Saturday, October 13, 2018

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

''இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாதநிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. 

அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுத் தருவதே சிறந்ததாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். 

இறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை மேற்கோள் இட்டுத்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மற்ற ஐயப்பன் ஆலயங்களுக்கு எல்லாம் பெண்கள் சென்று வழிபடுகின்றனர். எனவே பெண்களை சபரிமலை கோயிலுக்கு அனுமதிப்பதை வரவேற்கிறேன்.

மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க, முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ-யின் விசாரணையைக் கோருவதன் மூலம் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் உத்தரவிட்டுள்ளதே தவிர தண்டனை வழங்கவில்லை. எனவே, இப்போதே முதல்வர் பழனிசாமி பதவி விலகத் தேவையில்லை. தமிழக உயர்கல்வித் துறை, ஊழல் மிகுந்ததாக உள்ளது. 

மாணவர் சேர்க்கை துவங்கி துணை வேந்தர் நியமனம் வரை புகார் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்க வேண்டும். 

தமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். 

இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன்'' என்றார்.
கற்றலோனிய அரசியல் கிளர்ச்சி: சர்வதேச நிறுவனங்கள் வெளியேறும் அபாயம்!

கற்றலோனிய அரசியல் கிளர்ச்சி: சர்வதேச நிறுவனங்கள் வெளியேறும் அபாயம்!

கற்றலோனியாவை ஸ்பெயினிடமிருந்து பிரித்து சுயாதீனமாக்குமாறு வாக்கெடுப்பு நடத்தி ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், பிராந்தியத்திலிருந்து வெளியேற பல சர்வதேச நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

தன்னாட்சியை கோரும் கற்றலோனியாவில் அடிக்கடி அரசியல் பதற்றநிலை ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசியல் கிளர்ச்சியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நிறுவனங்கள் வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கற்றலோனிய சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட்ட கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 3700 நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கையை நிறுத்திக்கொண்டுள்ளன.

கற்றலோனிய சுதந்தித்திற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் பல நிறுவனங்கள் பிராந்தியத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசியல் நிலையற்ற தன்மையும், நம்பிக்கையீனமும் இதற்கு காரணமென ஒபெர்டா டி கற்றலோனியா பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் Lluc Lopez Vidal தெரிவித்துள்ளார்.

கற்றலோனியாவின் அபிவிருத்திக்கு இது பாரிய எதிர்விளைவை ஏற்படுத்துமென குறிப்பிட்ட அவர், மேலும் பல நிறுவனங்கள் வெளியேறவுள்ளதாக குறிப்பிட்டார்.

பல வெளிநாட்டு நிறுவனங்கள், தமது கிளை நிறுவனங்களை மீளப்பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்றலோனிய விவகாரத்தில் ஸ்பெயின் பிரதமர் மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகள் தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ள பேராசிரியர், எதிர்கால நிலை தொடர்பாக பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென குறிப்பிட்டார்.

ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் கோரிய வாக்கெடுப்பில் கற்றலோனியா வெற்றிபெற்றிருந்தாலும், அது நாட்டின் சட்டத்திற்கு முரணானதென ஸ்பெயின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபவனி சென்ற பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரத்தினைச் சேர்ந்த சிலர் முரண்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கழக மாணவர்களினால் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று(சனிக்கிழமை) அநுராதபுரத்தினைச் சென்றடைந்தனர்.

இதன்போது அனுராதபுரத்தினைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் முரண்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே குறித்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

எனினும், ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பெரும்பான்மையினத்தவர்கள், பின்னர் மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட விளக்கத்தினை ஏற்றுக்கொண்டனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.


இந்தோனேசியாவில் தாக்கிய மற்றுமொரு பேரழிவு 21 பேர் பலி!

இந்தோனேசியாவில் தாக்கிய மற்றுமொரு பேரழிவு 21 பேர் பலி!

இந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா மாகாணங்களில் பல்வேறு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் 3 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த கிராமத்து பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள ஆற்று நீர் பள்ளிக்குள் புகுந்தது.

இதில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவனை காணவில்லை என்று மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று ஆற்று வெள்ளத்தில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
பிரதமர் ஜஸ்டினிடம் அர்மீனிய பெண் முன்வைத்துள்ள கோரிக்கை!

பிரதமர் ஜஸ்டினிடம் அர்மீனிய பெண் முன்வைத்துள்ள கோரிக்கை!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனேடிய பெண்ணொருவர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த பெண், அர்மீனியாவில் உள்ள தன் மகனை, முன்னாள் கணவரிடமிருந்து கனடா நாட்டுக்கு அழைத்து வர அர்மீனிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அர்மீனியாவுக்கு உச்சி மாநாட்டிற்காக விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த கோரிக்கையை அந்த பெண் முன்வைத்துள்ளார்.

கனடாவை சேர்ந்த டம்மி சான் என்ற பெண், அர்மீனியாவை பிறப்பிடமாக கொண்ட அர்மென் அவன்ஸி, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, இந்த தம்பதியினருக்கு அலெக்ஸ் என்னும் மகன் பிறந்தான். சிறிது காலத்திற்கு பிறகு இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஒன்ராறியோ நீதிமன்றம், குழந்தை தாயிடம்தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும், அர்மென் அவன்ஸி, தன்னுடைய குழந்தையை அவருடன் அழைத்துச் சென்று விட்டார். குழந்தையை திருப்பி அனுப்பவே இல்லை.

டம்மி சான், இதற்காக பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில், தற்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி!- ரஷ்ய தூதுவர்

பிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி!- ரஷ்ய தூதுவர்

ரஷ்ய முன்னாள் உளவாளி ஸ்கிரிபாலை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் உலகளாவிய ரீதியில் பல்வேறு அமைப்புகளை ஹெக் செய்ய முயற்சித்தமை தொடர்பாக ரஷ்ய இராணுவ புலனாய்வு பிரிவின் உளவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரித்தானியாவிற்காக ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் யகோவென்கோ மறுத்துள்ளார்.

மேலும், பிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்தும் பிரசாரத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்கிரிபால் கொலை சதி தொடர்பாக ஷ்ய இராணுவ புலனாய்வு பிரிவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரஷ்யாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் கீழ் மட்டத்தில் காணப்படுகிறது.

சலிஸ்பரி சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக இருதரப்பு மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை மீறியும், ரஷ்ய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்தும் பிரித்தானிய கொன்சவேற்றிவ் அரசாங்கம் ஆக்கபூர்வமற்ற முறையில் செயற்பட்டு வருகிறது.

அதுமாத்திரமின்றி பிரித்தானியாவில் எமது இராஜதந்திர நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்துவதில் தடையேற்படுத்தும் வகையிலான தீர்மானங்களை பிரித்தானிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு!- சீனா உறுதி

ஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு!- சீனா உறுதி

ஆப்கானிஸ்தானில் அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு சீனா தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் என சீன பிரதமர் லீ கெக்கியாங் தெரிவித்தார்.

அரசாங்க தலைவர்களின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17ஆவது கூட்டத்தொடரின் ஒரு அங்கமாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆப்கான் தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் சமாதானத்தை சீரமைப்பதற்கான ஆதரவை தாம் தொடர்ந்து வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஆப்கான் சீனாவின் பாரம்பரிய நட்பு நாடு என்றும் சிறந்த அயலவர் என்றும் வர்ணித்த லீ, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவது மாத்திரமின்றி, ஆப்கானில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கானிஸ்தானுடன் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.
‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் விரைவில் – செல்வராகவன்

‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் விரைவில் – செல்வராகவன்

‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

‘பல ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் ‘புதுப்பேட்டை’ படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது’ என ‘மாநகரம’; உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்’ என ஒரு இரசிகர்கள் டுவீட் செய்திருந்தார்.

அதற்கு, ‘நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்’ என செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர்.

இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்!

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்!

தமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த 65 வயதுடைய கந்தனுக்கு 35 வயதுடைய கோபி என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் கோபி தனது பெற்றோரிடன் தனக்கு வயதாகிக்கொண்டே போவதாகவும் விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

அவரின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் கோபி மீண்டும் தனது தந்தையிடம் திருமணம் குறித்து சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின் கைக்கலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில் கோபி தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பொலிஸார் வழக்குபதிவு செய்து கோபியை கைது செய்தனர். தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான போட்டி: 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி!

இலங்கைக்கு எதிரான போட்டி: 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி!

இலங்கை அணிக்கு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், இயான் மோர்கன் 82 ஓட்டங்களையும், ஜோ ரூட் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் லசித் மலிங்க 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

அந்தவகையில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றபோது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் சிறிது நேரம் போட்டி மழையால் தடைபட இறுதியில் டக்வத் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், நோவக் ஜோகோவிச் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ஜேர்மனியின் இளம் வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், நோவக் ஜோகோவிச்சுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கிய நோவக் ஜோகோவிச், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்

நாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்

நாட்டிலுள்ள சகல மக்களும் தமது பொறுப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சகல குடிமக்களும் தமது உரிமை தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு முன்னர் தமது பொறுப்புக்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில்லை என கூட்டு எதிர்கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி

“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி

“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய வேண்டியது அதிகம் இருக்கின்றது” என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி நடித்துள்ள சண்டக்கோழி படம் வருகிற 17 ஆம் திகதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

“எல்லோருமே எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என்று கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் அதிகம் இருக்கிறது. அதற்காக திருமணத்தை சாதாரணமாக குறிப்பிடவில்லை.

திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண்மகனை சந்திக்க வேண்டும், சில காலம் அவரை காதலிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகே திருமணம். அப்படியான ஒரு சூழல் வரும்போது கண்டிப்பாக எனது திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிப்பேன்.

இப்போது கை நிறைய படங்கள் இருக்கிறது. மன நிறைவோடு நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருபுறம் நடிப்பு, இன்னொருபுறம் பெண்களுக்கான பணி என எனது பாதையை தெளிவாக வகுத்துக் கொண்டிருக்கிறேன்.

சேவ் சக்தி அமைப்பின் மூலம் பெண்களுக்கான பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வேண்டுமானலும் செய்வேன். அரசியலில் சேர்ந்தால் அதை செய்ய முடியும் என்றால் அரசியலிலும் குதிப்பேன்” என கூறினார்.
ரஷ்யாவில் 6.7 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!

ரஷ்யாவில் 6.7 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!

ரஷ்யாவின் வட மேற்கு பசிபிக் பகுதியில் குரேலீ தீவுகளுக்கு வடமேற்கில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது இன்று (சனிக்கிழமை) மாலை 4:40 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட செத்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை, அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிச் சடங்கு!

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிச் சடங்கு!

இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட காசா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்கு இடம்பெற்றுள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் இரு ஆண்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களது இறுதி சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன் போது பலர் கலந்துகொண்டு இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தனிநாடாக உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழ்ந்த பலஸ்தீனர்களுக்கு அங்கு திரும்புவதற்கு உரிமை கோரியிருந்தனர்.

இருப்பினும் அது மறுக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போதான வன்முறையில் இதுவரை 193 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவிற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு இஸ்ரேல் அதிரடி உத்தரவு

காசாவிற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு இஸ்ரேல் அதிரடி உத்தரவு

காசா எல்லை பகுதிக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் உத்தரவிட்டுள்ளார்.

காசா எல்லையில் அதிகரித்துவரும் இஸ்ரேல் படையினர் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் படையினருக்கு எதிரான பயங்கரவாத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்றும், இந்நிலை மாறும்வரை காசாவிற்கு எரிபொருள் தாங்கிகளை அனுமதிக்கப் போவதில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட காசா எல்லையில் போராட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் படையினரால் ஆறு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

எல்லையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரை நோக்கி கற்கள் மற்றும் வெடிப்பொருட்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட நிலையிலேயே தாம் பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தனிநாடாக உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழ்ந்த பலஸ்தீனர்களுக்கு அங்கு திரும்புவதற்கு உரிமை கோரி கடந்த மார்ச் 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போதான வன்முறையில் இதுவரை 200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘இளஞ்செழியன் புரம்’ கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு!

‘இளஞ்செழியன் புரம்’ கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு!

157 தனி வீடுகளைக் கொண்ட ‘இளஞ்செழியன் புரம்’ கிராமம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் பண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் 157 தனி வீடுகளைக் கொண்ட ‘இளஞ்செழியன் புரம்’ நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமம், இன்று(சனிக்கிழமை) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் திகாம்பரம், தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த கிராம் பயனாகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரிண் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் பைசல் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரத்திரங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக யாழ். மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக யாழ். மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுராதபுரம் சிறைச்சாலைவரை நடைபவனியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘நல்லிணக்க அரசே! நிபந்தனையின்றி உடன் அரசியல் கைதிகளை விடுதலை செய். இதேபோன்று பல கிளர்ச்சியாளர்கள் இலங்கை அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏன் பாரபட்சம்? நாம் தமிழர்கள் என்பதாலா?’ என்ற வாசகம் தாங்கிய பதாதையை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு, அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான நடைபயணம் இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை அடைந்துள்ளது.

அங்கு சில மாணவர்களுக்கு அரசியல் கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதோடு, எஞ்சிய மாணவர்கள் சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தம்மை விடுவிக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மகசீன் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Friday, October 12, 2018

46 ஆவது பிரதம நீதியரசராக நலின் பெரேரா சத்திய பிரமாணம்!

46 ஆவது பிரதம நீதியரசராக நலின் பெரேரா சத்திய பிரமாணம்!

நீதிபதி நலின் பெரேரா இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நலின் பெரேராவை நீதியரசராகப் பெயரிடுவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார். 

இந்தநிலையில் ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டிருந்தது.

கோட்டே மற்றும் குருதலாவ புனித தோமஸ் கல்லூரிகளின் பழைய மாணவரான நலின் பெரேரா, 1980 ஆம் ஆண்டு சட்டத்துறைக்குள் பிரவேசித்தார். 1984 ஆம் ஆண்டு அவர் நீதவானாக நியமிக்கப்பட்டார்.

கல்கிசை, வலஸ்முல்ல, களுத்துறை மற்றும் கோட்டை நீதிமன்றங்களின் நீதவானாக செயற்பட்ட நலின் பெரேரா, 1990ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை நீதவான்கள் சங்கத்தின் விரிவுரையாளர்கள் சபையின் உறுப்பினரான நலின் பெரேரா, கனேடிய பொதுநலவாய அமைப்பின் சட்டக்கல்வி நிறுவனத்தில் உயர் கல்வி கற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாகவும் செயற்பாட்டார்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசராக அவர் நியமிக்கப்பட்டார்.
விளம்பரத்திற்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை: சின்மயி விளக்கம்

விளம்பரத்திற்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை: சின்மயி விளக்கம்

சென்னை:விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் குறித்து, அவர்கள் "மீ டு" என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை வலைத்தளங்களில்வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 2005-ஆம் ஆண்டு வெளிநாடு ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக புகார் கூறினார். இது மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சின்மயி வெள்ளியன்று மாலை செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பல வருடங்களாக பெண்கள் மீது இத்தகைய பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் அல்ல. எல்லா இல்லங்களிலும் நடக்கிறதே? ஆனால் அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதற்கான சூழல் 'மீ டூ' பரப்புரையில் காரணமாக இப்போதுதான் உருவாகியிருக்கின்றது.

இதுவரை இதுபற்றியெல்லாம் யாரும் சொன்னதில்லை. யாரவது ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியில் வரும். நான் முதல் குரல் கொடுத்தவுடன் இப்போது பலரும் பேசுகிறார்கள்.

இதே போன்ற கொடுமையை அனுபவித்துள்ள என் சக பாடகிகள் பேசுவதில்லை. அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பேர் தகவல்களை கூறுகிறார்கள்.

விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை. நான் பிரபலமான பாடகி. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். நன்றாகவே பாடி இருக்கிறேன். டப்பிங் பேசி இருக்கிறேன்.

இந்த குற்றச்சாட்டினைக் கூறியதன் காரணமாக இனிமேல் எனக்கு பாடல்களே தரப்படப் போவதில்லை என்றாலும் கவலை இலலை. என் குரலை வைத்து நான் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்.

2005-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு ஆதாரங்கள் கேட்கிறார்கள். அப்போது விடியோ தொழில் நுட்பம் இந்த அளவு இருந்ததா என்ன? இல்லாவிட்டால் எப்போதும் கேமராவுடன் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? ஏன் வார்த்தையை நம்புங்கள்.

வைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து என் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் வழிப் பேத்தியின் திருமணம்

பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் வழிப் பேத்தியின் திருமணம்

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பேத்தியான இளவரசி யூஜீனி, தனது நீண்ட காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை இன்று (வெள்ளிக்கிழமை) கரம்பிடித்தார்.

புனித ஜோர்ஜியஸ் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்த பிரித்தானிய அரச தம்பதியர், குதிரை வண்டியில் வலம் வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மகாராணியின் தலைமையில் புதிய தம்பதியினருக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

அரசகுடும்பத்தினர், விருந்தினர்கள், நலன்விரும்பிகள், பாடகர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் பொதுமக்களில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரத்து 200 பேர் கோட்டை முற்றத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின மூலம் திருமணத்தை கண்டுகளித்தனர்.

இந்த ஆண்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இரண்டாவது அரசகுடும்பத் திருமணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி யூஜினி எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகானான இளவரசர் அன்ட்ரூவின் முன்னாள் மனைவியின் மகள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கிலாந்தை புயல் தாக்கும் அபாயம்

இங்கிலாந்தை புயல் தாக்கும் அபாயம்

இங்கிலாந்தின் சில பகுதிகளில் 76mph வேகத்துடன் காற்றுடன் கூடிய மழை தாக்கியுள்ளது. இதன் காரணமாக மின்சாரத் தடை மற்றும் போக்குவரத்துத் தடைகளை அப்பகுதிகள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலையிலிருந்து சனிக்கிழமை வரை கடுமையான மழை பெய்யும் என்று ஐக்கிய ராச்சியத்தின் தேசிய வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வேல்ஸில் கார்டிஃப் (Cardiff) மற்றும் ஸ்வான்சீ (Swansea) உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் 1,000 க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பெல்பாஸ்ட் மற்றும் டப்ளின் விமனநிலையங்களில் பலவிமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் தேசிய வானிலை சேவை புயல் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்த 50 வீதம் வாய்ப்புள்ளது: முன்னாள் பிரதமர்

பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்த 50 வீதம் வாய்ப்புள்ளது: முன்னாள் பிரதமர்

மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்புகள் காணப்படுவதாக, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்சிற் ஐரோப்பாவிற்கும் பாதகமானதாகவே அமையும். ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்து பெரிய பொருளாதார நாடு வெளியேறுவது, ஐரோப்பாவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும்.

பிரெக்சிற் இடைநிறுத்தப்படும் என்பதில் நான் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். பிரதமர் மே-யின் எந்தவொரு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஓகஸ்ட் மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக சிப்காட் பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஸ்டெர்லைட் வன்முறை சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின் கீழ் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேவேளையில், இந்த வழக்குத் தொடர்பாக தமிழக பொலிஸார், ஏற்கெனவே விசாரணை செய்த நபர்களிடமும், வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்கட்டமாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு ஓரிரு நாள்களில் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்ப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில்,

"இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக பொலிஸ் முழுத் தகுதி பெற்ற அமைப்பு என்றும், எனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பதவிவிலகினார் வோஷிங்டன் நகரின் பேராயர்

பதவிவிலகினார் வோஷிங்டன் நகரின் பேராயர்

இரண்டு பெரிய பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை மூடிமறைத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வோஷிங்டன் நகரின் பேராயர் டொனால்ட் வூர்ல் (Donald Wuerl ) பதவிவிலகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகங்களில் அவரது பங்கு குறித்த சர்ச்சைகள் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து வோஷிங்டன் பேராயரின் ராஜினாமாவை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

டொனால்ட் வூர்ல்க்கு முன்னர் பேராயராகக் கடமையாற்றிய தியடோர் மெக்கார்ரிக் (Theodore McCarrick) குறைந்தபட்சம் இரண்டு சிறார்கள் குரு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் கட்டாயமாக பதவி விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளாவியரீதியில் கத்தோலிக்க மதகுருக்களின் மேல் சுமத்தப்பட்டுவரும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையை வெகுவாக பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்

அ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்

சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போது, இவ்வாறு கூறினார்.

“கட்சி சட்டவிதிகளின் படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அ.தி.மு.க.வில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே சசிகலா நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்தோனேசியாவை தாக்கிய பாரிய அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்றுடன் நிறைவு!

இந்தோனேசியாவை தாக்கிய பாரிய அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்றுடன் நிறைவு!

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றுடன் மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுலவெசி தீவை 7.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அழிப்பேரலையால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், அவசர மீட்பு நடவடிக்கைகள் இம்மாத இறுதிவரை தொடருமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுலவெசி தீவை 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் சுமார் 75,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

தீவின் முக்கிய நகரமான பலுவிலிருந்து மாத்திரம், 82,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.

காயமடைந்த சுமார் 2500ற்கும் அதிகமானோருக்கு ஆங்காங்கே அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தொற்றுநோய்கள் தொடர்பாக மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், நேற்று முன்தினம் மற்றுமொரு நிலநடுக்கம் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்

வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதுடன், சிலரின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளது.

இந்நிலையில், சிவில் அமைப்புக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

இந்த சந்திப்பில், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் அந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்படுகின்றது – சித்தார்த்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்படுகின்றது – சித்தார்த்தன்

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர் கார்த்திக் !!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர் கார்த்திக் !!

பிரபல பாடகர் கார்த்திக் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண்என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது இந்த வருசையில் பிரபல பாடகர் கார்த்திக் இணைந்துள்ளார்.

இந்நிலையில் பாடகர் கார்த்திக் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 

"சில வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக்கை சந்தித்தேன். என்னிடம் சந்தித்து பேசிய அவர், என் உடலை அவர் வர்ணித்தார். மேலும் அவர் என்னை தொட விரும்புவதாக கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த நிகழ்ச்சியில் அவரை சந்தித்தாலும், அவரை விட்டு விலகிச் சென்று விடுவேன். பெண் பாடகர்கள் அவரைப் பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கிறேன். அவர், திரையுலகில் பிரபலமான, செல்வாக்கு மிக்க பாடகர் என்பதால் பலர் அவர் மீது குறை கூறுவதற்கு தயக்கம் படுகின்றனர்". என கூறப்பட்டிருந்தது. 

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாடகி சின்மயி, " நான் நேற்று தான் அவருடன் சக ஜட்ஜாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். ஆனாலும் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை நம்புகிறேன். மன்னித்துவிடுங்கள் உங்கள் நேரம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்க பெண்களின் புதுவித திருமணம்..! தன்னை தானே திருமணம் செய்த பெண்

ஆபிரிக்க பெண்களின் புதுவித திருமணம்..! தன்னை தானே திருமணம் செய்த பெண்

பெற்றோர்களின் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க புதிய வழியை கண்டுபிடித்த Oxford மாணவி..! 

ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது மனதில் ஒயாமல் ஓடிகொண்டிருக்கும் அலையில் முக்கியமான ஒன்று தனது மகளுக்கு திருமணம் வயது வந்துவிட்டால் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்பதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதுமட்டும் இன்றி தனது பிள்ளைகளுக்கு வயது ஆக ஆக பெற்றோரின் திருமண அழுத்தமும் அதிகமாகி வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி திருமணம் செய்துகொள்வது தான்.

ஆனால், இதற்கும் ஆபிரிக்கவை சேர்ந்த Oxford மாணவி புதிய வழியை கண்டறிந்துள்ளார். உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு Oxford பல்கழைக்கழகத்தின் மாணவியான 32 வயதுடைய லுலு ஜெமிமா என்பவரை அவரது பெற்றோர் நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க இவர் புதிய உத்தியை கண்டறிந்துள்ளார். 

லுலு ஜெமிமா கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், உகாண்டாவில் நடைபெற்ற என திருமணத்திற்கு எனது பெற்றோர்கள் வரவில்லை. கோ ஃபண்ட் மீ என்ற பக்கத்தை தனது படிப்பிற்கான கட்டணத்தை சேமிக்க வைத்துள்ளார். அதில் தனது திருமண குறித்த முடிவை பதிவிட்டுள்ளார். 

எனது தந்தை எனக்கு 16 வயது ஆனபோதே என்னுடைய திருமணத்தில் பேச வேண்டிய உரைய தயார் செய்து விட்டார். சமீபகாலமாக என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவரை 32 வது திருமணம் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லுலுவின் திருமணத்திற்கான மொத்த செலவு $2.62 மட்டுமே. அதுவும் அவர் பயணத்திற்கு ஆன செலவே. திருமண உடையை பிறந்த நாள் பரிசாக லுலுவிற்கு அவரது தோழி கொடுத்துள்ளார். லுலுவின் சகோதரர் திருமண கேக்கை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் தங்களது பில்லை தாங்களே கொடுத்து விட்டனர் எனவும் தெரிவித்தார். 

உலகை சுற்றி பல விசித்திரமான வகையில் திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் ஒரு இளம் ஜோடி தங்களது திருமணத்தை நிர்வாணமாக செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது..!
#MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!

#MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!

#MeToo விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்கள் என பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார்.

சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


இந்நிலையில் தற்போது #MeToo விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்கள் என பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார். 
ஏர் இந்தியா-ல் அசம்பாவிதம்!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஏர் இந்தியா-ல் அசம்பாவிதம்!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதியது. இதில் 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.20 மணியளவில் புறப்பட்ட விமானம், குறைவான உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசியது.

இந்நிலையில் பெரும் சப்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாதுகாப்பு படை வீரர்கள், சம்பவம் குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருச்சி விமானநிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொடூரம் 4 வயது மகளை கற்பழித்த தந்தை! ஆந்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

கொடூரம் 4 வயது மகளை கற்பழித்த தந்தை! ஆந்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திரப்பிரதேசத்தில் தனது 4 வயது மகளை கற்பழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். 

மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்ட தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் மணி குமாரை கைது செய்தனர்.
பேட்ட-யை தொடர்ந்து தெலுங்கில் களமிறங்கிய விஜய் சேதுபதி...!

பேட்ட-யை தொடர்ந்து தெலுங்கில் களமிறங்கிய விஜய் சேதுபதி...!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் களமிறங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...! 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படமான பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியானது. இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வருகிறார். தற்போது, விஜய் சேதுபதி அடிப்பில் உருவான 96 மற்றும் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், ‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் First Look வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இதை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜார்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கெட்டப்பிலிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது...!
எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு? இன்றைய ராசிபலன்!! 12-10-2018

எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு? இன்றைய ராசிபலன்!! 12-10-2018

வெள்ளிக்கிழமை

மேஷம்:
இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


மிதுனம்:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்:
இன்று திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:
இன்று திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி:
இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:
இன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்:
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Thursday, October 11, 2018

சட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

சட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கனடா முழுவதும் கஞ்சா பாவனை சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது. இருப்பினும் அங்கு மாகாணத்திற்கு மாகாணம் சாரதிகளுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை விதித்துள்ளது.

கூடுதலாக இதெற்கு முன்னர் விதிக்கப்பட்ட சட்டங்கள் அமுலில் இருக்கும் என்றும், அதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால் கூட, அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தினால் 5 ஆயிரத்திற்கும் மேல் அபராதமும், குற்றத்தை பொறுத்து பலவருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

சுயாதின தேர்தல் ஆணைக்குழுவிற்கும், கட்சி தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

சுதந்திரக் கட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதாக எவர் குற்றஞ்சாட்டினாலும் அது அவர்களின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் சுதந்திரக் கட்சி தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்த்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
யாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

யாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூனை தன்னை உரசியிராவிட்டால் தான் எழுந்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், குறித்த இரண்டு பிராணிகளையும் தாம் தவறாமல் உணவு கொடுத்து வளர்த்த நன்றிக்காகவே அவை அவ்வாறு செயற்பட்டுள்ளன என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“நேற்று இரவு வழமையாகவே வெளி விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்தேன். காற்றோட்டத்திற்காக இவ்வாறு உறங்குவது வழமை. நடுச்சாமம் போல எனது காலை ஏதோவொன்று உரசுவது போல இருந்தது.

அத்துடன் எமது நாயும் பக்கத்திலிருந்து குரைத்தபடி இருந்தது. இதனால் உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது காலடியில் இரண்டடி நீளமான விசப் பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றுகொண்டிருக்க எமது வளர்ப்புப் பூனை எனது காலுடன் உரசியபடி அந்தப் பாம்பை நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. நாயும் பாம்பைப் பார்த்து குரைத்த வண்ணமிருந்தது.

இதனையடுத்து வீட்டிலிருந்த ஏனையவர்களும் எழுந்துவிட்டனர். விசப் பாம்பாக இருந்ததனால் வேறு வழியின்றி அந்த பாம்பை அடித்துக் கொன்று புதைத்துவிட்டோம்.”என்றார்.

இது மழைக் காலமாதலால் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வெளியில் சஞ்சரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் வீட்டின் வெளி கதவுகளை மூடிவிட்டு உறங்குவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘சின்மயி’யின் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து பதில்

‘சின்மயி’யின் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து பதில்

ஹிந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்துள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி பாலியல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

“எனக்கு வைரமுத்துவால் பாலியல் தொல்லை ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதை அனுபவித்தேன். என்னை அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது” என்று தனது குற்றச்சாட்டை சின்மயி தெரிவத்தார்.

அத்துடன் “விளம்பரத்துக்காக இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம். ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்” என்றார்.

இக்குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்துவின் பதிலை எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவிஞர் வைரமுத்து நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. 

அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. 

உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்.” இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களுக்குள் குடியேற குடியேற்றவாசிகளுக்கு தடை!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களுக்குள் குடியேற குடியேற்றவாசிகளுக்கு தடை!

சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் போன்ற அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் புதிய குடியேற்றவாசிகளுக்கான அனுமதியை கட்டுப்படுத்துவதற்கு, அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நகர்ப்புறங்களில் காணப்படும் அதிக சனநெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நகர்ப்புற உட்கட்டமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் பற்றாக்குறையை தூண்டிவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் குடியேறிய ஒரு இலட்சத்து 86 ஆயிரம் பேரில் 70 சதவீதமானவர்கள் புலம்பெயர் வீசாக்கள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் சிட்னி மற்றும் மெல்போர்னில் குடியேறியுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தினால் வருடாந்தம் அவுஸ்ரேலியாவிற்குள் உள்நுழையும் 40 வீதமானோர் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ட்ரம்ப்

எமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ட்ரம்ப்

அமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை பரிசீலனை செய்து வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத பாவனையை ஒழிப்பதற்கான வடகொரியாவின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பியோங்யாங் மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தென்கொரிய போர்க்கப்பலொன்றை இலக்குவைத்து வடகொரியா நடத்திய தாக்குதலில் 46 கொரிய கடற்படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரிமாற்றங்களை தடை செய்து தென்கொரியா, வடகொரியா மீது ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பியோங்யாங்கிற்கு எதிரான தமது நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தங்களின் ஒரு பகுதியாக, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தக்கவைத்துக் கொள்ளுமாறு நட்பு நாடுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்

இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் s-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லையென்றால், ரஷ்யாவிடம் இராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகளின் தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியா சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இவ்வாறு கூறினார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த மைக் பொம்பியோ “இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை” என கூறினார்.
மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு!

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு!

மலேசிய அரசாங்கம் மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளமை மனிதஉரிமைக் குழுக்களுக்கிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தூக்கில் போடுவதன் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.

அரசாங்கத்தின் இந்தமுடிவின் விளைவாக மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த 1200 பேர் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கொலை, பயங்கரவாதம், தேசத்துரோகம், கடத்தல், துப்பாக்கிச்சூடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மலேசியாவில் மரணதண்டனை விதிக்கும் வழக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மரபாக நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த வருடத்து தொடக்கத்தில் நடந்த தேர்தலில் மலேசிய வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது.

பிரித்தானியாவிடமிருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றத்தைத் தொடர்ந்து ஆளும் பரிசான் நஷனல் (Barisan Nasional) கூட்டணி மலேசியாவை ஆட்சி செய்து வந்தது.

மனித உரிமைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதாக உறுதியளித்த Pakatan Harapan எனும் கட்சி இந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மரணதண்டனையை ரத்துச்செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக நாட்டின் தகவல்தொடர்பு மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் கோபிந்த் சிங் தேவ் இன்று தெரிவித்தார்.

சீனா மற்றும் அண்டை நாடான சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற பல ஆசியநாடுகள் இன்னும் மரணதண்டனை விதிப்பதை நடைமுறையில் கொண்டுள்ளன.

மலேசியா மரணதண்டனையை ரத்துச்செய்வது மனிதஉரிமைகளில் முன்னோக்கிய ஒருபடி எனவும் மற்றைய நாடுகளுக்கு முன்னோடி எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை பாராட்டியுள்ளது.
துமிந்தவிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலை – கதறியழுத உறவினர்கள்!

துமிந்தவிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலை – கதறியழுத உறவினர்கள்!

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அதனை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த மூவரினதும் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதற்கமைய அவர்களுக்கு மீண்டும் இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியாது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில், மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு கோரி துமிந்த சில்வா உள்ளிட்ட நால்வர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு இன்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதன்போதே உச்ச நீதிமன்றம் குறித்த தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது உறிவினர்கள், அழுதவாறு அங்கிருந்து சென்றதை காணக்கூடியதாக இருந்தது.