Saturday, June 30, 2018

தமிழ் தெரிந்தால் எந்த மொழியும் கற்கலாம்- மிஸ் இந்தியா அனுக்ரீத்தி

தமிழ் தெரிந்தால் எந்த மொழியும் கற்கலாம்- மிஸ் இந்தியா அனுக்ரீத்தி


தமிழ் தெரிந்தால் எந்த மொழியும் கற்கலாம் என்று  மிஸ் இந்தியா அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.

என்னை தைரியமான பெண்ணாக வளர்த்த, அழகிப் போட்டிக்கு ஊக்குவித்த எனது தாயாருக்கு நன்றி. உலக அழகிப்போட்டி முடிந்த பிறகே மீண்டும் படிப்பைத் தொடர்வேன்.

உலக அழகிப் போட்டியில் வெல்வோர் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

தமிழ் மொழியை கற்பது கடினம், பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். தமிழ் கலாசாரம், அருமை தெரிந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும்.

தமிழகத்தை சேர்ந்தவர் இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சி. தற்போது உலக அழகிப் போட்டிக்கு தயாராகி வருகிறேன், அதற்காக கவனம் செலுத்தி வருகிறேன் என்று மிஸ் இந்தியா அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முழுவதும் பரபரப்பு 4-3 என்று பரிதாபமாக வெற்றியை தவறவிட்ட மெஸ்ஸி அணி

ஆட்டம் முழுவதும் பரபரப்பு 4-3 என்று பரிதாபமாக வெற்றியை தவறவிட்ட மெஸ்ஸி அணி


உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டீனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

உலககோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அர்ஜென்டீனா பிரான்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4 கோல்களும் அர்ஜென்டீனா அணி 3 கோல்களும் அடித்தன இதனால் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. 

அர்ஜென்டீனா தொடரிலிருந்து வெளியேறியது.

வெளியான ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

வெளியான ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. பத்து படத்தில் நடித்திருந்தால் கூட கிடைக்காத புகழை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒருசில நாட்களில் ஓவியா பெற்றுவிட்டார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் இருந்தாலும் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் ஓவியாவின் ஞாபகம் தான் வரும். அவரது பெயரால் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி இன்னும் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஓவியா ஒப்புக்கொண்ட படங்களில் ஒன்று 'களவாணி 2'. ஓவியா அறிமுகமான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் ஹீரோ விமல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் 'களவாணி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு உதவி செய்துள்ளார். 

விமல், ஓவியா அட்டகாசமாக உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ஓவியாவின் ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.
கருணா அம்மனுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு: ஜெனீவாவில் திடீர் சாட்சி

கருணா அம்மனுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு: ஜெனீவாவில் திடீர் சாட்சி


ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் தடவையாக, விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதியும், பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்தவகையில், திருக்கோவில் பகுதியில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தான் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக சாட்சி வழங்க தயார் என, புலம்பெயர்ந்தவரான கலாநிதி போல் நிவுமன் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி 600 பொலிஸ் அதிகாரிகள் திருக்கோவில் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டமாய் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சில தரவுகளின் அடிப்படையில் அந்த சந்தர்ப்பத்தில் 774 பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் தனியார் ஆதரவுடன் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி

ஜப்பானில் தனியார் ஆதரவுடன் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி


ஜப்பானில் தனியார் ஆதரவுடன் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியில் முடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டு அரசின் ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்லொரேஷன் ஏஜென்ஸி (Japan Aerospace Exploration Agency) க்குப் போட்டியாக சில தனியார் அமைப்பு ஆதரவுடன் ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 

மோமோ 2 எனப்படும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண் நோக்கிப் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜூலை 6, 7ல் வடகொரியா பயணம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜூலை 6, 7ல் வடகொரியா பயணம்


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ (Michael R. Pompeo) ஜூலை 6, 7 தேதிகளில் வடகொரியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பைத் தொடர்ந்து அவர் வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திக்கும் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை வரும் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணம் எனக் கூறி அதனை அமெரிக்கா ஒத்திவைத்தது. 

இந்நிலையில் அதே 6-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வடகொரியாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்

13 வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்


Tamil News : திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 9ம் கட்டை, சூரியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அயல் வீட்டிலுள்ள பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #Trinco
சுழிபுரம் சிறுமி படுகொலை: சந்தேகநபர் இருவருக்கும் விளக்கமறியல்

சுழிபுரம் சிறுமி படுகொலை: சந்தேகநபர் இருவருக்கும் விளக்கமறியல்


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் 6 வயது பாடசாலை சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்ட குறித்த 2 பேரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன் போது உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சிறுமி படுகொலையை கண்டித்து யாழில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் மீண்டும் மிரட்டிய  மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம்...!

பந்துவீச்சில் மீண்டும் மிரட்டிய மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம்...!


கனடா T-20 லீக் போட்டியின் நேற்றைய போட்டியில் லசித் மலிங்கா அபாரமாக பந்துவீசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

குளோபல் T-20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடந்து வருகிறது.

நேற்றைய போட்டியில் மொன்றியல் டைகர்ஸ் அணியும், வின்னிபெக் ஹவ்க்ஸ் அணியும் மோதிய நிலையில் வின்னிபெக் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதே சமயத்தில் மொன்றியல் டைகர்ஸ் அணித்தலைவர் லசித் மலிங்காவின் பந்துவீச்சு நேற்றைய போட்டியில் மிக சிறப்பாக இருந்தது.

4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 19 ஓட்டங்களை விட்டு கொடுத்து டேவிட் வார்னர் மற்றும் டேரன் பிராவோ விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் இப்போட்டியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்த நிலையில் வெறும் 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதிகள் சென்ற படகு விபத்து..! பரிதாபமாக 3 குழந்தைகள் உயிரிழப்பு – 100 பேர் மாயம்

அகதிகள் சென்ற படகு விபத்து..! பரிதாபமாக 3 குழந்தைகள் உயிரிழப்பு – 100 பேர் மாயம்


லிபியாவின் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேரைக் காணவில்லை எனவும் கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள காரபவுலி என்ற இடத்திலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்ற குறித்த படகு இயந்திரம் வெடித்து தீப்பிடித்தமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குறித்த படகில் 120 அகதிகள் சென்றநிலையில் 16 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் படகில் பயணம் செய்தவர்கள் மொராக்கோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் எனவும் அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.சமையல் எரிவாயு விலை குறைப்பால்- தேநீர் விலையும் 5 ரூபாவால் குறைப்பு

சமையல் எரிவாயு விலை குறைப்பால்- தேநீர் விலையும் 5 ரூபாவால் குறைப்பு


ஒரு கோப்பை தேநீரின் விலை நாளை முதல் 5 ரூபாவால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு வெளியாகும் அஜித் படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்


சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகும் விஸ்வாசம் படம் அடுத்த பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.

இந்நிலையில் தற்போதுவரை 40 விகித படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஸ்வாசம் படம் வெளியாகின்றது.

இந்த செய்தியால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி பொங்கலுக்கு தற்போது அஜித்தின் விஸ்வாசம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கோரவில்லை என்கிறார் பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கோரவில்லை என்கிறார் பிரதமர்


அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் நியூயோர்க் டைம்ஸில் வெளியான செய்தியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

‘இவ்விடயத்துக்காக நாம் எவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பில் நிறைய எழுதப்பட்டுள்ளபோதும், இதில் எமது தேவைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். 

இப் பேச்சுவார்த்தைக்கு நான் பொறுப்பாக இருந்தபோது,அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் என்னுடன் இருந்தார். நாம் சீனப் பிரதமர் லீ மற்றும் ஜனாதிபதி ஷீ ஆகியோருடன் கலந்துரையாடினோம். இது மிகவும் கடுமையானதொரு ஒப்பந்தம். என்றபோதும் இருதரப்புமே இதில் ஏதோவொரு பயனையடையக்கூடிய வகையிலான இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது’ என்றும் பிரதமர் கூறினார்.

அத்துடன் இதன்மூலம் கிடைக்கும் பயன்களை நேரில் பார்வையிடுவதற்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றமைக்காக சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை குழு உள்ளிட்ட பலருக்கு பிரதமர் நன்றி கூறியுள்ளார்.

நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது இங்கிருந்த மிகப்பெரிய நீச்சல்தடாகமாக அம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கியது. எனினும் அடுத்த வருடம் முதல் இதற்குள் கப்பல் வந்து செல்வதைக் காணமுடியும். வெள்ளை யானைகளை நாம் பச்சையாக மாற்றி வருகின்றோம் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சஸ்காட்செவான் பகுதியில் கோர விபத்து...! 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சஸ்காட்செவான் பகுதியில் கோர விபத்து...! 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!


தென்மேற்கு சஸ்காட்செவான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நெடுஞ்சாலை 4 இல், இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 முதியவர்கள், 3 சிறுவர்கள் மற்றும் 1 பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் றோயல் கனேடியன் மவுண்ட் பொலிஸார் கூறியுள்ளனர்.

Friday, June 29, 2018

தெஹிவளையில் ஏற்பட்ட அனர்த்தம் - 17வது மாடியில் இருந்து விழுந்த இருவர் பரிதாபமாக பலி

தெஹிவளையில் ஏற்பட்ட அனர்த்தம் - 17வது மாடியில் இருந்து விழுந்த இருவர் பரிதாபமாக பலி


தெஹிவளை, அனாகரிக்க தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் தொகுதியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

17 மாடியை கொண்ட வீட்டுத் தொகுதியின் 14வது மாடியில் இருந்து விழுந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பிபிலை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபர் எனவும், மற்றைய நபர் 45 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டடத்தின் லிப்ட் பொருத்தும் போது குறித்த இருவரும் இவ் விபரீதத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிராம்டன் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பிராம்டன் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு


பிராம்டன் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெர்மனியில் பயிற்சியின்போது போர்க்கப்பலில் வெடித்து சிதறிய ஏவுகணை

ஜெர்மனியில் பயிற்சியின்போது போர்க்கப்பலில் வெடித்து சிதறிய ஏவுகணை


ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர்க்கப்பலில் ஏவுகணை வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியின் கடற்படைக்கு சொந்தமான அந்த போர்க்கப்பல் ஆர்டிக் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. 

அப்போது, ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இலக்கை நோக்கி சீறி பயணிக்காமல், கப்பலிலேயே வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 2 வீரர்கள் காயமுற்றனர். சம்பத்தைத் தொடர்ந்து, போர்ப்பயிற்சியில் இருந்த கப்பல்கள் வில்ஹெல்ம்ஷேவன் (Wilhelmshaven) துறைமுகத்துக்கு திரும்பின.
சிறுமி படுகொலை சம்பவம்...! மேலும் 2 பேர் இன்று சிக்கினர்...!

சிறுமி படுகொலை சம்பவம்...! மேலும் 2 பேர் இன்று சிக்கினர்...!


மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா என்ற 6 வயது சிறுமி சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கிய பிரதான சந்தேகநபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஏனைய சந்தேகநபர்கள் ஐந்து பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர், கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்றதை அவர்கள் கண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவ தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

“தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என நம்பப்படும் நபர் ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டார். 

அவர்கள் இருவரும் சிறுமியின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக தகவலைப் பெற்றுக்கொள்ள முதல்வன் முயற்சித்தான். எனினும் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் முழுமையாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
வார இறுதியில் வெப்பமான காலநிலை: வானிலை மையம் எச்சரிக்கை

வார இறுதியில் வெப்பமான காலநிலை: வானிலை மையம் எச்சரிக்கை


கனடாவில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் வெப்பமான காலநிலை அதிகமாக காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சுற்றுசூழல் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, GTA-வில் உள்ள வெப்பநிலையானது வார இறுதியில் தீவிர நிலைகளாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கள் வரை வெப்பநிலை பகலில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை 31 C ஆகவும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 36 C ஆகவும் இருக்கும் என குறிப்பிப்பட்டுள்ளது.

இரவில் வெப்பம் சிறிய அளவில் குறைந்து 20 களில் வந்து நிற்கலாம் எனவும், இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறிப்பிடத்தக்க வெப்ப நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், வெளியில் அலைந்து வேலை செய்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: சந்தேகநபரை தேடும் பொலிஸார்

ரொறன்ரோ துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: சந்தேகநபரை தேடும் பொலிஸார்


ரொறன்ரோ பகுதியில் உள்ள பொது விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் ஏற்கனவே ஒருவரை கைது செய்திருந்த நிலையில் 2 ஆவது சந்தேகநபரை தேடி வருகின்றனர்.

அந்த கட்டிடத்தில் இருந்த காணொளிகள் மூலம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப் பகுதிய சேர்ந்த Mark Thompson என்ற 39 வயதுடையவரை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 416-808-7400 or Crime Stoppers anonymously 416-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்கோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை வீரர்களுக்கு கனடா செல்ல அதிரடி தடை..! ஆனால் மலிங்கா

இலங்கை வீரர்களுக்கு கனடா செல்ல அதிரடி தடை..! ஆனால் மலிங்கா


இலங்கை அணி வீரர்களுக்கு கனடாவில் இடம்பெறும் T-20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் திசார பெரேரா, தசுன் சானகா மற்றும் இசுறு உதான ஆகியவர்களுக்கு கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக விலை குறைப்பு

சமையல் எரிவாயு விலை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,538 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 55 ரூபாயாலும், 2.3 கிலோகிராம் 25 ரூபாயாலும் குறைவடைகின்றது. 

வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

The price of a 12.5kg domestic Litro Gas cylinder was reduced by Rs. 138 with effect from midnight today the Consumer Affairs Authority said today.

Accordingly, the reduced price of a domestic gas cylinder will be Rs. 1538

The decision was made by the Consumer Affairs Authority, together with the Cost of Living Committee.
வெறும் 548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு

வெறும் 548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு

வெறும் 548 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்திய தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை வெளியிட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஐ.நா., சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் பாலியல் தொழிலில் அடிமை, பணிப்பெண் சேவை, பெண் கடத்தல், கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளில் பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை அறிவித்தது. 

கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை, 548 பேரிடம் மட்டுமே ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள மற்ற நாடுகளை காட்டிலும், பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் கடந்த ஆண்டுகளை விட, இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகவும், கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 548 பேர் குறித்த விவரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

மியான்மரில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியிருந்தது. 

இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாத இயக்கமான என்.எஸ்.சி.என்.(கப்லாங்) தீவிரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மையில் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். 

மற்றொரு தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலை என்.எஸ்.சி.என்.(கப்லாங்) தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் இசாக் சுமி உறுதி செய்துள்ளார்.
வாவியிலிருந்து ஆண் ஒருவரின்  சடலம் மீட்பு

வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பண்டாரகம, ரம்புக்கண பிரதேசத்தில் பொல்கொட வாவியில் உயிரிழந்த நிலையில் மிதந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய, வீரமாவத்தையைச் சேர்ந்த 52 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளது.
ஜெர்மனி மட்டும் இல்லாது FIFA உலக கோப்பை  நாக் அவுட்டில் 6 சாம்பியன்கள்

ஜெர்மனி மட்டும் இல்லாது FIFA உலக கோப்பை நாக் அவுட்டில் 6 சாம்பியன்கள்

இந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது நடப்பு சாம்பியனான ஜெர்மனி. லீக் பிரிவில் மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல்வியுடன், பிரிவு சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. 

27/06/2016 இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மிக சொதப்பலாக விளையாடியது. கடைசியில் தென்கொரியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 

இந்த உலகக் கோப்பையில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகளில் ஜெர்மனிக்கே முதலிடம் கிடைக்கும். உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006ல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010ல் முதல் சுற்றில் வெளியேறியது. 2010ல் வென்ற ஸ்பெயின், 2014ல் வெளியேறியது. 2014ல் வென்ற ஜெர்மனி, தற்போது முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

இதற்கு முன் 1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002ல் முதல் சுற்றில் வெளியேறியது. இதுவரை 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இத்தாலி, தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து இந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை. முன்னேறிய சாம்பியன்கள் மற்ற 7 நாடுகளும் தகுதி பெற்றன. அதில் ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, இங்கிலாந்து ஆகிய 6 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனான ஜெர்மனி மட்டுமே முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதுகின்றன ; முழு விபரம்

நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதுகின்றன ; முழு விபரம்

FIFA உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது, 

21வது FIFAஉலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்ற 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்கி, ஜூலை 3 வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். FIFA வின் சார்பில் உலகெங்கும் உள்ள 5 கால்பந்து கூட்டமைப்புகள் உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற அணிகளே உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. 

அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் வென்று, 14 நாடுகள் உலகக் கோப்பை வந்தன. 

ஆசியாவில் இருந்து 5, ஆப்பிரிக்காவில் இருந்து 5, தென் அமெரிக்காவில் இருந்து 5, வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. 

தற்போது முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து, நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. இதில் ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் முன்னேறின. 

இதைத் தவிர ரஷ்யா, பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுகல், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள் நாக் அவுட் முன்னேறியுள்ளன. அறிமுக அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து, நடப்பு சாம்பியன் ஜெர்மனி ஆகியவை வெளியேறின. 

ஆசியா பிரிவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகியவை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன. இதில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் முன்னேறியுள்ளது. 

ஆஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென்கொரியா முதல் சுற்றுடன் வெளியேறின. ஆப்பிரிக்கா வாஷ்அவுட் ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனீஷியா ஆகியவை உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும் முதல் சுற்றுடன் வெளியேறின. 

நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது ஏமாற்றியது. அதே நேரத்தில் நைஜீரியா, துனீஷியா, செனகல் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன. 

வட அமெரிக்கா பிரிவு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற கோஸ்டாரிகா, மெக்சிகோ, அறிமுக அணியான பனாமா ஆகியவை உலகக் கோப்பையில் விளையாடின. இதில் மெக்சிகோ மட்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

தென் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகியவை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் எதிர்பார்த்ததை போலவே முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே ஆகியவற்றுடன் கொலம்பியாவும் நாக் அவுட் பிரிவுக்கு முன்னேறியது. பெரு வெளியேறியது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்களுக்கான முழு அட்டவணை: 

ஆட்டம் எண் 49. ஜூன் 30 - இரவு 7.30 - கசான் : பிரான்ஸ் - அர்ஜென்டினா

ஆட்டம் எண் 50. ஜூன் 30 - இரவு 11.30 - சோச்சி : உருகுவே - போர்ச்சுகல்

ஆட்டம் எண் 51. ஜூலை 1 - இரவு 7.30 - மாஸ்கோ : ஸ்பெயின் -ரஷ்யா 

ஆட்டம் எண் 52. ஜூலை 1 - இரவு 11.30 - நிஷ்னி நோவ்கோராட் : டென்மார்க் - குரேஷியா 

ஆட்டம் எண் 53. ஜூலை 2 - இரவு 7.30 - சமாரா : மெக்சிகோ - பிரேசில் 

ஆட்டம் எண் 54. ஜூலை 2 - இரவு 11.30 - ரோஸ்டோவ் ஆன் டான் : ஜப்பான் - பெல்ஜியம் 

ஆட்டம் எண் 55. ஜூலை 3 - இரவு 7.30 - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : ஸ்வீடன் - சுவிட்சர்லாந்து 

ஆட்டம் எண் 56. ஜூலை 3 - இரவு 11.30 - மாஸ்கோ : கொலம்பியா - இங்கிலாந்து

Thursday, June 28, 2018

கிளிநொச்சியில் மக்களை துரத்த இராணுவம் செய்த வேலை..! சிறுத்தை விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்!

கிளிநொச்சியில் மக்களை துரத்த இராணுவம் செய்த வேலை..! சிறுத்தை விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்!


அன்மையில் கிளிநொச்சி காட்டுப்பகுதிக்கு அன்மையில் அமைந்திருக்கும் கிராமம் ஒன்றிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து அதை மக்கள் அடித்து கொலை செய்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு சிறுத்தையை கொலை செய்தவர்கள் என்னு கைது செய்யப்பட்டு 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுத்தை விவகாரம் சமூகவலைத்தளங்களில் பரவலான பேசுபொருளாக அன்மைக்காலத்தில் இருக்கிறது.

ஏன் சிறுத்தை ஊருக்குள் வந்தது அதை ஏன் மக்கள் தாக்க முற்பட்டார்கள் என்பதற்கான உண்மை நிலவரம் தற்போது வெளிவந்திருக்கிறது.

அதாவது இரணைமடு காட்டுக்குள் இலங்கை இராணுவத்தினர் சீன அரசாங்கம் வழங்கிய 12000 பொருத்து வீடுகளை நிர்மானித்து வருகிறது.

அதனால் பெரியளவில் காடுகளை அழித்து உள்ளனர். இதனால் காட்டு விலங்குகள் கிராமங்களை நோக்கிபடையெடுக்கின்றன.

அதைவிட இன்னொரு விடயம் ஊர் மக்களால் பேசப்படுகிறது "காடுகளை அண்டியுள்ள கிராம மக்களை அந்த இடங்களில் இருந்து எழுப்பி துரத்துவதற்காக இராணுவம் காட்டுக்குள் இருக்கும் விலங்குகளை அச்சுறுத்தல் மூலம் தூண்டிவிடுகிறார்கள்" என்று கூறப்படுகின்றது.

மேலும் தமிழ் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் தீவிர முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த வனவிலங்குகளை ஊருக்குள் விரட்டி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளது.

அன்மைக்காலமாக தென்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மதம் பிடித்த யானைகளை வடக்கு காடுகளில் விடப்பட்டுள்ளது அவை தமிழர்களின் விவசாய நிலங்களை அழித்து வருகின்றது.

இப்படியாக வனவிலங்குகளை அச்சுறுத்தல் மூலம் தூண்டிவிட்டு அவற்றை மக்களின் குடியிருப்புக்களை நோக்கி செல்ல வைத்து அங்கிருக்கும் மக்களை அந்த பிரதேசங்களில் இருந்து துரத்தியடிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரியவருகிறது.

தமிழ் இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த விடயங்களையும் அவதானிக்கபட வேண்டியுள்ளது.
------------------------------------------------Tamilwin News-----------------------------------------------
போதைக்கு அடிமையாகி தெருத்தெருவாக பிச்சை எடுத்த பிரபல நடிகர்

போதைக்கு அடிமையாகி தெருத்தெருவாக பிச்சை எடுத்த பிரபல நடிகர்


பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சய்தத் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சய்தத் வாழ்க்ககை வரலாறு திரைப்படம் 'சஞ்சு' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

சஞ்சய்கபூர் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிறுவயதில் சஞ்சய்தத் போதைபொருளுக்கு அடிமையானது குறித்தும் போதைப்பொருள் வாங்க அவர் தெருத்தெருவாய் பிச்சை எடுத்த மற்றும் குப்பை பொறுக்கிய காட்சிகள் இருப்பதாக ரன்பூர் கபூர் தெரிவித்துள்ளார். 

சுமார் பத்து ஆண்டுகள் போதை வாழ்க்கை வாழ்ந்த சஞ்சய்தத் பின்னர் கஷ்டப்பட்டு அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். 

இவ்வாறு சஞ்சய்தத் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் 'சஞ்சு' திரைப்படம் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்தவின் செயற்பாட்டிற்கு உரிய விசாரணை வேண்டும்: பொன்சேகா

மஹிந்தவின் செயற்பாட்டிற்கு உரிய விசாரணை வேண்டும்: பொன்சேகா


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

அத்துடன் வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். 

அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாககவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சேவாக்கை போல் என்னையும் செஞ்சுராதீங்க...! அஸ்வின்

சேவாக்கை போல் என்னையும் செஞ்சுராதீங்க...! அஸ்வின்


இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரவிந்திர ஜடேஜா கழற்றிவிடப்பட்டு சாஹல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் புதுஜெர்சி அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பட்டது. 

இதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், நான் அணிக்கு தேர்வாவதும், பெஞ்சில் அமரவைக்கப்படுவதும் என்னுடைய கிரிக்கெட்டை அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்து அமையும். இது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. 

மேலும், எனக்கும் தோனிக்கும் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தோனிக்கும், சேவாக்குக்கும் மோதல் இருப்பதாக கூறி சேவாக் கதையை முடித்துவிட்டது போல் என் கதையையும் முடித்துவிடாதீர்கள். தோனியுடன் எனக்கு எந்தவிதமான பனிப்போரும், மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவிக்காகக் காத்திருக்கும் தனுஷ்...!

சாய் பல்லவிக்காகக் காத்திருக்கும் தனுஷ்...!


ஒரு பாடலைப் படமாக்க வேண்டி இருப்பதால், சாய் பல்லவி எப்போது வருவார் எனக் காத்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்தை, பாலாஜி மோகன் இயக்குகிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே. எடிட் செய்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதமே இந்தப் படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. மார்ச் முதல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நடைபெற்றதால், ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் இறுதியில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கி, சமீபத்தில் சண்டைக் காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியிருக்கிறது. தனுஷுடன் சாய் பல்லவி டூயட் பாடும் இந்தப் பாடலைப் படமாக்க தனுஷ் தயாராக இருக்கிறார். ஆனால், சாய் பல்லவி சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருவதால், அவரால் தேதிகள் ஒதுக்கித் தர முடியவில்லை.

செல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே.’ படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு ஒரே ஷெட்யூலில் மீதமுள்ள காட்சிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், அங்கு பிஸியாக இருக்கிறார் சாய் பல்லவி. எனவே, அவர் ‘என்.ஜி.கே.’ படத்தை முடித்துவிட்டு வரும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.
தாய்மை அடைய காத்திருக்கீங்களா? முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க

தாய்மை அடைய காத்திருக்கீங்களா? முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க


திருமணம் ஆனதும் தம்பதியர் சிலர், சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைப்பார்கள். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே சமூகமும், உறவினர்களும் ‘ஏதாச்சும் விசேஷம் இருக்கா?’ என்கிற கேள்வியைத்தான் கேட்பார்கள்.

பிறரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உலக அழகனும், உலக அழகியும் திருமணம் செய்திருந்தாலும் கூட ஆறு மாதத்திற்கு மேல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே மட்டும் வாழ முடியாது. திருமண உறவு வலுப்பட குழந்தைகள் முக்கியம் என்பதுதான் அவர்களது கருத்து.

புதிதாக திருமணம் ஆனவர்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்புவார்கள். முதலில் உங்கள் உடலை புரிந்து கொள்ளுங்கள். பெண் வயதுக்கு வந்தபின், சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை கருமுட்டைகள் வளர்ச்சி பெற்று ஃபலோபியன் குழாய் வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில், இதற்கு ஓவுலஷன் டைம் என்று பெயர்.

இந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால்தான் சீக்கிரமாக கர்ப்பம் தரிக்க முடியும். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால், இந்த காலகட்டத்தில் உங்கள் ஃபலோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். பொதுவாக, ஆணின் விந்து சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

கரு முட்டை வெளிவரும்போது, அதாவது ஒவுலேஷன் நடக்கும்போது, அதற்கு 2 நாட்கள் முன்னாலும், 2 நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (ஸர்விகல் ம்யூகஸ்) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகிவிடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (பெல்லி க்ரம்ப்ஸ்), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (ஸ்பாடிங்க்) காணப்படும். மேலும், உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளிவந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை அறிவதன்மூலம் இதை கண்டுபிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள்.

4. உங்களுக்கு மாத விலக்கு சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு நாள் சரியாக 14-ஆம் நாளன்று நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.

உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31 - 14 = 17. எனவே, 17-ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இதுதவிர ஒவுலேஷன் டெஸ்டிங் கிட்ஸ் போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லிவிடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்பவர்கள், உடலுறவின்போது எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (பேபி ஆயில்) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்தவரை எந்த விதமான லூப்ரிகன்ட் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள். இதை வெஜைநல் டச் என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். கர்ப்பமடைய முயற்சி செய்பவர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

மற்றொரு முக்கியமான விஷயம் தம்பதியர்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். துரித உணவு, குடி, புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை விட்டுவிட வேண்டும். உங்களின் ஆரோக்கியம்தான், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உங்களை எவ்வாறு பாதிக்கும்?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உங்களை எவ்வாறு பாதிக்கும்?


India : அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 என்ற அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.68.25 என்ற அளவில் இருந்தது. நேற்று புதன்கிழமை 36 காசுகள் சரிந்து ரூ. 68.61 என்ற அளவுக்கு கீழே இறங்கியது. ஆனால் இன்று ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து ரூ.69.10 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சரிவு வரலாற்றில் இல்லாத சரிவாகும். இதே நிலை தொடர்ந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70-ஐ தொடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு சரிவடைய காரணங்கள் 

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு கச்சா எண்ணெய் மதிப்பு அதிகரித்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை கண்டிருந்த கச்சா எண்ணெய்யின் மதிப்பு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 80 டாலர் வரை எட்டியது. கடந்த 6 நாட்களில் கச்சா எண்ணெயின் விலை சராசரியாக 78 டாலர் என்ற அளவில் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நவம்பருக்குள் ஈரானிமிடருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் மீண்டும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு இதுவும் ஒரு காரணம்

அமெரிக்க – சீனா வர்த்தகப் போர்: கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. பல்வேறு சரக்குகளுக்கு இரு நாடுகளும் இறக்குமதி வரியை விதித்து வருவதால் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. மேலும் வர்த்தகப் போர் நடைபெற்று வருவதால் சந்தையில் பல்வேறு பொருட்களின் விலையில் நிலையில்லாதன்மை ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் போரால் அமெரிக்க டாலரும், ஜப்பானின் யென்னுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது; இந்திய ரூபாய்க்கு சாதகமாக இல்லை.

நிதிப் பற்றாக்குறை: கச்சா எண்னெய் விலை அதிகரிப்பது, நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு போன்றவை நிதிப் பற்றாக்குறையை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. வரும் காலாண்டுகளிலும் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்ஃபிஐ வெளியேறுதல்: அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருவதும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதாவது 2018-19-ஆம் நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 14,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் கடன் பத்திரங்களையும் விற்றுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் இந்திய முதலீட்டு சந்தையிலிருந்து ரூ. 14,500 கோடி வெளியேறியுள்ளது. இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி பொதுமக்களை எவ்வாறு பாதிக்கும்? 

வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு: ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே நேரம் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம். தற்போது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் .

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும். இது சராசரி மனிதனை வெகுவாக பாதிக்கும். இதனால் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பாதிப்பு: ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களின் ‘காஸ்ட் ஆப் லிவிங்’ என்று சொல்லக்கூடிய தங்குவதற்கான செலவு அதிகரிக்கும்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இதுபோன்று பல பாதிப்புகள் ஏற்படும். வரும்காலத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? அல்லது வீழ்ச்சியுறுவதை தடுக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு சீனா வரி குறைப்பு

இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு சீனா வரி குறைப்பு


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியைக் குறைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

ஏசியா பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Asia-Pacific Trade Agreement) அடிப்படையில் இந்த முடிவை சீனா எடுத்துள்ளது. 

இதன் படி இந்தியா, வங்கதேசம், லாவோஸ், தென் கொரியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ரசாயனம், மருத்துவம், வேளாண், துணிகள், எஃகு, மற்றும் அலுமினியம் சார்ந்த 8 ஆயிரத்து 549 பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படவுள்ளதுடன், வரி விலக்கும் அளிக்க சீனா முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வரி குறைப்பானது ஜூலை ஒன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்கார் படப்பிடிப்பில் நடந்த சர்ச்சை...! தலை தெறிக்க ஓடிய முருகதாஸ்

சர்கார் படப்பிடிப்பில் நடந்த சர்ச்சை...! தலை தெறிக்க ஓடிய முருகதாஸ்


முருகதாஸ் தற்போது சர்கார் படத்தை பிரமாண்டமாக எடுத்து வருகின்றார். இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இன்னும் அமெரிக்காவில் ஒரு சில காட்சிகளே மீதம் இருப்பதாக தெரிகின்றது, இதை தொடர்ந்து படத்தின் ரிலிஸ் வேலைகளில் முருகதாஸ் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் சர்கார் படப்பிடிப்பில் ஒரு பிரமாண்ட காட்சி எடுத்தார்களாம், இதில் பலரும் பைக்கில் வருவது போல் எடுக்க, இந்த காட்சியில் கொஞ்சம் ஸ்டெண்ட் கலைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இருந்தார்களாம்.

காட்சி எடுத்து முடித்த கொஞ்ச நேரத்தில் ஸ்டெண்ட் கலைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கு சண்டை வர, அந்த இடமே கலவரம் போல் காட்சியளிக்க, முருகதாஸ் ஆளை விடுங்கப்பா என்று தலை தெறிக்க ஓடியதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் - தபால் ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர்

தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் - தபால் ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர்

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உறுதியளித்ததைப் போன்று எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்தகபண்டார தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒன்றிணைந்த தபால் சேவை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சில கோரிக்கைகளுக்கு மாத்திரமே அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளது. மீதமுள்ளவற்றுக்கு எதிர்வரும்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. உறுதியளிக்கப்பட்டதைப் போன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாராகவுள்ளோம்.

கடந்த இரண்டு வாரம் தபால் நிலையங்கள் இயங்காமையினால் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளன. எனினும் இரு தினங்களில் அவற்றை விநியோகித்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டுள்ளோம் என்றார்.
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் அஞ்சலி அமீர்!-

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் அஞ்சலி அமீர்!-

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில், பெண்களே தங்களது இருப்பை தக்கவைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. அப்படி இருக்கையில், திருநங்கையான அஞ்சலி அமீர், இயக்குநர் ராமின் பேரன்பு படம் மூலம் நாயகியாகி புதிய வரலாறு படைத்திருக்கிறார். 

இப்படத்தில் மம்மூட்டியின் ஜோடியாக இவர் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில், மற்ற துறைகளைப் போலவே, சினிமாவிலும் திருநங்கைகள் சாதிக்க முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் அஞ்சலி அமீர். 

இது குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப்பேட்டியில் கூறியிருப்பதாவது: பேதம் அவசியமில்லை: நான் என்னை பெண்ணாகத் தான் உணர்கிறேன். எனவே ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நடிகரை ஆண் என்றும், நடிகையை பெண் என்றும் தனியாக குறிப்பிடாதது போல், என்னையும் தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் ஒரு திருநங்கையான எனக்கு எல்லைகள் இருக்கிறது. அதை நான் உணர்ந்திருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. எனது அடையாளத்துக்காக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். 

எங்களை போன்றவர்களை முன்பு புராணங்களில் தேவதாசிகளாக சித்தரித்தனர். இப்போதைய நவீன உலகில் தேவதாசி என்பது மாறி பார் டான்சராக பரிமாண அடைந்திருக்கிறது. ஆனால் நிறைய திருங்கைகள் இங்கு சாதித்து காட்டியிருக்கிறார்கள். 

எங்களுக்கு இருக்கும் பிரச்சினை பாலின வேறுபாடுதான். வேலை கேட்டுப் போகும் இடங்களில், நீயெல்லாம் எதுக்கு வர எனக் கேட்டு மிகக்கேவலமாக அவமானப்படுத்துவார்கள். மாற்றம் வரும்: அப்படி இருக்கும்போது இந்த சமுதாயத்தில் நீ ஏன் உன் பாலினத்தை வெளியில் சொல்ல வேண்டும் என என்னிடம் நண்பர்கள் கேட்பார்கள். ஆனால் நான் என் அடையாளத்தை மறைக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன். இந்தியாவைத் தவிர வேறும் எங்கும் இந்த பாலின வேறுபாடு இல்லை. இங்கும் மாற்றம் வரும் என நான் நம்புகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.