Saturday, September 29, 2018

மின் கட்டணத்திற்கும் புதிய விலை சூத்திரம் – நிதி அமைச்சர்

மின் கட்டணத்திற்கும் புதிய விலை சூத்திரம் – நிதி அமைச்சர்

மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரமொன்றை உருவாக்குவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பௌத்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் இன்று(சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாணய நிதியம் கூறும் விடயங்களை நாம் மேற்கொள்வதில்லை.

மின் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் நாம் ஏற்றுள்ளோம். விலைச்சூத்திரத்தை தயாரிக்க விசேட குழுவொன்றை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை அல்ல. இலங்கையின் யோசனையாகும். எதிர்காலத்தில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவை அனைத்தையும் அரசாங்கத்தினால் தனியாக தாங்கிக்கொள்ள முடியாது. உடனடியாக செய்யப்போவதில்லை. இன்னும் இரண்டு வருடங்கள் சென்றாவது விலைச்சூத்திரத்திற்கு செல்ல வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சு...! அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு தடை

ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சு...! அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு தடை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிதி அமைச்சு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

*அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள், அரச நிறுவனங்கள் மாரு அறிவிப்பு வரும் வரை, வாகன இறக்குமதியை இடை நிறுத்த வேண்டும் - நிதி அமைச்சு.

*அரச ஊழியர்கள் வரி சலுகை அனுமதிப்பத்திரம் மெல்லாம் மேட்கொள்ளும் வாகன கொள்வனவு, 6   மாதம் இடைநிறுத்தம்- நிதி
அமைச்சு.

*கைபிரிட் வாதங்களுக்கு வழங்கப்பட்ட 70 விகித குத்தகை (லீசிங்) வசதி (70:30), 50 விகிதமாக (50:50) ஆக குறைப்பு - நிதி அமைச்சு

அத்துடன் அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகன இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்வரும் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சுக்கோ புதிய வாகனங்கள் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

இந்த நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மேலும் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். 

மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
12 வயது தமிழ் மாணவரின் தற்கொலை...! வெளியாகும் அதிர்ச்சி தரும் காரணங்கள்...!!

12 வயது தமிழ் மாணவரின் தற்கொலை...! வெளியாகும் அதிர்ச்சி தரும் காரணங்கள்...!!

இரத்தினபுரி - இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்விகற்று வந்த மாணவரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செயதுக்கொண்டுள்ளார்.

மாணவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த தற்கொலைக்கான காரணம் நிதிக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மத மாற்றம் தொடர்பில் குறித்த சிறுவனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையே மாணவனின் தற்கொலைக்கான காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவரின் தாய் மாத்தறை - தெனியாய பகுதியில் நபரொருவரை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் , பிறிதொரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட நபர் தான் பின்பற்றும் மதத்தினை பின்பற்றினால் காணி , வீடு மற்றும் நிரந்தர தொழில் ஆகியவற்றை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இதற்கு குறித்த தாய் இணக்கம் தெரிவித்ததும் , இறக்குவானை பகுதிக்கு சென்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் புரிந்தவருக்கும் குறித்த தாய்க்கும் மூன்று பிள்ளைகள் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் , முதல் கணவரின் நான்கு பிள்ளைகளில் மூவர் மதம் மாற்றப்பட்டுள்ளதுடன் 12 வயதுடைய குறித்த சிறுவன் மாத்திரம் மதமாற்றத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதனால் குறித்த தாய்க்கு வழங்குவதாக உறுதியளித்த நிலம், வீடு, தொழில் மற்றும் பணம் ஆகியவற்றை குறித்த நபர் கொடுக்க மறுத்துள்ளதாகவும் , 12 வயது சிறுவனுக்கு தொடர்ச்சியாக மதம் மாறுமாறு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , சிறுவனின் சடலம் அவரின் சொந்த வசிப்பிடமான தெனியாயவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , நல்லடத்திற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த மாணவனின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தோனேசியாவை உலுக்கிய பாரிய  நிலநடுக்கம், சுனாமி பாதிப்பால் உயிரிழப்பு 384 ஆக உயர்வு

இந்தோனேசியாவை உலுக்கிய பாரிய நிலநடுக்கம், சுனாமி பாதிப்பால் உயிரிழப்பு 384 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தில் 384 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலான உயிரிழப்புகள் ஆழிப்பேரலை காரணமாக இடம்பெற்றுள்ளது. கடற்கரைகளில் நின்றிருந்தவர்கள் பாரிய அலை ஏற்பட்ட போது சிதறி ஓடியதாலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர்.

இன்னும் பலர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலூரில் பாரிய அழிவு காரணமாக 29 பேர் காணாமல் போயுள்ள நிலையில் 540 க்கும் அதிகமானோர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7.5 ரிக்டர் பரிமாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட பலமான அதிர்வுகள் காரணமாக கடல் அலைகள் சுமார் 6 மீற்றர்கள் (18 அடிகள்) வரை மேலேழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் இன்று காலை முதல் கடற்கரைகளில் ஒதுங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கரையோர சுற்றுலாத்துறை நகரான பாலுவின் (Palu) கடற்கரையில் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேற முடியாமல் போனதால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களை அடுத்து 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷிய அனர்த்த கட்டுப்பாட்டு முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த பல குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.




உடைகளை களைந்துவிட்டு முன் நில் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

உடைகளை களைந்துவிட்டு முன் நில் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தற்போது நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லியிருப்பது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 

காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் தான் நானா படேகர். இந்த சர்ச்சை பற்றி தனுஸ்ரீக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு பிரபல இயக்குனர் மீது பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார் தனுஸ்ரீ. 

’சாக்லேட்’ படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி நடிகர் இர்பான் கானை வைத்து ஒரு சீன் படமாக்கிகொண்டிருந்தார்.

அப்போது திடீரெனெ தனுஸ்ரீயிடம் அவர் 'அவருக்கு எக்ஸ்பிரஷன் வர வேண்டும். உன் உடைகளை களைந்துவிட்டு அவர் முன் நில்' என கூறினார். அது அதிர்ச்சியாக இருந்தது என தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலதிக அதிகாரம் வழங்கினால் வடக்கிற்கு ஒரு பாடம் புகட்டுவோம்....! இராணுவ தளபதி

மேலதிக அதிகாரம் வழங்கினால் வடக்கிற்கு ஒரு பாடம் புகட்டுவோம்....! இராணுவ தளபதி

வடக்கில் அட்டூழிய செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களை அடக்குவதற்கு எங்களுக்கு மேலதிக அதிகாரங்களை அரசாங்கம் வழங்கினால் அதனை முடிவுக்கு கொண்டுவர முடியுமென இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

“தேசிய பாதுகாப்பே இராணுவத்தின் முக்கிய நோக்கமாகும். ஏனையோரை விட தேசிய பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினருக்கு அதிகம் தெரியும்.

ஆகையால், வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறுகின்ற அட்டூழிய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்துக்கு அரசாங்கம் மேலதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அவ்வாறு அரசாங்கம் அதிகாரங்களை வழங்குமானால், நிச்சயம் நாட்டில் இடம்பெறுகின்ற பெரும்பாலான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த முடியும்.

இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்களை கண்மூடித்தனமாக அகற்றவில்லை. தேவை ஏற்படின் மீண்டும் இராணுவ முகாம்களை அப்பகுதியில் இராணுவம் அமைக்கும்” எனவும் மகேஷ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கும் அடையாள அட்டை...! வரலாற்றில் இதுவே முதல் தடவை..!

மாணவர்களுக்கும் அடையாள அட்டை...! வரலாற்றில் இதுவே முதல் தடவை..!

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 90 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்னும் எஞ்சியிருப்பது 7200 பேருக்கான அடையாள அட்டைகள் மாத்திரமே எனவும், அதுவும் அடுத்து வரும் நாட்களில் தயார் செய்து வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயற்முறைப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. 

இப்பரீட்சைக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட முடிந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் தடவை எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடிகை சோனம் கபூரின் கவர்ச்சி....! ரசிகர்கள் அதிருப்தி...! புகைப்படம் உள்ளே

நடிகை சோனம் கபூரின் கவர்ச்சி....! ரசிகர்கள் அதிருப்தி...! புகைப்படம் உள்ளே

நடிகை சோனம் கபூர் சில மாதங்கள் முன்பு ஆனந்த் அஹுஜா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 

அவர்கள் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பலமுறை வைரலாகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கணவருடன் மிலன் பேஷன் வீக் விழாவுக்கு வந்திருந்த அவர் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

விழா நடந்த நாட்டில் இவ்வளவு கவர்ச்சி சாதாரண ஒன்று தான் என்றாலும், இந்திய ரசிகர்கள் பலரும் இந்த கவர்ச்சி உடை முகம் சுளிக்கும்படியாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.






2 நாள் வசூலில் மாஸ் காட்டும் செக்கச்சிவந்த வானம்- முழு விவரம்

2 நாள் வசூலில் மாஸ் காட்டும் செக்கச்சிவந்த வானம்- முழு விவரம்

மணிரத்னம் ஈஸ் பேக் என்று சந்தோஷமாக ரசிகர்கள் கூறுகின்றனர். அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என பெரிய நடிகர்கள் பட்டாளத்தையே வைத்து வெளியாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம்.

படம் வெளியான இரண்டு நாட்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அதோடு எல்லா நடிகர்களுக்கு ஒவ்வொரு காட்சியை குறிப்பிட்டு இது சூப்பர், அந்த காட்சி செம என ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னையில் 2 நாள் முடிவில் இப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

முதல் நாள்- ரூ. 89 லட்சம்
இரண்டாம் நாள்- ரூ. 80 லட்சம்

வசூல் இதோ போல் இருந்தால் அடுத்த வாரத்தில் மற்றொரு ரூ. 1 கோடியை எட்டிவிட முடியும்.

ஐஸ்வர்யா இல்லை.. இவரின் பெயர் தான் கெட்டுவிட்டது! மஹத் பேச்சால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

ஐஸ்வர்யா இல்லை.. இவரின் பெயர் தான் கெட்டுவிட்டது! மஹத் பேச்சால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மஹத் ரெட் கார்டு வாங்கி வெளியேறியேறியவர். அவர் நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வெளியில் இருக்கும் நிலைமை பற்றி பேசினார்.

"விஜய் டிவி எப்போதும் அனைத்து போட்டியாளர்களை நல்ல பெயர் வாங்கி கொடுத்து தான் வெளியில் அனுப்பியுள்ளனர். ஆனால் டேனி மட்டும் அப்படி நடக்கவில்லை. கமல் சார் ஒன்று பேசினால், சம்பந்தமே இல்லாமல் அவன் ஒன்று பேசுகிறான்" என மஹத் கூறியுள்ளார்.

வெளியில் சென்று டேனி வேறு மாதிரி இன்டர்வியூகொடுத்துள்ளார் என ஐஷ்வர்யா ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் கூறியபோது அது அவர்களுக்கு அதிர்ச்சியாக் இருந்தது.
சார­திக்கு 75 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது சாவ­கச்­சேரி நீதி­மன்றம்!

சார­திக்கு 75 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது சாவ­கச்­சேரி நீதி­மன்றம்!

அனு­ம­திப் பத்­தி­ர­மின்றி மணல் ஏற்­றிச்­சென்ற டிப்­பர் வாக­னச் சார­திக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்று 75 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது.

கடந்த 23 ஆம் திகதி ஏ 9 வீதி­யில் வந்த டிப்­பர் வாக­னத்­தைப் பொலி­ஸார் வழி­ம­றித்­த­னர். 

சோதனை நடத்­தி­ய­போது உரிய அனு­ம­தியை அவர் பெற்­றி­ருக்­க­வில்லை. சார­திக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தொடுக்­கப்­பட்­டது.

அது நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. சாரதி குற்­றத்தை ஒப்­புக் கொண்­டார். 

அதை­ய­டுத்து 75 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. மண­லைப் பறி­மு­தல் செய்­யு­மா­றும் நீதி­மன்று பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டது.
அமைச்சர் பதவி நீக்கம்: விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு பரிசீலனைக்கு..!

அமைச்சர் பதவி நீக்கம்: விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு பரிசீலனைக்கு..!

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என இன்று தீர்மானித்த நீதியரசர்கள் குழாம் பரிசீலனையை ஒத்திவைத்தது.

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வௌியிட்ட வர்த்தமானிக்கு அமைய செயற்படுவதை இடைநிறுத்தி கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்தது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் 30-க்கும் மேற்பட்டோர் பலி...!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் 30-க்கும் மேற்பட்டோர் பலி...!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம் தாக்கியது. இதனால், பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்த பூகம்பத்தை தொடர்ந்து, சுனாமியும் தாக்கியது.

5 கோடி பயனர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது: வெளியான அதிர்ச்சி தகவல்

5 கோடி பயனர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது: வெளியான அதிர்ச்சி தகவல்

சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

5 கோடி பயனர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்.

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் பேஸ்புக் பயனர்களின் அக்கவுண்ட்கள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :- 

இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். 

இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.

ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது. அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும். 

எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கய் ரோசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹேக் செய்யப்பட்ட 5 கோடி அக்கவுண்ட்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட்களில் உங்களுடைய அக்கவுண்டும் ஒன்றா என கண்டுபிக்டிக்க ஒரு வழி உள்ளது. 

நாம் முதல்முறையாக நமது செல்போன்களில் அல்லது கணிணியில் பேஸ்புக் லாக்-இன் செய்யும் போது பார்ஸ்வேட் கொடுப்போம், பின்னர் அந்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுக்காமல் இருக்க சேவ் பாஸ்வேர்ட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்வோம். இதனால் அடுத்த முறை நமது அக்கவுண்டை லாக்-இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேக்காமலேயே அக்கவுண்ட் திறக்கும். 

ஆனால், பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக் செய்யப்பட்டுள்ள 5 கோடி அக்கவுண்டும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட் என மொத்தம் 9 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது. லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும் அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம். 

எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்துகொள்ளலாம்.
ஆசிய கோப்பை பைனல் : இந்தியா த்ரில் வெற்றி ...வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7வது முறையாக சம்பியன்

ஆசிய கோப்பை பைனல் : இந்தியா த்ரில் வெற்றி ...வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7வது முறையாக சம்பியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.




Friday, September 28, 2018

ஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ் உண்மை வெளியானது....!

ஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ் உண்மை வெளியானது....!

தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். 

இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். 

இதுநாள் வரை பார்த்ததில் ரித்விகா தான் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். 

அடுத்தபடியாக ஐஸ்வர்யா, விஜி, ஜனனி என மூவரும் இருந்தனர். ஆனால் இன்று அந்த விவரம் ஒளிபரப்பப்படவில்லை.

இதனால் பிக்பாஸ் தில்லுமுல்லு செய்வதற்காகவே இன்று வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்கின்றனர். 

ஆனால் ஒருநாள் முன்னரே பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை எடுப்பார்கள், இதனால் கணக்கெடுப்பு முடித்துவிட்டார்களோ என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது,
தனிப்பட்ட காரணம்: மஹிந்த ராஜபக் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம்!

தனிப்பட்ட காரணம்: மஹிந்த ராஜபக் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ திடீர் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் சிங்கப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருப்பதோடு, தனது சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்.

மேலும் அவருடன் குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.

எதிர்வரும் ஒக்ரோபர் 01ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புவார்என்றும் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவை தாக்கியது பாரிய சுனாமி....! காணொளி உள்ளே

இந்தோனேசியாவை தாக்கியது பாரிய சுனாமி....! காணொளி உள்ளே

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது.

சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு பாலு என்ற பகுதியில் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடன் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சுனாமி கரையை தாக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் 30-க்கும் மேற்பட்டோர் பலி...! UPDATE 2
கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேர் மீதான வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டது.

மேலும் குறித்த உத்தரவிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதன் மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முறைப்பாட்டாளர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் கொழும்பு நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு: ஆங் சாங் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து

ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு: ஆங் சாங் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து

ஒட்டாவா:மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஆங் சான் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான மியன்மரின் ஆங் சான் சூகி மியான்மர் அரசாங்கத்தின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருக்கு கனடா அரசு 2007-ஆம் ஆண்டு கவுரவ குடியுரிமை வழங்கியது. திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லமா, பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு செயலாற்றி வரும் பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய், மற்றும் மறைந்த தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா உள்பட 5 பேருக்கு மட்டுமே இதுவரை கனடா நாட்டின் கவுரவ குடியுரிமை வழங்கபட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஆங் சாங் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மியான்மரில் ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டு ராணுவத்தின் அடக்குமுறையை தடுக்க தவறியதாக ஆங் சாங் சூகி மீது சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையின் காரணமாக அவரது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமையை ரத்து செய்வது என்று கனடா முடிவு செய்தது. இதற்காக கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே ஆங் சாங் சூகியின் கவுரவ குடியுரிமை ரத்தாகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றக்கோருவது இன்னொரு யுத்தத்திற்காகவே...! ஆனால் தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை - மகேஷ் சேனாநாயக்க

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றக்கோருவது இன்னொரு யுத்தத்திற்காகவே...! ஆனால் தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை - மகேஷ் சேனாநாயக்க

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றவேண்டும் என தமிழ் தலைமைகளும் புலம்பெயர் அமைப்புக்களும் கோருவது இன்னொரு யுத்தத்தை ஆரம்பிப்பதற்காகவே என இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அங்குள்ள தமிழ் மக்களில் 80 விகிதத்திற்கும் அதிகமானவர்கள் அங்கிருக்கும் இராணுவம் வெளியேறுவதை விரும்பவில்லை என்றும் கூறினார்.

கண்டி தளதா மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தவொரு அச்சுறுத்தலும் காணப்படவில்லை. எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு இராணுவம் தயாராக இருக்கின்றது என கூறினார்.

அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு காணப்படுகின்றது.

நாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை வலுவான படைகளாக உள்ளன. நாட்டில் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த சக்திகள், நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலை தொடர்ப்பிலும் நன்கு அறிந்திருப்பதாக தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்..!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்..!

இந்தோனேஷியாவின் சுலாவேசி நகரில் 7.5 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்க்கு முன்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தை தொடர்ந்தே தற்போது இரண்டாவது தடவையாகவும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ஏற்பட்ட செத்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன் கடந்த யூலை ஓகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய புகையிரத கட்டணங்கள் திங்கட்கிழமை முதல் அமுல்

புதிய புகையிரத கட்டணங்கள் திங்கட்கிழமை முதல் அமுல்

ரயில் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டண மாற்றம் 10 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த மாற்றங்களின் பிரகாரம் கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் போது வெளிநாட்டுக்கு ஓடிய மஹிந்த அரசு: - உண்மையை போட்டுடைத்த மைத்திரி

விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் போது வெளிநாட்டுக்கு ஓடிய மஹிந்த அரசு: - உண்மையை போட்டுடைத்த மைத்திரி

விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள். அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பிரதி பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை முதற்தடவையாக தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்,

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில்,உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். 

போரின் முக்கிய கட்டத்தில் இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று யாருக்கும் தெரியாது, எனக்கு மாத்திரம் தான் அது தெரியும்.

அவ்வேளையில் விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவா கினர்.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பிரதி பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன்.

எனவே நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டுவாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்.என்னுடைய தலைமையின் கீழ் நடந்த அந்த இறுதிப்போரில் படையினர் எந்த பொற்குன்றங்களையும் செய்யவில்லை.அவர்கள் போர் விதிமுறைகளை மீறாமல் அந்த போரை நடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார்கள்.
சிம்புவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா

சிம்புவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கடந்த பல வாரங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய நிலையில் மக்களின் எண்ணங்களை மீறி பிக்பாஸ் ஆதரவால் இறுதிபோட்டி வரை வந்துவிட்டார். 

ஆனாலும் ரித்விகாவிற்கு ஒரு கோடிக்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளதால் ஐஸ்வர்யா வின்னர் இல்லை என்பது மட்டும் ஒரு சிறிய ஆறுதல்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சென்றாயன், ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்தார். வெளியே ஐஸ்வர்யாவுக்கு பயங்கர புகழ் என்று பில்டப் செய்த சென்றாயன், சிம்புவை தான் சந்தித்தபோது தனது அடுத்த பட ஹீரோயின் ஐஸ்வர்யாதான் என்று கூறியதாக சொன்னார். 

இந்த விஷயத்தை கேட்டதும் துள்ளி குதித்து ஐஸ்வர்யா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சென்றாயன் கூறிய இந்த தகவல் உண்மையா? அல்லது சிம்பு ரசிகர்களின் வாக்குகள் ஐஸ்வர்யாவுக்கு கிடைக்க பிக்பாஸ் எழுதி கொடுத்த வசனமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படமும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களிலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஐஸ்வர்யா எந்த படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அரசியல் கைதிகள் விவகாரம் - அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்

அரசியல் கைதிகள் விவகாரம் - அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் புதன் கிழமை ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நீதியமைச்சில் நடக்கவுள்ள இந்தக் கலந்துரையாடலில், கூட்டமைப்பு மற்றும் அரசதரப்பு பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களின் படுகொலைச் சதித்திட்டம்: விசாரணை வளையத்தில் உயர்மட்டக் பொலிஸ் அதிகாரிகள்

ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களின் படுகொலைச் சதித்திட்டம்: விசாரணை வளையத்தில் உயர்மட்டக் பொலிஸ் அதிகாரிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின். கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதாள உலக தலைவர் மகதுரே மதுஸ் உதவியுடன், இந்த சதித் திட்டத்தை தீட்டினார் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த நாலக சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் லதீப் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று, அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

நாலக சில்வாவுக்கும், நாமல் குமாரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலில், பிரதி காவல்துறை மா அதிபர்களான லதீப், முனசிங்க, ஜெயவர்த்தன ஆகியோரின் பெயர்களும் வருவதால், அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட வேண்டிய தேவை இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மமதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் விஜியின் வாக்குவாதம்.... எதற்காக?

மமதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் விஜியின் வாக்குவாதம்.... எதற்காக?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் தங்கள் ஆதரவினை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டாக பதிவு செய்து வருகின்றனர்.

இன்னும் முடிவதற்கு இரு தினங்களே இருக்கும் நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்கள் எல்லோரும் உள்ளே வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மஹத், செண்ட்ராயன் உள்ளே சென்று வந்தனர். இன்று வெளியான ப்ரொமோவில் தாடி பாலாஜி, அனந்த வைத்தியநாதன், மமதி ஆகியோர் வந்துள்ளனர். இதில் மமதியுடன் விஜி செல்லமாக சண்டையிட்டுள்ளார்.

சென்னையில் வலிப்பு நோய்க்கு தவறாக மருந்து தந்ததால் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

சென்னையில் வலிப்பு நோய்க்கு தவறாக மருந்து தந்ததால் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை : சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் வலிப்பு நோய்க்கு தவறுதலாக மருந்து தந்ததில் சிறுமி லத்திகா உயிரிழந்துள்ளார். 

சிறுமி லத்திகாவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டவுடன் வீட்டில் தவறாக மருந்து தந்ததில் சிறுமிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி லத்திகா உயிரிழந்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கின் போது ஆண், பெண் இருவரும் சமமானவர்கள் என்று தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா கருத்து தெரிவித்தார்.

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க...!அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வியால் ஷாக் ஆகிய போட்டியாளர்கள்

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க...!அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வியால் ஷாக் ஆகிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ரித்விகாதான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது. 

இருப்பினும் ஐஸ்வர்யாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் அனந்த் வைத்தியநாதன், மமதிசாரி மற்றும் பாலாஜி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். 

பாலாஜியிடம் ஏற்பட்ட மனமாற்றம் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக கூறிய அனந்த் வைத்தியநாதன், இந்த வீட்டில் இன்னும் எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டார். 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை தாக்குப்பிடித்த உங்கள் எல்லோருக்கும் வெளியே ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது என்றும் ஆறுதலாக கூறினார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அழுகை, ஆணவ, ஆத்திரம் என அனைத்து வகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று மமதிசாரி கூறினார். மொத்தத்தில் இன்று மூவரின் வருகையால் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல கோடிகளை தொட்ட செக்கச்சிவந்த வானம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை

பல கோடிகளை தொட்ட செக்கச்சிவந்த வானம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் சென்னையில் மட்டும் ரூ 90 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, ஏனெனில் இதுவரை வந்த மணிரத்னம் படங்களில் மிகப்பெரும் ஓப்பனிங் இதற்கு தானாம்.

இன்றும் நாளையும் பல காட்சிகள் ஹவுஸ்புல் என்பதால், எப்படியும் ரூ 40 கோடி வரை உலகம் முழுவதும் முதல் மூன்று நாள் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

7-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்திய அணி....!

7-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்திய அணி....!

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். 

அந்த வகையில், இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணியும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய அணி தோல்வியை சந்திக்கா விட்டாலும், குட்டி அணிகளுக்கு இடையே சற்றே தடுமாறியது. 

ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் செயடஹ்து பெரிய விஷயமாகும். 

அதே நேரத்தில் வலுவான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ள வங்கதேச அணி, இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு சவாலாகவே இருக்கும். 

இந்த போட்டியில், இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி வாய்ப்பை பெறலாம்.

இதுவரை இந்திய அணி 6 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. எனவே, 7-வது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆசியக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் 400க்கும் மேற்ப்பட்ட மருந்து வணிகர்கள் கடையடைப்பு...!

தூத்துக்குடியில் 400க்கும் மேற்ப்பட்ட மருந்து வணிகர்கள் கடையடைப்பு...!

தூத்துக்குடி : ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 400க்கும் மேற்ப்பட்ட மருந்து வணிகர்கள் கடையடைப்பு.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.சலீம் புதன்கிழமை கூறியது: ஆன்லைன் மூலம் பல்வேறு பொருள்கள் விற்பனை செய்ப்படுவதைப் போல, தற்போது மருந்து பொருள்களும் விற்பனை நடைபெறுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்த விளக்க துண்டு பிரசுரங்கள் மருந்துக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்கள் தான் பாதிப்படைவார்கள். அதாவது, ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யும் போது மருந்தின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியாது. 

மேலும் மருந்து கடைகள் மூலம் விற்பனை செய்யும் மருந்துகள் அந்தந்த மாநிலத்தில் இருந்து வாங்குவதால் ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. ஆன்லைன் மருந்து விற்பனையில் இந்த முறை கிடையாது. மேலும் பல மருந்துகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டால் வீரியம் குறைந்து பயனற்றதாகி விடும்.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் சீட்டுக்கு எப்படி மருந்து சாப்பிட வேண்டும் என்பதை மருந்துகடை விற்பனையாளர்கள் மட்டுமே சொல்ல முடியும். இதுதவிர, தூக்க மாத்திரை, வீரிய மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள் தங்குதடையின்றி கிடைக்கும் நிலை ஏற்படும். இது சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.

10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை சென்னையில் கைது!

10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை சென்னையில் கைது!

சென்னை: கேரளாவின் கோழிக்கோட்டில் 10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற இடத்தில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. 

இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே பள்ளியில் பணியாற்றும் 40 வயதான ஆசிரியையும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.ஆசிரியை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

தனிமையில் இருந்த ஆசிரியைக்கு மாணவனின் பேச்சு ஆறுதலாக இருந்தது. சமீபத்தில் ஆசிரியை அந்த மாணவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். 

அந்த செல்போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 23ம் திகதி அந்த மாணவன் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் முகம்மா போலீசில் புகார் அளித்தனர்.

அப்போது தான் அந்த ஆசிரியையும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. சேர்த்தலா டிஎஸ்பி லால் உத்தரவுபடி இருவரையும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் அறை எடுத்து குடும்பம் நடத்திய கேரள பள்ளி ஆசிரியை ஃபெரோனா கைது செய்யப்பட்டுள்ளார்.