Saturday, August 4, 2018

சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்...!

சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்...!


பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பரந்தனில் ஐஸ் சேமிப்பு நிலையங்களையும் ஐஸ் ஆலையையும் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ்படம்-2வை போல எனக்கு பலபேர் நாமம் போட்டுள்ளனர்...! சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி

தமிழ்படம்-2வை போல எனக்கு பலபேர் நாமம் போட்டுள்ளனர்...! சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி


இணையத்தளங்களில் தனது ஓப்பனான கருத்துகளினால் பிரபலமாகி இருப்பவர் நடிகை கஸ்தூரி. ஆனால் என்ன, அந்த கருத்துகள் எல்லாம் பயங்கர சர்ச்சையாக மாறிவிடுகிறது.

இருந்தாலும் இந்த சர்ச்சைகள் குறித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு செம தெளிவாக பதில் அளிப்பார். ஆனால் கஸ்தூரியேவே பலபேர் ஏமாற்றியுள்ளனராம்.

’என்னை பலபேர் காசு விஷயத்துல ஏமாத்தி இருக்காங்க, பேசிய காச தராம நாமம் போட்டதுதான் அதிகம், தமிழ் படம்-2ல் காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி, ஆடி, கடைசியில் 3ரூபா சம்பளம், அதுபோல தான்’ என ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் போதையில் இருந்தார்களா....! பொலிஸாரின் பொய் அம்பலமானது...!

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் போதையில் இருந்தார்களா....! பொலிஸாரின் பொய் அம்பலமானது...!


பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தும் போது போதையில் இருந்தனர். 

இவ்வாறு வழங்கப்பட்ட பொலிஸாரின் குற்றச்சாட்டு பொய்யானது என தகவலறியும் சட்டத்தின் மூலம் மரண விசாரணை அறிக்கை வெளியானது. 

மேலும், அவர்களை நிறுத்துமாறு எச்சரித்தும் மீறி சென்றதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் கூறினாலும், மோட்டார் சைக்கிளை செலுத்திய சுலக்ஷனின் மார்புப் பகுதியருகே துப்பாக்கி ரவை நுழைந்திருப்பதாக மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினாலேயே நடராஜா கஜன் உயிரிழந்திருப்பதாக மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி


பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் 1000-மாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. 

இந்த டெஸ்ட் இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவை 31 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. 

எட்ஜ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 

இதில் 28 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது. 

1000-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வா?  அனுமதிக்க போவதில்லை என்கிறார் மைத்திரி!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வா? அனுமதிக்க போவதில்லை என்கிறார் மைத்திரி!


பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
யாழில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள்!! பலர் கைது..!

யாழில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள்!! பலர் கைது..!


Tamil News - வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 

சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையுடன் செலுத்தப்படும் அமைச்சர்களின் சம்பள விபரம்

நிலுவையுடன் செலுத்தப்படும் அமைச்சர்களின் சம்பள விபரம்


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு நிலுவையுடன் சம்பளத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நிலுவைச் சம்பளத்துடன் 5 இலட்சம் ரூபாவும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அமைச்சர் ஒருவருக்கு 6 இலட்சம் ரூபாவும் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அதிகரிக்கப்படும் தொகை 136 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட நாடாளுமன்ற கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் அமைச்சர்கள் 41 பேரினதும் இராஜாங்க அமைச்சர்கள் 23 பேரினதும் பிரதி அமைச்சர் 22 பேரினதும் சம்பள அதிகரிப்பு தொகை சபாநாயகரினால் சம்மந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பள தொகைளை வழங்குவதற்கு 12 கோடி ரூபாய் குறை நிரப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீட்டை பெற்றுத் தருமாறு கோரும் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை அடுத்த வாரம் நிதி அமைச்சினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மு-காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்டத்தில், கில்லோரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. 

இந்த மோதலில் நேற்றிரவு ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரின் உடல்களும், அவர்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அசிங்கப்பட்ட டிடி...!

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அசிங்கப்பட்ட டிடி...!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இந்த வாரம் முழுவதும் ஒரே பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. 

இதற்கெல்லாம் ஒரே காரணம் ஐஸ்வர்யா தத்தா செய்த செயல்கள் தான். 

bigg boss இந்நிலையில் நேற்று கஜினிகாந்த் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்யா, சதீஷ், சந்தோஷ் மற்றும் தொகுப்பாளி டி.டி ஆகியோர் உள்ளே சென்றிருந்தனர். 

பின்னர் இவர்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றும் போது பிக் பாஸ் ஆர்யா, சந்தோஷ், சதீஷ் ஆகியோரின் பெயரை மட்டும் கூறினார். டிடி-யின் பெயரை கூறவே இல்லை. bigg boss Thina Seithi 
First provincial summit next week

First provincial summit next week

(Thina Seithi|COLOMBO) – The first Provincial Summit of the Parliament Committee on National and Religious Reconciliation will be held at the Mahaweli Reach Hotel in Kandy from 9.30 AM to 2.30 PM on 06 August, with the participation of Speaker Karu Jayasuriya, and the representatives of all communities, religious clergy, politicians, and scholars.

தெற்கிலிருந்தே வடக்கிற்கு போதைப்பொருள் வருகின்றது...! விஜயகலா

தெற்கிலிருந்தே வடக்கிற்கு போதைப்பொருள் வருகின்றது...! விஜயகலா


போதைப்பொருட்கள் தென்னிலங்கையில் இருந்தே வடக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி வடக்கு இளைஞர்களுக்கு போதைப் பொருட்களை வழங்குவதில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன்போது குறித்த விளையாட்டு கழகத்திற்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்தாங்கியையும் அவர் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து குறித்த உதைபந்தாட்ட போட்டிக்கான கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு தொடர்ந்து உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இத்தாலியின் 18 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை....!

இத்தாலியின் 18 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை....!


இத்தாலியின் முக்கிய சுற்றுலா மையங்களான புளோரன்ஸ், ரோம், வெனிஸ் உள்ளிட்ட பதினெட்டு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தின் காரணமாக ஆபத்து அதிகமாகக் காணப்படுகின்றதாக தெரிவித்து அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது 38 பாகை செல்சியஸாக காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மத்தியதரைக்கடலிலுள்ள இரண்டாவது பெரிய தீவான சார்டினியாவில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக உள்ளூர் மக்கள் நகரங்களிலிருந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கைக்குள் இடமில்லை..!

சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கைக்குள் இடமில்லை..!


இலங்கையில் போருக்குப் பிந்திய சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொலன்னறுவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் செயற்பட்டதில்லை. அதேபோன்று பிறர் நாட்டை பிளவுபடுத்தவும் நாம் அனுமதித்ததில்லை.

இதேவேளை, சர்வதேசத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் எமது இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மின்சார நாற்காலி, சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் போன்ற அழுத்தங்கள் இனி இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Friday, August 3, 2018

அமெரிக்காவிற்கு சீன அரசாங்கம் எச்சரிக்கை..!

அமெரிக்காவிற்கு சீன அரசாங்கம் எச்சரிக்கை..!


தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் பட்சத்தில் அதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 5 ஆயிரம் கோடி டொலர் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது. 

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியுடன் வெளியேறிய சாய்னா!

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியுடன் வெளியேறிய சாய்னா!


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியுடன் வெளியேறினார். 

24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் இடம்பெற்றுவருகின்றது, மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். 

சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜண்டீனா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்!

ஆர்ஜண்டீனா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்!


ரஸ்யாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 

இதன் காரணத்தால் மெஸ்ஸி தலைமையிலானஆர்ஜண்டீனா அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோரை இடைக்கால பயிற்சியாளராக நியமித்ததுடன் பின்னர் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று அறியவருகின்றது.
கோட்டாபயவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

கோட்டாபயவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!


தங்கல்லை வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை என்பவற்றை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை பற்றிய நீதிமன்ற அறிவிப்பு கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.
விவாகரத்துக்கு பிறகும் இவ்ளோ கவர்ச்சி தேவையா..?

விவாகரத்துக்கு பிறகும் இவ்ளோ கவர்ச்சி தேவையா..?


தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் 

.அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் அரவிந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள். 

விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார்.

பியார் பிரேமா காதல் ரிலீஸ் தேதியில் மாற்றம்

பியார் பிரேமா காதல் ரிலீஸ் தேதியில் மாற்றம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஜோடியாக நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். 

இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதே நாளில் தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படமும் வருவதாக இருந்தது.

இந்நிலையில் திடீரென தற்போது பியார் பிரேமா காதல் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 9ம் தேதியே வெளிவரும் என அறிவித்துள்ளனர்.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்...! அங்கு நடந்தது என்ன?

திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்...! அங்கு நடந்தது என்ன?


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

தமிழில் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கில் தொடங்கிவிட்டது.

விஸ்வரூபம் 2 படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து எல்லா மொழிகளிலும் பேட்டிகள் கொடுத்து வருகிறார். 

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல்கள் பாடப்பட்டது.

தற்போது தெலுங்கில் படத்தை புரொமோட் செய்ய கமல்ஹாசன் அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனை கண்டதும் பெறும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து ஊடகங்கள்

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து ஊடகங்கள்


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை தனி நபராக மீட்டெடுத்த கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளன. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 100 ரன்களுக்கு உள்ளாகவே, முரளி விஜய், ராகுல், தவான், ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி, சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 149 ரன்கள் குவித்த விராட் கோலி, கடைசி விக்கெட்டாக அவுட்டானார். 

கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 274 ரன்களை சேர்த்தது. தனி நபராக போராடி இந்திய அணியை மீட்டெடுத்த விராட் கோலியை இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளன. 

தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், விராட் கோலி ஹீரோவாக தனி நபராக களத்தில் நின்று மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார் என புகழ்ந்துள்ளது. 

டெய்லி மெய்ல் நாளிதழ் செய்தியில், இந்தியா இங்கிலாந்து இடையேயான ஹெவி வெய்ட் சாம்பியன் போட்டியில் இந்தியா சிறப்பான பஞ்ச் கொடுத்துள்ளது. 

விராட் கோலி ஒற்றை ஆளாக சிறப்பாக ஆடினார். இது அவருக்கான நாள் என புகழ்ந்து எழுதியுள்ளது. 

டெலிகிராப் நாளேடு வெளியிட்ட செய்தியில், சாம் கரன் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கண்ணீர்விட வைத்தார். 

ஆனால், மாஸ்டராக மாறிய விராட் கோலி, சதமடித்து அணியைக் காத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளது.
அஜித்தை இயக்கும் எச்.வினோத்?

அஜித்தை இயக்கும் எச்.வினோத்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் செகண்ட் இன்னிங்சில் வெளியான முதல் படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். 

இந்த படத்தில் அஜித்தும் நட்புக்காக நடித்திருந்தார். அப்படி ஏற்பட்ட நட்பு காரணமாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொடுப்பதாக கூறியிருந்தார் 

அஜித்.இந்த நிலையில், தற்போது சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் அஜித், இந்த படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதோடு, அந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குவார் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
தெலுங்கில் பிசியான நந்திதா...!

தெலுங்கில் பிசியான நந்திதா...!


அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா. இவருடன் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும்போது நந்திதாவின் கேரியர் மெதுவாக நகர்ந்தது. 

ஆனால் இப்போது தெலுங்கில் பிசியான நடிகை ஆகிவிட்டார் நந்திதா. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான 'எக்கடக்கி போத்தாவா சின்னவாடா' என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கில் வலுவாக காலூன்றி விட்டார். 

தொடர்ந்து சத்தமே இல்லாமல் 5 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துவிட்டார். 

இதுகுறித்து நந்திதா கூறியதாவது தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'சீனிவாசா கல்யாணம்' என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். 

குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். 

இதற்கு முன் 'சதுரங்க வேட்டை' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடித்து வருகிறேன். 

இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், 'நர்மதா ' என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தமாகவிருக்கிறேன். என்கிறார் நந்திதா.
மனிதனின் சுய மரியாதை தாக்கப்படும்...! போப் பிரான்சிஸ் எச்சரிக்கை

மனிதனின் சுய மரியாதை தாக்கப்படும்...! போப் பிரான்சிஸ் எச்சரிக்கை


மரண தண்டனைகள் ஏற்புடையவை அல்ல என்று கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து வத்திகான் நகரில் அவர் நேற்று (02) ஆற்றிய உரையில், ”மரண தண்டனை விதிப்பது என்பது அனுமதிக்கத் தகாத நடைமுறையாகும். 

மரண தண்டனை விதிப்பதன் மூலம் மனிதனின் அடிப்படை புனிதத் தன்மையும், சுய மரியாதையும் தாக்குதலுக்கு உள்ளாகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் எத்தகைய குற்றங்கள் புரிந்திருந்தாலும் அவரது வாழும் தகுதி குறைவதில்லை என்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 

உலக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கத்தோலிக்க தலைமையகம் பாடுபடும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதம்...! அம்பாறையில் சம்பவம்!

பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதம்...! அம்பாறையில் சம்பவம்!


அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர, சத்தானிஸ்ஸபுர, மிஹிந்துபுர, ஜயவர்தனபுர, ஹரங்காவ ஆகிய பகுதிகளை ஊடறுத்து பலத்த காற்று வீசியுள்ளது.

சுமார் 10 நிமிடங்கள் பலத்த காற்று வீசியுள்ளது.

இதில் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ வனிகசிங்க தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றினால் சுமார் 5000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மின் விநியோகத்தை விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
No final decision on salary hike yet..! Karu Jayasuriya

No final decision on salary hike yet..! Karu Jayasuriya


Colombo - Speaker Karu Jayasuriya said today there was no final decision on the proposed salary hike to ministers and MPs though some have suggested that salaries should be increased in line with the salary scales of senior judicial officers.

He said he had referred this matter to Parliament Secretary General Dammika Dasanayake to check it out and make recommendations.

The Speaker said the salaries of MPs and ministers were increased in line with the salary hike given to senior judicial officers on a resolution passed in Parliament on March 11, 2006.

“A decision as to whether or not salaries should be increased has to be made by the party leaders. It will be possible to allow the MPs to voice their opinion on the matter,” he said.
இன்றைய நாணய மாற்று விகிதம் - 03 - 08 -2018

இன்றைய நாணய மாற்று விகிதம் - 03 - 08 -2018


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.
நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்115.1603119.8782
கனடா டொலர்120.4648124.7912
சீன யுவான்22.684223.7576
யூரோ181.7842187.9613
ஜப்பான் யென்1.40481.4553
சிங்கப்பூர் டொலர்114.7556118.5443
ஸ்ரேலிங் பவுண்204.4965210.8880
சுவிஸ் பிராங்க்157.4398163.1687
அமெரிக்க டொலர்157.9286161.1249
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்422.3157
குவைத்தினார்527.3228
ஓமான்ரியால் 414.7732
கத்தார்ரியால் 43.8514
சவூதி அரேபியாரியால்42.5728
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்43.4675

நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்2.3266
24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் அரச வைத்தியர்கள்...!

24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் அரச வைத்தியர்கள்...!


Tamil News : அரச வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரவு 8 மணி வரை 24 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினூடாக முழு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் அது குறித்து அதிகாரிகளை தௌிவுபடுத்திய போதிலும், அதிகாரிகள் உரிய பதிலை வழங்கவில்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழமை போன்று இயங்குவதுடன் சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகளிர் வைத்தியசாலைகளில் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.

எனினும், வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, இன்று தனியார் வைத்திய சேவைகளில் இருந்தும் விலகுவதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்தது.

விதிக்கப்பட்டுள்ள புதிய வரிவிதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், எஸ்.ஆர். விஜயசிங்க தெரிவித்துள்ளார். Thina Seithi 
The GMOA says relevant authorities should be held responsible for any inconveniences to patients as a result of the ongoing 24 hour strike.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் இருவர் கைது


Colombo : 32 இலட்சம் ரூபா பெறுமதியான 5 தங்க பிஸ்கட்களுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க உதவி பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரே 500 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்களை குறித்த ஊழியருக்கு வழங்கியுள்ளார்.

சிங்கப்பூர் பிரஜை குறித்த விமான நிலைய ஊழியர் மூலம் தங்க பிஸ்கட்களை விமான நிலையத்திற்கு வௌியே கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Tamil News 
குப்பையில் இருந்து வெளிவந்த பேரதிர்ச்சி.....! அதிஷ்டத்தை தூக்கி வீசியது யார்?

குப்பையில் இருந்து வெளிவந்த பேரதிர்ச்சி.....! அதிஷ்டத்தை தூக்கி வீசியது யார்?


குப்பையில் இருந்து இளைஞர் ஒருவர் குழந்தை ஒன்றை மீட்டுள்ளார்.

குப்பையில் அழுகை சத்தம் வெளிவந்த போது குறித்த இளைஞர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

குழந்தை பிறந்து சில நொடிகளில் யாரோ தூக்கி குப்பையில் வீசியுள்ளனர்.

அதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 

இந்த காட்சி தற்போது தீயாய் பரவி வருவதுடன், பொலிஸார் இந்த சம்பவத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் பலி

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் பலி


கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 போ் கைது

காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 போ் கைது


விழுப்புரம் அருகே காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலன் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயபாளையம் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் பாழடைந்த கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசியதைத் தொடா்ந்து அங்கு சென்று பாா்த்தனா். 

அப்போது பெண் ஒருவரின் உடல் கிணற்றில் கிடப்பதாக தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா். 

விசாரணையில் அப்பெண் காமராஜா் காலணியைச் சோ்ந்த அமராவதி என்பதும், அவா் நா்சிங் படித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமராவதியும், அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். 

அமராவதியை திருமணம் செய்துகொள்வதாக குணசேகரன் அளித்த வாக்குறிதியைத் தொடா்ந்து அமராவதி 20 ஆயிரம் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளாா். இதனைத் தொடா்ந்து திட்டமிட்டபடி தென்னந்தோப்பு பகுதிக்கு வந்த அமராவதியை காதலன் குமரேசன், அவரது நண்பா்கள் கோமுகிதாசன், ரட்சகன் ஆகியோா் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். 

பின்னா் அமராவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடலை அருகில் இருந்த பாலங்கிணற்றில் வீசியுள்ளனா். 

இதனைத் தொடா்ந்து குமரேசன், கோமுகதாசன், ரட்சகன் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். மேலும் இவா்களுக்கு உடந்தையாக இருந்த 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள்

சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள்

எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க தெரிவித்தார்.

இது தொடரபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் எதிர்கட்சி பதவி எப்போதும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டு அரசாங்கத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுவரை காலமும் பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்படவில்லை. குறிப்பாக மாகாண சபை தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது தொடர்பில் எவ்வித அழுத்தங்களையும் எதிர் கட்சி சார்பில் அவர் தெரிவிக்கவிலை்லை. ஆகவேதான் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு பொது எதிரணியினர் கோரி நிற்கின்றனர். 

2015 ஆம் ஆண்டு பொது தேர்தலை தொடர்ந்து முறையாக எதிர்கட்சி தலைவர் பதவி பொது எதிரணியினருக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்று பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால் தேசிய அரசாங்கம் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிர்கட்சி பதவியை வழங்கி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது.

இந் நிலையில் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் செப்டம்ர் மாதம் 05 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கம் இறுதிக்கட்ட அண்மித்து வருகின்றது. தேசிய வளங்களை சர்வதேசம் கைப்பற்ற முன்னர் எதிர்கட்சி தலைவர் பதவியை பொது எதிரணியினர் கைப்பற்ற வேண்டும். இவ்விடயத்தில் சபாநாயகர் நடுநிலையாக செயற்பட வேண்டும் இல்லாவிடின் பாரிய விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

புதிய சர்ச்சையில் சிக்கிய மகாத்மாகாந்தியின் காவி நிற சிலை

புதிய சர்ச்சையில் சிக்கிய மகாத்மாகாந்தியின் காவி நிற சிலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் மகாத்மாகாந்தி சிலைக்கு காவி நிற வண்ணம் பூசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யோகி ஆதித்யா நாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் தொடர்ந்து ஏதேனும் ஒரு சர்ச்சை வழக்கமாகியுள்ளது. 

இந்நிலையில், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் சமதர்மம், சமநோக்கு, சகோதரத்துவத்தை போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள தேசத் தந்தையான மகாத்மான காந்தியின் சிலைக்கு பாஜக நிறமான காவி வண்ணம் பூசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு விழாவில் டிரம்ப் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்கவில்லை

இந்திய குடியரசு விழாவில் டிரம்ப் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்கவில்லை

இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக டிரம்ப் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில், வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கமாகும். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்திய அரசின் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் ஆனால், குடியரசு தின விழாவில் டிரம்ப் பங்கேற்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய பிரபலங்கள் யாரையும் பதவியேற்பு விழாவிற்கு நான் அழைக்கவில்லை: இம்ரான் கான்

இந்திய பிரபலங்கள் யாரையும் பதவியேற்பு விழாவிற்கு நான் அழைக்கவில்லை: இம்ரான் கான்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து உட்பட இந்திய பிரபலங்கள் யாரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்று இம்ரான் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் புதிய பிரதமராக பி.டி.ஐ. கட்சி தலைவர் இம்ரான்கான் வரும் 11ம் தேதி பதவியேற்கிறார். அவர் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், திரைப்பட பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 
அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் 
ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இம்ரான்கான் அழைப்பை ஏற்பதாக சித்துவும் நேற்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என யாருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பி.டி.ஐ. கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது அழைப்பை ஏற்பதாக அறிவித்த சித்துவுக்கும் வருத்தத்தை தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி உட்பட வெளிநாட்டு தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இம்ரான்கான் கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு ஜோ நடனம்

‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு ஜோ நடனம்


மலையாளத்தில் மோகன்லால் நடித்த ’வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கடந்த ஆண்டில் வெளிவந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு நடிகை ஜோதிகா நடனமாடி கலக்கப் போகிறார்

திருமணத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருக்கும் ஜோதிகா, தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் கதையை தாங்கிப் பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 
விதார்த், லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் ஆர்.ஜெ.சான்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். நடிகர்சிம்பு இந்தப் படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அறிமுக இசையமைப்பாளர் A.H. காஷிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

கேரளாவைக் கடந்து நாடு முழுவதும் 84 மில்லியன் ரசிகர்களை கடந்து, இணையத்தைக் கலக்கிய ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருக்கும் ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம், ’காற்றின் மொழி’ படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்துகின்றனர். 

’காற்றின் மொழி’யில் இடம் பெறும் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி கலக்குப் போகிறார் ஜோதிகா! டான்ஸ் மாஸ்டர் விஜியின் நடன அமைப்பில் ஜோதிகாவுடன் லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல், ஆர்.ஜெ.சான்ட்ரா ஆகியோர் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
கொழும்பில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கொழும்பு,மோதரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச் சூடு கொழும்பு - மோதரை பகுதியிலுள்ள முத்துவெல் மாவத்தையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த கோபாலப்பிள்ளை பாலச்சந்திரன் எனும் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ அதிகாரிகளின் போரட்டத்துக்கு அரசாங்கமே பொறுப்பு - பந்துல

மருத்துவ அதிகாரிகளின் போரட்டத்துக்கு அரசாங்கமே பொறுப்பு - பந்துல

அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வைத்தியர்களின் வேதன உயர்வு மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளன. இவை தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி அரசாங்கம் தனது அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. 

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் தேவையை நிறைவேற்றும் நோக்கம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கத்தின் அடிப்படையிலேயே அரசாங்கமும் செயற்படுகின்றது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கள் நிறைவடைந்தும் எதனையும் செய்யமுடியாத அரசாங்கம் எஞ்சியிருக்கும் குறுகிய காலத்தில் மக்களைக் கொன்றேனும் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே எதிர்பார்க்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ; இளம் மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ; இளம் மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி

வவுனியாவில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம், 2 ஆம் படிவம் பகுதியில் வசித்த வந்த பஸ் சாரதியான சந்திரகுமார் றஜீவன் 33 வயதுடைய குடும்பஸ்தர் இன்று காலை 5மணியளவில் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இவரது மனைவி தாதியாக பணி புரிகின்றார்.நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு சென்ற போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்படவிருப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. 

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். 

பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக பிரதேசத்தில் உள்ளபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்வது அவசியமாகும். 

அரச தகவல் திணைக்களம்
யாழில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது

யாழில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல் மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பிரதேசங்களில் நேற்று (02) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனுராக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன. 

குறைந்த வயதுடையவர்கள் அந்தக் குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான்-டிரம்ப்

மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான்-டிரம்ப்

மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் தேசப் பற்று அற்றவர்களாக செயல்படுவதாகக் ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

ஊடகங்கள் மீதான டிரம்பின் பாய்ச்சல் குறித்து, அவரது மகளும், அதிபரின் மூத்த ஆலோசகருமான இவாங்காவிடம் கேட்ட போது, தமது அனுபவத்தின் படி, ஊடகங்கள் மக்களின் எதிரி அல்ல என குறிப்பிட்டார்.

சற்று நேரத்தில், இதுகுறித்து விளக்கமளித்த அதிபர் டிரம்ப், ஊடகங்கள் மக்களின் எதிரி அல்ல; பெரும்பாலான ஊடகங்களின் போலி செய்திகள் தான் மக்களின் எதிரி என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சுஜா வருணிக்கு திருமணம்...! அதற்கு முன் காதலருடன் அவர் செய்த வேலை!!

சுஜா வருணிக்கு திருமணம்...! அதற்கு முன் காதலருடன் அவர் செய்த வேலை!!


பிக்பாஸ் 2 வது சீசனில் அடிக்கடி மோசமான சண்டை வருகிறது.

அது ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் இப்போதும் எங்களுக்கு முதல் சீசன் தான் பிடித்துள்ளது என்று அதில் நடந்த சந்தோஷமான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சுஜா வருணி.

இவர் தனது காதலன் யார் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகிவிட்டவாம்.

இந்த நேரத்தில் சிவகுமார் டுவிட்டரில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சுஜா வருணிக்கு மோதிரம் அணியும் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

விரைவில் திருமணம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

கூட்டு பாலியல் பலாத்காரம், அதிர்ச்சியில் விழுப்புரம்

கூட்டு பாலியல் பலாத்காரம், அதிர்ச்சியில் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நர்சிங் மாணவியை காதலிப்பதாக கூறி வீட்டில் இருந்து அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜீன்ஸ் பேண்டு கூலிங்கிளாஸில் மயங்கி காதலில் விழுந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்து கிணற்றில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்தும் , கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தலித் மாணவி என்பதும் அவர் வீட்டில் இருந்து 20ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் கொலைசெய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் அவர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் குணசேகரன் என்பவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததும் , சம்பவத்தன்று கடைசியாக் அவருடன் பேசி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணசேகரனை பிடித்து விசாரித்த போது நர்சிங் மாணவி கொலைக்காண பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தபகுதியில் ஜீன்ஸ் பேண்டு கூலிங்கிளாஸ் சகிதம் ரோமியோ போல வலம் வந்த குணசேகரன், சில மாதங்களாக நர்சிங் மாணவியை விரட்டி விரட்டி காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்திய குணசேகரன் கடந்த 3 மாதங்களாக காதலிப்பதையே முழு நேரத்தொழிலாக செய்துவந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எந்த ஒரு தவறுக்கும் இடம் கொடுக்காத அந்த மாணவியை திருமண ஆசைக்காட்டி வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளார் குண்சேகரன்.

குணசேகரனின் காதல் வார்த்தையை உண்மை என்று நம்பிய அந்த நர்சிங் மாணவியும் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு காதலனுடன் தொடங்க உள்ள புதுவாழ்க்கையை எண்ணி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

இருவரும் நடந்தே நெடுந்தூரம் சென்ற நிலையில் மாதவச்சேரி செல்லும் சாலையில் வைத்து , தான் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டு பகுதியில் ஒதுங்கி உள்ளான் குணசேகரன். அங்கிருந்தபடியே தனது நண்பர்களை செல்போனில் அழைத்து வரவழைத்துள்ளான்.

அங்கு வந்த நண்பர்களிடம் மதுவாங்கி வரச்சொல்லி, மாணவி எடுத்து வந்த பணத்தில் கொஞ்சத்தை கொடுத்து அனுப்பி உள்ளான் காதலன் குணசேகரன். விபரீதம் நிகழ்போவதை உணராமல் அந்த மாணவியும் குணசேகரனை நம்பி அங்கேயே இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திய குணசேகரன், போதையில் அந்த மாணவியுடன் தனிமையை கழித்துள்ளார். அவரை தொடர்ந்து அங்கிருந்த அவரது நண்பர்களான கோமுகி தாசன், ரட்சகன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரும் மது போதையில் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி குணசேகரனிடம் கதறி அழுததால் அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன் குணசேகரன். உயிர் தப்பி விடகூடாது என்பதற்காக அவனது கூட்டாளிகள் மாணவியின் சடலத்தின் மீது அங்கிருந்த கற்களை தூக்கி போட்டுள்ளனர்.

பின்னர் மாணவியின் சடலத்தை 300 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் வற்றிபோன கிணற்றில் வீசிவிட்டு தப்பி உள்ளனர் என்று காவல் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியும், கைது செய்யப்பட்ட காதலன் குணசேகரனும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்

கூடா நட்பு மட்டுமல்ல, நம்பிக்கையற்றவர்களுடன் ஏற்படுகின்ற கூடா காதலும் கேடாய் முடியும் என்பதற்கு சான்றாய் மாறி இருக்கிறது இந்த கொடூர சம்பவம்..!