About Me

கெத்தாக போஸ் கொடுக்க முயன்ற வனத்துறை அதிகாரி - கழுத்தை நெரித்த மலைப்பாம்பு

கொல்கத்தாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியின் கழுத்தை பிடிபட்ட மலைப்பாம்பு நெரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கொல்கத்தாவில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்பைகுரி என்ற கிராமத்தில் புகுந்த மலைப்பாம்பு அங்குள்ள ஆடுகளை வேட்டையாடியுள்ளது. 

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு அக்கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் 18 அடி நீளமுள்ள 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர். 

செல்பியால் நேர்ந்த விபரீதம் 
பொதுவாக பிடிபட்ட மலைப்பாமபை வனத்துறை அதிகாரிகள் மீட்டு காட்டுக்குள் பத்திரமாக விடுவது வழக்கம். ஆனால் இங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்தபோது அருகிலிருந்த இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். பாம்பின் தலையை வலது கையால் பிடித்தபடி வனத்துறை அதிகாரி போஸ் கொடுத்தபோது எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. 

மலைப்பாம்பு வனத்துறை அதிகாரியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன கிராம மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் அருகிலிருந்த வனத்துறை ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அதிகாரியை பத்திரமாக மீட்டனர்.

Post a Comment

0 Comments