Saturday, August 18, 2018

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் உதவி

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் உதவி

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழக மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ள முதலமைச்சர், நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பாலும் அனுப்பிவைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், வேட்டிகள், கைலிகள் 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக்குழுக்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இப்பணிகளை ஒருங்கிணைக்க, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையின் கீழ், 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக அரசு மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குகிறது. அதுமட்டுமின்றி 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டி, கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள் நிவாரணப் பொருட்களாக வழங்குகிறது. தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
காவிரி பொங்கி சீறுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி பொங்கி சீறுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,05,000 கன அடி வீதம் நீர் திறப்பு

5 ஆண்டுகளுக்கு பின்னர் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறப்பு

கூடுதல் நீர் திறப்பால் வெள்ளக் கோலத்தில் பாய்கிறது காவிரி

காவிரி பொங்கி சீறுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள இடத்தைத் தெரிவிக்க..! கூகுள் நிறுவன அறிவிப்பு!

கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள இடத்தைத் தெரிவிக்க..! கூகுள் நிறுவன அறிவிப்பு!

கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் தாங்கள் சிக்கியிருக்கும் இடத்தைத் தெரிவிக்க ஆஃப்லைனிலேயே மேப்-ன் பிளஸ் கோட் பயன்படுத்த கூகுள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களின் பாதுகாப்பு கருதி, ஆப்லைனில் உள்ள போதே தாங்கள் இருக்கும் இடத்தை மீட்புக் குழு மற்றும் பிற உறவினர்களுக்குப் பகிர வாய்ப்பளித்துள்ளது. 
அதன் படி, ஆன்ட்ராய்டு பயனாளர்கள், தங்களின் லொகேசனை ஆன் செய்து, கூகுள் மேப்-ஐ திறந்து, தாங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டும் நீல வட்டத்தை சில விநாடிகள் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

இதையடுத்து மொபைல் திரையின் அடி பாகத்தில் தோன்றும் விவரங்களைத் தொட்டால், அதில் கூட்டல் குறி போன்ற பிளஸ் கோடு கிடைக்கும். அதில் அவர்களின் நகரம், மாநிலத்தோடு 6 அல்லது 7 இலக்க எண் மற்றும் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காபி செய்து மீட்புக் குழுவுக்கு அனுப்பினால் அவர்கள் துல்லியமாக அந்த இடத்தை அடைந்து எளிதில் உதவ முடியும்.
படி நிலுவைகளை உடனடியாக வழங்கத் தவறினால்.....

படி நிலுவைகளை உடனடியாக வழங்கத் தவறினால்.....

படி நிலுவைகளை உடனடியாக வழங்கத் தவறினால் விமானங்களை இயக்க முடியாது என்று ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனம் ஊதியத் தொகைகளை வழங்கிவிட்டாலும் 70 சதவீத விமானிகளுக்கான படிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இந்திய தொழில்முறை விமானிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில்,

"விமானிகளுக்கான படிகள் உடனடியாக வழங்கப்படவில்லையெனில் அவர்கள் விமானங்களை இயக்கமாட்டார்கள் என்றும் இதனால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளுக்கு நிர்வாகமே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "

எனினும் ஊதியம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அலுவலகத்துக்கு வந்து தங்களது பணி சார்ந்த பிற வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கத்திக்குத்து இரு இளைஞர்கள் ஆபத்தானநிலையில்

கத்திக்குத்து இரு இளைஞர்கள் ஆபத்தானநிலையில்

Toronto பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது Yonge மற்றும் இசபெல்லா தெரு பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தகவலறிந்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சம்பவத்திற்கான காரணங்களை இதுவரை வெளியாகவில்லை என்றும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ரொறன்ரோ கிழக்கு பகுதி கத்திக்குத்து: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ரொறன்ரோ கிழக்கு பகுதி கத்திக்குத்து: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ரொறன்ரோ கிழக்கு பகுதியின் கொக்ஸ்வெல் அவனியு மற்றும் டன்டஸ் கிழக்கு வீதி பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை கண்டு பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் உதவ வேண்டுமென பொலிஸார், கோரியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 அளவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அப்போது அவர், பாரதூரமான கத்திக் குத்துக் காயங்களுடன் அவர் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து, அவர் பலமாக தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், அவர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சந்தேக நபர் குறித்த விபரங்களும் தெளிவாக இல்லை என்றும், சரியாக எந்த இடத்தில் வைத்து இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றது என்பதனை இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை எனவும், விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார், தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கேரள மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பிரார்த்தனை

கேரள மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பிரார்த்தனை

கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழையினால் பெரும்பாலான ஏரியாக்களில் மழை வெள்ளம் புகுந்து விட்டது. 

இதனால் சொந்த வீடுகளை காலி பண்ணிவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். 

இந்த நேரத்தில் பல மாநிலங்களும், பிரபலங்களும் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். 

அதில், கேரளா, நீங்கள் எங்களது பிரார்த்தனைகளில் உள்ளீர்கள். இந்த நிலையும் கடந்து போகும், தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
அருண் ராஜா காமராஜ் - சிவா கூட்டணி: கானா டீசர் ஓகஸ்டில்

அருண் ராஜா காமராஜ் - சிவா கூட்டணி: கானா டீசர் ஓகஸ்டில்

சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்து வரும் படம் கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

நெருப்புடா பாடல் புகழ் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.

கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளம் பெண்ணின் போராட்டத்துடன், அப்பா - மகள் சம்பந்தப்பட்ட பாசக்கதையிலும் உருவாகி வரும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் ஓகஸ்டு மாதம் 23 வெளியாகிறது. 

இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் நேற்று அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
டக் ஃபோர்ட்டை கடுமையாக சாடும் ஆன்ட்ரியா ஹோர்வத்!

டக் ஃபோர்ட்டை கடுமையாக சாடும் ஆன்ட்ரியா ஹோர்வத்!

முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர், டக் ஃபோர்ட்டை ஒன்ராறியோ புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், கடுமையாக சாடியுள்ளார்.

டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் ரொறன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் 45இலிருந்து 25 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

இந்நிலையில், இதுதொடர்பில் பலரும் தங்களது அதிருப்திகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டத்தை ஹோர்வத், கடுமையாக சாடியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அரசியல் ஆதாயத்தினை பெற்றுக் கொள்வதற்காக டக் ஃபோர்ட் இந்த சட்டமூல நிறைவேற்றத்தினை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பெரும்பான்மை அரசினை அமைத்துவிட்ட ஆணவத்தில் பழமைவாதக் கட்சி தலைகால் புரியாது ஆடிக் கொண்டிருகின்றது” என கூறினார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலி பேரளவில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை

இத்தாலி பேரளவில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை

இத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அனர்த்தத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 19 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.

உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் இத்தாலியின் வடக்கு துறைமுக நகரான சவோனாவிலுள்ள கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அனர்த்தத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் வெள்ளை நிற பேழையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உடலங்கள் தாங்கிய பேழைகளின் மீது வெள்ளை நிற ரோஜாப் பூக்களிலான மலர் செண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதை செலுத்தும் வகையிலான அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த இறுதி அஞ்சலி நிகழ்வை, பல உறவினர்கள் புறக்கணித்திருந்தனர்.

இவ்வாறான அவலங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையில், உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளை தனிப்பட்ட செலவில் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த அனர்த்தத்தில் கால்பந்தாட்ட வீரரொருவரும் உயிரிழந்த நிலையில், அவர் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்த கால்பந்தாட்ட அணியின் சக வீரர்கள் அனைவரும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்த பாதுகாப்பையும், இதுபோன்ற அவலங்கள் எதிர்காலத்தில் நிகழ்வதை தடுப்பதனையும் இத்தாலி அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும் என சவோனா மேயர் வலியுறுத்தியுள்ளார். Tamil News, Thina Seithi 
ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்

ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்

Former UN Secretary General KofiAnnan has passed away, according to the United Nations
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், மனிதாபிமான பணிகளுக்கான நோபல் பரிசு வென்றவருமான கொஃபி அனான் தனது 80ஆவது வயதில் காலமானார்.

உலகின் சிரேஷ்ட இராஜதந்திரியான அவர், உடல் நலம் குன்றியிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. செயலாளர் நாயமாக பொறுப்பேற்ற முதலாவது கறுப்பின ஆபிரிக்கரான கொஃபி அனான், 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை அப்பதவியில் நீடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சிரியாவிற்கான ஐ.நா. சிறப்பு தூதுவராக பணியாற்றிய அவர், சிரியாவின் உள்நாட்டு போருக்கு சமாதானமான தீர்வை பெற்றுக் கொடுக்க கடும் முயற்சிகளை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்!

யாழ். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்!

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் யாழில் இயங்கும் குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிற்குட்பட்ட பிரதேசங்களில், பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்கள், பொது மக்களிடம் வழங்கப்பட்டன.

யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வன்முறை சம்பவங்களை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கு, குறித்த குழுவினர் தொடர்பில் அறிந்தால், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அல்லது வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகவரிக்கு இரகசியமாகவோ தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அமைதிபெறும்...! மைத்திரி

இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அமைதிபெறும்...! மைத்திரி

பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானின் தலைமையில் கீழ் அந்நாடு அமைதிபெறும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை பிரதமராக, அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று தேர்ந்தெடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று முற்பகல் அவர் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பிரதமரான இம்ரான் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவரது தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் தாம் நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.
மீள்குடியேறிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

மீள்குடியேறிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

மீள் குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது.

முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீண்டும் தமது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேறியுள்ளனர். 

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என 100 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் தற்காலிக கூடாரங்களினுள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த மக்கள் மருத்து வசதிகளை பெற்றுக்கொள்ள சிலாபத்துறை வைத்தியசாலைக்கே சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் லியோ விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள், மருத்துவ வசதிகளுடன் இன்று முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் இலவச மருத்துவ முகாமை மேற்கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனுடன் இணைந்து மடு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ராஜன் லெம்பேட் இணைந்து வைத்திய பரிசோதரனகளை மேற்கொண்டதோடு, மருந்து பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த மருத்துவ முகாமின் போது, கிராமத்தில் மீள் குடியேறியுள்ள அதிகளவான மக்கள் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமற்போனோர் தொடர்பான பரிந்துரைகள் அரசிடம்

காணாமற்போனோர் தொடர்பான பரிந்துரைகள் அரசிடம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்க, காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

மேலும், குறித்த தினத்தில் காணாமல் போனோருக்கான சர்வதேசத்தினத்தை, கொழும்பு ஜே.ஆர்,ஜெயவர்த்தன மண்டபத்தில் நடத்த காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தீபிகா உடுகம, இதன்போது பிரதம உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்!

பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய நிர்வாகியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணையானது நேற்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பதில் நீதவான் சிவபாலன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அந்தவகையில் அவரது விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற பதின்ம வயது மாணவிகள் மீது மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்...!

ஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்...!

ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பேருந்துகளில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் இப் பாடல்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய அறிவு சார்ந்த பாடல்களாக அமைந்திருப்பதே பொதுவாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பேருந்து உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம்.

அதே போன்று வாள்வெட்டு கலாசாரங்கள், ரவுடித்தனங்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படங்களைத் தவிர்த்து கருத்தாழம் மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய பல நல்ல படங்களைக் காட்சிப்படுத்துவதையே எமது மக்கள் விரும்புகின்றார்கள்.

படங்களையும் பாடல்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொறுப்புள்ளவர்களிடம் விட்டால் பேரூந்தில் பயணம் செய்பவர்கள் வெட்கப்படத்தேவையில்லை என்று கருதுகின்றேன்.

பேரூந்துகளில் பயணம் செய்யும் பலரின் கருத்தையே இங்கு நான் பிரதி பலிக்கின்றேன். உங்கள் சாரதிய ஒழுங்கும் மக்கள் பாதுகாப்பும் 100 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஒன்று இரண்டு விபத்துக்களைக் கூட இல்லாதொழிப்பதற்கு நீங்கள் பாடுபடவேண்டும்.

சுமார் 20-30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் சிறந்த சாரதிகளாக இனங் காட்டப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலையில்லை.

போட்டித் தன்மை காரணமாக வீதி ஒழுங்கு சைகைகள், சமிக்ஞைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து நினைத்தவாறே நிறுத்துவது, எடுத்த மாத்திரத்தில் இயக்குவது, பின்பார்வை கண்ணாடிகளை முறையாக உற்று நோக்காது இயக்குவது போன்ற பல குறைபாடுகள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என முதலமைச்சர் தெரிவித்தார்.
கிளி. புகயிரதக்கடவை சீராக இயங்குவதில்லை – மக்கள் விசனம்!

கிளி. புகயிரதக்கடவை சீராக இயங்குவதில்லை – மக்கள் விசனம்!

கிளிநொச்சி – 155 ஆம் கட்டை பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புகயிரதக்கடவையின் சமிக்கை, சீராக இயங்குவதில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விவேகானந்த நகர், பாரதிபுரம், கிருஸ்ணபுரம், மலையாலபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் பேன்ற கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இவ் வீதியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் குறித்த புகயிரதக்கடவை சீராக இயங்குவதில்லை எனவும், எழுப்பப்பட ஒலியாது சரியாக கேட்ப்பதில்லை எனவும் கடவையை புகயிரதம் அண்மிக்கும் போதே சமிஞ்சை விழக்குகள் ஒளிர்வதனால் விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் புகையிரத சமிக்கை தொடர்ந்தும் சிவப்பு நிற சமிக்கை காட்டியவாறு இருப்பதால், மிகுந்த அச்சத்துடனேயே அக் கடவையை கடக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு புகையிர கடவைக்கு ஒரு ஊழியர் நியமிக்கப்படுவார் ஆனால் இந்த கடவையில் ஊழியர் எவரும் இல்லை என்பதுடன் இந்த கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பழுதடைந்த இவ் சமிக்கை விளக்குகளை மீள சீர் செய்து, மக்களின் உயிர்களைக் கருத்தில் கொண்டு புதிய சமிக்கை விளக்கினை பொருத்துவதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும் கடமைக்கு நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மருத்துவரின்றி அவதிப்படும் கர்ப்பிணி தாய்மார்...!

மருத்துவரின்றி அவதிப்படும் கர்ப்பிணி தாய்மார்...!

மகப்பேற்று மருத்துவர் இன்மையால் கர்ப்பிணி தாய்மார் பெரும் அவதிப்படுகின்ற நிலையில், அதற்கு மாற்றீடாக தென்னிலங்கை வைத்தியர்களையேனும் தாருங்கள் என வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“இவ்வாறான பிரச்சினை மன்னாரில் காணப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சைக்காக வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு நோயாளர்களும், கர்ப்பிணி தாய்மாரும் அனுப்பப்பட்டனர்.

இது வடமாகாணம் தழுவி பாரிய பிரச்சினையாக உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற பின்னர் வேறு மாகாணங்களில் சேவையாற்றிவரும் மருத்துவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கில் பல்வேறு மருத்துவம்சார் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் நாம் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுத்து மூலம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றோம்.

ஆனால் இன்றுவரை குறித்த விடயம் தீர்ந்ததாக இல்லை. இந்த நிலையில் மக்களின் நலன் கருதி தென்னிலங்கை வைத்தியர்களையேனும் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தி, தற்காலிக தீர்வையேனும் பெற்றுத் தாருங்கள்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஐந்து மாதங்களில் மிக நவீன ரயில் சேவை...!

இலங்கையில் ஐந்து மாதங்களில் மிக நவீன ரயில் சேவை...!

இலங்கையின் மிக நவீன ரயில் பாதையினூடான ரயில் சேவை, இன்னும் ஐந்து மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே விரிவாக்க திட்டத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியல் ஆலோசகர் பியதாச இதனை தெரிவித்தார்.
அதன்படி தெற்கு ரயில்வே விரிவாக்க திட்டத்தின் முதல் கட்ட பணிகள் 2019ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் பூர்த்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விரிவாக்க திட்டத்தின் முதல் கட்டமாக மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் பாதை விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இத்திட்டத்தின் 90 வீதமான பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக, பொறியியல் ஆலோசகர் தெரிவித்தார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் குறித்த ரயில் மார்க்கத்தினூடாக 120 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மிக நவீன ரயில் பாதையாகவும் இது விளங்குகிறது.

இதேவேளை, தெற்கு ரயில்வே விரிவாக்க திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பெலியத்தையிலிருந்து அம்பாந்தோட்டைக்கும், மூன்றாம் கட்டமாக அம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமத்திற்குமான ரயில் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், இப்பணிகள் எதிர்வரும் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவிவிலக காரணமான விக்கி வருத்தப்படுவது வேடிக்கை...!

பதவிவிலக காரணமான விக்கி வருத்தப்படுவது வேடிக்கை...!

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ்.பளிகக்கார பதவிவிலக சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் அவரது இராஜினாமாவிற்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பளிகக்கார ஆளுநராக கடந்த 2015 ஜனவரி மாதத்தில் நியமனம் பெற்று வந்திருந்தார். முதலமைச்சரினால் பளிகக்காரவிற்கு 2016 ஆரம்பத்தில் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

அக் கடிதத்தில் ‘This amounts to cannibalism’ என்ற வார்த்தைப் பிரயோகமும் அமைந்திருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த பளிகக்கார தனது இராஜினாமாவைக் கொடுத்து 2016 பெப்ரவரி மாதம் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அதற்கு வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்

இராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்

இராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்திற்கு சென்று கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்க உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனம் தடுப்பு போதுமானதாக இல்லாமையாலேயே இந்த விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர்.

குறித்த விபத்தினால் இன்று பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன. 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்போகின்றார்கள்.

இதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்த வருகின்றோம். மீள்குடியேறிய காலம் தொட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இந்த குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

தற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களிற்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர். இவ்விடம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். Ananthi Sasitharan

Friday, August 17, 2018

ஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது - ரஞ்சித் அலுவிஹார

ஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது - ரஞ்சித் அலுவிஹார

ஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்திலும் தேசிய அரசாங்கத்திலும் இடம்பெற்ற மோசடிகளை அரசாங்கம் சுயாதீன முறையில் விசாரணைகளை மேற்கொண்டும் எவ்வித மாற்றங்களும் இதுவரையில் ஏற்படவில்லை. எவன்காட் தொடக்கம் பிணைமுறி வரையில் வெறும் ஏமாற்றங்கள் மாத்திரமே மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. 

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசியல் பழிவாங்கல் என்ற விடயத்தை குறிப்பிட்டு அரசியல் தந்திரங்களை பிரயோகித்து விடுகின்றனர் மக்களும் இவ்விடயத்தை நம்பகின்றனர். ஊழல்வாதிகளை தண்டிக்க முற்படும் போது பல விடயங்கள் இடையூறு விளைவிக்கின்றன. இவற்றினை சீர்செய்யும் போது காலதாமதம் ஏற்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினாலே மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து பாடம் புகட்டினர். இடம் பெறவுள்ள மாகாண சபை மற்றும் ஜனாதிபதி தேர்தலில் இந்நிலைமை தொடருமாயின் அரசாங்கம் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
கை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம்

கை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம்

சுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

24 வயதான ஃபராஹ் அல்ஹாஜா என்ற குறித்த பெண் அன்மையில் நேர்முகப் பரீடசைக்காக நிறுவனம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு நேர்முகத் தேர்வு செய்யும் அதிகாரியிடம் கை குலுக்காது தன்னுடைய இதயத்தின் அருகில் வைத்து இஸ்லாமிய முறைப்படி மரியாதை தெரிவித்துள்ளார்.

உடனே குறித்த அதிகாரி உங்களுக்கான தேர்வு முடிந்து விட்டது நீங்கள் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத ஃபராஹ் அவ் இடத்தை விட்டு கவலையோடு வீட்டிற்கு சென்றள்ளார்.

தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக நீதி மன்றில் வழக்கத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதி மன்றம் குறித்த நபரை ஃபராஹ்விற்கு 3400 பவுண்ட் நஷ்ட ஈடு வழங்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆனால் சுவீடனில் அது மிகவும் குறைவு, நான் ஆண் மற்றும் பெண் இரு பாலாரிடமும் கை குலுக்கிக் கொள்வதில்லை, ஆனால் அவர்களுக்கு மரியாதை தருவேன்." என்று ஃபராஹ் கூறியுள்ளார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவி

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவி

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. 

குறித்த உதவிகளை வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அனந்தி சசிதரன் வைபவரீதியாக வழங்கி வைத்தார்.

வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10 குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தன.

வடமாகாண மகளிர் அமைச்சியினால் ஒதுக்கப்பட்ட 5 இலட்ச ரூபா நிதியில் இருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரூபிணி வரதலிங்கம் மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




மறைந்த இந்திய முன்னாள் பிரமருக்கு இரா. சம்பந்தன் இரங்கல் செய்தி

மறைந்த இந்திய முன்னாள் பிரமருக்கு இரா. சம்பந்தன் இரங்கல் செய்தி

இந்தியா தனது ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஒரு சிறந்த அறிவாளியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பா​யை இழந்துள்ளதுள்ளது. 

முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய், ஒரு மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார். 

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார். மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒருவருமாவார். 

இந்திய பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் ஆற்றிய உரைகள் என்றைக்கும் நினைவிலிருக்கும். இந்திய மக்களுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய அரசினால் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. 

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மண் மேடு சரிந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

மண் மேடு சரிந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹட்டன்L பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனன் பகுதியில் இன்று (17) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மண்சரிவு ஏற்பட்டுள்ள பிரதான வீதியில் மண் மேட்டை அகற்ற ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் நகர சபையினரும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், வாகன சாரதிகள் தற்காலிகமாக கொழும்பு பழைய வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் தான் எமது மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் - வே. தவராஜா

விடுதலைப் புலிகள் தான் எமது மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் - வே. தவராஜா

தமிழ் மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து, காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தான் என மாநகர சபை உறுப்பினர் வே. தவராஜா தெரிவித்துள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற மாநகர சபை அமர்வின் போது, மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக மாநகர சபையின் கலைக் குழு சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டி அவசியம் பற்றி மாநகர சபை உறுப்பினர் வே. தவராஜா தெளிவுபடுத்தப்பட்டு அனைவரின் அனுமதியுடனும் சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர் அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது. இதனை அன்னாரின் குடும்பத்தினருக்கு மாநகர சபை சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இதன் போது குறுக்கிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் றொனி, கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை அரசியல் ரீதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்று தெரிவித்தார். 

இதற்கு உறுப்பினர் தவராஜா பதில் கூறுகையில், ஈழத் தமிழர்களின் நிலைமைக்கு கருணாநிதி மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் குறை கூறுவதற்கு முன்னர் அவர்கள் செய்தவற்றை சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தான் எமது மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் என்பதை இச்சபையில் இருந்து உலகிற்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் CID வாக்கு மூல பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் CID வாக்கு மூல பதிவு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

இதற்கிணங்க குற்றபுலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 

சி.ஐ.டி.யினர் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டிருந்த வேளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர் 

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ஜகார்தாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப்போட்டி!

ஜகார்தாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப்போட்டி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். 

இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. 

17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 2014 வரை நடைபெற்றன.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர்.

இந்த வருடம் ஆசியா விளையாட்டுக்கள் ஜகார்தாவில் நடைபெற இருக்கிறது. நாளை கோலாகலமாக இப் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன 
தீயணைப்பு வாகனத்தில் முதல் நாள் பள்ளி வந்த US சிறுவன்!

தீயணைப்பு வாகனத்தில் முதல் நாள் பள்ளி வந்த US சிறுவன்!

மறைந்த தன் தந்தையினை நினைவு கூறும் விதமாக தீயணைப்பு வண்டியில் தன் முதல் நாள் பள்ளிக்கு வந்து அமெரிக்க சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!

ஐக்கிய நாடுகளின் டென்னிஸ் மாகானத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். தீயணைப்பு வீரராக இருந்த இவருக்கு 3 பிள்ளைகள். இவர் 6 மாதங்களுக்கு முன்பு தீயனைப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டபோது பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்நிலையில் மறைந்த தன் தந்தையின் நினைவாக, அவர் பயன்படுத்திய தீயணைப்பு வாகனத்தில் பள்ளி செல்ல விரும்பிய மகன் கூப்பர்(5) தனது முதல் நாள் பள்ளிக்கு தீயனைப்பபு வாகனத்தில் சென்று பள்ளி நிர்வாகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


இதுகுறித்து கூப்பர் தெரிவிக்கையில்., என் தந்தை சிறந்த வீரர். தன் தொழில் மீது பற்றுக் கொண்டவர். அவரை கௌரவப்படுத்த அவர் செய்த பணியினை அனைவருக்கும் வெளிப்படையாக காட்ட விரும்பினேன். தற்போது குழந்தையாக இருக்கும் எனது இரட்டை சகோதர்களையும் விரைவில் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.


கூப்பரின் பள்ளி பயணத்தின் போது வாகனம் ஓட்டிய மற்றொரு தீயணைப்பு வீரரும், கூப்பரின் தந்தை கிறிஸ்டோபரின் நண்பருமான கெம்ப் இதுகுறித்து தெரிவிக்கையில்... கிறிஸ்டோபர் எனது நெடுநாள் நண்பன். என் நண்பனின் குடும்பத்தை அவன் இன்றி பார்க்கையில் பெரும் வருத்தம் அடைகின்றேன். என் நண்பனின் குழந்தைகளை நான் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது என் குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்றது போலவே உணர்கின்றேன் என தெரிவித்துள்ளார்!
மீன் விற்ற கேரள மாணவிக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள்

மீன் விற்ற கேரள மாணவிக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள்

சமீபத்தில் தனது கல்விச் செலவுக்காக மீன் விற்று பிரபலமடைந்த ஹனான் என்ற மாணவி, பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கிறார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனான் என்ற கல்லூரி மாணவி, தனது கல்விச் செலவுக்காக கைவினைப் பொருட்கள் மற்றும் மீன்களை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், ஹனான் ஹமீது கல்லூரி சீருடையில் தெருக்களில் மீன் விற்றது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.

கல்விக்காக மாணவி ஒருவர் சுயமாக சம்பாதிப்பதை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்த நிலையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.

இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஹனானின் தன்னம்பிக்கையை பாராட்டுவதாகவும், அவருக்கு கேரள மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார் .

இதனிடையே, விளம்பரத்திற்காக ஹனான் மீன் விற்பதாக சமூக வலைதளத்தில் தவறாக விமர்சித்த ஒருவரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து ஹனான் குறித்து அறிந்த அருண் கோபி என்னும் மலையாள திரைப்பட இயக்குநர், அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹனானுக்கு வாய்ப்பு அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் என்னமோ ஏதோ படத்தில் ’புதிய உலகை, புதிய உலகை தேடிப்போகிறேன்’ என்ற பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாணவி ஹனான் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் விஜயகுமார் இயக்குகிறார். இப்படத்தில் விஜயகுமாரியாக ஹனான் நடிக்கிறார்.

இதை உறுதிப்படுத்திய ஹனான், படத்தில் தனக்கு ஒரு சவாலான கதாபாத்திரம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அரை கள்ளன் முக்கால் கள்ளன், மிட்டாயி தெரிவு ஆகிய படங்களிலும் ஹனான் நடிக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர்கள் நிதி உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர்கள் நிதி உதவி

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பங்குக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார். 

முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா - கார்த்தி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். விஷால் மற்றும் சித்தார்த் ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது.
கோலமாவு கோகிலா திரை  விமர்சனம்

கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

அறம் படத்திற்குப் பிறகு நாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் மையப்புள்ளியாக வைத்து உருவாகியிருக்கும் படம்.
திரைப்படம்கோலமாவு கோகிலா
நடிகர்கள்நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ஜாக்குலின், சரவணன், ஆர்.எஸ். சிவாஜி
இசைஅனிருத்
ஒளிப்பதிவுசிவக்குமார் விஜயன்
கதை – இயக்கம்நெல்சன்

கீழ் மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த கோகிலாவின் அம்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய். தங்கை படித்துக்கொண்டிருக்கிறாள். தந்தையால் பெரிதாக சம்பாதிக்க முடியாது. இந்த நிலையில் யதேச்சையாக ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பலின் அறிமுகம் ஏற்படுகிறது கோகிலாவுக்கு. தாயின் சிகிச்சைச் செலவுக்காக போதைப் பொருளைக் கடத்த ஆரம்பிக்கிறாள் கோகிலா.

ஒரு கட்டத்தில் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட, அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி, தானும் எப்படி தப்புகிறாள் என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கோகிலாவின் வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருக்கும் யோகிபாபுவின் ஒருதலைக் காதலையும் சமாளித்தாக வேண்டும்.

ஒரு சாதாரண கடையில் வேலை பார்க்கும் கோகிலா தன் மேலாளரிடம் சம்பள உயர்வு கேட்கிறாள். மேலாளர், அதற்கு தன்னை அரவணைத்துச் செல்ல வேண்டுமெனக் கூற, பதிலுக்கு கோகிலா கூறும் வசனம் அட்டகாசம். இப்படியாக பெரும் ஆரவாரத்துடன் துவங்குகிறது படம்.

போதைப் பொருள் கடத்தல் போன்ற ஒரு பாதாள உலகம் சம்பந்தப்பட்ட கதையின் மையப்புள்ளியாக ஒரு நாயகியை வைத்திருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி. அதுவும் அந்த நாயகி நயன்தாராவாக இருக்கும்போது கேட்கவே வேண்டாம். துவக்கக் காட்சியிலிருந்தே தூள்பரத்துகிறார்.

அப்பாவியைப் போல இருந்துகொண்டு மிகவும் அழுத்தமான வேலைகளைச் செய்யும் பாத்திரம். அதில் அப்படியே ஒன்றிப்போயிருக்கிறார் நயன்தாரா. ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு நானும் ரவுடிதான் படத்தை நினைவுபடுத்துகிறது. தவிர, படம் நெடுக முதுகில் பையும் ஒரே மாதிரியான உடையும் வருவது சலிப்பேற்படுத்துகிறது.

சூழலுக்கு ஏற்ப நடந்துகொண்டு தப்பிக்கும் நாயகி, விசித்திரமான பழக்கங்களைக் கொண்ட வில்லன்கள், உருப்படியில்லாமல் சொதப்பும் அடியாட்கள், சொதப்பும் காவல்துறை, சம்பந்தமில்லாத காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நபர்கள் என ஒரு டார்க் காமெடி படத்திற்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உண்டு.

ஆனால், இரண்டாம் பாதியில் பெரிய அளவில் போதைப் பொருளைக் கடத்த முற்படும்போது நேர்மையான தந்தை உட்பட குடும்பமே இணைந்துகொள்வது, தேவையில்லாமல் நாயகி குறுக்கு வழியில் இறங்குவது என இடைவேளைக்குப் பிறகு சற்று தொய்வடைகிறது படம். ஆனால், க்ளைமாக்ஸை நெருங்கும்போது மீண்டும் விறுவிறுப்பெடுக்கிறது.

படத்தின் நாயகி நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் யோகிபாபு, நயன்தாராவுக்கு அடுத்தபடியாக படத்தின் பலமான அம்சம். நயன்தாராவுக்காகவே அவரது வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருப்பது, பிறகு அவருக்கு உதவப்போய் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வது என்று வெளுத்துக்கட்டுகிறார் மனிதர்.

தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசும் மொட்டை ராஜேந்திரன், நேர்மையான அப்பாவாக வரும் ஆர்.எஸ். சிவாஜி, தாயாக வரும் சரண்யா ஆகியோர் தேர்ந்த நடிகர்கள் என்பதால் படம்நெடுக ரசிக்கவைக்கிறார்கள்.

குறிப்பாக, நயன்தாராவின் தங்கையைக் காதலிக்கும் (ஒருதலைக் காதல்தான்) இளைஞனும் அசரவைக்கிறார்.

அறம் படத்தில் கதாநாயகி ஏற்றிருக்கும் ஆட்சியர் பாத்திரம் அவருக்கு ஒரு அதிகாரத்தைத் தருகிறது. ஆனால், இந்தப் படத்தில் எந்த பலமுமே இல்லாமல் வரும் நாயகி, நோயிலிருந்து தன் தாயைக் காப்பாற்ற முயல்கிறார், பலம்வாய்ந்த வில்லன்களை எதிர்கொள்கிறார், கொலை செய்கிறார். உண்மையில் இது நயன்தாராவுக்கு அடுத்த கட்டம். நயன்தாரா மட்டுமல்ல, படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் எல்லோருமே முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு கவனிக்கத்தக்க படம்.

அனிருத்தின் இசையில் ‘கல்யாண வயசு’ பாடல் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.

நயன்தாராவின் ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ரசிக்கக்கூடிய படம்தான்.
இந்தியாவை வல்லரசாக்க பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய் : தமிழிசை

இந்தியாவை வல்லரசாக்க பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய் : தமிழிசை

வளர்ச்சி திட்டங்களின் நாயகன் வாஜ்பாய் என அஞ்சலி செலுத்திய பின் தமிழிசை பேட்டியளித்தார். 

பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா என தெரியவில்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார். 

இந்தியாவை வல்லரசாக்க பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய் என்று தமிழிசை தெரிவித்தார்.
டென்மார்க்கில் கடல்  சிவப்பாக மாறியது ஏன் ?

டென்மார்க்கில் கடல் சிவப்பாக மாறியது ஏன் ?

டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள ஃபாரோ தீவுகளில் குளிர்காலம் தொடங்குவதை ஒட்டி நடந்த திமிங்கல வேட்டையால் கடல் செந்நிறத்தில் காட்சியளித்தது.

அங்குள்ள 18 தீவுகளிலும் வாழும் சுமார் 50,000 பேருக்கும் திமிங்கலத்தின் இறைச்சி மற்றும் கொழுப்பு ஆகியன முக்கிய குளிர்கால உணவாக உள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திமிங்கல வேட்டை பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு ; தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு ; தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என்று தமிழக அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை: இந்திய தலைவர்களால் மட்டுமல்லாமல் உலகத் தலைவர்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தலைவர் வாஜ்பாய். அவர் ஒரு மாபெரும் ஜனநாயகவாதி. அவரது அமைச்சரவையில் நான் 13 மாதங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினேன். அவரது காலத்தில்தான் இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தினார். அவரது மறைவு கட்சி மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பேரிழப்பாகும்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: வாஜ்பாயின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கரு ணாநிதியிடம் அன்பும் நட்பும் பாராட்டியவர். ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழி னத்துக்கு பெருமை சேர்த்தார். காவிரி நதி நீர் ஆணையத்தை உருவாக்கினார். தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட திமுக ஆட்சியை கலைக்க மறுத்தவர். முரசொலி மாறன் மத்திய தொழில் அமைச் சராக இருந்தபோது, அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஊக்கமும் ஆக்க மும் அளித்தார் என்பதை எந்நாளும் மறப் பதற்கில்லை. மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் அவரது தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். அவரது மறைவு நாட்டுக்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: 1999 தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டேன். அதன்பிறகு வாஜ்பாயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்த பிறகு என்னை மத்திய அமைச்சராக்கினார். எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் நேசித்த மகான் அவர். தேசத்துக்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை என நாட்டை நிமிர வைத்தவர். அவரது மறைவு பாஜகவுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிறந்த அரசியல்வாதி. பாஜகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர். கட்சி பாகுபாடு இல்லாமல் அனை வரையும் ஒருங்கிணைத்து செல்கின்ற தலைவ ராக இருந்தார். சிறந்த வல்லமை பொருந்திய, பேச்சாற்றல் மிக்க தலைவர். அவருடைய இழப்பு நம் நாட்டுக்கு பேரிழப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர்: பாஜகவின் தலைவராக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர். சிறுபான்மை மக்கள் மீது அன்பு கொண்டவர். அவரால் ஈர்க்கப்பட்டுதான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை மத்திய அமைச்சராக்கினார். மதம், ஜாதி, இனம், மொழி, கட்சி, மாநிலம் என எல்லைகளைக் கடந்து அனைவர் மீதும் அன்பு செலுத்திய மகத்தான தலைவர். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அன்பு கொண்டவர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த என்னைப் போன்றவர்களை பாஜகவை நோக்கி ஈர்த்த வாஜ்பாயின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமர் பதவியில் 5 ஆண்டுகள் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். வளர்ச்சியின் நாயகன். இன்றைய இந்தியாவின் வளர்ச் சிக்கு அவர் கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலை போன்ற திட்டங்களே காரணம். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர். அவரது மறைவு நாட்டுக்கும், பாஜகவுக்கும் பேரிழப்பு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கொள்கையால் மாறுபட்டாலும்கூட வாஜ் பாயின் இனிய பண்பு அனைவருக்கும் எடுத்துக்காட்டானது. கடந்த 2001-ல் டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப் பட்டபோது பிரதமராக இருந்த அவரை சக தலைவர்களுடன் சென்று சந்தித்தோம். அப்போது இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்து உடனடியாக மாற்று இடம் அளிக்க உத்தரவிட்ட பெருந்தன்மை குணம் கொண்டவர். திராவிடர் கழகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு.

நடிகர் ரஜினிகாந்த்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தலைவரான அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்: ஆர்எஸ்எஸ். முழுநேர ஊழியராக இருந்த நான் 1991-ல் பாஜகவுக்கு அனுப்பப்பட்டேன். அன்று முதல் வாஜ்பாயிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனை வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தமிழ் மொழி, கலாசாரம் மீதும், தமிழர்கள் மீதும் அன்பும், மரியாதையும் கொண்டவர். அண்ணா, கருணாநிதியோடு நட்பாக பழகியவர். அவர்களும் வாஜ்பாய் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். தேசத்தை உயிரென நேசித்த தலைவர் மறைந்தார் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: வாஜ்பாய் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற் பட்ட தலைவராகவும், நாட்டுக்காக தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறியதற்கு முக்கிய காரணமானவர். அவர் வழியில் என்று சொல்பவர்கள் உண்மையில் அவர் வழியில் லஞ்சம், ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: என்னை வளர்ப்பு மகன் என்று சொல்லி, என் மீது மிகவும் அன்பு காட்டினார். என் தகுதிக்கு அது அதிகம்தான். மனிதாபிமானம் மிக்கவர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். சிறந்த பண்பாளர். தமிழகத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரகடனம் செய்தார். கோடானுகோடி மக்களுக்காக வாழ்ந்த அந்த தலைவர், மதசார்பின்மையையும் காப்பாற்றினார். எனது 52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பெரிதும் மதிக்கும் அண்ணா, கருணாநிதியைப் போல வடபுலத்தைச் சேர்ந்த தலைவர்களில் நான் பெரிதும் மதிக்கும் மாபெரும் தலைவர் வாஜ்பாய்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி உயர்ந்த இடத்தை அடைந்தவர் வாஜ் பாய். பாஜக இன்று மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு வாஜ்பாய் இட்ட அடித் தளமே காரணம். பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங் களை தந்தவர். அவரது மறைவு பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன்: மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் மதித்து நடந்த மகத்தான தலைவர் வாஜ்பாய். மாநில கட்சிகளின் உரிமைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து நிறைவேற்றியுள்ளார். கவிஞர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி பன்முக திறமை கொண்ட அவரின் இழப்பு நாட்டுக்கு பேரிழப்பாகும். கூட்டணி கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதன்படி அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தியவர்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரரான அவர், சிறந்த நாடாளுமன்றவாதி. நாட்டின் வளர்ச்சியை தனது நோக்கமாகக் கொண்டு திட்டங்களை கொண்டு வந்தவர். சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர். அவர் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு: கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்ட வாஜ்பாயின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது அமைச்சரவையில் நான் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில் தமிழகத்தில் 1,300 கி.மீ. அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. அதனை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது.

கவிஞர் வைரமுத்து: கவிதை மனம் கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயின் வாழ்வே எடுத்துக்காட்டு.

அவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்திய கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச் சென்ற பண்பும் நினைவில் கசிகிறது. கொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக் கொள்ள வேண்டும்.

ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி: அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் சென்ற எளிமையான, அன்பான, உயர்ந்த சிந்தனை கொண்ட தலைவரான வாஜ்பாயின் மரணம் மன வேதனையைத் தருகிறது. சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு.

சமக தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், புதன்கிழமையன்று 48 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தங்களின் ‘கமாண்டோ ஆப்ரேஷன்’ என்று இந்த தாக்குதலை அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளா வெள்ளம் -164 பேர் உயிரிழப்பு, 2,23,000 பேர் முகாம்களில் தஞ்சம்

கேரளா வெள்ளம் -164 பேர் உயிரிழப்பு, 2,23,000 பேர் முகாம்களில் தஞ்சம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
குறுகிய நேரத்தில் உலக அதிசயங்களை சுற்றிப்பார்த்த தந்தை, மகன்

குறுகிய நேரத்தில் உலக அதிசயங்களை சுற்றிப்பார்த்த தந்தை, மகன்

இந்தியாவைச் சேர்ந்த IT பணியாளர் முகமது தாகிர் (36). இவரது மகன் முகமது ஆயன் (5). தற்போது தாகிர் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகனுடன் சேர்ந்த கின்னஸ் சாதனை படைக்க விரும்பிய தாகிர், இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை குறுகியக் காலத்தில் சுற்றிபார்க்க முடிவு செய்தார். 

இதற்காக தந்ைதயும் மகனும் 22 பேர் குழுவினருடன் புறப்பட்டனர். மகன் ஆயனுடன் இந்தியா வந்த முகமது தாகிர், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா, டெல்லியில் உள்ள ஹூமாயுன் கல்லறை, செங்கோட்டை, குதுப்மினார் ஆகிய 7 இடங்களை 11 மணி 33 நிமிடம் 18 நொடிகளில் சுற்றிப்பார்த்தார். 

இந்த 7 இடங்களையும் சுற்றிப்பார்க்க தந்தையும் மகனும் 300 கி.மீ பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் மின்சார ரிக்‌ஷா, ஆட்ேடாக்கள், கார்கள், அரசு பஸ்கள், ெமட்ரோ ரயில்களை பயன்படுத்தினர். தேவையான இடங்களில் வேகமாக ஓடியும் நடந்து சென்று தந்தையும், மகனும் இந்த சாதனையை படைத்தனர். 

முன்னதாக நெதர்லாந்தில் 24 மணிநேரத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய மையங்களை 24 மணிநேரத்தில் சுற்றிப்பார்த்ததே சாதனையாக இருந்தது. இது தொடர்பாக தாகிர் கூறுகையில், `‘இந்த பயணத்தின்போது ரயில் மற்றும் பஸ்சுக்காக காத்திருந்தபோதுதான் ஓய்வு எடுத்ேதாம். டெல்லியில் இருந்து பரத்பூர் ரயில் பயணத்தின்போது தான் காலை உணவு சாப்பிட்டோம்’’ என்றார்.
பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!!

பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!!

மணிக்கு 40 மைல் வேகத்தில் பிரித்தானியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் எர்னஸ்டோ புயல் பிரித்தானியாவை இரண்டாகப் பிரிக்கப்போவதாக வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.

அதாவது நாட்டின் வடக்கு பகுதிகள் காற்று மற்றும் மழையால் தாக்கப்பட இருக்கும் அதே நேரத்தில் நாட்டின் தென் பகுதிகள் 80 டிகிரி ஃபாரன்ஹீட்டை அனுபவிக்கப்போகின்றன.

இந்த வெப்பநிலை ஆகஸ்டிலும் தொடரும் என தெரிகிறது. இத்தகைய நிலையற்ற வெப்பநிலை வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளை ஞாயிறு அன்று தாக்கும் என்றாலும் அந்த நேரத்தில் புயல் வலுவிழந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது.

சனிக்கிழமை இரவும் ஞாயிறு காலையும் பலத்த காற்றும் கன மழையும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் விடிந்தபின் மழையும் காற்றும் குறைந்துவிடும் என்றும் ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மேகமூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் சிறந்த தட்பவெப்பநிலையை அனுபவிக்கப்போவது மத்திய மற்றும் தென் இங்கிலாந்து பகுதிகள்தான்.

அங்கு 20 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை இருக்கும், அதிகபட்சமாக லண்டனில் 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும்.

ஆக இன்றைய வானிலை நிலவரம் பிரித்தானியாவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு மோசமானதாகவும் பிரித்தானியாவின் இதர பகுதிகளுக்கு இதமான வெப்பத்தை அளிப்பதாகவும் இருக்கப்போகிறது.
துப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகத்தை மாற்றிய மருத்துவர்கள்..!

துப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகத்தை மாற்றிய மருத்துவர்கள்..!

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே அமெரிக்க டாக்டர்கள் மாற்றிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் வசித்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் தனது முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அவரது முகத்தில் குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைப்பாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேத்திக்கு, பல இடங்களிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வந்தது. அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது. 

இதனால், யாராவது முகம் தானமாக கொடுத்தால் கேத்தியின் முகத்தை சீரமைக்க முடியும் என மருத்துவர்கள் கேத்தியின் பெயரை பதிவு செய்து வைத்தனர். அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம் கேத்திக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 31 மணி நேரம் நீடித்த ஆபரேஷனுக்கு பிறகு கேத்தியின் முகம் சீரமைக்கப்பட்டுள்ளது. தனக்கு பெரிய மன உறுதி கிடைத்துள்ளதாக கூறிய கேத்தி, புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற ஆக இளைய அமெரிக்கர் என்ற பட்டமும் கேத்திக்கு கிடைத்துள்ளது.
மகனுக்காக தாயாக மாறிய தந்தை! நெகிழ்ச்சி சம்பவம் ; வீடியோ

மகனுக்காக தாயாக மாறிய தந்தை! நெகிழ்ச்சி சம்பவம் ; வீடியோ


தந்தையின் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

விவாகரத்து பெருகி வரும் இக்காலத்தில் சில நேரங்களில் குழந்தைகள் தாயிடமோ, அல்லது தந்தையிடமோ வளர்க்கப்படும் சூழல் உண்டாகிறது. அப்படி வளரும் குழந்தைகள் தங்களுக்கு கிடைக்காத தாயன்பு அல்லது தந்தையின் பாசத்திற்காக ஏங்கும். 

இதனால் குழந்தைகளுக்கு மனரீதியிலான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் படிப்பு மற்றும் விளையாட்டிலும் கூட தங்களது முழுக் கவனத்தை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதும் உண்டு.

இந்நிலையில் தனது மகனுக்காக தந்தை செய்த காரியம் அனைவரின் கண்களிலும் நெகிழ்ச்சியுடன் கண்ணீரை வரவழைக்கிறது. தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை போற்றும் விதமாக இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்தை சேர்ந்தவர் பணுதாய். மனைவியுடன் விவாகரத்து பெற்று தனது 5 வயது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

பணுதாய் மகன் படித்து வரும் பள்ளியிலும் அன்னையர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அப்போது அனைத்து அம்மாக்களும் தங்களது குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்று அருகில் இருந்தனர். தனது மகனுக்கு தாய் குறித்த ஏக்கம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த பணுதாய், தனது ஆண் உடையை மாற்றி பெண்கள் அணியும் உடையை அணிந்து தாயாக மாறி தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார். 

பொதுவாக எந்தவொரு ஆணும் பெண்கள் அணியும் உடைகளை அணிய விரும்பமாட்டார்கள். ஆனால் மகனுக்கு அம்மாவின் ஏக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தவொரு ஆணும் செய்த துணியாத காரியத்தை செய்துள்ளார் பணுதாய். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உருகி இது உண்மையான தந்தையின் பாசத்தை காட்டுவதாக ஷேர் செய்து வருகின்றனர்.