Saturday, June 23, 2018

விக்கி - சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்...! ஆனந்த சுதாகர் தயார் குற்றச்சாட்டு...!

விக்கி - சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்...! ஆனந்த சுதாகர் தயார் குற்றச்சாட்டு...!


ஆனந்த சுதாகர் விடுதலை தொடர்பில் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கூறுகின்றனர்.

இருப்பினும் அவரது விடுதலை தொடர்பில் கதைப்பதாக கூறுகின்றனரே தவிர இதற்கான முடிவை வழங்கவில்லை என அவரது தயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணி சார்பில் கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களுடன் வந்து பேசவில்லை என்று கூறிய அவர், நவோதய மக்கள் முன்னணியின் தலைவரே தற்போது அழைத்து பேசியதாகவும் உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் சாதனை ஒருபுறம்! அதே நாளில் சிவகார்த்திகேயன் செய்த பிரமாண்ட சாதனை

விஜய் சாதனை ஒருபுறம்! அதே நாளில் சிவகார்த்திகேயன் செய்த பிரமாண்ட சாதனை


கடந்த இருநாட்களாக விஜய் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் தான். விஜய்யின் பிறந்தநாள், சர்க்கார் போஸ்டர் ரிலீஸ் என ட்ரண்டிங்கில் இருந்தது. பல டேக்குகள் மில்லியன் கணக்கில் இடம் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் கடந்த முறை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கருத்தவன்லாம் பாடல் சூப்பர் ஹிட்டானது.

தற்போது இப்பாடல் யூடுயூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை #KaruthavanlaamGaleejaamHits25M என Tag போட்டு கொண்டாடிவருகிறார்கள்.
ஒரே மேடையில் சந்திக்கவிருக்கும் விக்னேஸ்வரனும் சம்பந்தன்

ஒரே மேடையில் சந்திக்கவிருக்கும் விக்னேஸ்வரனும் சம்பந்தன்


பெரும் இடைவெளிக்குப் பின்னர் வடக்கு முதலமைச்சரும், எதிர் கட்சித் தலைவரும் ஒரே மேடையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகிறது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிகின்றது. 

இந்நிலையில் கூட்டமைப்பு தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நியமிப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறத்தில் வடக்கு முதல்வர் தனிக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

இந்நிலையில் சம்பந்தன், விக்னேஸ்வரனின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிலாபத்தில் சக மாணவர்களால் தாக்குதல்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

சிலாபத்தில் சக மாணவர்களால் தாக்குதல்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்


சிலாபம் – தவறானை பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான 16 வயது மாணவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தவறானை பகுதியைச் சேர்ந்த மொஹமட் பைசூல் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏனைய சில மாணவர்களுக்கும் மொஹமட் பைசூலுக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அன்றிரவு மொஹமட் பைசூல் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைகளின் பின்னர் கடந்த 20 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

எனினும், வீடு திரும்பிய பின்னர் 21 ஆம் திகதி மீண்டும் சுகயீனம் அடைந்ததை அடுத்து, சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், இன்று அதிகாலை
உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் 26 ஆம் திகதி வரை சிறைச்சாலைகளின் பொறுப்பில் சிறுவர் நன்நடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பிணை வழங்கப்பட்ட ஏனைய இரண்டு மாணவர்களும் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா? செண்ட்ராயனை கலாய்த்த கமல்

நான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா? செண்ட்ராயனை கலாய்த்த கமல்


பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் போட்டியாளர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசி வருகின்றனர்.

சிலசமயம் சேனல் நிர்வாகம் தமிழில் சப்டைட்டில் போடும் அளவுக்கு ஆங்கில பேச்சின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

அதுமட்டுமின்றி சண்டை போடும்போது கூட ஆங்கிலத்தில் பேசி சண்டை போடுவதால் நாம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றோமா அல்லது ஹாலிவுட் படம் பார்க்கின்றோமா? என்ற சந்தேகம் கூட சிலசமயம் வருவதுண்டு.

இந்த நிலையில் மற்றவர்கள் தான் தமிழ் சரியாக வராது ஆங்கிலம் நன்றாக தெரியும், என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால், ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த செண்ட்ராயன் கூட சிலசமயம் கொச்சையான ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றி வந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த புரமோ வீடியோவில் 'கமல் ஸ்டைலான ஆங்கிலத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க, செண்ட்ராயன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். 

பின்னர் செண்ட்ராயனிடம் 'நான் பேசற இங்கிலீஷ் புரிஞ்சதா செண்ட்ராயன்? என்று கமல் கேட்க அதற்கு செண்ட்ராயன் பரிதாபமாக தலையை ஆட்ட, 'நீங்க பேசற இங்கிலீஷ் மாத்திரம் புரியும்ன்னு எப்படி நாங்க நம்பலாம்' என கூற பார்வையாளர்களும் போட்டியாளர்களும் இடைவெளி இன்றி சிரிக்கும் காட்சி இன்றைய ஹைலைட் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சவுதியில் பெண்களுக்கு அனுமதி இல்லாத 5 செயல்கள்

சவுதியில் பெண்களுக்கு அனுமதி இல்லாத 5 செயல்கள்


பெண்கள் எங்கு சென்றாலும் கட்டாயம் ஆண் பாதுகாவலர்களின் துணை இருக்க வேண்டும் எனும் சட்டம் சவூதி அரேபியா பெண்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

சமீபத்திய கொள்கை மாற்றங்களால் சவூதி பெண்கள் முதல் முறையாக கால்பந்து விளையாட்டை மைதானத்தில் காண அனுமதிக்கப்பட்டனர். இராணுவ மற்றும் உளவு வேலைகளில் இனிமேல் பெண்களும் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

32 வயதாகும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயலும்போதிலும், பழமைவாத சமூகமான சவூதி அரேபியா இன்னும் பெண்களுக்கான உரிமையை முழுமையாக வழங்கவில்லை.

சவூதி பெண்களால் தாங்களாகவே இன்னும் செய்ய முடியாத ஐந்து செயல்கள் இதோ.

1. வங்கி கணக்கு திறப்பது

ஆண் பாதுகாவலரின் அனுமதி இல்லாமல் சவூதி அரேபியா பெண்களால் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியாது.

சவூதி அரேபியா பின்பற்றும் வஹாபிய இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயமாக ஆண் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அந்த ஆண் பாதுகாவலர் பெண்களின் தந்தை, சகோதரர், வேறு ஆண் உறவினர் போன்ற யாராகவும் இருக்கலாம். சில நேரங்களில், கணவரை இழந்த பெண்களின் பாதுகாவலராக அவர்களது மகன்களே இருப்பார்கள்.

இந்த முறை மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறித்து.

2. கடவுச்சீட்டு வாங்குதல் / வெளிநாடுகளுக்கு பயணித்தல்

தங்கள் பெயரில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வாங்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் சவூதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி தேவை.

வேலை செய்யவும், படிக்கவும், சில வகையான மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும்கூட ஆண் பாதுகாவலர்களின் ஒப்புதல் வேண்டும்.

3. திருமணம் மற்றும் மணமுறிவு செய்தல்

திருமணம் செய்யவும், திருமண உறவில் இருந்து விலகவும் சவூதி அரேபியா பெண்களுக்கு ஆண் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை.

மணமுறிவுக்கு பிறகு ஏழு வயதுக்கும் அதிகமான ஆண் குழந்தைகள் மற்றும் ஒன்பது வயதுக்கும் அதிகமான பெண் குழந்தைகளை வளர்க்கும் உரிமையைப் பெறுவது பெண்களுக்கு மிகவும் கடினமானது.

வேலைக்குச் செல்லும் தங்கள் ஊதியம் பிடுங்கப்படுவதாகவும், விருப்பமற்ற திருமணம் உறவில் கட்டாயமாகத் தள்ளப்படுபவதாகவும் சௌதி பெண்கள் கூறுகின்றனர்.

4. ஆண் நண்பர்களுடன் காஃபி குடித்தல்

சவூதி அரேபியா பெண்களால் உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று ஆண் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு காஃபி குடிப்பது கூட முடியாது.

உணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இடங்கள் இருக்கும்.

குடும்பங்கள் மற்றும் பெண்கள் ஓர் இடத்திலும், தனியாகச் செல்லும் ஆண்கள் ஓர் இடத்திலும் சென்று உணவு உட்கொள்ள வேண்டும்.

5. விரும்புவதை அணிவது

பொது இடங்களில் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை முழு உடலையும் மறைக்கும் 'அபயா' எனும் ஆடையைத்தான் அணிய வேண்டும்.

இதைப் பின்பற்றாத பெண்கள் மதக் காவலர்களால் உண்டாகும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய மதகுரு, 'பெண்கள் அபயா அணிவது கட்டாயமல்ல' என்று கூறியுள்ளார்.

இது வருங்காலத்தில் உண்டாகவுள்ள மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கலாம்.
16 வயது இளைஞன் மீது கத்திக்குத்து!

16 வயது இளைஞன் மீது கத்திக்குத்து!


கனடா செய்தி : பிரம்ப்டனில் உள்ள பூங்காவிற்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கத்தி குத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது வோடடன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் வடக்கு ரூதர்ஃபோர்டு வீதி பகுதியில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் காயமுற்றிருந்த 16 வயதுடைய இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பீல் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் எல்லையை தாண்டி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் பெண் கைது

கனடாவின் எல்லையை தாண்டி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் பெண் கைது


தவறுதலாக கனடா எல்லையை தாண்டி அமெரிக்காவிற்கும் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 19 வயதுடைய குறித்த பெண், கனடாவில் இருக்கு தாயை சந்திப்பதற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த குறித்த பெண் தவறுதலாக அமெரிக்க எல்லையான வொஷிங்டன் பகுதிக்குள் சென்றுவிட்டார். இதனை அவதானித்த எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்படும் போது அவரது தயார் அங்கு இல்லை என்றும், இதனால் மொழி தெரியாத குறித்த பெண் காவல் மையத்தின் மூலம் அவரது தாயிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவரது தாய், பாஸ்போர்ட் உட்பட அனைத்து அடையாள ஆவணங்களையும் வழங்கிய போதும், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடுவிக்க மறுத்து விட்டனர்.

மேலும், அதிகாரப்பூர்வ நுழைவிடம் வழியாக அல்லாமல் வேறு வழியாக அமெரிக்க எல்லைக்குள் கால் வைக்கும் யாரானாலும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள், அவர்கள் தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி என அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மாத்தறை கொள்ளைச் சம்பவம்: பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை

மாத்தறை கொள்ளைச் சம்பவம்: பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை


மாத்தறை, உனுகொட்டுவ கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை இன்று (சனிக்கிழமை) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கம்பஹா, வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சாமர இந்திரஜித் (வயது 32) என்பவரே கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உனுகொட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் அவ்விடத்தில் பையொன்றை விட்டுச் சென்றிருந்தார். அதனை எடுப்பதற்காக சந்தேகநபரை இன்று காலை பொலிஸார் அழைத்துச் சென்றபோது, பையிலிருந்த கைக்குண்டு ஒன்றை எடுத்து பொலிஸார் மீது வீச முற்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை சுட்டுக்கொன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று கொள்ளையர்களுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். கொள்ளையர்களில் நால்வர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களில் பிரதான சந்தேகநபரே இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்டவர், பல கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதோடு, பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஆரம்பம்...!

வடக்கில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஆரம்பம்...!


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் - பேராறு பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் - பேராறு வீதியில் குறித்த வெடி பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியிலிருந்து தப்பிச் சென்ற மற்றுமொருவரைத் தேடி வட மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

நேற்றுக் காலை 5.30 மணி அளவில் குறித்த வெடி பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் புதுக்குடியிறுப்பு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினால் குறித்த முச்சக்கர வண்டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதிலிருந்து 120 ரி-56 ரக தோட்டக்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 2 கைக் குண்டுகள், 6 தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், வனப்பகுதியில் மறைந்திருப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய உடைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட சட்டம், ஒழுங்குகள் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்தான், குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும், மற்றுமொருவரையும் இரவு நேரத்தில் பயணமொன்றுக்கு அழைத்து, கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிறுப்பு வீதியில் அதிகாலை ஒரு மணியளவில் பயணித்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரினால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Friday, June 22, 2018

இளைஞர்களை கைது செய்ய நீதவான் அதிரடி உத்தரவு!

இளைஞர்களை கைது செய்ய நீதவான் அதிரடி உத்தரவு!


கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தைப்புலியை அடித்து கொன்று அதைத் தமது முகநூலில் பதிவேற்றிய இளைஞர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உள்ளாக்கிய குறித்த சிறுத்தைப்புலி பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து அப்பிரதேச இளைஞர்கள் சிலர் அந்த சிறுத்தை இறந்த பின்னர் அதனைக் கொடுமைப்படுத்தும் வகையில், பல புகைப்படங்களை எடுத்துத் தமது முகநூலில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வன ஜீவராசி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சார்பில், முகநூலில் சேகரித்த புகைப்படங்களை இறுவெட்டாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பகவானை பாராட்டி நடிகர் விவேக் டிவிட் பதிவு!

ஆசிரியர் பகவானை பாராட்டி நடிகர் விவேக் டிவிட் பதிவு!


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் வெள்ளியகரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில், ஆங்கில ஆசிரியராக இருக்கும் பகவான் என்பவருக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு எங்களை விட்டு போகாதீங்க சார் என கதறி அழுதனர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம் இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது. 

இதுகுறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும். என பதிவிட்டுள்ளார்.
விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம் : செல்லூர் ராஜூ

விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம் : செல்லூர் ராஜூ

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை வாழ்த்தியும் நாளைய முதல்வர் என போற்றியும் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை ஞானஒளிப்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம் விஜய்க்கு நாளைய முதல்வர் என பேனர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது, விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.


கற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார் பாப் பாடகர் ஏகான் (AKON)

கற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார் பாப் பாடகர் ஏகான் (AKON)

மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் பிளாக் பேந்தரின் ஒரு அங்கமானது வகாண்டா. இது சப்-சஹாரா ஆப்ரிக்கா பகுதியில் அமைந்திருப்பது போல காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு கற்பனை நகரமாகும். 

பிளாக் பேந்தர், எவஞ்சர்ஸ் படங்களை பார்த்திருந்தால், உங்களுக்கு வகாண்டா மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதிநவீன தொழில்நுட்பம், ஆடம்பரமான, ஆரோக்கியமான வாழ்க்கை நிறைந்த பகுதியாக காண்பிக்கப்படும் வகாண்டா.

அந்த கற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார் பாப் பாடகர் ஏகான். இதற்கு முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகிறார்கள்.

ஆப்ரிக்காவில் இப்படி ஒரு பகுதியா என்பது நிஜத்தில் சாத்தியமற்றது. உலகின் பெரும் ஏழை நாடுகள் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற வாழ்க்கையை தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை தேவைக்கான தண்ணீர் கூட இன்றி, சுகாதார பிரச்சனைகளால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கும் பகுதியாக இருந்து வருகிறது ஆப்ரிக்கா.

மார்வல் காமிக்ஸ்ல் இடம்பெற்றிருக்கும் வகாண்டா அளவு இல்லாவிட்டாலும். அதன் ஒரு சதவிதம் வாழ்வியல் கிடைத்தாலும் ஆப்ரிக்காவின் பெரும் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அது சொர்க்கமான எண்ணத்தை அளிக்கும் என்பது நிதர்சனம். ஒரு சதவிதம் என்ன... நூறு சதவிதம் உங்களுக்காக உருவாக்குகிறேன் என்று களமிறங்கி இருக்கிறார் பாப் பாடகர் ஏகான்.

உலகளவில் தனது பாடலுக்கும், குரலுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ஏகான். ஏற்கனவே தான் சம்பாதித்த, சம்பாதித்து வரும் பெரும்பகுதி பணத்தை ஆப்ரிக்க நாட்டு மக்களுக்காக தான் செலவழித்து வருகிறார் ஏகான். ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நீர், மின்சாரம், சாலை, கல்வி வசதிகளை மக்களுக்கு ஏகான் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.

ஏகான் ஆப்ரிக்காவின் செனகல் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் லயன்ஸ் இண்டர்நேஷனல் திருவிழாவில் தனது சொந்த கரன்ஸியை வெளியிடப்பவதாக கூறி இருந்தார். அதாவது டாலர், யூரோ, தினார், ருப்பீஸ் போல கிரிப்டோ கரன்ஸி இப்போது உலகின் பல நாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியான ஒரு சொந்த கிரிப்டோ கரன்ஸியை தான் வெளியிட போவதாக கூறி இருக்கிறார் ஏகான். அந்த கரன்ஸிக்கு ஏகாயின் என்று பெயரிட்டிருக்கிறார்.

பேஜ் சிக்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி காண்கையில், செனகல் நாட்டில் தலைநகர் அருகே ஏகான் ஸ்மார்ட் சிட்டி ஒன்று உருவாக இருக்கிறது. இந்த நகரில் மட்டும் தான் இந்த ஏகாயின் கிரிப்டோ கரன்ஸி செல்லுபடி ஆகும். மேலும், இந்த நகரம் மார்வலின் பிளாக் பேந்தர் காமிஸில் இடம்பெறும் வகாண்டா என்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட நகரை போல ஏகான் ஸ்மார்ட் சிட்டி உருவாக இருக்கிறது என்றும் அறியப்படுகிறது.

ஏகானின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் செனகல் நாட்டு அரசு இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்து உதவி இருக்கிறது. இந்த இடம் டாக்கர் (Dakar) எனும் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. மேலும் இங்கிருந்து செனகல் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையத்தை வெறும் ஐந்தே நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பாக காணப்படுகிறது.

இதுதான் ஏகானின் முதல் முயற்சி என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு முன் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா என்ற திட்டத்தின் மூலம் ஆப்ரிக்காவின் 17 நாடுகளில் சோலார் பேனல் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. அந்த பிராஜக்ட் இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, இப்போது 25 ஆப்ரிக்கா நாடுகள் என்ற குறிக்கோளுடன் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக ஏகான் நிறைய விருதுகள் வென்றார். இதில் சீன முதலீடு அதிகம் இருந்தது. ஐநா முதற்கொண்டு இந்த முயற்சிக்காக ஏகானை பாராட்டியது.

ஏகானின் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா பிராஜத்க் போலவே, ரியல் லைப் வகாண்டாவான ஏகான் ஸ்மார்ட் சிட்டி பிராஜக்டும் வெற்றிகரமாக முடிவடைந்தால்... இதுவரை காமிக்ஸ்ல் மட்டும் கண்டுவந்த வகாண்டாவை கூடிய விரைவில் செனகல் நாட்டில் தலைநகர் அருகே காணலாம்.

பெண் பத்திரிகையாளருக்கு நேரலையில் கிஸ் கொடுத்த கால்பந்து ரசிகர்!

பெண் பத்திரிகையாளருக்கு நேரலையில் கிஸ் கொடுத்த கால்பந்து ரசிகர்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் குறித்து பெண் பத்திரிகையாளர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கால்பந்து ரசிகர் ஒருவர் அந்த பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. 


ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட முக்கிய நபரும் சிக்கினார்

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட முக்கிய நபரும் சிக்கினார்

மாத்தறை நகரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூன்று கொள்ளையர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொஸ்கொட தாரக என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பல கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரா கொஸ்கொட தாரக அறியப்படுகிறார். 

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. 

இதன்போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை கூறத்தக்கது.

வீரசிங்க என்ற 69532 பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை வழங்க அனுமதி

சிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை வழங்க அனுமதி

கிளிநொச்சி - அம்பால்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த நபர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார். 

நேற்று (21) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்

இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்


இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமையானது இலங்கைக்கு சாதக தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமையானது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந் நிலையில் அமெரிக்க மனித உரிமை பேரவையிலிருந்து விலகியிருந்தாலும் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் நீக்கப்பட மாட்டது. ஐ.நா. பேரவை அது தொடர்பில் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

ஆகவே இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் விஜய்!

அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் விஜய்!


தளபதி விஜய் தற்போது சர்கார் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளார். இப்படம் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்த நிலையில் சர்கார் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

தற்போது சர்கார் ஒரு சில புகைப்படங்களை வைத்து பார்க்கையில் விஜய் அரசாங்கத்தில் ஏதோ ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளது போல் தெரிகின்றது.

இல்லையெனில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் தொழிலதிபராக நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

ஏனெனில் சமீபத்தில் வந்த ஒரு புகைப்படத்தில் கழக இணைப்பு விழா என்பதில் விஜய் தான் முதன்மையாக அமர்ந்துள்ளார், அப்படியென்றால் பிரபல கட்சி ஒன்றிற்கு விஜய் உதவி எதற்கோ தேவைப்படுகின்றது போல், அதை விஜய் மக்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துகின்றார் என்பது போல் தெரிகின்றது.

பிரேசில் - கோஸ்டாரிகா இன்றைய போட்டி! முதல் வெற்றியை பதிவு செய்யுமா பிரேசில்

பிரேசில் - கோஸ்டாரிகா இன்றைய போட்டி! முதல் வெற்றியை பதிவு செய்யுமா பிரேசில்

இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்டாரிகா விளையாடுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து விளையாடுகின்றன. பிரிவு இ பிரேசில் - கோஸ்டாரிகா போட்டி நடக்கும் நேரம் - இலங்கை நேரப்படி மாலை 5.30 மணி நடக்கும் 

இ பிரிவில் இதுவரை
செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது. 
பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது. 

இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் செர்பியா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோஸ்டாரிகா கணக்கை துவக்கவில்லை. இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா மற்றும் கோஸ்டாரிகா மோதின. இதில் கோஸ்டாரிகாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோலரோவ் அபாரமாக கோலடித்து, கோஸ்டாரிகா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 1-0 என வென்று செர்பியா 3 புள்ளிகளைப் பெற்றது. 

இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உண்டு. உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றிருந்தது. அந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லி வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோஸ்டாரிகா அணி எந்த அணிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாகும். 

கடந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து அணிகளுடன் கோஸ்டாரிகா இடம்பெற்றது. பிரிவு சுற்றில் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தாலி, உருகுவேயை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தில் பிடித்த கோஸ்டாரிகா காலிறுதியில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை பிரேசில் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்துடன் விளையாடுகிறது. 

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை இன்றைய ஆட்டங்கள் முடிவு செய்யும். அதனால், முதல் ஆட்டத்தைப் போல் மெத்தனமாக விளையாடினால், நெய்மர் கோல் அடித்து உதவாவிட்டால், பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலைக்கு பிரேசில் தள்ளப்படும்.
வியப்புக்குள்ளாக்கும் பென்ஸ் கார் விபத்து பம்பலப்பிட்டி இல் சம்பவம் - படங்கள்

வியப்புக்குள்ளாக்கும் பென்ஸ் கார் விபத்து பம்பலப்பிட்டி இல் சம்பவம் - படங்கள்


பம்பலப்பிட்டி வெள்ளவத்தையை அண்டிய பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

பம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, பாலத்தின் மீது செல்லாமல் பாலத்துக்கு அருகில் இருந்த நீர் குழாய் மீது சென்று மறுமுனையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றில் விழாமல் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நீர் குழாய் வழியால் வந்தடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது 

குறிப்பாக வேகமாக வந்த கார், பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி மற்றும் மின்கம்பம் ஆகியவற்றை உடைத்துக்கொண்டு ஆற்றுக்கு குறுக்காக செல்லும் சிறிய நீர்குழாய் மீது சென்று மறுமுனையில் இருந்த மின்கம்பம் மற்றும் விளம்பர பலகையில் மோதியுள்ளது.

உயர் ரக பென்ஸ் கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வாகனம் செலுத்திய சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தால் கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சர்காரை பிடிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரில் கெத்து காட்டும் விஜய்!!

சர்காரை பிடிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரில் கெத்து காட்டும் விஜய்!!

நடிகர் விஜயின் புதிய படமான சர்காரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை நேற்று முதல் பெரும் கொண்டாட்டமாக ரசிகர்கள் மாற்றி இருக்கின்றனர்.

இந்த சூழலில், இன்று அவரது 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிகாலை செகண்ட் லூக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஆப்பிள் மேக்புக் சகிதமாக செம கெத்தாக அமர்ந்து செல்லும் காட்சியுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களின் மகிழ்ச்சியை கூடுதலாக்கி இருக்கிறது.

சர்கார் போஸ்டரில் விஜய் பயன்படுத்தி இருக்கும் மாடல் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார். எனவே, பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரில் இருக்கும் கார் அவரது சொந்த காரையே சினிமாவிலும் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சர்கார் படத்தில் வரும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் விஜய் வாங்கியபோது ரூ.4 கோடி அடக்க விலையாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று இந்த கார் கிட்டத்தட்ட ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலான அடக்க விலையில் விற்கப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் மிக மிக தாராளமான உட்புற இடவசதியை கொண்டது. நடிகர் விஜய் பயன்படுத்தி இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் EWB எனப்படும் அதிக நீளம் கொண்ட மாடல். ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸ்டான்டர்டு வீல் பேஸ் மாடலைவிட 170மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது இந்த EWB மாடல்.

சாதாரண மாடலில் 160மிமீ நீ ரூம் எனப்படும் முழங்கால் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. ஆனால், இந்த மாடலில் 330மிமீ இடைவெளியில் கால் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. இதனால், பின்புற இருக்கையில் அமர்ந்திருக்கும்போது ஒரு அறையில் அமர்ந்திருப்பது போன்ற விசாலமான உணர்வை வழங்கும்.

பின் இருக்கைக்கு நடுவில் ஆர்ம் ரெஸ்ட்டுடன் தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் ரெஸ்ட்டில் இருக்கும் சுவிட்சுகள் மூலமாக பொழுதுபோக்கு சாதனத்தை இயக்குவதற்கான வசதி, இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதிகள் உள்ளன.

விஜய் அமர்ந்திருக்கும் கோஸ்ட் காரில் உயர்தர லெதர் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் ஒவ்வொரு அங்கமும் மனித ஆற்றலில் உருவாக்கப்படுகின்றன. அதன்படி, இந்த இருக்கைகளை தைப்பதற்கும், பொருத்துதற்கும் இரண்டு பணியாளர்கள் இரண்டு வாரங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

மிக உயர்தர பாகங்களுடன் இன்டீரியர் கொடுக்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், கதவுகளில் தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. பயணிப்பவருக்கு சொகுசான வசதியை அளிப்பதுடன், சிறந்த கையாளுமையையும் வழங்குகிறது. இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏர்பேக்குகள் மற்றும் பாதசாரிகள், விலங்குகள் குறுக்கே வருவதை 300 மீட்டருக்கு முன்னால் எச்சரிக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் செயற்கைகோள் இணைப்புடன் செயல்படும் கட்டுப்பாட்டு வசதிகள் இருப்பதால் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கும். ஓட்டுனரின் கவனம் சிதறாமலும், சாலையை விட்டு விலகாமல் இருப்பதற்காக, விண்ட் ஸ்கிரீனில் காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை காட்டும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த கார் 2,240 கிலோ எடை கொண்டது. இந்த பிரம்மாண்டமான காரை அசால்ட்டாக எடுத்துச் செல்வதற்காக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6.6 லிட்டல் வி12 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 563 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட எடை கொண்ட கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளுக்குள் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ் தரும் என்பது நிறுவனம் தரப்பில் தரப்படும் தகவல். நடைமுறையில் 3 கிமீ மைலேஜ் என்பதே இந்திய சாலைகளுக்கு சரியாக இருக்கும் என்று கருதலாம்.

தமிழ் சினிமா உலகில் நடிகர் ஷங்களுக்கு அடுத்து ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய சினிமா பிரபலம் நடிகர் விஜய்தான். கார் பிரியரான விஜய்யிடம் ஏராளமான சொகுசு கார் மாடல்கள் இருக்கின்றன. இருப்பினும், ரோல்ஸ்ராய்ஸ் மீதான நீண்ட நாள் பிரியத்தை தீர்க்கும் விதத்தில், 2013ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார்.

இதுவரை வெளியுலகுக்கு அதிகம் தென்படாமல் இருந்த தனது காரையே இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், போஸ்டருக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட்தா, அல்லது படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. படத்தில் இருந்தால், அது விஜய் காரா அல்லது வேறு கார் பயன்படுத்தப்பட்டதா என்று தெரிந்துவிடும்.

எனினும், இதனை படக்குழு தெரிவித்தால் மட்டுமே உறுதியாக நம்ப இயலும். ரோல்ஸ்ராய்ஸ் கார்களை புக்கிங் செய்தவுடன் எளிதாக வாங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு என்பது தெரிந்தது. இந்த சூழலில், நடிகர் விஜய்க்கு இருக்கும் மாஸ் ஹீரோ மவுசு காரணமாாக, அவருக்கான புக்கிங் எளிதாக ஏற்கப்பட்டு கார் டெலிவிரி கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


சர்காருக்காக ரோல்ஸ்ராய்ஸ் காரில் சர்காரை நோக்கிய அரசியல் பயணமாகவே இந்த படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்மையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட விஜய் முதல்வராக வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லை என்று கூறியது நினைவுகூறத்தக்கது.
’கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

’கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!


இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக சிம்பன்சி குரங்குடன் நடிகர் ஜீவா நடித்துள்ள 'கொரில்லா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விக்ரம்வேதா புகழ், சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 

கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நகைச்சுவைப் படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த ’காங்’ என்ற சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடித்துள்ளது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் சிம்பன்சி குரங்கு நடிப்பது இதுதான் முதன்முறை. 


இப்படி ஏராளமான அம்சங்களுடன் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கொரில்லா’ பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பன்ஸி முன்னால் நடந்துவர, அதன்பின்னால் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடந்து வருவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.
கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமா? இதை படியுங்க முதல்ல...........!

கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமா? இதை படியுங்க முதல்ல...........!


உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். 

அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். 

உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். 

தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். 

அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். 

இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்கள் வீட்டு கதவை தட்டும்.
சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். 

இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

சிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரராவும் கருத்து வௌியிட்டார். 

அதேநேரம் சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக வனஜிவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியுள்ளார்.
ஆக்ரோஷமான பெண்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்?

ஆக்ரோஷமான பெண்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்?


வெலிங்டன்: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது.இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. 

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 

இந்த ஆய்வின் முடிவை அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. 

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "X" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "Y" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.

கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "Y" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. 

இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை துப்பாக்கிச் சூடு ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது

மாத்தறை துப்பாக்கிச் சூடு ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது

மாத்தறை நகரத்தில் இன்று காலை பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸர் உயிரிழந்துள்ளார். 

கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தப்பிச்சென்ற கொள்ளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மாத்தறை ஹுனுகொட்டுவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏனைய தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். 

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
லிபியா படகுகள் நீரில் மூழ்கியதில் 200 பேர் பலி

லிபியா படகுகள் நீரில் மூழ்கியதில் 200 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர்.

இதனை ஐக்கியநாடுகளின் அமைப்புகளும் உறுதிசெய்துள்ளன.லிபியா கடற்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய்கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய 100 பேரில் ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர் என யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.

அதேவேளை அதே நாளில் 130பேருடன் ரப்பர் படகொன்று நீரில் மூழ்கியதில் 70 பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

இதேவேளை காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள் தங்களுடன் படகில் பயணித்தவர்களில் 50ற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பெருமளவு அகதிகளும் குடியேற்றவாசிகளும் கடலில் தொடர்ந்து பலியாவது குறித்து யுஎன்எச்சீஆர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.