Saturday, September 1, 2018

மறதி ஒரு தேசிய வியாதி!- மாணவி அனிதாவை நினைத்து ஜி.வி உருக்கம்!

மறதி ஒரு தேசிய வியாதி!- மாணவி அனிதாவை நினைத்து ஜி.வி உருக்கம்!

அனிதாவைக் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மறதி ஒரு தேசிய வியாதி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அனிதாவுக்கு நீதி கேட்டு அன்று தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை விரிந்து அரசியல் கட்சியினர் வரை பலரும் களத்தில் போராடினர். வழக்கம்போலவே இன்னொரு பெரிய பிரச்சினை வந்துவுடன் அனிதாவுக்கான போராட்டம் நீர்த்துப்போனது.

நீட் தேர்வால் எம்பிபிஎஸ் கனவு தகர்ந்து போனதால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இன்றுடன் அனிதா இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாணவி அனிதாவை நாம் எல்லோரும் தோதாக மறந்துவிட்டோம்.

"எனக்கு எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது கனவு. நீட் தேர்வு வந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. எனக்காக இல்லையென்றாலும், என்னை மாதிரி குடும்பங்களில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்காகவாவது இனிமேல் நீட் தேர்வை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ஊடகங்களிடம் பேசிய அனிதாவின் வேதனைமிகு வரிகள்தாம் இவை.

அனிதாவைக் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மறதி ஒரு தேசிய வியாதி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், மற்றுமொரு ட்வீட்டில், "நமது அன்புச் சகோதரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவர் வசித்த வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அவர் அனுபவித்த வலி எனக்குப் புரிந்தது. இனி யாருக்கும் இது நடந்துவிடக்கூடாது" எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல்: முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல்: முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இலங்கை மத்திய வங்கி மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு உதவி புரிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையை திருத்தத்திற்கு உட்படுத்துமாறு கோரி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக செயற்பட்ட மூன்று குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பேரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தால் தலா 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ்வரன் வரதநாதன், கதிர்தம்பி சிவகுமார், செல்லையா நவரத்னம் ஆகிய மூன்று குற்றவாளிகளால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வென்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயிஷா ஜினசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதிபதிகள் குழாம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பெண் - கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பு...!

இலங்கை பெண் - கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பு...!

கனடாவில் உள்ள 7 மாகாணங்களுக்கான 19 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்ராறியோ மாகாணத்திற்காக மட்டும் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..

அந்தவகையில் ஒன்றாறியோவின் பிரம்டன் மாநில மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங்கனி குமாரநாயக்கவே இவ்வாறு மேல்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
 • Gregory Cann to the Supreme Court of Prince Edward Island.
 • John Bodurtha to the Supreme Court of Nova Scotia in Halifax.
 • Stephen Hamilton, a judge of the Superior Court of Quebec, to the Court of Appeal of Quebec in Montreal.
 • Sylvain Lussier to the Superior Court of Quebec for the district of Montreal.
 • Bernard Synnott to the Superior Court of Quebec for the district of Montreal.
 • Éric Hardy to the Superior Court of Quebec for the district of Québec.
 • Nathalie Pelletier to the Superior Court of Quebec for the district of Montreal. She fills a new position created under Bill C-44.
 • Alison Harvison Young to the Court of Appeal for Ontario.
 • Barry Tobinto to the Superior Court of Justice in and for the Province of Ontario and a member of the Family Court in London.
 • Judy A. Fowler Byrne to the Superior Court of Justice in and for the Province of Ontario in Brampton.
 • Gillian E. Roberts to the Superior Court of Justice in and for the Province of Ontario in Toronto.
 • Nancy L. Dennison to the Superior Court of Justice in and for the Province of Ontario in Brampton.
 • Suranganie Kumaranayake to the Superior Court of Justice in and for the Province of Ontario in Brampton.
 • Breese Davies to the Superior Court of Justice in and for the Province of Ontario in Toronto.
 • Karen I. Simonsen, a judge of Her Majesty's Court of Queen's Bench for Manitoba, to the Court of Appeal for Manitoba.
 • Michael Kraus to the Court of Queen's Bench of Alberta in Edmonton.
 • Bruce Butler, a judge of the Supreme Court of British Columbia, to the Court of Appeal and a Judge of the Yukon Court of Appeal.
 • Christopher Giaschi to the Supreme Court of British Columbia in Vancouver.
 • Karen Horsman to the Supreme Court of British Columbia in Vancouver.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் அதிரடி உத்தரவு!

அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டாயமாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம், 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில், அரசாங்கம் பல முக்கிய பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற தீர்மானித்திருப்பதால், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு கட்டாயமானது என பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதை தடுக்கும் வகையிலான நிகழ்வுகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம்(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களையும் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று புத்துணர்ச்சியுடன் திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால் தேமுதிக தலைமை அலுவலகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா...!

ஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா...!

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு காய்கரி கடையில் உட்கார்ந்து நடிகை சமந்தா காய்கறி விற்றார். 

இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியதால் சமந்தா கையினால் காய்கறியை வாங்க கூட்டம் அலைமோதியது. 

இந்த காயகறி விற்கும் பணத்தை அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கவிருப்பதாக செய்திகள் பரவியதால் சமந்தாவிடம் அதிக விலை கொடுத்து மக்கள் காய்கறி வாங்கி சென்றனர்.

சமந்தா காய்கறிகளை விற்றதால் ஒருசில நிமிடங்களில் அந்த கடையில் உள்ள அனைத்து காய்கறிகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் சமந்தா ஏழை எளிய மக்களின் நலனிற்கு வழங்கியுள்ளார். 

ஏற்கனவே நடிகை சமந்தா 'பிரதியூஷா' என்ற அமைப்பின்மூலம் இதயநோய் பாதித்த பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்கள் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: நானும் விவசாயி தான், விவசாயம் எவ்வளவு கடினமான தொழில் என்பதையும், விவசாயிகள் வாழ்வில் எவ்வளவு துன்பம் என்பதையும் நான் நன்கு அறிவேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசினார். 

விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

மேலும் கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.
பிளாஸ்டிக் அல்லாத பொருட்கள் தயாரிக்க அரசு ஊக்கத்தொகை வழங்கும்: அமைச்சர் சம்பத்

பிளாஸ்டிக் அல்லாத பொருட்கள் தயாரிக்க அரசு ஊக்கத்தொகை வழங்கும்: அமைச்சர் சம்பத்

சென்னை: பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, பிளாஸ்டிக் அல்லாத பொருட்கள் தயாரிப்பதற்கான வழிமுறைகளை அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் சம்பத் கூறினார். 

மேலும் பிளாஸ்டிக் அல்லாத பொருட்கள் தயாரிக்க அரசு ஊக்கத்தொகை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
பிரதமரை கொல்ல சதியா...! அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்..!

பிரதமரை கொல்ல சதியா...! அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்..!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்து சிட்னியில் கைதான இலங்கையர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A Sri Lankan man has been charged with terrorism-related offences in Sydney
அவுஸ்திரேலிய காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 25 வயதான மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையரே நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா கென்சிங்டனில் உள்ள நியூ சௌத் வேள்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

பல்கலைக்கழக ஊழியர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவரின் இருப்பிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இலங்கையர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்க்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் உட்பட பலர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தமை, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவரிடமிருந்து பல திட்டங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், அவர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.isis
நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு...!

நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு...!

கோதுமை மா கிலோ கிராமின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலையுடைய மருந்துகளின் விலை குறைப்பு!

அதிக விலையுடைய மருந்துகளின் விலை குறைப்பு!

அதிக விலை கொண்ட 10 புற்றுநோய் மருந்து, நீரிழிவு (இன்சுலின்), ஆஸ்த்மா உள்ளிட்ட 13 மருந்து, 2 வைத்திய உபகரண விலைகள் நள்ளிரவு முதல் குறைப்பு.

Gazette issued to reduce prices of 10 high-cost cancer drugs, 13 selected medicinal products & 02 medical equipments - Minister of Health

ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு மே.தீவுகள் செல்லும் இங்கிலாந்து....!

ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு மே.தீவுகள் செல்லும் இங்கிலாந்து....!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு, கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவனையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது.

இதற்கமைய, எதிர்வரும் ஆண்டு இரு அணிகளுக்கிடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

ஜனவரி மாத நடுப்பகுதியில், மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் மேற்கிந்திய தீவுகள் அணி, மார்ச் மாதம் வரை அங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி மாதம் 23ஆம் திகதி பார்படோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சுரங்கபாதை அமைப்பு : வலுவான ஆலோசனை வேண்டும்: ரொறொன்ரோ மேயர்

சுரங்கபாதை அமைப்பு : வலுவான ஆலோசனை வேண்டும்: ரொறொன்ரோ மேயர்

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பு குறித்து, ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கருத்து தெரிவித்துள்ளார்.

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முதற்படியில், ஒன்ராறியோ அரசாங்கம் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி, “ரொறொன்ரோ போக்குவரத்து ஆணையத்தை கட்டுப்படுத்தும் எந்த உத்தேசமும் வலுவான ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மாகாணம் இத்தகைய ஒரு திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக உருவாக்க முடியாது” என கூறியுள்ளார்.

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பின், சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு ஆலோசனை குழுவொன்றை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, August 31, 2018

என்ன ஒரு அழகு...! இந்த பெண்களின் நடிப்பு! அசந்து போயிடுவீங்க!

என்ன ஒரு அழகு...! இந்த பெண்களின் நடிப்பு! அசந்து போயிடுவீங்க!

நடிப்பு திறமையை வெளிகாட்ட மியூசிக்கலி பெண்களை கட்டி போட்டு வைத்த ஒரு ஆப்பாக உள்ளது.

பாதி பெண்கள் போன்களை எந்த ஆப்பிற்காகவே உபயோகின்றனர் என்றே கூறலாம். அந்த அளவு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறித்த காணொளியில் பெண் அழகான நடிப்பு திறமை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகம்!

ரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகம்!

ரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டத்தை கனேடிய நகர்ப்புற திட்டமிடல் அதிகாரியான ஜெனிபர் கீஸ்மாட் முன்வைத்துள்ளார்.

இதில் கிங் ஸ்ட்ரீட் போக்குவரத்து திட்டத்தை நிரந்தரமாக வைத்திருப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன் ஸ்கார்பரோ பகுதி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்குள்ள சுரங்க பாதையை விருத்தி செய்து 11 கிலோமீற்றர் போக்குவரத்தில் 3 தரிப்பிடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்திகேயனையே மிஞ்சிய மகள்...! இந்த வயதில் இவ்வளவு பெரிய சாதனை...!

சிவகார்திகேயனையே மிஞ்சிய மகள்...! இந்த வயதில் இவ்வளவு பெரிய சாதனை...!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்கள், ரசிகைகள் பெருகிவிட்டார்கள். ஏற்கனவே அவர் டிவி நிகழ்ச்சி மூலம் பல மனங்களை ஈர்த்துவிட்டார்.

அவரின் நடிப்பில் சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தன் நண்பன் அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை அவரும் அவரின் மகள் ஆராதனாவும் இணைந்து பாடியுள்ளனர். அண்மையில் வெளியான அந்த வீடியோ பலரையும் ஈர்த்தது.

இந்நிலையில் இப்பாடல் வெளியான 117 மணிநேரத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளதாம்.
விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா...! யாருடைய படத்தில் தெரியுமா?

விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா...! யாருடைய படத்தில் தெரியுமா?

விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று படங்களில் இணைந்து நடித்தவர் சமந்தா. 

இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் சமந்தா நாயகியாக நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை தான். இருப்பினும், அவரது புதிய படத்தில் நடிப்பது சம்பந்தமாக யாரும் என்னை அணுகவில்லை. 

விஜய்யுடன் மூன்று படங்களில் நடித்துள்ள நான் அஜித்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 

அதன்காரணமாக அஜித் ரசிகர்கள் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். 

இந்நிலையில், மீண்டும் நான் விஜய்யுடன் நடிப்பதாக தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என என கூறியுள்ளார்.
அரசியலுக்கு நான் பொருத்தம் இல்லை : ஸ்ரேயா ஓபன் டாக்

அரசியலுக்கு நான் பொருத்தம் இல்லை : ஸ்ரேயா ஓபன் டாக்

நடிகை ஸ்ரேயா, கொஞ்ச காலமாக தமிழ் பட உலகம் பக்கம் தென்படாமலேயே இருந்தார். 

காரணம், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததுதான். நீண்ட இடைவெளிக்கு பின், 'நரகாசுரன்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். 

இந்தப் படத்தின் கதாநாயகன் அரவிந்தசாமி. மீண்டும், கோலிவுட்டுக்கு திரும்பி இருப்பது குறித்து, ஸ்ரேயா கூறியதாவது:

நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தது கிடையாது. 

ஆனால், சிவாஜி படத்தில் அவரோடு சேர்ந்து நடித்தேன். படபிடிப்பு முழுமையாக முடியும் வரையில் என்னால் நம்பவே முடியவில்லை. ரஜினியைப் பொறுத்த வரை, அவர் மிக எளிமையானவர் என கேள்விபட்டிருக்கிறேன். 

லைட்மேன் முதல் பெரிய நடிகர், -நடிகைகள் வரை எல்லோரையும் சமமாகவே மதிப்பார். அவரைப் போன்ற ஒருவரை வாழ்நாளில் சந்தித்தது இல்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

நடிகைகள் பலரும் ஏற்கனவே அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள். 

ஆனால், அரசியலுக்கு நிறைய நெளிவு-சுளிவுகளும் சூட்சமங்களும் தேவை. அவை, எனக்கும் கொஞ்சமும் இல்லை என்பதால், நான் அரசியலுக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன் என்பது என்னுடைய முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.
உணவு கூட இல்லாமல் இவ்வளவு கஷ்டப்பட்டதா நடிகர் சென்ட்ராயன் குடும்பம்?

உணவு கூட இல்லாமல் இவ்வளவு கஷ்டப்பட்டதா நடிகர் சென்ட்ராயன் குடும்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகர் சென்ட்ராயன் இன்று தன் குடும்பம் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார்.

"நான் சோறுக்காக பலநாள் எங்கியுள்ளேன். பலநாள் என்பதை விட பல வருடம் என்று தான் சொல்லவேண்டும்.

அப்போது உருண்டை சோறு, கேப்பை களி ஆகியவை தான் இருக்கும்."

"நான் அம்மாவிடம் சோறு வேண்டும் என பலமுறை கேட்டிருக்கேன். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தான் சோறு செய்வர்கள். 

அப்போது மட்டும் தான் சாப்பிட்டிருக்கேன். அது படிபடியாக மாறி தற்போது தினமும் சோறு கிடைக்கிறது" என சென்ட்ராயன் கூறினார்.
விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை!

விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை!

Tamil Sports News - இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் பெற்ற இந்திய வீரர்களுள் விராட் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆ வது போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் விளையாடிவரும் இந்தியா சற்றுமுன்னர் வரை 4 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் விராட் கோஹ்லி 46 ஓட்டங்களுடன் அட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கு: நளினி உட்பட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு!

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கு: நளினி உட்பட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு!

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மருமகள் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 5 கோடியே 37 இலட்சம் ரூபாய் சொத்தினையும், அமெரிக்காவில் 3 கோடியே 28 இலட்சம் ரூபாய் சொத்தினையும் பெற்றுள்ளதாகவும் ஆனால் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் மீது வருமானவரித்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர்கள் 3 போரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூடு...! 20 வயது இளைஞர் பலி..!

ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூடு...! 20 வயது இளைஞர் பலி..!

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

Toronto police say a man in his 20s has been killed after a shooting in Scarborough early Friday morning.

Toronto police say a man in his 20s has been killed after a shooting in Scarborough early Friday morning.வார்டன் அவனியூ பகுதிக்கு அருகே வடக்கு டன்போர்ட் வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் குறித்த இளைஞர் மீது பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இராஜினாமா!

சர்ச்சைகளுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இராஜினாமா!

அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் முன்னர் அறிவித்தமைக்கு அமைய இன்று (வெள்ளிக்கிழமை) தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பிரதமராக பதவி வகித்த டேர்ன்புல், லிபரல் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும், பிரதமர் பதவிக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடாத சூழலில், இவரை தொடர்ந்து எதிர்த்து வந்த ஸ்கொட் மோறிசன் பிரதமராக பதவி ஏற்றார்.

இந்நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கப் போவதாக அவுஸ்ரேலியா முன்னாள் பிரதமர் டேர்ன்புல், கடந்த வாரம் அறிவித்தார்.

இதையடுத்து, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் டொனி ஸ்மித்திடம் கையளித்துள்ளனர்.
தென்கொரியாவின் சிறப்புத் தூதுவர் வடகொரியாவிற்கு விஜயம்!

தென்கொரியாவின் சிறப்புத் தூதுவர் வடகொரியாவிற்கு விஜயம்!

வட – தென் கொரிய தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்றை நடத்த எதிர்பார்த்துள்ள நிலையில், தமது நாட்டின் விசேட அதிகாரியொருவரை பியாங்யோங்கிற்கு அனுப்பவுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
North Korean leader Kim Jong Un, left, met South Korean President Moon Jae-in for a historic border summit in Apr Read more at https://www.channelnewsasia.com/news/asia/south-korea-says-sending-special-envoys-to-north-korea-to-10671382
செப்டெம்பர் 5ஆம் திகதி குறித்த அதிகாரியை அனுப்பிவைக்கவுள்ளதாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. இதன்போது கொரிய உச்சிமாநாடு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கொரிய தீபகற்பத்தின் அமைதி, நீடித்த சமாதானம் மற்றும் அணுவாயுதத்தை முற்றாக ஒழித்தல் ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தென்கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டு அதிகாரியை அனுப்புவது குறித்து வடகொரியாவுக்கு அறிவித்துள்ளதாகவும், அதனை வடகொரியாவும் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி, குறித்த அதிகாரி பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

கடந்த 2007ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடகொரியாவிற்கு செல்லவுள்ள முதலாவது தென்கொரிய ஜனாதிபதியாக மூன் ஜே இன் காணப்படுகிறார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, எதிர்வரும் கொரிய உச்சிமாநாடு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
3 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் அச்சுவேலி பகுதி காணி விடுவிப்பு!

3 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் அச்சுவேலி பகுதி காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்..

இந்த நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹபொல புலமைப்பரிசில் நிதியத்துக்குப் பெயர் மாற்றம்!

மஹபொல புலமைப்பரிசில் நிதியத்துக்குப் பெயர் மாற்றம்!

மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்குத் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு நிறுவனங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை இரத்து செய்து, அரச வங்கியொன்றில் அதனை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் முதலீடு செய்தமையால் 2500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சிறப்புக் கொடுப்பனவு!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சிறப்புக் கொடுப்பனவு!

இலங்கை போக்குவரத்து சபை இலாபம் பெற்று வருவதால், அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா சிறப்பு கொடுப்பனவை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு சம்பள முறை, அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பன ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறி்ப்பிட்டார்.
தாதியர் அதிகாரிகள்- ஒரு நாள் வேலைநிறுத்தம்!

தாதியர் அதிகாரிகள்- ஒரு நாள் வேலைநிறுத்தம்!

தாதியர் அதிகாரிகள் இன்று ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட வைத்தியசாலைகளின் தாதியர் அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு வழங்கப்பட வேண்டிய, மேலதிக கொடுப்பனவு நிலுவை மற்றும் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாயாக காணப்பட்டது.

அத்துடன், கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது.

கடந்த 14 நாள்களில், டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1 ரூபா 32 சதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாவின் மதிப்பு 7. ரூபா 73 சதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, August 30, 2018

தூக்கத்தை கலைத்த தொலைபேசி உரையாடல்...! அக்காவை கழுத்தை நெரித்து கொன்ற தம்பி

தூக்கத்தை கலைத்த தொலைபேசி உரையாடல்...! அக்காவை கழுத்தை நெரித்து கொன்ற தம்பி

உறங்கும் போது தொலைபேசியில் பேசியதால், அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தனது நண்பருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் உறங்கச் சென்ற அவரது 16 வயதான தம்பிக்கு மிகவும் தொந்தரவாக இருந்துள்ளது. 

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த திங்கள் அன்று நடந்த சண்டையில், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துள்ளான். இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார். உடனே தனது நண்பர்களை அழைத்து, உடலை அப்புறப்படுத்தியுள்ளான். 

இதனை அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கவனித்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனை கைது செய்தனர்.
பிராய்ச்சியை மகத் சந்தித்தாரா? மகத்தை மன்னித்து பிராய்ச்சி ஏற்றுக்கொண்டாரா?நடந்தது என்ன?

பிராய்ச்சியை மகத் சந்தித்தாரா? மகத்தை மன்னித்து பிராய்ச்சி ஏற்றுக்கொண்டாரா?நடந்தது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத் மற்றும் யாஷிகா இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. 

இந்த காதலை இருவருமே ஒப்புக்கொண்டனர். மகத் ஏற்கனவே பிராய்ச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இந்த புதிய காதல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மகத் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பிராய்ச்சியை மகத் சந்தித்தாரா? மகத்தை மன்னித்து பிராய்ச்சி ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன

இந்த நிலையில் மகத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிராய்ச்சியுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'பிராய்ச்சிதான் எனது உலகம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து மகத்-பிராய்ச்சி மீண்டும் சேர்ந்துவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர்..

ஆனால் இந்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றும் பிராய்ச்சி தற்போது துபாயில் இருப்பதாகவும், அவர் இந்தியா திரும்பிய பின்னரே அவரை மகத் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on
கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று (வியாழக்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் கொலைசெய்யப்பட்ட அன்று அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுள்ளது.

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக அவரது சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிஸாருக்குத் தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்புக் கமெராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சமந்தாவை உதாரணம் காட்டி திருமணம் ஆன நடிகைகள் பற்றி விஷால் பளிச்

சமந்தாவை உதாரணம் காட்டி திருமணம் ஆன நடிகைகள் பற்றி விஷால் பளிச்

முன்னணி நடிகைகள் திருமணத்துக்கு பிறகு ஹீரோயின் அந்தஸ்து இழந்து விடுகின்றனர். 

ஆனால் சமந்தா அதை உடைத்திருக்கிறார் என விஷால் கூறினார். இதுபற்றி சென்னையில் நேற்று நடந்த ‘இரும்புத்திரை’ பட 100வது நாள் விழாவில் அவர் கூறும்போது,

’சில படங்கள் வெற்றி அடைந்தாலும் சில படங்கள்தான் திருப்புமுனையாக அமையும். அப்படித்தான் இரும்புத்திரை எனக்கு அமைந்தது. கதைகேட்கும்போதே எனது சினிமா வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும் என்று எண்ணினேன். 

நான் முதலில் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். எனது முதல் சம்பளம் 100 ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு ஷேவிங் கிட் வாங்கிக்கொடுத்தேன். 

இப்படம் பெரிய வெற்றி பெற்றதற்கு அர்ஜூன்தான் காரணம். சினிமா துறையில் கதாநாயகிக்கு திருமணம் ஆகிவிட்டால் அதோடு நடிக்க வரமாட்டார்கள். 

அப்படி வந்தாலும் அக்கா, அம்மா கதாபாத்திரத்தில்தான் நடிப்பார்கள். அந்த நம்பிக்கையை உடைத்தவர் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் அவர் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். 

இவ்வாறு விஷால் கூறினார். நிகழ்ச்சியில் பட இயக்குனர் மித்ரன், நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. ஹீரோ விஷாலுக்கு பிறப்பிலேயே கண்பார்வையற்ற கனடாவை சேர்ந்த அவரது ரசிகை அக்‌ஷயா கேடயம் வழங்கினார்.
பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்...! புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை... சுமந்திரன்

பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்...! புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை... சுமந்திரன்


சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமனது.

மேலும், சிங்கள பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொண்டு, பிற மக்களின் சீர்திருத்தம் மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி: 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர்!


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீரர் ஜின்ஸன் யோன்சன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் குறித்த தூரத்தை 3 நிமிடம் 44.72 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் காரணமாக இந்தியா தற்போது 12 தங்கம் 20 வெள்ளி 25 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 57 பதக்கங்களை வென்று 8 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடசென்னை குறித்து சுவாரஸியமான செய்தி வெளியானது!

வடசென்னை குறித்து சுவாரஸியமான செய்தி வெளியானது!

வெற்றிமாறனின் கனவுப்படம் வடசென்னை குறித்து சுவாரஸியமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

வடசென்னை படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். பல முக்கிய கதாபாத்திரங்ள் இருந்தாலும் வடசென்னையின் முப்பதுவருட காலம் அன்பு கதாபாத்திரத்தை மையப்படுத்தியே சுழல்கிறது. வடசென்னையை மூன்று பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். முதல்பாகம் அக்டோபர் 17 தனுஷின் பிறந்தநாளில் வெளியாகிறது.

வெற்றிமாறன் படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைப்பார். இந்தமுறை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னை இசை குறித்து பலரும் கேட்கிறார்கள். சுவாரஸியம் நிறைந்த ஆல்பம் ஒன்றை தயார் செய்து வருகிறோம் என ட்விட்டதில் குறிப்பிட்டிருப்பவர், இசையமைப்பாளர் தனுஷின் ஒரு மகிழ்ச்சியான இணைப்பு ஒன்றும் ஆல்பத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பணிகள் செய்து வருகிறார். ஆனால் இதுவரை இசையமைத்தது இல்லை. சந்தோஷ் நாராயணனின் ட்வீட் அந்த ஏரியாவிலும் தனுஷ் கால் பதித்திருப்பதாக கூறுகிறது. 

விரைவில் அந்த சர்ப்ரைஸ் என்ன என்பதை படக்குழுவே வெளியிடும் என்று நம்பலாம்.
சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.

தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள் இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . 

தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைப்பேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் .

எதிர்வரும் சமூகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது ஏ9 வீதியுடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவேண்டும், மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் மக்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும் , தமது லீலைகளை வெளியிடுவதால் ஏனைய பெண்களின் நிலை பாதிக்கப்டுமென தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் என்ற பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஞரையும் கையளித்தனர்.

மகஞரினை பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் , உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத்தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

குடிநீர்ப் போத்தல் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குடிநீர்ப் போத்தல் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மேகான்,

புல்லுமலை தண்ணீர் தொழிற்ச்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல. புல்லுமலை கிராமமானது குடி தண்ணீர் இல்லாத மிகவும் வறட்சியான வானத்தை நம்பி வாழும் கிராமமாகும். இந்த நிலையில் நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான நீர் உறிஞ்சப்படுமானால் சிறு குளங்களும் வற்றி வரண்ட நிலமாக மாறி விடும் நிலை ஏற்படும்.

இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல முறை எடுத்துக் கூறியும் அவர்கள் கவனத்திற் இதனை கொள்ளவில்லை.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை கண்டித்தே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி மாவட்டம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

அத்துடன் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வர்த்தக வணிக வியாபாரிகள் அன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும், பொது மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
அரசியலில் குதித்தாரா விஷால்! - “மக்கள் நல இயக்கம்”

அரசியலில் குதித்தாரா விஷால்! - “மக்கள் நல இயக்கம்”

“மக்கள் நல இயக்கம்” என ரசிகர் மன்றத்திற்கு பெயர்சூட்டி, கொடியையும் அறிமுகப்படுத்தினார் நடிகர் விஷால்!

"அணி சேர்வோம், அன்பை விதைப்போம்" என்ற வாசகத்துடன் கூடிய தனது ரசிகர் மன்ற கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஷால். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொடி மற்றும் இயக்கத்தின் பெயரினை அறிவித்தார்.

இயக்கத்தின் பெயர் அறிமுக விழாவில் அவர் பேசியதாவது...

"நிஜ வாழ்வில் நல்லது செய்ய விரும்பும் அனைவரும் அரசியல்வாதிகளே. மக்கள் பிரச்சனையினை நேரில் சந்திது தீர்த்து வைப்பதே அரசியல் ஆகும்.

ரசிகர்கள் மற்றும் தன்நம்பிக்கையே எனது சொத்து. எனக்கு கார் மட்டுமே சொந்தமாக உள்ளது, சொந்த வீடுகூட இல்லை. எனக்கு சொத்த என சொல்லிக்கொள்ள இருப்பது எனது ரசிகர்கள் மட்டுமே. நல்ல ரசிகர்களை பார்க்கும் போது என் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வீதியில் நடக்கும் பிரச்சணைகளை பார்த்தும் கேட்காமல் விட்டுவிடுபவர் பினத்திற்கு சமம். என தெரிவித்துள்ளார்.