Saturday, August 11, 2018

பியார் பிரேமா காதல் - விமர்சனம்

பியார் பிரேமா காதல் - விமர்சனம்


நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா, இயக்குனர் இளன், இசை யுவன் சங்கர் ராஜா, ஓளிப்பதிவு ராஜா பட்டாச்சார்யா

60100 நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். 

இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார். ஹரிஷ் கல்யாணோ, தன்னுடைய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகி ரைசாவை தினமும் பார்த்து ஒருதலையாக காதலித்து வருகிறார். 

ஒரு கட்டத்தில் ரைசா, ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் அலுவலத்தில், அவருடைய பக்கத்து சீட்டுக்கே வேலைக்கு வருகிறார். இதனால், அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைகிறார் ஹரிஷ் கல்யாண். 

எந்த பழக்கமும் இல்லாத ஹரிஷ் கல்யாண், ரைசாவிடம் பயந்து பயந்து பழகுகிறார். ஆனால், ரைசா மிகவும் யதார்த்தமாக பழகி வருகிறார். தன்னுடைய காதலை ஹரிஷ் சொல்லுவதற்கு முன்னதாகவே இருவரும் ஒன்றாகி விடுகிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தன்னுடைய காதலை சொல்லுகிறார் ஹரிஷ். 

ஆனால், ரைசா எனக்கு காதல் செட்டாவது என்று கூறி காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் இருவரும் ஒன்றாக பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலைக்கு வருகிறார்கள். இதனால், லிவ்விங் டூ கெதராக இருக்கலாம் என்று முடிவு செய்து, ஹரிஷ் கல்யாண் இருக்கும் பக்கத்து வீட்டிற்கு குடியேறுகிறார். 

தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவில் ரைசாவுடன் தங்கி வாழ்ந்து வருகிறார் ஹரிஷ். இந்நிலையில், ரேகாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், ரைசா திருமணத்திற்கு மறுக்கிறார். 

இறுதியில் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தாய்க்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? ரைசாவுடனான காதல் என்ன ஆனது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், முந்தைய படங்களை இட இப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். 

இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரைசாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ், ரைசா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் ஈடுபாடு அமைந்துள்ளது. 

குறிப்பாக இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை சீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்திருக்கிறது. அம்மாவாக வரும் ரேகா, மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். அப்பாவாக வரும் பாண்டியன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரைசாவின் அப்பாவாக வரும் ஆனந்த் பாபு, தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இருப்பது மகிழ்ச்சி. முனிஷ்காந்த் காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக இவரிடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகளில் சிரிப்பு சரவெடி. பெற்றோர்கள் பார்க்கும் திருமணமும் சரி, லிவ்விங் டு கேதர் இருப்பவர்களும் சரி எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையான காதல் இருந்தால் அதுதான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளன். 

முதல் படத்திலேயே இளைஞர்களை தன் வசமாக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரம் தேர்வு. அவர்களிடம் கையாண்ட விதம். போரடிக்காத வகையில் திரைக்கதையின் ஒட்டம் என செவ்வனே படத்தை கொடுத்திருக்கிறார் இளன். 

இப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமும் இவருடைய இசை. நிறைய பாடல்கள், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் நான் தான் முன்னணி என்று நிருபித்திருக்கிறர் யுவன். 

ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘பியார் பிரேமா காதல்’ இளமை துள்ளல்.
சமந்தாவின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி....! ஆச்சரிய தகவலும் வெளியானது...!

சமந்தாவின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி....! ஆச்சரிய தகவலும் வெளியானது...!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 

அந்த வகையில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 

இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் 'யூடர்ன்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சமந்தா சற்றுமுன் வெளியிட்டுள்ளார். 

இந்த படத்தின் டிரைலர் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு த்ரில் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டிரைலர் அனைவரையும் கவரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 

மேலும் சில ரசிகர்களுக்கு தன்னுடன் அமர்ந்து இந்த டிரைலரை பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளதாக ஆச்சரியம் தரும் தகவலையும் சமந்தா தெரிவித்துள்ளார். 

சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். பூமசந்திர தேஜஸ்வா இசையில் நிகேத் பொமி ஒளிப்பதிவில் சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பில் உருவாகிய்ஹுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வரும் செப்டம்பர் 13ல் வெளிவருகிறது.


லட்சுமி ராய் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

லட்சுமி ராய் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லட்சுமி ராய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'சிண்ட்ரெல்லா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா என்பது தெரிந்ததே. இந்த கேரக்டர் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். 

அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. 

லட்சுமிராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. 

படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு , 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள். 

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும போது, "இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. 

அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். 

சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார். 

மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட்ரல்லா'வுக்குள் புகுந்து விட்டார் " என்று கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
24 மணித்தியாலங்களுக்கு பின் வழமைக்கு திரும்பிய விமான சேவைகள்...!

24 மணித்தியாலங்களுக்கு பின் வழமைக்கு திரும்பிய விமான சேவைகள்...!


ஜேர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானிகளின் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது.

விடுமுறை காலங்களில் உச்சகட்ட சேவையின் போது, நிறுவனத்தின் ஆறில் ஒரு விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரைன் எயார் விமான சேவையின் விமானிகள் ஐரோப்பாவின் 5 நாடுகளில் இப்பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

இதன்போது சுமார் 400 விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதுடன், 50,000 பயணிகள் வரை பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் விமானிகளின் பணிப்புறக்கணிப்பு இன்று கைவிடப்பட்டு விமான சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதுகுறித்து விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்த பயணிகள் சிலர் கூறுகையில், தாம் காலை 7 மணியிலிருந்து பயணத்திற்கு தயாரான நிலையில் இருப்பதாகவும், விமானத்தில் ஏறுவதற்கான இறுதி நுழைவாயிலில் தயாராக இருந்த போதும் விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

“பணிப்புறக்கணிப்பு பற்றி எங்களுக்கு எந்தவகையிலும் செய்திகள் கிடைக்கவில்லை, மின்னஞ்சலோ, குறுந்தகவலோ கிடைக்கவில்லை. அதன்காரணமாக நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்” என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
The 24-hour walk-out involves staff in Germany, Sweden, Ireland, Belgium and the Netherlands. About 50,000 passengers are understood to have been told of cancellations on 400 flights.
முதலமைச்சர் வேட்பாளராக விக்கி? கூட்டமைப்பு இரகசிய பேச்சுவார்த்தை!

முதலமைச்சர் வேட்பாளராக விக்கி? கூட்டமைப்பு இரகசிய பேச்சுவார்த்தை!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும் இடையில் இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் வீட்டில் இந்த இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

அடுத்து நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் மீண்டும் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இதுதொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் அந்த கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது ‘விக்னேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளில் நீங்கள் ஈடுபடுவதாக அறிந்துள்ளோம். இது உண்மையா? தொடர்ச்சியாக அவருடன் என்ன பேசி வருகின்றீர்கள்’ என அந்த உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இதற்கு சம்பந்தன் பதில் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தப் போகின்றீர்கள் என்பதை விரைந்து அறிவியுங்கள் என புளொட் டெலோ ஆகிய கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. எனவே இது தொடர்பில் சம்பந்தன் தீர்க்கமான அறிவிப்பை வெளியிடவேண்டும் என இரு கட்சிகளும் வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், விக்னேஸ்வரனிற்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு காணப்படுவதாகவும், புளொட் டெலோ ஆகிய கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சி.வி விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவுகள் ஏற்படலாம் எனவும் அந்த கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய்....!

யாழில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய்....!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இல்லாத விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு அரசியல் பின்னணியே காரணம் என பொலிஸார் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஆவா மற்றும் தனுரொக்ஸ் ஆகிய இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளே யாழில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களாக அரங்கேறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கரீபியன் பிரீமியர் லீக்: ரஸலின் அதிரடியான சதத்தால் ஜமைக்கா அணி வெற்றி...!

கரீபியன் பிரீமியர் லீக்: ரஸலின் அதிரடியான சதத்தால் ஜமைக்கா அணி வெற்றி...!


கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 3ஆவது லீக் போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும், டிரின்போ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜமைக்கா தலாவாஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கொலின் முன்ரோ 61 ஓட்டங்களையும், பிரெண்டன் மெக்கலம் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஆந்ரே ரஸல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 224 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்குள்ளானது.

ஆனால் இதன்பிறகு களமிறங்கிய கெனர் லீவிஸ் மற்றும் ஆந்ரே ரஸல் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிபெற செய்தனர்.

இதற்கமைய ஜமைக்கா தலாவாஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது, ஆந்ரே ரஸல் 49 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள் அடங்களாக 121 ஓட்டங்களையும், கெனர் லீவிஸ் 51 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அலி கான் 3 விக்கெட்டுகளையும், பவாட் அஹமட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு துணை நின்ற ஆந்ரே ரஸல், தெரிவுசெய்யப்பட்டார்.
“தமிழக அரசே குண்டர் சட்டத்தை ஏவாதே” திருமுருகன் காந்தியை விடுதலை செய்...! யாழில் ஆர்ப்பாட்டம்

“தமிழக அரசே குண்டர் சட்டத்தை ஏவாதே” திருமுருகன் காந்தியை விடுதலை செய்...! யாழில் ஆர்ப்பாட்டம்


மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான திருமுருகன் காந்தி தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து நேற்று (10) யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 03.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாகக் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிச் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்றது. 

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானருமான செல்வராஜா கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம் மற்றும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தமிழக அரசே! ஈழ ஆதரவாளர்களை நசுக்காதே”, விடுதலை செய்! விடுதலை செய்! திருமுருகன் காந்தியை விடுதலை செய்!”, “தமிழக அரசே குண்டர் சட்டத்தை ஏவாதே” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு பதாதைகளைத் தமது கைகளில் தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட விசேட குழு

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட விசேட குழு


இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள கருத்துக்களை கவனத்திற்கொண்டு ஜனாதிபதியினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஓய்வுபெற்ற பொருளியல் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டீ. லக்ஷ்மன் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழக்கத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் சிறிமெவன் கொழம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயனெத்தி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இலங்கை சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முன்மொழியப்பட்டுள்ள புதிய வர்த்தக கொள்கையின் நடைமுறைத் தாக்கங்கள் எதிர்காலத்தில் இலங்கையின் வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்கு தேவையான கொள்கை சார்ந்த வழிகாட்டல்களுக்கான சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் பல்வேறு சேவைகளை வழங்கும் பிரிவுகள் தொடர்பிலும் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைமை மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்பிலும் உள்ள தாக்கங்கள் பற்றி ஆராய்வதும் இக்குழுவின் விடயப் பரப்புக்குள் உட்பட்டதாகும்.

இந்த குழுவுக்கு தங்களது கருத்துக்கள், முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழுவின் பொறுப்புக்கள் குறித்த முன்னேற்றம் அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளினூடாக ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இறுதி அறிக்கை இரண்டு மாத காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும்.

Consultative Committee appointed to compile report on Singapore - Sri Lanka FTA
பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு : முழு விபரம்

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு : முழு விபரம்


இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நிதியமைச்சினால் நேற்று (10) அறிவிக்கப்பட்ட விலைசூத்திரத்திற்கு அமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை கருத்திற் கொண்டு இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இன்று (11) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையை ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலையை ரூபா 1 இனாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 95 - ரூபா 158 இலிருந்து ரூபா 160 ஆக ரூபா 2 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 129 இலிருந்து ரூபா 130 ஆக ரூபா 1 இனாலும் அதிகரித்துள்ளது.

  • பெற்றோல் Octane 92 (ரூபா 146), டீசல் (ரூபா 118) ஆக தொடரந்து பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலையேற்றம் 3.54pm (Aug 10, 2018)

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 95 இனது விலை ரூபா 2 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 1 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலையேற்றம் அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதற்கமைய

CPC - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

  • பெற்றோல் Octane 95: ரூபா 155 இலிருந்து ரூபா 157 ஆக ரூபா 2 இனாலும்
  • சுப்பர் டீசல்: ரூபா 129 இலிருந்து ரூபா 130 ஆக ரூபா 1 இனாலும் விலை அதிகரித்துள்ளது.
  • பெற்றோல் Octane 92 (ரூபா 145), டீசல் (ரூபா 118) இனது விலைகள் அதே நிலையில் தொடர்ந்தும் பேணப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைய, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு, விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பிலான அனுமதியை, எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புகையிரத பணி புறக்கணிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அசெளகரியங்களுக்குள்ளான புகையிரத பயணிகளுக்கு நிவாரணளிக்கும் வகையில் வழங்குவதற்கு விசேட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, புகையிரத பருவச்சீட்டு, பயணச்சீட்டை கொண்டுள்ள பயணிகளின் போக்குவரத்தின் பொருட்டு, விருப்பமுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், இவ்வாறு புகையிரத பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கும் தனியார் பஸ்களுக்கு, நிதியமைச்சின் மூலம் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். #FuelPriceHike #FuelPriceFormula #CPC #IOC #LKA #SL

Fuel prices will be revised according to the "Fuel Pricing Formula" from midnight. Petrol 92 Octane - Rs. 145.00 No Change. 
Petrol 95 Octane - Rs. 157.00 Increase by 2 Rupees 
Auto Diesel - Rs. 118.00 No Change 
Super Diesel - Rs. 130.00 Increase by 1 Rupee
ஒன்ராறியோ முதல்வர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!

ஒன்ராறியோ முதல்வர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!


ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தி வரும் நிலையில், ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகி டக் ஃபோர்ட் திட்டத்தினை தடுக்குமாறு அவர் தமது சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டக் ஃபோர்ட்டின் குறித்த இந்த திட்டம் பிழையானது எனவும், நீதி அற்றது எனவும் தெரிவித்துள்ள ஜோன் ரொறி, அவ்வாறு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் அந்த திட்டம் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கும் 47 பேர் என்ற எண்ணிக்கையை 25ஆக குறைக்கப்போவதாகவும், அதற்கான தீர்மானத்தை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்திருந்தார்.

அத்துடன் தனது இந்த முடிவினை நியாயப்படுத்தியுள்ள அவர், ரொறன்ரோவில் சில முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும், அனைவரும் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் தொடர்பில் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, இது குறித்து தான் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இது மக்களை மதிக்கும் செயல் அல்ல எனவும் சாடியுள்ளார்.

ஜனநாயக முறைமையின் கீழ் இவ்வாறான ஒரு பெரும் மாற்றத்தினை அல்லது முடிவினை மேற்கொள்ளும் போது, அது பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, உரிய நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்!

ஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்!


ஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் நேற்று (வௌ்ளிக்கிழமை) தொலைபேசி மூலம் இக்கலந்துரையாடலை மேற்கொண்டதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டதென பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, விரிவான வர்த்தக செயற்பாடுகள், சர்வதேச பாதுகாப்பு காரணிகள், ஈரானின் தற்போதைய நிலைமை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான எல்லை நெருக்கடிகள் தொடர்பாக கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டதாக வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரான்சின் உத்தியோகபூர்வ அரச மாளிகையான எலிஸீ மாளிகை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன முறுகல் நிலை தொடர்பாகவே கலந்துரையாடியதாகவும், வர்த்தக செயற்பாடுகள் தொடர்பாக எந்தவிடயமும் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரசல்ஸில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் இறுதியாக ட்ரம்பும் மக்ரோனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலி – மோல்டா கடற்பரப்பிலிருந்து 141 குடியேற்றவாசிகள் நடுக்கடலில் மீட்பு

இத்தாலி – மோல்டா கடற்பரப்பிலிருந்து 141 குடியேற்றவாசிகள் நடுக்கடலில் மீட்பு


இத்தாலி மற்றும் மோல்டா ஆகிய நாடுகளில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 141 அகதிகளை பிரான்கோ – ஜேர்மன் என்ற மனிதநேய அமைப்பின் எக்குவாரியஸ் கப்பல் மீட்டுள்ளது.

சிறார்கள் உள்ளடங்களாக 141 பேர் அடங்கிய இரண்டு படகுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

முதலாவது படகில் 6 பெண்கள் மற்றும் சிறார்கள் அடங்கலாக 25 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லிபிய கடற்பகுதியிலிருந்து 25 கடல் மைல் தொலைவில் இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர், 116 பேர் பிறிதொரு படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அகதிகளின் பிரசன்னம் தொடர்பாக லிபிய கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்த நிலையில், மீட்பு பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இரண்டு மாதங்களாக தனது பணிகளை ஒத்திவைத்திருந்த எக்குவாரியஸ் கப்பல் இந்த வருடத்தில் மாத்திரம் 10 மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, August 10, 2018

ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆபாச வீடியோ: சமூக வலைத்தள பயனாளிகள் அதிர்ச்சி!

ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆபாச வீடியோ: சமூக வலைத்தள பயனாளிகள் அதிர்ச்சி!


தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவது 'கிகி சேலஞ்ச்' என்பது அனைவரும் அறிந்ததே. 

நடிகைகள் உள்பட பிரபலங்கள் ஓடும் காரில் இருந்து திடீரென இறங்கி நடனமாடும் வீடியோதான் கிகி சேலஞ்ச். 

இந்த கிகி சேலஞ்ச் வீடியோவை வெளியிட வேண்டாம் என ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் கிகி சேலஞ்ச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதிலும் அரைகுறை உடையுடன் அருவருப்பான நடன அசைவுகளுடன் அவர் நடனமாடியுள்ளதால் இந்த வீடியோ ஆபாச வீடியோவுக்கு இணையாக இருப்பதாக பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
அந்த விடீயோவினை பார்க்க

Thursday, August 9, 2018

2 injured in Oshawa stabbing :  suspect arrested

2 injured in Oshawa stabbing : suspect arrested


Two men have serious injuries after they were stabbed during a fight in Oshawa early Thursday morning.

Durham regional police were called to the area of Adelaide Street and Park Road around 12:30 a.m.

Police say an altercation broke out between three men.

The two men were taken to hospital where they remain in stable condition.

A third man, who suffered a shoulder injury during the altercation, has been arrested. There is no word on charges.
புதிய வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்ஸன்...!

புதிய வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்ஸன்...!


எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர். விஜய், விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர், தற்போது கூட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.

ஆனால், தற்போது இவர் முற்றிலுமாக இந்திய படங்களையே தவிர்த்து, ஹாலிவுட் சீரியல்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது 6 பேக் வைக்கும் முயற்சியில் இருக்கும் இவர், ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், இதோ உங்களுக்காக....

கொடூர விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் பரிதாபமாக பலி! 50 மேற்பட்டோர் படுகாயம்

கொடூர விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் பரிதாபமாக பலி! 50 மேற்பட்டோர் படுகாயம்


யேமமனில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

யேமன் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும் கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆதரவாக ஈரான் படை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சாடா மாகாணத்தில் (Saada) டாயான் (Dahyan) என்ற இடத்தில் உள்ள சந்தையில் சவுதி அரேபிய படையினர், இன்று (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இதில் பேருந்து ஒன்று வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதற, கதற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!!!

கதற, கதற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!!!


அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் கடந்த சனிக்கிழமை பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்குவதற்காக தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் இருவரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிப்பாதாவது,

தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்குவதற்காக திட்டமிட்ட குறித்த நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மனைவிக்காக ஒரு பரிசை தயார் செய்துள்ளதாகவும் அதை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

பின்னர் அவரது 8 வயது ஆண் குழந்தையையும், 1 வயதேயான பெண் குழந்தையையும் கதற கதற கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு துப்பாக்கி ஒன்றினால் தலையில் சுட்டுக்கொண்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக குறித்த நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

இதனிடையே குழந்தைகளை கொலை செய்து விட்டு பிரெஞ்சு மொழியில் மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அக் கடிதத்தில், 

"எங்கள் மூவரின் மரணத்திற்கும் காரணம் நீ தான், இந்த இழப்பின் வழியை உன் வாழ் நாள் முழுவதும் நீ சுமக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது பிள்ளைகள் இருவரும் தனது காலை பிடித்துக் கொண்டு "அப்பா எங்களை மண்ணித்து விடுங்கள்!" என கதற கதற கழுத்ததை அறுத்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாயிடம் குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெற்ற குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்ட தாய்!

பெற்ற குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்ட தாய்!

South Carolina-வில் இளம்பெண் ஒருவர், தான் காரில் பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் வைத்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

South Carolina-வை சேர்ந்த Brennan Hailey Geller (21) என்ற இளம்பெண் அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிமையன்று, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் காரிலேயே குழந்தை பெற்றுள்ளார்.

அந்த குழந்தையினை இரக்க்கமின்றி கொலை செய்த அவர், பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, அதிகமான ரத்தப்போக்கின் காரணமாக அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர பிரிவில் தீவிர சிகிச்சை பெற்ற Geller-டம் குழந்தை மருத்துவர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Geller-ரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் தொடர்ந்து குழந்தை குறித்த எந்தவித தகவலையும் அளிக்காததால் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதில், காரில் அடிப்பகுதியில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலிருப்பதை பொலிஸார் கண்டறிந்து Geller மீது வழக்கு பதிவ செய்தனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் பொலிஸார், Geller-க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

இதுகுறித்து Geller-ன் நண்பர்கள் பலரும் தங்களுடைய முகப்புத்தகத்தில், அவள் கர்ப்பமாக இருந்ததை எங்கள் அனைவரிடமும் இருந்து மறைத்துவிட்டாள் என வேதனை தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம் ; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை

பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம் ; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை

ஃபேஸ்புக்கிலிருந்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. 

சுமார் 8.7 கோடி ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. 

இதனை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டது. மேலும் இந்திய பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டு, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுப்பதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஆகிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மீதான தகவல் திருட்டு புகார் உறுதியானால் தகவல் தொழில்நுட்ப சட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் திருட்டு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்தார். 

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் உள்ள குறவன், குறத்தி என்ற இரு மலைகளுக்கிடையே ஓடிய பெரியாற்றைத் தடுத்து 170 மீட்டர் உயரமும், 366 மீட்டர் நீளமும் கொண்ட இடுக்கி அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 2,403 அடியாக உள்ள நிலையில், கனமழையால் அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியுள்ளது. 

இதற்கு முன் 1981 மற்றும் 1992ம் ஆண்டுகளில் இடுக்கி அணை திறக்கப்பட்ட நிலையில், தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அணை திறக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ஐந்து மதகுகளின் மத்தியில் உள்ள மதகு வழியாக 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையைவிட இடுக்கி அணை 7 மடங்கு பெரியதாகும். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி அணையிலிருந்து சீறிப்பாய்ந்து தண்ணர் வருவதை காண ஏராளமானோர் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்ய உளவு படையை சேர்ந்த ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்ய உளவு படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் என்பவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா தான் இவர் மீது ரசாயன தாக்குதல நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. 

அமெரிக்காவும் கண்டனம் தேரிவித்தது. ஆனால் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா செய்தி தொடர்பாளர் கெதர் நவ்ர்த கூறியதாவது:-

ரசாயன மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வேதச தடை உள்ளது. ஆனால் அதையும் மீறி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்களும் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தோனேசியா நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் லாம்போக் தீவுகடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. 

லாம்போக் நகரில் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமானது. இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது எனவும், 1,400 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

1 லட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஹயான்கான் என்ற இடத்தில் மட்டும் 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பூகம்ப பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
நோய் பரவலால் ராஜரட்ட பல்கலைகழக  3 பீடங்கள் மூடப்பட்டுள்ளது

நோய் பரவலால் ராஜரட்ட பல்கலைகழக 3 பீடங்கள் மூடப்பட்டுள்ளது

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மூடுவதற்கு பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சமூகவியல் மற்றும் மானுடவியல், முகைாமைத்துவம், பயன்முக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று (08) பிற்பகல் முதல் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார். 

குறித்த பீடங்களின் விடுதிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடையே அம்மை நோய் பரவி வருகின்றமை காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

44 மாணவர்களுக்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி இவ்வாறு மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களும் ஆரம்பிக்கப்படும் என்பதால் மாணவர்களை 26 ஆம் திகதி மாலை விடுதிகளுக்கு வருமாறு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன அகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

யாழ் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மரண மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர். 

யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் தம்மை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கூறி குறித்த ஏழு பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி, இராணுவ பஸ்கள்  சேவையில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி, இராணுவ பஸ்கள் சேவையில்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி, இராணுவ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (08) மாலை முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

பயணிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, நேற்றிரவு 10 மணிக்கு பின்னர் ஓரிரு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.

எனினும், ரயில்களின் பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில்
ஈடுபட்டத்தப்பட்டனர்.

இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் அமர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இலங்கை போக்குவரத்து சபையின் கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தினரால் மாணவர்களுக்கு இலவச சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், பகிஷ்கரிப்பைக் கைவிட்டு, கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு விரைவாக கலந்துரையாடலுக்கு வருமாறு ரயில்வே தொழிற்சங்களுக்கு அரசங்கம் அழைப்பு விடுத்தது.

அதற்கமைய நிதி அமைச்சில் நேற்றிரவு விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
விஜயகலா விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

விஜயகலா விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த விசாரணை அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டு சட்டமா அதிபரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக இதுவரை 70 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டங்களை விமர்சிப்பதை விடுத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - நாமல் ராஜபக்ஷ

போராட்டங்களை விமர்சிப்பதை விடுத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எமது போராட்டத்தைப்பற்றி கருத்து வெளியிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினால் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் தலைவர் வகையிலோ அல்லது அரசு செயன்முறை தொடர்பிலோ குறிப்பிடாமல் எமது போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் இதையே கூறிக்கொண்டிருக்கின்றனர்.

லிப்டன் சுற்று வட்டாரத்தில் நாம் கடந்த வாரம் மேற்கொண்ட போராட்டத்திலேயே அரசாங்கத்தில் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் செப்டெம்பர் 5ஆம் திகதி ஜனநாயகமற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்திற்கு தயாராகவே உள்ளோம். 

எனவே எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை விமர்சிப்பதை விடுத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதே வேளை இனியும் காலம் தாழ்த்தாமல் மாகாண சபைத் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.
வித்தியா படுகொலை ; மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீடு இன்று பரிசீலனை

வித்தியா படுகொலை ; மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீடு இன்று பரிசீலனை

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை தளர்த்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் ஏழு பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏழு குற்றவாளிகளுக்கும் கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 8, 2018

முப்படை - அதிரடி படை - கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலை!

முப்படை - அதிரடி படை - கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலை!


விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டமையால் தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த பதற்றமான நிலை, ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஒரு பகுதி மக்கள் அரச பேருந்துகள் மற்றும் முப்படையினரின் வாகனங்களின் உதவியுடன் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் ஒரு சிலர் தற்போது ரயில் நிலையத்திற்குள் தங்கி இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்பாச்சும் இயந்திரங்களும் கொண்டவரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, குறித்த பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர் மீதும் சில குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் உடமைகளையும் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பேருந்து

கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பேருந்து


Government decides to dispatch a military bus service tomorrow for students sitting the GCE Advance Level Examination. 

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரயில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் காரணமாக, நாளைய தினம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இராணுவ பேருந்து சேவை நாளைய தினம் மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fuel price hike likely if US imposes sanctions on Iran: Ranil Wickremesinghe

Fuel price hike likely if US imposes sanctions on Iran: Ranil Wickremesinghe

The impending US economic sanctions on Iran might result in another fuel price hike as it would have a negative effect on Sri Lanka, Prime Minister Ranil Wickremesinghe told Parliament today.

Prime Minister Wickremesinghe said this when a question was raised by Joint Opposition MP Bandula Gunawardane on certain scandals involving vehicle and gold imports in the House last afternoon.

“The impending US sanctions on Iran could affect Sri Lanka adversely. We don’t know whether this would result in an oil price hike as Sri Lanka currently imports Iranian crude. However, we will have to be prepared to face any adverse situation,” the Prime Minister said.

He said that the ongoing trade war between China and the USA would also affect Sri Lanka.
The Prime Minister said Sri Lanka should be prepared to face any adverse situation that may be caused by these global developments.

I warned of railway strike: Cabinet Spokesman

I warned of railway strike: Cabinet Spokesman

Minister and Cabinet Spokesman Rajitha Senaratne said he had warned of an impending railway strike at the recent Cabinet meeting when Finance Minister Mangala Samaraweera objected to the Cabinet proposal brought in to resolve the salary anomalies of the railway employees.

He told at the weekly Cabinet briefing that the Cabinet Paper to address the salary anomalies of the railway employees had been brought in long time ago but it was delayed due to the objection of the Finance Ministry.

பதற்றத்தை கட்டுப்படுத்த STF அழைப்பு

பதற்றத்தை கட்டுப்படுத்த STF அழைப்பு


கொழும்பில் பதற்றத்தை கட்டுப்படுத்த விசேட அதிரடி படையினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Road opposite Fort Railway Station blocked due to protest by train passengers. STF and Riot Police dispatched for security. One train to ply to Kandy amidst protest.
கொழும்பில் பதற்றம்: போக்குவரத்து அமைச்சு முக்கிய அறிவித்தல்!

கொழும்பில் பதற்றம்: போக்குவரத்து அமைச்சு முக்கிய அறிவித்தல்!


கொழும்பில் ரயில் சேவை பணி புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து போக்குவரத்து அமைச்சு, புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

அந்தவகையில் பணி புறக்கணிப்பு காரணமாக, புகையிரத பருவ சீட்டு உள்ளவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை உட்பட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து இன்மையால் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புகையிரதம் நிறுத்தப்பட்டதால் கொழும்பில் பரபரப்பு

புகையிரதம் நிறுத்தப்பட்டதால் கொழும்பில் பரபரப்பு


புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து, இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சம்பள பிரச்சினையை உட்பட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணி புறக்கணிப்பு நடவடிக்கையில், ரயில் நிலைய பொறுப்பதிகாரி, சாரதி, காவலர், கட்டுப்பாட்டாளர்கள் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக, ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போராட்டம் காரணமாக, ஸ்தமித்தமடைந்த பயணிகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Tense situation in Colombo Fort Railway station, Sudden Trains Strike continues. Commuters demanding trains
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: விக்னேஸ்வரனுக்கு அதிரடி உத்தரவு...!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: விக்னேஸ்வரனுக்கு அதிரடி உத்தரவு...!


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு இன்று நிறைவடைகிற அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் பதிவு செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Notice issued on Northern CM C.V. Wigneswaran to appear before Court of Appeal on September 7th over a contempt of court case related to removal of Former Northern Province Minister B Denishwaran
“பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்” – இரா.சம்பந்தன்

“பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்” – இரா.சம்பந்தன்


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

“முது பெரும் தமிழறிஞர், உலகத்த தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து. பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்.” என அவரது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உற்பட இலங்கை தலைவர்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின்னர், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், கருணாநிதி உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும்.


பாரிய விபத்தில் 6 வயது சிறுமி விபத்தில் உயிரிழப்பு!

பாரிய விபத்தில் 6 வயது சிறுமி விபத்தில் உயிரிழப்பு!


கலீடனில் உள்ள நெடுஞ்சாலை 10 இல் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சார்லஸ்டன் சைடர் மற்றும் ஓல்டி பேஸ் லைட் சாலை அருகே நேற்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பயணிகள் பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியத்திலேயே இந்தவிபத்து இடம்பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், 36 வயதுடைய ஒருவர் படுகாயங்களுடன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆறுமுகன் தொண்டமான் சென்னைக்கு விஜயம்!

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆறுமுகன் தொண்டமான் சென்னைக்கு விஜயம்!


மறந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமானான கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆறுமுகன் தொண்டமான் சென்னைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நாளை (புதன்கிழமை) சென்னை புறப்பட்டு செல்வதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இரங்கல் தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை அடுத்து இலங்கை ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி

புலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி


புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“டயஸ்போரா என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. ஒவ்வொரு நாடுகளிலும் இவர்கள் வேவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனினும், இலங்கையர்களாகிய நாம் தான் இந்த டயஸ்போரா எனும் வசனத்தைக் கேட்டு தற்போது குழம்பிக்கொண்டிருக்கிறோம்.

புலம்பெயர்ந்தோர் என்போர் தமது நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் வாழும் ஒரு குழுவினர்களாவர். இவர்களில் நல்லவர்கள் – தீயவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர்.

நாம், இவர்களின் செயற்பாடுகளில் எதனை எமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நேர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தக் குழுவினர், அங்கு மிகுந்த செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களிலிருந்து எமக்கு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் முன்னேற்றத்துக்காக இவர்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையே நாம் முதலில் அடையாளம் காணவேண்டும்.” என கூறினார்.

Tuesday, August 7, 2018

கருணாநிதியின் மறைவை முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள், வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி ஆரவாரம்

கருணாநிதியின் மறைவை முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள், வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி ஆரவாரம்


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள், வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். #SriLanka #Tamil #RIPKalaignar #RipKarunanidhi #ripkalaignarkarunanidhi #SunSetWithKalaingar

முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் சிலர் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்துள்ளார்கள்.

இன்று 07.08.18 மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படு;த்தியுள்ளார்கள்.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்ததார்கள்.

அதேவேளை, வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் அமைதிப்படுத்தியதாகவும், கலைஞரின் பெருமைகளையும், அவர் தமிழுக்காற்றிய பங்களிப்பை விளக்கிக்கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.