About Me

கன்டைனருடன் பேருந்து மோதி கோர விபத்து - 27 பேர் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில் பேருந்து மற்றும் பாரவூர்த்தி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 27 பேர் படுகாயமடைந்து வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகந்த தொடக்கம் பொலன்னறுவை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியும் , கொழும்பில் இருந்து திருக்கோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தும் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments