Friday, September 7, 2018

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!


 யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலருக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பால் பக்கெட்டில் எதையோ கலந்து கொடுத்துள்ளனர் - விமல் வீரவன்ச

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பால் பக்கெட்டில் எதையோ கலந்து கொடுத்துள்ளனர் - விமல் வீரவன்ச

பொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும் காரணம் என பொது எதிரணி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியது. 

பாராளுமன்றத்தில் இன்று கணக்காய்வாளர் தலைமை அதிகாரியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் பொது எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த ஐந்தாம் திகதி பொது எதிரணி நடத்திய வெற்றிகரமான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாளிகாவத்தை பகுதியில் அரசியல்வதியின் ஆதரவாளர்கள் சிலர் மூலமாக பால் பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பால் பக்கெட்டுக்களில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதோ கலக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை பருகிய எமது ஆதரவாளர்கள் வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் இவற்றை செய்துள்ளது என குறிப்பிட்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது - செஹான் சேமசிங்க

கூட்டு எதிர்க்கட்சியின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் போது கலந்து கொண்ட ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கட்டுக்களை அருந்தியவர்கள், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் இருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் என்று பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். 

இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு இனந்தெரியாத குழுவொன்றால் விசம் கலந்த பால் பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

பேரணியில் கலந்து கொண்டு பசியுடன் இருக்கும் மக்களுக்கு இதுபோன்ற செயலொன்றை செய்ததை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
நிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் விசனம்

நிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் விசனம்

வரட்சி காரணமாக கிளிநொச்சி, வட்டக்கச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

குறித்த வரட்சியினால் பாதிக்கப்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு கிராம மட்ட அமைப்புக்களின் மூலம் வரட்சி நிவாரணமாக 6.5 கிலோரோம் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. 

இந் நிலையில் கிராம மட்ட அமைப்புக்களினூடாக வழங்கப்படும் நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக வட்டக்கச்சி பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனிடம் வினவியபோது,

அரசாங்க அதிபரின் அனுதியுடன் அவசரகால  தேவைக்காக மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசிகளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.

இந் நிலையில் ஓரிரு இடங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

எனினும் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் காணப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக குறித்த அரிசிகளை மீள் வாழங்கி வேறு அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்க தமிழக அரசு கோரிக்கை!

திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்க தமிழக அரசு கோரிக்கை!

உலகளாவிய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையில் தமிழ் வளர் மையம் என்ற அமைப்பு தமிழ் வளர்ச்சத்துறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இசை மரபுகளையும் அதன் பண்பாட்டுக் கூறுகளையும் உலகத்தமிழர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பாக அரசின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசுக்கு மூன்று நாட்கள் (07.09.2018 - 09.09.2018) அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

பிரான்சு நாட்டின் முக்கிய மாநிலமான சென்டர் வால்டி லோரி, தமிழ்நாட்டுடன் பண்பாட்டு பரிமாற்றத்தில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் பண்பாட்டுத்துறை இந்த மாநிலத்துடன் இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பாக 07.09.2018 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.

தமிழக முதல்வர் அறிவிப்பான சொற்குவை திட்டம் தொடர்பாக பிரான்சு நாட்டின் தமிழ் வல்லுனர்களை சந்திக்கும் நிகழ்வும் இந்த பயணத்தில் நடைபெறவுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பாரீசு நாட்டு கிளையான பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்பாணம் பல்கலைகழகம் இணைந்து நடத்தும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டினை அமைச்சர் அவர்கள் 08.09.2018 அன்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றார்.

ஐரோப்பிய கண்டத்திலுள்ள 20 நாடுகளைச் சேர்ந்த பெரும் தமிழறிஞரகள், பேராசிரியப் பெருமக்கள் ஆகியோர் கலந்துக்கொள்ளும் மாபெரும் தமிழ் மாநாட்ட அமைச்சர் துவங்கி வைத்து திறுக்குறளை உலகின் நூலாக அறிவிக்கக்கோரும் விண்ணப்பத்தை யுனெஸ்கோவின் இயக்குநரிடன் இம்மாநாட்டில் அளிக்கவுள்ளார்.

திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்கக்கோரும் சான்றுகள் தமிழக அரசின் சார்பில் யுனெஸ்கோவில் சமர்பிக்கப்படவுள்ளது என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இந்திய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று

இங்கிலாந்து இந்திய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியும், ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது.

கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இதனால் தொடரையும் இலக்க நேரிட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே தவிர மற்ற வீரர்கள் எதிர்பார்த்தப்படி ஆடவில்லை. 

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய அணியின் மோசமான செயல்பாட்டிற்கு முன்னால் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இந்நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாகா ஹனுமா விகாரி சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடியது. அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் இதே மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தால், இந்திய அணியின் வெற்றி தூரம் இல்லை. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் நிறைவு செய்யலாம்.

அதேவேளையில், இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், நல்ல மனநிலையில் உள்ளனர். இந்த அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக்கின் கடைசி போட்டி என்பதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணி வெற்றி பெற முயற்சி செய்யும். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கும்.
பசிலை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் - மஹிந்தவிடம் எதிரணியினர் அவசர கோரிக்கை

பசிலை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் - மஹிந்தவிடம் எதிரணியினர் அவசர கோரிக்கை

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை உடனடியாக பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டு எதிரணியின் எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து, எதிரணியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளனர்.

இதன்போது, எதிர்ப்பு பேரணி பெரியளவில் வெற்றிப்பெறவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிரணியில் உள்ள பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலரே ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் இந்த பாரிய மக்கள் கூட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்து ஜனாபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக எண்ணம் இருந்தால் உடனடியாக பசில் ராஜபக்ஷவை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியினர் சில கூறிய போது, பொதுவேட்பாளர் யார் என்பதை அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது என மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ்

இலங்கை மற்றும் மாலைத் திவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் ( Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் னடந்த மே மாதம் 25ம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வௌிவிவகார சேவையில் சிரேஷ்டத்துவம் உள்ளவராக அறியப்படும் அலாய்னா பி டெப்லிட்ஸ், அமெரிக்க அரசுத்துறை திணைக்களத்தில் கடந்த 1991ம் ஆண்டு பணியில் இணைந்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய வடமாகாண முதலமைச்சர்

நீதிமன்றத்தில் ஆஜராகிய வடமாகாண முதலமைச்சர்


வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பிலேயே அவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். 

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். 

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்தார். 

இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த ஆகஸ்ட் 08 ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீமராஜா திரைப்படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியானது!

சீமராஜா திரைப்படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக்கன்னி பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. 

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். வரும் செப்டம்பர் 13-ஆம் நாள் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக்கன்னி வீடியோ பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதிரடி காட்டும் ‘நோட்டா’ படத்தின் தமிழ் ட்ரைலர்

அதிரடி காட்டும் ‘நோட்டா’ படத்தின் தமிழ் ட்ரைலர்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வருகிறது. 

இந்த படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா, நாயகியாக மெஹ்ரீன் மற்றும் சத்யராஜ், நாசர் என பலர் நடிகின்றனர். படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சாந்தா ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ், இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

அரசியலை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘நோட்டா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலர், படத்தின்' நாயகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். நோட்டா என்றாலே தமிழகத்தில் எப்பொழுதும் ஒரே பரபரபப்பு தான். அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க!!

வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க!!


வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க!!

மேஷம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:
இன்று உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:
இன்று உடல் உழைப்பை அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:
இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:
இன்று அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:
இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். மனோ திடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:
இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
வடக்கின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம் !!!

வடக்கின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம் !!!

வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர்,

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருப்பதாகவும். விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழில்நுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருக்கின்றது.

மேலும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவர் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை கிடைப்பதற்கு வடமாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பருந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதற்கு ஆளுனர் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்தார்.


Thursday, September 6, 2018

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி !!!

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி !!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி

இச் சுற்று நிருபத்தின் பிரகாரம் 07.01.2016 முதல் 31.12.2016 வரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவு நிலுவை இது வரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து தாதியர்கள் நிறைவுகான் துணை வைத்திய சேவையினருடன் இணைந்து இன்று (06.09.2018) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
வைத்தியசாலையில் பல்வேறு சேவைகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் அவரச சிகிச்சைகளில் தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய தீர்வு விரைவில் கிடைக்கவிடின் நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.




ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி - அற்புதம்மாள்

ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி - அற்புதம்மாள்

ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

28வது ஆண்டாவது இந்த வழக்கை முடித்து வைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது மகிழச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்கள் விடுதலை தொடர்பில் இரு தடவை அறிவித்திருந்தார் இதன் காரணமாக இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்திக்கப்போகின்றேன் அந்த சந்திப்பின் போது விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பேன் எனவும் அற்புதம்
 ராஜீவ் காந்தி கொலை ; 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்

ராஜீவ் காந்தி கொலை ; 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ; கொண்டாடும் ஓரின சேர்க்கையாளர்கள்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ; கொண்டாடும் ஓரின சேர்க்கையாளர்கள்

ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், இந்த சமூகத்தில் பிறந்த அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை உள்ளது. வயது வந்த ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவுகொள்வது குற்றமாகாது. ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது. ஓரின சேர்க்கை குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியது. 


இந்த தீர்ப்பை அடுத்து நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இனிப்புக்கள் வழங்கி, தங்கள் மகிச்சியை கொண்டாடி வருகின்றனர். அதில் சில காணொளிகள் இணைக்கப்பட்டு உள்ளது. 
People in Mumbai celebrate after Supreme Court decriminalises and legalises homosexuality

View image on TwitterView image on TwitterView image on Twitter
Celebrations in Chennai after Supreme Court legalises homosexuality.

View image on TwitterView image on TwitterView image on Twitter
Delhi: Celebrations at The Lalit hotel after Supreme Court legalises homosexuality. Keshav Suri, the executive director of Lalit Group of hotels is a prominent LGBT activist.

Celebrations at Delhi's The Lalit hotel after Supreme Court legalises homosexuality. Keshav Suri, the executive director of Lalit Group of hotels is a prominent LGBT activist.


Celebrations in Karnataka's Bengaluru after Supreme Court legalises homosexuality.