Tuesday, December 4, 2018

அனைவரது எதிர்ப்பார்ப்பையும் தாண்டிய 2.0, வசூல் மழை

அனைவரது எதிர்ப்பார்ப்பையும் தாண்டிய 2.0, வசூல் மழை

2.0 இந்தியளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா தாண்டி பல வெளிநாடுகளில் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் 2.0 ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனை ஒன்றை செய்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை 2.0 வெளிவந்த 5 நாட்களில் ஆஸ்திரேலியாவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இப்படி ஒரு வசூல் இதற்கு முன் எந்த ஒரு தமிழ் படமும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு நீண்ட நாட்களாக இருந்து வந்த எந்திரன், கபாலி சாதனைகளை 5 நாட்களில் பின்னுக்கு தள்ள, தற்போது 2 மில்லியன் டாலர் வசூல் வருமா? என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.
விஸ்வாசம் இத்தனை நாட்களுக்குள் தமிழகத்தில் ரூ 100 கோடி வருமா? மாஸ்டர் ப்ளான்

விஸ்வாசம் இத்தனை நாட்களுக்குள் தமிழகத்தில் ரூ 100 கோடி வருமா? மாஸ்டர் ப்ளான்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்துடன் பேட்ட, வந்தா ராஜா வருவேன் ஆகிய படங்களும் வரவுள்ளது, ஆனால், விஸ்வாசம் ஜனவரி 10 திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதோடு, படத்தை தமிழகத்தில் சுமார் 700 தியேட்டர்களில் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

அதாவது இவர்கள் கணிப்பின்படி முதல் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் வரும்படியாக ப்ளான் செய்துள்ளார்களாம்.

இந்த தகவலை தமிழ் சினிமாவை சார்ந்த முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

பாராளுமன்றத்தை கலைப்பதாக விடுக்கப்பட்ட 2096/70 வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன அரசியல் சட்டத்தைத் தவறாக புரிந்திருப்பதுடன் தான் தோன்றித்தனமாக அரசியல் சட்டம் செயற்படுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் மனுதாரர்கள் தார்பில் நீதிமன்றில் வாதிக்கப்பட்டிருந்தது.

தமது வசதிக்கேற்ப அரசயில் சட்ட விதிகளின் பகுதிகளை பிரித்து, அதன் மூலம் புதிய அர்த்தம் கற்பிக்க முடியாது என ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன்நிலையில் நீண்ட வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை விசாரணை தொடரவுள்ளது.
பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 

பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் என்று கூறிக் கொண்ட அனைவரும் அரசியலமைப்பின் படி செயற்படுமாறு நாம் கூறுகின்றோம். 

அரசியலமைப்புப் படி செயற்படுவதாகவே நாம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளோம். 

அனைத்து கட்சிகளும் இணக்கத்துக்கு வரும் போது தேர்தலை நடத்துவதென்றால், ஐக்கிய தேசிய முன்னணியும் அதற்கு தயாராக இருக்கின்றது. 

முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் இருந்தால் மாத்திரமே தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். 

அரசியலமைப்பை பின்பற்றி அரசியலமைப்பின் ஊடாகவே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மக்களை ரணில் ஏமாற்றினார் - மைத்திரி குற்றச்சாட்டு!

வடக்கு மக்களை ரணில் ஏமாற்றினார் - மைத்திரி குற்றச்சாட்டு!

ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் தொழிலார்களை ஏமாற்றியமையாலேயே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

"ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார். இதேவைளை, ரணில் வடக்கு மக்களை ஏமாற்றினார். தொழிலாளிகளை ஏமாற்றினார்.

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன்.

நாட்டின் நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஒருதரப்பு மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் என கூறினார்.
அடுத்த 07 நாட்களுக்குள் நாட்டில் உள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு - மைத்திரி

அடுத்த 07 நாட்களுக்குள் நாட்டில் உள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு - மைத்திரி

பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 
அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும் அவருடைய நோக்கம் நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது, 

எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டில் இப்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலை முழுமையாக தீர்க்கப்படும் என்று தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

பிரச்சினையையும் நெருக்கடியையும் தோற்றுவித்தது தான் அல்ல என்றும் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் மேலும் கூறினார். 

அன்று 2014ம் ஆண்டு நவம்பர் 21 ம் திகதி தான் எடுத்த தீர்மானமும், கடந்த ஒக்டோபர் 26ம் திகதி எடுத்த தீர்மானமும் சரியானது என்று கூறினார். அந்த இரண்டு தீர்மானங்களும் நாட்டுக்காக எடுத்தமையினால் சரியானதே. 

2015 ஜனவரி மாதம் 09ம் திகதி பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்தார். 

கடந்த 2014ம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வௌியேறுவதற்ககாக பொறுமை காத்ததை விடவும் கடந்த மூன்றரை வருடங்களாக தான் பொறுமை காத்ததாகவும் ஜனாதிபதி கூறினார். 

ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தை நாசமாக்கினார். நாட்டையும் நாசமாக்கினார். நாட்டின் பிரபலமான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார். ஓரளவு என்னையும் நாசமாக்கிவிட்டார். 

இவை அனைத்திற்கும் வழங்குவதற்கு என்னிடம் இருந்த ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் கதிரையில் இருந்து துரத்துவதே என்று ஜனாதிபதி கூறினார். 

நாட்டை பிரிக்காமல், காட்டிக் கொடுக்காமல், சமஷ்டி வழங்காமல் வடக்கு மக்களுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை அவர் வேண்டுமென்றே வழங்கவில்லை. 

ஆகவே நான் எடுத்த இந்த தீர்மானம் இன்று மற்றுமல்ல நாளைய தினத்திலும் சரியானதாகவே இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை மாணவனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது

இலங்கை மாணவனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது

போலியான குற்றச்சாட்டுக்களை இலங்கை மாணவன் மீது முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இலங்கை பிரஜையான கமர் நிசாம்டீன் மீது பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர் இன்று(செவ்வாய்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலியான ஆவணங்களை தயாரித்து, நீதியை திசை திருப்ப முயன்ற காரணத்தினால் நீதிபதி சந்தேக நபரிற்கு பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், குறித்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு விடயம் என பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசாரணைகள் மூலம் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை பிரஜை நிசாம்டீன் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை குறித்து அவர் தனது கவலையும் வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே கமர் நிசாம்டீனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என கமர் நிசாம்டீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த குறிப்பு புத்தகத்திலுள்ள கையெழுத்துக்கள் நிசாம்டீன் உடையவை அல்ல என நிரூபிக்கப்பட்டதையடுத்து, விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மனு தாக்கல்

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மனு தாக்கல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லையென உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இதன்போதே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மஹிந்த அணியினருக்கு அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய பொருளாதார ஆதரவாளருடன் சந்திப்பிற்கு தயாராகும் வடகொரியா!

முக்கிய பொருளாதார ஆதரவாளருடன் சந்திப்பிற்கு தயாராகும் வடகொரியா!

வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றி யொங் ஹோ, நாட்டின் முக்கிய பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவாளராக விளங்கும் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடகொரிய அமைச்சரின் சீன விஜயம் இவ்வாரத்திற்குள் இடம்பெறும் என, சீன வெளியுறவுத்துறை அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

சீனாவுடனான சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தின் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகொரிய அமைச்சரின் விஜயம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடுகையில், ”வடகொரிய அமைச்சர் தனது சீன விஜயத்தின்போது சீன தலைவர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என நம்புகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து சீனா வடகொரியா மீது அதிருப்தி கொண்டுள்ள போதிலும், வடகொரியாவின் முக்கிய பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவாளராக சீனா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஜோர்ஜ் HW புஷ் உடலுக்கு ட்ரம்ப் அஞ்சலி!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஜோர்ஜ் HW புஷ் உடலுக்கு ட்ரம்ப் அஞ்சலி!

மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்-இற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வொஷிங்டனின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அமெரிக்க மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று (திங்கட்கிழமை) முதல் பெண்மணி மெலனியாவுடன் சென்று, ட்ரம்ப் முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.

சுமார் அரை மணிநேரம் அங்கிருந்த ஜனாதிபதி பொதுமக்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காது அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ள ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பின்னர் இரு தடவைகள் நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் : பிரான்சில் எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்

போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் : பிரான்சில் எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்

பல வாரங்களாக பிரான்சில் நடைபெற்றுவந்த போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருள் வரி உயர்வை நிறுத்திவைப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்பேரில் பிரதமர் எடுவார்ட் பிலிப்பே எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சமரசம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் ஆடை போராட்டம் தற்போது அரசாங்கத்தின் மீது பரவலான கோபத்தை பிரதிபலிப்பவையாகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரானவையாகவும் வளர்ந்துள்ளன.

அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து நால்வர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முக்கிய கொள்கையை பிரெஞ்சு ஜனாதிபதி நிறுத்துவது இதுவே முதல்முறையாகும்.

பிரான்சில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியில் தற்போது எரிபொருள் வரி உயர்வை நிறுத்துவதற்கு மக்ரோனின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.
அரசாங்கத்தின் வரி அமைப்புகள் நீக்கப்பட வேண்டும்: பிரான்ஸ் இடதுசாரி கட்சி

அரசாங்கத்தின் வரி அமைப்புகள் நீக்கப்பட வேண்டும்: பிரான்ஸ் இடதுசாரி கட்சி

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரி அமைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என, பிரான்ஸ் இடதுசாரி கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரான்சில் நெருக்கடி நிலை வலுப்பெற்றுள்ள நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் பிரான்ஸ் பிரதமர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட வன்முறைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியிருந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தையின்போதே பிரான்ஸ் இடதுசாரி கட்சி மேற்கண்டவாறு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பிரதமரின் செயற்பாட்டால் தோற்றுவிக்கப்பட்ட இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என பிரான்ஸ் வலதுசாரி கட்சி வலியுறுத்தியது.

இதேவேளை, இப்பிர்சினைக்கு துல்லியமான முறையில் விரைவில் தீர்வு காண்பதே சக குடிமக்களின் எதிர்பார்ப்பாகவும், இன்றைய தேவையாகவும் உள்ளதாக பிரான்ஸ் தீவிர இடதுசாரி கட்சி குறிப்பிட்டது.

Friday, November 23, 2018

சவாலான வாழ்க்கை வாழும் இரட்டையர்கள் "வாழும் வரை ஒன்றாகவே இருப்போம்"

சவாலான வாழ்க்கை வாழும் இரட்டையர்கள் "வாழும் வரை ஒன்றாகவே இருப்போம்"

அலுவலகத்தில் வேலை செய்வதில் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது, என் விருப்பப்படி எனக்கு உணவு கிடைக்கவில்லை. இப்போது எனக்கு மனநிலை மோசமாகிவிட்டது. நான் குண்டாகி விட்டேன். என் நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்கு நல்ல ஆடை இல்லை. வாழ்க்கையே சரி இல்லை. எனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி எல்லாம் செய்கிறார். இதுபோன்ற வாரத்தைகளை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீங்கள் கேட்பவை தான். இன்றைய நவீன வாழ்க்கையில், பலர் தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற கனவுடன் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். 

இவர்களுக்கு மத்தியில் சில பேர் மட்டுமே எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் உற்சாகமூட்டும் மகிழ்ச்சிகளோடு, புன்னகைத்து, தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் தான் இந்தியாவில் வாழும் இரண்டு சகோதரர்கள். இவர்களை பற்றி தான் இப்பொழுது சமூக ஊடகத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் வசிக்கும் சிவநாத் மற்றும் சிவராம் சாகு என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் வயிற்றுடன் தொடர்புடைய இரட்டையர்கள். இந்த இருவரும் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஆனால் கீழே உள்ள வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள். 


இந்த இரட்டையர்களை குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இந்த இரட்டையர்களின் கதை காட்டப்பட்டு உள்ளது அவர்கள் தங்கள் வாழ்வில் பல துன்பங்களை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். அதேவேளையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை எங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சிவன்நாத் மற்றும் சிவராம் சாகு இரட்டையர்களுக்கு 12 வயது ஆகிறது. இவர்களின் உடல் வயிற்று பகுதியில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நுரையீரல், இதயம் மற்றும் மூளை வேறுபடுகின்றன. இருவருக்கும் இரண்டு கால்கள் மற்றும் நான்கு கைகள் உள்ளன. சட்டீஸ்கர் ராய்ப்பூர் மருத்துவமனையில் இந்த இரட்டையர்கள் பிறந்த போது, இவர்கள் தெய்வத்தின் அவதாரம் எனக்கருதி பலர் வழிபட தொடங்கினர். நோயினால் பாதிக்கபட்டு தான் இவர்கள் இணைந்து பிறந்தார்கள் என பின்னர் தெரிய வர, இரட்டையர்களை வழிபடுவதை கிராமத்தினர் கைவிட்டனர். 

சிவநாத் மற்றும் சிவராமின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தங்கள் மகன்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். இந்த தம்பதியருக்கு ஐந்து மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் தந்தை கூலி வேலை செய்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்த இரட்டையர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். மாடி படிக்கட்டில் ஏறுகிறார்கள். ஒருவர் உட்கார்ந்து சாப்பிடும் போது, மற்றொருவர் படுத்துக்கொண்டு சாப்புடுகிறார். தங்களை குறித்து "நாங்கள் உங்களைப் போலவே இருக்கிறோம், சாதரண மனிதன் வாழும் வாழ்க்கையே வாழ்கிறோம். அதில் எந்த வித்தியாசமும் இல்லை" என்று சிவராம் கூறுகிறார்.