About Me

கடற்கரை மணலில் விமானத்தை ஏற்றி இறக்கும் போட்டி: ஏராளமானோர் கண்டுகளிப்பு

பெல்ஜியத்தில் கடற்கரை மணலில் விமானத்தை ஏற்றி இறக்கும் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். நோக்கி ஹெய்ஸ்ட் என்ற கடற்பகுதியில் உலகின் மிகவும் குறுகிய தூரத்தில் மணற்பாங்கான இடத்தில் விமானத்தை ஏற்றி இறக்கும் போட்டி நடைபெற்றது. 

இதற்காக வந்திருந்த சிறியரக விமானங்கள் ஆபத்தான கடற்கரை மணலில் லாவகமாக ஏறி இறங்கியதைக்கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர். இந்த பந்தயத்தை காண ஏராளமானோர் வந்திருந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

சுமார் 3 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த போட்டியை காணவந்த பார்வையாளர்களுக்கு ரயில் பயண செலவில் சிறப்பு சலுகையும் அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments