Saturday, July 14, 2018

யாழில் வன்முறைக்கு காரணம் தமிழ் திரைப்படங்களே: சட்டம் ஒழுங்கு அமைச்சர்

யாழில் வன்முறைக்கு காரணம் தமிழ் திரைப்படங்களே: சட்டம் ஒழுங்கு அமைச்சர்


யாழில் தமிழ் படங்களை பார்த்து விட்டு ஒரு சில இளைஞர்களே இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் யாழ்ப்பணத்தில், சில அரசியல் தரப்பினர் மற்றும் ஊடகங்கள் தெரிவிப்பது போன்று எவ்வித மோசமான அசம்பாவிதங்களோ இடம்பெற்றதாக தெரியவில்லை.

குறித்த குழுவானது சில கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவே அவர்கள் பொது மக்களை அச்சமடைய செய்வதாக கூறிய அமைச்சர், அதற்காக அவர்கள் வாள்களை பயன்படுத்துவதாக கூறினார்.

மேலும் வடக்கின் நிலைமைகள் தொடர்பில் மூத்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்திய போது, தென் இலங்கையில் உள்ள சிலர் குறிப்பிடுவது போல எந்தவொரு பாரிய செயற்பாடுகளும் இங்கு இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் இவை சில அரசியல் தரப்பினர்களாலும், ஒருவகையான ஊடகங்களின் செய்திகளினாலுமே பெரிதாக பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி கனடா அறிவிப்பு!

ஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி கனடா அறிவிப்பு!


ஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை தலைமையேற்று நடாத்தவுள்ளதாக கனடா பிரதமர் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.

பிரசெல்சில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது நேட்டோ அமைப்பின் இந்த புதிய இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை கனடா தலைமையேற்று நடாத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐ.எஸ்.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தம்மை தயார்படுத்திவரும் ஈராக்கிற்கு, அடிப்படை இராணுவக் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி நடவடிக்கையாகவே இது அமையும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

இதற்காக இந்த ஆண்டின் இறுதியில் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள 250 வரையிலான கனடியப் படைகள் அங்கு ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்து இந்த பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கைக்காக, கனடாவின் 4 உலங்கு வானூர்திகளும் அனுப்பி வைக்கப்படவுள்ளதகவும், இந்த உலங்கு வானூர்திகளும் கனேடிய இராணுவத்தினரும் ஈராக் தலைநகர் பாக்தாத்தைச் சூழவுள்ள பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் கனடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மிசிசாகாவில் கார் மோதி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மிசிசாகாவில் கார் மோதி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி


மிசிசாகாவில் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 10:14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பாதசாரி ஒருவரே காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இதில் காயமடைந்தவர் தொடர்பில் பொலிஸார் வெளியிடவில்லை.

இந்நிலையில், குறித்த பகுதியில் சில மணி நேரங்களுக்கு பாதை மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி


மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. 

இதில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இதன் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் குரோஷியா அணி இங்கிலாந்தை வென்றது. இதையடுத்து, அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான லீக் ஆட்டத்திலும் பெல்ஜியமே வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி 1966ல் சாம்பியன் பட்டம் வென்றது. பின்னர், 1990ல் அதிகபட்சமாக 4-ஆவது இடம் பிடித்தது. 

அதேவேளையில், பெல்ஜியம் அணி அதிகபட்சமாக 1986ம் ஆண்டு மட்டும் 4வது இடம் பிடித்தது. எனவே, வெண்கலப் பதக்கம் வெல்லும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வெற்றிபெற, பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் தீவிரம் காட்டின. மாஸ்கோவில் உள்ள லுஸ்கினி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
 ரயிலில் தொங்கியபடி சாகசம் புரிந்த இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு

ரயிலில் தொங்கியபடி சாகசம் புரிந்த இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு


பெங்களூருவில் ரயிலில் தொங்கியபடி இளைஞர் புரிந்த சாகசம் சோகத்தில் முடிந்தது. விரைவு ரயிலில் ஏறிய அந்த இளைஞர், சாகசம் என நினைத்து ரயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணித்தார். 

அதை பலரும் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் அவ்வாறு தொங்கிய இளைஞர், தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருக்கும் ஜல்லிக் கற்கள் மீது கால் இடறி நழுவி கீழே விழுந்தார்.

இளைஞரின் நிலை என்னவானது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. 

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சாகசம் என நினைத்து உயிரை பணயம் வைத்த இளைஞரின் செயலுக்கு ஒரு புறம் கண்டனங்கள் எழுந்தாலும், சக பயணிகள் ரயிலை நிறுத்தாமல் வீடியோ எடுப்பதா? எனவும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வடமாகாணம் முழுதும் மின் தடை விசேட அறிவித்தல்

வடமாகாணம் முழுதும் மின் தடை விசேட அறிவித்தல்


திருத்தப் பணிகள் காரணமாக, வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், நாளைய தினமும் காலை 8 மணி முதல் 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
Drug traffickers – Dilshan praises MS for implementing death sentence

Drug traffickers – Dilshan praises MS for implementing death sentence


Sri Lanka former national cricket team’s captaom T.M. Dilshan yesterday praised President Maithripala Sirisena’s decision to implement the death sentence for drug traffickers.

He said this decision should have been taken a long time ago. “Not only for drugs, it should be implemented for child abuse and rape cases,” he said.

Dilshan said all citizens should unite to develop the country.

“There is no purpose in safeguarding human rights if we cannot save the country. Cases of drugs use and child abuse has increased at an alarming rate today.

So is is essential to carry out the death sentence,” he said and added that if our children are not protected and safeguarded our country would be left without a future for the generations to come.
இலங்கை மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்கவைக்கு பழி தீர்த்த இலங்கை

இலங்கை மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்கவைக்கு பழி தீர்த்த இலங்கை


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையணியுடன் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்றுடனே போட்டி முடிவுக்கு வந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மல் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது. திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைக் குவித்தார். மற்றைய அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க சார்பில் றபாட 4 விக்கெட்டுகளையும், ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதலாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள திணறியது. தென்னாபிரிக்க அணி தலைவர் டூ ப்ளசிஸ் 49 ஓட்டங்களுடன் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை: இனிமேல் தப்பிக்க முடியாது

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை: இனிமேல் தப்பிக்க முடியாது


சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.

பெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசாங்கம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போது பல தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகின்றன” என அமைச்சர் தலதா அத்துக்கோரள மேலும் தெரிவித்துள்ளார்.
16 மணித்தியாலங்கள் நீர் வெட்டு மக்களுக்கு அறிவித்தல்

16 மணித்தியாலங்கள் நீர் வெட்டு மக்களுக்கு அறிவித்தல்


கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 16 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A 16hr water cut from 8am tomorrow in Kelaniya, Peliyagoda, Wattala, Biyagama, Mahara, Dompe, Ja -Ela, Katunayaka, Seeduwa & part of Gampaha
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைப் ஓய்வு!!

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைப் ஓய்வு!!


இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் முகமது கைப் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அணியின் U-19 அணியில் இருந்து ஆடி வருபவர் கைப். மேலும், முதன் முதலாக இந்திய அணிக்காக U-19 உலகக்கோப்பையை வென்ற கேப்டனும் முகமது கைப் தான். 

இவர்தான் இந்திய அணியில் பீலடிங் கண்ணோட்டத்தை மாற்றினார். தற்போது 37 வயதாகும் இவர் கடைசியாக 2006ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் ஆடினார்.

அதன்பின்னர் உள்ளூர் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வந்தார். சென்ற வருடம் சத்தீஸ்கர் அணிக்காக ஆடியதே இவரது கடைசி முதல் தர போட்டியாகும்.

இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆபி 32.84 சராசரியில் 624 ரன்களையம் 125 ஒருநாள் போட்டிகளில் 2753 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் இரண்டு வகையான போட்டிகளிலும் சேர்த்து 20 அரைசதம் மற்றும் 3 சதங்கள் அடித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடவெஸ்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இவர் சதம் அடித்து 322 ரன்னை சேஸ் செய்து வெற்றி பெற்றார். 

அந்த போட்டியில் தான் கங்குலி தனது சட்டையை கழற்றி சுழற்றி கெத்து காட்டினார். தனது ஓய்வு குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் கைப்.
315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு

315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு


கனேடிய புகையிரத சேவை திணைக்களம் ஒன்ராறியோவில் 315 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள நிலையில் ஒன்ராறியோவிற்கான புகையிரத போக்குவரத்து சேவைகளை மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

தேசிய அளவில் 2018 ஆம் ஆண்டுக்கான முதலீட்டுச் செலவீனமான 3.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் இருந்து, ஒன்ராறியோவுக்கான இந்த 315 மில்லியன் டொலர்கள் மேம்பாட்டு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த 315 மில்லியன் டொலர் முதலீடுகள் ஒன்ராறியோ முழுவதுக்குமான புகையிரத போக்குவரத்து வலையமைப்பினை வலுப்படுத்தும் வகையிலும், விரிவாக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கனேடிய தேசிய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தினால் ரொறன்ரோ வடமேற்கே அமைந்துள்ள மிகப் பெரிய புகையிரத நிலையமும், பிரம்டன் புகையிரத நிலையம் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிகமாக 145 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 இலட்சம் 80 ஆயிரம் புகையிரத பாதைகள் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகவும், 60 புகையிரத பாதைக் கடவைகள் திருத்தம், பாலங்கள், மதகுகள், சமிக்கை விளக்குகள் உள்ளிட்ட உட்கட்டுமானங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்பிற்கு கடும் எதிர்ப்பு: லண்டனில் தொடர் ஆர்ப்பாட்டங்கள்

ட்ரம்பிற்கு கடும் எதிர்ப்பு: லண்டனில் தொடர் ஆர்ப்பாட்டங்கள்


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

லண்டன் தெருக்களில் கூடிய 50,000க்கும் அதிகமான பொதுமக்கள் ட்ரம்பிற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏந்திய பதாகைகளில் ‘ட்ரம்ப் காலி’ மற்றும் ‘ட்ரம்பை வரவேற்கவில்லை’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடனான பிரெக்ஸிட் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப், “பிரெக்ஸிட் விவகாரத்தினால் இங்கிலாந்தின் அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கை முறிவு ஏற்படலாம்” என விமர்சித்திருந்தமையே குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லண்டனின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எலிசபெத் மகாராணியை சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

எலிசபெத் மகாராணியை சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியைச் சந்தித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் இருவரும் விண்ட்ஸர் கோட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்ட பின்னர் மகாராணியைச் சந்தித்து அவருடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அவரைச் சந்தித்த பின்பு ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு செல்வதற்காக ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் தங்கியிருக்கும் ட்ரம்ப், நாளை வரை பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 13, 2018

விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரதமர் மற்றும் மகள்

விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரதமர் மற்றும் மகள்


பாகிஸ்தானில் எதிர்வரும் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூர் விமான நிலையத்தில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஊழல் பணத்தில் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றம் அவரது மகள் மரியம் ஆகிய இருவரும் லண்டனில் இருந்து அபிதாபி வழியாக பாகிஸ்தான் திரும்பிய நிலையில் 2 பேரும் கைதாகியுள்ளனர்.

அத்துடன் அவரகளின் கடவுசீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்க்கம் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்: ஒருவர் உயிரிழப்பு

மார்க்கம் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்: ஒருவர் உயிரிழப்பு


Canada Tamil News: மார்க்கம் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (வியாழக்கிழமை) Toronto/Buttonville நகர் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாவும், இதில் உயிரிழந்தவர் விமானி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தானது, விமான நிலையத்திற்கு வெளிப்புற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறிய பொலிஸார், இதில் காயமடைந்த விமானி தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

மேலும் இது குறித்த சம்பவம் தொடர்பில் போக்குவரத்து பாதுகாப்பு சபை, ஒரு விசாரணைக் குழு ஒன்றினை அமைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு: 85 பேர் பரிதாபமாக பலி

பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு: 85 பேர் பரிதாபமாக பலி


பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் முஸ்டங் நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 85 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதே போன்று பன்னு நகரில் ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.லட்வியாவில் இராணுவ நடவடிக்கையை நீடிக்க பிரதமர் முடிவு!

லட்வியாவில் இராணுவ நடவடிக்கையை நீடிக்க பிரதமர் முடிவு!


லட்வியாவில் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் 4 ஆண்டுகளுக்கு கனடா நீடிக்கவுள்ள நிலையில், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கனேடிய படைகள் அங்கு நிலைகொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அங்கு நிலைகொண்டுள்ள 455 கனேடிய படை வீரர்களின் எண்ணிக்கையை 540 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்வியாக்கான பயணத்தின் போது, அந்த நாட்டு பிரதமருடன் சந்திப்பில் ஈடுபட்டதன் பின்னர் குறித்த அறிவிப்பின் கனேயடிப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரசெல்ஸ் செல்வதற்கு முன்னதாக அவர் லட்வியா சென்று அங்கு பணியாற்றிவரும் கனேடிய இராணுவத்தினருடனும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இளையோர் அணியில் வட மாகாண வீரர் வியாஸ்காந்த்

இலங்கை இளையோர் அணியில் வட மாகாண வீரர் வியாஸ்காந்த்


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனினும், அவரை மேலதிக வீரராக இணைத்துக் கொள்ள தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலதுகை சுழல் பந்துவீச்சாளரான வியாஸ்காந்த், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரில் மேல், வட மத்திய மற்றும் வட மேல் மாகாண அணிகளுடனான போட்டியில் பந்துவீச்சில் அசத்தியிருந்ததுடன், வட மாகாண அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். அதுமாத்திரமின்றி, அணிக்கு தேவையான நேரத்தில் துடுப்பாட்டத்திலும் அசத்தியிருந்தார்.

இதேநேரம், இம்முறை இடம்பெற்ற 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவரான வியாஸ்காந்த், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண ஒரு நாள் தொடரில் வட மாகாண அணியின் தலைவராகச் செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான எஸ். மதுசன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெறவில்லை. குறித்த போட்டித் தொடரில் அவர் வட மேல் மாகாண அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்திலும் வேகமாக 34 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேலும், இவ்வருட வடக்கின் மாபெரும் சமரிலும் அதிரடியாக அரைச்சதம் கடந்து யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரராகவும் இருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி, நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை கொழும்பு, மொறட்டுவை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இலங்கை அணி நேற்று (12) அறிவிக்கப்பட்டது.

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவராக வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை ஆட்டக்காரரான நிபுன் தனஞ்சய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோ பகுதிகளில் 200 பொலிஸார் குவிப்பு! காரணம் இதுதான்

ரொறன்ரோ பகுதிகளில் 200 பொலிஸார் குவிப்பு! காரணம் இதுதான்


ரொறன்ரோ பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு புதிய பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறித்த பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் இரவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக ரொறன்ரோவின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அவர்கள் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணிவரைக்கும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் 212 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 188 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! அமைச்சர்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! அமைச்சர்


தொடர்ச்சியாக 5 வருடத்திற்கு வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் நீக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வாகன பதிவு தொடர்பில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் வாகன பரிசோதனைக்காக எழுத்து மூலமான பரீட்சைக்கென புதிய கணனி முறையொன்று அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலத்தில் இடம்பெற்றது. உயர்தொழில்நுட்பத்துடனான நவீன முறையின் கீழ் விண்ணப்பதாரிகளுக்கு கணனி திரையை பயன்படுத்தி பதில் வழங்க முடியும்.

வாகன அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மூலமான பரீட்சைக்கென நாளாந்தம் சமூகமளிக்கும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை 1000 ஆகும். இதில் நாளாந்தம் வெரஹெர அலுவலகத்திற்கு 350ற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.

முதல் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் ரூபா செலவில் 143 கணனி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறையின் கீழ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

பரீட்சை தொடர்பான பெறுபேறு திரையில் வெளிவருகின்றமை விசேட அம்சமாகும். சித்தியடைய தவறுவோருக்கான பரீட்சைக்கென வேறொரு நாள் அதே நேரத்தில் நடத்தப்படும்.

பரீட்சார்த்திகளுக்காக வழங்கப்படும் புள்ளிகளை மாற்றமுடியாது. அது தொடர்பில் மீண்டும் விசாரிக்க முடியும். அடுத்த வருடத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 24 கிளைகளுக்கு இந்த வசதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Development was stagnant due to conflict - Sampanthan

Development was stagnant due to conflict - Sampanthan


The Leader of the Opposition R Sampanthan says Sri Lanka failed to achieve its development goals due to the longstanding conflict, which has not been resolved for the past 70 years.

Speaking during a meeting with the Visiting Thailand Prime Minister Prayut Chan-o-Cha the Leader of the Tamil National Alliance said the country needs a peaceful resolution through a new Constitution adding the opposition will extend its support to the government to achieve such a power-sharing arrangement.

Highlighting the longstanding bilateral relationship between Sri Lanka and Thailand the Leader of the Opposition Sampanthan commended the progress made by Thailand in the past.

Speaking on the need for Investments in the North and East Sampanthan requested the Prime Minister to encourage the Thai private sector investors to invest in the North and East.

While appreciating the initiatives taken to establish a sugar factory in the North by the Thailand Investors the Opposition Leader requested more of such investments to the former war-torn areas.

He emphasized that more investments would certainly uplift the Economic condition of Sri Lanka.
டெங்கு நோய் தாக்கத்தால் 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு...! வைத்தியசாலையில் பிழையா?

டெங்கு நோய் தாக்கத்தால் 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு...! வைத்தியசாலையில் பிழையா?


டெங்கு நோய் தாக்கத்தினால் மன்னார் – தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்த நோயளியின் இறப்பு தொடர்பில் உடனடியாக விசாரனைகளை மேற்கொள்ள பணித்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

சிகிச்சை அல்லது வேறு முறைகளில் தவறுகள் எதுவும் இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரனையை மேற்கொள்ள வைத்தியசாலை பணிப்பாளருக்கு பணித்துள்ளதாகவும், அவ்வாறு குறைகள் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. ஒரு வீதமான உயிரிழப்பைக் கூட மன்னார் மாவட்டத்தில் சந்திக்கவில்லை.

ஆனால் துரதிஸ்ரமாக 8 ஆண்டுகளின் பின்னர் தற்போது டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. இது ஒரு கவலைக்குரிய விடையம் என தெரிவித்த அவர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
Sri Lanka assures India on ongoing projects and fishermen issue

Sri Lanka assures India on ongoing projects and fishermen issue


Sri Lanka and India today had talks on the progress on Indian funded projects as well as on the fishermen issue.

Prime Minister Ranil Wickremsinghe met Indian Foreign Secretary Vijay Keshav Gokhale today and had wide ranging discussions.

The Prime Minister’s office said that Wickremsinghe assured India that several Indian funded projects will get off the ground this year.

Both sides also discussed matters related to the proposed Economic and Technology Co-operation Agreement (ETCA).

“Strong regional relationships are integral to our plans to grow our economy and strengthen our position as an Indian Ocean economic hub. Today I met with the Indian Foreign Secretary, Mr Vijay Keshav Gokhale, as we continue to build our relationship with India,” the Prime Minister tweeted after the meeting.

The Prime Minister’s office said that both sides also had talks on the Indian funded housing project in the North for war displaced families.

The issue on Indian fishermen crossing into Sri Lankan waters was also discussed and it was noted that Indian fishermen in Sri Lankan custody will be released.
Transcripts of Vijayakala Maheswaren’s controversial speech sought

Transcripts of Vijayakala Maheswaren’s controversial speech sought


The Colombo Chief Magistrate today ordered the Commissioner of the Department of Official Languages to provide Sinhala and Tamil transcripts of the controversial speech made by former State Minister Vijayakala Maheswaren.

The Police Organised Crime Prevention Division (OCPD) had sought a court order to obtain the transcripts. The Colombo Chief Magistrate issued the order after a motion was filed by the OCPD.

In her recent speech, Maheswaren had said that there was a need for the LTTE to be in control in the North and East to prevent crimes from taking place. Following an uproar over the speech, Maheswaren resigned from her Government post.
இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (வெள்ளிக்கிழமை) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

வாங்கும் விலை விற்கும் விலை
டொலர் (அவுஸ்திரேலியா) 115.6768 120.3501
டொலர் (கனடா) 119.0185 123.2186
சீனா (யுவான்) 23.3219 24.4028
யூரோ (யூரோ வலயம்) 182.6306 188.7173
யென் (ஜப்பான்) 1.3896 1.4387
டொலர் (சிங்கப்பூர்) 115.0009 118.7313
ஸ்ரேலிங் பவுண் (ஐக்கிய இராச்சியம் ) 206.6807 212.9861
பிராங் (சுவிற்சர்லாந்து) 156.0891 161.6857
டொலர் (ஐக்கிய அமெரிக்கா) 157.5591 160.7471

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்

நாணயங்களின் பெறுமதி
பஹரன் – தினார் 420.3516
குவைத் – தினார் 526.6758
ஓமான் – றியால் 414.0180
கட்டார் – றியால் 43.7715
சவுதிஅரேபியா – றியால் 42.4953
ஐக்கியஅரபு இராச்சியம் – திர்கம் 43.3884
அடுத்தவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக படுத்திருந்த மர்ம நபர்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

அடுத்தவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக படுத்திருந்த மர்ம நபர்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

குருநாகல் கல்கமுவில் வீடொன்றுக்குள் புகுந்து, நிர்வாணமாக படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளரான பெண், தனது பிள்ளைகளுடன் நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, அங்கு குறித்த நபர் படுத்திருப்பதைக் கண்டு பதறியுள்ளார்.

அவர் படுத்திருந்த நிலை கண்டு அப்பெண்ணும், பிள்ளைகளும் பயந்துள்ளனர். பின்னர் அப்பெண் அளித்த முறைப்பாட்டினையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தரின் போதனைப்படி நியாயமாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்

புத்தரின் போதனைப்படி நியாயமாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வருமாறு,

இருநாட்டிற்குமிடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன், கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்தார். 


கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் நிமித்தம் இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக் காட்டினார். 

சமகால அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார். 


மேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வினை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார். 

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற இரா. சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டுவரப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன் புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிக்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனம் கலந்துகொண்டிருந்தார்.
விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரையின் சிங்கள மொழியாக்கத்தினைச் சமர்ப்பிக்குமாறு அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தென்னிலங்கையில் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில், தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரன் மீதான விசாரணைகள் பக்கச்சார்பற்ற நீதியான முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்தது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

அதன்படி பதிலுப்பு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சற்று முன்னர் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக பெப்டு பிளசிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார். 

அதன்படி இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தங்கியுள்ளபோதும் கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தங்கியுள்ளபோதும் கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்


யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச் சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ளபோது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர்.

அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகா யமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கூறி 24மணி நேரத் திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலியுடன்  மூவர் கைது

யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலியுடன் மூவர் கைது

யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலி ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட கைச்சங்கிலியை பொலிஸ் உத்தியேதகத்தர் ஒருவர் வாங்குவது போல் சென்று குறித்த நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முன் இன்று (13) ஆஜர்படுத்தப்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (13) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

அகில இலங்கை கூலி வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, அமைப்பின் தலைவர் சரித் அதத்தனபொல தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் - வளிமண்டளவியல் திணைக்களம்

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் - வளிமண்டளவியல் திணைக்களம்

நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏனைய பிரதேசங்களில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

நீர்கொழும்பில் இருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை தாய்லாந்திற்கு இடையே வர்த்தக, தொழில்நுட்ப  உடன்படிக்கை

இலங்கை தாய்லாந்திற்கு இடையே வர்த்தக, தொழில்நுட்ப உடன்படிக்கை

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது. 

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின. 

தேரவாத பௌத்த கோட்பாட்டினால் போஷிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளை பாராட்டிய வண்ணம் கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச தலைவர்கள், சகல துறைகளிலும் இந்த தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சி அடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார். 

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். 

இதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். 

மேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார். 

இரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டு செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர். 

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பினையும் நட்பினையும் மேலும் பலப்படுத்துவதற்காக தாய்லாந்திற்கு மீண்டும் ஒருமுறை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். 

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. 

சட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

இருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

தாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டு பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. 

அதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழினுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
வலம்புரி சங்கு போன்ற அரியவகை உயிரினம் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

வலம்புரி சங்கு போன்ற அரியவகை உயிரினம் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

கிளிநொச்சி - தர்மபுரம் - விசுவமடு பிரதேசத்தில் வலம்புரி சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களிடம் இருந்து வலம்புரி என்று சந்தேகிக்கப்படும் ட்ரய்டன் வகை அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
வாகன விபத்து ; ஒருவர் பலி

வாகன விபத்து ; ஒருவர் பலி


கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் கனரக வாகனமொன்றும் மோதியதிலேயே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் இடம்­பெறும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொதுமக்­களின் ஒத்­து­ழைப்பு தேவை

வடக்கில் இடம்­பெறும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொதுமக்­களின் ஒத்­து­ழைப்பு தேவை

வடக்கில் இடம்­பெறும் வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு பொதுமக்கள் பூரண ஆத­ரவு வழங்க வேண்டும். அது தொடர்­பான தக­வல்­களை மக்கள் தெரி­விக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். 

வடக்கில் அதி­க­ரித்­துள்ள வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார பிரதி அமைச்சர் நளின் பண்­டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார கருத்து தெரி­விக்­கையில்,

முப்­ப­தாண்­டு­கால யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் வடக்கில் அநே­க­மான அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தற்­போது மக்கள் அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும் இருக்­கின்­றார்கள். மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்­தி­களில் மென்­மேலும் விருத்­தி­ய­டைந்து வரு­வ­துடன் பொரு­ளா­தா­ரத்­திலும் முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு, சட்ட மற்றும் ஒழுங்கை நிலை­நாட்­டு­மாறு நான் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தேன். அத்­துடன் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சரி­யான சேவையை செய்­கின்­றார்கள் என நான் கூறிக் ­கொள்­கின்றேன்.

அரச நிர்­வாக முகா­மைத்­துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சில­வற்றை கூற வேண்­டி­யுள்­ளது. அரச முகா­மைத்­துவ ஆட்­சேர்ப்பின் போது 131 பேரினை உள்­வாங்­கி­யி­ருந்தோம். ஆனால் அதில் வடக்­கி­லி­ருந்து 31 பேர் மாத்­தி­ரமே வந்­தி­ருந்­தார்கள்.

அதே­போன்று பொறி­யி­ய­லா­ளர்கள், கணக்­கா­ளர்கள் போன்ற துறை­க­ளிலும் இங்­கி­ருந்து வரு­வோ­ரது எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது. இலங்­கையர் என்ற ரீதியில் எல்­லோ­ருக்கும் சம­னா­கவே சந்­தர்ப்­பங்­களை வழங்­கி­வ­ரு­கின்றோம்.

தற்­போது வடக்கு, கிழக்கில் 1500 சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். எதிர்காலத்தில் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் தொழில் வாய்ப்­பு­களை வழங்­க­வுள்ளோம். இவை தவிர கிராம மட்­டத்தில் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அதற்­கான வேலைத் திட்­டத்தை கொண்டு வந்­துள்ளோம் என்றார். 

இதனை தொடர்ந்து செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதி­ல­ளித்­தி­ருந்­தனர்.

கேள்வி: பொலி­ஸா­ருடன் தற்­போது இடம்­ பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக கூறுங் கள்?

பதில்: ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர், வடக்கில் இடம்­பெறும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக நேரில் சென்று ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு எனக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தார்கள். அந்­த­வ­கையில் அது தொடர்­பாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன்.

இங்கு சட்ட மற்றும் ஒழுங்­கினை நிலை­நாட்டும் வகையில் செயற்­ப­டு­மாறு பொலி­ஸா­ருக்கு நான் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந் தேன்.

கேள்வி: யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்­துள்­ளதே ?

பதில்: இங்கே இடம்­பெ­று­கின்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள், பாலியல் துன்­பு­றுத் தல் சம்­ப­வங்கள் தொடர்­பாக சந்­தே­க­ந­பர்­களை கைது செய்­துள்ளோம். அவர்­களை நீதி­மன்றில் முற்­ப­டுத்­தி­யுள்ளோம். விசேட­மாக இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்ற போது பொது மக்கள் அது தொடர்­பான தக­வல்­களை வழங்க வேண் டும். அத­னூ­டா­கவும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும்.

கேள்வி : வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறும் நிலையில் முக்­கி­ய­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னரா ?

பதில்: இது தொடர்­பாக பொலிஸ்மா அதிபர் பதில் வழங்­குவார்.

கேள்வி: வன்­முறைச் சம்­ப­வங்கள் காலத்­திற்கு காலம் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் நிலையில் ஏன் அதனை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்த முடி­ய­வில்லை.

பதில்: இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறும் போது அது தொடர்­பாக முன்­னு­ரிமை கொடுத்து விசா­ரணை செய்ய வேண்டும். அதேநேரம் பொதுமக்­களும் இது தொடர்­பான தக­வல்­களை வழங்க வேண்டும். தற்­போது இது தொடர்­பாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். 

கேள்வி: புதி­தாக சட்ட ஒழுங்கு அமைச்­ச­ராக பத­வி­யேற்ற நிலையில் முதல் தட­வை­ யாக வடக்­கிற்கு வந்­துள்­ளீர்கள். இந்­நி­லை யில் இங்­குள்ள நிலை­மைகள் தொடர்­பாக ஏன் அர­சியல் தலை­மை­க­ளு­டனோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனோ பேச­வில்லை?

பதில்: முத­லா­வ­தாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­டி­ருக்­கின்றோம். இதனை தொடர்ந்து மாலை ஆளுநர் அலு­வ­ல­கத்தில் வட­மா­காண ஆளுநர், மாவட்ட அரச அதிபர், யாழ்.மாந­கர மேயர் ஆகி­யோரை சந்­திக்­க­வுள்ளேன். வட­மா­காண முத­ல­மைச்சர் இங்கு இல்லை.

கேள்வி: வடக்கில் போதைப்பொருள் பாவனை அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கடத்­து­வதில் ஈடு­ப­டு­ப­வர்­களை ஏன் கைது செய்­ய­வில்லை?

பதில்: போதை­வஸ்து தொடர்பில் பல கைதுகள் இடம்­பெ­று­கின்­றன. உதா­ர­ண­மாக அண்­மையில் கூட அதி­க­ளவு பெறு­ம­தி­யான போதை பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

போதைப்பொருளை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் விசேட சுற்­றி­வ­ளைப்பு தேடு­தல்­க­ளையும் மேற்­கொள்­ள­வுள்ளோம். இவை தவிர போதைப்பொருள் தொடர்­பான கைது நட­வ­டிக்­கையின் போது அத­னோடு சந்­தே­க­ந­பர்­க­ளுமே கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள்.

கேள்வி: இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய விடு­தலைப் புலி­களின் மீள் உரு­வாக்கம் தொடர்­பான கருத்து குறித்து என்ன நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன ?

பதில்: விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த கருத்து தொடர்­பாக தெற்­கிலும் வடக்­கிலும் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் செய்­தி­களை ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­தன. நாட்டில் உள்ள சட்­டத்தின் படி, அவ் உரை தொடர்­பாக புலன் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு அதன் கோவைகள் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­க­ப்படும். அதன் பின்னர் சட்­டமா அதி­ப­ரது ஆலோ­ச­னைக்கு அமை­வாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

சட்ட ஒழுங்கு பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி : வடக்கில் இரா­ணு­வத்தின் இருப்பு அவ­சி­ய­மா­னதா?

பதில்: இரா­ணு­வத்தின் சேவை­யா­னது இன்­றி­ய­மை­யா­த­தாகும். இயற்கை அனர்த் தங்களின் போது இராணுவத்தின் தேவை அவசியமானதாகும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகம் தேவைப்படு கின்றார்கள். இவர்கள் மக்களோடு இணைந்து மக்களுக்குரிய சேவைகளை செய்ய தேவை.

கேள்வி : இராணுவம் பொலிஸ் ஆகியோர் மக்களுக்கான சேவை செய்ய தேவை என கூறுகின்றீர்கள். ஆனால் விடுதலைப் புலி கள் இருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது என மக்கள் ஏன் கூறுகின்றார்களே?

பதில் : அது பிழையான எண்ணமாகும். தென் பகுதியிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அங்கும் பாதாள உலக குழுவினர் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான வன்முறைச் சம்ப வங்கள் இடம்பெறவில்லை என மக்கள் கூறுவதானது அவர்களது அறியாமையினால் வெளியிடப்படும் விடயமாகும்.
பின்னடைவை அறியாது விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது - சரத் வீரசேகர

பின்னடைவை அறியாது விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது - சரத் வீரசேகர

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசியலில் தாம் அடைந்துள்ள பின்னடைவினை அறியாமல் பிறருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது வேடிக்கயைான விடயம் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாரை தமது தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என்ற விடயத்தை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரை ஆட்சியில் அமர்த்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை. 

அத்துடன் சிறுபான்மை மக்களை பகடைக்காயாக கொண்டு அரசியல் செய்யும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எம்.கே. சிவாஜிலங்கம் போன்றோர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாது நாட்டை பிளவுபடுத்தவே முயற்சிக்கின்றனர். 

இந் நிலையில் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசியலில் தாம் அடைந்துள்ள பின்னடைவினை அறியாமல் பிறருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதும் பிறரை விமர்சிப்பதும் வேடிக்கயைான விடயமாக காணப்படுகின்றது என்றார்.