Friday, November 9, 2018

பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்!! - ஜனாதிபதி

பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்!! - ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். 

எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை.அது குறித்து நான் சிந்திக்கவில்லை. 

மஹிந்தவுடன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்வோம். 

அரசாங்கத்தை முன்னெடுப்போம்.இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் மாற்றுத் திட்டத்தை நான் வைத்துள்ளேன். 

அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

அரசியலமைப்புக்கு ஏற்ற வகையிலேயே நான் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளேன். அவரது தலைமையிலேயே தொடர்ந்தும் ஆட்சி முன்னெடுக்கப்படும். அதற்கான பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால், அதற்கான மாற்றுத் திட்டம் என்னிடம் உள்ளது. இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது ஆட்சிதான் தொடர்ந்தும் நடைபெறும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மீண்டும் உருவாகும் என்று கூறப்படும் கதைகளை எவரும் நம்பத் தேவையில்லை. அவ்வாறான நிலை ஏற்படமாட்டாது. 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளேன்.

பிரதமராக தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார். அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

புதிய அரசாங்கத்தின் உருவாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபுணர்களுடன் ஆராய்ந்தே நடவடிக்கை எடுத்திருந்தேன். 

பல தரப்புடனும் கலந்துரையாடியே இந்த முடிவினை எடுத்துள்ளேன். பாராளுமன்றத்தை நான் கலைக்க போவதாக கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. 

மன ரீதியில் கூட நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. 

பாராளுமன்றம் கலைக்கப்படப் போவதாக செய்திகள் வெ ளியானதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கேட்டுள்ளனர். 

தற்போது பாராளுமன்றத்தை கலைத்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடும் இதனால்தான் அவர்கள் என்னுடன் சந்திப்பு மேற்கொள்வதற்கு முயன்று வருகின்றனர்.அவர்களை சந்தித்து நான் பேசவுள்ளேன். 

2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க கூட்டங்களின் போது தனது கைப்பையைக்கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. கைப்பைக்குள் குண்டு கொண்டு வருவதாக அன்று அரசாங்கத் தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டது. 

இவ்வாறான நிலைமையை மறந்து தற்போது சந்திரிகா குமாரதுங்க செயற்பட்டு வருகின்றார்.

மஹிந்தவுடன் இணைந்து நாம் எமது பயணத்தை முன்னெடுப்போம். எமது ஆட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஜனவரி மாதத்திலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தில் பிரச்சினை எழுமானால் என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தை நான் முன்னெடுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதியாக நித்திரை கொள்வேன் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்தமாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்தார்.இதற்கு எகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Monday, November 5, 2018

Rajitha Senaratne conveys President’s message to Ranil Wickremesinghe

Rajitha Senaratne conveys President’s message to Ranil Wickremesinghe

UNP MP Dr. Rajitha Senaratne said today he met with President Maithripala Sirisena on Sunday on an invitation extended by him.

He told a media briefing that he carried a message from the President to UNP leader Ranil Wickremesinghe.

“I met with President Sirisena on his invitation. Since I did not want to go alone, I invited MP John Amaratunga to accompany me. The President explained to me as to what made him appoint former President Mahinda Rajapaksa as Prime Minister. 

I then explained to him how his actions have affected the country. Later, I met Mr. Wickremesinghe and briefed him about the meeting. My meeting with the President has created a positive situation as far as the country is concerned,” he said indicating that the country would come through the present crisis.

“My meeting with the President was successful but one has to see how the outcome would be when it comes to implementing what we agreed upon. The meeting with the President is not associated with any crossover,” he said.
JVP meets TNA

JVP meets TNA

The Janatha Vimukthi Peramuna (JVP) leader Anura Kumara Dissanayake today met Tamil National Alliance (TNA) Leader and Opposition Leader R. Sampanthan at his office in Colombo and discussed how they could work in tandem to defeat the current political coup.

Mr. Dissanayake told the media, after the discussion, that they were prepared to come forward at any time when democracy was at stake.

“We should not allow anyone to form a government through a political coup. We discussed with TNA leader how we could work together to defeat this coup,’ he said.

Mr.Sampanthan said they were committed to upholding democracy and added that the appointment of a new prime minister a violation of the Constitution
I appointed Mahinda Rajapaksa as Premier after Karu and Sajith refused: Maithripala Sirisena

I appointed Mahinda Rajapaksa as Premier after Karu and Sajith refused: Maithripala Sirisena

President Maithripala Sirisena said today that he offered the premiership to Speaker Karu Jayasuriya first and then to UNP Deputy Leader Sajith Premadasa before considering former President Mahinda Rajapaksa for the post of Prime Minister.

Addressing a public rally named ‘Rata Surakina Jana Mahimaya’, he said the UNP MPs who met him during the past few days asked him why Mr. Rajapaksa was appointed the Prime Minister contrary to the aspirations of UNPers as they were the ones who installed him as the president in 2015.

For the first time in four years, he appeared on the same stage with Mr. Mahinda Rajapaksa yesterday at this rally in Battaramulla.

He said he met the Speaker eight months ago and insisted that he take over premiership.

“I pleaded with him for several days to become the Prime Minister because I could no longer work with Mr. Ranil Wickremesinghe as the Prime Minister. But, he declined to accept the post citing his inability to pose a challenge to Mr. Wickremesinghe,” the President said.

He said he approached Mr. Premadasa two months ago and offered the premiership to him but Mr. Premadasa also declined to accept it citing his inability to stand up to the leadership of Mr. Wickremesinghe.

By sacking Mr. Wickremesinghe from office, he said he not only brought about a change of personalities but also a political programme that was attuned to the interests of external forces and against the cultural ethos of Sri Lanka.

The President said he appointed Mr. Rajapaksa as Prime Minister as he was familiar with the local value system and formidable enough to outsmart Mr. Wickremesinghe in politics.

Commenting on the government's activities during the past three years, he said the decisions were taken by a 'Samanala gang' not by the Cabinet. He said the new government had secured the required simple majority of 113 MPs to govern the country and asked Speaker Karu Jayasuriya to cooperate with him. Also, he said he sacked Mr. Wickremesinghe from office through lawful means and asked the Speaker to respect his decision.

"I never take my decisions single handedly. I consulted all concerned. The removal of the Prime Minister and the appointment of Mr. Rajapaksa were done lawfully. If there is anyone grieved by it, the Supreme Court can be petitioned," he said.

The President said new Prime Minister Mahinda Rajapaksa, upon assumption of duties, met the Mahayanayake Theras and the Cardinal, worshiped at Jayasirimaha Bodhi and Dalada Maligawa whereas Mr. Wickremesinghe was worshiping foreign ambassadors. The President vowed not to take a step back from the action he had taken.
JVP welcomes Speaker Karu Jayasuriya’s statement

JVP welcomes Speaker Karu Jayasuriya’s statement

The Janatha Vimukthi Peramuna (JVP) today welcomed the statement made by the Speaker Karu Jayasuriya that he would have to recognize the previous status quo in Parliament until a clear majority was shown and said it was a brave decision taken by Parliament to defeat the political coup.

JVP leader Anura Kumara Dissanayake told a news conference that the President prorogued Parliament to buy time to secure a majority in parliament by winning over opposition members to their side using black money.

He said a majority of members in parliament had requested the Speaker in writing to convene parliament at the earliest and added that the Speaker should convene Parliament using the powers vested in him.

Mr. Dissanayake said they were ready to defeat this political coup in parliament.

“We will call for a division to defeat even the President’s policy speech on the day Parliament is convened,” he said and added that his party would support any resolution brought against the unconstitutional appointments made by the present government and however they would not support any move to select people for the Premiership.
7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

எழுவர் விடுதலை தாமதமாக்கப்படுதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (04-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வதைப்பட்டுக் கொண்டிருக்கிற தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அக்கா நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி 161வது சட்டப்பிரிவின்படி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களைக் கடந்தும் அதுகுறித்தான எந்தவொரு முடிவையும் ஆளுநர் அறிவிக்காதிருப்பது தாங்கொணாத் துயரத்தையும், பெரும் ஆற்றாமையையும் தருகிறது.

மரணித்த இராஜீவ் காந்தி ஒரு அரசியல் பெருந்தலைவர் என்பதினாலேயே இக்கொலை வழக்கில் பெரும் அரசியல் சூழ்ச்சிகளும், சதி வலைகளும் பின்னப்பட்டு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டு ஏழு தமிழர்களும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கம்பிகளுக்கு நடுவே வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணை வளையம் உண்மையானக் குற்றவாளிகளை நோக்கி விரிவடையவுமில்லை; விசாரணையானது முழுமையாக நிறைவடையவுமில்லை என்பதன் மூலம் மக்களின் கூட்டு மனசாட்சிக்கும், பொதுப்புத்திக்கும் இரையாக்கப்படவே, ஏழு தமிழர்களும் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனைப் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்துவிட்டோம்.

எழுவரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்கான வரலாற்று வாய்ப்பு.

அதற்காக நாம் கொடுத்த விலையும், பட்ட துயரும் மிக மிக அதிகம். கால் நூற்றாண்டு காலமாகக் கால்கடுக்க இந்நிலமெங்கும் சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் களத்தில் நிற்கும் நமது தாய் அற்புதம்மாள் சிந்தியக் கண்ணீரையும், வலியினையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் நடந்தப் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு எழுவரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது பயங்கரவாத நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட சதிச்செயல் அல்ல! அது வெறுமனே பழிவாங்குதல் போக்குடன் கூடிய கொலைதான் எனக்கூறி, தடா சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் கடந்த 11.05.1999 அன்று அறிவித்தது.

இருந்தபோதிலும், தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே எழுவரும் 27 ஆண்டுகளாய் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதன் மூலம் இவ்வழக்கில் எந்தளவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

மத்தியப் புலனாய்வுத் துறையின் கடும் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தடா விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்தத் தீர்ப்பினை ரத்து செய்து, அதுகுறித்து கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அத்தீர்ப்பினை ‘நீதித்துறை பயங்கரவாதம்’ என்று கூறியிருந்தது.

அதனையேதான் இப்போது நாமும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கக்கூற வேண்டியிருக்கிறது. ஏதுமறியா அப்பாவிகளான ஏழு தமிழர்களையும் 27 ஆண்டுகள் சிறையிலே வதைத்தும் இன்னும் வன்மம் தீராது அவர்களை விடுதலை செய்ய மறுத்து அரசியல் செய்ய முற்படுவது என்பது அப்பட்டமான ஒரு சனநாயகப் படுகொலை; மனிதநேயமற்ற பெருங்கொடுமை.

பொதுவாக ஆயுள் தண்டனைக் கைதிகளை 14 ஆண்டு காலத்திலேயே நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலைசெய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது.

ஆனால், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிற எழுவரும் 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பது அப்பட்டமான மனிதவதை.

இச்சனநாயக நாட்டில் விடுதலைக்குரியத் தகுதிகளைக் கொண்டிருக்கிற எழுவரையும் அதிகாரம் கொண்டு தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிக்கும், அரசியல் பழிவாங்குதல் போக்குக்கும் இரையாக்க முனையும் கொடுஞ்செயலைப் புரிவது எதன்பொருட்டும் ஏற்கவியலா மனித உரிமை மீறல்.

இவ்வழக்கில் எழுவரின் வாக்குமூலங்களையும் பெற்ற மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன், தம்பி பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தான் திருத்தி எழுதியதாக ஒப்புக்கொண்டு அதனை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்திருக்கிறார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களும், ‘எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள்’ எனக் கூறுகிறார்.

ஆகவே, இனியும் விடுதலை செய்யாது எழுவரையும் சிறைப்படுத்தி வைத்திருப்பது என்பது சனநாயகத்தையே சாகச் செய்வதற்குச் சமம்.

எழுவரையும் விடுதலை செய்வதெனத் தீர்மானித்து அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014ல் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டைப் போட்டது அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசு. தற்போது, எழுவரையும் விடுதலை செய்வதற்குரிய அதிகாரம் மாநில அரசிற்கு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 09 அன்று தமிழகச் சட்டப்பேரவை எழுவரின் விடுதலைக்கானத் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் முடிவெடுப்பதற்குரிய காலக்கெடு எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படாததால் அதனையே சாதகமாகக் கொண்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் எத்தகைய முடிவையும் எடுக்காது ஆளுநர் காலங்கடத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட சட்டப்பேரவையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் அதிகாரமேயன்றி தனிப்பட்ட அதிகாரம் எதுவும் அவருக்கில்லை.

ஆகவே, 8 கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை ஆளுநர் அலட்சியப்படுத்துவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் படுபாதகச்செயல்.

இதற்கெதிராகச் சனநாயகப் பேராற்றல்களும், இன உணர்வாளர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும், சமூகப் போராளிகளும், இனமானத் தமிழர்களும் ஓரணியில் திரண்டு எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமை என்பதை உணர்ந்து வீதிக்கு வந்து போராட அறைகூவல் விடுக்கிறேன்.

ஆகையினால், எழுவரின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதெனக் கருதி நிற்கும் மோசடித்தனத்தைத் தமிழக அரசு இனியும் செய்யாது தமிழக ஆளுநருக்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழக ஆளுநர் அவர்கள் எழுவரின் விடுதலைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி, அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோருகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் தமிழர் இறையாண்மையைக் காக்கும்பொருட்டு மக்களை அணிதிரட்டித் தமிழக வீதிகளைப் பெரும் போராட்டங்களமாக மாற்றுவோம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ரூட்

இலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ரூட்

இலங்கையின் ஆடுகளங்கள் குறித்து அச்சமடையத்தேவையில்லை என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஜோரூட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை துணிச்சலுடன் அணுகுமாறு அணி வீரர்களிடம் நான் கோரியுள்ளேன்.

நாங்கள் துணிச்சலுடன் இருக்கவேண்டும் சில விடயங்களை வித்தியாசமாக செய்யவேண்டும், நாங்கள் தைரியத்தை வெளிப்படுத்தவேண்டும் சிறிது ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

நாங்கள் கடந்த காலங்களில் முயற்சி செய்யாத ஆபத்தான சில விடயங்களை முயன்றாலே இலங்கையில் வெற்றி சாத்தியம்.

நான் அவ்வாறு விளையாடுவது குறித்து அச்சப்படவில்லை, எனது அணி வீரர்களும் அது குறித்து அச்சப்படுபவர்களில்லை.

இலங்கையின் ஆடுகளங்கள் குறித்து நாங்கள பயப்படவில்லை. பந்து சுழல்வது குறித்து அச்சப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மூன்று சுழற்பந்து வீச்சாளா்கள் விளையாடுவார்கள் ஸ்டுவார்ட் புரோட் விளையாட மாட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்களை வீழ்த்திய ஒருவரை அணியிலிருந்து நீக்குவது கடினம்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை – பந்துல!

இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை – பந்துல!

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அனைத்து ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன் அவர்கள் சாதகமற்ற விடயங்களை சாதகமாகும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடம் ஓகஸ்ட் மதம் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ரி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தொடரை வெற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டி, நேற்று டுபாயில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்…

இரு அணிகளுக்கிடையிலான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 79 ஓட்டங்களையும், மொஹமட் ஹபீஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கொலின் டி கிராண்ட்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, ரி-20 தொடரைக் 3-0 என்ற கணக்கில் வெற்றிக் கொண்டுள்ளது.

இதன்போது நியூசிலாந்து அணி சார்பில், கேன் வில்லியம்சன் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சதாப் கான் 3 விக்கெட்டுகளையும், இமாட் வசிம் மற்றும் மசூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாமும், தொடரின் நாயகனாக மொஹமட் ஹபீசும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பிற்கும், JVP - க்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்!

கூட்டமைப்பிற்கும், JVP - க்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பிமல் ரத்னாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன் பின்னணியிலேயே தற்போது இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி எச்சரிக்கை

சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி எச்சரிக்கை

ஜனாதிபதியின் உத்தரவினையும் மீறி நாடாளுமன்றதைக் கூட்டினால், சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என, முன்னாள் சபாநாயகர் W.J.M லொக்குபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த அரசங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை அரசியலமைப்பிற்கு உட்பட்டே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்.

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறிவிட்டார் என்று கூறும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வர்த்தமானி அறிவித்தலையும் மீறி நாடாளுமன்றத்தைத் சபாநாயகர் திறந்தால் சிறப்புரிமைச் சட்டத்திற்கு அமைய அவர் சிறைக்குச் செல்ல நேரிடும்.

பொய்யான ஒரு சாவியினைக் கொண்டு நாடாளுமன்றத்தைத் திறக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தமிழில் மஹிந்த

தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தமிழில் மஹிந்த

என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை நம்புகின்றேன், நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும், இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.

அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன். நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே. ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார்.

அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம்’ என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினேன் – ஜனாதிபதி அதிரடி!

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினேன் – ஜனாதிபதி அதிரடி!

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் நாற்காலியில் வெறுமனே இரு உருவங்களை மாற்றவில்லை. இந்த நாட்டிற்கு அவசியமான ஒன்றையே செய்தேன்.

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன்.

இதன்மூலம் இலக்கு அற்று பயணித்த பிரதமரை நீக்கிவிட்டு, தூரநோக்கு இலக்குடன் பயணிக்கும் ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

நான் கரு ஜயசூரியவிடம் பல முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. சஜித் பிரேமதாஸவிடமும் அதனையே கூறினேன். ஆனால் அவரும் அதனை ஏற்கவில்லை.

ரணிலுடன் தொடர்ந்து பயணிக்க முடியாததால், இருவரும் ஏற்க மறுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நியமித்தேன்.

இதனால் ரணிலுடன் போட்டியிடவேண்டிய நிலை வரும் என்று அறிவேன். அதனால் ரணிலை மிதித்துச் செல்லக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டை நடத்த முடியாது. ரணில் உள்நாட்டவர்களை மதிக்காது, வெளிநாட்டவர்களுக்கு அதிக மதிப்பளித்தார்.

நான் சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்தே புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையினையும் நியமித்தேன். இது தவறு என்றால் ரணில் உச்ச நீதிமன்றத்தினை நாடலாம்.

நாடாளுமன்றத்தை நான் பலப்படுத்தியுள்ளேன். நாடாளுமன்றில் எமக்கு தேவையான 113 பெறும்பான்மையை பெற்று விட்டேன்.

புதிய பிரதமருடன் இணைந்து, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னின்று செயற்படுவேன். வடக்கு கிழக்கில் புதிய வீடுகளை அமைக்க கடந்த மூன்றரை வருடமாக போராடினேன்.

சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது இழுத்தடிக்கப்பட்டது.

எனவே ஐ.நா சபைக்கு இது குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன். நான் ஐக்கிய நாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவேன். ஐ.நா. எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களையும் மதிக்கிறேன்.

எனது கொலை முயற்சி குறித்து இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்த ரணில் முயற்சித்தார். எனவே நான் இந்தியவுடனும், சர்வதேசத்துடனும் உறவைப் பலப்படுத்தி, அவர்களுடன் இணைந்து பயனிக்க விரும்புகிறேன்.

நான் எடுத்த தீர்மானத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி!

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ளவுள்ளதாக ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

பொருளாதார அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் விரசல் ஏற்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தற்போது விலகியுள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் மீள நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்நடவடிக்கையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி செயற்பாடுகள், கப்பற்றுறை போன்ற முக்கிய துறைகளை பாதிப்பதால் ஈரானின் பொருளாதாரத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இதனை மீறி ஈரான் “எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடரும்” என்று தெரிவித்துள்ள ருஹானி, நாங்கள் பெருமையுடன் பொருளாதார தடைகளை உடைப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஈரானின் அணுசக்தி நடவடிக்கையில் இருந்தே அமெரிக்கா விலகியுள்ளது, ஆனால் வர்த்தக உடன்படிக்கையில் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், தடைகளைத் தாண்டிய வர்த்தகத்திற்கு அவர்கள் உதவுவார்கள் என்றும் இருப்பினும் அது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

Sunday, November 4, 2018

ஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்கத்தை அறிவித்தது கனடா,,,,!

ஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்கத்தை அறிவித்தது கனடா,,,,!

கனேடிய அரசாங்கம் ஆண்டுதோறும் 350,000 புலம்பெயர்ந்தோரை ஒப்புக்கொள்வதற்கான அதன் உள் நோக்கங்களை அறிவித்துள்ளது.

ஒருவேளை, பல்வேறு தேவையுடையவர்களுக்கு கனடாவின் மனிதாபிமான பிரதிபலிப்பை நிரூபிக்க தற்போது நேரம் ஏற்பட்டிருக்கலாம் என்று கனடாவின் ரைம்ஸ் கொலொனிஸ்ட் என்ற நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சில ஆயிரம் பேரை அழைத்து வருவதற்காக மெக்ஸிகோ பகுதிக்கு கப்பல் அல்லது ரயிலைக் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் அயல் நாடுகளான அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகியன ஹொன்டுராஸ் பகுதியிலிருந்து வரும் இன்னல்களுக்கு உட்பட்ட மக்களையும், குழந்தைகளையும் நிராகரித்து வருகின்றன.

எனினும், கனடா அவர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்கி நல்ல வாழ்க்கைக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ரைம்ஸ் கொலொனிஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
கூட்டமைப்பு உறுப்புனர்களுடன் தொடரும் பேச்சு வார்த்தை - புலம்பெயர் முக்கியஸ்தருடன் நாளை பேச்சு: கருணா

கூட்டமைப்பு உறுப்புனர்களுடன் தொடரும் பேச்சு வார்த்தை - புலம்பெயர் முக்கியஸ்தருடன் நாளை பேச்சு: கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்புனர்களுடன் பேச்சு வார்த்தை தொடந்த வண்ணமே உள்ளது. 

பல உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் புலம்பெயர் முக்கியஸ்தருடன் நாளை பேச்சு நடைபெறும் என எனப்படும் கருணா விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் கருணா அண்மையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது,
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ் மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் பட்டம் வென்றார்- கரேன் காச்சனோப்

உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ் மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் பட்டம் வென்றார்- கரேன் காச்சனோப்

ரஷ்யாவின் முன்னணி வீரரான கரேன் காச்சனோப் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ் மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் பட்டத்தை வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், 22 வயதான ரஷ்யாவின் முன்னணி வீரரான கரேன் காச்சனோப், 14 முறை 31 வயதான கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

சுமார் 1 மணித்தியாலங்கள் 32 நிமிடங்கள் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதல் செட்டை 7-5 என கரேன் காச்சனோப் கைப்பற்றினார்.

பின்னர் தொடர்ந்தும் 2 ஆவது செட்டில் ஆதிக்கம் கட்டிய கரேன் காச்சனோப், அதனையும் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில் 7-5, 6-4 செட்டை கைப்பற்றி தொடரை வென்றார்.
ஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

ஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது.

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், தென்னாபிரிக்கா அணிக்கு டு பிளெஸிசும் தலைமை தங்கியிருந்தனர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸி அணி தடுமாறிய போது அலெக்ஸ் கேரி வலுப்படுத்தினார். இருப்பினும் அவர் 33 ஆட்டமிழக்க மீண்டும் அவுஸ்ரேலிய அணி பின்னடைவை சந்தித்தது.

தொடர்ந்தும் விக்கெட்கள் ஒரு புறம் சாய, ஒரு கட்டத்தில் அந்த அணியால் 152 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. அணி சார்பில் நாதன் கொல்டர்-நைல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ஆண்டில் பெஹல்குவே 3 விக்கெட்களை வீழ்த்த டேல் ஸ்டெயின், லுங்கி நேகிட மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில், 153 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அதன் படி 29.2 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்கா அணி 153 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. அந்த அணி சார்பில் குயின்டன் டீ கொக் 47 ஓட்டங்களையும், ரீஸா ஹெண்டிரிக்ஸ் 44, ஐடின் மார்கரம் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் மார்கஸ் ஸ்ட்னிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலை வகிக்கின்றது.


சற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவிப்பு

சற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சர்வதேச தரப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தல் விடுத்து வந்தன.

அதேவேளை, நாடாளுமன்றில் தமக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதாகவும், அரசியலமைப்புக்கு ஏற்பவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை பிரதமராக தெரிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவிற்கு வியாழேந்திரன் ஆதரவு வழங்கியமை கேவலமான ஒரு செயல் - சம்பந்தன்

மஹிந்தவிற்கு வியாழேந்திரன் ஆதரவு வழங்கியமை கேவலமான ஒரு செயல் - சம்பந்தன்

பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமனற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல்.

வியாழேந்திரன் மீது ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தது, எனவே அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து. அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் அவர் கூறினார்.
இத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் ஏற்பட்ட பெரும் வௌ்ளம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 

சிசிலி தீவில் கடந்த வாரம் முதல் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இருவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மாலை நேரம் பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய ஆறு ஒன்றின் கரைகள் உடைந்து வௌ்ளம் பெருக்கெடுத்ததாலேயே வீடொன்றினுள் இருந்த அந்த குடும்பத்தினர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒன்று, மூன்று மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே கார் ஒன்றினுள் சிக்குண்ட நபரும் வெள்ளப் பெருக்கால் உயிரிழந்ததுடன், 2 பேரை காணவில்லை என இத்தாலி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதிக்கொள்ளும் முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆண்ட்ரு ரசல் விலகியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவர் விலகியிருப்பதானது அந்த அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி, கொல்கத்தா, ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிப் பெற்றதுபோல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறப்பான பயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெஸ்டில் சுமாராக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரின் 3 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே, 20 ஓவர் போட்டிகளிலும் இந்த அணி சிறப்பாக விளையாடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியாவுடனான டி-20 தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல துறை ஆட்டக்காரரான ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது. காயம் காரணமாகவே ஆண்ட்ரு ரசல் ஏற்கனவே இடம்பெற்ற ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை.

எனினும், டி-20 தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் இன்னும் குணமடையாததால் தற்போது டி-20 தொடரிலும் இருந்தும் அவர் விலகுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் கெயில், சுனில் நரைன் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் அந்த அணியில் இல்லை. மேலும், ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷ்லே நர்சும் விலகியுள்ளார்.

இவ்வாறான நிலையில், தற்போது ரசலும் விலகியிருப்பதானது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் ஜோகோவிச்!

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் ஜோகோவிச்!

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டை பிரேக் வரை நீடித்த முதலாவது செட்டை ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

பின்னர் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் காட்டிய ரோஜர் பெடரர் 7-5 என செட்டை கைப்பற்ற, வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட், பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் இரு வீரர்களும் தமது திறமையை வெளிக்காட்டியிருந்த நிலையில் 3 ஆவது செட், டை பிரேக் வரை நீடித்தது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச் அந்த செட்டை 7-6 என கைப்பற்றினார்.

இதனால் இப்போட்டியில் 7-6, 5-7, 7-6 என செட்டை கைப்பற்றி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம் போடுகின்றார் – மங்கள குற்றச்சாட்டு

அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம் போடுகின்றார் – மங்கள குற்றச்சாட்டு

தேசிய அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இரட்டைவேடமிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இந்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நடவடிக்கை மற்றொரு அதிரடியான சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் இரட்டைவேடமான செயற்பாடாகும்.

அது நடந்தால், இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வரும் ஒரே சாதகமான நடவடிக்கை இதுதான்” என கூறினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட செயலகத்தில் 170 பேருக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனரமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட திட்டங்களை ஏற்படுத்தி மேலும் இழப்பீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கவும், எஞ்சியவர்களுக்கும், உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ஐ-தே.க

புதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ஐ-தே.க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களை சபை புதிய முதல்வராக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (சனிக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

“தினேஷ் குணவர்தனவை சபை முதல்வராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த நியமனம் சட்டவிரோதமானது.

எனவே முதலில் அவரகள் நாடாளுமன்றத்தை கூட்டி, புதிய பிரதமர் நியமனம் சட்டப்பூர்மானது என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே சபை முதல்வர் நியமிக்கப்பட்டார், இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய நியமனம் வழங்குவதை அங்கிகரிக்க முடியாது.

இதையும் மீறி செயற்படுவதானது நாடாளுமன்ற மரபுகள் மீறல் மற்றும் நிலுவையில் உள்ள உத்தரவுகளை மீறும் செயற்பாடாகும்.

அத்துடன் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி அதற்கு தேவையான நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய எடுப்பார் என நம்புவதாக” அகிலாவிராஜ் காரியவசம் கூறினார்.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு!

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு!

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமருடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், நன்கு சிந்தித்தே புதிய அரசாங்கத்திறக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அத்துரலியே ரத்தன தேரரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமர்ச்சர் லண்டனுக்கு அவசர விஜயம்!

அமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமர்ச்சர் லண்டனுக்கு அவசர விஜயம்!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்தில் கடந்த புதன்கிழமை அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட வசந்த சேனநாயக்க அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விஜயம் தனிப்பட்ட காரணங்களுக்கானது என மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வசந்த சேனநாயக்கவும் அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார்.

அத்துடன் நேற்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! – நாமல்

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! – நாமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாற்றும் செயற்பாடு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய அரசாங்கம் தகுந்த முடிவை அறிவிக்கும் என்றும் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நாமல் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாற்றும் செயல்.

தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன், அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்: கோட்டாபய ராஜபக்ஷ

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்: கோட்டாபய ராஜபக்ஷ

அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

‘வியாத்மக’ என்ற சிங்களப் பெயரிலான அமைப்பின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த போதும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அது கைவிடப்பட்டதாக அந்தப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வியாத்மக’ என்பதை ஆங்கிலத்தில் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு ‘என்று குறிப்பிடுகின்றனர். கோட்டாபய ஏற்கனவே ‘எலிய’ என்ற அமைப்பின் மூலம் கடந்த பலமாதங்களாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.