Saturday, October 27, 2018

நானும் வாய்ப்பு தேடும்போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் - யாஷிகா ஆனந்த் பரபரப்போடு தகவல்...

நானும் வாய்ப்பு தேடும்போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் - யாஷிகா ஆனந்த் பரபரப்போடு தகவல்...

திரையுலகில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது - நடிகை யாஷிகா ஆனந்த்..

நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

மஹிந்த ஆதரவாளர்கள் யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

மஹிந்த ஆதரவாளர்கள் யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழில் அவரது ஆதரவாளர்கள் வெடிகொளுத்தியும், ஆர்ப்பரித்தும் தமது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

யாழிலுள்ள பிரதான வீதிகள் ஊடாக, வாகனங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் பாரிய பதாகை ஒன்று கட்டப்பட்டு வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி கொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

அத்துடன் மத்திய பேருந்து நிலையத்தில் சிலர் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்ததுடன், பொங்கல் மற்றும் இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் தலைநகர் உட்பட பல பிரதேசங்களிலும் மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்றத்தை கொண்டாடி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் தமது மகிழ்ச்சியை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மஹிந்த அமைச்சில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் அமைச்சு!

புதிய பிரதமர் மஹிந்த அமைச்சில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் அமைச்சு!

மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பதவியை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வகித்து வந்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பிரதமராக மஹிந்தவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு? கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்

மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு? கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்

இலங்கை அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கட்டுவதற்கு கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா.சம்பவந்தான், ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது, மஹிந்தவிற்கோ ஆதரவு வழங்குவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

மேலும், பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த கட்சி வாக்குறுதி வழங்குமோ அதற்கே தொடர்ந்தும் ஆதரவு தரவுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பானமையை நிரூபிப்போம் என பிரதமர் மஹிந்த அணியினர் கூறிவரும் நிலையில், அதனை மாற்றி மீண்டும் தாமே பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 பெரும் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்க போகின்றார்கள் என்பது தொடர்பில் தற்போது பலரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது.
UNP யின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு

UNP யின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Friday, October 26, 2018

பிரதமராக மஹிந்த - கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் அவரச அழைப்பு! கொழும்பு அரசியலில் பரபரப்பு !

பிரதமராக மஹிந்த - கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் அவரச அழைப்பு! கொழும்பு அரசியலில் பரபரப்பு !

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் காரியாலயத்தில் இடம்பெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தன்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு இல்லை என்றும் நானே இந்த நாட்டின் பிரதமர் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதிவியேற்றிருந்தார். இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் அதிரடியாக மாற்றம்!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் அதிரடியாக மாற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார்.

ஜனதிபதியின் மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.
வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் தீ விபத்து! யாழில் சம்பவம்!

வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் தீ விபத்து! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு சிவகுரு கடைக்கு அருகில் பயணித்துக் கொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த விபத்தானது இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி கீழிறங்கி ஏனையவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டபோதும் அது முற்றாக எரிந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தால் புகை மூட்டம் அடைந்த பொகவந்தலாவ

ஆர்ப்பாட்டத்தால் புகை மூட்டம் அடைந்த பொகவந்தலாவ

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று (26) காலை 08 மணியில் இருந்து காலை 11 மணிவரை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்தும் டயர்களை ஏறித்தும் பொகவந்தலாவ நகரில் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 

இந்த ஆர்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை ,பொகவான, குயினா, ஜெப்பல்டன், பி.எஸ், டி.பி.செல்வகந்தை ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 2000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தி கறுப்பு கொடிகளை ஏந்தியும், அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொகவந்தலாவ வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் வாகனசாரதிகளும் கலந்து கொண்டனர். 

தோட்ட தொழிலாளர்களுக்கு 25 கட்டாய வேலை நாட்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சவப்பெட்டி ஏந்தி பெருந்தோட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சவப்பெட்டி ஏந்தி பெருந்தோட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளா்களின் ஆா்ப்பாட்டம் இன்றும் 10வது நாளாகவும் பொகவந்தலாவ நகரில் இடம்பெற்றது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கு 1000ரூபா சம்பளத்தினை வழங்குமாறு கோரி பொகவந்தலாவ கொட்டியாகலை, ஐேப்பல்டன், டின்சின் கெம்பியன் ஆகிய தோட்டங்களை சோ்ந்த 2500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாளிமாா் சம்மேளனத்தின் பிரதானி ஒருவரின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.


ஹம்பாந்தோட்டை வங்கியில் கொள்ளை...!

ஹம்பாந்தோட்டை வங்கியில் கொள்ளை...!

ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள கிராமிய வங்கி ஒன்றில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (25) மதியம் 2 மணியளவில் முகத்தை மூடியவாறு தலைக்கவசம் அணிந்து கொள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபர் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களுக்கு துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து செல்லும் விதம் வங்கியில் உள்ள சிசிரிவி கெமராக்களில் பதிவாகி இருந்தது. 

இதேவேளை குறித்த சந்தேகநபர் வங்கியில் சேவையாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஒன்றையும் பரித்துச் சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் தலையீடு செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண சபை அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரியதுடன் மாதச்சம்பளம் வழங்கப்படல் வேண்டுமென்று பிறிதொரு பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இவ் இரு பிரேரணைகளும் ஒரே விடயத்தை முன்னிலைப்படுத்துவதால், இரு பிரேரணைகளும் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சச்சிதானந்தன் தொடர்ந்துபேசுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டக் கோரிக்கை நியாயமானது. நான்கு தலைமுறைகளாக எமது மக்கள் சம்பள உயர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் போராடி வந்துள்ளனர். தற்போதைய நிலையில் தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டியது அதி முக்கியமாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்படுகையில் அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மாத்திரம் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகளை நம்பியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இலங்கையின் தேயிலைக்கு “சிலோன் டி” என்று தனியானதோர் முன்னணி அடையாளம் இருந்து வருகின்றது. ஆனால் அத் தேயிலையை உற்பத்திசெய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சொற்பமேயாகும்.

இந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால், பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை தாண்டவமாடுகின்றது. அத்துடன் குறிப்பாக 68 பெருந்தோட்டங்கள் ஊவா மாகாணத்தில் காணப்பட்டாலும் அத்தோட்டங்களில் 44 தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 530 ரூபாவாகும். இச்சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால் தோட்டங்களில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டுவெளியேறி வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தேர்தல் காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்கக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவோம் என்றார் ஆனால் அவ் உறுதி நிறைவேற்றப்படவில்லை. தொடர் போராட்டங்களின் மத்தியில் தங்களது வாழ்க்கையையும் உரிமையையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இழந்துவிடக்கூடாது. ஆகவே, 22 தோட்டக் கம்பனிகளையும் அரசுபொறுப்பேற்பதுடன் பெருந் தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் நேரடியாக தலையிடல் வேண்டும் என்றார்.

சபைஉறுப்பினர், ஆ. சிவலிங்கம் பேசுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாதினச் சம்பள உயர்வு வழங்கப்படுமேயானால் மகிழ்ச்சியடைவது நாமாகவே இருக்கும். இ.தொ.கா. வின் உப தலைவராக இருக்கும் நான் தோட்டத் தொழிலாளியாக இருந்து வந்தவன். ஆகையினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உண்மை நிலையினை நான் அறிந்தவன் தெரிந்தவன் அனுபவப்பட்டவன்.

தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக 920 ரூபா என்ற ரீதியில் வழங்கவே முடிவு செய்துள்ளது. சம்பள உயர்வுபற்றி புரட்சிகர வார்த்தைகளைப் பேசலாம். ஆனால், அது நடைமுறைக்கு உதவாது.

இ.தொ.கா. என்றுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்காது. ஆகையினால் தான் அவர்கள் தொடர்ந்தும் எமது தலைமையை ஏற்று, எமது அமைப்பிலேயே தொடர்ந்தும் அங்கம் வகித்து வருகின்றனர் என்றார்.

இப் பிரேரணை விவாதங்களுக்குப் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்ததால், அப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
MeToo புகாருக்கு உள்ளான 7 இசைக் கலைஞர்கள், கச்சேரிகளில் பங்கேற்க தடை

MeToo புகாருக்கு உள்ளான 7 இசைக் கலைஞர்கள், கச்சேரிகளில் பங்கேற்க தடை

கர்நாடக இசை கலைஞர்களான ரவிக்கிரண், ஒ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஸ்ணம் ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மீது, பெண் கலைஞர்கள் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில், இவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர்கள் இசைக் கச்சேரிகளில் பாட, சென்னை மியூசிக் அகாடமி தலைவர் முரளி தடை விதித்துள்ளார்.

பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோரும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர் கனமழை ; இரத்தினபுரியில் மண்சரிவால் 16 குடும்பங்கள் பாதிப்பு

தொடர் கனமழை ; இரத்தினபுரியில் மண்சரிவால் 16 குடும்பங்கள் பாதிப்பு

இரத்தினபுரி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேல பனகம பன்னிலந்த பிரதேசத்தில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மலை உச்சிலிருந்து பாரிய அளவிலான கற்கள் மற்றும் பாரிய மரங்கள் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் தத்தமது உறவினர்களின் இல்லத்தில் தஞ்சமடைந்தள்ளனர்.

மண்சரிவு காரணமாக பனகம பன்னில்கந்த பிரதேசத்தின் அருகில் அமைந்துள்ள புலுகாஹாதென்ன வித்தியாலயமும் மூடப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் பாடசாலையில் 400 மாணவர்கள் கல்லி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு ; ஜப்பான் தனியார் நிறுவனம்

6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு ; ஜப்பான் தனியார் நிறுவனம்

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்குவதாக ஜப்பான் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது... 

ஜப்பான்: வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக இரவு முழுவதும் சமூக வலைதளங்களின் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி இரவு முழுவதும் தூங்காமல் நேரத்தை சமூக இணையதளத்தில் செலவிட்டால் பின்னர் காலையில் எப்படி வேளையில் கவனம் செலுத்த முடியும். இதற்கான ஜப்பானை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் புதிய உத்தியை கையாண்டிள்ளது. அதுதான் இந்த ரூ.42 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை. 

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி ஆபரை அறிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான உணவகத்தில் ஆண்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் வரையிலும் உணவு உட்கொள்ளலாம் என்றும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த அந்நிறுவன அதிகாரி கூறுகையில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களில் 92 சதவீதம் பேர் இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். சிறந்த உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
அட கடவுளே...!! இதுக்கு எல்லாமா வேலையவிட்டு தூக்குவாங்க ??

அட கடவுளே...!! இதுக்கு எல்லாமா வேலையவிட்டு தூக்குவாங்க ??

டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பணி நேரத்தின் போது ஃபேஸ் மாஸ்க் போட்டதற்காக அந்த ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்ய பட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாங்காங்: சமீபத்தில் சீன டாக்சி டிரைவர் ஒருவர் கிழக்கு சீனாவில் பனியின் போது தனது அழகாய் பராமரிக்க ஃபேஸ் மாஸ்க் அணிந்தபடி அவர் பணயில் ஈடுபட்ட கேளிக்கையான சம்பவம் நடந்துள்ளது. 

இதையடுத்து, அந்த டாக்ஸி ஓட்டுனரை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. சென் யிகுன் (Chen Yiqun) எனும் வாடகைக் கார் ஓட்டுநர், இரவுப் பணியின் போது பெட்ரோல் போடுவதற்காக நகரப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, முகப்பராமரிப்புக்கான அழகுசாதன முகமூடி அவர் அணிந்திருந்தார். இதை, பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து, கவனியுங்கள் பெண்களே...! எவ்வளவு பணியிருந்தாலும் முகப்பராமரிப்பு முக்கியம் என குறிப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 
இதையடுத்து அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிகம் பேரால் பகிரப்பட்டதையடுத்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர். முகமூடி நழுவி விழுந்தால், பார்வை மறைக்கப்பட்டு, விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். 

இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புதுவகை CAR...

இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புதுவகை CAR...

நடிகை ஸ்ருதிஹாசன் தனது அட்டகாசமான புதுவகை BMW காருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் முருகதாஸ் இயக்கய 7-ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படத்தில், தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் இவர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆகியவர்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இவருக்கு 3 படத்திற்கு பின்னர் ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது, சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தனது காதலனுடன் ஊர் சுற்றி வரும் ஸ்ருதிஹாசன், அந்தப் படங்களை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாக்கிராமில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கருப்பு நிற BMW காரில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறிவரும் நிலையில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ’ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கயுள்ளது குறிப்பிடத்தக்கது...!
48 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்த கூகிள் !!! காரணம் இதுதான்

48 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்த கூகிள் !!! காரணம் இதுதான்

கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் சுமார் 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.

#MeToo என்ற ஹாஸ் டாக் உருவாக்கி, சமூக வலைதளத்தின் மூலமாக பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, ஆண்ட்ராய்டின் தந்தை என அறியப்படும் ஆண்டி ரூபினுக்கு, கடந்த 2014ம் ஆண்டில் 90 மில்லயன் டாலர்களை கொடுத்து பாராட்டி, வெளியே அனுப்பிய கூகுள் நிறுவனம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைத்ததாக செய்தி வெளியிட்டது. 

இந்த விவகாரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார் அதில்,

கடந்த 2 ஆண்டில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்றைய ராசிபலன்! வெள்ளிக்கிழமை: 26-10-2018

இன்றைய ராசிபலன்! வெள்ளிக்கிழமை: 26-10-2018

மேஷம்:
இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்:
இன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்:
இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்:
இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி:
இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

துலாம்:
இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:
இன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Thursday, October 25, 2018

கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு பங்களிப்பு செய்தார்கள் அல்லது உதவிகளை புரிந்ததாக தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயிறுவித்தவர்கள் அவர்களை வழிநடத்தியவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள்.

குறிப்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என கூறப்படும் கருணா அம்மான் என்பவர் தமிழீழ விடுதலை புலி அமைப்பின் தளபதியாக செயற்பட்டவர்.

இப்படி கட்டளையிட்டவர்களுக்கு பிரதி அமைச்சு பதவி கொடுக்க முடியும் என்றால் ஏன் சாதாரண உதவி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு குறுகியகால புனர்வாழ்வினை வழங்கி விடுதலை செய்யமுடியாது?

மேலும் கே.பி. என்பவரை சர்வதேசத்தில் இருந்து அழைத்து அவருக்கு இலங்கையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏன் அவர் விடுதலைப்புலி உறுப்பினர் இல்லையா?

ஆனால் கே.பி என்பவரை சந்திப்பதற்காக மலேசிய சென்ற 3 பேர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.” என அவர் கூறினார்.
யாழில் மீண்டும் கொள்ளையர்கள் கொடூரம்....! தந்தை மகள் மீது கொடூர வன்முறை!!

யாழில் மீண்டும் கொள்ளையர்கள் கொடூரம்....! தந்தை மகள் மீது கொடூர வன்முறை!!

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொள்ளையர்களினால் கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளைடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்களை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜமால் கஷோக்கி கொலையை உறுதிப்படுத்தும் ஒலி நாடா !

ஜமால் கஷோக்கி கொலையை உறுதிப்படுத்தும் ஒலி நாடா !

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பான ஒலி நாடாக்களை CIA பணிப்பாளர் கினா ஹஸ்பெல் செவிமடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் துருக்கிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த கினா ஹெஸ்பல் குறித்த ஒலிநாடாவை செவிமடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஜமால் கஷோக்கி தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதை சவுதி அரேபிய அரசாங்கம் மறுத்துள்ளது.

இதேவேளை, துருக்கியின் கைவசமிருக்கும் ஒலிநாடாவானது எவ்வாறு, எங்கு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய தகவல்கள் புதிராகவே உள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அக்ரஹார சிறையில் கன்னட மொழி கற்றுக் கொள்ளும் சசிகலா!

அக்ரஹார சிறையில் கன்னட மொழி கற்றுக் கொள்ளும் சசிகலா!

முன்னாள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ள பள்ளியில் கன்னட மொழி கற்றுக் கொண்டு வருவதாக சிறை அதிகாரி ஒருவர் பி.டி..ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“சசிகலா இப்போதைக்கு கன்னட எழுத்துக்களை பயின்றுள்லார், இன்னும் உயர்மட்ட கன்னட மொழியைக் கற்க அவர் விண்ணப்பிக்கலாம்.

இப்போது கொஞ்சம் கன்னட மொழியைக் கற்றுள்ளார். அத்துடன் அவரால் கொஞ்சம் கன்னடம் பேச முடியும்” என சிறை அதிகாரிதெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மூத்த பெங்களுர் பல்கலைக் கழக அதிகாரியான டாக்டர் பி.சி.மைலார்ப்பா என்பவர் கூறும்போது,

“உயர்மட்ட கன்னட மொழியைக் கற்றுக் கொள்ள சசிகலாவிடமிருந்து சிறையிலிருந்து விண்ணப்பம் வரப்பெற்றோம். இது ஒரு ஒராண்டுக்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் படிப்பு ஆகும். இந்தப் பாடம் விரைவில் தொடங்கவுள்ளதோடு, முடிந்த பிறகு தேர்வுகள் நடைபெறும்” என்றார்.

இதற்கான வகுப்புகள் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தல அஜித்தின் செகன்ட்லுக் போஸ்டர் தொடர்பில் யாஷிகாவின் அதிரடி கருத்து!

தல அஜித்தின் செகன்ட்லுக் போஸ்டர் தொடர்பில் யாஷிகாவின் அதிரடி கருத்து!

அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தை பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் செகன்ட்லுக் இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.

வெளியாகி குறைந்த மணி நேரம் தான் ஆனாலும் அதற்குள் தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்திருந்தனர்.

"2019 ஆம் ஆண்டின் முதல் திருவிழாவிற்கு வேறு யார் தயாராக இருக்கின்றீர்கள்" என பிக்பொஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் கேட்டுள்ளார்.

இந்நிலையில் வெளியான செகன்ட்லுக் போஸ்டருக்கு பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.













எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று பதவியேற்பு!

எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று பதவியேற்பு!

எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி முலடு தெசோமேயின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஷஹ்ல் வேர்க் செவ்டேவை தங்கள் புதிய ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள எத்தியோப்பிய மக்கள் ஆதரவளித்திருந்த நிலையில், இன்று அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஷஹ்ல் வேர்க் செவ்டே, எத்தியோப்பியாவின் செனகலுக்கான தூதுவராக கடமையாற்றியவர். அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆபிரிக்க நாடுகளுக்கான விஷேட பிரதிநிதியாகவும் கடமையாற்றிய அவர் சிறந்த கல்விமானாவார்.

இவர் எத்தியோப்பிய ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் தான் வகித்துவந்த பதவியை கடந்த வாரம் துறந்தமை குறிப்பிடத்தக்கது.
சொத்துத் தகராறு காரணமாக பெண்ணை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்து பழிதீர்த்த பாதகன்!

சொத்துத் தகராறு காரணமாக பெண்ணை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்து பழிதீர்த்த பாதகன்!

சொத்துத் தகராறு காரணமாக உறவுக்கார பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்து கொடூரமாகத் தாக்கிய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே காணி தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

குறித்த சம்பவம் நடந்த அன்று இப்பிரச்சினை குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக இப்பெண் சென்றுள்ளார்.

இதன்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இரும்பு கம்பியால் தாக்கி கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், பெண்ணை துஷ்பிரயோகம் செய்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த ஒருவரையும் கைதுசெய்தனர்.

டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் கோட்டா படுகொலை விவகாரம் - நாலக டி சில்வா சற்றுமுன்னர் அதிரடி கைது!

ஜனாதிபதி மற்றும் கோட்டா படுகொலை விவகாரம் - நாலக டி சில்வா சற்றுமுன்னர் அதிரடி கைது!

ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றும் சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டவரை இன்று இரவே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: ஏஞ்சலிக் கெர்பர்

பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: ஏஞ்சலிக் கெர்பர்

பெண்கள் சம்பியன்ஷிப் தொடரின், ரெட் குழு பிரிவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஜேர்மனியின் முன்னணி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் வெற்றிபெற்றார்.

இப்போட்டியில், ஜேர்மனியின் முன்னணி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், ஜப்பானின் நவோமி ஒசாக்காவுடன் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என ஏஞ்சலிக் கெர்பர், கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த நவோமி ஓசாகா, செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டினை கைப்பற்றியதால் போட்டி விறுவிறுப்படைந்தது. கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் செட்டை 6-4 என கைப்பற்றி கெர்பர் வெற்றிபெற்றார்.
டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மகத்தான கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

35வயதான டுவைன் பிராவோ, தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ’14 வருடங்களுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக களமிறங்கினேன். அந்த தருணம் இன்றும் என் நினைவில் இருக்கின்றது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். அப்போது மெரூன் தொப்பியை பெற்றேன். அப்போது உற்சாகத்தையும், பேரார்வத்தையும் பெற்றேன். அதனை என் வாழ்கை முழுவதில் வைத்திருக்கின்றேன்.

எனினும், நான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக எதிர்வரும் நாட்களை நகர்த்தவுள்ளேன். எனது வாழ்க்கையை கொண்டு செல்ல அதனை ஏற்க வேண்டும்.

மற்றவர்கள் செய்ததைப் போல நான் செய்ய வேண்டும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு சர்வதேச அரங்கை விட்டு விலகுகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வரலாற்றில் முத்திரை பதித்த சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

அறிமுகமான காலப்பகுதியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு துணை நின்ற டுவைன் பிராவோ, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளங்கியவர் ஆவார். அத்தோடு துடுப்பாட்டம், பந்து வீச்சு களத்தடுப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்கிய வீரராவார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டையும் தாண்டி தொழில்முறை கிரிக்கெட் தொடர்களிலும் அவர் உள்வாங்கப்பட்டார். அந்த தொடர்களிலும் அவர் சாதித்ததால் அவருக்கு பணம், புகழ் என அனைத்தும் பின்தொடர்ந்தன.

ஆடுகளத்தையும் தாண்டி வீரர்கள், இரசிகர்கள் என அனைத்து தரப்பினருடனும் வெகுளியாகவும், நட்புறவுடனும் பழகுவதினால் அவருக்கு பல நாடுகளிலும் இரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.

கிரிக்கெட் உலகில், ஒரு வீரருக்கு கிடைக்கும் அனைத்து அங்கீகாரங்களையும் பெற்ற வீரர் என்ற பட்டியலில் பிராவோவும் உள்ளார் என்பது அவரது கிரிக்கெட் சாதனையாளர் என்ற கௌரவத்தின் சான்றாகும். இது தவிர அவர் இசைத்துறையிலும் கைத்தேர்ந்தவர் ஆவார்.

எனினும், கடந்த காலங்கில் கிரிக்கெட் சபையுடனான முறுகல் நிலை காரணமாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்தாலும், அவர் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப எண்ணமில்லாத பிராவோ, அனைத்து வித சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார்.

பிராவோ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இறுதியாக விளையாடினார். இறுதியாக 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் விளையாடினார்.

எதுஎவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகள் அணி, அதிசிறந்த சகலதுறை வீரரை இழந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ள நிலையில் பிராவோவின் இழப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.

பிராவோ, 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 66 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலகம் போற்றும் மகத்தான இந்த வீரரின் ஓய்வு அறிவிப்பானது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென இரசிர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களின் வாழ்த்தோடு வெற்றிக்கிண்ணமும் இணைகின்றது.
பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி

பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி

பெண்கள் சம்பியன்ஷிப் தொடரின், ரெட் குழு பிரிவில் நடைபெற்ற முதலாவது போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இப்போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நீடித்தது. இதில் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 7-6 என ஸ்லோன் ஸ்டீபன்ஸ் செட்டை கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கிகி பெர்டன்ஸ், 6-2 என இலகுவாக செட்டை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது. இதில் ஆரம்பத்தில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். எனினும் தனது ஆக்ரோஷத்தால் கிகி பெர்டன்சை கட்டுப்படுத்திய ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3 என செட்டைக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.
மிகப்பெரும் உலக நாடுகளின் பிளாஸ்டிக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டி மலேசியா!

மிகப்பெரும் உலக நாடுகளின் பிளாஸ்டிக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டி மலேசியா!

அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்டு மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்ட கோலாலம்பூரிற்கு சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள புலவ் இன்தாஹ் தீவில் கொட்டப்படுகின்றன.

மலேசியாவிற்குச் சொந்தமான குறித்த தீவானது, 12 இற்கும் அதிகமான மீள்உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பினும் கொட்டப்படும் பிளாஸ்டிக் மழைமேடுகள் குறையாமலுள்ளன.

புலவ் இன்தாஹ் என்பதன் பொருள் அழகான தீவாகும். எனினும், குறித்த பிளாஸ்திக் கழிவுகளினால் மிகவும் அருவருப்பான மாசுபடும் தீவாக காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் பல சட்டவிரோத பிளாஸ்திக் மீள்உற்பத்தி தொழிற்சாலைகள் நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் விவகாரத்தில் மலேசியா அரசாங்கம் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது.
ஊழியர்களுக்கு சம சம்பளம் வழங்கத்தவறியுள்ளது BBC !

ஊழியர்களுக்கு சம சம்பளம் வழங்கத்தவறியுள்ளது BBC !

பணிபுரியும் அலுவலகர்களுக்கு சம சம்பளத்தை வழங்கும் விடயத்தில் BBC ஊடகம் தோல்வியடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு ஒப்பிட்டளவில் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுவதாக எண்ணியல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளின் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

விஷேடமாக ஊடகத்தின் மீதான குற்றச்சாட்டை தொகுப்பாளர் கெரி கிரேசி என்பவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில், இதற்கு பதிலளித்த BBC நிறுவனம், குறித்த தகவல்கள் மிகவும் பழையது என்றாலும், பால்நிலை அடிப்படையில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளை இன்னும் சமப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்!

ஜப்பான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்!

சீன-ஜப்பான் உத்தியோகபூர்வ இருதரப்பு மாநாட்டை முன்னெடுப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக உறவு முறிவுக்குட்பட்டதிலிருந்து ஆசிய நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவைப் பேண சீனா உட்பட அனைத்து ஆசிய நாடுகளும் எண்ணுகின்றன.

இந்நிலையில், பாரிய கப்பல் வசதிகளைக் கொண்டுள்ள மிகப் பெரிய ஏற்றுமதி வர்த்தக சக்தியுடைய சீனாவுடன் சீரான வர்த்தக உறவை மேற்கொள்ளும் முகமாகவே, ஜப்பான் பிரதமர் சீனாவிற்கு பயணித்துள்ளார்.

எனினும், அமெரிக்காவுடன் இணைந்த இராணுவ அணிநடை, பாதுகாப்பு பயிற்சி போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சீனாவுடன் உறவை பேணும் இக்கட்டான சூழ்நிலைக்குள் ஜப்பான் சிக்குண்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் ஜப்பான் பிரதமர் சந்திக்கவுள்ள முழுமையான வர்த்தக நோக்கமுடைய மாநாடு முதல் முதலில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி 3 போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் நீக்கம்!

இறுதி 3 போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் நீக்கம்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மிகிதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இணைக்கப்பட்டுள்ள அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமி நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டி வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.

முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

முதல் இரண்டு போட்டியில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதற்க்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

3 ஆவது ஒருநாள் போட்டி புனேயில் 27 ஆம் திகதியும், 4 ஆவது போட்டி மும்பையில் 29 ஆம் திகதியும், 5 ஆவது போட்டி நவம்பர் 1 ஆம் திகதியும் திருவனந்தபுரத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கின் 1/3 பங்கு அமைச்சர்களின் தெரிவு நவம்பரில் நடைபெறும்!

ஈராக்கின் 1/3 பங்கு அமைச்சர்களின் தெரிவு நவம்பரில் நடைபெறும்!

ஈராக்கின் உள்துறை அமைச்சு உட்பட ஏனைய 8 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் தெரிவு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

புதிய ஜனாதிபதி அதெல் அப்துல் மஹ்தி மற்றும் அமைச்சரவையின் மூன்றில் இரண்டு பங்கு தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளனர்.

சட்டவாக்க அதிகாரிகளின் உடன்பாடற்ற நிலை காரணமாக, அமைச்சரவையின் 22 அமைச்சுப்பொறுப்புக்களில் 8 அமைச்சர்களுக்கான தெரிவு இடம்பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஏனைய 8 அமைச்சுக்களுக்காக அமைச்சர்களைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 14 அமைச்சர்களில், தமார் கத்பன் எண்ணெய் அமைச்சராகவும், ஃபுவாத் ஹுஸைன் நிதியமைச்சராகவும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவின் அல்ப்ரிஜஸ் திருவிழா கொண்டாட்டம்!

மெக்ஸிகோவின் அல்ப்ரிஜஸ் திருவிழா கொண்டாட்டம்!

மெக்ஸிகோவில் நடைபெற்ற அலப்ரிஜஸ் (Alebrijes) என்ற திருவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அந்தவகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு மெக்ஸிகோவில் அல்ப்ரிஜஸ் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

பறக்கும் மான், நான்கு கால் சேவல், டிராகன், எலும்புக்கூடுகள் என வினோத உருவங்களைக் கொண்டு திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

மெக்ஸிகோ புகழ் பெற்ற கலைஞரான பெட்ரோ லினரிஸ் என்பவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இந்த திருவிழா அவரது கனவில் வந்ததாகக் கூறப்படும் வினோத உருவங்களை அவர் சிற்பமாக செய்து அவற்றுக்கு அல்ப்ரிஜஸ் என பெயர்வைத்து மெக்ஸிகோ மக்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த விழாவின் போது மெக்ஸிகோ மற்றும் நாடு முழுவதிலிருந்தும் வந்த கலைஞர்கள் விலங்குகள், வினோதமான பொருட்கள் என அவரின் கற்பனை உருவங்களை பல வண்ணங்களில் உருவாக்கியிருந்தார்கள்.

மேலும் இந்த படைப்புகள் மெக்ஸ்கோவின் வீதியில் நடன கலைஞர்கள் சூழ ஊர்வலமாக எடுத்து வந்து இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் கண்டு இரசித்ததுள்ளனர்.
27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி!

27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி!

ஆம் ஆத்மி கட்சியின் 27 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தள்ளுபடி செய்துள்ளார்.

புதுடெல்லியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலான தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவையே ஜனாதிபதி விலக்கியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லியில் உள்ள நகரில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து ரோகி கல்யாண் சமிதிகள் (நோயாளிகள் நல குழு) செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி ஆளும் அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு, சுகாதார வசதிகள் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட வசதிகளை வழங்கும் ரோகி கல்யாண் சமிதிகள் அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மனுத் தாக்கலும் செய்யப்பட்டது.

அவர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அனுப்பினார். அவர்கள் இந்த மனு மீது அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி அதனைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்.
827 ஆபாச இணையத்தளங்களை முடக்க உத்தரவு!

827 ஆபாச இணையத்தளங்களை முடக்க உத்தரவு!

827 ஆபாச இணையத்தங்களை முடக்குமாறு இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி பாலியல் உள்ளடக்கங்களைக் கொண்ட 857 ஆபாச இணையத்தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வை மேற்கொண்டது. இதன்படி 30 இணையதளங்களில் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் இல்லை என்பதை கண்டறிந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப் பட்டியலில் உள்ள எஞ்சிய 827 இணையத்தளங்களை முடக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இணையத்தளச் சேவை வழங்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள 827 இணையதளங்களை முடக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததே: தமிழிசை சௌந்தர்ராஜன்

18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததே: தமிழிசை சௌந்தர்ராஜன்

சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கானது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பாகவே தெரிகிறது என, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியானதை தொடர்ந்து ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஏற்கனவே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திரா பானர்ஜியும் இதே தீர்ப்பை தான் முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதியும் அதே தீர்ப்பை தான் முன்வைத்துள்ளார் என்றார்.

இதேவேளை, இனி எந்த விதத்திலும் இந்த 18 பேரை வைத்து ஒரு ஆட்சியை நிலைகுழைய செய்யும் செயற்பாடுகள் இடம்பெறாது என தமிழிசை கூறியுள்ளார்.

எனினும் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் நீதிபதி சத்தியநாராயணன் கூறியதாவது, இது முன்னைய நீதிபதிகளின் கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்ததல்ல. என்னுடைய தனிப்பட்ட தீர்ப்பாகவே இதை பிறப்பிக்கிறேன எனக் கூறிய பின்னரே நீதிபதி தீர்ப்பை வாசித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
முதலமைச்சரின் குடை சிறியது.... எனக்கு பெரியகுடையே தேவை....விக்கியின் அழைபிற்கு மனோ பதிலடி!

முதலமைச்சரின் குடை சிறியது.... எனக்கு பெரியகுடையே தேவை....விக்கியின் அழைபிற்கு மனோ பதிலடி!

முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வவுனியா நகர்ப்பகுதியின் அபிவிருத்திகள் தொடர்பாக பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, முதலமைச்சர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் எனவே அவருடன் இணைந்து செயல்படுவீர்களா? என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவரது குடையில் எனக்கு இடமில்லை. அது சின்னகுடை. எனக்கு பெரியகுடையே தேவை. எனவே அது பெரியகுடையான பின்னர் பார்ப்போம்” என்று கூறினார்.

தமிழ் மக்கள் பேரவையின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன், தனது புதிய கட்சி தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டார். இதன்போது, அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.