தேசிய ரீதியில் சாதித்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள்!

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடத்தினைப் பிடித்துள்ளனர்.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவரே இவ்வாறு முதலிடத்தினைப் பிடித்துள்ளனர்.

ஆண்களுக்கான தனியிசை கனிஸ்ட பிரிவுப் போட்டியில் ஜோ.கிஷாந்த் என்ற மாணவனும், சிரேஷ்ட பிரிவில் ம.சனோஜிகன் என்ற மாணவனும் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளதாகவும் கல்லூரிச் சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments