About Me

சீன பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் நயோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார். டென்னிஸ் உலகில் 14 வருடங்கள் பழமையான சீன பகிரங்க டென்னிஸ் போட்டின் பெண்களுக்கான அரையிறுதி போட்டி நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த போட்டியில் லட்வியா வீராங்கனை அனஸ்தேசியா செவஸ்டோவா மற்றும் ஜப்பானிய வீராங்கனை யோமி ஒசாகா பலப்பரிட்சை நடத்தியிருந்தனர். இந்த போட்டியில் முதலாவது செட்டை 6-4 என கைப்பற்றிய செவஸ்டோவா, இரண்டாவது செட்டையும் சிறப்பாக விளையாடி 6-4 என கைப்பற்றியிருந்தார். இதனால் அனஸ்தேசியா செவஸ்டோவா இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில், டேனிஷ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

சீன பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் நயோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.

டென்னிஸ் உலகில் 14 வருடங்கள் பழமையான சீன பகிரங்க டென்னிஸ் போட்டின் பெண்களுக்கான அரையிறுதி போட்டி நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த போட்டியில் லட்வியா வீராங்கனை அனஸ்தேசியா செவஸ்டோவா மற்றும் ஜப்பானிய வீராங்கனை யோமி ஒசாகா பலப்பரிட்சை நடத்தியிருந்தனர்.

இந்த போட்டியில் முதலாவது செட்டை 6-4 என கைப்பற்றிய செவஸ்டோவா, இரண்டாவது செட்டையும் சிறப்பாக விளையாடி 6-4 என கைப்பற்றியிருந்தார்.

இதனால் அனஸ்தேசியா செவஸ்டோவா இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில், டேனிஷ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

Post a Comment

0 Comments