Saturday, July 7, 2018

தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்களால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வந்த மாணவி

தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்களால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வந்த மாணவி


பாட்னாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமிதா என்ற மானவி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், சுமிதா கழிவறைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த 5 மாணவர்கள், அவரை கற்பழித்து அதனை படமெடுத்துள்ளனர். இதனை அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்களும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

இந்த விஷயம் பள்ளியின் இரு ஆசிரியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அந்த தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் மீண்டும் அந்த மாணவியை சீரழித்துள்ளனர். இவ்வாறு 7 மாதமாக அந்த மானவர்களுடனும், ஆசிரியர்களுடனும் சிக்கி சீரழிந்துள்ளார் சுமிதா.

ஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாத சுமிதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அந்த மனித மிருகங்கள் மீது வழக்கு பதிந்த பொலிஸார், தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு மஹிந்த விடுத்துள்ள பகிரங்க சவால்...!

அரசாங்கத்திற்கு மஹிந்த விடுத்துள்ள பகிரங்க சவால்...!


சமகால அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் தன்னிடம் கேட்பதற்கு முதல், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து காண்பிக்குமாறு மஹிந்த சவால் விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்திடம் சரியான நடைமுறைகள் எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார செலவுகளுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விரைவில் மத்தளவை இந்தியாவிற்கும் வழங்கும் அமைச்சரவை பத்திரம்...!

விரைவில் மத்தளவை இந்தியாவிற்கும் வழங்கும் அமைச்சரவை பத்திரம்...!


ஹம்பாந்தோட்டை - மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது. 

விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவிற்கும், 30 வீத பங்குகளை இலங்கைக்கும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. 

குத்தகை உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதி மற்றும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் அமைச்சரவையே இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், அதனை 405 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

மத்தள விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சில பிரதிநிதிகள், கடந்த செவ்வாய்கிழமை, மத்தள விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எரிபொருள் விலை தொடர்பில் அதிரடி உத்தரவு

எரிபொருள் விலை தொடர்பில் அதிரடி உத்தரவு


எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகளை தீர்மானிக்க கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரம் இல்லை.

இந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, எரிபொருள் விலைகளை நிர்ணயம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவிற்கு அப்பாற்சென்று விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், 

அதனால் ஏற்படும் நட்டத்தை கூட்டுத்தாபனமே பொறுப்பேற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்

புறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்


கொழும்பு, புறக்கோட்டை மெயின் வீதியில் முதலாம் குறுக்குத்தெருவுக்கருகே டி.எஸ்.ஐ காலணிகள் வர்த்தக நிலையத்துக்கு பக்கத்திலுள்ள வர்த்தக நிலையமொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.

இன்று (07) காலை சுமார் 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த போதும் கீழ் தளத்திலிருந்து தீ மிக வேகமாக பரவியது. காற்றின் வேகம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியதாக இருந்ததால் காலணி விற்பனை நிலையத்திற்கு தீ பரவாமல் அதற்கு அடுத்த படியாக இருந்த திரைச் சீலைகள விற்பனை நிலையதில் தீ பரவியது.

குறித்த வர்த்தக நிலையம், பயணப் பொதிகள், கைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையம் என்பதால் முற்றாக தீ பரவி அது எரிந்து சாம்பலானது.

முதலாவது தீயணைப்பு வாகனம் வந்திருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது. சற்று நேரத்தில் இரண்டாவது தீயணைப்பு வாகனம் வந்த பின்னரே அதற்கடுத்த வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் திரைச் சீலைகள் விற்பனை நிலையத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

இவ்வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமும் காலை 10 மணியளவில் கொழும்பு மெயின் வீதியிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் அனைத்து கடை ஊழியர்களும் தத்தமது கடை உரிமையாளர்கள் கடைகளை திற்க்க வரும் வரை, கடை ஊழியர்கள் காத்திருந்தனர்.

சில கடைகள திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே திடீரென இவ்வாறு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றவுடன் மெயின் வீதி பெரும் அல்லோல கல்லோலப்பட்டது.

கடை ஊழியர்கள் தங்களது கடைகளிலிருந்து வெளியே ஓடினர். அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவி விடும் என அஞ்சினர்.

மெயின் வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து மெயின் வீதியினூடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மிகுந்த பேராட்டத்திற்கு மத்தியில், பொதுமக்கள், பொலிசார், மாநகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூரில் தீச்சட்டி எடுத்துப் பிராத்தனை!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூரில் தீச்சட்டி எடுத்துப் பிராத்தனை!


காணாமல் ஆக்கப்பட்டோரின் வவுனியா உறவுகளால் இன்று மாலை 4 மணியளவில் ஈழ நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

108 தேங்காய்களை உடைத்தும் கற்பூர தீச்சட்டிகளை எடுத்தும் அவர்கள் தமது உறவுகளுக்காகப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி வவுனியாவில் 500 நாள்களாக தொடர் போராட்டத்தை நடத்தும் உறவுகள் இன்று ஈழ நல்லூரில் உணவு ஒறுப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது தொடர் போராட்டத்தின் 500ஆவது நாளை உலகுக்கு அறியப்படுத்தும் வகையில் வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 9 மணிக்கு இந்த போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்திருந்தனர்.
மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! விஜயகலா

மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! விஜயகலா


வடக்கிலே மக்கள் பல துன்பங்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்ட 10 கோடி ஏற்றுமதி பயிர் நடுகைச் செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாக் கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் வடக்கில் 50 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள். இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்போது பெண்களைப் பிரதிநிதித்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்.

இதேவேளை இன்று தெற்கிலே பரபரப்பாகப் பேசப்படுவது இனவாதமே. நாம் எமது பிரதேசத்திலே எங்களுடைய மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை எடுத்துக்கூறுவோமாக இருந்தால் நாம் தமிழீழ விடுதலைப்புலிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம்.

இன்று வடக்கு கிழக்கிலே இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. அதேபோல் கடந்த வாரத்திலே யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனை துன்பங்களுக்கிடையில் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய மக்களை நான் காப்பாற்ற வேண்டும். அதற்காக அமைச்சுப் பதவியை இழந்ததில் எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன். எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ் மக்களுக்காக எதையும் செய்ய தயார் அமைச்சர்

யாழ் மக்களுக்காக எதையும் செய்ய தயார் அமைச்சர்


யாழ் மக்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து உதவி செய்வேன் என சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

10 கோடி ஏற்றுமதிப் பயிர்களை நாட்டும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 5 தடவையும் யாழ் வரும் போதும் யாழில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுனைப்படுத்த அரசாங்க அதிபர் மற்றும் உரிய அதிகாரிகள் ஒத்துழைப்பினை வழங்குகின்றனர்.

இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் இல்லாத அளவில் துரிதமாக பலவேலைத் திட்டங்களை செய்வதற்கு இலகுவாக உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வடகிற்காக என்ன செய்யப்போகின்றீர்கள் என எப்போதும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள வறிய மக்களுக்கு நான் எமது அமைச்சினூடான வேலைத்திடங்களின் கீழ் உதவிகளை வழங்குவேன் என அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Friday, July 6, 2018

2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றி! அரையிறுதிக்கு முன்னேற்றம்

2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றி! அரையிறுதிக்கு முன்னேற்றம்

21 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு கால் இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
இந்த போட்டியில் முதல் பாதியில் 40 ஆவது நிமிடத்தில் வரானே கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது. பின்னர் 60 ஆவது நிமிடத்தில் Antoine Griezmann கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
மேலும் இறுதி வரை போராடிய உருகுவே அணியால் எவ்வித கோல்களும் அடிக்க முடியாமல் போனது.
உருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் இறுதியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது.
இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.
இந்தநிலையில், ஆட்டத்தின் இறுதியில், உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.




கொழும்பை அண்மித்த பகுதிகளில் அமோனியா வாயு பரவும் அபாயம்...!

கொழும்பை அண்மித்த பகுதிகளில் அமோனியா வாயு பரவும் அபாயம்...!


பேலியகொடை மீன் விற்பனை வர்த்தக தொகுதியை அண்மித்த பகுதியில் அமோனியாவுடன் பயணித்த கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளமையை அடுத்து, அந்த பகுதியில் அமோனியா வாயு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அபாயம் காரணமாக அமோனியாவுடன் குடைசாய்ந்துள்ள கொள்கலனுக்கு அருகில் பயணிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடைசாந்துள்ள கொள்கலனை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

தீயணைப்பு பிரிவினரும் குறித்த பகுதிக்கு வரழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

An ammonia gas cylinder had been exploded inside a container vehicle at the Peliyagoda fish market, the fire brigade said.

It said fire fighters were deployed to the location and the situation was under control now.

The Police said no casualties was reported in the incident.
வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை...! சபாநாயகர் உத்தரவு

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை...! சபாநாயகர் உத்தரவு


வடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என விமல் இதன்போது, கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார் என்றும் அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..!


வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டமாற்று முறைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் பணமான பொலிவார் (bolivar), மதிப்பிழந்து விட்டது. 

பண வீக்கம் காரணமாக அன்றாட செலவுக்குக் கூட மக்களிடம் பணமில்லை.

நகரவாசிகள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் தங்களது நிலைமையை சமாளித்து வருகின்றனர். 

பெரும்பான்மை மக்களோ, பணத்திற்கு பதில் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். 

வாழைப்பழம், முட்டை, சிகரெட் ஆகியவற்றை பணத்திற்கு பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
டோக்கியோவில் விஷவாயு தாக்குதல் நடத்திய கொடூர சாமியாருக்கு தூக்கு..!

டோக்கியோவில் விஷவாயு தாக்குதல் நடத்திய கொடூர சாமியாருக்கு தூக்கு..!

Tokyo Sarin attack: Aum Shinrikyo cult leaders executed

ஜப்பானில், தன்னைத் தானே கடவுள் என வர்ணித்துக் கொண்டு, நச்சுவாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற கொடூர சாமியாரும், அவனது ஆதரவாளர்கள் 6 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

1984ஆம் ஆண்டு, ஆம் ஷின்ரிக்யோ (Aum Shinrikyo) என்ற பெயரில் புதிய மதத்தை, ஷோகோ அசாஹாரா (Shoko Asahara) என்ற சாமியார் தோற்றுவித்தான். 

தியான வகுப்புகளுடன் தனது லீலைகளை தொடங்கிய அந்த சாமியார், பின்னாளில், உலகம் அழியபோகிறது என்ற விஷ பரப்புரையில் ஈடுபட்டான். மேலும், அவனது ஆதரவாளர்களை கொண்டு, ஹிட்லர் வழியில், பல்வேறு கொடூர தாக்குதல்களையும் முன்னெடுத்தான்.

இவ்வாறு, 1995ஆம் ஆண்டு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில், அதிபயங்கர நச்சுத்தன்மை கொண்ட சிரின் என்ற வேதிப்பொருளை திரவ வடிவில் விஷ வாயுவாக பரவ விட்டு, தாக்குதல் நடத்தினான்.

இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சாமியார் ஷோகோ அசாஹாரா மற்றும் அவனது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 2

3 ஆண்டுகளுக்குப் பிறகு, கொடூர மனம் படைத்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் வெள்ளிக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஓவியா - ஆரவ் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியானது..! இதோ போட்டோ

ஓவியா - ஆரவ் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியானது..! இதோ போட்டோ


ஆரவ், ஓவியா பிக்பாஸ் வீட்டில் காதலித்து பிறகு பிரிந்தவர்கள். ஓவியாவும் இனி நான் சிங்கிள் தான், சந்தோஷமாக உள்ளே என்று கூறினார்.

ஆனால், தற்போது பணம், புகழை விட அன்பில் தான் சந்தோஷம் அதிகம் என்பது போல் ஒரு கருத்தை கூறினார், மேலும், ஆரவுடன் ஓவியா இன்னும் காதலில் தான் இருப்பதாக கூறப்பட்டது.

இதை நிரூபிக்கும் பொருட்டு இருவரும், பேங்காக் சென்றுள்ளார்களாம், அந்த புகைப்படம் லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

ரஞ்சனின் செயற்பாடு துரோகத்தனமானது..! விஜயகலா ஆவேசம்

ரஞ்சனின் செயற்பாடு துரோகத்தனமானது..! விஜயகலா ஆவேசம்


ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் அனைத்து ஊடகங்களின் முன்னிலையில் என்னுடன் உரையாடியமை துரோகத்தனமானது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துத் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன். அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் அவர் நேரடியாக ஊடகங்களின் முன்பாக இருந்து கொண்டு தொலைபேசியை வைத்துக் கதைப்பது தெரியாது.

அவர் தொடர்பினைத் துண்டித்த பின்னர் எனக்கு வந்த வேறொரு அழைப்பின் மூலமாகவே இந்த விடயத்தினை அறிந்து கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேயே எனது சிறப்புரிமையை மீறல் ஆகும்.

இந்தச் செயற்பாடு மூலம் அவர் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் எவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதை இந்த உலகம் தற்போது அறிந்திருக்கின்றது.

இப்படியானவர்கள் தான் இந்த நாடாளுமன்றில் தற்போது இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அவர்களது கருத்துக்களை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த விடயத்தினை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்தவுள்ளேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
8வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அண்ணன்- டெல்லி

8வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அண்ணன்- டெல்லி


8 வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவளது வாழக்கையை சீரழித்த அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களின் மகள் ரத்தப்போக்குடன் அவதிப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது. நடந்தவற்றை சிறுமி கூறியதுடன் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி சிறுமியை நேரில் சந்தித்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சிறுமியின் நிலை மோசமாக இருப்பதாக ஸ்வாதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை பெண்கள் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாகிஸ்தான் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேசிய கணக்கீட்டுப் பணியகம் (NAB) தாக்கல் செய்த ஊழல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் மந்திரி நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் சப்தர் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்து உள்ளது.

நவாஸ் ஷெரீபிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைவாசம், அவரது மகள் மரியாம்க்கு குறைந்தது 7 ஆண்டுகள் மற்றும் சப்தர்க்கு 1 வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பழைய விலையில் எரிபொருளை விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு?

மீண்டும் பழைய விலையில் எரிபொருளை விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எரிபொருள் விலையை பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக நேற்று (வியாழக்கிழமை) அறிவித்திருந்தது.

இந்நிலையில் அனைத்து பெற்றோலிய நிறுவங்களும் தற்போது பழைய விலையில் விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதிகரித்த விலையில் பிரகாரம், 137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 145 ரூபாவாகியுள்ளது.

148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்புக்கு அமைய,

Lanka Auto Diesel லீற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபாவாகவும், Xtra MILE லீற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபாவாகவும்,

Lanka Super Diesel (Euro 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபாவாகவும், Lanka Petrol 92 Octane லீற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபாவாகவும்,

Xtra Premium (EURO3) லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாவாகவும், Xtra Premium 95 (EURO 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபாவாகவும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் படம் 2! இந்த முறை சிக்கியது கீர்த்தி சுரேஷ்!

தமிழ் படம் 2! இந்த முறை சிக்கியது கீர்த்தி சுரேஷ்!

தமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரில் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி கொடுத்த போஸை கலாய்த்துள்ளனர்.

தமிழ் படம் 2 ரிலீஸ் எப்பொழுது என்று மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமை அதுவுமாக நல்ல செய்தி அளித்துள்ளார் இயக்குனர் சி.எஸ். அமுதன்.

தமிழ் படம் 2 இந்த மாதமே வெளியாகிறது என்று அறிவித்துள்ளார் அமுதன்.

தமிழ் படம் 2 ரிலீஸை அறிவிக்க வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகையர் திலகம் கெட்டப்பில் இருந்த கீர்த்தி சுரேஷை கலாய்த்துள்ளனர். நீ நடத்துங்க ராசாக்களா...

தமிழ் படம் 2 படத்தை பார்த்த சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்தது. அதை கொண்டாட பாகுபலி படத்தை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டது படக்குழு. வெங்கட் பிரபு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பது குறித்து அறிந்த சி.எஸ். அமுதன் அவர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். 

ஆனால் அவர்கள் உஷாராக தப்பித்துக் கொண்டனர். ஓபிஎஸ் தமிழ் படம் 2ல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கலாய்த்து காட்சிகள் உள்ளன. அது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், பாடல் மூலம் தெரிய வந்தது. படத்தில் முதல்வரையும் கலாய்த்திருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
வவுனியாவில் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. 


வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இவ் விழிப்புணர்வு பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானீச்சூர் 5ஆம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக பாடசாலையை சென்றடைந்து நிறைவுற்றது.


இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து - 22 பேர் பலி

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து - 22 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் மத்திய மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாயினர்.

மெக்சிகோ நாட்டின் மத்திய மாகாணம்ஒன்றில் மிகப் பெரிய பட்டாசு சந்தையில் பட்டாசு வாங்குவதற்காக அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். 

நேற்று காலை அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறின. மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.இதில் 22 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளதாகவும்  
40  பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது

விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது

வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். 

வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து நீதிமன்றத்தின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், லண்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மல்லையாவிற்கு சொந்தமான 159 சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

மும்பையில் உள்ள சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக கோரி பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்திய நீதித்துறைக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
ரஷ்யாவில் நிலநடுக்கம் ; கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பில்லை

ரஷ்யாவில் நிலநடுக்கம் ; கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பில்லை

ரஷ்யாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது கம்சட்கா தீபகற்பம். இந்த தீபகற்பத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். 6.0 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

ரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீபகற்பத்தில் சிறியதும் பெரியதுமான 160 எரிமலைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்

விஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்

விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணித்துள்ளன.

தமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.

விஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.
7 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகளுடன் மூவர் கைது

7 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் நேற்று (05) காலை 9.40 மணியளவில் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களிடம் இருந்து 51 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான 61.8 கிலோ எடையுடைய வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், நேற்று (05) காலை 10 மணியளவில் இவர் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவரிடம் இருந்து 20 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 20.75 கிலோ எடையுடைய வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை  துறைமுகம்  இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாது -  ரணில் விக்கிரமசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாது - ரணில் விக்கிரமசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

விமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார். 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட விடயம் தொடர்பாகவும், அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் நேற்று (05) பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். 

இந்த உரையின் போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் சீனாவுடன் நாம் சுயாதீன நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்பொழுது எமது கடன் சுமை குறைந்து வருகின்றது, வெளிநாட்டு நாணய இருப்பும் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் இதுவரையில் 47 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் முறையான நடைமுறை விதிகளுக்கு அமைய அமைக்கப்படவில்லை. 

அரசாங்கம் தனியார் நிறுவனத்தின் மூலம் இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கப்பல்கள் வராத துறைமுகம் என்பதனால் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதே இதன் நோக்கமாகும். 

இந்த துறைமுகம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பான பணிகளை அரசாங்கத்துடன் சைனா ஹாபர் நிறுவனம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கைத்தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மத்தள விமான நிலையம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சிறந்த பெறுபேறு கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதன் ஒரு பகுதி தொடர்பில் தாம் பதில் அளிப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நாளை நீர் வெட்டு

கொழும்பில் நாளை நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

நாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது. 

அதன்படி கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
யாழ்.பல்கலைக்கழக நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

யாழ்.பல்கலைக்கழக நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவும்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதி கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்பளிப்பு செய்தார். 

இதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய ச. சுஜீவனி டம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கி வைத்தார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரனும் ஜனாதிபதியின் கலைச் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்கவும் இதன்போது உடனிருந்தனர்.
சுதாகரனின் விடுதலை கோரிக்கை கடிதத்திற்கு, ஜனாதிபதி செயலாளரின் பதில் கடிதம்

சுதாகரனின் விடுதலை கோரிக்கை கடிதத்திற்கு, ஜனாதிபதி செயலாளரின் பதில் கடிதம்

அரசியல் கைதி அனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. 

அரசியல் கைதி அனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண கல்விச் சமூகத்தால் பெறப்பட்ட மூன்று இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய கோரிக்கை கடிதத்தையும் இணைத்து கிளிநொச்சியில் வைத்து கையளித்திருந்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சார்பில் ஜனாதிபதியின் சட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் லக்சுமி ஜெயவிக்கிரம ஒப்பமிட்டு 20 ஆம் திகதி மாகாண கல்வி அமைச்சுக்கு அந்தப் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் பல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இது விடயம் தொடர்பில் ஏற்கனவே உரிய கரிசனை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இவ்விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 5, 2018

சலிஸ்பரியில் மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்

சலிஸ்பரியில் மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்


சலிஸ்பரி பகுதியில் இன்று மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சலிஸ்பரி நகரத்தில் இருக்கும் அமெஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து சலிஸ்பரி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் குறித்தான விபரங்களும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு உளவு பார்த்த ரஷ்யாவைச் சேர்ந்த உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீதும் இதே போன்ற நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கொலை செய்யும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா மீது பிரிட்டன் குற்றம் சுமத்தியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
12 Indian fishermen arrested in Jaffna

12 Indian fishermen arrested in Jaffna


12 Indian fishermen were arrested along with two vessels in the seas off Delft Islands in Jaffna, said Navy Media Spokesperson, Commander Dinesh Bandara.

Further, he stated that they were arrested on charges of violating the maritime boundary and will be handed over to the Kankasanthurai Fisheries Department office.
ஜனாதிபதி செயலாளர் பதவி விலகினார்

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகினார்


ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை.

2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Austin Fernando has stepped down from his position as Secretary to the President. This announcement was confirmed by the President’s media division.
தொகுப்பாளினி ஜாக்குலின் இப்படிப்பட்டவரா??? பலருக்கும் தெரியாத உண்மை

தொகுப்பாளினி ஜாக்குலின் இப்படிப்பட்டவரா??? பலருக்கும் தெரியாத உண்மை


தற்போது முன்னணி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். இவரை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லவேண்டும்.

கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர். நடுவர் முதல் போட்டியாளர்கள் என பலருக்கும் இவர் தான் டைம் பாஸ். ஆனால் அப்போதெல்லாம் அவர் அமைதியாக இருந்துவிடுவாராம்.

இதுதான் ரசிகர்களிடம் இவரை அதிகம் சென்றடையவைத்தது. ஆனால் ஆஃப் ஸ்கீரினில் மிகவும் கோபப்படுவாராம். அவரின் குரலை பற்றி பல பேர் கமெண்ட் அடித்தாலும் அதுதான் அவருக்கு பாஸ்டிவ்வாக பெரியளவில் பிரபலமாக்கியது. ஆனால் ஜாக்குலிக்கு பின்னாலும் சோகம் இருக்கிறது.

அவருக்கு அப்பா கிடையாதாம். அம்மாவும், தம்பியும் ஊரில் இருப்பதால், அவர் ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாராம். மேலும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங் இரவு தொடங்கி அதிகாலை ஆனாலும் காலேஜ்க்கு கட் அடிக்காமல் போயிடுவாராம்.

அதோடு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்துள்ளாராம்.
இன்று எந்தெந்த படங்களுடைய இசை வெளியீடு  என்று தெரிஞ்சிக்க இத படிங்க!

இன்று எந்தெந்த படங்களுடைய இசை வெளியீடு என்று தெரிஞ்சிக்க இத படிங்க!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா, பிரபுதேவாவின் லக்‌ஷ்மி திரைப்படங்களின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா யோகிபாபு இணையும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் தான் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் எதுவரையோ, கல்யாண வயசு ஆகிய பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன.
இன்று இந்தப்படத்தின் மற்ற பாடல்களும் ட்ரெயிலரும் வெளியிடப்படும் என்று அனிருத் ட்வீட் செய்துள்ளார்.
அதே போல், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் லக்‌ஷ்மி. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

லக்‌ஷ்மி திரைப்படத்தின் ட்ரெயிலரும், மொராக்கா என்ற பாடலும் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்திருக்கும் நிலையில், இன்று படத்தின் மற்ற பாடல்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
நிர்மல்குமார் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ஓம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

வெடிகுண்டு பசங்க எனும் திரைப்படத்தின்
இசை வெளியிட்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.

ஆன்லைனில் படம் பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டதால்தான், இசைவெளியீடுகளை நடத்தாமல் பாடல்களை ஆன்லைனிலேயே வெளியிடுகிறார்கள் போலும்!