணப்­ப­டு­கி­றது. இதற்கு நாம் யாரையும் குறை­கூறி அழுது கொட்­டு­வதில் அர்த்தம் இல்­லை­யென்ற முடி­வுக்கே வர­ வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்தில் முன்­னைய பேரி­ன­வாத தலை­வர்­க­ளாலும் அர­சாங்­கங்­க­ளி­னாலும் எவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டோமோ அதே­போன்­ற­தொரு அர­சியல் காலநிலை தான் இப்­பொ­ழுதும் காணப்­ப­டு­கி­றது. தலை­வர்­களும் ஆட்­சி­யா­ளர்­களும் புதிது புதி­தாக வந்­தாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­யா­னது இன்னும் ஊறுகாய் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க வியாக்­கி­யானம் சான்­றா­க­வுள்­ளது. வட­கி­ழக்கில் மீண்­டு­மொரு யுத்தம் நிக­ழாமல் இருக்­க­வேண்­டு­மாயின் மக்­களின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்­த­ வேண்­டு­மாயின் மக்­களின் விருப்­பத்­தையும் இணக்­கப்­பாட்­டையும் பெற்ற அரசியல் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பழைய புள்ளிக்கு தீர்வை கொண்டு வந்துள்ளார். அரசாங்கத்தின் கவனம் முழுவதும் இன்னும் பயங்கர வாதத்தை தோற்கடிப்பதிலேயே செலுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாதுள்ளது. கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப்பெற்று அந்த கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே தான் முயற்சித்து வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவருடைய கரிசனை தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லையென்பதாகும். போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடும் தீர்மானமும் தெளிவாகவே பல தடவைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நீதி முறையையோ கலப்பு நீதி விசாரணையையோ யான் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.தண்டிக்கவும் விடமாட்டேன் என தீவிரமாக கூறிவருவதை கேட்டிருக்கிறோம். ஐ.நா. சபைக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாருமில்லை என நல்லாட்சி தலைவர் கூறிவருவது தொடர்பில் நாம் இன்னும் வாழாது இருக்கிறோம். இத்தகைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றலானது தமிழ் மக்களுக்கான புதிய விதியை வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றதென்பதை நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. எதிர்காலத்தின் விதியை நோக்கி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டுமாயின் ஒன்றுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர்

ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர்


நாட்டில் நில­வி­வந்த 30 வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன. தென்­னி­லங்கை யுத்த வெற்­றியை கொண்­டா­ட­ வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது துன்ப–துய­ரங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு கோரிப் போராடி வரு­கின்ற போதிலும் பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்­க­மா­னது அதனை தமது அர­சியல் இருப்­புக்­களுக்கு ஒரு­ ச­வா­லா­கவே நோக்கி வரு­கி­றது. எனவே பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கான நீதி என்­பது ஒரு எட்­டாக்­க­னி­யா­கவே நீடித்து வரு­கின்­றது. ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்­ட­ போ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் வகையில் இது­வரை நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய அணு­கு­முறை எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்­பதே பொது­வான கருத்­தாக இருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தால் பல நம்­பிக்கை தரும் ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டாலும் ஆட்­சியின் இறு­திக்­காலம் நெருங்­கும்­போது அவை மறக்­க­டிக்­கப்­படும் சூழலே உரு­வாகி வரு­கி­றது. இதில் அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பு குறித்த கேள்­வியும் எழவே செய்­கி­றது. யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் கடந்த ஒன்­பது வரு­ட­கா­ல­மா­கவே கண்­ணீ­ருடன் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். வீதி­களில் கண்ணீர் மல்க போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென்ற அவர்­க­ளது கோரிக்கை நியா­ய­மா­ன­தாகும். அதனை யாரும் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. மாறாக அவர்­க­ளுக்கு நம்­பிக்கை தரும் வகையில் ஒரு­ பொ­றி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை வழங்­கு­வதே தேவை­யான விட­ய­மாகவுள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்­ததும் அந்த சமூ­கத்தின் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் தேசிய ஒற்­று­மைைய பலப்­ப­டுத்­தவும் வலு­வான நிரந்­தர நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க ­வேண்டும். அவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலமே ஆரோக்­கி­ய­மான அல்­லது சாத­க­மான சமா­தா­னத்தைக் காண­மு­டியும். சமா­தானம் என்னும் போது அதனை இரண்டு வகை­யாக பிரிக்­கலாம். "சாத­க­மான சமா­தானம்" என்பது ஒன்று. "பாத­க­மான சமா­தானம்" என்­ப­து மற்றொன்று. ஒரு சமூ­கத்தில் நிலவி வந்த மோதல் முடி­வுக்கு வந்­ததும் அல்­லது அந்த மோதல் அர­சாங்­கத்­தால் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் அதா­வது யுத்தம் நிறைவு செய்யப்­பட்­டதும் நாட்டில் ஒரு அமை­தி­நிலை ஏற்­படும். அப்­போது அந்­த­மோதல் ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தை கண்­ட­றிந்து அதனைத் தீர்த்து நிரந்­தர நல்­லி­ணக்­கத்­தை உரு­வாக்­கு­வதே "சாத­க­மான சமா­தானம்" எனக் ­க­ரு­தப்­ப­டு­கின்­றது. ஆனால் மோதல் ஏற்­பட்­ட­தற்­கான காரணம் தீர்க்­கப்­ப­டாமல் மோதல் நடத்­திய தரப்­பி­னரை தோற்­க­டித்­து­விட்டு ஏற்­ப­டுத்­தப்­படும் சமா­தா­ன­மா­னது "எதிர்­ம­றை­யான சமா­தா­னம்" என்று நோக்­கப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் தற்­போது எமது நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்­து­விட்­டது. ஆனால் யுத்தம் ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் யுத்­தத்தின் போது ஏற்­பட்­ட­தாகக் கூறப்­படும் வடுக்கள் இன்னும் ஆற்­றப்­ப­ட­வில்லை. எனவே நாம் "எவ்­வ­கை­யான சமா­தா­னத்தை" அனு­ப­வித்­துக் ­கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதைப் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந் நாட்டில் ஒரு நிரந்­தர சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி சமூ­கங்கள் மத்­தியில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்தி தேசிய ஒற்­று­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம் அப்­போ­தி­ருந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குக் கிடைத்­தது. ஆனால் அந்த சந்­தர்ப்பம் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­ப­துடன் மேலும் விரி­சல்கள் ஏற்­படும் வகை­யி­லான செயற்­பா­டு­களே இடம்­பெற்­றன. இச் சூழலில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் பாரிய விரக்தி நிலை­யையே நோக்கிச் சென்­றனர். சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பல்­வேறு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்த போதிலும் "சாத­க­மான சமா­தா­னத்தை" உரு­வாக்கும் நட­வ­டிக்­கைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு பொது­மக்­க­ளிடம் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. பின்னர் அது­தொ­டர்­பான அறிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் கூட முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதன்­ பின்னர் 2013 ஆம் ஆண்டு காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் பர­ண­கம ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எனினும் இத­னால்­கூட காணா­மல்­போன மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. இதற்­கி­டையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் மூன்று பிரே­ர­ணைகள் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டன. அதில் இரண்டு பிரே­ர­ணை­களில் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­களை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. மூன்­றா­வது பிரே­ர­ணையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தமீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி 2014ஆம் ஆண்டு இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரிக்க ஆரம்­பித்­தன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டுதல், நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல் போன்ற விட­யங்­களை முன்­னி­றுத்­தியே சர்­வ­தேச அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­தன. அச் சந்­தர்ப்­பத்தில் அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் பாரிய முரண்­பாட்­டுடன் இருந்­த­துடன் பகி­ரங்­க­மா­கவே வேறு­பா­டு­களைக் கொண்­டி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது. இச் சூழ­லி­லேயே யாரும் எதிர்­பாரா­த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­க குமாரதுங்கவும் இணைந்து இவ்வாட்­சி ­மாற்­றத்தை ஏற்­ப­டுத்த செயற்­பட்­டனர் என்று கூறலாம். இதற்கு நாட்டின் சிறு­பான்மை மக்கள் பாரிய ஆத­ரவை வழங்­கினர். அதிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய நம்­பிக்­கையை வைத்து நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கினர். கடந்த 2015 ஆம் ஆண்டு அதி­கா­ரத்­திற்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பு பல்­வேறு வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கியே ஆட்­சிக்கு வந்­தது. குறிப்­பாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. அதா­வது தமிழ் பேசும் மக்கள் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­ கூ­டி­ய­வா­றான சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக முன்­வைப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. அத்­துடன் யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான மீறல்கள் தொடர்­பாக உள்­ளகப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு நீதி­நி­லை­நாட்­டப்­படும் என்றும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. அதே­போன்று காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­துக்கு தீர்வு, காணா­மல்­போனோர் விட­யத்­துக்கு தீர்வு, பெண்­களை தலை­மை­யாகக் கொண்ட குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார வச­திகள், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு, வடக்கு– கிழக்கில் யுத்­தத்தால் அழி­வ­டைந்த பிர­தே­சங்­களை கட்­டி­யெ­ழுப்­புதல், தேர்தல் முறை மாற்றம் போன்ற பல்­வேறு வாக்­கு­று­தி­களை முன்­வைத்தே மைத்­திரி– ரணில் தரப்பு பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்­டது. அதே­போன்று 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் மைத்­திரி–ரணில் தரப்பு ஆட்­சிக்கு வந்து மூன்­றரை வரு­டங்கள் கடந்து விட்­ட­போ­திலும் இது­வரை வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களில் எந்­த­வொரு விட­யமும் ஆக்­க­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். காணி­வி­டு­விப்­புக்­காக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இன்னும் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டி­யுள்ள போதிலும் குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் காணி விடு­விப்பு இடம்­பெற்­றுள்­ளது. அதே­போன்று ஜன­நா­யகம் குறிப்­பி­டத்­தக்­க­ளவில் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ள­துடன் பேச்சு சுதந்­தி­ரமும் ஓர­ளவில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டே உள்­ளது. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தான பிரச்­சி­னைகள் எவை­ குறித்தும் இன்னும் சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதா­வது உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பிரச்­சி­னை­க­ளான காணா­மல்­போனோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் விவ­காரம் என்­பன இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. நீண்­ட­கால அழுத்­தங்­க­ளுக்குப் பின்னர் தற்­போது காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதற்கு ஆணை­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த அலு­வ­ல­கத்தின் நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்கள் அதில் நம்­பிக்கை வைப்­ப­தாக தெரி­ய­வில்லை. அண்­மையில் மன்­னாரில் நடை­பெற்ற அந்த அலு­வ­ல­கத்தின் மக்கள் சந்­திப்­பின்­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தனர். இதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி நிலையிலிருப்­பது தெளி­வா­கின்­றது. அதே­போன்று யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு பல இழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு இது­வரை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று யுத்­தத்­தின்­போது கண­வனை இழந்து தற்­போது குடும்­பத்­த­லை­வி­க­ளாக செயற்­படும் பெண்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. இது தொடர்பில் ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து துய­ரங்­களை எதிர்­கொண்டு வாழ்­கின்ற இம் மக்­க­ளுக்கு வாழ்­வா­தார வச­தி­களை செய்­து­கொ­டுக்­க­வேண்டும். ஆனால் அது­தொ­டர்­பிலும் இது­வரை நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. பொது­வான பொறி­மு­றையின் கீழ் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் இது­வரை அந்த அலு­வ­லகம் நிறு­வப்­ப­ட­வில்லை. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்­ள­போ­திலும் இது­வரை அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நேர­டி­யாக வாக்­கு­று­தி­களை வழங்கி அதி­கா­ரத்­துக்கு வந்த அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தென்­னி­லங்­கையில் தமது அர­சியல் இருப்­புக்­காக அக்­க­றையைக் ­காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னவே தவிர வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமை தொடர்பில் அவர்கள் பொறுமையிழந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உள்ளுணர்வுடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் காண முடிகின்றது. ஆனால் அவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதிலேயே தென்னிலங்கை தலைவர்களிடம் தயக்கம் காணப்ப டுகின்றது. எவ்வாறெனினும் தொடர்ந்து இவ்வாறு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கண்ணீருக்கு பதிலளிக்கவேண்டியது அவசியமாகும். காணாமல்போனோரின் உறவுகளின் கண்ணீரினூடாகவே காணாமல்போனோர் குறித்த அலுவலகம் பெறப்பட்டுள்ளதாக அண்மையில் அந்த அலுவலகத்தின் உறுப்பினரான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரினூடாக பெறப்பட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப் பட்ட மக்களை திருப்தியடையச் செய்வ தாக இருக்கவேண்டும். இந்நிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கடந் தும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீ ருடனும் ஏக்கத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் இனியும் தாமதிக்காது இம் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் நல்லிணக்கத்தைப் பலப் படுத்தி நிரந்தர சமாதானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்தும் விரக்தியுடனும் ஏக்கத்துடனும் இருப்பதற்கு இடமளிக்கவேண்டாம் என்பதே அனை வரதும் கோரிக்கையாக இருக்கிறது.
இரத்தம் வழிய வழியத் தாக்குதல்! வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்

இரத்தம் வழிய வழியத் தாக்குதல்! வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய அரசியலை நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் முன்னெடுத்துவருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நேரடியாக ஈழம் சென்று சந்தித்துவந்ததுடன், நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் என வெளிப்படையாக பிரகடனம் செய்தவர். அவர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வந்த சிலையில் சில நாட்களாகவே அதற்கு கடுமையாக்க பதிலளித்துவந்தார் வைகோ. இந்த நிலையில், இன்று திருச்சிக்கு வருகை தரவிருக்கும் சீமான், வைகோ ஆகியோரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் குழுமியிருந்தனர் இரு கட்சியின் தொண்டர்களும். அவர்களுக்கு இடையே சலசலப்பு சிறிதாக துவங்கி கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

போரில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை நான் எதிர்க்கின்றேன்.

அதேவேளை, கடந்த 30 ஆண்டு கால போரின் போது வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்த சாதாரண பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் சவால் விடுக்க முடியாது.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்வோர் அவர்களின் உறவினர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தார்மீகமானதல்ல.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகக் கூறிக் கொண்டு சில இடங்களில் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்த சிலர் முயற்சிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை என மனோ கணேசன் கூறியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடாகாவில் முதல்வராகப் பதவியேற்று 56 மணி நேரத்தில் பதவி விலகிய எடியூரப்பா!!

கர்நாடாகாவில் முதல்வராகப் பதவியேற்று 56 மணி நேரத்தில் பதவி விலகிய எடியூரப்பா!!

பதவியேற்ற 58 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா விலகினார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் போதிய எண்ணிக்கை இல்லாததால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சட்டசபையில் அறிவித்தார் எடியூரப்பா.

அதைத் தொடர்ந்து முறைப்படி ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது இனவழிப்பு நினைவுநாள்

மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது இனவழிப்பு நினைவுநாள்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. மே மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.

சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை ஞானகுணாளன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார். 


தொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள் நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம், ஈழத்தமிழரின் இன்றைய நிலை, தாயகத்தின் இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சு, தமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.

அடுத்துப் பேசவந்த ஐரோப்பிய நாட்டுச் செயற்பாட்டாளர் செந்தூரன் அவர்கள், மாவீரரின் தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றையும் போராட்டத்தின் நியாயத்தன்மை என்பவற்றையும் விரிவாக விளக்கி, முள்ளிவாய்க்காலோடு போராட்டம் முடிந்துவிடவில்லை, அது புதுவடிவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற செய்தியோடு, தமிழர்கள் ஒற்றுமையாக தொடர்ந்தும் எமக்கான பரப்புரைப்போரை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நடனாலயா பள்ளி மாணவி ருக்சிகா அவர்களின் வணக்க நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஒன்றியத் தலைவர் திருமதி லீலாவதி அவர்களின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் செய்தி காணொலியாக இடம்பெற்றது.தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தினரோடும் பல்வேறு வழிகளிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்காகவும் ஏதிலிகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் Red Flag பத்திரிகையின் ஆசிரியர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் Ben Hillier அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். கடந்த நவம்பர் மாதம் தமிழர் தாகயத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தில் கண்டவைகள், மாவீரர்மேலும் விடுதலைப் புலிகள் மீதும் தாயகத்து மக்கள் கொண்டிருக்கின்ற அபிமானம், அங்குள்ள மக்கள் இப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலைமை என்பவற்றைப் பேசினார். அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும்வரை விடுதலைப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு ஈழமும் பலஸ்தீனமும் தற்கால எடுத்துக்காட்டுக்கள் என்பதை முன்வைத்ததோடு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை மேற்குநாடுகள் கையாளும்முறை தொடர்பாகவும், உண்மையான புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களே என்பதை வலியுறுத்தினார்.

அவரின் உரையைத்தொடர்ந்து தாயகத்திலர் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த நிகழ்வும் அதற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களின் உந்துருளிப் பணயங்கள் அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது. அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த செல்வன் அவர்கள் முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழகத்து மக்களின் துயர்பகிர்வை வெளிப்படுத்தியதோடு, இன்று தமிழகமும் இனவழிப்பு அடக்குமுறையைப் பல்வேறு வழிகளிலும் எதிர்கொண்டிருப்பதைச் சுட்டி, இதுவோர் தொடர் போராட்டம், அனைவரும் இணைந்து எம்மின இருப்புக்காக உழைப்போமென்ற கருத்தோடு தனதுரையை நிறைவுசெய்தார்.

அதன்பின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பாக உருவாக்கப்பட்ட இரண்டு காணொலிகளின் காட்சிப்படுத்தலின்பின்னர் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்

பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,  தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2017) வெள்ளிக்கிழமை  பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு  La Chapelle   நிலக்கீழ்த் தொடருந்து நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க  தமிழீழ மக்களுக்கு  இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி  பாரிசின்  முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République  இனை அடைந்தது.
அங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.

அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுச் சுடரினை பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த செல்வராசாவின் மகனும் வாகரை வண்ணனின் சகோதரனும்  ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பேரணியில் கலந்து கொண்ட குர்திஸ்டான்  விடுதலை இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ்  மற்றும்  தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளரும் இயக்குனருமான திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களின் சிறப்புரையும்  பிரான்சு பரப்புரைப் பொறுப்பாளரின்  உறையும்  இடம்பெற்றிருந்தது.
 அவர்தனது உரையில், இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்துசெய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றியும், எதிர்கால சந்ததியினரான் குழந்தைகளுக்கு இந்த விடயங்களை உணர்த்தவேண்டி பாரிய பொறுப்பும் எம்கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

செவ்ரோன், ஒள்னேசுபுவா, திரான்சி மாணவிகளின் முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த எழுச்சி நடனங்களும் இடம்பெற்றிருந்தன. லாக்கூர்னெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆற்றுகையுடன் கூடிய நாடகமும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.