ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவதற்கு கட்சி தலைவர்களுக்கு பல மில்லியன் ரூபாய் பணம் பரிமாறப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து பல கட்சி உறுப்பினர்களும், ஐ.தே.கவுடன் கூட்டணியில் இருந்த உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துடன் கைகோத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று 12 அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க, ஒரு பிரதி அமைச்சு பதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த ருவன் விஜேவர்த்தன, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
0 Comments