Saturday, October 6, 2018

கணுக்கால் பிரச்சனை: அரையிறுதிப் போட்டியில் விளையாடாமல் ஃபேபியோ பக்னினி விலகல்!

கணுக்கால் பிரச்சனை: அரையிறுதிப் போட்டியில் விளையாடாமல் ஃபேபியோ பக்னினி விலகல்!

டென்னிஸ் உலகில் 14 வருடங்கள் பழமையான சீன பகிரங்க டென்னிஸ் போட்டிகள் பீஜிங் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் காலிறுதி போட்டியில் ஃபேபியோ பக்னினி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இருப்பினும் கணுக்கால் பிரச்சனை காரணமாக இன்று (சனிக்கிழமை) அரையிறுதி போட்டியில் அவரால் பங்குபற்றமுடியாமல் போனது. இதன் காரணமாக அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலிய டென்னிஸ் வீரர் ஃபேபியோ பக்னினி மற்றும் ஹங்கேரிய டென்னிஸ் வீரர் Márton Fucsovics ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர்.

இதில் முதல் செட்டை 6- 4 என கைப்பற்றிய ஃபேபியோ பக்னினி 2 ஆவது செட்டையும் 6- 4 என கைப்பற்றி இலகுவாக வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு நுழைந்த ஃபேபியோ பக்னினியால் இன்று நடைபெற்ற போட்டியில் விளையாட முடியாமற்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை, மழை தொடரும்.....!

சீரற்ற காலநிலை, மழை தொடரும்.....!

தற்போது நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான நிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல் மாகாணத்தின் உள்ளகப் பகுதிகளிலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மண்சரிவு எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளும், அதனைச் சூழவுள்ள பகுதிகளும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள, மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்யுமாயின் மண்சரிவு, பாறைகள் வீழ்தல், நில இறக்கம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

எனவே, பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க உள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. 

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இருப்பினும் வரும் நவம்பரில் ஈரானிடம் இருந்து 9 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.

இந்நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை கணிசமாக குறைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு, பொருளாதார தடை விதிப்பில் இருந்து சலுகைகள் அளிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு மாத தடைக்கு பின்னர் அகமட் ஷேஹ்சாத் மீண்டும் அணிக்குள் இணைவு!

நான்கு மாத தடைக்கு பின்னர் அகமட் ஷேஹ்சாத் மீண்டும் அணிக்குள் இணைவு!

நான்கு மாத தடைக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் அகமட் ஷேஹ்சாத் மீண்டும் அணிக்கு திரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தொடக்க வீரரான ஷேஹ்சாத் கடந்த ஜூன் மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போட்டியின் போது ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, கடந்த ஜூலை 10ஆம் திகதி அனைத்து வித போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அந்தவகையில் இத்தடை எதிர்வரும் நவம்பர் மாதம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அந்த மாதம் 11ஆம் திகதியில் இருந்து அணிக்கு திரும்புவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 T-20 போட்டியின் போது அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

26 வயதான அகமட் ஷேஹ்சாத் 13 டெஸ்ட், 81 ஒருநாள் மற்றும் 57 T-20 போட்டிகளிலும் கடந்த மே மாதம் இடம்பெற்ற உள்ளூர் போட்டியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சு: மேற்கிந்திய தீவுகள் அணி படுதோல்வி!

சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சு: மேற்கிந்திய தீவுகள் அணி படுதோல்வி!

இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆவது இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 

இதனால் முதலாவது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்களை குவித்து இடைநிறுத்தியது. இதில் புதுமுக வீரர் பிரித்விஷா 134 , விராட் கோஹ்லி 139, ஜடேஜா 100 ஓட்டங்களை பெற்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், லீவிஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அந்தவகையில் நேற்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றது.

இன்று 3 ஆவது நாள் ஆட்டத்தில் 555 ஓட்டங்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. இருப்பினும் 181 ஓட்டங்களுக்கு அனைத்து விகாட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் 4, மொகமட் ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இந்நிலையில் 468 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ‘பாலோஒன்’ 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஒட்டாங்களை மட்டுமே பெற்று 272 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் குலதீப் யாதவ் 5 விக்கெட்களையம், ஜடேஜா 3, அஷ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3ஆவது ஆண்டாகவும் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து விராட் சாதனை!

3ஆவது ஆண்டாகவும் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து விராட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்துள்ள விராட் கோஹ்லிக்கு தற்போது பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்கோட்டில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 139 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் தனது 24ஆவது சதத்தை எட்டிய கோஹ்லி பல்வேறு சாதனைகளையும் தற்போது தன்வசப்படுத்தியுள்ளார். அந்தவகையில், இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைச்சதங்கள் உட்பட 1,018 ஓட்டங்களை அவர் சேர்த்துள்ளார்.

இதனால், இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 719 ஓட்டங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மேலும், விராட் கோஹ்லி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் 1,215 ஓட்டங்களையும், 2017ஆம் ஆண்டில் 1,059 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6 ஆவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

அவுஸ்ரேலியாவின் மேத்யூ ஹைடன், ஸ்டீவன் சுமித், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8 மாத குழந்தைப் பருவத்தில் யுத்தத்தின் போது கையை இழந்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

8 மாத குழந்தைப் பருவத்தில் யுத்தத்தின் போது கையை இழந்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

இறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் கையை இழந்த ராகினி என்ற மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான இவர், புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பின்னால் பொதிந்துள்ள கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு அப்பால் இந்த மாணவியின் வெற்றியில் துயரும் கலந்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் அவரது தயார் உயிரிழந்த நிலையில், ராகினி 8 மாத குழந்தைப் பருவத்தில் தனது இடது கையை இழக்க நேரிட்டது.

அதே எறிகணைத் தாக்குதலில் தந்தையும் காயமடைந்த நிலையில், அன்று முதல் ராகினி அப்பம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.

வறுமையான சூழலில் பிரத்தியேக வகுப்புகள் எதற்கும் செல்லாது பாடசாலைக் கல்வியுடன் வீட்டில் செய்த மீட்டலும் இவரின் இந்தப் பெறுபேற்றுக்குக் காரணம்.

தனக்கு கற்பித்த ஆசிரியரைப் போல் தானும் பிறருக்கு கற்பிக்க விரும்புவதாக ராகினி குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில் தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம் அஜித் குணமாகப் பேசிய வைரலாகும் வீடியோ!

பள்ளியில் தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம் அஜித் குணமாகப் பேசிய வைரலாகும் வீடியோ!

பள்ளியில் தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம் அஜித் குணமாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனக்கென்று சில கொள்கைகளை வைத்துக்கொண்டு, அதன்படி வாழ்ந்து வருகிறார் அஜித். யாருக்காகவும் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்வதை விரும்ப மாட்டார். அஜித் வாழ்க்கையில் அப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வைரலாகி வருகிறது.
பள்ளிக்குச் சென்ற அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க அங்குள்ள பணியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், பள்ளியில் அவ்வாறு எடுப்பது தவறு என்றும், தானே சொல்லி அனுப்புவதாகவும் அஜித் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“ஸ்கூல்ல எடுக்கக் கூடாது. தப்பா நினைச்சிக்காதீங்க. இன்னொரு நாள் எடுக்கலாம், நான் சொல்லி அனுப்புறேன். தம்பி, அந்த கேமரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. தயவுசெஞ்சு தப்பா நினைச்சிக்காதீங்க. ஓகே? தேங்க்ஸ்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார் அஜித்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், தற்போதுதான் வைரலாகி வருகிறது.
யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 மணி முதல் 9.30க்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை இடைமறித்த குறித்த கும்பல் வாகன சாரதியை தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொருக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தம்பிலேனுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த கடையொன்றினை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன், கடையில் நின்றவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

பின்னர் ஓட்டுமடம் பகுதியில் சிறிது நேரம் நின்று, வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடங்களுக்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகிவரும் நடிகர் விஜய் மற்றும் அவரது மகளின் புகைப்படம்

இணையத்தில் வைரலாகிவரும் நடிகர் விஜய் மற்றும் அவரது மகளின் புகைப்படம்

நடிகர் விஜய் தன் மகளுடன் வெளியூரில் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Friday, October 5, 2018

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்!

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 5 - அக்டோபர் 11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும் திருப்திகரமான காலமிது. ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்வுகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலில் பூச்சிகளின் பாதிப்பு குறையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் எண்ணம் உருவாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் தேக்க நிலை உண்டாகும். விளையாட்டில் கவனத்தைக் குறைத்துக் கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சூரியனை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 6.

சந்திராஷ்டமம்: இல்லை.

தேசிய ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு அடையாளத்தை தேடித்தந்த மாணவனின் இலட்சியம்!

தேசிய ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு அடையாளத்தை தேடித்தந்த மாணவனின் இலட்சியம்!

தேசிய ரீதியாக சாதனை படைத்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தனது எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.

பெறுபேறுகளுக்கு அமைய யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தேசிய ரீதியாக தமிழ் மொழியில் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தனது வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

தனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, சக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பாலியல் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி: சென்னையில் குடியேறினார்

சினிமாவில் பாலியல் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி: சென்னையில் குடியேறினார்

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டு வாய்ப்பு தராமல் தன்னை ஏமாற்றிவிட்டனர் என தெலுங்கு சினிமாவில் புயலை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.

தெலுங்கு சினிமா தனக்கு கை கொடுக்காத நிலையில் தமிழ்நாட்டில் என்ட்ரியானார். தற்போது ஸ்ரீரெட்டி டைரி என்ற பெயரில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சென்னையிலேயே குடியேறி விட்டார் ஸ்ரீரெட்டி. இன்று தனது வீட்டிற்கு பால் காய்ச்சி, பசு மாடு, கன்றுக்கு பூஜை செய்து குடியேறி உள்ளார். இதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் கேட்டபோது, சொந்தமாக வீடு வாங்கவில்லை. வாடகைக்கு தான் வசிக்கிறேன். முதன்முதலில் சென்னையில் குடியேறுவதால் பால் காய்ச்சி முறையாக சென்றேன். 

தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன், இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் விஷாலை சந்தித்து உதவி கோர உள்ளேன். தமிழக மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்றார்.



மீண்டும் அணிக்குள் இணையும் டு பிளெசிஸ்: தென் ஆபிரிக்க அணிக்கு மேலும் பலம்!

மீண்டும் அணிக்குள் இணையும் டு பிளெசிஸ்: தென் ஆபிரிக்க அணிக்கு மேலும் பலம்!

காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியிருந்த டு பிளெசிஸ் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் 6 ஆம் திகதி சிம்பாவே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலது தோள்பட்டை காயம் காரணமாக கடந்த போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டு பிளெசிஸ் அந்த காயத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், அடுத்த போட்டியில் விளையாடும் உடற் தகுதியுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிம்பாவே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணியானது 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் டு பிளெசிஸ் அணிக்கும் திரும்புவதானது அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியின்  இமேஜை மாற்றிய பிக்பாஸ் 2

இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியின் இமேஜை மாற்றிய பிக்பாஸ் 2

கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் யாஷிகா. 

அந்த படத்திற்கு பிறகு அவரை, கோடம்பாக்கமே ஆபாச பட நடிகையாகத்தான் பார்த்தது. தனது இமேஜை மாற்ற முடியாமல் தவித்து வந்த யாஷிகா, பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது விருப்பு, வெறுப்புகளை ஏற்படுத்தினார். இப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த போது அவரை சினிமாக்காரர்களும், ரசிகர்களும் பார்க்கிற பார்வையே மாறி விட்டதாம். 

அதோடு சில புதிய படங்கள் சம்பந்தமாகவும் யாஷிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.

பிக்பாஸிற்கு பிறகு என் மீது பதிந்திருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து இமேஜ் மறைந்து விட்டது என்கிறார் யாஷிகா.\
ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்!

ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்!

ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் கடந்த மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, டோரிக்கு மேயர் போட்டியில் முன்னிலையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்ததோடு, 56 சதவீத வாக்குப்பதிவு டோரிக்கும், 28 சதவீத ஆதரவு ஜெனிபர் கீஸ்மட்க்கும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள்: ராகுல் காந்தி கோரிக்கை

எரிபொருள் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள்: ராகுல் காந்தி கோரிக்கை

எரிபொருள் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) டுவிட்டரில் பக்கத்தில் அவர் அந்த கோரிக்கையிற் விடுத்திருந்தார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “மதிப்பிற்குரிய மோடி, விண்ணை எட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் செங்குத்தாக உயர்ந்து சென்ற நிலையில் மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

ஆனால், கலால் வரி குறைப்பு என்பதே கிடையாது என்ற ஸ்திரமான நிலையே மத்திய அரசு பின்பற்றியது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து 11 மாநிலங்களும் ரூ. 2.50 குறைப்பை அறிவித்தது.

ஜி.எஸ்.டி. அமுல்படுத்தப்பட்ட பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் அதில் இணைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது.

இதுதொடர்பாக நிதியமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதில்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மீண்டும் இதனை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு! -1000இற்கும் அதிகமானோரை காணவில்லை

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு! -1000இற்கும் அதிகமானோரை காணவில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குடிநீருக்கு மாத்திரம் அங்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்பு காரணமாக பல துயரங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு இந்தோனேசிய அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் தமது உதவிகளை வழங்கி வருகின்றன.

பலு பிரதேசத்தில் 1200 பேர் உயிரிழந்தனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பல வீதிகள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன இன்னமும் பல பகுதிகளில் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உயிர்பிழைந்த மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.

பலுவில் சில வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வீதிகளில் தமது விற்பனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னமும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
ரஷ்யாவில் கோர விபத்து: 13 பேர் பரிதாபமாக பலி!

ரஷ்யாவில் கோர விபத்து: 13 பேர் பரிதாபமாக பலி!

ரஷ்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொஸ்கோவிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

15 பயணிகளுடன் பயணித்த வான் ஒன்று, எதிரே வந்த பொதுப் போக்குவரத்து பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ரஷ்யாவின் திவெர் என்ற நகரத்திலிருந்து அருகிலுள்ள ஸ்டாரிஸ்டா நகருக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் வானில் பயணித்த 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, 19 வயதான ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் தொடர்பான அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் பேருந்தின் சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அண்ணா, அந்த வரி என்னுடையது” - வெளிச்சத்திற்கு வந்த விஜய்யின் ‘ஜம்’ வசனம்

“அண்ணா, அந்த வரி என்னுடையது” - வெளிச்சத்திற்கு வந்த விஜய்யின் ‘ஜம்’ வசனம்

விஜய் பேசிய வசனம் யார் எழுதியது என்பதற்கான விடை இப்போது சமூக வலைத்தளத்தின் மூலம் கிடைத்துள்ளது.

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய், பல அரசியல் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கூறி இருந்தார். குறிப்பாக ‘நிஜத்தில் முதலமைச்சரானால் நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்’என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கருத்தை அதிமுக வட்டத்தினர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்றும் கூறியிருந்தார்.

இதே விழாவில் விஜய் இன்னொரு கருத்தையும் கூறினார். அதாவது தனது வாழ்க்கையில் அந்தக் கருத்தை அவர் பின்பற்றி வருவதாகவும் கூறினார். ரைமிங் ஆகவும் டைமிங் ஆகவும் இருந்த அந்த வசனம் அவரது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. விஜய் தனது பேச்சில், “கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும், உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முன்னு இருக்கும்’என்றார். ஆனால் இந்த வசனம் யாருடையது என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

பலரும் அந்த வசனத்தை இப்போது ‘மியூசிக்கலி’ செயலியில் எடுத்துபோட்டு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வசனம் யாருடையது எனத் தெரிய வந்துள்ளது. ட்விட்டரில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் கயல்விழி என்பவர் (@kayal_twitz) இது தன்னுடைய ட்வீட்தான் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் தனது டயலாக்கை விஜய் நிஜ வாழ்க்கையில் கடைபிடித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் போட்டுள்ள நிலைத்தகவலில், “என்னோட லைன்ஸ்தான் அண்ணா அந்த டிவிட் ...என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு ...வாழ்த்துகள் அண்ணா @actorvijay” என்று அவர் உற்சாகம் பொங்க எழுதியுள்ளார்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த மாணவி முல்லையில் சாதனை!

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த மாணவி முல்லையில் சாதனை!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள் 2018 தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும் தரம் 5 வகுப்பாசிரியரின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்! கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலய மாணவன் சாதனை!

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்! கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலய மாணவன் சாதனை!

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவன் பசிந்து பாஷித்த ரணசிங்க 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2018ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள இவர் கினிகத்தேனை பகுதியை சேர்ந்தவராவார்.

இதேவேளை, ஹட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான ஆனந்தன் தர்வின் 195 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாணவன் குமார் கிர்திஸ் 194 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடம் வவுனியா மாணவியின் சாதனை!

அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடம் வவுனியா மாணவியின் சாதனை!

வெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின் படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா என்ற மாணவி 197 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக பணிபுரிந்து வருவதுடன், அந்த மாணவி கல்வி கற்ற சிவபுரம் அ.தக. பாடசாலை கஸ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்றது.

பின்தங்கிய கிராமத்தில் இருந்து கல்விகற்று தமது மாணவி சாதனைபடைத்திருப்பது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கே பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீற்றர் ஜெரா தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் 9 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோன்றியதுடன் இருவர் சித்திபெற்றுள்ளனர். ஹரித்திக் ஹென்சுஜா, செல்வகுமார் டிலானி ஆகிய மாணவிகளே சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலையின் ஆசிரியரான முத்துகுமார் லோகேஸ்வரியின் முயற்சி காரணமாகவே தமது மகள் சித்தி பெறமுடிந்ததாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாணவர்கள் சாதனை!

புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாணவர்கள் சாதனை!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலத்தில் முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மகேந்திரன் திகழ்ளொலி பவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை, தேசிய ரீதியில் குறித்த மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பிலியந்தலை மற்றும் வெயன்கொட பிரதேசங்களை சேர்ந்த இரு மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 பெற்று வளர்த்த பிள்ளைக்கு சூடுவைத்த தாய் ; களுவாஞ்சிகுடி

பெற்று வளர்த்த பிள்ளைக்கு சூடுவைத்த தாய் ; களுவாஞ்சிகுடி

பெற்று வளர்த்த பிள்ளைக்கு தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த தாயால் இரும்புக்கம்பியை சூடாக்கி 11 வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

குறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண் மீது துப்பாக்கி பிரயோகம் ; சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

பெண் மீது துப்பாக்கி பிரயோகம் ; சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காரொன்றில் பயணித்த 40 வயதான பெண் மீது மற்றுமோர் காரில் வந்த இனந்தெரியாத நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

பின்னர் படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பேலியகொட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர், அத்துருகிரிய பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபரை கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய பாதாள உலக குழுவின் உறுப்பினர் எனவும், அவர் கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய காரையும் பேலியகொட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் மீட்டுள்ளனர்.
தமிழ் மொழியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி மாணவர்கள் முதலிடத்தில் !!

தமிழ் மொழியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி மாணவர்கள் முதலிடத்தில் !!

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் இரு மாணவர்கள் 199 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலுள்ளதுடன் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் யாழ் மாணவன் முதலிடத்தைப்பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான எம். திகலொளிபவன், சாவகச்சேரி ஆரம்ப பாடசாலை மாணவனான நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழிமூலம் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்திலுமுள்ளனர்.

அதன்படி பிலியந்த சோமவீர மகாவித்தியாலய மாணவனான பி.எம். விதானகேயும் வெயாங்கொட புனித மரியாள் வித்தியாலய மாணவனான கே. சன்னுப டிமித் பெரேராவும் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளனர்.
இதேவேளை, 3 மாணவர்கள் 198 புள்ளிகளைப்பெற்று 2 ஆவது இடத்திலுள்ளனர். 

மினுவாங்கொட ரணதுங்க ஆரம்பப்பாடசாலை மாணவனான சென்ஜுய் அகித்ம ஹெட்டியாராச்சி, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான எம்.திகலொளிபவன், சாவகச்சேரி ஆரம்ப பாடசாலை மாணவனான நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளனர்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளி விபரம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளி விபரம்

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,

கொழும்பு - 165 
கம்பஹா - 165 
களுத்துறை - 165 
கண்டி - 165
மாத்தளை - 165 
நுவரெலியா - 162 
காலி - 165 
மாத்தறை - 165 
ஹம்பாந்தோட்டை - 160 
யாழ்ப்பாணம் - 164 
கிளிநொச்சி - 163 
மன்னார் - 162 
வவுனியா - 164 
முல்லைத்தீவு - 163 
மட்டக்களப்பு - 164 
அம்பாறை - 163 
திருகோணமலை - 162 
குருணாகல் - 165 
புத்தளம் - 162 
அநுராதபுரம் - 162 
பொலன்னறுவை - 162 
பதுளை - 163 
மொனராகலை - 162 
இரத்தினபுரி - 162 
கேகாலை - 165
பரீட்சை முடிவுகளை பார்வையிட 

Thursday, October 4, 2018

சிறுவர் தினத்தில் ரூம்போட்ட சிறுமி! காதலனும் கைது!!

சிறுவர் தினத்தில் ரூம்போட்ட சிறுமி! காதலனும் கைது!!

சர்வதேச சிறுவர்கள் தினமான கடந்த முதலாம் திகதி 12 வயது சிறுமியை ஹொட்டலுக்கு அழைத்துச்சென்ற இளைஞனையும் ஹொட்டல் உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி அதே பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் வேலை செய்யும் 22 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சிறுமி தனது தாயின் தொலைபேசி ஊடாக காதலனுடன் நீண்ட நாட்கள் தொடர்புகொண்டு வந்துள்ளார்.

காதலனின் வேண்டுகோளுக்கமைய சிறுமி முதலாம் திகதி அக்குரஸ்ஸ நகரிற்கு வந்துள்ளார். சிறுமி தனது காதலனை அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தித்துள்ளனர்.

இருவரும் சந்தித்த பிறகு பங்கம என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொட்டலுற்கு இளைஞன் சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் நிஷங்கவிற்கு கிடைத்த இரகசிய தொலைபேசி அழைப்பிற்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கம பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த ஹொட்டலில் சிறுமியையும், குறித்த இளைஞனையும் கைது செய்ததுடன் ஹொட்டல் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சிறுமியிடன் விசாரணைகளை மேற்கொண்டபோது,

சிறுவர்கள் தினம் என்பதால் பாடசாலை சீருடையில் வரவேண்டாம் என அதிபர் கூறியதாகவும், அதனால் கலர் உடை உடுத்திக்கொண்டு பாடசாலை செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமி தனது காதலனைச் சந்திக்கச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து நிலையத்தில் இருவரும் பேசுவதற்கு நல்ல இடம் இல்லை என்பதால் தான் தனது காதலன் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மகாவலி ‘எல்’ வலயத் திட்டத்தை இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

மகாவலி ‘எல்’ வலயத் திட்டத்தை இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

அரசினால் முன்னெடுக்கப்படும் மகாவலி ‘எல்’ வலயத் திட்டப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ‘புதுச்சுடர்’ இணையத்துக்குத் தெரிவித்தார்.

மகாவலி ‘எல்’ திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் ஆதாரங்களுடன் கூட்டமைப்பு வெளிப்படுத்தியது.

முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக எவருக்கும் காணி அனுமதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறிய ஜனாதிபதி, நேற்றைய கூட்டத்தில் அவ்வாறு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளமையைத் தான் கண்டறிந்துள்ளார் எனத் தெரிவித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

ஜனாதிபதி அவ்வாறு வழங்கப்பட்ட காணி அனுமதிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும், மகாவலி ‘எல்’ வலயத் திட்டத்தை இடைநிறுத்தப் பணித்துள்ளார் என்றும் தம்மிடம் கூறினார் என சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
20வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது போராட்டம்!

20வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் 20வது நாளாகவும் இன்று தீர்வின்றி தொடர்கிறது. 

அனுராதபுர சிறைக்கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து,சில கைதிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.


மஹிந்தவின் புதல்வர்களின் பொதியை காவிச்சென்ற கட்டாரிற்கான இலங்கை தூதுவர்: எழுந்தது புதிய சர்ச்சை!

மஹிந்தவின் புதல்வர்களின் பொதியை காவிச்சென்ற கட்டாரிற்கான இலங்கை தூதுவர்: எழுந்தது புதிய சர்ச்சை!

மத்திய கிழக்கு நடன கட்டாரிற்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரு புதல்வர்களையும் வரவேற்றுள்ளார்.

அத்துடன் அவர்கள் கொண்டு சென்ற பயணப் பொதிகளை, ஏ.எஸ்.பி.லியனகே மற்றும் தனசூரிய ஆகியோர் பெற்றுக்கொண்டு சென்று அவர்களை ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த விடயமானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரு புதல்வர்களும் அரசாங்கத்தில் எந்த வித முக்கிய பதவிகளையும் வகிக்காதநிலையில் தூதுவரின் இந்த நடவடிக்கை இராஜதந்திர நடைமுறைகளிற்கு முரணானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.

றக்பி போட்டி ஒன்றிக்காக அவர்கள் காட்டருக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கட்டாரிற்கான இலங்கை தூதுவர் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் என்பதுடன் தனசூரிய, அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நெருங்கிய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 3, 2018

மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி

மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், ‘மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும், போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க முடியும்’ எனவும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த நாடு மக்களாட்சி நாடு எனவும், அதனை அமைச்சர் ஒருவர் 5 நட்சத்திர மக்களாட்சி நாடு எனவும் மார்தட்டும் நிலையில் நாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வைத் தடை செய்வது மக்களாட்சி விரோத செயல்.

அதனை இராணுவம் முடிவெடுத்து செயற்படுத்த முனைவது மக்களாட்சிக்கு விரோதமானது. அவ்வாறு இராணுவம்தான் இந்த விடயத்தில் முடிவை எடுக்கும் என்றால் இந்த நாட்டில் தற்போது இடம்பெறுவது இராணுவ ஆட்சிதான்.

மக்களாட்சி இல்லை என்று அறிவியுங்கள். அதன் பின்பு உங்கள் முடிவுகளை நேரடியாக அறிவியுங்கள். இராணுவத் தளபதியே முடிவை எடுக்க முடியும் என்றால் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்றம் எதற்கு?

முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி உள்ள நிலையில் இராணுவத் தளபதி கூறும் கருத்துக்கு யார் பொறுப்பு? இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வு அனுமதிக்கப்பட முடியாது எனில் கடந்த இரண்டு ஆண்டுகளும் அனுமதித்தமை சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே என்பதனை பகிரங்கமாக இராணுவத் தளபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளும். தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடைப்பாடு மைத்திரி – ரணில் அரசுக்கு உண்டு.

அதனை விடுத்து படையினரைப் பேச விட்டு மக்களை கொதி நிலையாக்கி பின்னர் அதில் விபரீத முடிவுகளுக்கு வழி ஏற்படுத்திய பின்பு தீர்வை வழங்குவதாக எண்ணக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.
மொஸ் பார்க் பகுதியில் கத்திக் குத்து: ஒருவர் படுகாயம்

மொஸ் பார்க் பகுதியில் கத்திக் குத்து: ஒருவர் படுகாயம்

மொஸ் பார்க் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளையில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Queen street மற்றும் Sherbourne street பகுதியில் அதிகாலை 12.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்ற வேளையில், காயமடைந்த நபரும் அங்கு காணப்படவில்லை எனவும், எனினும் சிறிது தூரத்தில் அவரைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடனயாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், சந்தேக நபரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவத்தை தூக்கினால்  இரு வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை

இராணுவத்தை தூக்கினால் இரு வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார்.

அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார்.

சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச, கச்சாய் எண்ணெய் விலையேற்ற விவகாரமே காரணம் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பினராயி விஜயன் அதிரடி

சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பினராயி விஜயன் அதிரடி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத் தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக் கப்பட்டு வந்தது.

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து வரும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து, பந்தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை.

தீர்ப்பை முழு மனதுடன் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோலவே சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துத்தரப்படும். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
வடக்கு பிரச்சினை - பிரிவினைவாதிகள் இருக்க முடியாவிட்டால் ஆற்றில் குதியுங்கள்: மனோ கணேசன்

வடக்கு பிரச்சினை - பிரிவினைவாதிகள் இருக்க முடியாவிட்டால் ஆற்றில் குதியுங்கள்: மனோ கணேசன்

அரசியல் சுயலாபத்திற்காக வடக்கு பிரச்சினையை பூதாகரமாக்க வேண்டாம் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெற்கைப் போன்று வடக்கு அரசியல் வாதிகளுக்கும், அந்த பிரச்சினையை பெரிதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுதிறனாளி மாணவர்களின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கின் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம். தெற்கிலுள்ளவர்களுக்கும் வடக்கிலுள்ளவர்களுக்கும் அந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அதில் வீழ்ந்து அந்த செய்தியை நாட்டு மக்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டாம். பொதுவாக நோக்கும் போது வடக்கிலும் தெற்கிலும் பிரச்சினைகள் குறைந்துள்ளன.

பிரச்சினைகள் இருக்கிறது ஆனாலும் மோதல் இல்லை. மோதலை உருவாக்க வேண்டாம். எங்காவது மோதல் ஏற்படுமா என சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.

தற்போது இறந்தவர்களை நினைவு கூர்பவர்கள் குறைந்துள்ளனர். முன்னர் இலட்சக்கணக்கானோர் நினைவு கூர்ந்தனர். இன்று அவ்வாறு இல்லை. அது குறைந்து செல்லகிறது. இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

தங்கள் உறவினர்கள் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவு கூர்ந்து, சோகத்தை சிலர் பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வளவுதான். அது ஒரு அரசியல் செயற்பாடு அல்ல.

இது ஒரே நாடுஇ எங்கள் நாடு என்ற உணர்வு வடக்கிலும், தெற்கிலும் ஏற்பட்டு வருகின்றது. அதனைச் சிதைக்க வேண்டாம் என, நான் வடக்கு மற்றும் தெற்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அதுபோல், வடக்கு தெற்கு பிரிவினைவாதிகள் இருக்க முடியாவிட்டால் நாட்டை சீரழிக்காமல் ஆற்றில் குதியுங்கள்.” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

நாளை மறுதினம் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், நாளை மறுதினம் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் சுமையை சமாளிக்க அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்: வடிவேல் சுரேஸ்

வாழ்க்கைச் சுமையை சமாளிக்க அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்: வடிவேல் சுரேஸ்

அதிகரித்துள்ள, வாழ்க்கைச் சுமையை சமாளிக்கும் வகையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்படடுள்ளது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

கொழும்பில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

எதிர்வரும், 14 ஆம் திகதிக்குள், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் முழு மலையகம் ஸ்தம்பிதமடையும் என்றும் எச்சரித்தார்.

புல்லுமலை தண்ணீர் விவகாரம்: இரு அமைச்சர்கள் மூடிக் கொண்டிருப்பது ஏன்? – தமிழ் உணர்வாளர் அமைப்பு

புல்லுமலை தண்ணீர் விவகாரம்: இரு அமைச்சர்கள் மூடிக் கொண்டிருப்பது ஏன்? – தமிழ் உணர்வாளர் அமைப்பு

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏறிக் கொண்ட இரண்டு அமைச்சர்களும், தமிழர்கள் நடாத்தும் போராட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்திருப்பது ஏன் என தமிழ் உணர்வாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை சர்ச்சை தொடர்பாக தமிழ் உணர்வாளர் அமைப்பு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடத்திய போது இது ஒரு சில அரசியல் வாதிகளின் சில்லறைத்தனமான போக்கு என்று அறிக்கை விட்ட அமைச்சர் அமீர் அலி, தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முழு மாவட்ட மக்களும் அனுஷ்டித்த ஹர்த்தால் பற்றி என்ன கருத்து கூறப் போகின்றார்.

தேர்தலில் காலங்களிலே பிள்ளையான் மூலமும் கணேசமூர்த்தி மூலமும் தமிழர்களின் வாக்குகளை அள்ளிச் சென்ற இவர்கள் மௌனம் காப்பது தமிழர்கள் மத்தியில் வெறுப்பையும் விசனத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

வட மாகணத்திலே இருக்கின்ற பிரதி அமைச்சர் அங்கஜனுக்கே இதில் அக்கறை எடுக்க முடியுமென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்குகளை பெற்று வந்த இரண்டு அமைச்சர்களும் அரியாசனம் ஏறிக் கொண்டு தமிழர்கள் நடாத்தும் போராட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இனி வரும் காலங்களில் ஒன்றுமறியாத தமிழ் பாமர மக்கள் சோளங்கொட்டையையும் மண்வெட்டியையும் வாங்கி கொண்டு இனி வரும் காலங்களில் துணை போக மாட்டார்கள் என்பதை எதிர்காலம் உங்களுக்கு கற்ப்பிக்கும். அதேவேளை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ எதிரான போராட்டம் அல்ல.

புல்லுமலை சார்ந்த பிரதேசம் வானம் பார்த்து வயிறு பிழைக்கும் விவசாயிகள் வாழுமிடம். இந்த இடத்தில் நிலத்தடி நீரை விற்று பிழைக்க நினைப்பது ஒரு மனிதாபிமானமற்ற அடாவடித்தனமான செயலாகும்.

மக்களின் வாக்குகளை பெற்று வாழும் அரசியல்வாதியே இந்த நிலத்ததடி நீரை விற்று பிழைப்பது ஓர் அற்பத்தனமான செயலாகும்.

முடியுமென்றால் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தி பாருங்கள் என்று சவால் விடும் அரசியல்வாதிகளே உங்களின் ஆணவ போக்கால் நாளாந்தம் வளர்ச்சியடையும் இந்த போராட்டம் இரு சமூகங்களுக்கிடையில் ஒரு விரிசல் நிலையை ஏற்ப்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கடுவல நவகிரியவில் யானை சோடா தொழிற்சாலையால் அந்த பிரதேசத்தின் கிணறுகள் வற்றிய துர்ப்பாக்கிய நிலை எங்கள் சமூகத்திற்கும் ஏற்ப்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம். ஏன தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் விடுக்கும் செய்தி என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சவுதியில் இருந்து கணவரின் சடலத்தை கொண்டுவர உதவுங்கள் – மனைவி உருக்கமான கோரிக்கை!

சவுதியில் இருந்து கணவரின் சடலத்தை கொண்டுவர உதவுங்கள் – மனைவி உருக்கமான கோரிக்கை!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு, உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த தவராஜா கோமளன் என்பவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரேபியாவில் உயிரிழந்த போதிலும், அவரது சடலம் இதுவரையில் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையிலேயே, அவரது மனை கண்ணீர் மல்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படைச்சேனையை சேர்ந்த 28 வயதுடையவர் தவராஜா கோமளன்.

இளம் குடும்பஸ்தரான இவர், குடும்ப வறுமைக் காரணமாக சவூதியில் தொழிலுக்கு சென்ற நிலையில் மாரடைப்பால் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

எனினும், அவரது சடலம் சவூதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தனது கணவர் உயிரிழந்து 43 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அவரது சடலத்தினை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையென உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் உட்பட பல்வேறு இடங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் யாரும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் பல நாள் கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொலிஸார்...!

யாழில் பல நாள் கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொலிஸார்...!

யாழ். சாவகச்சேரியில் நீண்டகாலமாக பெண்களின் கைப்பைகளை பறித்து திருட்டில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டிலிருந்து இரு மோட்டார் சைக்கிள்கள், 19 ஆயிரம் ரூபாய் பணம், 18 கையடக்க தொலைப்பேசிகள், 4 கைப்பைகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தச்சன் தொப்பு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய குடும்பஸ்தர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செக்கச் சிவந்த வானம் கலெக்‌ஷன் நிலவரம்!

செக்கச் சிவந்த வானம் கலெக்‌ஷன் நிலவரம்!

செக்கச் சிவந்த வானம், செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா என நட்சத்திர பட்டாளமே அணிவகுத்த இந்தப் படத்திற்கு அற்புதமான ரிவ்வியூ கிடைத்தது. சினிமாத் துறையினர் பலரே படத்தை புகழ்ந்து தள்ளினர்.
செக்கச் சிவந்த வானம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எப்படி? தமிழகம் முழுவதும் 384 திரையரங்குகளிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மொத்தம் 198 திரையரங்குகளிலும் படம் வெளியானது. இந்தியில் மணிரத்னதிற்கென மார்கெட் வேல்யூ இருப்பதால் ‘டப்பிங்’ செய்து வெளிடும் வேலைகளும் நடைபெறுகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 210 திரையரங்குக‌ளில் படம் வெளியானது. பல வருடங்களாக வெற்றிப்படங்களை பெரிதாக மணிரத்னம் கொடுக்கவில்லை என்றாலும், அவரது படங்களுக்கென்று ஒரு வியாபாரம் தொடரவே செய்கிறது. மணிரத்னத்திற்கான பிம்பம் அது! இந்தப் படத்திலும் அது நடந்திருக்கிறது.

படம் விமர்சன ரீதியாக வென்றாலும் பெண்கள் மத்தியில் வெகு ஆர்வமில்லாத நிலையே காணப்படுகின்றது. படம் முதல் நாள் முழுக்க முழுக்க மணி படமாகவே பேசப்பட்டது. பிறகு அது பொது ரசிகர்களால் விஜய் சேதுபதியின் படமாக பார்க்கப்பட்டு வசூல் ரீதியாகவும் நல்ல நிலைமையில் போகிறது.

செக்கச் சிவந்த வானம் படம் சுமார் 25 கோடிக்கு வியாபாரம் ஆனது, சாட்டிலைட்டை சேர்க்காமல்! முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடியை சுலபமாக வசூலித்துவிட்டது. இரண்டாம் வாரம் தியேட்டர் ஸ்ட்ரென்த் குறைந்தாலும் உலகம் முழுவதும் 10 கோடியை வசூலிக்கும் என்று நிச்சயமாக சொல்கிறது திரை வட்டாரம்.

மேலும் மணிரத்னம் படம் மற்ற மொழிகளில் ரைட்ஸ் மற்றும் டப்பிங் உரிமை என்று நல்ல விலைக்குப் போகும். சாட்டிலைட் உரிமை எல்லாம் கணக்கில் கொண்டால் 50 கோடிக்கு அதிகமாகவே சென்று சாதனை படைக்கும் என்பது நிச்சயம். தயாரிப்பு செலவு 12 முதல் 16 கோடி.

ஆக, பாக்ஸ் ஆபீஸில் செக்கச் சிவந்த வானம் சிரிக்கிறது.
சினிமாவைப் பாருங்க அரசியலுக்கு நாங்க இருக்கோம்! - விஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்

சினிமாவைப் பாருங்க அரசியலுக்கு நாங்க இருக்கோம்! - விஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்

‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், “சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால், ஒருவேளை தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன். லஞ்சம், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன். தலைவன் ஒழுக்கமாக இருந்தால், மக்களும் ஒழுக்கமாக இருப்பார்கள்… தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. மேலேயிருப்பவர்கள் தவறு செய்யாமல் இருந்தால், கீழே உள்ளவர்கள் தவறு செய்ய வாய்ப்பே ஏற்படாது ” என்று பேசினார்.
ஆளுங்கட்சித் தரப்பை சற்றே உஷ்ணப்பட வைத்திருக்கும் விஜய்யின் இந்தப் பேச்சு தான் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போதைக்கு ஹாட் டாபிக்.

கடந்தாண்டு ‘மெர்சல்’ படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது, முதல்வர் பழனிசாமி தலையீட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் படம் வெளியானது. இதற்காக விஜய், தனிப்பட்ட முறையில் முதல்வர் பழனிசாமியை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன்பிறகு பாஜக தலைவர்களால் மெர்சல் படம் வேற லெவலுக்கு புரமோட் ஆனது தனிக்கதை.

இந்த நிலையில், தற்போது சர்கார் பட ஆடியோ விழாவில், ‘மேலேயிருப்பவர்கள் தவறு செய்யாமல் இருந்தால் தான், கீழே உள்ளவர்கள் ஒழுங்காக இருப்பார்கள்’ என்று விஜய் பேசியிருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும் போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்? சினிமாவில் வசனம் பேசிவிட்டு தூங்குவதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்?

திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமி ஆகமுடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். விஜய்யை யார் இப்போது அரசியலுக்கு அழைத்தார்கள், அவர் நடிக்கின்ற வேலையை மட்டும் பார்க்கட்டும். அவர் அரசியலுக்கு வந்தால் தாக்கு பிடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது. நடிகர் விஜய் அரசியலில் குதிக்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறார். விஜய் அரசியலில் குதிக்கட்டும், குதித்து அடிபடாமல் தப்பினால் சரி” என்று தெரிவித்துள்ளார்.
 தெரியுமா? சர்கார் படத்தின் “OMG பொண்ணு” பாடல் விரிவாக்கம்

தெரியுமா? சர்கார் படத்தின் “OMG பொண்ணு” பாடல் விரிவாக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படத்தின பாடல்கள் நேற்று வெளியானது. அதில், மெர்சல் படத்தில் வெளியான “மாச்சோ” பாடல் போல “ஓஎம்ஜி பொண்ணு ஐஎல்ஒய் கண்ணு” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடலில் பல இளம் தலைமுறையினர் சேட்டிங்கில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளின் சுருக்கங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விரிவாக்கம் இதோ..

GR8- Great
AKA -Also Known As
XOX - Hugs & Kisses
L8R -Later
OMG - Oh My God
ILY - I Love You
ASAP - As Soon As Possible
BAE - Before Anyone Else
BFF - Best Friend Forever
ROFL -Rolling on the floor Laughing
IMO - In My Opinion
IDK - I Don't Know
KIT - Keep In Touch
GM - Good Morning
GNSD - Good Night Sweet Dreams
LOL - Lots Of Love
SH - Sweet Heart
HRU - How Are You
HBD - Happy Birth Day
SOSU - So Sweet Of You
TY - Thank You
CG - Cute Girl
TC - Take Care
BRB - Be Right Back
பரியேறும் பெருமாளுக்காக கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாளுக்காக கதிரைப் பாராட்டிய விஜய்

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, விஜய் கதிரைத் தொடர்புகொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது. என கதிர் குறிப்பிட்டுள்ளார்.
55 வருடங்களின் பின் நோபல் பரிசை வெல்லும் பெண்மணி டோனா ஸ்டிரிக்லேண்ட்

55 வருடங்களின் பின் நோபல் பரிசை வெல்லும் பெண்மணி டோனா ஸ்டிரிக்லேண்ட்

இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 55 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) என்ற பெண்மணியே இந்த வருடத்துக்கான நோபல் பரிசைப் பெறுகின்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஜெராட் மௌரௌவ் ஆகியோருடன், டொக்டர் டோனா ஸ்டிரிக்லண்ட் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்.

Laser Physics எனப்படும் சீரொளி இயற்பியல் துறையில் ஆற்றிய பணிக்காகவே, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவும் Optical Tweezers (ஒப்டிக்கல் டிவீசர்ஸ்) எனப்படும் ஒருவகை லேசர் தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1903 ஆம் ஆண்டு மேரி க்யூரி (Marie Curie), 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் (Maria Goeppert Mayer) ஆகிய இருவருமே இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற பெண்களாவர்.

இந்தவரிசையில், டொக்டர் டோனா ஸ்டிரிக்லண்ட், இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் 3ஆவது பெண்ணாகப் பதிவாகியுள்ளார்.

இவ்வாண்டுக்கான நோபல் பரிசுகளில், புற்றுநோய்க்கான ‘இம்யூன் செக் பொயிண்ட் தெரபி’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தித் தடை உடைப்பு சிகிச்சை என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை எனவும் வியக்கத்தக்க பலன்களை இது தருவதாகவும் நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகடமி தெரிவித்துள்ளது.
சவுதியில் உயிரிழந்த இளைஞரின் உடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் சிக்கல்

சவுதியில் உயிரிழந்த இளைஞரின் உடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் சிக்கல்

மட்டக்களப்பு – இளுப்படிச்சேனை கன்னங்குடா பகுதியிலிருந்து சவுதி அரேபியாவிற்குச் சென்று, உயிரிழந்த இளைஞரின் பூதவுடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 28 வயதான கணபதிப்பிள்ளை கோமலன் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சவுதியில் உயிரிழந்துள்ளார்.

எனினும், இவரின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்பிவைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் பூதவுடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது, கணபதிப்பிள்ளை கோமலன் பணிபுரிந்த நிறுவனத்தால் அவருக்கான சம்பளக் கொடுப்பனவுகள் இதுவரை செலுத்தப்படாமையாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கொடுப்பனவில் காணப்படும் சிக்கல்கள் நிவர்த்திக்கப்பட்டு விரைவில் பூதவுடலை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.