Friday, November 2, 2018

இலங்கை அரசியலில்  நடப்பது என்ன ? கட்சி தலைவர்கள் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கை அரசியலில் நடப்பது என்ன ? கட்சி தலைவர்கள் சபாநாயகருடன் சந்திப்பு

கட்சித்தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு கட்சித்தலைவர் சபாநாயகரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தால் இன்று வெளியாகுமென தான் நம்புவதாக சபாநயாகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, அவ்வாறு 7 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டுவதாக இருந்தால் சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது.

சபாநாயகருடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், திகாம்பரம், ஐக்கியதேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஜே.வி.பி. யின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!!

வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 54 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அன்றைய தாக்குதலில் மரணமடைந்தவர் ஜெயசிறி நிர்மலா தேவியின் கணவரான 66 வயதுடைய ப.ஜெயசிறி ஆவர். இதேவேளை தாக்குதல் செய்தவர் பருத்தித்துறை பொலிசில் கடந்த புதன்கிழமை தந்தையால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 43 வயதுடைய நபர் தொடர்ந்தும் யாழ் போதனா மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் அனுமதிக்கப்டட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thursday, November 1, 2018

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ஆட்சி பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுபான்மையினரின் சம்மதத்துடன் நடப்பதே ஜனநாயக ஆட்சியாகும்

ஜனநாயக ஆட்சி பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுபான்மையினரின் சம்மதத்துடன் நடப்பதே ஜனநாயக ஆட்சியாகும்

இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது, முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும் போது நான் இந்த அறிக்கையை விடுவதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் இன்று (01) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 60 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் இருக்கும் மிக மூத்த அரசியல்வாதி என்பதால் சில விடயங்கள் பற்றியும் சில நபர்கள் பற்றியும் எனது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கடமை எனக்குண்டு. 

ஆபிரகாம்லிங்கன் அவர்கள் ஜனநாயகத்தை மக்களுக்காக மக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் என பரிந்துரைத்துள்ளார். ஜனநாயக ஆட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுபான்மையினரின் சம்மதத்துடன் நடப்பதே ஜனநாயக ஆட்சியாகும். 

காலம் காலமாக இலங்கையில் ஜனநாயக ஆட்சி நூற்றுக்கு நூறு வீதம் நடந்ததென நான் கூற வரவில்லை. இடைக்கிடை சிறியதாகவும் சிலவேளைகளில் கூடுதலாகவும் ஜனநாயகம் தடம்புரண்டதுண்டு. ஆனால் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில்தான் ஜனநாயகம் முற்று முழுதாக தடம் புரண்டதாகும். இது எம்மக்கள் அநேகருக்கு தெரிந்த விடயமாகும். சிலர் தெரிந்தும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அனைவரும் கிளர்ச்சி செய்திருக்க வேண்டும். ஆனால் உள்ளுர் வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களின் மறு வாக்கெடுப்புக்கு விடுமாறு விடப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

ஜனநாயகம் நம்நாட்டில் இது போன்று முன்பு எப்பொழுதும் சீரழிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் அன்றைய அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கடப்பாடு இருந்தது. குறிப்பிட்ட ஒரு சிலரின் தலையீட்டால் நடைபெறவில்லை. தென் இலங்கை கட்சிகள் எதுவும் 2004ம் ஆண்டுத் தேர்தலில் வடக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. 

வன்முறைக் கொள்கையுடன் இயங்கிய ஒரு குழு தமிழத் தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களையும் எதுவித பிரச்சாரத்திற்கும் ஈடுபடவிடாது தடுத்தனர். பணம் கொடுத்து பத்திரிக்கை விளம்பரங்கள் போடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில் காலையில் தோல்வி அடைந்தவர் மாலையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆள்மாறாட்ட வாக்களிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. 

ஒரு வேட்பாளர் 120,000 க்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே போல் பலர் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாக்குகளைப் பெற்றனர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் திருவாளர்கள் இரா. சம்பந்தன் அவர்களும் மாவை சேனாதிராசா அவர்களும் ஏற்க வேண்டும். அத் தேர்தலில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகம் இன்றும் புதைக்கப்பட்டே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கௌரவமாக செய்திருக்க வேண்டியது மிக்க கண்ணியமான முறையில் பதவிகளைத் துறந்திருக்க வேண்டும். ஆனால், அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் 1983ம் ஆண்டு பாராளுமன்ற காலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடித்ததை ஆட் சேபித்து பதவிகளை துறந்த சம்பவம் பற்றி குறிப்பிடப்படுவது பொருத்தமாக இருக்கும். 2010ம் ஆண்டு தேர்தலில் கலந்து கொண்ட அதே குழு 10 தொடக்கம் 15 சதவீத வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இத்தேர்தலிலும் ஜனநாயகம் தன் முன்னைய இடத்திற்கு திரும்பவில்லை. 

இக்கால கட்டத்தில்தான் சிலரின் எண்ணத்தில் “ நல்லாட்சி அரசு” என்ற எண்ணம் உதித்தது. இதனால் மேலும் பிரபல்யம் அடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே தேசிய இயக்குநர் சபையிலும் இடம் கிடைத்தது. அச்சபைக்கு அமைச்சருக்குரிய அதிகாரத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை கொண்டதாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சபையின் அங்கத்துவத்தின் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் கூடுதலான ஆசனங்கள் கிடைத்தன. 

அக் குழுவில் கௌரவ இரா. சம்பந்தன் அவர்களுக்கும் ஓர் இடம் கிடைத்தமையானது 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கப்படாமல் சன்மானம் வழங்கப்பட்டது போல் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்கு மேலும் ஓர் அலங்காரமாகும். 

மேலும் பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி எழுதக் கூடியதாக இருந்தும் இங்கே கூறப்பட்டவை மட்டும் அவர்கள் மக்கள் நலன் தவிர்த்த தமது தமிழரசுக் கட்சியை வளர்ப்பதிலேயே ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க நான் முயலவில்லை. எனக்கு மிகப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு பரிகாரமும் தேட முயற்சிக்கவில்லை. எனது ஒரே கவலை யாதெனில் 2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்து கிடப்பதே. இன்று நடந்திருப்பவை திருவாளர்கள் சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை, சம்மந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். அதன் முதல் கட்டமாக தமிழ் மக்கள் நன்கறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று பிரமுகர்களும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பிரச்சினையை அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடியவர்களின் கைகளில் தீர்விற்காக விட்டுவிட வேண்டும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கூட்டப்படும் போது ஜனநாயகம் நிலை நாட்டப்படும் - ரணில்

பாராளுமன்றம் கூட்டப்படும் போது ஜனநாயகம் நிலை நாட்டப்படும் - ரணில்

05-11-2018 பாராளுமன்றம் கூட்டப்படும் போது நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் குரலுக்கே இந்த தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
வெளியானது அதிர்ச்சி தகவல்.. !!! மஹிந்த கட்சிக்கு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மில்லியன் பவுண்ட்ஸ் வழங்க படுகின்றதா?

வெளியானது அதிர்ச்சி தகவல்.. !!! மஹிந்த கட்சிக்கு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மில்லியன் பவுண்ட்ஸ் வழங்க படுகின்றதா?

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹியுகோ சுவையர் இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசனை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு...!!! இன்றைய மதிப்பு 177.32

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு...!!! இன்றைய மதிப்பு 177.32

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (01 ஆம் தேதி நவம்பர் ) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 177 ரூபாய் 32 சதமாக உள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை! நவம்பர் மாத ராசிபலன் பலன்கள் உங்களுக்காக!

மேஷம் முதல் மீனம் வரை! நவம்பர் மாத ராசிபலன் பலன்கள் உங்களுக்காக!

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு நவம்வர் மாதத்திற்கான ராசிபலன் உங்களுக்காக!

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

குடும்பத்தில் மகிழ்ச்சி - முன்னேற்றம். 
வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும்
பணம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

மனதில் உறுதி அதிகரிக்கும்
வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

வேகம் - விவேகம் - முன்னேற்றம்
வாழ்க்கைத்துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள்\

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

தைரியம் அதிகரிக்கும் - வீடு மனை வாசல் அமையும்
எதிலும் நிதானம் அவசியம்

பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனை களும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பொருளாதாரத்தில் முன்னேற்றம்
எடுக்கும் காரியங்களில் சிறிய சுணக்க நிலை ஏற்படலாம்

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்
முதலீடுகளில் அதிக எச்சரிக்கை அவசியம்

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும்
எடுக்கும் காரியங்களில் வேகத்தை கட்டுபடுத்துவது அவசியம்

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகள் அதிகரிக்கும்
சின்ன சின்ன சுணக்க நிலை எதிர்படும்

பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் - பணவரவு நன்றாக இருக்கும்
மனக்குழப்பங்கள் அதிகமாகலாம்

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

எடுக்கும் காரியங்களில் இருந்த சுணக்கநிலை மாறும்
வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தடைகள் அனைத்தும் நீங்கும்
பணம் சார்ந்த விஷயங்கள் அதிக கவனம் தேவை

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
ஜனாதிபதியின் அதிரடி முடிவு ; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு !!!

ஜனாதிபதியின் அதிரடி முடிவு ; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு !!!

ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலையை தனியே கையில் எடுத்து வரும் 2-வயது சிறுமி!

தலையை தனியே கையில் எடுத்து வரும் 2-வயது சிறுமி!

Halloween விழாவிற்காக தலை துண்டாக்கப்பட்ட ஆன்மாவினை போல் வேடமணிந்து வரும் 2 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே நகரத்தை சேர்ந்தவர் கிரிஸ்டல் ஹவாங். சமீபத்தில் Halloween கொண்டாட்டம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விழாவிற்கு தனது மகள் மாயா-வையும் விச்சியாசமான தோற்றத்தில் அளங்கறிந்துள்ளார். இந்த தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் இந்த விசித்திர தோற்றத்தில் வலம் வரும் சிறுமி தனது தலையை தனியே வெட்டி தனது கையில் எடுத்து வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவினை கிரிஸ்டல் ஹவாங் தனது சமூக ஊடக பங்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தலையிழந்த சிறுமியாக 2-வயது மாயாவும், அவரது தலை வெட்டிய கசாப்பு கடை உரிமையாளராய் அவரது 6-வயது சகோதரி சார்ளி இடம்பெற்றுள்ளனர்.

இந்த வீடியோவானது இதுவரை 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது. Holloween பண்டிகைக்கு ஏற்ற ஆடை இது என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து, குழந்தைகளையும் பாராட்டி வருகின்றனர்.
ஏலியனை போல் காது, மூக்கு & பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்

ஏலியனை போல் காது, மூக்கு & பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் பிறப்புறுப்பையும் நீக்குகிறார்....

இளைஞர்கள் அனைவரும் தற்போது மற்றவர்களை விட தங்களை வேருபடுத்திக் காட்டவே விரும்புகின்றனர். இதில் சிலர் தங்களுக்கென பல அடையாளங்களை அமைத்துக்கொள்ள அபாயகரமான உத்திகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொள்வது, மூக்கு, காது போன்ற உறுப்புகளில் வளையங்கள் மாட்டிக்கொள்வது என பல வகைகள் இதில் உள்ளன.

பலர் இவ்விஷயங்களில் கொஞ்சம் சீரியஸாக போய் விடுகின்றனர். கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயதான எரிக் ராமிரெஸ் (Erick Hincapie Ramirez) என்பவரும் அதில் ஒருவர். தனது 12-வயதில் தாயை இழந்த எரிக், அதன் பின்னர் உடல் முழுவதும் விதவிதமாக டாட்டூ வரைந்து கொண்டார். 

உச்சகட்டமாக மனித மண்டை ஓடு போல தனது முகத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பி, மூக்கு மற்றும் இரண்டு காதுகளை அறுத்து எடுத்துள்ளார். மண்டை ஓட்டின் வாய் பகுதியில் பற்கள் வெளிப்படையாக இருப்பது போல தனது வாயை சுற்றிலும் அதற்கேற்ப டாட்டூ போட்டுக்கொண்ட எரிக், விரைவில் தனது பிறப்புறுப்பையும் நீக்க இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“என்னைப் பார்த்து பயப்படுபவர்களை காணும் போது சிரிப்பாக இருக்கும். என்னுடைய தோற்றம் தான் மாறுபட்டுள்ளதே தவிர, நானுன் சாதாரணமானவன்” என்று கூறும் எரிக்கிறகு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா?

"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா?

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் இந்த படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என இந்தப்படம் குறித்து வெளியான ஒவ்வொரு அறிவிப்பும் உலக அளவில் சாதனையை படைத்தன.

இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திரைப்படத்தின் கதை தனது கதை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கள் செய்தார். இந்த மனுவை கடந்த 26-ம் தேதி விசாரணை செய்த நீதிபதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

இதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 30ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

சர்கார் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க பட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, அனைத்து பிரச்னையில் சமரசம் ஏற்பட்டு தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வருகிறது விஜய்யின் சர்கார்.

இந்நிலையில் தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வர இருக்கும் சர்கார் திரைப்படம் சுமார் 80 நாடுகளில், 1200 திரையரங்குகளுக்கும் மேல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இதனை முடிவு செய்திருக்கிறார்கள்.
பெரும்பான்மையை நிரூபித்து ரணில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பதவி விலகி மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட நான் தயார்  - ஜனா­தி­பதி

பெரும்பான்மையை நிரூபித்து ரணில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பதவி விலகி மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட நான் தயார் - ஜனா­தி­பதி

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்­மையை நிரூ­பித்து மீண்டும் ஆட்­சி­ய­மைக்க முயன்றால் நான் பத­வி­ வி­ல­குவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட நான் தயா­ரா­க­வுள்ளேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி மாளி­கையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்கள் கூட்டம் நேற்று நண்­பகல் நடை­பெற்­றது.இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி,

கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற ஆட்­சியில் பெறு­ம­தி­யில்­லாத நிலை­யி­லேயே நான் இருந்தேன். 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவின் ஆட்­சி­யி­லி­ருந்து எவ்­வாறு அதி­ருப்­தி­யுடன் வில­கி­னேனோ அத­னை­விட அதி­க­மான அதி­ருப்­தி­யு­ட­னேயே தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யிக்­கின்றோம்.

தற்­போது புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்­மையைக் காண்­பித்து ஆட்சி அமைக்க முனைந்தால் எனது பத­வி­யி­லி­ருந்து நான் வில­குவேன். ஏனெனில் தவறு என்று கூறி எந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே­றி­னோமோ அந்த அர­சாங்­கத்­துடன் மீண்டும் செயற்­ப­டு­வது என்­பது முடி­யாத காரி­ய­மாகும். அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் வீதியில் இறங்கி மஹிந்­த­வுடன் இணைந்து வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்கு நான் தயா­ரா­கவே உள்ளேன்.

எனவே மஹிந்­த­வுடன் இணைந்து கட்­சியை முன்­கொண்டு செல்ல நீங்கள் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். ஒன்­று­சேர்ந்து பணி­யாற்ற வேண்டும். கடந்த அர­சாங்­கத்தில் நாம் உரிய மதிப்­பின்­றியே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்றோம். இத­னால்தான் நாம் புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க இணக்கம்

பிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க இணக்கம்

அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரின்போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Wednesday, October 31, 2018

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவரால் தொடரும் பதற்றம்!

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவரால் தொடரும் பதற்றம்!

இரு வேறு வெளியாட்கள் அலரிமாளிகைக்குள் நுழைந்தமையால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலரிமளிகைக்குள், இன்று (புதன்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருவர் நுழைந்தமையாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அரசியலமைப்பின் படி தானே பிரதமர் என கூறி அலரிமாளிகையில் இருந்து வெளியேறாமல் இருக்கின்றார்.

இந்நிலையில் அங்கு வந்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்கள், அலரிமாளிகையில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யவும், அதனை அகற்றவும் முற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் அவர்கள் அலரிமளிகையை விட்டு வெளியேறியதாகவும், இதனால் தற்போது அங்கு சுமூகமான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். 

Tuesday, October 30, 2018

பிரதமர் மஹிந்தவால்  இன்று வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு!

பிரதமர் மஹிந்தவால் இன்று வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியை உறுதி செய்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 என்ற பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகவும், சிக்கல் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் எனவும் வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அதன் காரணமாகவே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது ஆதரவை கூட ஜனாதிபதியால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தரப்பு நேற்றைய தினம் அமைச்சு பதவி பெற்றுக் கெள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

துமிந்த திஸாநாயக்க உட்பட சிலர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமையை, எந்தவொரு நாடும் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் ஜனநாயகமற்ற செயல் குறித்து சர்வதேச நாடுகளில் விமர்சனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேச நாடுகள் பல தங்கள் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு கோரிக்கை 126 உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட கடிதம் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதில் 6 உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் ஆகும்.

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டென தெரியவந்துள்ளது. இதன்மூலம் இலகுவாக பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிப்பானர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பிற்குள் நாலா பக்கத்திலும் இருந்து படையெடுக்கும் மக்கள்....!

கொழும்பிற்குள் நாலா பக்கத்திலும் இருந்து படையெடுக்கும் மக்கள்....!

தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அலரி மாளிகையிலும் ஐ.தே.கவின் பெருந்திரளான ஆதரவாளர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்திற்காக கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு பல்வேறு அழைப்புக்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தன.

மேலும் போராட்டத்தில் 50,000க்கும் அதிகமானோர் கொழும்பில் ஒன்று கூடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் !!!

இரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் !!!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேருக்கு மேற்பட்டோரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் விரைந்து கூட்டப்பட்டு, பெரும்பான்மை பலம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டில் பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் கடிதத்தில்,

நாட்டின் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த உங்களாலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை நம்புவதற்கு முடியாதுள்ளது.

பாராளுமன்றம் கூட்டப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படாவிட்டால், ஜனநாயக உரிமையினை அடைந்து கொள்வதற்காக மக்கள் முன்னெடுக்கும் விபரீத நகர்வுகளைத் தடுக்க முடியாது போகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பது தொடர்பில் என்னால் கடந்த 28ஆம் திகதி உங்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனக்கோர விரும்புகின்றேன்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு கோரியும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை உறுதிப்படுத்துவதற்காகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 125 பேருக்கும் மேற்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சபாநாயகர் என்ற வகையில் கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்னுடைய கடமையாகும். பாராளுமன்றத்தை உடனடியாக் கூட்டுவதுடன், பெரும்பான்மைப்பலம் யாரிடமுள்ளதோ அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமே அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியும். அதனை மேற்கொள்ளாதிருப்பது ஜனாநாயக உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதாக அமையும்.

பாராளுமன்ற அமர்வினை 18 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமையானது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன், நல்லாட்சியை முன்னெடுப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த உங்களுடைய செயற்பாடா என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. அத்தோடு இந்த செயற்பாடு சர்வதேச சமூகம் உங்கள் மீது கொண்டுள்ள நன்மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பதாகவும் அமையும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்போதுவரை இரண்டு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல் ஊடக நிலையங்களுக்குள் குண்டர் கும்பல் நுழைந்து, நிர்வாகத்தை தமது வசப்படுத்தியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்த நல்லாட்சி இதுவல்ல.

மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, நாட்டை மேலும் மோசமான நிலையை நோக்கி நகர்த்தாது ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு மீண்டுமொரு முறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 கொழும்பில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு

கொழும்பில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு


அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன்.

கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முன்னணியை தவிர்த்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி தற்போது தனியாக ஆட்சியமைத்துள்ளது.

இதனையடுத்த நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தரைப் பிரயோம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் ; அசம்பாவிதங்களை தடுக்க நீதிமன்ற அனுமதி

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் ; அசம்பாவிதங்களை தடுக்க நீதிமன்ற அனுமதி

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் பேராட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் உட்புகுவதை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. 

பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த அனுமதியை வழங்கி உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபா பெறுமதி அதிக வீழ்ச்சி !!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபா பெறுமதி அதிக வீழ்ச்சி !!!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.
சிக்கலில் ‘சர்கார்’ - முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்புதல்

சிக்கலில் ‘சர்கார்’ - முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்புதல்

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே சர்கார் படத்துக்கு தடைகோரி யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்களது தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் கடந்த 26-ம் தேதி நடந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பிக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை 12.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இதனைக் கூறியுள்ளது. 

நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை இலங்கையின் உள்ளக அரசியல் நடவடிக்கைகளில் சீனா தலையீடு செய்வதில்லை என்று சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார். 

இலங்கையின் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று சீனா எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
 உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் !!

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் !!

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். 

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்டது.
அர்ஜூன ரணதுங்க - துப்பாக்கி சூடு விவகாரம் ; 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு

அர்ஜூன ரணதுங்க - துப்பாக்கி சூடு விவகாரம் ; 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவனரால் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அர்ஜூன ரணதுங்க 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே பொலிஸார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நீங்க மீன் பிரியரா? அப்போ இதை கண்டிப்பா கடைபிடிங்க!

நீங்க மீன் பிரியரா? அப்போ இதை கண்டிப்பா கடைபிடிங்க!

நீங்க இனி மீன் முட்களை கீழே தூக்கி போடாதிங்க. மீனின் எலும்பு மனிதனின் எலும்புக்களுக்கு முழுமையான கல்சியம் சத்தை தருகிறதாம்....! 

மீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு மீன் வகை உணவுகளுக்கு பலர் அடிமையாக இருப்பார்கள். நாம் அனைவரும் பொதுவாக மீன் உண்ணும்போது மீனின் சதையை மட்டும் உண்டுவிட்டு அதன் முள்ளை தூக்கி போடுவது வழக்கம். ஆனால் இனி, அப்படி பண்ணாதிங்க கடிக்க மிருதுவாக இருக்கும் மீன் முல்லை நீங்க சாப்பிடுங்க பாஸ். ஏன் தெரியுமா?. மீன் முல்லை சாப்பிட்டால் சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறுமாம். 

மனிதனின் உடல் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தானாகவே எலும்புகளில் உள்ள சத்து குறைய துவங்கும். குறிப்பாக பெண்களுக்கு 30 வயதை கடந்ததும் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்து கொள்வது அவசியம்.

கால்சியம் சத்துகிடைக்க பலரும் கூறுவது தினமும் பால் குடிக்க சொல்வது வழக்கம். ஆனால், பாலுடன் ஒப்பிடுகையில் எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எனவே, மீன் முள்ளில் அதிகம் கால்சியம் இருக்கிறது. அதிலும் சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்களில் கால்சியம் சத்து அதிகமாகவே உள்ளது.

50 கிராம் சார்டின் உண்பதால் 340 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றன.

தசைகள் விரியும் திறன், இரத்தம் உரைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கால்சியம் மிக முக்கியம். மேலும், நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கால்சியம் சத்து வெளியேறி கொண்டே இருக்கிறது.

ஆகவே அதிக அளவு கால்சியத்தை உட்கொள்ளும் போது உடலின் இயக்கம் சீராக இருக்கும். மீன் பிரியராக இருந்தாலும், சாதாரணமாக மீன் உண்பவராக இருந்தாலும் குத்தும் தன்மை இல்லாத, எண்ணையில் பொரித்த மீன் முட்களை உண்பது நல்லது.
செல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்தியோக  ரயில் நிலையம் - வியட்நாம்

செல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்தியோக ரயில் நிலையம் - வியட்நாம்

 உலக நாடுகள் முழுவதும் இளையதலைமுறையினரிடம் தலைவிரித்து ஆடும் பழக்கங்களில் ஒன்று செல்ஃபி மோகம். செல்ஃபி மோகத்தால் இலங்கை , இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் செல்ஃபி மோகத்தால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 
உலகம் முழுவதும் செல்ஃபி எடுக்கும் போது மட்டும் இறந்தவர்களில் 72.5% பேர் ஆண்கள் என்று இது பற்றிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெறும் மூன்றாக இருந்த செல்ஃபி மரணங்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 98 ஆகவும், 2017 ஆம் ஆண்டில் 93 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

பல மரணங்களில், இறப்புக்கான காரணமாக செல்ஃபி எடுத்ததை அறிவிக்கப்படவில்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

வியட்நாமில் உள்ள ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பண்டைய காலத்து பிரேஞ்சு ரயில்பாதைகள் இப்போது செல்ஃபி தளமாக மாறிவருகிறது. அந்த ரயில் நிலையம் தற்போது அங்கு வரும் செல்ஃபி பிரியர்கள் மற்றும் அங்குத் தொடங்கப்பட்டுள்ள உணவகத்துக்கு வருபவர்களால் நிரம்பி வருகின்றது.

புகைப்படங்கள் எடுக்க ரயில்பாதைகள் எவ்வளவு அழகாக தோன்றினாலும், அங்குள்ள குறுகிய சாலைகளால் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் வரும் பாதை என்பதால் ஆபத்து நிறைந்த பகுதியாக மாறிவருகிறது.

இரயிலுக்கு அருகே சென்று புகைப்படம் எடுப்பது மிகவும் சுவரசியமாக இருந்தாலும், அதனருகே நிற்பது பயமாக உள்ளது என ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலா பயணி மீஷேல் ரிச்சார்டிஸ் கூறினார். இந்த வழிதடங்கள் பழைய பிரேஞ்சு ஆட்சியாளர்களால் அமைகப்பட்டவை. இப்பாதைகள் மக்கள் செல்வதற்கும் , பொருட்கள் கொண்டுவருவதற்கும் , வியட்னாம், இந்தோ-சீன, லாஓஸ் மற்றும் கம்போடியா மக்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், அங்கே நடந்த வியட்னம் போரில் இப்பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. 

தற்போது பயன்பாட்டில் உள்ள இப்பாதைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் உபயோகிக்க ஏதுவாகவும் உள்ளது. ஆனால், இப்போதைய நாட்களில் இவ்விடத்தை செல்ஃபி ஜோன்னாக மாற்றிவருகின்றனர். வீடுகள் மற்றும் உணவகங்கள் இங்கு நிறைந்திருப்பதால் டிராவல் போட்டோகிராஃபர்கள் மற்றும் தொழில் நடத்துவபர்கள் இங்கே வசிக்க தொடங்கியுள்ளனர். 

இந்த இடத்துக்கு ஒரு வசிகர குணமுண்டு, பால்கனிகளில் தொங்கும் பூக்கள், நெருங்கிய பழைய கட்டிடங்கள், வீட்டின் அருகிலேயே இரயில் பாதைகள் என பல விஷயங்கள் ரசிக்கும்படி உள்ளன என ஹாங்காங்யைச் சேர்ந்த சுற்றிலா பயணி எட் வேர்டு திசிம் தெரிவித்தார். இரயில் வந்த உடனே எனக்கு கிருத்துமஸ் வந்தது போல் தோன்றுகிறது பீரட்டனை சேர்ந்த சுற்றிலா பயணி பாவுல் ஹார்திமன் தெரிவித்தார். 'மேலும், அங்கு இரயில் வரும் பொழுது அங்கு காத்திருந்த மக்கள் உடனடியாக போன்கள் மூலம் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.
ஒருநாள் போட்டியின் தவிர்க்க முடியாத நாயகன் ரோகித் ஷர்மா!

ஒருநாள் போட்டியின் தவிர்க்க முடியாத நாயகன் ரோகித் ஷர்மா!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 21-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 150 ரன்கள் கடந்தவர்கள் பட்டியலில் தனது பெயரினை உறுதியாக பதித்துள்ளார்!

முன்னதாக கடந்த அக்டோபர் 21-ஆம் நடைப்பெற்ற போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்தார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 5 முறை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 42-வது ஓவரில் தனது 150-வது ரன்னை கடந்தார். இதன் மூலம் தனது சாதனையினை தானே முறியடித்துள்ளார்.

அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 300 ரன்கள் வரை எடுத்து சென்ற ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 43.5-வது பந்தில் 162(137) ரன்களுக்கு வெளியேறினார்!
மீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி..

மீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி..

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துவரும் பிரபலங்கள் மீது ஆதாரத்துடன் கூடிய குற்றங்களை இணையத்தில் தெரிவித்துவந்தார். இதனால், தெலுங்கு நடிகர் சங்கம் இவரை சங்கத்திலிருந்து நீக்கியது மட்டும் இன்றி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது. இதனை எதிர்த்து நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விதித்தது. பின்னர் தெலுங்கு நடிகர் சங்கம் அந்த தடையை நீக்கியது. இதையடுத்து, தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வந்தார். 

தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால் மற்றும் நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் குறித்து புகார்களை தெரிவித்தார். 

ஸ்ரீரெட்டி கடந்த சனிக்கிழமை (26/10/2018) ஃபேஸ்புக் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “பல ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய அந்த நபர் மீடியா முன்பு புத்திசாலித்தனமாக பேசி வருகிறார். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் வழக்கறிஞர்களின் உதவியுடன் அவருடைய முகத்திரையை விரைவில் வெளியே கொண்டு வருவேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும். விரைவில் திருமணமாகவுள்ள அவர் நம்பர் ஒன் பிளாக் மெயிலர். விரைவில் அவருக்கு சிறை காத்திருக்கிறது.

பெரிய பதவியை கையில் வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை மிரட்டி வருகிறார். தயாரிப்பாளர்கள் கோபப்பட்டால் அந்த நபரின் பதவி ஆட்டம் கண்டுவிடும். அவரால் பல சின்ன தயாரிப்பாளர்கள் பல துன்பங்களை அடைந்துள்ளார்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்களும் குறைப்பு - பூஜித் ஜயசுந்தர அதிரடி  உத்தரவு

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்களும் குறைப்பு - பூஜித் ஜயசுந்தர அதிரடி உத்தரவு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்களின் எண்ணிக்கை 7 இலிருந்து 2 பேராக குறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உழைப்போம் - டக்ளஸ் தேவானந்தா

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உழைப்போம் - டக்ளஸ் தேவானந்தா

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும் பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர் பார்த்த உண்மையாக உள்ளது என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரை விடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தம் இல்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடம் ஏற்றியதாக கூறிய கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 

தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள். 

தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளி விட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 

பல தசாப்தங்களுக்கு மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு, வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும், எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும் என்றும் தெரிவித்ததுடன், இதேவேளை பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள மாகாண சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம். 

முன்னர் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர் பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தம் இல்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
UNP ன் "நீதியின் குரல்" எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில்

UNP ன் "நீதியின் குரல்" எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில்

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

´நீதியின் குரல்´ எனும் பெயரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் நாட்டின் பிரதான நகரங்களுக்கு அருகில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று  கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி ; பொதுமக்களுக்கு அழைப்பு

இன்று கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி ; பொதுமக்களுக்கு அழைப்பு

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று இடம்பெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, October 29, 2018

பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கூட்டணியில் இணைய 300 மில்லியன் பணம் குறுக்குவழியில் பரிமாறப்பட்டது - வெளியானது அதிர்ச்சி தகவல்

பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கூட்டணியில் இணைய 300 மில்லியன் பணம் குறுக்குவழியில் பரிமாறப்பட்டது - வெளியானது அதிர்ச்சி தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவதற்கு கட்சி தலைவர்களுக்கு பல மில்லியன் ரூபாய் பணம் பரிமாறப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாயும், அமைச்சர்களுக்கு 300 மில்லியன் ரூபாயும் குறுக்குவழியில் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து பல கட்சி உறுப்பினர்களும், ஐ.தே.கவுடன் கூட்டணியில் இருந்த உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துடன் கைகோத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று 12 அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க, ஒரு பிரதி அமைச்சு பதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த ருவன் விஜேவர்த்தன, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.