About Me

இந்தோனேசியாவில் தாயின் இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டி மேலே விழுந்ததில் மகன் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் தாயின் இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டி மேலே விழுந்ததில் மகன் உயிர்நீத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டொருரா (40).

இவரது தாயார் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார். இதனையடுத்து அவரது இறுதிச்சடங்கு வடக்கு டொராஜா மாவட்டத்தில் உள்ள பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது. 

அவரது உடலை சவப்பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணி உதவியுடன் தூக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சவப்பெட்டி தவறி கீழே விழுந்தது. இதில் முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டொருரா மீது சவப்பெட்டி விழுந்தது. 

அதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் தனது தாயின் இறுதிச்சடங்கு முடியும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடமும் அப்பகுதியினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments