Saturday, September 22, 2018

நீரில் முழ்கிய மூச்சு தினறல் ஏற்பட்ட உயிரிழந்தார்... வெளியானது மருத்துவ அறிக்கை..!

நீரில் முழ்கிய மூச்சு தினறல் ஏற்பட்ட உயிரிழந்தார்... வெளியானது மருத்துவ அறிக்கை..!

திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றிய விரிவுரையாளரான செந்தூரன் போதநாயகி என்பவர் நேற்று முன்தினம் திருகோணமலை சங்கமித்த கடற் பகுதியில் சடலாமக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இச் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் விஷேட சட்ட வைத்திய நிபுணர் உ.மயூரதன் தலமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் இப் பிரேத பரிசோதனையானது இடம்பெற்றிருந்தது. 

இதன்படி குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாகவும் இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் நீரில் முழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுதிறனானிலாயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தந்து மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வர்த்தக போர் : அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த  சீனா

மீண்டும் வர்த்தக போர் : அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த சீனா

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நடைபெற இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன துணைப் பிரதமர் லியூ-ஹி, அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருந்தார். 

அதற்கு முன்னதாக சீன தூதுக்குழுவும் வாஷிங்டன் செல்ல இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன.

இதன் எதிரொலியாக, சீன துணைப் பிரதமரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தூதுக்குழு நடத்த இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முடிவெடுக்காது மக்களே முடிவெடுப்பார்கள் - வேறு நாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை - மஹிந்த

இந்தியா முடிவெடுக்காது மக்களே முடிவெடுப்பார்கள் - வேறு நாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை - மஹிந்த

தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம் எனக் கூறினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் எங்களை நிர்வகிப்பது வேறு நாடுகள் அல்ல. எமது நாடே நிர்வகின்றது. இலங்கையைத் தவிரந்த வேறு நாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என கூறினார்.

மேலும் எங்களுக்கு இலங்கை மட்டுமே, ஏனையை நாடுகளை வளப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. இதுதான் எமது கொள்கை என்கிறார்.

தற்போதை பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதில், இந்தியாவில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் “கடந்த காலத்தை குறைகூறிக்கொண்டிந்தால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் பெற்றக் கடனை நாங்கள் திருப்பிச் செலுத்தினோம். நாங்கள் சந்திரிக்கா, ரணிலின் ஆட்சிக்கால குறைகளைக் கூறிக்கொண்டிருந்தால் யுத்தத்தை செய்திருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
முடியாவிட்டால் அரசை எம்மிடம் ஒப்படையுங்கள் – மஹிந்த

முடியாவிட்டால் அரசை எம்மிடம் ஒப்படையுங்கள் – மஹிந்த

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டில் சரியான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார சிக்கலுக்குக் காரணம்.

நான் அரசை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்று 131.40 ரூபாவாக இருந்தது. தற்போது அது 170 ரூபாவையும் தாண்டியுள்ளது.

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசை மீண்டும் எம்மிடம் ஒப்படையுங்கள்.

இந்த ஊடக சந்திப்பில் பொது எதிரணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் ரயில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் திடீரென தீப்பிடித்ததில் பதற்றம்....

கொழும்பில் ரயில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் திடீரென தீப்பிடித்ததில் பதற்றம்....

கொழும்பு – தெமட்டகொட ரயில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு தரித்து வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்

வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்


காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தின் முதலாவது  டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாகி உள்ளது . இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.


தமிழ் பெண் விரிவுரையாளரின் சடலம் தொடர்பில் அதிரடி உத்தரவு

தமிழ் பெண் விரிவுரையாளரின் சடலம் தொடர்பில் அதிரடி உத்தரவு

திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய பெண் விரிவுரையாளரின் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளன,

திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன,

பெண்ணின் சடலம் அவரின் கணவரினால் இதன் போது அடையாளங்காணப்பட்டுள்ளது,.

அத்துடன் நீதவான் குறித்த பெண் விரிவுரையாளரின் உறவினர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

இந்த விசாரணைகளின் போது பெண்ணின் மரணம் குறித்து எந்த விடயத்தையும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை என செய்தியாளர் கூறினார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரது பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவரின் ஊடாக இடம்பெற வேண்டும் என நீதவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவர் உள்ள வைத்தியசாலையொன்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை பெற்றுத் தர முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குடும்பத்தினர் வைத்தியசாலையொன்றை தெரிவிக்க தவறும் பட்சத்தில் வைத்தியசாலையொன்றை தெரிவு செய்து நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறு திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டார்

அதுவரை சடலத்தை திருகோணலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்,

உறவினர்கள் சடலத்தை கையேற்ற போதிலும் அதனை எரிக்கக் கூடாது புதைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்,

மேலும் மரணம் மீதான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப்பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது,

குறித்த பெண்ணின் சடலம் இன்று முற்பகல் திருகோணமலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,

முற்பகல் உடற்பயிற்சி செய்வதற்காக கடற்கரைக்கு சென்ற ஒருவரால் பெண்ணின் கைப்பை மற்றும் பாதணிகள் கண்டெடுக்கப்பட்டு அருகிலிருந்த கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது,

அதன் பின்னர் குறித்த பொருட்கள் நிலாவௌி காவல் துறையினரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதில் இருந்த பெண்ணின் அலுவலக அடையாள அட்டையின் ஊடாக அவர் பணிபுரியும் இடம் கண்டறியப்பட்டள்ளது,

இளம் பெண் வவுனியா கற்குளம் பகுதியை வதிவிடமாக கொண்டு திருகோணமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் ஒருவரது பொருட்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன,

குறித்த பெண் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கல்வி மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரிவில் கடமையாற்றிய 29 வயதான நடராசா போதனாயகி என்பவர் பல்கலைககழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு இவர் சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் குறித்த பெண்ணின் பொருட்கள் கரையொதுங்கிய இடத்துக்கருகில் பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது,

இதையடுத்து பெண்ணின் உறவினர்களுக்கு விடயம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்துள்ளனர்,

சடலம் கரையோரத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நிலாவௌி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்...!

பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்...!

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட வேண்டும். பரபரப்பாக இருக்க வேண்டும். அதற்காக மற்ற கதாநாயகிகள் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அமலாபால்.

சிந்து சமவெளி படத்தில், மாமனாருடன் பாலியல் உறவு வைத்திருக்கும் மருமகளாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய அவர், மீண்டும் அதுபோன்ற சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் அவ்வப்போது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

அதன் ஆரம்பமே, ஆடை படத்தின் கவர்ச்சி தோற்றம். இந்த விஷயத்தில், அவருடைய முன்னோடி, நயன்தாரா அவரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார், அமலாபால்.

அரசியல் தீர்வு விடயம்: சுமந்திரனின் கணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது...! கட்டுரை

அரசியல் தீர்வு விடயம்: சுமந்திரனின் கணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது...! கட்டுரை

அரசியல் தீர்வு விடயத்தில் அவருடையதை விட மாற்றுவழி இல்லை என்ற சுமந்திரனின் கணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அரசியல் தீர்வு விடயத்தில், அதாவது எம் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடயத்தில், தமிழரின் தலைவிதி சுமந்திரனினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் கையில் இருக்கும் நிலையில், சொற் பிரோயகம் முக்கியம்; உண்மைத்தன்மை முக்கியம்; வெளிப்படைத்தன்மை முக்கியம். 

சுமந்திரன் அண்மையில் ஆற்றிய உரைகளை பார்த்தால் பழைய கதையை திரும்ப திரும்ப சுற்றி வளைத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது ஒற்றை ஆட்சி முறையில் சமஷ்டியின் குணாதிசயங்கள் இருக்கின்றன என்பது. 

பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் சமஷ்டியின் குணாதிசயங்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார் சுமந்திரன் - ஆனால் என் பார்வையில் பிரித்தானிய யாப்பு எழுதப்படாத யாப்பு.

பாராளுமன்றம் மட்டுமே சட்டம் உருவாக்கும் இயல்பு கொண்டது (parliament is supreme); யாப்பில்லாத பட்சத்தில் பாராளுமன்றமே மேலானது; தனி நாடு கேட்கேலாது என்று சட்டமில்லை; மரபுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஸ்காட்லாந்து மக்களுக்காக ஒரு பொது சன வாக்கெடுப்பு நடந்தேறியது; திரும்பவும் நடக்க வாய்ப்புண்டு. 

சனத்தொகையில் குறைவென்றாலும், ஸ்காட்லாந்துக்கு - பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் அதிகம் - இதை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன். ஒரு சர்வாதிகாரம் வந்து எல்லாவற்றையும் குழப்பி அடிக்காது. 

பிரித்தானியா கொடுத்த உரிமைகளை மீள பெறாது என்று அவரே சொல்லுகிறார்

அவரிடமிருந்து எத்தனை தரம் தான் இதை கேட்டிருக்கிறோம் – அதாவது ஒற்றை ஆட்சி முறையில் சமஷ்டியின் குணாதிசயங்கள் இருக்கின்றன என்று.. கேட்டு புளிச்சு போயிட்டுது. திட்ட வட்டமாக சமஷ்டி தான் வேண்டுமென்று சொன்னால் என்ன? கேட்கிறேன்?

அவருடைய ஆதங்கத்தை அதாவது பெயர் முக்கியமில்லை என்ற வாதத்தை (கொட்டாவி) கேட்டு விட்டொம் - சுற்றி சுற்றி சுப்பண்ட கொள்ளைக்குள் திரிகிறார் சுமந்திரன், பேச்சில் சில சில மாற்றங்களுடன். “எல்லா சமஷ்டி முறைகளிலும் ஒற்றை ஆட்சி முறைகள் காணப்படுகின்றன என்கிறார். 

ஒற்றையாட்சியிலும் சமஷ்டியின் குணாதிசயங்கள் வியாபித்திருக்கின்றன,” என்கிறார். 

முழுமையான சமஷ்டியிலும்கூட ஒற்றை ஆட்சி குணாதிசயங்கள் இருக்கத் தான் செய்யும் .என்கிறார் இருக்காவிட்டால் அது ஒரு நாடாக இருக்க முடியாது என்கிறார். ஆகவே இந்த விளக்கங்கள் அத்திய அவசியமானது என்கிறார். 

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக நாங்கள் அரசியல் விடிவென்று சொல்வது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும்... வெறும் பேச்சாக, கோஷங்களாக இருக்க முடியாது என்கிறார். 

பேச்சும் அவசியம். கோஷங்களும் அவசியம். சமஷ்டி என்று எழுதவேண்டுமென்று கேட்போம் என்று மெல்ல சொல்லுகிறார். அதுவேறு விஷயம் என்கிறார்.

ஆனால் முக்கியமான விடயமென்னவென்றால் உள்ளடக்கத்தில் அது எங்களுக்கு சுய ஆட்சியை கொடுக்கிறதா? சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்களில் சில விடயங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டால் அவை பூரணமான அதிகாரமாக கொடுக்கப்பட்டதா என்று பார்க்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்.
தமிழருக்கு அந்தப் பாணியில் கதைப்பதும், சிங்கள பேரினவாதிகளான புத்த குருமார்களும் அரசியல் வாதிகளும் கேட்க அவர்களை சமாதானப்படுத்துவதற்கு13 ஆம் திருத்த சட்டத்தில் சிறு மாற்றங்களை கொண்டுவந்தால் போதும் என்று கதைப்பதும் சுமந்திரனின் அரசியல் சாமர்த்தியம் என்பதா இரு பாலாரையும் ஏமாற்றும் வஞ்சனை என்பதா! இந்த அணுகுமுறை தமிழருக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது என்றிங்கு வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன். 

தான் தான் தமிழரசு கட்சியினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் உத்தியோக பூர்வமான பேச்சாலென்று காட்டிக்கொண்டு தெற்கு பக்கம் சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவதிலும் பார்க்க, அதைவிட மோசம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிழையாக விவரிப்பதிலும் பார்க்க, சர்வதேசமும் சிங்களமும் செவிமடுக்க வேண்டியவை பல உண்டு.

உண்மையில் 6ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதிலும், வடகிழக்கிற்கும் புலம்பெயர் ஈழத் தமிழருக்குமான பொது சன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டுமென்ற விண்ணப்பத்தை முன் வைப்பதிலும், அதற்கான கேள்வியை தமிழ் மக்கள் தீர்மானித்தல் வேண்டும் என்றதில் உறுதியாய் இருப்பதிலும் அவர் அவரது கவனத்தை செலுத்த வேண்டும்.

சுமந்திரன், மாவீரன் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் - அகிம்சைவாதி, மனசாட்சிக்கெதிராய், ஆயினும் வன்முறைக்கெதிராய் சொந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினால் ஆயுதம் தாங்கிய, உண்ணா விரதம் இருந்து உயிரை மாய்த்த - திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், தானாற்றிய பேச்சின் காணொளியை அவருடைய முகநூலில் பதிவிட்ட சுமந்திரன் திலீபனை பற்றி ஒரு வசனம் மாத்திரம் தான் கதைத்ததை கேட்டோம். ஒருவேளை நிகழ்வில் கதைத்திருந்தாலும் காணொளியில் அந்த பாகத்தை வெட்டி தான் பதிவிட்டார். 

அந்த காணொளியில் நாம் கேட்ட அந்த ஒரு வசனம் திலீபனின் அற்பணிப்பு பலனளிக்கவில்லை போலிருந்தது. பெயர் சொல்லாமல் கையால் காட்டி நீர் அகாரம் உணவாகரம் இல்லாமல் உயிர் துறந்தார் - அப்படியாக செய்து வெல்லலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டது திலீபனின் தியாகத்தை கொச்சை படுத்திய மாதிரி தோன்றியது - அது எனக்கு பிடிக்கவேயில்லை. தியாக தீபம் திலீபனை அவமதித்த சுமந்திரனின் கேவலமான இந்தப் பேச்சு ஒவ்வொரு மானமுள்ள தமிழனாலும் கண்டிக்கபடவேண்டியது!

விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்திலும் பார்க்க சிறப்பான ஆயுதப் போராட்டத்தை நடத்தப் போகிறீர்களா, அதுவா உங்கள் மாற்று வழி என்று யாரை நோக்கி கேட்டாரோ தெரியவில்லை, அப்படி கேட்டதும் எனக்கு பிடிக்கவில்லை. மாவீரரை இங்கே அவசியமில்லாமல் இழுப்பது சுமந்திரனின் போக்கிரித்தனம், இறுமாப்பை காட்டுகிறது. உரிமைப்போராட்டம் மடியவில்லை, அறவழியில் திளைக்கிறது, மாவீரரின் ஆசியுடன்!

சுமந்திரன், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இவ்வாறு பேசியது, அரசியல் தீர்வு விடயத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் மாற்று வழி ஒன்றை வைத்திருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி, அவர்களுக்கு மாற்று வழியில்லை என்று முடிவு கட்டி வேடிக்கை பண்ணத்தான். அதாவது அவர்கள் பேச்சில் வல்லுனரானால் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்கள் மாற்று வழியை ஏன் முன் வைப்பதில்லை என்று கேட்டார் சுமந்திரன். 

சுமந்திரனின் கணிப்பில் அவருடையதை விட மாற்று வழி இல்லை என்பதே. தாங்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றவேண்டும் என்றும் சொன்னார் - ஏனென்றால் இந்த ஆட்சியின் காலம் முடிவடைய போகுது என்றார். நாங்கள் அதை மாற்றுவோம் என்றார். அது தான் என்ன என்பதை அவர் கூறவில்லை. 

அவர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மேலும் பேசுகையில், "எங்களுக்கான தீர்வை பெறுவதற்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து இணங்கவேண்டும்; அவர்களை இணங்கவைக்க வேண்டும். நாங்கள் கோருவதொன்றும் நியாயமற்ற கோரிக்கை அல்ல என்று அவர்களை விளங்க வைக்க வேண்டும். நாங்கள் கேட்கும் கோரிக்கை நியாயம் அற்றவை இல்லையே.

உலகெங்கும் இருக்கும் மக்கள் கோருவதை தான் நாங்கள் கோருகிறோம். நியாயமற்ற கோரிக்கை அல்ல, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிற வகையிலே செயற்படவேண்டும்.

எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்தல்ல. எங்கள் உரிமைகளை நிலைநாட்டி, ஆனால் அது உங்களுடைய உரிமை தான் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையிலே நாங்கள் பேச வேண்டும்.

அவர்களிடையே நாங்கள் அதை பேச வேண்டும்; திரும்பவும் குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கிது என்றும் தெரியாது,” என்றார்
.
மேலும், “அதிலே எதையாவது செய்கிறீர்களா; அல்லது மாறாக அவர்களுடைய சந்தேகங்கள் வலுக்கிற வகையிலே செயற்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா. அவர்கள் சந்தேகங்கள் வலுக்கிற வகையிலே செயற்பட்டால் நாங்கள் எமது இலக்கை அடைவது கஷ்டம்; அதனால் அவர்களுக்கு பொய் சொல்ல முடியாது.

எங்களுடைய உரித்து எங்களுடைய உரித்து. ஆனால் சொல்லுகிற முறை, சொல்லுகிற தோரணை, சொல்லுகிற வடிவம், சொல்லுகிற மொழி, எல்லாம் முக்கியமானவை," என்றார் சுமந்திரன்.

மாற்று வழிகளை நோக்குகையில் - தமிழ் மக்கள் பேரவை, அரசியல் தீர்வை நோக்கி, புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டிய அனைத்தயும் கொண்ட வரைவொன்றை முன்வைத்ததை சுமந்திரன் மறந்து விட்டார் போலும். 

அண்மையிலும் கூட வட மாகாண சபை, சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறும், இலங்கைத்தீவில் தமிழினச் சிக்கலுக்கு நிலையான தீர்வு காண ஐநா ஏற்பாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியதை அவருக்கு தெரியவில்லை போலும். 

புதிய அரசியல் யாப்பொன்று வ்ருவதாய் இல்லை. சுமந்திரன் கேட்பது சிங்களவரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா? சுமந்திரன் என்ன தான் கேட்கிறார்? அதை முதல் சொல்ல முடியுமா? சிங்களவருக்கு ஒன்றுமாய் தமிழருக்கு ஒன்றுமாய் கதைப்பது பிழையான அணுகுமுறை. இடைக்கால அறிக்கையில் கூட சொற்பிரயோகம் குழப்பத்தை உண்டுபண்ணியதை கவனித்தோம்.

தமிழர் தலைவிதி தமிழர் கையில் இருக்கவேண்டும். அதன் அடிப்படிடையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொதுசனவாக்கெடுப்பை வலியுறுத்தி பயணிக்கிறது.

சுமந்திரன் தமிழரின் பேச்சாளராய் இருந்து கொண்டு, சிங்களவரின் மத்தியில் அவருடைய அந்தஸ்தை, நல்ல பெயரை வளர்ப்பது, நடுத்தரமான ஆள் என்று தன்னை காட்டிக் கொண்டு, 13 ஆம் திருத்தச் சட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தால் போதும் என்று சிங்களவருக்கு சொல்வது, சரிப்பட்டு வராது. தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் கோரிக்கைகளை தயங்காமல் முன் வைக்க வேண்டும்! 

தமிழ் அரசியல் வாதிகள் ஒட்டுமொத்த தமிழரின் நலனுக்காக தமிழரின் உரிமைகளுக்காக அற்பணிப்புடனும், துணிவுடனும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

கட்டுரை ஆசிரியர் - Usha Sriskandarajah
சாமி-2 முதல் நாள் பிரமாண்ட வசூல்...!

சாமி-2 முதல் நாள் பிரமாண்ட வசூல்...!

சாமி-2 விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படம் பர்ஸ்ட் லுக் வந்ததில் இருந்து ட்ரோல் செய்யும் ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது படம் வெளியாகியும் ஒரு தரப்பினர் இந்த படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், அனைத்து விமர்சனங்களையும் முறியடித்து நேற்று இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 5 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சாமி-2 மேலும் சென்னையில் ரூ 64 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது, சமீபத்தில் விக்ரம் படங்களில் இது தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கன்னத்தில் அறை வாங்கிய மைனா பட நடிகை

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கன்னத்தில் அறை வாங்கிய மைனா பட நடிகை

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் மைனா. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான சேதுவிற்கு மனைவியாக நடித்திருந்த சூசன் தற்போது தொட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எம்.எஸ்.குமாருக்கு மனைவியாக வருகிறார். ஒரு காட்சியில் குமாரிடம் சூசன் கன்னத்தில் அடி வாங்கும் காட்சி படமாக்கப்பட்டபோது குமார் அவர் கன்னத்தை அடிக்கவில்லையாம், அவர் அவ்வளவு சாஃப்ட்டான கேரக்ட்டராம், குமார்.

ஆனால் இந்த காட்சியை படமாக்கியே தீர வேண்டும் என எண்ணிய சூசன், குமாரை இரவு 10 மணிக்கு மேல் தனது ஓட்டலுக்கு வர சொல்லியுள்ளார். வந்தவரிடம் என்னை அடித்து பழகுங்கள், அப்போ தான் நீங்கள் இந்த அறையை விட்டு சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

எதற்கும் மசியாத குமார், சில பல வாக்குவாதங்களுக்கு பிறகு சூசனை ஓங்கி அறைந்துள்ளார். அப்போ கூட வலியையும் பொருட்படுத்தாமல், குட்...நாளைக்கும் இப்படிதான் அடிக்க வேண்டும் என்றாராம், சூசன்.

ஆனாலும் அடுத்த நாள் குமார் வழக்கம்போல் சொதப்பி தான் நின்றாராம்.
இந்த வாரம் வெளியே போவது இவர்தான்? - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த வாரம் வெளியே போவது இவர்தான்? - பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் 2வது சீசன் முடிய இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது. ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்றுவிட்டதால் மற்ற போட்டியாளர்கள் பைனல் செல்ல முயன்றுவருகின்றனர்.

அதிலும் ஐஸ்வர்யா மிக மோசமாக பல விஷயங்கள் செய்துவருகிறார். நேற்று முதல் அவர் மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்துவருகிறார்.

இந்நிலையில் இந்த வாரமாவது அவர் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளாராம்.

விஜயலக்ஷ்மி, பாலாஜி ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

வெளியே போகப்போவது யார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாகிவிடும். அதுவரை காத்திருங்கள்.
ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு விட்டேன் அமைச்சர் தங்கமணி மீது ஒருவாரத்தில் வழக்கு போடுவேன்: மு.க.ஸ்டா லின்

ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு விட்டேன் அமைச்சர் தங்கமணி மீது ஒருவாரத்தில் வழக்கு போடுவேன்: மு.க.ஸ்டா லின்

சென்னை: காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டு விட்டேன். அமைச்சர் தங்கமணி கூறியவாறு என் மீது வழக்கு தொடரா விட்டால் ஒரு வாரத்தில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று மு.க.ஸ்டா லின் கூறினார். 
திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

நீங்கள் தொடர்ந்து தவறான தகவல்கள் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் உங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளாரே? காற்றாலை மின்சாரத்தில் முறைகேடாக பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று நீண்ட அறிக்கை வெளியிட்டேன். அதற்கு எந்தவொரு விளக்கத்தையும் சொல்ல முன்வராமல் அபாண்டமான, அவதூறான பொய்யான குற்றச்சாட்டை என் மீது சொல்லியிருக்கிறார். என் மீது சட்டப்படி வழக்கு போடப் போகிறேன் என எச்சரிக்கும் விதத்தில் பதில் தந்திருக்கிறார்.

ஆனால் நேற்று, என் கையில் இருக்கும் இந்த முழுமையான ஆதாரத்தை வெளியிட்டு இதுகுறித்து உடனே விசாரணை நடத்த வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன். நாங்கள்தான் குட்கா ஊழல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டோம். தற்போது குட்கா ஊழல் பிரச்னை சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறதென்பது நாட்டிற்கு நன்றாக தெரியும். எனவே மின்துறை அமைச்சராக இருக்கும் தங்கமணியை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, காற்றாலை முறைகேடு தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுதாவது அவர் சொன்னபடி என்மீது வழக்கு போடவேண்டும். ஒரு வார காலம் நான் காத்திருப்பேன்.

அந்த ஒரு வார காலத்திற்குள் அவர் என்மீது வழக்குப் போடவில்லை என்று சொன்னால் நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, எப்படி குட்கா ஊழல் பிரச்னை சி.பி.ஐ வரை சென்று வழக்கு விசாரணை நடந்து கொண் டிருக்கிறதோ அதுபோல் இதையும் கொண்டு சென்று இந்த ஊழல் பிரச்னைக்கு நல்லதொரு பரிகாரத்தை நான் நிச்சயமாக காண்பேன். என் மீது வழக்கு போடுவேன் என்று சொன்ன தங்கமணி உடனடியாக வழக்கு போட தயாரா? என்ற அந்தக் கேள்வியை கேட்டு இந்த விளக்கத்தை நான் உங்கள் மூலமாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

103 வயது மூதாட்டி வாழ்த்து

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர் 103 வயதான ரங்கம்மா. திமுக மீது தீவிர பற்றுகொண்டவர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அதன்படி திமுகவினர் உதவியுடன் அவர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ஸ்டாலின் நன்றி கூறினார். 

பின்னர் ரங்கம்மா கூறும்போது, ‘எங்கள் குடும்பம் திமுக குடும்பம். கருணாநிதியை சந்திக்கும் எண்ணம் நிறைவேறவில்லை. கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. வர இருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார்’ என்றார்.

தமிழக வீரர் சத்யனுக்கு பாராட்டு டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன் இலக்காக கொண்டு இருக்கும் சத்யன் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

3,4ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி ஊழல் விளக்க பொதுக்கூட்டங்கள்

தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று சிறைச் சாலையில் டி.ஐ.ஜி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்களே?

இந்த ஆட்சியில் டி.ஜி.பி அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தலைமை செயலாளர், அமைச்சருடைய வீடுகளில் சோதனை நடந்துள்ளது. அதையெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இன்னும் வெட்கம் மானமில்லாமல் இன்னும் அந்தப் பதவிகளில் ஆட்சியாளர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.

அதனால்தான் நாங்கள் சேலத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தி எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள எல்லா நகராட்சிகளிலும் அதிமுக அரசு ஈடுபட்டிருக்கக் கூடிய கலெக்க்ஷன், கமிஷன், கரப்ஷன் பற்றி விளக்கி சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதற்கு திமுக சார்பில் முடிவெடுத்துள்ளோம்.
சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு!

சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு!

சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதலன் லலித்குமார் தற்கொலை விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று யாழ். நாகர்கோவில் மாணவப் படுகொலையின் 23வது ஆண்டு நினைவு நாள்!

இன்று யாழ். நாகர்கோவில் மாணவப் படுகொலையின் 23வது ஆண்டு நினைவு நாள்!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகொலையான மாணவர்களின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 

1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் ஒன்று கூடிக் காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை, பேரிரைச்சலுடன் நாகர்கோவில் வானைச் சுற்றி வந்த இலங்கை விமானப்படையின் இரண்டு புக்காரா விமானங்கள், பாடசாலை என்று தெரிந்த பின்னரும் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இந்த விமானத் தாக்குதலில், 26 மாணவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர். 35 மாணவர்கள் உள்ளிட்ட 67 பேர் படுகாயமடைந்தனர்.

மாணவர் படுகொலையை நினைவு கூரும் வகையில் நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் இன்று சனிக்கிழமை காலை அஞ்சலி நிகழ்வொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வெற்றியை சுவீகரித்துக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான்!

வெற்றியை சுவீகரித்துக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்று ஆரம்பமான சுப்பர் 4 சுற்றில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

டுபாயில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.1 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 36.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை எட்டியது.

இதேவேளை, அபுதாபியில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை மூன்று விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 258 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 49.3 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில் இலக்கை எட்டியது.
முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய புலிகளிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய புலிகளிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அலுவலக அதிகாரிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதானியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த அலுவலகத்தின் நிதி அனுசரணையுடன் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஔிபரப்பப்பட்ட இரண்டு நாடகங்கள் பௌத்த மதத்தை அவமதிப்பு செய்வதாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அது குறித்து உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொலிஸ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் புலன்விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து சந்திரிக்காவின் அலுவலக செயற்திட்ட முகாமையாளர் ஒருவரை பொலிஸார் தங்கள் அலுவலகத்துக்கு வரவைத்து நான்கு மணிநேரம் வரை விசாரணைகள் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தயாசிறி ஜயசேகரவிற்கு புதிய நியமனம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தயாசிறி ஜயசேகரவிற்கு புதிய நியமனம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் புதிய அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர்கள் சிலரை ஜனாதிபதி நேற்று(21) நியமித்துள்ளார்.

புதிய நியமனங்களுக்கமைய அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பு மத்தியின் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெக்டர் பெத்மகே மற்றும் ஜீ.எச். புத்ததாச ஆகியோர் கடுவெல தொகுதியின் இணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுமித்ரா பிரியங்கனி மற்றும் சுரங்க பிரபாத் ஆகியோர் மதுகம தொகுதியின் இணைத் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமில ஹர்சன பெந்தர – எல்பிடிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுசந்த லால் ஜயவீர கரன்தெனிய தொகுதிக்கும், திசர குணசிங்க ஹபராதுவ தொகுதிக்கும் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாபஹூவ தொகுதியின் புதிய அமைப்பாளராக கீர்தி பொன்சேகா பெயரிடப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக லசந்த அழகியவத்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், பியசேன கமகே காலி மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலையின் விரிவுரையாளர் கடலில் இருந்து சடலமாக மீட்பு.....! கிழக்கில் நடந்த கோர சம்பவம்!

கிழக்கு பல்கலையின் விரிவுரையாளர் கடலில் இருந்து சடலமாக மீட்பு.....! கிழக்கில் நடந்த கோர சம்பவம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம்  மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல் போயுள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், பகல் சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் நேற்று மதியம் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு உயிரிழந்த பெண் கூறியுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.
வழக்கை மாற்றுமாறு பசில் கொடுத்த மனு டிசம்பரில் விசாரணை

வழக்கை மாற்றுமாறு பசில் கொடுத்த மனு டிசம்பரில் விசாரணை

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படுகின்ற தனக்கெதிரான வழக்கை வேறொரு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து , முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் வரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அண்மையில் சீல் துணி விவகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து நீதிமன்றத்தில் கருத்து வௌியிட்டார் எனவும் இதுபோன்ற கருத்துக்களை கூறும் நீதிபதியிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் தனது மனுவில் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே, தனக்கு எதிரான வழக்கை பிறிதொரு நீதிபதியிடம் மாற்ற உத்தரவிடுமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியைப் பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடனான சுமார் 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டதாக பஷிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Friday, September 21, 2018

நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் - கூட்டு எதிர்க்கட்சி

நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் - கூட்டு எதிர்க்கட்சி

ரூபாவின் பெறுமானம் தொடந்து வீழ்ச்சி கண்டு வருகின்றமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரியவிடம் இன்று வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ரூபாவின் பெறுமானம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதனை பேணுவதற்கு அரசாங்கத்தால் முடியாதுள்ளது. அதனாலேயே அடிக்கடி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. 

மக்கள் மூன்று வேளை உண்டு வாழ முடியாத நிர்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இல்லை. அத்துடன் தேசிய வளங்களை விற்பனை செய்தாவது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கே அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
173 ஓட்டத்துடன் பதுங்கியது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 174

173 ஓட்டத்துடன் பதுங்கியது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 174

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்திய நான்கு விக்கெட்டுக்களின் துணையுடன் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 173 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தியது.
அதன்படி நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களமிறங்கி ஆடுமாறு மொஷ்ரபி மோர்டாசாவை பணித்தார்.

அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸ், ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களமிறங்கி ஆடிவர 4.3 ஆவது ஓவரில் பங்களாதேஷுக்கு இராகுகாலம் ஆரம்பித்தது.

அதன்படி 4.3 ஆவது ஓவரில் லிட்டான் தாஸ் ஏழு ஓட்டத்துடன் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் கேத்தர் யதவ்விடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அவருடன் இணைந்து களறிங்கிய ஹுசைன் ஷான்டோ 7 ஓட்டத்துடன் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.

ஷகிப் அல் ஹசன், ஜடேஜாவின் முதல் ஓவரில் 2 நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டு 17 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 9 ஓட்டத்துடன் ஓரளவு நிதானமாக ஆடி வந்த ரஹிம் 21 ஓட்டத்துடனும் ஜடேஜாவின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆட்டமிழந்தனர்.

இதனால் பங்களாதேஷ் அணி 17 ஆவது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 65 ஓட்டங்களை பெற்று தடுமாறி வந்தது.

இதையடுத்து மாமதுல்லாவும், மொசாடெக் ஹுசேனும் ஜோடி சேர்ந்து ஆடிவர பங்களாதேஷ் அணி 30 ஓவருக்கு 90 ஓட்டத்தை பெற்றது. மாமதுல்லா 17 ஓட்டத்தையும் ஹுசேன் 9 ஓட்டத்துடனும் நிதானமாக ஆடி வர 32 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து மாமதுல்லா 25 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவருடன் இணைந்து ஆடி வந்த ஹுசேனும் 12 ஓட்டத்துடன் ஜடேஜாவின் சுழலில் சிக்கி தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

44.3 ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டத்தை பெற்று துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் மெய்டி ஹசானும் ஜோடி சேர்ந்து ஆடிவர 46.3 ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் மோர்டாசா 26 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் பும்ராவின் பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து 42 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்கு 258

பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்கு 258

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டவது போட்டியில் ஷஹாதி மற்றும் அஸ்கர் காட்டிய அதிரடியினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஆஸ்கர் ஆப்கான் முதலில் களமிறங்க தீர்மானித்தார்.

அதன்படி மொஹமட் ஷஹ்சாதும், இஷ்சனுல்லா ஜனாத்தும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வர 8.6 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதற்கிணங்க இஷ்சனுல்லா ஜனாத் 10 ஓட்டத்துடன் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹ்மத் ஷா களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

எனினும் 10.1 ஆவது ஓவரில் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் மொஹமட் ஷஹ்சாத்தும் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷாத்துடன் ஜோடி சேர்ந்தாட ஷஹதி களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 13.5 ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷஹதி 19 ஓட்டத்துடனும் ரஹ்மத் ஷா 23 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 94 ஆக இருக்கும்போது மீண்டும் மொஹமட் நவாஸ் பந்து பறிமாற்றம் மேற்கொள்ள ரஹ்மத் ஷா 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களம் நுழைந்த அணியித் தலைவர் அஸ்கர் ஆப்கான் தான் எதிர்கொண்ட முதல் பந்திலே ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 26 ஆவது ஓவரில் 100 ஐ கடந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த 35 ஆவது ஓவரில் ஆப்கான் அணி 132 ஓட்டத்தை பெற்றது.

36 ஆவது ஓவருக்காக மொஹமட் நவாஸ் பந்து வீச அஸ்கர் ஆப்கான் அடுத்தடுத்து ஒரு 4 நான்கு ஓட்டத்தையும் ஒரு 6 ஓட்டத்தையும் பெற்று அதிரடி காட்ட 37.2 ஆவது ஓவரில் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டத்தை பெற்றது.

இதையடுத்து ஷஹதி 86 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுணையில் 45 பந்துகளை எதிர்கொண்ட அஸ்கர் ஆப்கன் 45 பந்துகளில் 8 ஆவது அரைசதத்தை விளாசினார்.

எனினும் மைதானத்தில் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த அஸ்கர் 56 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 67 ஓட்டத்துடன் ஷாஹீன் அப்ரீடியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இவரையடுத்து களமிறங்கிய மொஹமட் நபி 7 ஓட்டத்துடனும் நஜிபுல்லா ஸத்ரான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க‍ ஆப்கான் அணி 46.2 ஆவது ஓவருக்கு 6 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது.

ஷஹதி தொடர்ந்தும் மைதானத்தை அதிர விட இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டினை இழந்து 257 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 258 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஷஹதி 97 ஓட்டத்துடனும், நைய்ப் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் மெஹமட் நவாஸ் 3 விக்கெட்டுக்களையும், அப்ரீடி 2 விக்கெட்டுக்கயைும், ஹசன் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
சவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..!!

சவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..!!

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Kiev நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் சவப்பெட்டியில் வைத்து சிலரை உயிரோடு புதைத்துள்ளார்.

அவரருகில் 12 காலியான சவப்பெட்டிகள் இருந்துள்ளன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து விசாரித்து போது தான் புதைத்த நபர் சைக்காலஜி மருத்துவர் என்பதும் இந்த விடயத்தை தன்னுடைய நோயாளிகளுக்கு அவர் தொடர்ந்து செய்வதும் தெரியவந்தது.

அதாவது, சவப்பெட்டியில் படுக்க வைத்து இரண்டு மணி நேரத்துக்கு நோயாளிகள் புதைக்கப்படுகிறார்கள்.

பெட்டியில் சிறிய ஓட்டை போட்டு ஒரு பைப் சொருகப்படுகிறது. இதன் மூலம் சவப்பெட்டியில் இருப்பவர்கள் சுவாசிக்க முடியும்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து வெளியில் வந்தால் தங்களின் மனது புத்துணர்ச்சி பெற்று புதுமனிதர்களாக மாறிவிடுகிறோம் என நோயாளிகள் கூறுகிறார்கள்.

இந்த விடயத்தில் முறைதவறிய செயல்கள் எதுவும் பின்பற்றப்படாத நிலையில் பொலிசார் குறித்த மருத்துவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
முதலை, பாம்பு, உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்

முதலை, பாம்பு, உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்

உலகிலேயே விசித்திரமான விலங்குகளுடன் வாழ்கிறார் ஒரு பிரெஞ்சுக்காரர். பிரான்சின் லூரி நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான பிலிஃப் விலங்குகளின் காதலர். அவரது வீட்டில் அலி, கேட்டர் என இரு முதலைகள், ராட்சத ஆமை, நல்ல பாம்பு, கொடிய விசம் கொண்ட காட்டு வீரியன் என வித்தியாசமான 40 வகை விலங்குகள் உள்ளன. 

அவற்றுக்கு தேவையான உணவு, அவற்றை பராமரிப்பது என இதையே தன் வாழ்வாக்கி கொண்டுள்ளார் பிலிஃப். சிறுவயது முதலே ஊர்வன இன பிராணிகளோடு பிரியம் கொண்டவர். அதனால் தனது வீட்டையே பிராணிகளின் புகலிடமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா 170.65 !! வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா 170.65 !! வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170.65 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Jet Airways பயணிகளுக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வர விமானிகளே காரணம்!

Jet Airways பயணிகளுக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வர விமானிகளே காரணம்!

Jet Airways விமானத்தில் ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மிக சிறிய இடைவெளியில் 170 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருக்கிறார்கள்.

Jet Airways நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது.

இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. ஆனால் Jet Airways நிறுவனம் இதற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தனை பிரச்சனையும் ஒரே ஒரு சுவிட்ச் சரியாக வேலை செய்யாத காரணத்தால்தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் விமானிகள் இருக்கும் காக்பீட்டில் உள்ள கேபின் பிரஷர் கன்ரோலர் (அழுத்த கட்டுப்பாடு) சுவிட்சை போட்டு இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை நிகழ்ந்து இருக்காது என்று கூறப்படுகிறது. இதை போடாததால் உள்ளுக்கு உள்ள அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மக்களுக்கு அதிக அழுத்தம் காரணமாக ரத்தம் வந்துள்ளது.

இந்த நிலையில் உள்ளே நடந்த விஷயம் அத்தனையும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அங்கு உள்ளே இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவில் பயணிகள் எல்லோரும் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். உள்ளே ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்த காரணத்தால் இந்த மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 30 பேருக்கு காது, மூக்குகளில் ரத்தம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ரத்தம் அதிகமாக வந்தது சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும்தான் என்று கூறப்படுகிறது. சிறுவர்களுக்கு சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு ரத்தம் வந்ததை இவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஜெட் ஏர்வேஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்

2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்

 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.

அதன் ஒரு கட்­ட­மாக உலகக் கிண்ணம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள உலகக் கிண்­ணத்தை வர­வேற்கும் நிகழ்வு நேற்று சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்­று­கொ­டுத்த முன்னாள் அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க, இலங்கை கட்­பு­ல­னற்ற கிரிக்கெட் அணி வீரர்கள், பாட­சாலை மாண­வர்கள் மற்றும் ஓரிரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் சந்திரிக்காவிற்கு கிடைத்த அதியுயர் விருது

பிரான்ஸ் அரசாங்கத்தினால் சந்திரிக்காவிற்கு கிடைத்த அதியுயர் விருது

பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான (Commander of the Legion of Honour) என்ற விருதே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இதன் உடாக, இந்த விருதினை பெற்று முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் இந்த விருதினை பிரன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; CID பரபரப்பு தகவல்

ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; CID பரபரப்பு தகவல்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க, வசீம் தாஜுதீன் விவ­கா­ரத்தை விசா­ரணை செய்யும் சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோ­ருடன் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் தாக்கல் செய்து இந்த விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்த கடற்­படை வீரர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வழங்க கடற்­படை தள­பதி மறுப்­பா­ராயின், அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 173 மற்றும் 174 ஆவது அத்­தி­யா­யங்­களின் கீழ் செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இதன்­போது நீதிவான் இசுரு நெத்தி குமார சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும், சி.ஐ.டி.க்கும் ஆலோ­சனை வழங்­கினார். 

மேலும் இந்த கடற்­படை வீரர்கள் தொடர்பில் தக­வல்கள் மறைக்­கப்­ப­டு­வது தொடர்பில் அத்­த­க­வல்­க­ளுக்கு பொறுப்­பான உயர் கடற்­படை அதி­காரி ஒரு­வரை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் எதிர்­வரும் 25 ஆம் திகதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இன்றைய தினம் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு விசா­ர­ணைக்கு வந்தபோது, இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணையில் உள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா , முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க , முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கார விசா­ர­ணைகள் மிக நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான், 

குறித்த விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறைவு செய்­யு­மாறும், விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வ­தற்­கான காரணம் மற்றும் தற்­போது கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான சாட்­சிகள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் என்­ப­வற்றை உள்­ள­டக்கி விரி­வான அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கவும் உத்­த­ர­விட்­ட­துடன் வழக்கை எதிர்­வரும் நவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு !

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு !

2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 156 புள்ளிகளும், சிங்கள மொழிமூலம் 164 புள்ளிகளும் சித்தி அடைவதற்கான புள்ளிகளாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் யாழ். வீரர்கள்

இலங்கை அணியில் யாழ். வீரர்கள்

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.
இவர் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

எனினும் உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாக இவர் அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றியடைந்த நிலையிலேயே தற்போது இலங்கை அணிக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வாய்வழியாக நெருப்புவிட்ட மாணவன் பலி!

வாய்வழியாக நெருப்புவிட்ட மாணவன் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரம்பாக்கத்தில் வாய்வழியாக நெருப்புவிடும் பயிற்சியில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவன் ஜெபின் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்த போது உடலில் தீ்ப்பற்றியதில் ஜெபின் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்ட்யாவுக்கு பதிலாக ஜடேஜா!

பாண்ட்யாவுக்கு பதிலாக ஜடேஜா!

ஆசிய கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

குறிப்பாக ஹர்திக் பாண்டாவுக்கு பதிலாக ஜடேஜா அல்லது மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

காயம் காரணமாக ஹர்திக் பாண்டா, சித்தார்த் கவுல், தீபக் சஹார் ஆகியொர் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.
அடுத்த சசிகலா-வாக உருவெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்...!

அடுத்த சசிகலா-வாக உருவெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்...!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர்! 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 

இந்நிலையில், இயக்குநர் பிரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமாரை வைத்தி சக்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி தயாரிக்கப் போவதாக அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். 

இதையடுத்து, நேற்று The Iron Lady என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி இயக்குகிறார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, இந்நிலையில் படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். `தி அயர்ன் லேடி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், சசிகலாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.

இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசாரின் உடல்கள் மீட்பு..!

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசாரின் உடல்கள் மீட்பு..!

காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று பந்திப்போரா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அதைத்தொடர்ந்து இன்று காவல்துறை அதிகாரிகள் 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் 3 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி தீவிரவாதிகளின் உறவினர்கள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவிக்கும்படி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. காவல்துறை அதற்கு மறுக்கவே, 3 போலீசாரை கடத்தியதாக கூறப்படுகிறது. 


விராட் கோலியின் முதல் திரைப்பட Poster வெளியானது!

விராட் கோலியின் முதல் திரைப்பட Poster வெளியானது!

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெள்ளிகிழமையாக இன்று அமைந்துள்ளது!

ஆம்... பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி இன்று காலை தனது ட்விட்டர் வாயிலாக தனது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது பிஸியாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள

அணித்தலைவர் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிஸியாகியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பிஸியாகவில்லை, திரைதுறையிலும் பிஸியாகிவிடார் என இவரது ட்விட்டர் பதிவு தெரிவிக்கின்றது.

ஆக்ஷன் ஹீரோவாக விராட் கோலி இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தினை கோலி இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும் "10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் புது வடிவில் வருகின்றேன் #TrailerTheMovie " என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவானது விராட் கோலியின் பாலிவுட் என்ட்ரிக்கான பதிவாக கருதப்படுகிறது., இல்லையேல் ஒருவேலை இது குறும்படமாகவும் இருக்கலாம், அல்லது தான் பிராண்ட் அம்பேஸிடராக இருந்த வரும் நிறுவனத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த பதிவில் கோலி இணைத்துள்ள வலைதள இணைப்பில் TrailerTheMovie 28.09.2018 என மட்டும் தற்போதைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இந்த பதிவிற்கான விடை வரும் 28.09.2018 அன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது!..
வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள (21-09-2018)

வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள (21-09-2018)

மேஷம்:
இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கடகம்:
இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். உத்தியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகஊழியர்கள், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்:
இன்று தடை தாமதம் உண்டாகலாம். புதிய காரியங்களை தள்ளிபோடுவதும் எதிலும் கவனமாக இருப்பதும் நல்லது. ஆனாலும் ராசிநாதன் சஞ்சாரத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். வரவேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமான காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி:
இன்று தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு:
இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. தடை தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மகரம்:
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மீனம்:
இன்று பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!

136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

ஆப்கான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷஹதி 58 ஓட்டத்தையும், ரஷித் கான் 57 ஓட்டத்தையும், குல்பாடின் நைய்பி 42 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

256 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸும், ஹுசைன் ஷான்டோவும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிலையில் ஷான்டோ 7 ஓட்டத்துடனும் லிட்டான் தாஸ் 6 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 4.5 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்குள் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஷகிப் அல் ஹசனும் மெமனுள் ஹாக்கும் ஜோடி சேர்ந்து ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தபோது மெமனுள் ஹாக் 9 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இவரையடுத்து களம்புகுந்த மெஹமட் மிதுன் 2 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பங்களாதேஷ் அணி 14.1 ஓவரில் 43 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதற்கடுத்தபடியாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் சுழலில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர்.

அதன்படி ஷகிப் அல் ஹசன் 32 ஓட்டத்துடனும், மாமதுல்ல 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

மேலும் 32.5 ஆவது ஓவரில் அணி 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள ஹுசேன் 11 ஓட்டத்துடனும் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வந்தனர். இருந்தபோதும் 33.1 ஆவது ஓவரில் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழந்தார்.

இறுதியாக பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானின் பந்துகளை சமாளிக்க முடியாது திக்குமுக்காடி 42.1 ஒவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 136 ஒட்டத்தால் வெற்றி பெற்றது. 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், குல்பாடின் நைய்பி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அத்தாப் ஆலம், ரஹ்மத் ஷா மற்றும் மெஹமட் நைய்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.