About Me

தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொங்கல் விழா!

லண்டனில் தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது.

‘தமிழர்களின் தொன்மையான கலை கலாசார பண்பாடுகளை உலகிற்கு பறைசாற்றுவோம்’ என்னும் கருப்பொருளில் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்ற பெயரில் இந்த பொங்கல் விழா இடம்பெற்றது.

லண்டன், மிடில்செக்ஸ் நகரில் நேற்று (26.01.2020) காலை முதல் மாலை வரை பொங்கல் விழாவும் அதனுடன் கூடிய நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிதிகள், லண்டன் வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments