About Me

பாணந்துறை,மொறட்டுவை - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பாணந்துறை  - கொழும்பு மற்றும் மொறட்டுவை - கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (18) காலை முதல் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூர பிரதேச சேவையில் ஈடுபடும் பஸ்கள், குறுகிய தூர சேவை பஸ் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments