வல்லமையான கட்சியின் பின்னால் தமிழ் மக்கள் நிக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு தமது பலத்தினை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழில் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தங்களுக்குள் முரண்படாமல் ஒற்றுமையாக இருப்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானது எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒரு அரசியல் தீர்வை பெறுவதற்கும் ஏனைய கருமங்களை கையாள்வதற்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஓற்றுமையாக இந்த தேர்வை பெற்றுத்தரும் வல்லமையுள்ள கட்சியின் பின்னால் நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரா.சம்பந்தன் கூறினார்.

Post a Comment

0 Comments