Saturday, August 25, 2018

Victim found, suspect wanted in apparent Richmond Hill abduction

Victim found, suspect wanted in apparent Richmond Hill abduction

York police say the victim in an apparent abduction in Richmond Hill has been found safe and investigators have been able to identify the suspect.

On Thursday, police released a video that showed a woman ringing a doorbell at a home in the area of High Tech Road and Silver Linden Drive near Highway 7 at 2:50 a.m.

When no one answered the door, video surveillance captured a man who appears to be armed with a handgun get out of a parked vehicle and have an altercation with the woman on the porch of the home.

The video showed the man, who has short hair and was wearing a hoodie, drag the woman to his car by her hair and drive away, while threatening to kill her.

Through tips from the public, they were able to identify both the man and the woman.

The 28-year-old woman from Richmond Hill has been found safe and uninjured.

Police are now looking for Jonathan McLennan, 27, of Toronto. He is considered armed and dangerous.

Anyone with information about his whereabouts are asked to contact police.
Conservative members to vote on abortion, euthanasia policy resolutions

Conservative members to vote on abortion, euthanasia policy resolutions

Conservatives will be drawn into debates about abortion and assisted dying on the last day of the party’s convention in Halifax on Saturday, thanks to proposed policy changes put forward by grassroots party members.

They will not, however, be voting on whether to kill Canada’s system of supply management.

A series of breakout sessions was held on Friday, the second day of the three-day convention, to decide which policy resolutions would go to the full membership for a vote on Saturday.

One of the 74 resolutions debated aims to remove any reference to a future Conservative government regulating abortion.

Debate was extensive during Friday’s preliminary workshop, with a number of people arguing for and against the resolution as dozens more lined up outside the overcrowded room complaining they couldn’t get in to vote.

The resolution was brought to the floor by delegates from Newfoundland and Labrador, who said they want the party to be neutral on the topic of abortion. It ultimately passed with 82 per cent support, which means it will go to the full membership for a vote on Saturday.

Another resolution to have Conservative party oppose the extension of “euthanasia and assisted suicide” to minors, people with mental illness or “people who are not competent” also passed and will go to a wider vote.

But a resolution to have the party adopt a policy to end supply management of agricultural products did not make it to the floor for a vote, much to the chagrin of a group of delegates who tried several procedural tactics to force a vote on the issue.

Peter McCaffrey of Calgary had expressed fears earlier in the week that he wouldn’t have an opportunity to vote on the resolution with Quebec MP Maxime Bernier gone from the party.

Bernier was a vocal critic of supply management and openly arraigned the Conservatives and leader Andrew Scheer for supporting it before his dramatic resignation from the party Thursday.

McCaffrey expressed his frustration with how events unfolded on Friday.

“They’ve just been running out the clock the entire afternoon, going as slow as possible, so we wouldn’t get to a supply management vote,” he said.

“I want to vote for good policy but I feel like they are pushing us out of the party by not allowing us to have votes on these issues.”

McCaffrey had previously said he didn’t want to follow Bernier out of the party, but after the supply management showdown he was less certain.

“I don’t know what to do now,” he said. “People are mad that they didn’t even get a chance to vote. People paid thousands of dollars to come here as delegates and vote on these issues and they were deliberately shut down from doing so because the party stalled.”

The party was gearing up early Saturday to vote on the top 10 resolutions that passed during the three breakout sessions held a day earlier. If the proposals garner majority support, they will become party policy.

During a morning session Saturday, delegates heard from former federal cabinet minister Jason Kenney, who delivered a blistering attack against the energy policy of Justin Trudeau’s Liberal government and Premier John Horgan’s NDP government in British Columbia.

The leader of Alberta’s United Conservative Party said current federal policy was hindering his province’s attempts to export its oil to world and domestic markets.

Kenney told the audience that for the time being there is actually a growing world demand for carbon-based fuels. He said Canada is not only faced with an economic question, but a moral one.

“I believe the world needs more Canadian energy so we are less dependent on the world’s worst regimes,” Kenney said to applause.

He then attacked Trudeau’s overall energy record and lambasted B.C.s stance on allowing Alberta oil through its ports.

“(Trudeau) surrendered to the cancellation of the Keystone XL pipeline, he killed the approved Northern Gateway pipeline, he is banning future exports form the northern B.C. coast, he killed Energy East and he is doing nothing to overcome the illegal unconstitutional opposition of the socialist government in Victoria to the export of Canadian energy.”

Kenney said what’s needed is a federal Conservative government to “undo these policies.”
Teen arrested in fatal stabbing near Weston and Lawrence

Teen arrested in fatal stabbing near Weston and Lawrence

Toronto police have arrested a 17-year-old male in the stabbing death of a a 30-year-old man in the city’s northwest end.

Emergency crews were called to Weston Road near Lawrence Avenue West area around 5 a.m. on Friday.

Police said the man was attacked and stabbed at an apartment building and then chased onto the street where he collapsed.

Paramedics said the victim suffered multiple stab wounds.

He was rushed to the hospital with life-threatening injuries, where he later died.

The suspect, who has not been identified due to the Youth Criminal Justice Act, has been charged with first-degree murder.

This is the city’s 67th homicide of the year, which is one more than the number for all of 2017.

Correction: One person who witnessed the incident told 680 NEWS that the victim got off a TTC bus and was ambushed by the suspect, who then stabbed him multiple times. Police have since provided an update, which has been noted in the above story.

Update to the homicide number: Police now say that a vehicular death from last week was homicide 66
யாழ். கொக்குவில் வன்முறைச் சம்பவம்...! இரு இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

யாழ். கொக்குவில் வன்முறைச் சம்பவம்...! இரு இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கொக்குவில், தாவடி மற்றும் இணுவில் பகுதிகளில் கடந்த புதன்கிழமை மாலை அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. எனினும் கொக்குவில் பிரம்படி வீதி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணை நடத்தட்டது.
அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் மறுநாள் இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கொக்குவில் மேற்கைச் சேர்ந்த குறித்த இரு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது பிரதிவாதி மட்டும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்கேதநபர்கள் இருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தினம் ஒரு சர்கார் பட வொர்க்கிங் ஸ்டில்.....!

தினம் ஒரு சர்கார் பட வொர்க்கிங் ஸ்டில்.....!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தான், இந்த வருடம் ரிலீஸாக உள்ள படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். 

விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜய்யுடன் கூட்டணி அமைத்த 'மெர்சல்' படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் சூப்பர்ஹிட்டானது. 

எனவே 'சர்கார்' ஆல்பத்திற்காக விஜய்யின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சர்கார் படத்தின் பாடல்கள் காந்தி ஜெயந்தியன்று, அதாவது அக்டோபர் 2 அன்று ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

அது மட்டுமல்ல சர்கார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வொர்க்கிங் ஸ்டில்ஸை தினம் ஒன்றாக நாளை முதல் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிதிராவின் அடுத்தப்பட ஹீரோ...! புதிய தகவல்கள்..!

அதிதிராவின் அடுத்தப்பட ஹீரோ...! புதிய தகவல்கள்..!

சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.

'மேயாத மான்' படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், இந்துஜா இருவரும் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தான், மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் உதயநிதி ஸ்டாலின். இந்தப்படத்தில் தான் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அதிதி ராவ், தற்போது 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் இயக்குநர் ராம். ஷாந்தனுவை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்தப் படத்தில் தான் தற்போது உதயநிதி நடிக்கிறார்.
வட சென்னை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

வட சென்னை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் வட சென்னை. இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வட சென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில், வடசென்னை கதைக்களமாக இருந்தாலும் ஹீரோவின் 30 வருட வாழ்க்கை தான் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

வடசென்னை படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர் பெயரும் சமீபத்தில் வரிசையாக வெளியானது. இறுதியாக தனுஷின் கேரக்டர் பெயரும் வெளியானது. அதன்படி, அன்பு என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ்.

செப்டம்பர் மாதம் வெளியீடு என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 17-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? போஸ்ட் புரடக்ஷன் பணிகள் இழுத்துக் கொண்டே போவதால்தான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
போட்டியாளர்களை பரப்பாக்கிய கமல்ஹாசன்...! என்ன குறும்படம் வெளியிட்டார்...!

போட்டியாளர்களை பரப்பாக்கிய கமல்ஹாசன்...! என்ன குறும்படம் வெளியிட்டார்...!

பிக்பாஸ்-2 தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. கமல்ஹாசன் எப்போதும் பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை என்று ஒரு பேச்சு இருந்தது.

அதை பொய்யாக்கும் பொருட்டு இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

மக்கள் முன்னிலையிலேயே மஹத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டது மட்டுமில்லாமல், ஒரு குறும்படத்தை ஒளிப்பரப்பவுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த குறும்படம் என்ன, மஹத் என்ன செய்தார் என்று ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வமாகவுள்ளனர்.

பாப்பரசர் பிரான்ஸிஸிற்கு அயர்லாந்தில் கோலாகல வரவேற்பு...!

பாப்பரசர் பிரான்ஸிஸிற்கு அயர்லாந்தில் கோலாகல வரவேற்பு...!

அயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸிற்கு, தலைநகர் டப்லின் விமானநிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

Pope Francis has arrived in Irelandகுறித்த வரவேற்பு நிகழ்வில், அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கைமன் கெவனியின் இரு பிள்ளைகளும் பூங்கொத்து கொடுத்து பாப்பரசரை வரவேற்றுள்ளனர்.

மேலும் பாப்பரசர் வலம்வரவுள்ள டப்லின் நகர பாதைகளில் இரு மருங்கிலும் பலூன்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக கடந்த 1979ஆம் ஆண்டு பாப்பரசர் 2ஆம் ஜோன் பவுள் அயர்லாந்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது விவாகரத்து, கருக்கலைப்பு என்பன சட்டவிரோதச் செயலாக இருந்தன.

அச்சமயம் அயர்லாந்திலிருந்த சனத்தொகையில் முக்கால்வாசி பங்கினரான 2.7 மில்லியன் மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

பின்னர் 1990களில் அந்நாட்டு மக்கள் மத்தியில் படிப்படியாக கருக்கலைப்புச் செயற்பாடுகள் பரகசியமாக அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து வழமை மாறியதாக கூறப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அயர்லாந்தில் திருச்சபைச் சட்டங்களுக்கு எதிரான கருக்கலைப்பு, ஓர்பால் திருமணம் என்பவற்றிற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கி கத்தோலிக்க மதத்திற்கு அப்பால் அயர்லாந்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
Pope Francis has arrived in Ireland

எனினும், பாப்பரசரின் வருகை மக்கள் மத்தியில் வரவேட்பைக் குறைத்துவிடவில்லை.

அயர்லாந்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ், பாலியல் துஷ்பிரயோகச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களை நாளை சந்தித்து பிரார்த்தனை நிகழ்வொன்றினை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்..! பெண்ணொருவர் அதிரடியாக கைது!

3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்..! பெண்ணொருவர் அதிரடியாக கைது!

3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 22 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வோர்செஸ்டர் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த யூலை 21 ஆம் திகதி குறித்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறித்த சிறுவனின் கை மற்றும் முகம் பாதிக்கப்பட்டது.

A woman has been charged over a suspected acid attack on a three-year-old boyஇதன் பின்னர் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தான்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், குறித்த சிறுவனின் தந்தை உட்பட 6 பேரை கைது செய்திருந்தனர்.

அவர்களை வோர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஓகஸ்ட் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பிர்மிங்ஹம் பகுதியை சேர்ந்த மார்டினா படியோவா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கிட்டர்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பல்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பல்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பிரஜைகள் நாடு திரும்புவதற்காக, அந்த அரசாங்கத்தால் இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள ஆயிரத்து 818 இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளனர்.

இவர்களில் விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், அபுதாபியிலுள்ள தூதுவராலயத்தில் அல்லது துபாயிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியானது!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியானது!

ரொறன்ரோ அடலெய்ட் தெரு கொண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அடலெய்ட் தெரு நாடாளுமன்ற வீதிக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

இதில் தலையில் துப்பியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்திருந்தார். இவர் 22 வயதுடைய ஜெஸ்ஸி கிரஹாம் ரிக்டர் என்ற இளைஞரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் 20 வயதுடைய நபரை தேடி வருகின்றனர்.

மேலும், 5 அடி10 அங்குலம் உயரம், கருப்பு நிறம் மற்றும் அவர் ஒரு கருப்பு ஜக்கெட் மற்றும் நீள கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொது மக்களை தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Exeter விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

Exeter விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

Exeter அல்டி பல்பொருள் அங்கடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொப்ஷம் சாலை அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 82 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்தார்.

இதில், சம்பவ இடத்திலேயே 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததுடன், முதியவர் படு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு, டெவன் மற்றும் கோர்ன்வோல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் பாரிய தீ விபத்து: உயிரிழப்பு 19 அதிகரிப்பு..!

சீனாவில் பாரிய தீ விபத்து: உயிரிழப்பு 19 அதிகரிப்பு..!

வடகிழக்கு சீனாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 18 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரவிய தீ, 7.50 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 தீயணைப்பு வாகனங்கள் சகிதம் 105 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்ததோடு, ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து 70 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம் என்ன?

20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம் என்ன?

ரொறன்ரோவில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கு, மின் இலத்திரனியல் கோளாறே காரணம் என தலைமை அதிகாரி மத்தேயு பெக் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு, 20 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தின் பின்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஒலியை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தீயால் கட்டிடத்தின் முக்கிய பகுதிகள் சேதமடைந்த நிலையில் சுமார் ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 வரையான பொது மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்தும் 26 வாகனங்கள் மற்றும் 100 தீயணைப்பு வீரர்கள் 17 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தீயணைப்பு குழு தலைவர், “கட்டடத்தின் மின் கட்டமைப்புக்கள் மீது பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 20 மாடி கட்டடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மின் உயர்திகளும் வேலை செய்யவில்லை. அந்தவகையில், இதற்க்கு மின் இலத்திரனியல் கோளாறே காரணம்” என கூறினார்.

மேலும், இந்த சேதங்களை முழுமையாக சரி செய்ய சில மாதங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் வைன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை...!

பிரான்ஸில் வைன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை...!

கடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட வைன் மதுசார உற்பத்தியை, இந்த வருடத்தில் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வருடத்தின் கோடைக்காலத்தினைத் தொடர்ந்து, பிரான்ஸின் கிழக்குப் பிராந்தியங்களான சாம்பின், எலசாஸ் போன்றவற்றில் திராட்சை விளைச்சலுக்கு ஏதுவான காலநிலை கைகூடும் முன்னரே திராட்சை விளைச்சல் மிகச் செழிப்பாகவுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் பெற்றுக்கொண்ட வைன் மதுசார உற்பத்தியில் 25 சதவீத அதிகரிப்பினை சேர்த்து, 46.1 மில்லியன் ஹெக்ரோ லீற்றர் அளவு உற்பத்தியினை இந்த வருடம் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு விவசாய அமைச்சர் நேற்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வைன் மதுசாரத்தினை நீண்ட நாட்களுக்கு பூஞ்சணம் போன்ற நுண்ணங்கித் தொற்றுகள் ஏற்படாது தடுக்கும் மைல்டியூ எனப்படும் வெள்ளைச்சோள வகையொன்று தற்போது நோய்க்குள்ளாகி வளர்ச்சி குன்றி காணப்படுகின்றது.

எனினும், வெள்ளை வைன் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் கடந்த வாரத்திலிருந்து பிரான்ஸின் போர்டியெக்ஸ் பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹெக்ரோ லீற்றர் என்பது 100 லீற்றர்களை அல்லது 133 பெரிய வைன் போத்தல்களைக் கொண்ட வைனின் அளவை ஒத்ததென்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு யோக்க்ஷயர் பகுதியில் கொலைச் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

மேற்கு யோக்க்ஷயர் பகுதியில் கொலைச் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

மேற்கு யோக்க்ஷயர் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சமபவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 45 வயதுடைய மார்க் லோங் என்ற நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக மேற்கு யோக்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், சீன் கீனா என்ற 39 வயதுடையவரை கைது செய்யதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நபரை லீட்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேற்கு யோக்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் முரண்பாடு...! குழுவில் இருந்து தயாசிறி விலகல்!

16 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் முரண்பாடு...! குழுவில் இருந்து தயாசிறி விலகல்!

சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவில் இருந்து முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர விலகியுள்ளதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நாசப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர எமது அணியில் இருந்து விலகியுள்ளார். அதுமட்டுமன்றி முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார்.

அத்துடன் எமது 16 பேர் அடங்கிய குழுவில் இருக்கும் சிலர் சுதந்திர கட்சியுடனும், சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனுமென இரு பக்கமும் காணப்படுகின்றனர்.

மேலும் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கவும் முற்படுகின்றனர். இவ்வாறு பலர் துரோகமிழைத்துள்ளனர். எனவே சுதந்திர கட்சியை தொடர்ந்தும் நாசப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீ.ல.சு.க.வின் வருடாந்த மாநாட்டிற்கு முன்னதாக, இவர்கள் மீது கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாசிறி ஜெயசேகர 16 பேர் அடங்கிய குழுவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இனவெறி தொடர்பான புகார்கள் கவலையளிக்கின்றது:...! ஜேர்மனிய ஜனாதிபதி அதிருப்தி..!

இனவெறி தொடர்பான புகார்கள் கவலையளிக்கின்றது:...! ஜேர்மனிய ஜனாதிபதி அதிருப்தி..!

இனவெறி குறித்த புகார்கள் தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக ஜேர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே ஜேர்மனியின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஜேர்மனியில் 81.7 மில்லியன் மக்களில் சுமார் 19.3 மில்லியன் மக்கள் குடியேறியவர்கள் அல்லது அவர்களது சந்ததியினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இனவெறி குறித்து பல்வேறு புகார்கள் வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் அடையும் துன்பத்தை நாம் எளிதாக கடந்து விட முடியாது. அவர்கள் இனவெறி கஷ்டத்தை தரை மட்டமாக்க வேண்டும்.

குடியேறுபவர்கள் இல்லாமல், அவர்களது குடும்பங்கள் இல்லாமல், அவர்களது குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இல்லாமல், நமது நாட்டின் பொருளாதார செழிப்பு, உண்மையில் இன்றைய சமுதாயம், சிந்திக்க முடியாதது.

நாம் அனைவரும் இணைந்து தான் இந்த நாட்டை வளப்படுத்தியுள்ளோம்“ என கூறியுள்ளார்.
Toronto - வெஸ்டன் குடியிருப்பு பகுதியில் கத்திக்குத்து: 17 வயது இளைஞர் கைது!

Toronto - வெஸ்டன் குடியிருப்பு பகுதியில் கத்திக்குத்து: 17 வயது இளைஞர் கைது!

ரொறன்ரோ வெஸ்டன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 17 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது லோரன்ஸ் அவனியூ பகுதிக்கு தெற்கே மற்றும் Weston வீதியின் நடுப்பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் கிடந்த அவரை வைத்தியலைக்கியில் அனுமதித்திருந்தனர்.

இதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 17 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 நாட்களுக்கு மேல் யுவதியை காணவில்லை...! 20 வயது நபருடன் சென்றதாக பொலிஸ் சந்தேகம்!

10 நாட்களுக்கு மேல் யுவதியை காணவில்லை...! 20 வயது நபருடன் சென்றதாக பொலிஸ் சந்தேகம்!

கடந்த 10 நாட்களுக்கு மேலாக, Staffordshire பகுதியை சேர்ந்த 15 வயது யுவதியை காணவில்லை என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் சிசிடிவி காணொளி மூலம், Ynysangharad இல் உள்ள போர் நினைவுப் பூங்காவில் இறுதியாக கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் இவர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருடன் சென்றிருக்க கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இங்கிலாந்தில் இருப்பதாக தெரிவித்த பொலிஸார், குறித்த இருவர் தொடர்பில் தகவல் கிடைத்தால், தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு நீண்ட தாவணி, கருப்பு ஜக்கெட், கருப்பு ஜீன்ஸ் மற்றும் ஒரு கைப்பையுடன் Cardiff வீதி Rhydyfelin பகுதியில் நடந்து சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷ குடும்பத்துடன் மைத்திரி அரசியல் பேசவில்லை...! ராஜபக்ஷ தரப்பு செய்தி வெளியானது!

ராஜபக்ஷ குடும்பத்துடன் மைத்திரி அரசியல் பேசவில்லை...! ராஜபக்ஷ தரப்பு செய்தி வெளியானது!

மெதமுலனவிற்கு ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், ராஜபக்ஷ தரப்பினருடன் அரசியல் விடயங்கள் குறித்து கவனஞ்செலுத்தப்படவில்லையென ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (சனிக்கிழமை) காலை மெதமுலனவிலுள்ள ராஜபக்ஷாக்களின் பாரம்பரிய வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி சிறிசேன சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் மறைவு தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் அரசியல் விடயங்கள் ஏதும் கலந்துரையாடப்படவில்லை என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளரொருவர் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் மெதமுலனவிற்கு ஜனாதிபதி மைத்திரி மேற்கொண்ட முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவின் 30 ஆவது பிரதமருக்கு ரணில் வாழ்த்து!

அவுஸ்ரேலியாவின் 30 ஆவது பிரதமருக்கு ரணில் வாழ்த்து!

அவுஸ்ரேலியாவின் 30 ஆவது பிரதமராக பதவியேற்ற ஸ்கொட் மொரிசனிற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ண்புல், வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து, கட்சியின் தலைமைத்துவம் நடத்திய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற நிலையில் மொரிசன் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததகவது, “இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையில் சிறந்த நட்பு காரணமாக இரு நாடுகளுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பு காணப்படுகின்றது.

இவ்வாறு இரு நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றி மோரிசன் தனிப்பட்ட முறையில் அறிவார். எனவே இரு நாடுகளும் பரஸ்பர நலன்களை பெற்றுக்கொள்ள இது சிறந்த சந்தர்ப்பமாகும்” என குறிப்பிட்டார்.

மேலும் முன்னாள் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, மொரிசன் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Friday, August 24, 2018

மனைவியைக் காணவில்லை கணவர் முறைப்பாடு

மனைவியைக் காணவில்லை கணவர் முறைப்பாடு

பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவரை கடந்த 25 நாட்களாக காணவில்லையென அவரது கணவர் தியாகராஜா ராஜ்குமார் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவர் குறித்த முகவரியைச் சேர்ந்தவரெனவும் தாம் இருவரும் காதல் திருமணம் செய்து கொழும்பு மட்டக்குளி இல. 47 ஜீ சமந்திபுர எனும் முகவரியில் வசித்து வந்தததாகவும் தாம் இருவரும் வியாபாரத்தினை மேற்கொண்டு வந்ததாகவும் இந்நிலையிலேயே குறித்த பெண்ணான தனது மனைவி வியாபார நிலையத்திலிருந்தே திடீரென காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் கணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியை இனங்கண்டால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0703397960, 0769746545 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கணவரான ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 25 நாட்களாக பொலிஸாரும் தனது மனைவி இருக்குமிடம் குறித்து தேடுதல் நடத்தியும் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென கணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் முறைப்பாட்டை வழங்கிய கணவரான தியாகராஜா ராஜ்குமார் மஸ்கெலியா சாமிமலை பகுதியைச்சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தலைகளுடன் அதிசய பசுக்கன்று

இரண்டு தலைகளுடன் அதிசய பசுக்கன்று

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஈன்றுள்ள சம்பவம் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள மாடு ஒன்றே குறித்த இரு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது. 

கன்றும் தாய்பசுவும் நலமாக இருப்பதாக பசு மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
"மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கமா" வடமராட்சி மக்கள் விசனம்

"மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கமா" வடமராட்சி மக்கள் விசனம்

யாழ் வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட அங்கிருந்து வெளியேற்றப்படவில்லையெனவும் அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ் நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். 

இந்த கலந்துரையாடலின் பின்னர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சரை தனியே சந்தித்து வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களால் தாம் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கூறியதுடன், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி கேட்டிருந்தனர். 

இதனடிப்படையில் மேற்படி வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி மத்திய கடற்றொழில் அமைச்சர் கடற்படை, கடற்றொழில் நீரியல்வளத்துறைத்திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்டு 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அடாத்தாக தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை என வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், 

கடந்த 18 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சட்டத்திற்கு மாறாக இரவில் ஒளிபாய்ச்சி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த 81 வெளிமாவட்ட மீனவர்களையும், 28 படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர். 

பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீட்டினால் சட்டத் திற்கு மாறாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக்கோரி ஜனாதிபதி வருகையின்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்துவதற்கு மீனவர்கள் திட்டமிட்டமிட்டிருந்த நிலையில் 21 ஆம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். 

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 நாட்களாகும் நிலையில் எந்தவொரு மீனவரும் வெளியேற்றப்படவில்லை என்பதுடன் அமைச்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சமிக்ஞை கூட வெளிக்கா ட்டப்படவில்லை. 

ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் மத்திய கடற்றொழில் அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினாரா? என தமக்கு சந்தேக எழும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு

நுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு

நுவரெலியா நகரிலுள்ள கார்கில்ஸ் கிரவுன்ட் பகுதியில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர், குறித்த நிலையத்திலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

திருமணமாகாத இவர், குறித்த நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்குவதாகவும், இன்று காலை பத்திரிகையை விற்பனை செய்வதற்கு மேற்படி நிலையத்தை வழமைபோல் திறக்காததையடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்க்கும் பொழுது, இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் நோய்வாய்பட்டு உயிரிழந்தாரா அல்லது எவரேனும் கொலை செய்துள்ளார்களா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மக்களின் அபிலாசைகளுக்கு புறம்பானது

மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மக்களின் அபிலாசைகளுக்கு புறம்பானது

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளர் முறையை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் வைத்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2020 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் எனவும் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து பொது வேட்பாளர் என்ற எண்ணகருவை அழித்து விட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிற்பதன் மூலம் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகின்றார் எனவும், அவர் எப்போதும் அரசியல் இடைவெளிகளுக்குள் நுழைந்து வர முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா பண்ணை தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழப்பு

வவுனியா பண்ணை தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழப்பு

வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (23) மாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த தீ விபத்தினால் சுமார் 8 ஏக்கர் பண்ணை தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டி : பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெண்கலம் வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியா தற்போது வரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 23 பதக்கங்களுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது.
கேரளா வெள்ள சேதத்துக்கு தமிழகம் தான் காரணம் !!

கேரளா வெள்ள சேதத்துக்கு தமிழகம் தான் காரணம் !!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது...! 

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது...! 

கேரள மாநில அரசின் சார்பில் மாநிலத் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கேரளத்தின் வெள்ளப்பாதிப்புக்கு முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்டு 15ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலில் நொடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீரும், பின்னர் நொடிக்கு 21ஆயிரத்து 450கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி அதிகம் என்றும், அதன் கொள்ளளவு குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிக மழை பெய்யும்போது ஒருநாளில் வரும் நீர்ப்பெருக்கைத் தாங்கும் அளவில் அதன் உச்சநீர்மட்டத்தில் இருந்து நீர் தேக்கும் அளவைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அணையின் நீர்மட்டம் 136அடியை எட்டும்போதே அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வெள்ளநீர் மதகுகளைத் திறப்பதற்குப் புதிய அட்டவணை தயாரிக்கவும் நீர்தேக்கும் அளவை உயர்த்தியதைத் திரும்பப் பெறவும் மேற்பார்வைக் குழுத் தலைவரிடம் தாங்கள் கோரிக்கை விடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளரைத் தலைவராகவும், இருமாநிலத் தலைமைப் பொறியாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மேலாண்மைக் குழுவை அமைத்து அணையின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டும் எனவும் இந்தக் குழு அன்றாடச் செயல்பாடுகளை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா - ஹவாய் தீவில் பற்றிய சூறாவள: வெள்ளத்தால் மூழ்கிய நகர்

அமெரிக்கா - ஹவாய் தீவில் பற்றிய சூறாவள: வெள்ளத்தால் மூழ்கிய நகர்

அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில் ஹரிகேன் லேன் எனப்படும் பாரிய சூறாவளி தாக்கியுள்ளது. 

சூறாவளியைத் தொடர்ந்து அடைமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு என்பன தொடர்ந்து ஏற்பட்டவண்ணம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹவாய் தீவுகளின் பிரதான தீவான ஒகுவில் இன்று (வெள்ளிக்கிழமை) சூறாவளி தாக்குமென அமெரிக்க வானிலை அவதான நிலையம் நேற்றே எதிர்வுகூறியிருந்தது. குறித்த எதிர்வுகூறலின் பிரகாரம், இன்று காலை முதல் அடைமழையுடன் சூறாவளி தாக்கி வருகின்றது.

நேற்று மாலையிலிருந்து அடைமழை பெய்வதோடு, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் ஒகு தீவிலுள்ள வைலுகு ஆறு நிரம்பி வெள்ளம் வழிந்தோடுகின்றது. உறுதியான நிலங்கள்கூட சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சூறாவளி மணிக்கு 7 மைல் வேகத்தில் வீசுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வானிலை அவதான நிலையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து நேற்று மூடப்பட்ட அரச பாடசாலை மற்றும் அலுவலகங்கள் இரண்டு நாட்களுக்கு திறக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டடிருந்தது. எனினும், சூறாவளியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் அவற்றை திறப்பதற்கான அறிகுறி தென்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு தொடர் மழை -வானிலை மையம்!

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு தொடர் மழை -வானிலை மையம்!

தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...! 

தென்மேற்கு பருவமழையானது வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அதிகளவில் பெய்து வருகிறது. 

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.
பிரபுதேவா-வின் லக்ஷ்மி பட மேக்கிங் வீடியோ வெளியீடு...!

பிரபுதேவா-வின் லக்ஷ்மி பட மேக்கிங் வீடியோ வெளியீடு...!

பிரபுதேவா நடிப்பில் உருவாகிய லக்ஷ்மி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு....! 

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் தேவி படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், அதன்பிறகு சாய்பல்லவி நடிப்பில் தியா படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ’லக்ஷ்மி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடனக் கலைஞர்களை வைத்து கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளதால், நடிகர் பிரபு தேவாவை வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகள் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக மும்பையைச் சேர்ந்த தித்யா என்ற நடனக் கலைஞரான சிறுமியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பேபி தித்யா ஒரு சிறுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்தியில் நடனத்தை மையப்படுத்தி பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘ஏபிசிடி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘லட்சுமி‘ படமும் நடனத்தை மையமாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தின் இப்படத்தின் டீசர் மற்றும் வீடியோ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மொத்தம் 12 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சர்கார் இசை வெளியீடு எப்போது..! இரசிகர்களை வெளியான முக்கிய தகவல்..!

சர்கார் இசை வெளியீடு எப்போது..! இரசிகர்களை வெளியான முக்கிய தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 

அடுத்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay's Sarkar songs most likely to release on October 2இந்த நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இதுகுறித்த முறையான அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான 'மெர்சல்' படத்தில் பாடல்கள் அனைத்தும் மெர்சலான நிலையில் 'சர்கார்' படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக விஜய்யின் அறிமுக பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
கேராளவிற்கு ரூ.1 கோடி வழங்கியது Lyca Productions!

கேராளவிற்கு ரூ.1 கோடி வழங்கியது Lyca Productions!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவிற்கு Lyca தயாரிப்பு நிறுவனம் ரூ.1 கோடி வழங்கியுள்ளது!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடியினை லைகா ப்ரொடக்சன்ஸ் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாளர்கள் நிஷந்தன் நிருதன் மற்றும் அயூப் கான் ஆகியோர் கேரள முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

கேரளா மாநிலத்தில் பருவமழை சற்று அதிகமாக கருணையினை காட்டிய நிலையில் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாய் உருமாறியது. வாட்டியெடுத்து மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். 


மாநிலத்தில் தற்போது மழை நீர் தேக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. எனினும், ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீள 5 மாதங்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 374 உயிர்களை பலி வாங்கிய கேரளா வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தற்போது சிறப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பி வருகின்றனர். 

கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை சரிசெய்ய பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைபடுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து கேரளாவினை மீட்டெடுக்க உலக மக்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் Lyca Productions ரூ.1 கோடி கேரளா நிவாரண நிதிக்காக அளித்துள்ளது!
செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்த படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
குறிப்பாக இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டர் பெயர்களும், ஒவ்வொரு நடிகருக்கும் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவலும் வெளிவந்தது. 

இதன்படி அரவிந்தசாமிக்கு ஜோடியாக ஜோதிகாவும், சிம்புவுக்கு ஜோடியாக டயானாவும், அருண்விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளதாக விளம்பர போஸ்டர்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அரவிந்தசாமிக்கு அதிதிராவ் ஹைதியும் ஜோடியாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. 

வரதன் மற்றும் பார்வதி கேரக்டர்கள் அரவிந்தசாமி, அதிதிராவ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளதால் அரவிந்தசாமிக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சந்தோஷ் சிவனின் சொக்க வைக்கும் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
29 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!

29 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Price of 12.5 kg gas cylinder increased by Rs.158

Price of 12.5 kg gas cylinder increased by Rs.158

A decision was taken by the Cost of Living Committee to increase the price of a 12.5kg gas cylinder by Rs.158 with effect from tomorrow (25).

This brings the price of a 12.5 kg gas cylinder to Rs.1,696.

The move to allow the price increase follows requests made to the committee by the Litro and Laugfs gas companies on August 21 stating that a price increase was imperative as the price of a metric tonne of gas in the world market had reached USD 590.05 after being USD 469.50 per tonne in March this year.

This is the second occasion the price of gas had gone up this year after it was increased by Rs. 245 in April. However, it should also be noted that the price of a 12.5 kg gas cylinder came down by Rs.138 in June 2018.
காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு பிணை!

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு பிணை!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் இன்று (24) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
x
இலங்கை வாழ் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: நாளை முதல் உயர்வு!

இலங்கை வாழ் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: நாளை முதல் உயர்வு!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றது.

A decision was taken by the Cost of Living Committee to increase the priceஅதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாயாக அதிகரிக்கபடவுள்ளது. அதன் படி நாளை முதல் இதன் விலை 1696 ரூபாயாக இருக்கும்.

ஓகஸ்ட் 21 ம் திகதி லிட்ரோ மற்றும் லாஜ்ப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் குழுவினருக்கு வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விலை உயர்வு அனுமதிக்க நடவடிக்கை எடுத்தது.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயு விலை கடந்த மார்ச் மாதம் 469.50 டொலராக இருந்த நிலையில் தற்போது 590.05 டொலராக அதிகரித்துள்ளமையின் விளைவே இந்த அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம் இரண்டாவது தடவையாக, கடந்த ஏப்ரல் மாதம் 245 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட எரிவாயு விலை பின்னர் ஜூன் மாதம் ரூ .138 குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு" - ராகவா லார​ன்ஸ்

"கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு" - ராகவா லார​ன்ஸ்

சென்னை: கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, பல மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு உதவும் வகையில், அனைத்து மொழி படவுலகினரும் கேரளா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி செய்து வருகின்றனர். 

Raghava Lawrence donates Rs 1 crore for Kerala flood relief இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், 1 கோடி நிதி வழங்க உள்ளதாக நேற்று அறிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’நாளை கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, 1 கோடிக்கான காசோலை வழங்குகிறேன்.
Raghava Lawrence donates Rs 1 crore for Kerala flood relief

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நேரில் உதவி செய்ய, அவரிடம் அனுமதி கேட்டுள்ளேன்’’ என்றார். 

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் அதன் பொது மேலாளர் நிசந்தன் நிருத்தன் 1 கோடி நிவாரணத்தொகையை கேரள முதல்வரிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் பிரதமரும், பாஜவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ம் தேதி டெல்லியில் காலமானார். 

அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பாஜவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்களில் அடைத்து அந்தந்த மாநில பாஜ தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தமிழக பாஜ சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் அஸ்தியை பெற்றுக் கொண்டார். வாஜ்பாயின் அஸ்தி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது அஸ்திக்கு நேற்று காலை முதல் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சக்ரவர்த்தி, பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் டால்பின் தர், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், இளைஞர் அணி செயலாளர் ஜி.கே.எஸ். என்ற சுரேஷ் கருணா, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், பாஜ வர்த்தகர் அணி செயலாளர் சி.ராஜா உள்ளிட்ட பாஜ தலைவர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து காலை 7.55 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜ தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட செயலாளர் ெஜ.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்துக்கும், அஸ்தி கலசத்திற்கும் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மதியம் 1.10 மணியளவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் தயாநிதி மாறன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, ஏ.கே.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் எச்.பி.ஹெண்டே, டைரக்டர் ஆர்.கே. செல்வமணி, தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதன்மை செயலாளர்கள் உஞ்சையரசன், பாவரசு, துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நடிகர் விஷால், ஏ.எம்.விக்கிரமராஜா, டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, தீபா கணவர் மாதவன் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொது மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி ெசலுத்துகின்றனர். மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து 26ம் தேதி சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம், ஈரோடு பவானி, மதுரை ஆகிய 6 இடங்களில் கடலில் ஒரே நேரத்தில் அஸ்தி கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக வந்ததையடுத்து பாஜ தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


கவர்னர் மலர் தூவி மரியாதை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை 5.10 மணியளவில் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். வாஜ்பாய் திருவுருவப்படம், வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சிறிது நேரம் பாஜ தலைவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.