Saturday, July 28, 2018

குடாநாட்டு வன்முறை கும்பலின் பின்னால் இராணுவம்!

குடாநாட்டு வன்முறை கும்பலின் பின்னால் இராணுவம்!

யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின் பின்னர் களமிறக்கப்பட்ட படைப்புலனாய்வு பிரிவினர் அல்லது அவர்களது முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக உள்ள இக்கும்பல் எந்தவித கட்டுப்பாடுமின்றி நடமாடவும் முடிகின்றதென்பதால் அவர்கள் படைத்தரப்பின் ஆசீர்வாதத்துடன் நடமாடுவது உறுதியாகியுள்ளது.

இக்கும்பல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்துவிட்டு இலக்கு அவரில்லையென கூறி வெளியேறியுள்ளது.வந்திருந்தவர்கள் சரளமாக சிங்களத்தில் உரையாடியதாக குறித்த வர்த்தகர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சாவகச்சேரி கைதடியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர்.  

சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். 

அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

எட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.

மஹிந்தவிற்கு திடீர் சுகயீனம்...! இளைஞர்களால் ஏற்பட்ட பதற்றம்!

மஹிந்தவிற்கு திடீர் சுகயீனம்...! இளைஞர்களால் ஏற்பட்ட பதற்றம்!


முக்கிய நிகழ்வொன்றில் கலந்து கொள்வதாக கூறி, அந்த நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்ஷ வராதமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை ஏற்பட்டது.

எம்பிலிப்பிட்டிய ஹீந்தழுக்கின்ன வனவாசல நாக விகாரையில் புத்த பெருமானின் சிலையை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) பிற்பகல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் சுகயீனம் காரணமாக அப்பகுதிக்கு வராத நிலையில், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர்.

இதன் காரணமாக இளைஞர்கள் இருவர் மரத்தில் ஏறி தமது எதிர்ப்பினை வெளியிட்டுருந்த நிலையில் குறித்த இடத்திற்கு மஹிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ஷ வருகை தந்திருந்தார்.

குறித்த பதற்ற நிலைய கட்டுப்படுத்த சமல் ராஜபக்ஷ - மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தி உரையாடியிருந்தார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சமல் ராஜபக்ஷ திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் கோட்டைப் பகுதியில் 2700 ஆண்டு பழமையான மனிதன் வாழ்ந்த சான்று

யாழ் கோட்டைப் பகுதியில் 2700 ஆண்டு பழமையான மனிதன் வாழ்ந்த சான்று


யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறு தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார்.

கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள்,  தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது  என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

2017ஆம் ஆண்டு போருக்குப் பிந்திய தொல்லியல் ஆய்வுப் பணிகள் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயம் அழிவடைந்தது. அந்த ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்வது மற்றும் அதனை மீள் உருவாக்கம் செய்வதே இந்த போருக்குப் பிந்திய தொல்லியல் ஆய்வுப் பணியின் நோக்கமாகும்.

அத்துடன், ஐரோப்பியர்  போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னர் கோட்டைப் பகுதி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் இந்த ஆய்வின் முக்கிய கருப்பொருளாகும். ஒல்லாந்தர் கால கிருஸ்தவ ஆலயத்தை கண்டறியும் சில அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்தின் அத்திவாரம், சுவர் மற்றும் கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அதே காலப் பகுதியில் 2-3 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டன.

அதில் சிறைச்சாலைக்கு அண்மையிலே ஒரு அகழ்வுக் குழி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இயற்கை மண்வரை ஆய்வு செய்யப்பட்டது. 9 கலாசார மண் அடுக்குகள் அதில் கண்டறியப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் தென்னிந்தியா அல்லது தமிழகம், கந்தரோடை, அநுராதபுரம், பூநகரி மற்றும் சாட்டி போன்ற இடங்களில் இருந்ததை  ஒத்த ஆதி இரும்புக்கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கிடைத்துள்ளது.

2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி இரும்புக்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாவதாக, இங்கு வாழ்ந்த மக்கள் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் வணிக உறவைக் கொண்டிருந்தமைக்கும் அந்த வணிகத்தில் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் முக்கிய வணிக மையமாக இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்தன.

இந்த நிலையில் அண்மையில் கோட்டையில் ஹெலிகள் வந்து இறங்கி தங்குகின்ற கட்டடப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இம்முறை அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் நவீன கருவிகள் கொண்டு ஸ்கான் செய்து, நிலத்துக்கு அடியில் என்ன என்ன இருக்கின்றன என்று பார்க்கப்பட்டது. கோட்டைக்கு கீழ் 6-7 அடி ஆழத்தில் பண்டைய கட்டடப் பகுதிகள், கட்டட இடிபாடுகள், கிணறுகள் என்பன கண்டறியப்பட்டன.

உலங்கு வானூர்தி வந்து தரையிறங்க 20ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடப் பகுதிக்கு அருகாமையில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஒல்லாந்தார் கால கிருஸ்தவ ஆலயம் அழிவடைந்ததுக்கு அண்மையான பகுதியான அந்த இடத்தில், 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்தன. அத்துடன், போர்த்துக்கேயர் கால கட்டட அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

போர்த்துக்கேயர் கால கட்டடங்களை இடித்து அந்தக் கற்களைக் கொண்டே கோட்டையை அமைத்ததற்கும் கிருஸ்தவ ஆலயங்கள் அமைக்கபட்டதற்கும் இதன்போது ஆதாரங்கள் கிடைத்தன. அந்த இடத்தில் போர்த்துக்கேயர் கால போர் வீரர்களின் கல்லறைகள் இருந்திருக்கவேண்டும். அந்தக் கல்லறைகளின் கற்பலகைகள் மாற்றப்பட்டு, அவை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன் விளைவாக மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது போர்த்துக்கேயர் கால மற்பாண்டங்களுடன் மீட்கப்பட்டன. எனவே அது போர்த்துக்கேயர் காலம் அல்லது அதுக்கு முந்திய காலப்பகுதியை உடையதாக இருக்கலாம். அந்த எலும்பு ஆய்வுக்கு அனுப்பப்படும். எலும்பு மீட்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு, அதற்கு அருகிலே ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு மீட்கப்பட்ட தொல்பொருள்கள், கோட்டைக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பார்வையிடவேண்டும் என்றார்.
யாழ் ரயில் விபத்து மூன்றாவது நபரும் மரணம்

யாழ் ரயில் விபத்து மூன்றாவது நபரும் மரணம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தவரும் இன்று மாலை சிகிச்சை பயனின்ற உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில் இன்று (28) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27)  ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்றைய இளைஞர் சீக்கியன் சஞ்சீவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பயனின்றி இன்று மாலை உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

மணியம்தோட்டம் பகுதியில் இருந்து நெளுக்குளம் வீதியை நோக்கி, பல்சர் ரக மோட்டார் சைக்கில் ஒன்றில் தலைக்கவசம் அணியாது, மூவரும் பயணித்தனர். இந்த வேளையில், புகையிரதம் வந்துகொண்டிருந்த போது, சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. சுமார் 10 மீற்றர் தூரத்தில் இருந்து வேகத்தினை கட்டுப்படுத்த முற்பட்ட போதும் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள், இழுத்துச் சென்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோதிய வேகத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். வீசிய போதே இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் சேதமடைந்ததுடன், கையடக்கத் தொலைபேசி மற்றும் வாகன சாவி (திறப்பு) என்பன சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டனர். இந்த தொடருந்துக் கடவையில், சமிஞ்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு கடவை வேலி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் இவ்வாறு பல விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், சம்பவத்தினைப் பார்வையிட்ட அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை

யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை


கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவோ அல்லது வீரர்கள் குறைக்கப்படவோ இல்லை என்று யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி கூறினார்.

இன்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

பார்வை குறைபாடுள்ள  மக்களின் கண்களின் வெண்படலத்தை அகற்றும் சிகிச்சை இலவசமாக கடவத்தையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் இராணுவம் வர்த்தகர்கள் விபரம் திரட்டல்

முல்லைத்தீவில் இராணுவம் வர்த்தகர்கள் விபரம் திரட்டல்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் தகவல்களை இராணுவத்தினர் திரட்டி வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் , உடையார் கட்டு , சுதந்திரபுரம் , கைவேலி , ரெட்பானா மற்றும் மாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை விண்ணப்ப படிவம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர்.

அத்துடன் வர்த்தக நிலையங்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 572 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களை சேகரிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
கருணாநிதி உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும் தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரம் நோக்கி படையெடுத்தனர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய நேற்றிரவு கோபாலபுரத்தைச் சுற்றி அதிக அளவில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். 

இதற்கிடையே, தனது வீட்டுக்கு புறப்பட்டுச்சென்ற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், இரவு 12 மணி அளவில் கோபாலபுரத்துக்கு மீண்டும் வந்தார். 

அவரைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின், துரைமுருகன், அழகி, கனிமொழி, செல்வி உள்ளிட்ட பலர் அங்கு வந்தடைந்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால், நள்ளிரவு ஒரு மணிவாக்கில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது என கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும், திரையுலகினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர். 

அதேபோல, அண்டை மாநில முதலமைச்சர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது காவிரி மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் `கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருகிறது. 

அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two youths killed in a train accident in Jaffna

Two youths killed in a train accident in Jaffna


Two youths have been killed after their motorcycle collided with a train at the railway crossing in Jaffna.

Police said the accident was reported this afternoon when the motorcycle collided with a train travelling to Kankesanthurai via Mount Lavinia.

The deceased, aged 29 and 30 years are residents of Columbuthurai.

The accident had occurred when the duo attempted to cross the railway track after ignoring the railway signals.
வீதி விபத்து: பச்சிளங்குழந்தைகள் மரணம்!

வீதி விபத்து: பச்சிளங்குழந்தைகள் மரணம்!


கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்கச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வடமராட்சி கிழக்கின் வத்திராயன் பகுதியை சேர்ந்த சகோதரிகளான இரு சிறுமிகள்; உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் ஏனைய மற்றொரு சகோதரன் படுகாயமடைந்த நிலையில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்தையடுத்து கார் சாரதியை கைது செய்துள்ளார்.

பத்து வயதான சுபாஸ்கரன் தமிழினி மற்றும் நான்கு வயதான சுபாஸ்கரன் சுபாஜினி ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.முன்னதாக சம்பவ இடத்தில் சுபாஜினி மரணமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழினி பின்னர் மரணித்துள்ளார்.

கருணாநிதி உடல்நலக் குறைவான அதிர்ச்சியில் திமுக நிர்வாகி உயிரிழப்பு!

கருணாநிதி உடல்நலக் குறைவான அதிர்ச்சியில் திமுக நிர்வாகி உயிரிழப்பு!


திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இரண்டு நாட்கள் முன்னதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. 

இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கலைஞரின் உடல் நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் வீட்டில் வைத்தே தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனால், நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தமீம் (50) திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமீம் வேதனையில் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இலியானாவின் புகைப்படம் வெளியானது..! இப்படி ஆகிட்டாரே

இலியானாவின் புகைப்படம் வெளியானது..! இப்படி ஆகிட்டாரே


இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.

இலியானா தெலுங்கு பக்கம் ஒதுங்கி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பிறகு பர்பி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார், அங்கும் இவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

இலியானா என்றாலே அவரின் ஜீரோ சைஸ் உடல் எடை குறித்து தான் பேசுவார்கள். ஆனால் சமீபத்தில் அவர் உடல் எடை கூடி தோற்றமளித்தது ரசிகர்களுக்கே கடும் அதிரச்சி தான், நீங்களே இதை பாருங்கள்.

விக்னேஸ்வரனையே மக்கள் விரும்புகின்றனர்: உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்

விக்னேஸ்வரனையே மக்கள் விரும்புகின்றனர்: உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்


அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசருக்கு தற்போதைய வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனே மீண்டும் களமிறங்க வேண்டும்.

இதனையே பலர் கோருகின்ற நிலையில் அதையே மக்கள் விரும்புகின்றார்கள் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அனந்தி சசிதரன் இதனைக் குறிப்பிட்டார்.

அந்தவகையில் மக்கள் பல அமைப்புக்களாகவோ அல்லது குழுக்களாகவோ இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக, விக்னேஸ்வரனே வர வேண்டும் என மக்களும் பல கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்குகின்றனர்.

அத்துடன் அவரை மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றார்கள்.

அதன் பிரகாரம் அடுத்த தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை மக்களே முடிவு முடிவு செய்வார்கள் என அவர் மேலும் கூறியிருந்தார்.
Nine hour water cut to affect parts of Colombo District

Nine hour water cut to affect parts of Colombo District


A Nine hour water cut will affect parts of the Colombo District from tonight to tomorrow (Sunday), the National Water Supply and Drainage Board said.

The nine hour water cut will be imposed from 9.00pm today to 6.00am tomorrow.

The disruption will affect Wellawatta, Dehiwala, Mount Lavinia, Ratmalana, Kalubowila, several parts of Nugegoda including Nedimala, Rajagiriya Royal Park, Lake Garden, Bandaranayakepura, Pelawatta and Mulleriyawa.

The water supply in Colombo 05 will be at low pressure. Colombo News Tamil News
Iranian passenger arrested at BIA

Iranian passenger arrested at BIA


An Iranian passenger was arrested at the Bandaranaike International Airport (BIA) with a forged Brazilian passport today.

The passenger was arrested by the Criminal Investigation Department (CID) unit at the airport.

It was reported that the Iranian passenger had attempted to travel to Britain using the forged passport. Colombo News Tamil News
யாழில் ரயில் விபத்து - இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்

யாழில் ரயில் விபத்து - இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்


யாழ்.புங்கங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவருடை ய நிலை கவலைக்கிடமென தெரிவிக்கப்ப டுகிறது.

பூம்புகார், அரியாலை, நாவற்குழி பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவு அமைக்கப்படவில்லை. எனினும் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலித்தபோதும் குறித்த இளைஞர்கள் ரயில் கடவையை கடந்தபோது விபத்து சம்பவித்துள்ளது.

யாழில் புகையிரத கடவையில் கோர விபத்து...! இளைஞர்களின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் புகையிரத கடவையில் கோர விபத்து...! இளைஞர்களின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - நெலுக்குளம் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில், அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், 29 வயதுடைய கந்தசாமி சந்திரகுமார் மற்றும் 27 வயதுடைய இராஜகோபால் கிரிசாந் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் சீக்கியன் சஞ்சீவன் என்ற இளைஞன், படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் புகையிரதம் வரும் வேளை அக் கடவையில் சமிக்ஞை விளக்கு போடப்பட்ட அதேவேளை பாதுகாப்பு வேலி இருக்கவில்லை, இதன் காரணத்தினால் இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது வந்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இரவு நேரத்தில் அச்சுறுத்தல் விடுக்கும் மர்ம கும்பல்! பீதியில் ஓடிய இளைஞர்கள்...!

யாழில் இரவு நேரத்தில் அச்சுறுத்தல் விடுக்கும் மர்ம கும்பல்! பீதியில் ஓடிய இளைஞர்கள்...!


யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வாள்களுடன் திரியும் மர்ம குழுவினர், வீதியால் செல்வோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிய வந்துள்ளது.

நேற்றிரவு சண்டிலிப்பாயில் வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் குழுவினர் வீதியில் போவோர் வருவோரை மடக்கி பிடித்து மிரட்டியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பறித்துக் கொண்டது.

‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்டியதை அடுத்து மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டு சில இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்டிய பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நேற்றிரவு இந்த அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.

முகத்தை மூடித் துணியால் மறைத்தவாறு 8 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.

தையல் கடைக்குள் நின்ற இளைஞனை மிரட்டியே மோட்டார் சைக்கிளில் பறிக்கப்பட்டது. வீதியால் சென்றவர்கள் வாள்களுடன் நடமாடியவர்களைக் கண்டு, வாகனங்ளை விட்டுவிட்டுச் சிதறி ஓடியுள்ளனர். 

அவர்கள் தப்பித்தாலும், வாகனங்கள் வாள்வெட்டுக்கு இலக்காகின. சிறிது நேரம் அங்கு தரித்து நின்ற வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து சென்றது.

யாழ். குடாநாட்டில் ஆவா குழுவின் அட்டகாசம் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறான அச்சுத்தல் சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வன்னியிலும் இராணுவத்திற்கு கூலியாட்கள் திரட்டல்!

வன்னியிலும் இராணுவத்திற்கு கூலியாட்கள் திரட்டல்!யாழ்ப்பாணத்தை தொடர்ந்து முல்லைத்தீவு பகுதியிலும் இலங்கை படைகளிற்கு தமிழ் கூலியாட்களை திரட்ட படைத்தரப்பு மும்முரமாகியிருக்கின்றது.அவ்வகையில் விசுவமடு தொட்டியடிப்பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவின் 2ஆவது படைப்பிரிவினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்து மக்களிடம் இருந்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்னர் படையினரால் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு விசுவமடு தெட்டியடிப்பகுதியில் உள்ள 57 ஆவது படைப்பரிவின் 2ஆவது படைமுகாமில் தகவல் திரட்டு கொத்து படிவம் ஒன்றினை கொடுத்து பொதுமக்களிடம் இருந்தான விபரங்களை திரட்டியுள்ளனர்.

இதில் பெருமளவான மக்கள் தங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளதாகவும், படையினர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை படைகளால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்பு பிரிவு வன்னியில் செயற்பட்டுவருகின்ற நிலையில் தற்போது இலங்கை படைமுகாம்களில் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்த ஆயிரம் பேரை திரட்டும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் ஜுங்கா முதல் நாள் வசூல் இவ்வளவா??

விஜய் சேதுபதியின் ஜுங்கா முதல் நாள் வசூல் இவ்வளவா??


கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் ஜுங்கா.

விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடித்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. 

மோசமான விமர்சனங்கள் பார்த்து அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இப்படம சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 52 லட்சம் வசூலித்துள்ளதாம்.

இன்னும் தமிழ்நாட்டில் படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
துண்டு விரிக்கிறார் அனந்தி!

துண்டு விரிக்கிறார் அனந்தி!

எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி மீண்டும் கடைவிரிப்பதற்கு அனந்தி உள்ளிட்ட கும்பலொன்று இப்போதே தயாராக இருப்பதாக யாழ்ப்பாண செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவ்வகையில் முதலமைச்சர் தலைமையிலான மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக புதிய விளக்கத்துடன் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புறப்பட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் விருப்பத்துடனும் இருக்கின்றார்களென தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் அடுத்த மாகாண சபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன் மதிப்பை குறைப்பதற்காகவும், மறை முகமாக தனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு விவாதமே கைத்துப்பாக்கி விவாதமென தெரிவித்துள்ளதுடன் தற்போது கொண்டு வருகின்ற பிரச்சினையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்ற, முதலமைச்சருக்கு அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட பெண் என்ற வகையில் தன் மீது சரமாரியாக தாக்குதல்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி பட்டியலில் களமிறங்கிய அனந்தி தற்போது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனக்கு , முன்னர் செயற்பட்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  கட்சியொன்றை 40 இலட்சம் கொடுத்து கொள்வனவு செய்ய அனந்தி முற்பட்டதாக உள்ளுர் செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி விரும்பாத செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்டும் மகள்!

நடிகை ஸ்ரீதேவி விரும்பாத செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்டும் மகள்!


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் இப்போது தான் ரசிகர்களுக்கு அதிகம் தெரிய ஆரம்பித்துள்ளனர்.

அவருடைய முதல் மகள் ஜான்வி நடித்த தடக் என்ற படம் கடந்த வாரம் வெளியாகி வசூலில் கலக்கி வருகிறது. 

இப்போது அவரது இரண்டாவது மகளும் நாயகி ஆகும் ஆசையில் உள்ளாராம்.

ஆனால் தனது மகள்கள் சினிமாவில் ஈடுபடுவதை முதலில் மறுத்திருக்கிறார் ஸ்ரீதேவி. 

எப்படியோ முதல் மகள் மட்டும் அம்மாவிடம் சம்மதம் வாங்கி நடித்துவிட்டார். 

இப்போது அவரது இளைய மகள் குஷி கபூர் மாடலாக ஆக வேண்டும் என்று விரும்பிய அவருக்கும் நடிகை ஆகும் ஆசை வந்துவிட்டதாம்.

இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவரே போனி கபூரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விரைவில் குஷியும் நடிகையாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்க குணதிலகவுக்கு 06 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை!

தனுஷ்க குணதிலகவுக்கு 06 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை!


இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனுஷ்க குணதிலகவுக்கு 06 சர்வதேச போட்டிகளில் விளையாட இலங்கை கிர்க்கெட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

அண்மையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படிருந்த நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகளின் இறுதியில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகது.

போலி விமான டிக்கட்களால் நாட்டுக்கு வர முயற்சித்தவர் கைது!

போலி விமான டிக்கட்களால் நாட்டுக்கு வர முயற்சித்தவர் கைது!


குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி, போலி விமான டிக்கடின் மூலம் நாட்டிற்குள் வருகைத் தந்த வெளிநாட்டு பிரஜையொருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேஸில் விமானமொன்றின் மூலமே குறித்த பிரஜை நாட்டிற்குள் வருகைத் தந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

31 வயதான ஈரான் நாட்டு பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போலி விமான சீட்டை பயன்படுத்தி, சந்தேகநபர் பிரித்தானியாவிற்கு பயணிக்க முயற்சித்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் கட்டுநாயக்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு - பாதுகாப்பு அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு - பாதுகாப்பு அமைச்சின் அதிரடி நடவடிக்கை!


Jaffna : வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகள் வசமிருக்கும் பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

இதுவரை வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் வசமிருந்த ஐயாயிரத்து 160 ஏக்கர் காணிகளை கடந்தாண்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாட்டு அறிக்கையில் அது தொடர்பான புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளில் நான்காயிரத்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரச காணிகளாகவும், எஞ்சியவை தனியாருக்கு சொந்தமான காணிகளாகவும் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கில் நான்காயிரத்து 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளும், கிழக்கில் சுமார் 350 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நல்லிணக்கத்தின் அடிப்படையில் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருவதாகவும், பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் UNP முக்கிய அமைச்சர்

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் UNP முக்கிய அமைச்சர்


2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து விலகப் போவதாக நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தாம் பல பணிகளை செய்துள்ள நிலையிலும், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே ஆதரவை அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புத்தளம் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது மக்களின் சிந்தனைகள் மாறியுள்ளதாகவும், இதனால் இனிமேலும் மக்களுக்கு பணிகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அவை பலனற்றதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமது நிதியொதுக்கீட்டில், வீடுகளையும், கட்டிடங்களையும் பெற்றவர்கள் , தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிப்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்..

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், இதே நிலைமை நிகழுமாயின் அரசியலில் தொடர்ந்தும் இருப்பது அர்த்தமற்றதாகும் என தாம் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்களின் எண்ணங்களில் மாற்றங்கள் இடம்பெறவில்லையெனில், தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளார்.
குடாநாட்டை பதற்றத்தில் வைத்திருக்க மீண்டும் முயற்சி?

குடாநாட்டை பதற்றத்தில் வைத்திருக்க மீண்டும் முயற்சி?

யாழ்.குடாநாட்டை மீண்டும் பதற்றமான சூழலில் வைத்திருக்க அரசு மீண்டும் முற்படுவதாக சந்தேகம்எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வகையில் வலிகாமத்தின் சண்டிலிப்பாயில் முகத்தை துணியினால் மூடிய வாள் வெட்டு கும்பலொன்றுமணித்தியாலக்கணக்கில் வீதியால் போவோர் வருவோரை சாகவாசமாக தரித்திருந்து அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வீதியால் சென்ற வாகனங்களையும் முகமூடி ரௌடிகள் அடித்து நொறுக்கியதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவனை மடக்கிப்பிடித்து “உயிர் வேண்டுமெனில் ஓடு எனக் கூறி, மோட்டார் சைக்கிளை பறித்து அவரை கால்நடையில் அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.

சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்மித்த பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நடந்தது. நேற்றிரவு 9 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி 8 மோட்டார்சைக்கிளில் வந்த பத்துக்கும் அதிகமான ரௌடிகளே இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வாள்களுடனும் மது போதையிலும் நடமாடிய ரௌடிகளை கண்டு மக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினார்கள். வாகனங்களை கைவிட்டு ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். நீண்டநேரமாக ரௌடிகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ரௌடிகளின் அட்டகாசம் செய்துவிட்டு போன பின்னர் அங்கு வந்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சம்பவ இடத்தை பார்வையிட அவரது உதவியாளர்கள் அவரை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்திருந்தனர். 

இதனிடையே குள்ள மனிதர்களென்ற போர்வையில் தாக்குதல்களில் குறித்த கும்பஐல ஈடுபடுவதாகவும் முன்னைய கிறீஸ் மனிதர்கள் போல மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடங்க வைக்கும் நாடகமா இதுவென கேள்வி எழுந்துள்ளது.
வெலிக்கடை தியாகிகளிற்கு அஞ்சலிக்கும் சயந்தன்,வரதர்?

வெலிக்கடை தியாகிகளிற்கு அஞ்சலிக்கும் சயந்தன்,வரதர்?


விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன்,போராட்டத்தை காட்டிக்கொடுத்த வரதராசாப்பெருமாள் ஆகியோரை சிறப்பு விழா பிரமுகர்களாக அழைத்து வெலிக்கடை படுகொலை தியாகிகளது நினைவேந்தலை கொச்சைப்படுத்தியுள்ளது டெலோ அமைப்பு.

நேற்று வெள்ளிக்கிழமை நெல்லிடியில் நடைபெற்ற 35வது வெலிக்கடை படுகொலை தியாகிகளது நினைவேந்தல் நிகழ்வில் வெறும் 52 பேர் மட்டுமே பங்கெடுத்திருந்தனர்.
முதலமைச்சரினை நிளைவேந்தலிற்கு அழைத்திருந்ததாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்த போதும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் அதனை மறுதலித்துள்ளன.

போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாதிருந்த நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் முதல் சிறீகாந்தா வரை பங்கெடுத்திருந்தனர்.வெளியிலிருந்து தமிழரசு பிரமுகரென சயந்தனையும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாளையும் தருவித்திருந்தனர்.

நிகழ்வில் வரதராசாப்பெருமாள் தற்போதைய வடமாகாணசபை வினைத்திறனற்றதெனவும் அனந்தியிடமுள்ள துப்பாக்கி பற்றி நாள் முழுவதும் வெறுமனே கூடி ஆராயும் சயந்தன்,அஸ்மின் போன்றவர்களது கூச்சலே நிரம்பியிருப்பதாக அவர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

அதிலும் தேச விடுதலைபற்றி பேசிய நாம் இப்போது அனந்தியிடமுள்ள துப்பாக்கி பற்றி ஆராயும் நிலைக்கு சென்றிருந்ததாக கவலை தெரிவித்தார்.
இதனிடையே தமது ஆதரவு கோட்டையென சொல்லிக்கொள்ளும் கரவெட்டியில் நடந்த கூட்டத்திற்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரென சொல்லிக்கொள்ளும் கணேஸ் வேலாயுதம் போன்றவர்களை புறந்தள்ளி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் தற்போதே ஆசனங்களை பதிவு செய்து வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மக்கள் இவை குறித்து அலட்டிக்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

காவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்!

காவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்!

இலங்கை காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்திகுற்றஞ்சுமத்தியுள்ளார்.
காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் குறைந்த பட்சம் மோதனா வைத்தியசாலையினதும் அதன் சுற்றுப்புரத்தையேனும் ஓர் அச்சமற்ற பகுதியாக பேண முடியாதுள்ளது.

இதன் காரணமா தினமும் 11 மணியை தாண்டினால் மதுபோதையில் வருபவர்களின் தொல்லையை காவலாளிகளினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த வாரம் இரவுவேளையில் காவலாளியை தாக்கி காயப்படுத்தி விட்டு வைத்தியசாலைக்குள் புகுந்தவர்களை காயமடைந்நவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முன்பே எந்த நடவடிக்கையும் இன்றி கைது செய்தவர்களை விடுவித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இதேபோன்று வைத்தியசாலை விடுதியில் உள்ள சிலருக்கு இரவுவேளை திருட்டுத் தனமாக மதுபான விற்பனைக்கும் முயற்சிக்கின்றனர். இவற்றினை காவலாளிகள் கட்டுப்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கே சாரும். இதுபோன்ற மேலும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ரணிலை நீக்குமாறு மைத்திரிக்கு ஆலோசனை

ரணிலை நீக்குமாறு மைத்திரிக்கு ஆலோசனை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.

சிங்கள மொழியிலுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவேண்டுமென, அவ்வணி வலியுறுத்துகின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், டிலான் பெரேராவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும்  3325 பேர் கைது

நாடு முழுவதிலும் 3325 பேர் கைது

நாடு முழுவதிலும் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதி மீறல், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய நேற்றுமுன்தினம் இரவு 9 மணிமுதல் நேற்றுக்காலை 8 மணிவரையான பகுதியில் நாடு முழுவதிலும் இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 16 ஆயிரத்து 422 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடிபோதையில் வாகனங்களைச் செலுத்திய 541 பேரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 948 பேரும், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காகத் தேடப்பட்டுவந்த 938 பேரும், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மதுசாரம் உற்பத்தி செய்த 807 பேரும், வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 94 பேருமாக 3325 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 5 ஆயிரத்து 808 பேருக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த ஒரு வருட காலத்துக்குள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48,129 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 22 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவு, பொலிவியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 19,441 பேரிடமிருந்து 173 கிலோ 319 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கஞ்சா கடத்தல் தொடர்பில் 28,688 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களிடமிருந்து 2,975 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
என் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை

என் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை


கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை எமது பெயர் தான்.

துடுப்பாட்ட அரங்கத்தில் இருந்து எனது பெயரை நீக்குவதென்றால் விவகாரமில்லை. ஆனால், பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களிலும் அகற்றும் முயற்சியும் நடக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனுடன் என்ன பேசினேன் - கோத்தா பதில்

சம்பந்தனுடன் என்ன பேசினேன் - கோத்தா பதில்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தார்.இந்தச் சந்திப்புத் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, கோத்தாபய ராஜபக்சவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது.

அண்மையில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, இரா.சம்பந்தனுடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து கோத்தாபய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஏதாவது குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தனிடம் கதைத்தீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,

“தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பாக இரா.சம்பந்தனிடம், அவரது கருத்தை  கேட்டேன்.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாடாளுமன்றம் ஒருமனதாக இணங்கியுள்ளது. எனவே, அதனைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பு வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சம்பந்தன் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.

Friday, July 27, 2018

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை ''அந்த, மனித மிருகங்கள்...''

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை ''அந்த, மனித மிருகங்கள்...''

இவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை வந்துபாக்காமல் இருந்திட்டம். அப்பப்பா எந்தப்பெரிய இடம். எவ்வளவு தொகையான மிருகங்கள் இங்கே இருக்குதுகள்.

யானைகள், மானுகள், மலைமாடுகள், மரையினங்கள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கியள், வரிக்குதிரையள், ஒட்டகங்கள்.. குரங்குகளிலை எத்தினைவகை, எந்தப்பெரிய கொரிலாக்கள்.. முதளைகள்.. பாம்புகள், தீக்கோழி, மயில்கள் இன்னும் அது இதெண்டு இந்த உலகத்து எல்லாமிருகங்களையும்.. பறவையளையும் பக்கத்திலைநிண்டு பாத்தபடி நடந்துபோனம். அதுகளோ தங்கடைபாடு. என்னமாதிரி இத்தனை வகையான மிருகங்களையும் மனிசரைக்கண்டுமிரளாது, அதுகளைப் பழக்கிவைச்சிருக்கீனம். என்னைமீறிய ஆச்சரியத்திலை இப்படியெல்லாம் உரத்துச் சொல்லிக்கொண்டே நடந்துபோனன்.

ஓமப்பா! அதுகளுக்குத் தேவையான அளவுக்குச் சாப்பாடுகள், தண்ணிவென்னியெண்டு, எல்லாத்தையும் ஒருகுறையும் இல்லாமற்குடுத்து வளக்கீனம்;. பிறகெதுக்கு அதுகள் மனிசரைக்கண்டு கடிச்சுப் பிடுங்கப்போகுதுகள். சரி இனி நாங்கள் சிங்கங்களைப் றுபாக்கப்போறம். காறிலைபோய் ஏறுவோம் நடவுங்க. 

என்னப்பா! சிங்கங்களும் இதுகளைப்போலை வெளியிலை உலாவித்திரியுமோ இல்லாட்டிக் கூட்டுக்கை அடைபட்டுநிக்குமோ.. என்ரை கேள்வியைக் கேட்டுச் சிரித்தவர்,

அதுகளும் இப்பிடித்தானப்பா! சும்மா தம்பாட்டுக்குத் திரியுங்கள். சிங்கங்கள் பொல்லாத மிருகங்களல்லோ.. நாங்கள் காறுக்குள்ளை இருந்துகொண்டுதான் அதுகளைப் பாக்கவேணும்.

ஒண்டும் செய்யாதுகளே? மிரண்டபடிகேட்ட என்னைப்பார்த்து, அவரும், பிள்ளையளும் வாய்விட்டுச்சிரிச்சுக் கேலிசெய்தனர். கார்கிழம்பி சிங்கங்கள் சீவிக்கிற அந்தக் காட்டுப்பகுதியைநோக்கி ஓடியது.

அங்கே போய்ச்சேர்ந்ததும், எங்கடை சொந்தவிலாசம்.. இங்குவந்தவர்களின் பெயர், வயது எண்டெல்லாம் விபரங்கள்கேட்டுப் பதிவுகளைசெய்து, ஏதோ கொலைக்களத்துக்கை போறதுபோலை அடுக்குகளை அவர்கள் செய்யவே, என்னைப்பயம் இறுகப்பற்றிக்கொண்டது.

அங்கேயுள்ள நுளைவாயிற் கதவுகளைக் காவலர்கள் திறந்துவிடவே, கார்போய் மரங்கள் அடர்ந்த அந்த றோட்டாலை மெல்லமாய் நகரவே, என்ரை இருதயம் அடிக்கிற சப்த்தம் பெரிசாக்கேட்டுது. தலையை அங்கையுமிங்கையும் திருப்பிப் பார்த்துக்கொண்டுபோனன்,

அந்தா.. சிங்கங்கள்! எண்றபடி, பிள்ளைகள் தம்முடைய ஐபோணையெடுத்து, பூட்டிய கதவுயன்னற் கண்ணாடிக்குள்லாலை பிடிச்சுக்கொண்டு, சிங்கங்களைப் படமெடுக்கத் துவங்கினார்கள்.

றோட்டின்ரை இடதுகரையிலை குவியலாய் ஒரு பத்துக்குமேலை சிங்கங்கள் படுத்துக்கிடக்கப் பயத்தாலை என்ரை நெஞ்சுமுட்டி மூச்சுவிடத் திணறினன். எந்தப்பெரிய உருவங்கள்! ஆனாலும், அதுகள் சினக்காமல் எல்லாமாச்சேந்து எங்களையே பாக்கவே…

அப்பா! என்னப்பா எல்லாம் பொம்பிளைச் சிங்கங்களாக்கிடக்கு. ஆண் சிங்கங்கள் இல்லையோ?  சடையளோடை மடகஸ்தர் படத்திலை பாத்தோமே! அதுபோலை ஒண்டையும்காணம்.

என்று, பிள்ளைகள் தமது ஏமாற்றத்தைத் தெரிவிக்கவே, அந்தாபார்! அந்தப் பள்ளத்துக்கை கிடக்கீனம் ஆண்சிங்கங்கள்.

அவர் காட்டியதிசையில் பென்னாம்பெரிய உருப்படியள் படுத்துக்கிடந்தன.  எனக்கோ அங்கதாமதித்து நிக்கப்பயம் மேலும்அதிகரிச்சுது. எங்களுக்குப் பின்னுக்கும் கார்கள் நிக்கிறதுதெரியவே, அவரைத் துரிதப்படுத்தநினைச்சு…

இஞ்சேரும்! பின்னுக்கும் காறுகள் நிக்குதல்லோ. எடுங்க அங்காலை போய்ப்பாப்பம்! எண்டுசொல்லி, அவரின் முதுகிலை கிள்ளினன். பிள்ளையளோ அங்கை இன்னும் நிக்கவிரும்பி முணுமுணுக்கவே, அவரும் ஈடுபாடோடை, சிங்கங்களை இரசித்தபடி பார்த்துக்கொண்டு,

உவை நல்லாச் சாப்பிட்டுப்போட்டு, வலுகுசியாக்கிடக்கீனம்.
என்றுசொல்லி, அவர் சிரித்து வாய்மூடமுன்னம்.. எங்கடை காறைப்பாத்தபடி, வலுபெரிய ஆண்சிங்கமொண்டு மற்றப் பக்கத்தாலை வாறதுதெரியவே, நான் பயந்து, பெரிசாக்கத்திப்போட்டன்.

மலர்! நீர்பேசாமல் இரும். ஒண்டும் நடக்காது. அதுபோகட்டும்.

என்றுசொல்லி அவர் என்னை அடக்கினாலும், அந்தக் குரலில் பயம்தெரிஞ்சுது. பிள்ளையளும் நல்லாப் பயந்திட்டினம். என்ன நடக்கப்போகுதோ எண்டு நான் திணறின அந்தநேரத்திலை, அங்கவந்த அந்தச்சிங்கம் எங்கடை காறைநெருங்கி முன்னாலை உராயுமாப்போலை கடந்து அங்காலை போனது. அதின்ரை தோற்றத்தையும், உசாரான நடையையும், வலுபக்கத்திலை பாத்;ததிலை பயம்மீறி என்ரை நெஞ்சுத்தண்ணி வத்திப்போச்சு. 

கடவுளே! காப்பாற்றும். என்று உரத்துச்சொல்லி மனத்தை ஆற்றிக்கொள்ளப்போன அந்தக்கணத்திலை, அந்தச்சிங்கமானது அங்கைகிடந்த பெண்சிங்கங்களுக்கு முன்னாற்போய் அமைதியாய்படுத்திட்டுது.

மலர்! நீரென்னப்பா வலுவாப்பயந்திட்டீரே? அதுவொரு பசுமாடு விலத்திக்கொண்டு போனதுபோலை! என்ன பதுமையாய்போய் தன்ரை குடும்பங்களோடைசேந்து படுத்திட்டுது. பாத்தீரே! அந்தமாதிரிப்பழக்கி இதுகளைத் திருத்திவைச்சிருக்கீனம்!

ஓமோம், இதுக்குள்ளை நிண்டதுகாணும் காறை எடுங்கபோவம். என்றபடி, அவரை ஊக்கப்படுத்திக் கிழம்பி ஓடவைத்து, வெளியாலை  கொண்டுவந்து சேத்தபிறகுதான் என்ரைபயம் என்னைவிட்டுப்போனது. 

இந்தச் சிங்கங்களையும், மற்றைய பயங்கரமான மிருகங்களையும் நேருக்குநேர் பாத்த அந்தநேரத்திலையிருந்து எங்கடை நாட்டிலை இருக்கிற மனிதமிருகங்களையும், அதுகள் எங்கடை இனத்தைப் படுத்துகிறபாடுகளையும், கொலைவெறிகொண்டு கொன்று அழிப்பதையும், வாழ்ந்த இடங்களைவிட்டு எம்மவர்களைத்  துரத்தியடிப்பதையும் என்மனத்தின் உள்ளந்தரங்கம் எடைபோட்டுப்பாற்கின்றது.
 
அப்ப எனக்கு ஐஞ்சுவயசு. கொழும்பிலையுள்ள இரத்மலானைப் பகுதியிலை தொழிலகமொன்றில் எனது அப்பா வேலைசெய்ததாலை நாங்கள், அங்கையுள்ள ஒரு ஒழுங்கைக்கை  இருக்கிற வீட்டிலை வாடகைக்குக் குடியிருந்தோம். அந்தக்காலத்திலைதான் அந்தப்பெரிய அனியாயம் அங்கை நடந்துமுடிந்தது.

அண்டைக்குக்காலமை அப்பா பரபரத்தவராய் ஓடிவந்து, அம்மாவுக்கு ஏதேதோவெல்லாம் சொல்லிப் பயந்துகொண்டு பதறியபடிநிண்டார். பேயடிச்ச முகத்தோடை அம்மா கேட்டுக்கொண்டு நிண்டா. பிறகு, என்ரை அண்ணையையும், என்னையும் அணைச்சபடியே அம்மா அழத்தொடங்கினார். அப்பா வீட்டின்ரை வாசலைத் தாண்டிப்போறதும் வாறதுமாய் அவதிப்பட்டார். எனக்கு அதுவெதுகுமே விளங்காது நானும்சேர்ந்து அழுதுகொண்டு நின்றேன்.

எண்பத்திமூண்றாம் ஆண்டில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான சிங்களக்காடையர்களின் தாக்குதலும், பெருமினக்கலவரமும் அண்டைக்குத்தான் ஆரம்பமாகினதெண்டது அப்போது எனக்குத்தெரியிற பருவமில்லை. பெருத்த சத்தங்களோடை சிங்களத்திலை பேசிக்கத்திக்;கொண்டு கனபேர் எங்கடை வீட்டுக்கைவந்தான்கள்... அவங்களின்ரை கைகளிலை பொல்லுகள்.. கத்திகள், வாளுகள் எண்டு ஏதேதோ ஆயுதங்கள்தெரியவே, நான் பயந்து ஓடிப்போய் எங்கடை குளிக்கிற அறையுக்கை ஓளிச்சுநிண்டன்.

அம்மா அண்ணை அப்பா எல்லாரும் பெரிசாக்கத்திற சத்தங்கள்கேட்டன. வந்தவங்களின்ரை ஓங்கியகுரல்களும் தொடர்ந்தொலித்தன. சடார்.. பிடாரெண்ட ஓசைகளும், பாத்திரங்கள் உருண்டுவிழுகின்ற அதிர்வுகளும் என்னைத் திகிலடையச்செய்யவே, நான் அங்கைகிடந்த அழுக்குத்துணிக் குவியலுக்குள்ளை நுளைஞ்சு ஒளிச்சு. என்னைமூடிக்கொண்டு குறண்டிப்போய்.. படுத்திட்டன். துண்டாய் எல்லாச்சப்தங்களும் ஓஞ்சபிறகு, மெல்லமாய் எட்டிப்பாத்தன். அவங்கள் எல்லாரும் போட்டங்கள் என்றது தெரியவே.. நான் நடுங்யபடி வெளியேறிவந்து பார்த்தன்.

அப்பா…அம்மா, அண்ணை… எல்லாம் அங்க வெட்டுப்பட்டு இரத்தவெள்ளத்திலை, ஐயோ.. துண்டுதுண்டுகளாய்க் கிடந்திச்சினம்.

நான் குழறியடிச்சு விழுந்துபுரண்டு கத்தின சத்தத்தாலை பக்கத்துவீட்டுத் தாத்தா பதுங்கிப் பயந்துகலங்கி நடுங்கியபடி ஓடிவந்து, என்னை அணைச்சுத்தூக்கி… அவற்றை வீட்டை கொண்டுபோனார்.

அந்தச் சம்பவத்தை இத்தனை வருடங்கள் கழிந்தாலும்.. இவ்வளவு காலங்கள் கடந்தாலும் என்னால் மறக்கவே முடியுதில்லை. அந்தக்கொடுமையான காட்சிகள் என்ரைமனத்திலை வந்துவந்து என்ரையுசிரை உசுப்புகின்றன. நான் என்ரை வாழ்நாளிலை அதை மறக்கமாட்டேன். நாங்கள் தமிழராய் பிறந்ததற்கு இத்தனை தண்டனையா. நான் இதுவரைக்கும் அழுதுகொட்டிய கண்ணீர் கொஞ்சமல்ல.

இன்னும் எங்கடைநாட்டிலை அந்த மனிதமிருகள் திருந்துவதாயில்லை.
ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்

ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்


யாழ்.அச்சுவேலி - உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற தேர் திருவிழாவில் இராணுவம் தே ர் இழுத்தமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த வருடமும் இதே ஆலயத்தில் தேர் தி ருவிழாவில் இராணுவம் தேர் இழுத்தமையினால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் இந்த வருடமும் அதுவே நடந்துள்ளது.

இந்த வருடமும் அச்சுவேலி இராணுவ முகாமில் இருந்த படையினர் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து தேர் இழுத்துள்ளார். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.


வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 1400 சிங்கள மீனவர்கள்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 1400 சிங்கள மீனவர்கள்


யாழ்.வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் கூறுகிறார். இவ்வாறான நிலை மிகவும் ஆபத்தானது என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தகவல் தருகையில், வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை அல்லது வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு மக்கள் கேட்டிருந்தனர்.

மக்களுடைய கோரிக்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ளப்படவில்லை. தற்போது குறித்த மீனவர்களை வெளியேற்றுவதற்காக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரதேச செயலர் வடமராட்சி கிழக்கில் 1400 தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாகவும், அவர்கள் அரச காணிகளில் தங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். தற்போது தற்காலிகமாக தங்கியிருக்கும் அவர்கள் வெகு விரைவில் நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் வடமராட்சி கிழக்கில் 10பேருக்கு ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்னும் அளவுக்கு நிலமை மாறவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்களை நாங்கள் நேரடியாக பார்த்திருக்கி றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிது சிறிதாக வந்து தற்காலிகமாக தங்குவதாக காட்டிக் கொண்ட மீனவர்களே பின்னர் அங்கு நிரந்தரமாக தங்கியிருப்பது மட்டும ல்லாமல் தமக்கு நிரந்தர காணிகளையும், வீட்டு திட்டங்களையும் வழங்குங்கள். என இப்போது கேட்கிறார்கள். அப்படி யாழ்ப்பாணத்திலும் குறிப்பாக வடமராட்சி கிழக்கிலும் தென்பகுதி மீனவர்கள் கேட்கும் நிலை வரவுள்ளது. இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
கொள்வனவை அதிகரிக்க முகாமையாளருக்கு பணிப்புரை!

கொள்வனவை அதிகரிக்க முகாமையாளருக்கு பணிப்புரை!


வட மாகாண விவசாய நெல் உற்பத்தியாளர்களின் கொள்வனவை அதிகரிக்க விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நெல் சந்தைப்படுத்தும்  வடபிராந்திய  சபையின்  முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தும்  சபையின் வடபிராந்திய நிலையங்கள் ஊடாக கொள்வனவுகள் இடம்பெற உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் zதிர்வரும் திங்கட்கிழமை முதல் நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் சிறுபோக நெல் அறுவடையாக  120000 ஆயிரம்  தொன் நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.அதேவேளை  வடமாகாணத்தில் 12000 ஆயிரம் தொன் நெல் அறுவடையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் 5000 ஆயிரம் தொன் நெல் கொள்வனவு என தீர்மானிக்கப்பட்டிருந்தது.விவசாயிகளின் நலன்கருதி கொள்வனவை  அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டரசி 38  ரூபாவுக்கும் சம்பா  41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலும் நெல்   கொள்வனவு இடம் பெற உள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.