Friday, July 20, 2018

யாழில் சினிமா பாணியில் அரங்கேறிய வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்....!

யாழில் சினிமா பாணியில் அரங்கேறிய வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்....!


வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் தற்போது வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு உச்சம் பெற்றுள்ளது.

சினிமா பாணியில் நேற்று (வியாழக்கிழமை) அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் யாழில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் யாழ். தாமரை வீதி வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டை சேதப்படுத்தி பின்னர் பெற்றோல் குண்டை வீசியெறிந்து வீட்டை தீக்கிரையாக்கியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் ஆறு முதல் எட்டு பேர்வரையானோரை கொண்ட குழுவினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆயுதங்களுடன் உள்நுழைந்தவர்களை கண்ட வீட்டார் அச்சத்தில் அலற, அவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டு குழுவினர் வீட்டிலிருந்த உபகரணங்களையும், வீட்டின் யன்னல் கதவுகளையும் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டினுள் பெற்றோல் குண்டொன்றை வீசியெறிந்துள்ளனர். வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அயலவர்கள் அங்கு கூடியதையடுத்து வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சினிமா பாணியில் இடம்பெற்றிருந்த அவ்வளவு அட்டகாசங்களும் வெறும் 3 நிமிடங்களுக்குள்ளேயே அரங்கேறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்

வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்

உலகின் முக்கனியாக கருதப்படுவது மா, பலா, வாழை. மற்ற இரண்டும் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் வாழைப்பழமோ வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. அதனாலேயே வாழைப்பழம் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. உலகளவில் மக்கள் விரும்பி உண்ணும் பழமாக வாழைப்பழம் விளங்குகிறது. உலகளவில் வாழைப்பழ உற்பத்தியில் முன்னணியில் இருப்பது நமது நாடுதான். வாழைப்பழத்தின் விலையும், அதன் சத்துக்களுமே அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.

அனைத்து பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான், ஆனால் எல்லாராலும் அனைத்து பழங்களையும் வாங்க இயலாது. வாழைப்பழத்தின் விலை மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு, அதுமட்டுமின்றி இது பசியினை கட்டுப்படுத்தக்கூடியது. இதனால்தான் உலகில் உள்ள பெரும்பகுதியான மக்கள் வாழைப்பழம் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இதனை பயன்படுத்திதான் நம்மிடையே இந்த விஷத்தை வாங்க வைத்து நம்மை நோயில் விழவைக்கிறார்கள்.

முன்பே கூறியது போல வாழைப்பழம் குறைந்த விலையில் அதிகளவு சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகும். இதில் உள்ள பதினாறு வகை சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை தருகிறது. உலகம் முழுவதும் கிட்டதட்ட மூவாயிரம் வகை வாழைப்பழங்கள் உள்ளன. இந்தியாவில் வாழை உற்பத்தியில் தென்மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது. ஆனால் இன்றைய உலகில் கலப்படம் இல்லாத, செயற்கை முறையில் தயாரிக்கபடாத உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்த கலப்பட உணவுகள் நன்மையை வழங்காவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்காமல் இருந்தாலே போதும். ஆனால் இவை நம் உயிரை வாங்கும் அளவிற்கு ஆபத்தானவை.

மோரிஸ் பழம்

தற்போது அனைத்து பழ கடைகளிலும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும். அளவில் பெரியதாகவும், சுவையும் நன்றாக இருக்கும் இதனை ஏன் விலை குறைவாக விற்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் விஷம். " வாழையடி வாழையா" வாழணும்னு சொல்லுவாங்க ஆனால் இந்த பழம் சாப்பிடறவங்கள அப்படி வாழ்த்த முடியாது.

பயிரிடும் முறை

நம்ம நாட்டு வாழை மரம் பயிரிடும் முறைக்கும் இந்த மோரிஸ் பழம் பயிரிடும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இயற்கை முறையில் விளையும் நம்ம நாட்டு மரத்திற்க்கும் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுற இந்த மரத்திற்கும் உள்ள வேறுபாடு பாலுக்கும், கல்லுக்கும் இருக்கிற வேறுபாடு மாதிரி. இரண்டுமே வாழைப்பழம்தான் ஆன பலன்கள் வேற வேற. இந்த மரபணு மாற்றப்பட்ட பழத்தோட காப்புரிமை நம்ம நாட்டுகிட்ட இல்ல எனவே வெளிநாடு மூலம்தான் இந்த பழம் பயிரிடப்படுது.
சைவம் பாதி, அசைவம் பாதி

இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்கமால் இருக்க பலவித பூச்சிக்கொல்லிகள் பயன்டுத்தப்படுகிறது. அதற்கும் மேலாக இந்த மோரிஸ் பழத்தில் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்பட்டது. மோரிஸ் பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இது உங்களுக்கு பல சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பழுக்க வைக்கும் முறை

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு வகையில் பழுக்கவைக்கப்டுகிறது. உதாரணமாக மாம்பழங்கள் எப்படி கிராபைட் கற்கள் கொண்டு பழுக்கவைக்கப்டுகிறதோ, அதேபோல இந்த பழங்கள் இரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு இந்த பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது காய்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏனெனில் அப்போதுதான் காய்களுக்கு சேதம் எதுவும் ஏற்படாது. ஆச்சரியப்பட வைக்கும் உண்மை யாதெனில் இந்த பழத்தை பழுக்க வைக்க மூன்று மணி நேரம் போதும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான் காய்களாக வரும் இவற்றின் மீது ப்ரோபலின் என்னும் இரசாயனம் ஊற்றப்படுகிறது. இந்த இரசாயனம் ஊற்றப்பட்ட சில மணி நேரத்தில் காய்கள் பழுக்க தொடங்கிவிடும். மேலும் இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்கள் ஏழு நாட்கள் வரை கெடாது. பழமும் புதியது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்துவிடுகிறோம்.
அலர்ஜிகள்

இவ்வாறு பலவித மரபணுக்கள், இரசாயனங்கள் கலந்த பழங்கள் எவ்வாறு நமக்கு நன்மையை தரும். இந்த பழங்கள் நமது சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புக்களை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக அழகுக்கென இந்த பழத்தை முகத்திற்கு பயன்படுத்துபவர்களுக்கு பெருமளவில் ஆபத்துகள் காத்திருக்கிறது.
புற்றுநோய்

இரசாயனங்கள் என்றாலே ஆபத்தனாவைதான், அதிலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த இரசாயனம் சும்மாவா இருக்கும் வயிற்றுப்புண், குடல்புண், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். பலர் இதனை ஆரோக்கியம் என நினைத்து தினமும் காலை உணவாக உண்கிறார்கள். அவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
கண்டறியும் முறை

மோரிஸ் வாழைப்பழங்களை யாராவது தாருடன் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இவை எப்போதும் சீப்புகளாகவே விற்கப்படும். இதன் காரணம் யாதெனில் இயற்கையாய் விளைந்த நாட்டு பழங்களின் தாருக்கும், இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்படும் இந்த பழங்களின் தாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரசாயனம் ஊற்றி பழுக்கவைக்கப்ட்ட பழங்களின் வாழைத்தார் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் இயற்கையாய் பழுத்த பழங்களின் வாழைத்தார் பச்சை நிறத்தில் இருக்கும். அதனாலேயே நீங்கள் மோரிஸ் பழத்தின் தாரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
தீர்வு

இதெற்கென்ன தீர்வு, நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவுதான். விலை குறைவென விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கிய உணவை எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.
5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

5 பேர் பயணிக்கும் வசதியுடன் புதிய பறக்கும் மின்சார வாகனத்தின் மாதிரி மாடலை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புதிய பறக்கும் வாகனம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக, பறக்கும் கார்கள் மற்றும் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 

2020ம் ஆண்டு துபாய் மற்றும் அமெரிக்காவின் டல்லாஸ் ஆகிய நகரங்களில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் உபேர் ஈடுபட்டுள்ளது. அதுபோன்று, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் துவங்கிய கிட்டி ஹாக் பறக்கும் கார் நிறுவனம் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஆடம்பர கார் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தற்போது பறக்கும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. இதன்படி, பேட்டரியில் இயங்கும் புதிய பறக்கும் வாகனத்தின் கான்செப்ட்டை வெளியிட்டு இருக்கிறது. பறக்கும் கார் என்றால் தரையிலும் ஓட வேண்டும், வானிலும் பறக்க வேண்டும். 

ஆனால், இந்த வாகனம் ஹெலிகாப்டர் போன்று இருந்த இடத்திலிருந்து நேரடியாக மேல் எழும்பி பறக்கவும், தரை இறக்கவும் வசதி கொண்ட VTOL என்ற ட்ரோன் வகையின் மேம்பட்ட பறக்கும் வாகன வடிவமாக உருவாக்கப்படுகிறது. அதாவது, உபேர் நிறுவனத்தின் பறக்கும் டாக்சிக்கு போட்டியாக அமையும். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மின்சார பறக்கும் வாகனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் பெற்றிருக்கும். 

அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்த பறக்கும் மின்சார வாகனமாக வருவது கூடுதல் சிறப்பு. உபேர் தயாரிக்கும் பறக்கும் வாகனம் குறைந்த தூரமே பயணிக்கும் என்பதால், நகர்ப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பறக்கும் மின்சார வாகனத்தை பெரு நகரங்களில் பயன்படுத்த முடியும் என்பதுடன், அருகருகே உள்ள நகரங்களுக்கும் செலுத்த முடியும். 

மேலும், மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஹைப்ரிட் மாடலிலும் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஹைப்ரிட் மாடலானது, சென்னை மற்றும் பெங்களூர் போன்று அருகாமையிலுள்ள பெரு நகரங்களை இணைக்கும் வகையில் பயன்படுத்த முடியும். 

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கார் தயாரிப்பில் எந்த அளவுக்கு புகழ்பெற்றதோ, அதைவிட விமானங்களுக்கான எஞ்சின் தொழில்நுட்பத்தில் நெடிய பாரம்பரியத்தை கொண்டது. விமான எஞ்சின் தயாரிப்பில் இருக்கும் நீண்ட அனுபவத்தை பயன்படுத்தி, இந்த மின்சார பறக்கும் வாகனத்தை உருவாக்கி வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மின்சார தொழில்நுட்பத் துறை தலைவர் ராவ் வாட்சன் தெரிவித்துள்ளார். 

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பறக்கும் மின்சார வாகன கான்செப்ட மாடலில் மின்மோட்டார்கள் துணையுடன் இயங்கும் 6 புரொப்பெல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிக குறைவான சப்தத்தை வெளிப்படுத்தும் சிறப்பம்சத்துடன் இந்த புரொப்பெல்லர்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் இறக்கைகள் இருந்த இடத்திலிருந்து மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கும் வசதியாக 90 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் வடிவைக்கப்படுகிறது. போதுமான உயரத்தை அடைந்தவுடன், இதன் புரொப்பெல்லர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வாகனம் முன்னோக்கி பறப்பதற்கான த்ரஸ்ட் விசையை வழங்கும். 

வரும் 2020ம் ஆண்டு இந்த பறக்கும் மின்சார வாகனத்தை பறக்கவிட்டு சோதனை செய்ய ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும்,அடுத்த 18 மாதங்களுக்குள் புரோட்டோடைப் எனப்படும் முழுமையான பரிசோதனை வாகனத்தை உருவாக்குவதற்கும் ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த காலக்கட்டத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 2: இன்னும் யாரு போலி-யாக இருக்கிறார்கள் ?

பிக் பாஸ் தமிழ் 2: இன்னும் யாரு போலி-யாக இருக்கிறார்கள் ?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்கள் கடந்த நிலையில், போட்டியாளர்களில் எத்தனை பேர் இன்னும் போலி-யாக இருக்கிறார்கள் என்பதை அவர்களே விவாதிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்  நிகழ்ச்சி தொடங்கி 33 நாட்கள் நிறைவடந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியில் இருந்து மமதி சாரி அனந்த் வைத்தியநாதன், நித்யா என மூன்று பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ்  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போலியாக இருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்தில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஈடுபடும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், பாலாஜி-டேனி இடையேயான விவாதத்தில், மற்றவர்கள் மனம் புண்படும் விதமாக டேனி ஜோக் அடிப்பதாக பாலாஜி குற்றம்சாட்டுகிறார். பதிலுக்கு, ஒருவரை பற்றி பின்னாடி பேசும் பழக்கத்தை விட்டுவிட்டீர்களா என்று டேனி கேட்டதற்கு பண்ணிக்கிட்டு தான் என பாலாஜி கூறுகிறார்.

இதுவரை பிக்பாஸ்   நிகழ்ச்சியில் மூட்டிவிடப்பட்ட எந்த சண்டையும் விறுவிறுப்பாக போகாத நிலையில், இந்த போலி போட்டியாளர்கள் தொடர்பான விவாதத்தில் சுவாரஸ்ய நிகழ்வுகள் இருக்குமா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
உலகமே உற்று நோக்கும் இந்தியா: காரணம் என்ன?

உலகமே உற்று நோக்கும் இந்தியா: காரணம் என்ன?

சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத்திய அரசுக்கு எதிரான #NoConfidenceMotion என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளன. அதனை ஏற்றுக் கொள்வதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து, இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் ஜூலை 20-ம் தேதி (இன்று) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான இந்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான #NoConfidenceMotion என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதேபோல், #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கும் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், நீட் தேர்வில் பிழையான ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம், பிழையான 49 கேள்விகளுக்கு 96 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக சிபிஎஸ்இ வழங்க வேண்டும். கருணை மதிப்பெண் வழங்கி மருத்துவ படிப்புக்கு 2 வாரத்திற்குள் புதிதாக தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

முன்னதாக, இந்த வழக்கில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு விளக்கங்களை கேட்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வில் பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மனு குறித்து சிபிஎஸ்இ விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
இளம் தோற்றத்தில் த்ரிஷா!

இளம் தோற்றத்தில் த்ரிஷா!

'வயதாகி விட்டது; முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது' என, சமூக வலைதளங்களில், தன்னை கிண்டலடித்தவர்களுக்கு எல்லாம், 96 படத்தில், பதிலடி கொடுத்து உள்ளார், த்ரிஷா.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகின. இதில், புதுப்பொலிவுடன், இளம் நடிகையருக்கே சவால் விடும் வகையில், இளமையாக காணப்படுகிறார், த்ரிஷா. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, நடிகையருக்கு, 30 வயது கடந்து விட்டால் அண்ணி, அக்கா வேடங்கள் தான் கிடைக்கும். த்ரிஷாவுக்கும், இதுபோன்ற வேடங்களில் நடிக்க, அழைப்பு வந்தது. ஆனால், அவர், மறுத்துவிட்டார்.

சாமி -2 படத்திலும் முக்கியத்துவம் இல்லாத கரோக்டரில் தான் அவரை நடிக்க அழைத்தனராம் புன்னகையுடன் அதை ஏற்க மறுத்துவிட்டாராம். இன்னும் சில ஆண்டுகளுக்கு கோலிவுட்டில் திரிஷாவை அசைக்க முடியாது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள் 
17 ஆயிரத்து 850 யூரோவை டிப்ஸ் கொடுத்த  ரொனால்டோ

17 ஆயிரத்து 850 யூரோவை டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ

விருந்தோம்பலில் வியந்து  £17,850  டிப்ஸ் ஆக கொடுத்து சாப்பாட்டு விடுதி நிர்வாகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ. கால்பந்தாட்டத்தில் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றுடன் போர்ச்சுகல் அணி வெளியேறியது. 

கடந்த 9 வருடங்களாக ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வந்த இவர், சமீபத்தில் அதிலிருந்து விலகி இத்தாலியின் ஜுவான்டஸ் கிளப்பில் விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். 

இதற்காக அவருக்கு 4 வருடத்திற்கு 800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனது காதலி மற்றும் குடும்பத்துடன் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸூக்கு சுற்றுலா சென்றார். அங்கு கோஸ்டா நவரினோ என்ற ஆடம்பர நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். 

ஓட்டல் நிர்வாகத்தின் விருந்தோம்பலில் மெய் சிலிர்த்த ரொனால்டோ செக் அவுட் செய்யும் போது, டிப்ஸாக மட்டும் 17 ஆயிரத்து 850 யூரோவை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஓட்டல் நிர்வாகத்தால் கூட நம்ப முடியவில்லை தெரிஞ்சுதான் கொடுத்திருக்கிறாரா? என்று சந்தேகம். 

தெரிந்தே கொடுத்திருக்கிறேன் என்றபடி புன்னகையுடன் விடைபெற்றிருக்கிறார். அவர் கொடுத்த யூரோவின் இலங்கை  மதிப்பு  3,105,000.00 என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய  உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கோட்டாபய உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்றைய விசாரணையின் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது. 

அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. 

அதன்படி நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களை திரையிட முன் தேசிய கீதத்தை இசைக்க கோரிக்கை

திரைப்படங்களை திரையிட முன் தேசிய கீதத்தை இசைக்க கோரிக்கை

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. 

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் அதனை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார். 

பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன், சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

விநியோக உரிமை கிடைத்ததன் பின்னர் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குவதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.
கண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை!!! - காணொளி

கண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை!!! - காணொளி

அமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் போல் ஒலிவ் எண்ணெய் போன்ற ஒரு திரவம் வடிந்து கொண்டிருப்பதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர். 

இந்த 7 அடி உயரமான கன்னி மேரியின் வெண்கல சிலை உள்ளூர் மொழியில் குவாடலூப் எமது லேடி என அழைக்கப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட துப்பறிவாளர் லாஸ் க்ரூசஸ், 

"அதில் இருந்து வரும் கண்ணீர் ஒலிவ் எண்ணெய் போல் உள்ளது. அதனை இரசாயன சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது புனித பொருளாக கருதப்படுகிறது. இப் புனித எண்ணெய் திருச்சபை இறைவணக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு புனித எண்ணெயாக பயன்படுத்தப்படுகிறது." என கூறியுள்ளார்.

திருச்சபைத் தலைவர்கள்,

"இந்த அரிதான நிகழ்வை காண அனைத்து மக்களும் மாறி மாறி வரும்படி தூண்டியுள்ளது. ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் தேவனுடைய தாயின் சிலை அழுவதாக பார்க்கிறார்கள்" என கூறுகிறார்கள்.

ஆனால் இதற்கான விளக்கத்தை அவர்களால் கூற முடியவில்லை.

குறித்த கத்தோலிக்க தேவாலயம் இயற்கைக்கு புறம்பான அறிகுறிகளை நம்புவதற்கு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 

2015 இல் வத்திக்கான் புரொபசீஸ் என்ற புத்தகத்தை எழுதிய ஜான் தவாஸ்,

"கடவுள் நம் சொந்த உலகில் செயல்படும் மரபு சார்ந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, சில நேரங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் நம் உலகில் காணப்படுவதால். இதுபோன்ற ஏதோவொரு ஆர்வமும் உற்சாகமும் ஏற்படுகிறது" என கூறிள்ளார்.
மூவரைக் கொலைசெய்தவருக்கு மரண தண்டனை !

மூவரைக் கொலைசெய்தவருக்கு மரண தண்டனை !

மூவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூப் ஹில்மி என்பவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ள 20 வீட்டுத் திட்டத்திற் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூவ் ஹக்கீம் என்ற நபருக்கே நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு சி. தவராசா அழைப்பு

சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு சி. தவராசா அழைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.

வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது “வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை” என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விஷேட அமர்வு ஒன்று கடந்த 16.07.2018 அன்று கூட்டப்பட்டது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களிற்குத் தகுந்த பதிலளிக்காமல், கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றார்.

மாகாணத்தின் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களிற்கான மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள இன்றைய நிலையில், அம் மக்களிற்கு நேர்மையுடனும் உண்மைத் தன்மையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கு உண்டு.

ஊடகங்களின் கேள்விக்குப் பதில், வாரத்துக்கொரு கேள்வி என்று தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலிறுக்கிக் கொண்டிருக்காமல், எம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின், அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.

தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
 யாழில் சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்

யாழில் சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை 21 ஆம் திகதியும் நாளை மறுதினம் 22 திகதியும் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள்.

ஆய்வு மகாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை பிரதமமந்திரியின் பாரியார் பேரிசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார். தொடக்க நிகழ்விற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

நிகழ்விற்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் விசேடவிருந்தினராகவும். தமிழ்நாட்டின் எத்திராஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.மல்லிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

ஆய்வு மகாநாட்டின் இறுதிநாள் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் வடக்குமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கலாநிதி சாந்தி கேசவன், மாற்றுத்தினாளி பெண்கள் அமைப்பைச்சார்ந்த வெற்றிச்செல்வி மற்றும் தமிழ்நாட்டின் திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனந்தகிருஸ்ணன் செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

உலகெங்கிலும் தமிழர்தொன்மை சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவ பாலசுப்பிரமணியம் ( ஒரிசா பாலு ) சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். ஆய்வு மகாநாட்டில் எட்டுத் தலைப்புக்களில் அறுபது ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளையும் சேர்ந்த 83 ஆய்வாளர்கள் இதில் பங்குகொள்கிறார்கள். 

பால்நிலை சமத்துவம், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல், பெண்களின் உளசமூக மேம்பாடு, சமூகக்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, பெண்களும் ஊடகமும், கட்டிளமைப்பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

மகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


பெரும்போக பயிர் செய்கைக்கு உரம் வழங்க ஏற்பாடு

பெரும்போக பயிர் செய்கைக்கு உரம் வழங்க ஏற்பாடு

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

இம்முறை 8 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, சிறுபோகத்திற்கான உர விநியோகம் தற்பொழுது பூர்த்தியடைந்து இருப்பதாகவும் பணிப்பாளர் கூறினார். 

நெல்லுக்கான 50 கிலோ எடை கொண்ட உர மூடை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயிர்களுக்கான உரம் 50 கிலோ மூடை ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சிறுபேகத்திற்க உரத்தை வழங்குவதில் எந்த வித குறைபாடும் இடம்பெறவில்லை என்று செயலகம் தெரிவித்துள்ளது. 

சிறுபோகத்திற்கு தேவையான உரம் அரசாங்கத்திற்குட்பட இரண்டு உர நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டது, ஏனைய பயிர்களுக்கான உர வகை தனியார் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் வண்ணார் பண்ணையில் வாள்வெட்டுக் குழு - பெற்றோல் குண்டு வீச்சு

யாழ் வண்ணார் பண்ணையில் வாள்வெட்டுக் குழு - பெற்றோல் குண்டு வீச்சு
வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவமானது தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் நேற்று (19) இரவு 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மேற்படி முகவரியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர். 

இதன் போது வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆயினும் தமது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஒரு குழுவினர் ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொருக்கியவாறு வருவதை அவதானித்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். 

அவ்வாறு வீட்டுக்கார்ர்கள் கத்திய போதிலும் வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் தம்மிடம் இருந்த வாள்கள் இரும்பு கம்பிகள் கோடாரிகளால் வீட்டின் கதவு, ஐன்னல், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் அங்கிருந்த ஏனைய பொருட்கள் பலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர். 

இதன்போது வீட்டில் இருந்த பெண்மணி பொருட்கள் எதனையும் உடைக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்டிருந்த போதிலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் தொடர்ச்சியாக அடித்து நொருக்கி உள்ளனர். 

இவ்வாறு அனைத்தையும் அடித்து நொருக்கி விட்டு வீட்டிற்குள் பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். இதனை அடுத்து வீடு பற்றி எரிய அயலவர்கள் ஓடி வர வாள்வெட்டுக் குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர். 

இதேவேளை தென்னிந்திய சினிமா படங்கள் போன்று மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் அனைத்து அட்டகாசங்களையும் புரிந்து விட்டுச் சென்றுள்ளனர். 

இதன் பின்னர் வாள்வெட்டு குழுவின் இத்தகைய சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, July 19, 2018

கொழும்பில்  நீர் வெட்டு அமுல்...! மக்களுக்கு முக்கிய செய்தி

கொழும்பில் நீர் வெட்டு அமுல்...! மக்களுக்கு முக்கிய செய்தி


கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் நாளை மற்றும் நாளை மறுதினம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், செட்டியார்தெரு மற்றும் அங்குள்ள குறுக்கு வீதிகளுடன் தொடர்புடைய பகுதிகளுக்கும், கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, களனி பாலம் முதல் தெமட்டகொட வரையான பிரதான வீதி மற்றும் அதனை அண்மித்த அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனை தவிர, கொழும்பு புறக்கோட்டை பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான்

ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான்

சமீபகாலமாக மலையாள நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் விதமாக முடிவு எடுக்கப்பதை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து சில நடிகைகள் ராஜினாமா, அறிக்கைகள் என புயல் வீசி வருகிறது. கவனித்து பார்த்தால், நடிக்க வாய்ப்பு இல்லாத சிலர் தான் இந்த பிரச்னையை ஊத்தி பெரிதாக்கி வருகின்றனர்.. இளம் நடிகர்களில் எவரும் இந்த விவகாரம் குறித்து வாய் திறப்பதே இல்லை.

இதுகுறித்து சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் எப்போதுமே ஒரு பக்கம் சார்பாக பேசுபவன் அல்ல. அப்படி நடந்து கொண்டால் இன்னொரு தரப்புக்கு சங்கடம் ஏற்படும். அதை நான் விரும்பவில்லை. என் தந்தை (மம்முட்டி) கூட யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் நடந்து கொள்பவரல் " என கூறிய துல்கர், கசபா பட விவகாரம் தொடர்பாக பார்வதி கூறியவற்றை மம்முட்டி பொருட்படுத்தாதையும் சுட்டிக்காட்டினார்.
பச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா?

பச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா?


கலாச்சார சீரழிவாக பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தொகுத்து வழங்குவது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி பெருமையாக பேசுபவர் உலக நாயகன் கமல் ஹாஸன். ஆனால் அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த புகார்களுக்கு மத்தியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.


பகலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்துவோரில் பலர் இரவு வந்தால் சரியான நேரத்தில் டிவி முன்பு அமர்ந்து எந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று கூறுகிறார்களோ அதையே ஸ்நாக்ஸோ, சாப்பாடோ சாப்பிட்டுக் கொண்டே ஹாயாக பார்க்கிறார்கள். பார்த்த பிறகு நிகழ்ச்சியில் அது சரியில்லை, இது சரியில்லை என்று ஆயிரம் குறை கூறுகிறார்கள். இத்தனை புகார் தெரிவிப்பவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதை தவிர்க்கலாமே. பிக் பாஸை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே.

சும்மா இது மோசம் மோசம் என்று பேசிக் கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. பார்வையாளர்களாக நீங்கள் கொடுத்த அமோக ஆதரவால் தான் அவர்கள் இரண்டாவது சீசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களிடம் அதிகம் இருக்கிறது. அதை தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் பார்க்கிறார்கள். திருந்த வேண்டியது அவர்கள் இல்லை நாம் தான்.

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்கலாமே என்று யாராவது கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்வது இல்லை. நிகழ்ச்சியை நடத்துபவர்களை கோடிகளில் புரள வைப்பதே பார்வையாளர்களாகிய நீங்கள் தான். இதை நீங்கள் புரிந்து கொண்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் உங்களை திருப்திபடுத்த தங்களை மாற்றிக் கொண்டு முறையாக யோசிப்பார்கள். வட இந்திய நடிகைகளை அழைத்து வந்து அரை குறை ஆடையில் உலவ விட்டு, ஆண்களுடன் உரசிப் பேசவிட்டு இது அவர்களின் கலாச்சாரம் என்ற சப்பை கட்டு கட்ட மாட்டார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த செயலில் இறங்க நாம் தயாரா? 

கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பச்சைக் குழந்தைகள் எல்லாம் பலாத்காரம் செய்யப்படும் கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வக்கிரமான காட்சிகளை காட்டி மக்களை உசுப்பேற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நிகழ்ச்சிகளை தயாரித்தால் நல்லது. யாஷிகா, மகத் நடந்து கொள்ளும்விதம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள கமல் ஹாஸனுக்கு மக்களின் குமுறல்கள் தெரியவில்லையா? இப்படிப்பட்ட நிகழ்ச்சியை போய் நீங்கள் தொகுத்து வழங்குவது தான் பலருக்கும் வருத்தம் சார்.

டிஆர்பியை ஏற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம் போன்று. தொழில் போட்டியில் நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய இளம் பெண்கள், இளைஞர்களை ஒட்டி உரசவிட்டு நிகழ்ச்சி எடுத்து காட்டுவது தான் பிக் பாஸ் என்ற தரக்குறைவான விமர்சனம் எழுந்துள்ளது. 

இந்தியில் கண்ட கருமத்தை செய்கிறார்கள் என்பதால் அதை காப்பியடித்து தமிழகத்தில் ஒளிபரப்புவது சரி இல்லை. யார் வேண்டுமானாலும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம், பக்கம் பக்கமாக எழுதலாம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்தாமல் நாம் பேசி புண்ணியமில்லை. பார்வையாளர்கள் அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை செய்தால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தானாக திருந்தப் போகிறார்கள்.
சர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி

சர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி

சர்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் போஸ்டரில் தளபதி சிகரெட் பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். 

அந்த போஸ்டரை பார்த்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் போஸ்டர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து படத் தயாரிப்பு தரப்பில் அந்த போஸ்டரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்கள். இந்த பிரச்சனை குறித்து முருகதாஸோ, விஜய்யோ இதுவரை எதுவும் பேசவில்லை. நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்தார். 

முதலில் புகையிலையை தடை செய்யட்டும் என்றார். இந்நிலையில் சர்கார் போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்காக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்கு மாறாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தானே என்றார்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'

பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'

ஹிந்தித் திரையுலகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான 'தடக்' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிப்பில், சஷாங் கைதான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் நடிக்கும் படம் இது. மராத்தியில் வெளிவந்து பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்ற 'சாய்ராட்' படத்தின் ரீமேக்தான் 'தடக்'.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூர் தம்பி இஷான் கட்டர் நடித்துள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு மஜித் மஜிதி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பியான்ட் த கிளவுட்ஸ்' படத்தில் நாயகனாக நடித்திருந்தார் இஷான்.

'தடக்' படத்தின் டிரைலர், டைட்டில் டிராக் ஆகியவை யு டியூபில் மிகப் பெரும் பார்வைகளைப் பெற்றுள்ளதால் இந்தப் படத்திற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராத்தி படமான 'சாய்ராட்' படத்தை பலர் பார்த்திருந்தாலும், ஜான்வி கபூர், இஷான் கட்டர் ஜோடிக்காகவே இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என பாலிவுட்டில் எதிர்பார்ப்பு உள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணியை தற்காலிகமாக நீக்க முடிவு

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணியை தற்காலிகமாக நீக்க முடிவு

சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை, சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக நீக்க சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது. 

சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (18) மாலை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிமன்றம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 5 சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விசாரணையின் அறிக்கை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ, சட்டத்தரணிகளின் தொழிலுக்கு பொருத்தமற்ற மற்றும் அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதால், சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராவணுவம்

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராவணுவம்

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராவணுவத்தினர் பங்குகொள்வது மற்றும் அவர்களை பல்வேறு நாடுகளுக்கு பணிக்கு அனுப்புவது தொடர்பில் காணப்படும் குழப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள்சபையின் அரசியல் விவகாரங்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் மேரி யமஷிடா மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனெரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே யமஷிடா மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். 

2004 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் பணிபுரிந்த 134 இலங்கைப் படையினர் ஹெட்டியன் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமைதிகாக்கும் படையணிக்கு இலங்கைப்படையினரை அனுப்புவதில் இலங்கை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிப்பர் மோதியதில் மூதாட்டி பலி : தப்பியோடிய சாரதியை மடக்கி பிடித்த மக்கள்

டிப்பர் மோதியதில் மூதாட்டி பலி : தப்பியோடிய சாரதியை மடக்கி பிடித்த மக்கள்

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாகச் சென்ற டிப்பர் வாகனமொன்று மூதாட்டி மீது மோதியதில் அம்மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்து விட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மரப்பாலததைச் சேர்ந்த 72 வயதான துரைச்சாமி தானி எனும் வயோதிபப் பெண் ஆவார்.

உயிரிழந்தவரின் உடல் உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனச் சாரதி தப்பியோடிய போது பொது மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிவி நிகழ்ச்சி சாகசத்தில் உயிர் தப்பிய பெண்

டிவி நிகழ்ச்சி சாகசத்தில் உயிர் தப்பிய பெண்

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்தரத்தில் தொங்கிய படி சாகசம் செய்த போது, கணவனின் பிடியில் இருந்து நழுவி மனைவி கீழே விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். America's got talent என்ற நிகழ்ச்சியில் டைஸ் நெல்சன் - மேரி வோல்ஃப் நெல்சன் தம்பதியர், சாகசம் செய்தனர்.

அந்தரத்தில் தலைகீழாக கணவன் தொங்கிக் கொள்ள, மனைவி கீழே விழும் போது கண்ணைக் கட்டிக் கொண்டு பிடிக்க வேண்டும் என்பது தான் சாகசம். ஆனால் சாகசத்தின் போது பிடி நழுவியதால் மேரி நெல்சன் கீழே விழுந்தார்.இதைப் பார்த்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிறிது நேரத்தில் மேரி நெல்சன் மேடையில் இருந்து எழுந்தார்.
புவிக்கு அடியில் கோடிக்கணக்கான டன்கள் வைரங்கள் - அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புவிக்கு அடியில் கோடிக்கணக்கான டன்கள் வைரங்கள் - அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புவியின் அடி ஆழத்தில் கோடிக்கணக்கான டன்கள் அளவுக்கு வைரங்கள் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், புவியின் அடிப்பகுதிக்கு ஒலி அலைகளைச் செலுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதில் புவியின் மேல் மட்டத்தில் இருந்து 145கிலோமீட்டர் முதல் 240கிலோமீட்டர் வரையுள்ள அடி ஆழத்தில் கோடிக்கணக்கான டன்கள் வைரங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வளவு ஆழத்தில் இருக்கும் அந்த வைரங்கள் இருக்குமிடத்தை எந்தத் துளையிடும் கருவியாலும் எட்ட முடியாது என்பதால் அவற்றை எடுக்கவும் முடியாது. புவிக்கடியில் இருக்கும் கரித் துகள்கள் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் இறுகி வைரமாக உருமாறுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூட்டிய வீட்டுக்குள் ஒருவரை கட்டி வைத்து எரித்துக் கொன்ற சம்பவம்

பூட்டிய வீட்டுக்குள் ஒருவரை கட்டி வைத்து எரித்துக் கொன்ற சம்பவம்

சென்னை ஆலந்தூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவரை இரும்பு கம்பியில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வந்தார். புதன்கிழமை மாலை பூட்டியிருந்த அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆண் சடலம் ஒன்று இரும்புக் கம்பியில் கை கால்கள் கட்டப்பட்டு கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிக்குள் எரிந்து கரிக்கட்டையாக இருந்த உடல் முகமது சுல்தான் என்பது தெரியவந்தது. பண்ருட்டியைச் சேர்ந்த முகமது சுல்தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், அண்ணா சாலை ரிச்சி தெருவில் செல்போன் கடை நடத்தி வந்தவர். தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீமான் உட்பட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சீமான் உட்பட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்ற சீமான் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களில் 9 பேரை சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் கூமாங்காடு கிராமத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதியின்றி வரக் கூடாது என சீமான் உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்தனர். மல்லூர் காவல்நிலையத்தில் வைத்து சீமான் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

11 பேரில் 2 பெண்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுவித்த போலீசார், சீமான் உட்பட 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 36 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் எரிந்து சாம்பலாயின

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 36 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் எரிந்து சாம்பலாயின

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலோர மாகாணமான ஒரேகானில் (Oregon) ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் உள்ள பண்ணை நிலங்களிலும் பரவியது.

இதனால் 36 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் எரிந்து சாம்பலாயின. இதனையடுத்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினரும், பண்ணைநில உரிமையாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எட்டு மணி நேரத்தில் 18 மைல் என்ற வேகத்தில் நெருப்பு பரவி வருவதால் தீயை அணைக்கும் பணி போர்க்கால வேகத்தில் நடந்து வருகிறது.
ஐ.நா.,வின் மிகப் பெரிய தோல்வி மனித உரிமைகள் கழகம்

ஐ.நா.,வின் மிகப் பெரிய தோல்வி மனித உரிமைகள் கழகம்

மனித உரிமைகள் கழகம் என்பது ஐ.நா.,வின் மிகப் பெரிய தோல்வி என அமெரிக்காவிற்கான ஐ.நா தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். 

ஐ.நா.,வின் மனித உரிமைகள் கழக்கத்தில் இருந்து கடந்த மாதம் அமெரிக்கா விலகியது. இந்நிலையில் ஐ.நா.,வின் மனித உரிமைகள் கழகம் குறித்து அமெரிக்க தூதர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். நிக்கி ஹாலே கூறுகையில், ஐ.நா., மனித உரிமைகள் கழகத்தின் போலியான பாசாங்குதனங்களை அமெரிக்கா கண்டிக்கிறது. மனித உரிமைகள் கமிஷன் உலகின் பெரும்பாலான மனிதநேயமற்ற செயல்களை கண்டிப்பதற்கு பதிலாக பாதுகாத்து வருகிறது.

மனித உரிமைகள் கழகம் மனசாட்சியின் இருப்பிடமாக இல்லை. அது அரசியலின் இருப்பிடமாகவே உள்ளது. இஸ்ரேல், சீனா, வெனின்சுலா, கியூபா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் நடக்கும் பல அத்துமீறல்களை மனித உரிமைகள் கழகம் கண்டு கொள்ளாமல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
ரஜினியை போன்ற நல்லவர்கள் தமிழக அரசுக்கு ஆதரவு - ஆர்.பி.உதயகுமார்

ரஜினியை போன்ற நல்லவர்கள் தமிழக அரசுக்கு ஆதரவு - ஆர்.பி.உதயகுமார்

ரஜினியை போன்ற நல்லவர்கள் தமிழக அரசுக்கு ஆதரவளிப்பது வரவேற்கதக்கது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் பேரையூரில் சைக்கிள் பிரச்சாரப் பேரணியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்
கொழும்பை அண்மித்த பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்விநியோகத்தடை

கொழும்பை அண்மித்த பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்விநியோகத்தடை

கொழும்பை அண்டிய பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 9 மணிமுதல் களனி பாலம் முதல் தெமட்டக்கொட வரையிலான பேஸ் லைன் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள்,கொழும்பு செட்டியார் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள் உட்பட கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளிலும் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் 2 வார கால அவகாசம்!

புதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் 2 வார கால அவகாசம்!

புதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு நேற்று கூடிய போது புதிய அரசியல் யாப்பு தயாரிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை என விஷேட சபை கேட்டுக்கொண்டமையினாலேயே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விஷேட சபையினால் புதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரசியல் யாப்பு செயற்பாட்டு குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகால நிலைமை நீக்கம்

துருக்கியில் இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகால நிலைமை நீக்கம்

துருக்கியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகாலநிலைமை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து துருக்கியில் அவசரகாலநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகால நிலைமை பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டதோடு பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் துருக்கியின் ஜனாதிபதியாக தையீப் எர்டோகன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவசரகால நிலையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருந்ததைப் போல இன்று நிறைவேற்றியுமுள்ளார்.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் சிக்கி சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தோனி ஓய்வு பெறுகிறாரா? தோனி பந்தை வாங்கியது ஏன்

தோனி ஓய்வு பெறுகிறாரா? தோனி பந்தை வாங்கியது ஏன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த பின்னர் டோனி, நடுவர்களிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே டோனி ஓய்வுப் பெறப்போகின்றாரா என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

அந்த வகையில் லீட்ஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள், ஆடுகளத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போது டோனி நடுவர்களான அக்ஷன்போர்ட் மற்றும் மைக்கேல் கோஹ்கிடமிருந்து பந்தை கேட்டு வாங்கியுள்ளார்.

குறித்த இந்த காட்சியனாது சமூகதளங்களில் வெளியானதையடுத்து ரசிகர்கள் மத்தியில் டோனி ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போகின்றாரா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது. காரணம் பொதுவாக போட்டித் தொடரை வெற்றி பெற்றாலோ அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வார்கள்.

ஆனால் தோல்வியடைந்த போட்டியில் டோனி பந்‍‍தை வாங்கியமையினாலேயே மேற்கண்ட கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையல் அவர் பந்தை வாங்கிய காரணத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,

டோனி அந்த பந்‍தை வாங்கியது போட்டிக்குப் பின் பந்தின் தன்மை எப்படி இருக்கிறது, என்ன நிலையில் இருக்கிறது என்பதை பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிக்கவே தவிர மற்றபடி அதில் வேறு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் 37 வயதான டோனி அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கிண்ணத் தொடர் வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிப்பு

ரயில் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிப்பு

மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. 

பேராதெனிய பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அபாயகரமான வெடி பொருட்கள் சில நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்றை, அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன் போது கிணற்றுக்குள் அபயகரமான வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க தலைமையில், நேற்று (18) அந்த பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையினரும் இராணுவத்தினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர். 

இதன்போது விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட வெடி பொருட்கள் சில மீட்க்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அகழ்வு பணி நேற்று பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை மீண்டும் தொடரும் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த அகழ்வுப் பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நேற்று ஆரம்பமாகியதுடன் சம்பவ இடத்திற்கு நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூகுளுக்கு 5 பில்லியன் தண்டப் பணம்

கூகுளுக்கு 5 பில்லியன் தண்டப் பணம்

ஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது. 

மூன்று வருட கால விசாரணையொன்று கூகுள் நிறுவனத்தின் நடமாடும் உபகரண தந்திரோபாயமானது நியாயமற்ற முறையில் அதனது தேடுதல் செல்வாக்கினை பயன்படுத்தியுள்ளதாக உரிமை கோரியததைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஆணையகம் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பத்திரிகை மாநாடொன்றில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தனியொரு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய பணத்தொகையாக கருதப்படுகிறது.

இந் நிலையில் இது தொடர்பில் கூகுள் சட்டரீதியாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.